Saturday, September 24, 2011

இனப் படுகொலையையும்....மறைத்து விட முடியும்!

இனப் படுகொலையையும்....மறைத்து விட முடியும்!இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை பொறுத்தவரை உலகம் அமைதி காத்து வருகிறது. ஏன்? அதற்கு என்ன காரணம் என்றால், பெரும் வல்லரசு நாடுகளான இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா இதில் இணைந்து செய்யப்பட்டுள்ளன என்பதால்தான். இந்த நாடுகளே இந்த போரை நடத்தி, உதவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட துணை நின்றன. இப்போது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டடால் இலங்கை தனது கடைசி துருப்புச் சீட்டான, ‘‘நீங்கள் ஆசைப்பட்டீர்கள், நான் செய்தேன்‘‘ என்று சொல்வதை பயன்படுத்தலாம்.
இந்தியாவின் சோனியா காங்கிரஸ், தொழிலாளர் கட்சியை சேர்ந்த டோனி பிளேர் மற்றும் ஜனாதிபதி புஷ் ஆகியோர்தான் கூட்டுச் சதி செய்து இந்த இனப்படுகொலை அரங்கேற வழி செய்து கொடுத்தனர். இதுதான் உண்மை. அமெரிக்காவை குற்றம்சாட்டும் உணர்வு யாரிடமும் இல்லை. அவ்வாறு ஒரு மாயத் தோற்றம் உருவாகியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கண்ணோட்டத்தில், மனித உரிமைகள் என்பது சர்வதேச விவகாரம் கிடையாது. சர்வதேச ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படும் மனித உரிமைகள் சர்வதேச சமுதாயம் அக்கறை கொள்ள வேண்டிய விஷயமாகும். ஜனாதிபதி ஒபாமா ஓராண்டுக்கு முன்பு இந்தியா சென்றபோது அந்த நாட்டிற்கு ஒரு பாடம் கற்பித்தார். ஹிலாரி கிளிண்டன் மீண்டும் அதனை உறுதி செய்தார். நாம் அரசியலை விட்டுவிடுவோம். இந்த விஷயத்தில் உள்ள தீவிரத்தன்மை குறித்து ஆலோசனை செய்வோம். அதற்கும் மேலாக உங்களது நட்பு நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே பொய்யர்களாக மாறும்போது ஜனநாயகம் என்னவாகும்.

இந்திய அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான இடைவெளி அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக காரணமாக அமைந்தது. இதற்கு வேறு எதையும் காரணம் கூற முடியாது. பாக் சந்தியின் இருபுறமும் கொதித்தெழுந்த மக்கள் இந்திய பாதுகாப்பிற்கு இடையூறாக அமையும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது. உண்மையில் புலிகள் ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை.
புலிகளின் ஆயுதங்களில் ஒன்று தற்கொலைப்படை. கறுப்பு புலிகள் அதற்காக தங்களது இன்னுயிரை ஈந்தனர். இப்படை போர் நிறுத்த காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது தமிழர்களுக்கான தனி நாடு மற்றும் கடற் வரம்புகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதைக்கண்ட புஷ்-பிளேயர் கூட்டணி திடீரென ஆத்திரமடைந்தது. உடனே அவர்கள் ஆயுதம் ஏந்திய போராடுவதால் புலிகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அவர்கள் இந்தியாவின் சோனியாக காங்கிரஸுக்காக இதை செய்யவில்லை.
சில படித்த அறிவிலிகள், “புலிகள்தான் தற்கொலை தாக்குதலை கண்டுபிடித்தனர். அது உலகம் முழுவதும் தீவிரவாதிகளால் பின்பற்றப்பட்டதுஎன்று தங்கள் மனம்போன போக்கில் எழுதுகின்றனர். என்னவொரு முட்டாள்த் தனமான தர்க்கம் இது. இது பெண்கள் அணியும் மார்பு கச்சையான ஒண்டர் பிராவை“, ஹவாயை சேர்ந்த இயற்கை அழகு படைத்த பெண்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று சொல்வதற்கு இணையானதாகும்...
அடுத்தது குழந்தை போராளிகள். புரட்சியாளர்கள் தங்களது நாட்டிற்காக போராடும்போது, மக்கள் தாங்களாகவே அந்த போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை உலகம் புரிந்துகொள்ளாதா? அதில் சிறுவர்களை பார்ப்பது சாதாரணமான ஒன்றே. குழந்தைப் போராளிகள் என்பது ஒரு கவர்ச்சிகரமான சர்ச்சைப்பொருள் மட்டுமல்ல. அது பணத்திற்காக எழுதும் பத்திரிகையாளர்கள், திறமையற்ற அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் கூட மீண்டும் மீண்டும் சர்ச்சை செய்ய விரும்பும் ஒரு விஷயமாகும். 
இந்தியா தனது பாதையை மறந்து நடைபெறும் நிகழ்வுகளுக்கு மட்டும் எதிர்வினை புரிந்து வருகிறது. சோனியா காங்கிரஸ் அரசாங்கம், தான் கொழும்புவுடன் சேர்ந்து செய்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச அழுத்தம் ஏற்படுவதை கலைக்க முயல்கிறது.          தற்போது ராணுவ கொடுமையின் கீழ் அச்சத்தில் வாழும் தமிழர்கள் இந்தியாவும் இலங்கையும் எதை செய்து கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் பாதுகாவலர்களான புலிகள் இருக்கின்றனரோ இல்லையோ, தமிழர்களுக்கு சுதந்திரமான ஈழதேசம் வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சர்வதேச சமுதாயம் உதவியது ஆகிய நிகழ்வுகள் காரணமாக புலிகளும் மக்களும் அதனை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனரே தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. இதன் பின்விளைவுகள்தான் இப்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் வெளிவேசம் மற்றும் முட்டாள்த்தனம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.
விடுதலைப் புலிகளிடம் கண்ட பாராட்டுதலுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நோக்கத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இருந்ததே. தமிழ் மக்கள் புலிகள் மீது இந்த நம்பிக்கையை வைத்து அவர்களுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு புலிகளை நம்புவதைவிட வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போது உலக வல்லரசுகள் ஒன்றிணைந்து புலிகளின் ராணுவ பலத்தை அழித்து விட்டனர். எப்படி, ஏன், யார் என்ற கேள்விகளுக்கு மெள்ள மெள்ள பதில் கிடைத்து வருகிறது. ஆனால் புலிகள் தமிழர்களின் குரலாக இருந்தனர் என்பதே உண்மை.
இலங்கை புலிகளையும் தமிழர்களின் உரிமைகளையும் சமமாகவே பார்த்தது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சனைகள் ஆகும். அவற்றை தனித் தனியாகத்தான் பார்க்க வேண்டும். அதை ஒன்றாக்கி உங்களால் இனப் படுகொலையையும் மறைத்து விட முடியுமா?
யூகோஸ்லாவியாவை பிரிவினையிலிருந்து பாதுகாக்க நடத்தப்பட்ட இறுதி கட்டப்போரில் செரப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டது. இதனை அறிந்ததிலிருந்தே அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் கொள்கை முடிவு வட்டாரத்தில் ஆர்2பிவிவகாரம் சர்ச்சை செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவாக, முறையற்ற நிர்வாகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பற்ற மற்றும் அழிக்கப்பட்டு வரும் மக்களை பாதுகாக்கும் பொறுப்புஜனநாயக நாடுகளுக்கு உண்டு என்ற கருத்து உருவாகியுள்ளது. அரபு நாடுகளின் விடுதலை உள்ளேயிருந்து அல்ல, ஆனால் வெளியே இருந்து வந்தது என்று கருதப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை.  
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடையாளத்தையே அழிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. வட கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்து அவர்கள் அங்கு திரும்பிச் செல்லவும் தடுக்கப்படுகின்றனர். இதன் மூலம் வட கிழக்கில் உள்ள ராணுவத்தை வைத்து தமிழர்களின் மொழி, கலாச்சார, சமூக மற்றும் மத அடையாளங்கள் மற்றும் பொருளாதார வாழ்க்கையை அழிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் இறுதி நோக்கம் தமிழ் மக்களின் வாழ்வை ஒரு செல்லாக் காசாக்குவதாகும். வல்லரசு சக்திகள், கடந்த 60 ஆண்டுகாலமாக செய்யப்பட்டுவரும் கொடுமைகள் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் அரங்கேற்றப்பட தாங்களும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 
தமிழ் ஈழத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ தமிழ் ஈழம் உருவாக்கப்படுவது தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுய மரியாதைக்கு இன்றியமையாதது ஆகும்.
நடராஜா பாலசுப்ரமணியம்,

தலைவர், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, லண்டன்.
தமிழ் மொழிபெயர்ப்பு: Perumal A. Thevan, Mumbai.
நன்றி- http://pflt.org/

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...