Sunday, August 7, 2011

“தமிழ் ஈழம் ஐநாவின் 194 வது உறுப்பினர்“ எவ்வளவு விரைவில் என்பதுதான் கேள்வி-


“தமிழ் ஈழம் ஐநாவின் 194 வது உறுப்பினர்“ எவ்வளவு விரைவில் என்பதுதான் கேள்வி-

அரசியல் என்பது ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதை விட்டுவிட்டு, ‘அந்த விஷயம் அடங்கும்‘ வரை அதனை தள்ளிப்போடுவதாகும் என்று பிரெஞ்சு அரசியல்வாதியும் ராஜதந்திரியுமான ஹென்றி குயூவில்லி கூறினார்.

ஆனால் எல்லோரும் அறிந்த அவரது கூற்று இலங்கை தமிழ் இனப் படுகொலைக்கு பொருந்தாது. அங்கு நடந்தது என்னவென்றால் அண்மைக்கால மனித வரலாற்றில் ஆயுதமேந்தாத, அப்பாவி பொதுமக்கள் மீதான மிகவும் கொடூரமான அரசு தீவிரவாதம் ஆகும். யுஎஸ் காங்கிரஸ் மனித உரிமைகள் கமிஷனனின் துணைத் தலைவரும் காங்கிரஸ் பிரதிநிதியுமான ஜேம்ஸ் மெக்கவர்ன், சேனல்-4-ன் இலங்கையின் கொலைக்களங்கள் “மனிதர்களை மிகவும் மோசமாக நடத்துவதற்கான கொடூரமாக எடுத்துக்காட்டாகும்“ (ஏஎஃப்பி அறிக்கை) என்று கூறுகிறார். இந்த போர்க் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தாவிட்டால், சர்வதேச சட்டங்கள், அமைப்புகள் (யுஎன், ஐசிசி, எச்ஆர்டபிள்யூ, ஏசிஎஃப், யுஎன்எச்ஆர்சி, யுஎன்எச்சிஆர், ஏஐ மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்) அனைத்தும் தங்களது அர்த்ததை இழக்கின்றன. மேலும், இவை எல்லாமே தற்போதுள்ள டிஜிட்டல் ஹை-டெக் கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு அப்பால் நடைபெற்றன. இந்த காட்சிகள் ஒருவரால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, முழுமையான வலி என்றால் என்ன என்று விவரிக்கும் அளவுக்கு இருந்தன என்று கூறுகிறார்.

உலகம் முழுவதும் உள்ள நல்லெண்ணம் கொண்ட புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது சட்டத்தின் நீண்ட கரங்கள் வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஈழம் பிறப்பது இப்போது கைவிடப்பட்ட முடிவாகும். தற்போதைய சூழ்நிலையை கற்றறிந்த சிங்கள பத்திரிகையாளர்கள் எவ்வாறு கருதுகின்றனர் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள முகவரியில் பார்த்து அறிந்துகொள்ளலாம். பார்வைக்கு http://www.spur.asn.au/wsdindex.html.

நாம் பார்க்க வேண்டியது “எவ்வாறு மேற்குலகம் இலங்கையின் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த விரும்பியது என்பதே. இந்த நாடு ‘பேச்சு வார்த்தை அடிப்படையிலான தீர்வு‘ என்ற தனது திட்டப்படி நடந்திருந்தால், எல்டிடிஈ-யை சாந்தப்படுத்த முயன்றிருந்தால், இலங்கையும் சூடானின் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஒருவேளை முன்னதாகவே ஒரு தர்ப்பூசனியை வெட்டுவது போல இரண்டாக வெட்டி பிரிக்கப்பட்டிருக்கும். இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான எல்டிடிஈ ஆதரவு நாடுகள் உலகின் புதிய நாடான தெற்கு சூடானை உருவாக்குவதில் முக்கிய நாடாக திகழ்ந்தன.“ ஆக்கிரமித்துள்ள சிங்கள ராணுவத்தை வடகிழக்கிலிருந்து துரத்த வேண்டுமானால் ஐநா நேரடியாக தலையிட வேண்டும் (தேவைப்பட்டால் ஆயுத குறுக்கீடு) மற்றும் தமிழ் ஈழத்தை அடையாளம் கண்டு அதனை ஐநா உறுப்பினராக மற்றும் சர்வதேச சமூகமாக அங்கீகரிக்க வேண்டும். அதுபோன்ற தலையீட்டை சிங்கள அரசாங்கம் எதிர்த்தால், (லிபியா, பால்க்கன் நாடுகள், கிழக்கு டிமோரில் போல) ராணுவத்தை பயன்படுத்த வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தி ஹேக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். நுரெம்பெர்க் தீர்ப்பாயம் போல இதற்கும் ஒரு விசேஷ தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் இந்தியா அல்லது இலங்கையை சேர்ந்த யாராக இருந்தாலலும் அவர்களை விட்டு வைக்கக் கூடாது.

ராஜபக்சே அரசாங்கம், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்துவதற்கான இலங்கை மீது 2009, மே 27ம் தேதி யுனைடட் நேஷன்ஸ் ஹூயூமன்ஸ் ரைட்ஸ் கவுன்சிலை ஒரு குறைபாடு உள்ள தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தது ஆச்சரியமே. இனப்படுகொலையில் பங்குகொண்ட இந்தியா அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. அந்த தீர்மானம் ஒரு அசிங்கமான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. இது ஒருபோதும் போரில் கொல்லப்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தீர்மானம் ஆகாது. முள்ளிவாய்க்காலில் நடந்ததாக சேனல்4-ல் காட்டப்பட்ட காட்சிகள் 1948ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் நெடிய கொடுமையின் ஒரு சிறு பகுதியே.

இனப்படுகொலை நடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மே மாதத்தின் இறுதியில், இலங்கையில் மனித உரிமைகள் நிலை பற்றி ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஒரு விசேஷ கூட்டத்தை நடத்தியது. ஐநா மனித உரிமைகள் கழக உயர் அதிகாரியான நவி பிள்ளை, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித சட்டம் மீது ஒரு தன்னிச்சையான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறினார். அவர், “அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயங்கரமானவை, பலவீனமான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடுவதை நமது நினைவுகளிலிருந்து அகற்ற முடியாது. கண்டிப்பாக அவை நம்மை செயல்படுத்த வேண்டும்“ என்று கூறினார்.

ஆமாம் மேடம், கடந்த இரண்டு காலமாக அதுதான் நடந்து வருகிறது. அதற்காக தமிழர்களாகிய நாங்கள், சேனல்4-க்கும் அதன் குழுவினருக்கும் தலை வணங்குகிறோம். சேனல்4 இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் கொடூரமான காட்சிகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 2011ம் ஆண்டுக்கான அம்னெஸ்டி மீடியா விருதுகளை பெற்றது. சேனல்4 நியூஸ் இந்த விருதை மூன்றாவது ஆண்டாக பெற்றுள்ளது. இரண்டாம் ஆண்டு விருது இலங்கை பற்றிய செய்திக்காக கிடைத்தது.

2009ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி ரிச்சர்ட் டிக்ஸன், “தெரிந்தோ தெரியாமலோ, நாம் அனைவரும் இந்திய பெருங்கடலில் முத்தாக உள்ள நாட்டில் அப்பாவி பொதுமக்களின் ரத்தத்தால் எழுதப்படும் மனிதனின் இருண்ட அத்தியாயங்களை காண்கிறோம். இதில் அசிங்கமான அத்தியாயம் என்னவென்றால் அது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அல்ல, ஆனால் இதுவரை தனக்கு சக்தி இருந்தும் நாகரீக உலகம் அந்த அப்பாவி மக்களின் உயிர்களை பாதுகாக்க தவறியதே“ என்று எழுதுகிறார்.

எங்களது அன்புக்குரிய ரிச்சர்ட் டிக்ஸன் அவர்களே, சக்தி இருப்பது அல்லது சக்தி இல்லாமல் இருப்பதல்ல பிரச்சனை, அது நாகரீக இந்தியாவும் யுகேயும் இந்த கூட்டு குற்றத்தில் பங்கு பெற்றிருப்பதே ஆகும். தமிழ்நாட்டின் கூக்குரல் கேட்டு வட இந்தியர் விழித்துக் கொண்டனர் என்ற செய்தியிலிருந்து இந்தியாவின் மக்கள் இந்தியாவை கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. நிதியுதவி செய்து வரும் யுகேயின் கொள்கையான தமிழ் ஈழத்தை காலனி நாடாக்கி, சிங்களத்தை புகுத்தும் செயலை இலங்கை நிறைவேற்றும் முன்பாக இந்திய மத்திய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

யுகே அரசாங்கத்திற்கு கடினமான விஷயம் என்னவென்றால், அதன் கடந்த காலம், உண்மையான குற்றவாளிகள் மற்றும் தற்காலம் ஒரு குழப்பமான ஒன்றாகும். கொழும்புவிலிருந்து லியாம் ஃபாக்ஸ் மற்றும் டேவிட் மிலிபேண்ட் ஹெட்லைன்ஸ் டுடேவிற்கு கூறியவற்றிலிருந்து அவர்கள் பாடம் கற்றல் மற்றும் சீரமைப்பு கமிஷன் (எல்எல்ஆர்சி) நவம்பர் மாதத்திற்கு முன்பே (தப்பிப்பதற்கான வழியை வேண்டுமென்றே சுட்டிக் காட்டுகின்றனர்), அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு இறுதியான பரிந்துரைகளை செய்ய வைக்க முயன்று வருகின்றனர் என்று தெரிகிறது.

பிடிஎஃப் மற்றும் கீத் வாஸ் தவிர மற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள், ஜனநாயகத்திற்கு மாபெரும் மதிப்புளிக்கும் இந்த நாடு ஏன் இந்தியாவை விட்டுவிட்டு, பிள்ளை கூறியதைப் போல “...கண்டிப்பாக நம்மை செயல்பட வைக்கும்“ உண்மையான சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நீதி- “நீங்கள் ஒரு வேலையை செய்யும்போது, உலகம் உங்களை கவனித்துக் கொண்டிருந்தால் அதனை எப்படி செய்வீர்களோ அப்படி செய்ய வேண்டும்.“ தமஸ் ஜெஃபர்சன்.

நடராஜா பாலசுப்ரமணியம்,

தலைவர், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி,

லண்டன்.

http://pflt.org/%E2%80%9Ctamil-eelam-194th-member-un%E2%80%9D-how-soon-question

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...