Wednesday, August 31, 2011

போர்க் குற்றங்களுக்கு இலங்கையை விட அதிகமாக‌ அஞ்சும் இந்தியாஇலங்கை மீண்டும் தனது விளையாட்டை காட்டத் துவங்கியுள்ளதால் இந்தியா கலக்கமடைந்துள்ளது. எல்டிடிஈயை தோற்கடித்ததும், வடக்கு இலங்கையில் தமிழர்களை அடிமைபோல அடக்கி வைத்திருக்க ராணுவத்தை குவித்து வைத்த பின்னரும் இன்றைய தேதி வரை சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் தமிழர் விரோத வசனங்களையே பேசி வருகிறார். தனது இனப்படுகொலை இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று இலங்கை ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. மாறாக ஐநாவில் உள்ள சர்வதேச நபர்களின் தொடர்பு மூலமாக இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதைத் தடுத்து மனித இனம் மீது செய்த குற்றங்களுக்கான பொறுப்பை இலங்கை தவிர்த்து வருகிறது.
வைரஸால் (நம்பியார்) தாக்கப்பட்ட நிலையில் ஐநா இருக்கும்போது, டெல்லியில் அதன் தொடர்புகள் இருப்பதால் ஐநா மற்றும் இந்தியா இலங்கையின் மீதான போர்க்குற்றங்கள் நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு கண்துடைப்போ என்று தோன்றுகிறது. இந்தியாவின் புவிசார் அரசியலை (சீனாவின் அச்சுறுத்தல்) அடிப்படையாக கொண்டே இலங்கை மீதான போர்க்குற்றங்களை பார்ப்பதாக இந்தியா கூறுகிறது. ஆனால் புவிசார்ந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட ஐநா விரைவாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதில் நடுநிலை வகிக்கக் கூடிய அதிகாரம் படைத்த ஐநாவின் அதிகாரிகள் விட்டுக்கொடுக்கும்போது நாட்டின் புவிசார் அரசியல் ஐநாவின் நடவடிக்கையில் தலையிடுகிறது. மனிதாபிமானம் தொடர்பான பிரச்சனைகள் வரும்போது ஐநா அதிகாரிகள் தங்களது தாய்நாடு தொடர்பான குறுகிய அரசியல் புவிசார் (உண்மையானது அல்லது போலியானது) விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கை இனப்படுகொலை விஷயத்தில் தற்போதைய ஐநா அதிகாரிகள் அந்த எதிர்பார்ப்பை இழந்துவிட்டனர். முக்கிய ஐநா அதிகாரிகளின் (நம்பியார் மற்றும்...) நடவடிக்கை இலங்கை போர்க்குற்றங்களுக்கு உதவுவது போல வேண்டுமென்றே தாமதித்து அல்லது மனித இனத்திற்கு செய்யப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை தவிர்க்கச் செய்வதைப் போல உள்ளது.
rajapaksa_mk_narayanan_shivshankar
டெல்லியில் உள்ள கேரள மஃபியா அதிகாரிகள் வைரஸ், ஐநா அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான அமைப்புகள் தங்களது கடமைகளை ஆட்டவிடாமல் தொற்றிவிட்டது என்று அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மனித இனத்திற்கு சேவை செய்ய வேண்டிய அமைப்பான ஐநா, தவறாக நடந்து கொண்ட தனது சொந்த அதிகாரிகளாலேயே தவறான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த குறைபாடுகளை ஐநாவின் ‘நிபுணர் குழு‘ குறிப்பிட்டுள்ளது. வெள்ளைக் கொடி பிடித்து சரணடைய வந்தவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் நம்பியாரின் நடவடிக்கை மிகவும் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ‘வெள்ளைக்கொடி‘ விவகாரத்தில் நியாயம் வழங்கப்படுவதை தடுத்து நிற்கும் பதவியில் நம்பியார் இருப்பதை பான் கி மூன் அனுமதித்துள்ளார். நம்பியாரின் தந்திரங்களின் காரணமாக ஐநா தனது நடவடிக்கையை விட்டுவிட்டு டெல்லி அரசியல் முறையை பின்பற்றுவதைப் போல தோன்றுகிறது. கடந்த காலத்தில் இருந்த ஐநா அதிகாரிகள் களங்கமில்லா வரலாற்றை கொண்டிருக்கின்றனர். இது கோபி அன்னானின் தலைமையை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஐநா அதிகாரிகள், குறிப்பிட்ட நாடுகளின் புவி சார்ந்த அரசியல் வாயிலாக‌ நேரடியாக அல்லது மறைமுகமாக இலங்கை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோருவதை தடுக்க விட்டுள்ளனர்.
அதேபோல டெல்லியில் உள்ள அதிகாரிகளும் இலங்கையை மகிழ்விப்பதற்காக ஒரு உதவாக்கரை கொள்கையை உருவாக்கியது. இலங்கை விவகாரத்தை முறையாக கையாண்டு வந்த இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின்னர், 2009 மே வரை இலங்கை எல்டிடிஈ-யை ஒழித்துக்கட்ட இந்தியாவிடம் உதவி கேட்டு வந்தது. சீனாவால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க சீனாவை விட இலங்கைக்கு நெருக்கமாக ஆவதற்காக (தோல்வியே கண்டு வருகிறது) இந்தியா, இலங்கையை மகிழ்வித்து அதற்கு நெருக்கமாக முயன்று வருகிறது. சீனா அச்சுறுத்தல் என்பது 2004ம் ஆண்டு ஐக்கிய முன்னேற்ற கூட்டணி ஏற்படுத்தியதாகும். இதில் கேரள மஃபியாவுக்கு தொடர்புள்ளது. மிகவும் கடுமையான விஷயம் என்றால் அது டெல்லியின் ஆழ்ந்த ஈடுபாடு ஆகும். இதன் காரணமாகவே டெல்லி தன்னை இலங்கையின் போர்க்குற்றங்களில் மாட்டிவிட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கோத்தபயாவிற்கு செல்லம் கொடுத்து வருகிறது. இப்போது உண்மையில் டெல்லி, தான் உருவாக்கிய ஒரு சிறையில் தானே மாட்டிக்கொண்ட நிலையில் உள்ளது. இது பற்றி கூறும் ஒரு அரசியல் நிபுணர், “இந்தியா தற்போதைய இலங்கை அரசை மகிழ்விக்க அனைத்து முயற்சிகளையும் செய்தாலும் கூட, அந்நாடு எதிர்காலத்தில் மேலும் சீனாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளாமல் இருக்குமா?“ என்று கேள்வி எழுப்புகிறார். டெல்லி தனது உள்நாட்டு அரசியலுக்கு இதையெல்லாம் செய்து வருவதாக முதலைக் கண்ணீர் வடிப்பது சாதாரணமானதே என்றாலும், கேரள மஃபியாவே சீனாவின் அச்சுறுத்தலை வீடு வரை அழைத்து வந்தது என்பதே உண்மை.
எல்டிடிஈ தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஐநாவின் "நிபுணர் அறிக்கையில்", "இலங்கையின் கொலைக் களங்கள்" ஆவணப்படத்திலும் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குற்றங்களின் பயங்கரங்கள் குறித்து விவரிக்கப்பட்டாலும் இந்தியா இலங்கையை மகிழ்விப்பதற்காகவே அது பற்றி மௌனம் சாதித்து வருவதற்கான கட்டாயங்கள் உள்ளன. 2004ம் ஆண்டிலிருந்தே டெல்லி, இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. போர் முடிந்த சில நாட்களிலிலேயே, போரில் ஒட்டுமொத்த சேதமாக (மிகப்பெரும் போர்களில் கூட ஒட்டுமொத்த சேதமாக 40,000 பேர் கொல்லப்படவில்லை) 40,000 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவுக்கு புறம்பாக அறிவித்தது. நாகரீக உலகில் இது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். அறுபது ஆண்டுகாலம் நடைபெற்ற இலங்கையின் கொடிய இன-மத போரில், தமிழர்களை புத்த மதவெறியர்களும்- சிங்கள வெறியர்களும் திட்டமிட்டு அழித்து வருவது பற்றி டெல்லிக்கு நன்றாகவே தெரியும்.
இப்போது இலங்கை டெல்லியின் துயரத்தை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. மேலும் இனப்படுகொலை பற்றி தமிழர் மற்றும் இந்தியர் எழுப்பும் பிரச்சனைகளை அடக்கியாள வேண்டும் என்று டெல்லிக்கு இலங்கை நெருக்கடி கொடுத்து வருகிறது. அதோடு சர்வதேச சமுதாயம் மேற்கொள்ளும் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் ஆதரவையும் கோரி வருகிறது. கொழும்புவின் திட்டம் என்னவென்றால், தன்னிடம் வைத்துள்ள துருப்புச் சீட்டை பயன்படுத்தி, அளவில் பெரிய அரபு நாடுகளிடையே இஸ்ரேல் பெற்றுள்ள ஆதிக்கத்தை அடையும் வரை டெல்லியிடம் அதிக சலுகைகள் பெறுவதாகும். இதற்கு டெல்லியும் இணங்கத் தயாராக உள்ளது. இதன் காரணமாகவே எல்டிடிஈ இல்லாத நிலையில் இலங்கை, தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகிறது. இலங்கை மீண்டும் மீண்டும் ஆத்திரத்தைத் தூண்டும், அச்சுறுத்தும், அடிக்கடி “நீ உன் வேலையை பார்“ என்ற ரீதியல் நடந்து கொண்டாலும் டெல்லி, இலங்கையுடன் உறவை நீடிக்கவே விரும்புகிறது என்பது இந்தியாவின் இயலாமையை இந்தியர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. இலங்கை இப்பகுதியில் இஸ்ரேலைப் போல இருக்க விரும்பினால், இப்பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமும் குறையவே செய்யும். இதன் மூலம் இலங்கைக்கு அருகேயுள்ள உள்ள இந்தியர்கள் இலங்கையின் அதிக அச்சுறுத்தல், அவமதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். டெல்லியில் உள்ள கேரள மஃபியாதான் இந்தியாவை இந்த சிக்கலுக்குள் இழுத்து விட்டுள்ளது. மேலும் போர்க்குற்றத்திற்கு ‘நெருங்கிய கூட்டாளியாக‘ இருந்து உதவி செய்ததோடு, அதற்கு எதிராக சர்வதேச சமுதாயம் எடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து தவிர்க்க முயன்று வருகின்றது.
2009ம் ஆண்டு வரை கடற்புலிகள் டெல்லியையும் தமிழ்நாட்டையும் இலங்கையின் கடற்படையிடமிருந்து பாதுகாத்து வந்தனர். இப்போது அதிக ஆற்றல் வாய்ந்த இந்திய கடற்படை இலங்கையின் கடற்படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், டெல்லி வெறுமனே இலங்கையை மகிழ்வித்து வருகிறதா அல்லது தமிழர்களை வேறு நாட்டவர் என்று கருதுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் நிலைக்கு தள்ளியுள்ளது. கேரள மும்மூர்த்திகள் இலங்கையிடம் நற்பெயர் வாங்குவதற்காக, டெல்லி ஏற்கனவே கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததுபோல தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் கணிசமான பகுதிகளை இலங்கைக்கு தாரை வார்த்து வருகின்றனர். கச்சத்தீவில் இலங்கை-சீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு கடற்படைத்தளம் அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு அமைக்கப்படும்போது அது இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கப்பற் போக்குவரைத்தை நசுக்குவதாக அமையும். டெல்லி/கொழும்பு கூட்டு நாடுகளின் போலித்தனமான புவிசார் அரசியல் தமிழ்நாட்டினரை ‘கோமாளிகள்‘ என்று கூறுவதாக உள்ளது.
டெல்லியின் அரசியல் விவாதங்களில் சீனாவின் அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமான கட்டாயமாகி வருகிறது? முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை இந்தியா தனது சாட்டிலைட் மூலம் படம் பிடித்தது. இதையறிந்த கோத்தபய ராஜபக்சே கேரள மும்மூர்த்திகளும் இதில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்தியாவை மடக்கியுள்ளார். 2009 மே மாதத்தில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் இந்த மும்மூர்த்திகள் கொடுத்த நெருக்கடியே என்று கோத்தபய ராஜபக்சே காரணம் காட்டியுள்ளார். போரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தமிழர்களுக்கு எதிரான கேரள மஃபியாவுக்கும் ராஜபக்சேகளுக்கும் ஒரு பொருட்டே இல்லை.
போர்க்குற்றத்த்தில் டெல்லிக்கும் பங்கு இருக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் தளபதி சரத் ஃபொன்சேகா, உண்மையாகவே பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க போரை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறினார். நாராயணன் வகுத்துக் கொடுத்த ‘தாக்குதல் இல்லாத பகுதி‘யில் பொதுமக்கள் குவிக்கப்பட்டு அவர்கள் மிகவும் மோசமான நிலையில் (இதுவே ஒரு குற்றம்) இருந்த காரணத்தினால் இவ்வாறு திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக போரை முன்னதாக மே மாதமே நடத்துமாறு கேரள மஃபியா (மேனன் உட்பட) வற்புறுத்தியது. கேரள மஃபியா காங்கிரஸின் வெற்றிக்காக 40000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை பலிகொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று கருதியது.
விஜய் நம்பியார்இதில் அரசியல் நிபுணர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்திய கேள்வி என்னவென்றால், இந்த கேரள மஃபியா தங்களது திரைமறைவு வேலைகளுக்கு டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்களின் அனுமதியை பெறாமலா இப்படி நடந்து கொண்டனர் என்பதுதான். ஊடக தகவல்கள் இலங்கை போரை விட்டுக்கொடுக்கச் செய்தது டெல்லியில் உள்ள ‘நெருக்கமான குழுவான' கேரள மும்மூர்த்திகள், சோனியா, பிரணாப் முகர்ஜி, (மேனனும் பிரணாபும் வெளியுறவுத் துறை விவகார கைப்பாவைகள்). போர் இறுதிக் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் டெல்லி மும்மூர்த்திகளை கட்டுப்படுத்த பிரணாப் கொழும்பு சென்றார். சென்னைக்குச் சென்ற அவர், பொதுமக்கள் அல்லது புலிகள் மீதான இறுதி தாக்குதல் நடத்தும் முன்னர் 2ஜி ஊழலில் சிக்கிய திமுக முதலமைச்சரை சந்தித்து தமிழகத்தில் எழும் எதிர்ப்பலையை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். புகழ்பெற்ற பேராசிரியரான பெல்லாமி, சோனியாவின் நிலையை தான்தோன்றித்தனமான நிலை என்று கூறுகிறார். இந்த ‘நெருங்கிய குழு’ இலங்கை போர்க்குற்றத்தில் டெல்லிக்கும் பங்களிக்கும் வண்ணம் சரியாக செயல்பட்டதாக கூறுகிறார்.
மேலும் மஹிந்தா ராஜபக்சே இலங்கை ‘இந்தியாவின் போரை‘ நடத்தியதாகவும், அவ்வாறு நடத்தப்பட்ட போரில் போர்க் குற்றங்கள் நடத்தப்பட்டதாக வெளிப்படையாக கூறிவிட்டார். ‘நெருக்கமான குழுவின்‘ தலைவராக இருந்து காங்கிரஸ் அலுவலகத்தை பயன்படுத்தி, சோனியாவின் ஸ்டைலில் செயல்பட்ட பி.ராமனின் யோசனைகளின் அடிப்படையில்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றது. 2004 முதல் நாங்கள் ஒரு வினோதமான ஆட்சி முறைக்கு உட்பட்டவர்களாக செயல்பட்டுவருகிறோம், இதில் உண்மையான அதிகாரம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியிடமே உள்ளது என்று ராமன் கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பொறுப்பேற்கும் விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அதிகாரமற்றவர் என்று காட்டிவிட்டது. இதற்கு ஆதாரம் கேரள மஃபியா காங்கிரஸின் தலைவியான சோனியாவிடமிருந்து நேரடியாக உத்தரவுகளை பெற்றதாகும். மன்மோகன் சிங் தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காங்கிரஸின் கட்டாய அரசியலை பட்டியலிடுகிறார். மன்மோகன் சிங் ஏற்கனவே 2ஜி ஊழலில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கூட்டணி அரசியலின் கட்டாயத்தை பயன்படுத்தினார். இந்த ‘கட்டாய‘ அரசியல் சர்வதேச தீர்ப்பாயங்கள் முன்பாக என்ன விளக்கம் கொடுக்கும் என்று தெரியவில்லை. டெல்லி அரசியலில் உத்தரவிடும் அரசியல் அமைப்பு கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் சாராத குழுக்கள் குற்றத்தை ஆதரவளிக்கும் விஷயத்தில், நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் அரசு அதிகாரிகளை மீறி செயல்படுகின்றன. இந்த குழுக்கள் தேச மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பேற்பதை கேலி செய்கின்றன.
போர்க்குற்றங்களில் ராஜபக்சே சகோதரர்கள் டெல்லியை சிக்க வைப்பர் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. எனவேதான், டெல்லியின் தற்காப்பு நிலை அதனை மிகவும் முட்டாள்த்தனமாக நடந்துகொள்ளச் செய்கிறது. டெல்லியின் மிதமிஞ்சிய மகிழ்விப்பு முயற்சியாக கடந்த ஜூலை மாதம் கேரள மஃபியா மேனனை கொழும்புவிற்கு அனுப்பப்பட்டார். இது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொருளாதாரத் தடை தீர்மானத்தை பரிகசிக்கும் முயற்சியாகவும், போர்க்குற்றங்களிலிருந்து இலங்கை ஜனாதிபதியை பாதுகாக்கும் முயற்சியாகவும் செய்யப்பட்டது. ‘மேலும் இந்தியா, இலங்கையின் 13வது திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தாது‘ என்பதைக் கூறவுமே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணம் தமிழக முதல்வரின் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை குறைக்க மற்றும் 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தவுமே செய்யப்பட்டது. நம்பிக்கைக்குரிய தளபதியான மேனன் விதிமுறைகளுக்கு புறம்பாக தனது இரண்டு சக அதிகாரிகளை விட்டுவிட்டு தான் மட்டும் தனியாக ராஜபக்சேயுடன் பேசினார். இதன் மூலம் டெல்லி கோழைத்தனமாக ராஜபக்சேயின் வஞ்சகமான கோரிக்கைகளுக்கு இணங்கி வருகிறது.
ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே இடையே நடைபெற்ற தனிப் பேச்சுக்கள்தான் தமிழகம் தனியாகப் பிரிந்து தனி ஈழத்தையும் தன்னுள் சேர்த்துகொள்ளும் என்ற ஒரு போலியான கருத்தை அரசியல் அனுபவமற்ற ராஜீவ் காந்தியை நம்பச் செய்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இதுவே பலகாலமாக இந்திரா பின்பற்றி வந்த இலங்கை கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய-இலங்கை கொள்கையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்விகளுக்கும் இன்று டெல்லி வசமாக மாட்டியிருக்கும் நிலைக்கும் இதுவே காரணம். இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க ‘விதிமுறைகளுக்கு எதிராக‘ நிருபமா ராவும் தனியாக ராஜபக்சேவை சந்திக்கிறார். (இவ்வாறு டெல்லி அதிகாரிகள் இரண்டு முதலாளிகளின் கீழாக வேலை செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்). நிருபமா ராவ் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் செய்வதற்கே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை இனப்படுகொலையை மறைக்க கேரள மஃபியா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் சோனியாவுக்கும் பங்கு இருக்கிறது என்பதை காட்டுவதாகவே அமையும்.
இலங்கை ஊடக (டெல்லியின் தகவல்கள் மாறுபடுகின்றன) தகவல்களின்படி இனப்படுகொலை தொடர்பாக ஐநா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் முறியடிக்க இந்தியா இலங்கைக்கு துணை நிற்கும் என்று உத்தரவாதம் அளித்ததாக தெரிவிக்கின்றன. இதுவே மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த தமிழக மக்கள், திமுக அரசை வீட்டுக்கு அனுப்பச் செய்தது. கேரள மஃபியா டெல்லியிலிருந்து தமிழர்களை/தமிழகத்தை தனிமைப்படுத்தும் வேலையையே செய்து வந்துள்ளது. 1990-ல் நாராயணன் தமிழகத்தில் திமுக அரசை கலைக்கச் செய்தார். மேனனும்/நிருபமா ராவும் தமிழகத்தின் வேண்டுகோளான ஐநாவின் நடவடிக்கை கோரிக்கையை புறந்தள்ளச் செய்து தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை மீண்டும் இனப்படுகொலையில் ஈடுபடாமல் தடுக்க இருக்கும் ஒரே வழி ஐநா நடவடிக்கையே.
மேனன் கொழும்பு சென்றதற்கான காரணம், இலங்கை இனப்படுகொலையை நிறுத்தவேண்டும் என்று டெல்லிக்கு விடுக்கும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு, ராஜபக்சே மீண்டும் இனப்படுகொலையை தொடரலாம் என்பதை உறுதிப்படுத்தவே ஆகும். ராஜபக்சே தனது ஒட்டுமொத்த இனப்படுகொலையை மேற்கொள்ள விடாமல் பெரும் தடையாக இருப்பது போர்க்குற்ற நடவடிக்கைகளே. தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு போர்க்குற்ற நடவடிக்கைகள் தடையாக உள்ளன. போர்க்குற்ற நடவடிக்கைகளை முடக்கவே மேனன் – ராஜபக்சே இடையேயான தனிச் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை இனப்படுகொலை கண்டு உலகமே கொதித்து எழுகிறது. ஆனால் இந்தியா அதனை அலட்சியப்படுத்துவது அல்லது இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பது பரிதாபமானது. ‘வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று இருந்தால், அது இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயலை கண்டிப்பதாக இருக்க வேண்டும்' என்று ஒரு அரசியல் நிபுணர் கூறுகிறார். அறநெறி தவறாத மஹாத்மா காந்தியின் இந்தியாவிற்கு என்ன ஆனது என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.
ஒருவேளை ராஜபக்சேவின் திரைமறைவு ஆயுதமே இந்தியாவை அச்சுறுத்தி, கண்டிக்கத்தக்க இனப்படுகொலையை கண்டிக்காமல் இந்தியாவை தனது அறநெறி தவறா நிலையிலிருந்து அதனை சிறுமைப்படுத்தலாம். டெல்லி, ஐநாவில் உள்ள ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தமிழர்களுக்கு எதிரான தங்களது போரை இறுதி வரை நடத்தவும், சர்வதேச நாடுகள் போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க கண்ணும் கருத்துமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக மேனன், ராஜபக்சேயின் அடுத்த கட்ட இனப்படுகொலைக்கான நிபந்தனைகளோடு இவற்றை செய்துவருகிறார்.
டெல்லியில் முக்கிய பதவிவகிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் இந்திய தேச அபிமானிகள் என்ற நிலையிலாவது நம்பகத்தன்மையை கொண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது கேரள மஃபியாவிடம் காணப்படவில்லை. இவர்கள் தங்களது இந்திய (தமிழக) தலைவர்கள் கோமாளிகள் என்று இகழப்பட்டபோதும், அதை அலட்சியப்படுத்தி தங்களது தமிழர் விரோத கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனது ஜூன் பயணத்தின்போது கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவையும் டெல்லி சொல்வதை கேட்டு பணிய வைத்துவிடுவோம் என்பதை உறுதிபடுத்தவே ஆகும். தமிழர் விரோத கொள்கை கொண்ட மேனனின் நாட்டுப்பற்று அவரை மிதமிஞ்சி ராஜபக்சேவை மகிழ்விக்கச் செய்கிறது. இதற்காக அவர் தனது சக நாட்டுப்பற்றுள்ள தமிழர்களையும் அவர்களது தலைவர்களையும் விலைகொடுக்கிறார்.
சிவசங்கர் மேனன் மற்றும் ராஜபக்சேஹிலாரி கிளிண்டனின் சென்னை வருகை டெல்லிக்கு தலைவலியை கொடுத்த அதேவேளையில் மேனனும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஹிலாரி, மன்மோகன்சிங்கைப் போல அடிப்படைவாதம் கொண்ட புஷ் வகையறா கிடையாது. ஒரு புகழ்பெற்ற அரசியல் நிபுணர், ‘அமெரிக்க உட்பட மேற்கு உலகம் முழுவதும், தற்போது அழிக்கப்பட்ட எல்டிடிஈயின் விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்துகொண்டது‘ என்று 2011 ஜூலை 28ம் தேதி theweekender.com-ல் எழுதியுள்ளார். இலங்கை போர்க்குற்றம் பற்றி பேசாமல் இந்தியா மௌனம் காத்துவரும் வேளையில் ஹிலாரியின் தன்னிச்சையாகப் பேசும் தன்மைக்கு மேனனும்/டெல்லியும் தடைபோட முயன்றது. இருந்தும் அவர் சென்னை வந்து ஜெயலலிதாவுடன் ஈழப்பிரச்சனை குறித்து பேசினார். மேனனின் ஜூன் பயணத்தின்போது தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றிப் பேசாமல், ஐநாவில் போர்க்குற்ற நடவடிக்கையை எவ்வாறு தவிர்ப்பது, கோத்தபயா போர்க்குற்றத்தில் யார் யாரை (நாராயணன், மேனன்) சிக்க வைப்பார் என்பது பற்றி பேசப்பட்டது.
டெல்லி (மேனன்) சீனாவின் அச்சுறுத்தலை போக்க ராஜபக்சேவின் உதவியை நாடுகிறதா? இவையெல்லாம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை போக்குமா?
கேரள மஃபியாவின் தன்னிச்சையான போக்கின்படி டெல்லியின் கொள்கைகள் இருக்கும் வரை டெல்லியின் துயரம் போகாது. டெல்லியின் மீது விழுகிறதோ இல்லையோ இலங்கையின் இனப்படுகொலை மனித இனத்திற்கு எதிரானது என்று உலக மக்கள் உறுதியான முடிவுக்கு வந்துள்ளனர். இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் அரசியல் மட்டத்தில் இந்திய-இலங்கை உறவில் முக்கிய மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஐநாவின் போர்க்குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று டெல்லியை வலியுறுத்தியுள்ளார். மேனனின் பிடியில் இருக்கும் டெல்லி சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் இலங்கையின் நிலைக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு வருகிறது. பேராசிரியர் சூரியநாராயணன் சாக்-ல் எழுதிய தனது கட்டுரையில் மேனன்/ காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கொள்கையை பின்பற்றியதன் காரணமாக தமிழ்நாடு தக்க பதிலடி கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். தமிழகம் அளித்த வாக்கு மேனனின் தமிழர் எதிர்ப்பு - இலங்கை ஆதரவு நிலைக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம். இது மேனன் தற்போதைய பதவிக்கு தகுதியற்றவர் என்று சொல்கிறது. மேனனின் தனிவிருப்பம் இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருப்பதால் அவர் தனது இலங்கை மகிழ்விப்பு கொள்கையுடன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கேரள மும்மூர்த்திகளின் இலங்கை மகிழ்விப்பு கொள்கை தோல்வி பெற்றுவிட்டது. இது தொடர்ந்தால் இந்தியாவின் நலனுக்கு எதிராக மாபெரும் தவறுகள் செய்யப்பட்டு, தீங்கு விளைவிக்கும்.
(நன்றி: கிரவுண்ட் ரிப்போர்ட் http://www.groundreport.com/World/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVER-MULLIVAYKAL-M_1/2940661)
வி.எஸ்.சுப்பிரமணியம்
தமிழில் - பெ.அ.தேவன்
நன்றி கீற்று

No comments: