Wednesday, November 2, 2011

இரட்டைக் கோபுரங்களும் தமிழ் இனப்படுகொலையும்

நடராஜா பாலசுப்பிரமணியம் (பிஎஃப்எல்டி, யுகே)
அல்கய்தா தீவிரவாதிகள் அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பெண்டகன் மீது தாக்குதல் நடத்தி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த தாக்குதலில் 3,000 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
யாரும் கடந்த காலம்-நிகழ்காலம் குறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால் காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. பொதுவாக 2001 செப்டம்பர் 11 எவ்வாறு உலகை வரையறை செய்தது, தொடர்ந்து எதிர்காலத்தையும் வரையறை செய்யும் என்பதை திறந்த மனதுடன் பார்க்கும்போதுதான் தொல்லை ஆரம்பிக்கிறது.

பிபிசிக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்
செப்டம்பர் 18, 2001 செவ்வாய்க்கிழமை, ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி செய்த போராளிகள், அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போர் அறிவித்துள்ளனர். அதற்குப் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு நவம்பர் 10, 2001 அன்று பிபிசியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. தலைப்பு “டெய்சி க்ளஸ்டர் பாம்ப், இயலாமையின் அறிகுறி“.(questiontime@bbc.co.uk, night-blindness)  

துணை அமைச்சர்களுக்கான பாராளுமன்ற செயலாளரும் ரோதர்ஹாமின் லேபர் உறுப்பினருமான திரு மாக் ஷேன், குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். நான் இந்த வரிகளை சொன்னபோது, எனது கருத்தை மின்னஞ்சலில் அனுப்பும்படி சொன்னார்கள். அதற்கு காரணம் நான் சொன்ன பொருள். ஆனால் அவர்கள் சொன்ன காரணம் நேரமில்லை என்று சொன்னார்கள். இன்னமும் என்னால் அந்த மின்னஞ்சலின் அச்சுப் பிரதியை கொடுக்க முடியும்.

மேற்கோள். “இது திரு டெனிஸ் மேக் ஷேனின் கருத்துக்கான பதில், “அவர்கள் மனிதர்கள் மீது அதிகபட்ச அழிவை ஏற்படுத்தினார்கள்”.

“ஐயா, நீங்கள் சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன். மீண்டும் நாம் அன்றைய தினம் என்ன நடந்தது என்று அலசி ஆராய்வோம். அமெரிக்கா சவால்விடுக்க முடியாத மாபெரும் பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ஒரு முடிவில்லாத முரட்டுத்தனத்தை கொண்டுள்ளது. அதனுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இரட்டை வேடம் போடுவதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. இது உலகம் முழுவதையும் பாதித்தது. குறிப்பாக மூன்றாம் உலக ஏழைநாடுகளை பாதித்தது. உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்காவிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும்  பெருந்தன்மை கிடையாது.

எனவே இது அமெரிக்காவின் கைஓங்கியதனம் மற்றும் முரட்டுத்தனத்திற்கு புகட்டப்பட்ட ஒரு பாடம் என்றே சிலர் நினைத்தனர். செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் அவ்வாறான பாடமே. இந்த தாக்குதல் சுத்த முட்டாள்த்தனமானது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்திய தாக்குதல் அதன் பொருளாதார சக்தி மற்றும் பெண்டகன் மீது நடத்திய தாக்குதல் அதனுடைய ராணுவ பலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இது தாக்கியவர்கள் பொதுமக்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பயங்கரமான, மாபெரும் அழிவுச் செயலாகும். “தாக்குதல் நடத்தியவர்கள் அமெரிக்காவின் 5-7 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை கொன்றனர் என்று அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது ஏன் நடந்தது என்று யாரும் நம்பகமாக ஆய்வு செய்து கூறவில்லை.
      
   இத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. அவர்களுக்காக ஏழை பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். குறைந்தபட்சம் அந்த துரதிர்ஷ்டசாலிகளுக்காவும் அவர்களது குடும்பத்தினருக்காவும் வருத்தப்பட்டனர். இந்த துயரச் செயல் அமெரிக்கா மீதான வெறுப்பின் காரணமாகவே செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 25% பேர் தங்களது கவனத்தை பெண்டகன் மீது காட்டினாலும் கூட, அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மிகச் சிலரே பேசினர். 

மற்றவர்களைப் போலவே திரு மாக் ஷேனும் தவறான கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். அமெரிக்கா குண்டு வீசும்போது அது யார் மீது குண்டு வீசுகிறது என்று கவலைப்படுகிறதா? இப்போது பாருங்கள், நாங்கள் துல்லியமான இலக்குகளின் மீது 94% துல்லியத் தன்மை கொண்ட குண்டுகளைத்தான் பயன்படுத்துகிறோம் என்று உலகிற்கு சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே மக்களை மொத்தமாக கொன்று குவிக்கக் கூடிய டெய்சி கட்டரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அவர்களுடைய ஒரே குறிக்கோள் அமெரிக்கர் யாரும் பிணமாக நாடு திரும்பக் கூடாது என்பதுதான். ஆனால் நூற்றுக் கணக்கான ஆஃப்கானியர்கள் வெடித்துச் சுக்கு நூறாக சிதறலாம். நான் ஒரு இஸ்லாமியர் இல்லை.

நான் தொலைக்காட்சியில் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் நொறுங்கி விழுந்தபோது, அது தொலைவில் நடக்கும் துயரச் சம்பவமாக நினைத்தேன். செப்டம்பர் 11, 2001 நிகழ்வு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நமது மனித உரிமை போராட்டத்தை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் முடிக்கும் என்று ஈழத்தில் உள்ள அல்லது வேறு எங்கும் வசிக்கும் ஒரு தமிழராலும் கூட கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.

இனப்படுகொலையை நவீன ஊடகம், வார்த்தைகள், படங்கள் மற்றும் குரல்கள் உலகுக்கு உணர்த்தின. மேலும் உரிமைக் கழகங்கள் மற்றும் உரிமைக் குழுவினர், மூத்தவர்கள் மற்றும் சான்றோர், தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்து அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தது பற்றி உலக மக்களின் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தினர். தனது குற்றங்களை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் என்ற பெயரில் மறைக்க இலங்கை அரசாங்கம் போட்ட வெளிவேசம் வெளுத்து விட்டது.   

எப்போதும் உறுதியான உரிமைகோரல்களுக்கு துணை நிற்கும் பிரபல பத்திரிகையாளரான ரான் ரைடெனோர் தக்க நேரத்தில் ஒரு சரியான பிரகடனம் அல்லது வேண்டுகோளை முன் வைத்தார். “இனவாதத்தை அழித்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் போர் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, நான் போர்கள், இனவாதம், ஆதிக்கத்திற்கு எதிராக மற்றும் சமூக ஒற்றுமைக்காக போராடும் தொண்டனாக இருந்து வருகிறேன். என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மனித உரிமைகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தாக்கத்திற்கு ஆளான சில உண்மையான சோஷலிச நாடுகளில் வரவேற்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். 2009ம் ஆண்டு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த நாடுகள் மீண்டும் அந்நாட்டிற்கு ஆதரவளிக்கும் முன்பாக இருமுறை யோசிக்கும் என்று நம்புவோம்.

“இந்த ஜூலை 26ம் தேதி கொண்டாட்டங்களின்போது, “நான் க்யூபா நாடும் மற்றும் அனைத்து ஆல்பா நாடுகள் கூட்டணியும் ஃபிடல் மற்றும் சே வெளிப்படுத்திய தார்மீக நெறிகளுக்கு திரும்பி தமிழ் மக்களுக்கு உரியதை செய்ய வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்என்று ரான் ரைடெனோர் என்று கூறினார்.
உலக அமைப்புகளில் உள்ள நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளவற்றை அமல்படுத்த இந்தியா ஆதரவளிக்குமா? நவீன இந்தியாவை கட்டியமைத்த மாபெரும் தலைவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் இன அழிப்புக்கு ஆளானவர்களின் அழுகுரலுக்கு செவிமடுக்குமா? அல்லது உலக மக்களுக்காக ஒரு ஏமாற்று வலையை பின்னும் ராஜபக்சே அரசாங்கத்தை மீண்டும் நம்புமா?      
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி விசாரிக்க ஒரு பொருத்தமான சர்வதேச குழுவை நியமிக்க வேண்டும் என்று ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தக்க தருணத்தில் வெளியான விக்கி லீக்ஸ் ஆவணங்கள் உலகத்திற்கு உண்மையை சொல்லியுள்ளன. அதே போல பான் கி மூன் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமான மனிதர் இல்லை. சேனல்4-ன் ஆவணப்படத்தை பார்க்க நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து பிரதமர் எந்தவித முடிவும் எடுப்பதற்கு முன்பாக இந்த ஆவணப்படத்தின் மறு பகுதியை பார்க்க வேண்டும். 

இங்கிலாந்து இந்த பரிந்துரைக்கு முழு ஆதரவு தரவேண்டும். மேலும் இலங்கை உருவாக்கியுள்ள அனைத்து வகையிலும் குறைபாடுள்ள எல்எல்ஆர்சியை பயன்படுத்த அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் சர்வதேச விசாரணை நடத்த வேண்டி சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும். 


தமிழில் தேவன்

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...