Tuesday, November 15, 2011

உடலுறவு மனிதனை முட்டாளாக்குகிறது – ஓஷோமதம் உடலுறவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொன்னூற்று ஒன்பது சதவீதம் முட்டாள்த் தனமானது. ஆனால் ஒரு சதவீதம் உண்மை இருக்கிறது. அதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் நான் அந்த ஒரு சதவீத உண்மை பற்றி நான் எப்போதும் உங்களிடம் பேசவில்லை. ஏனென்றால் அந்த ஒரு சதவீத உண்மை உங்களை ஏமாற்றலாம். அதனால் நான் அந்த தொன்னூற்று ஒன்பது சதவீதம் பற்றியே பேசி வருகிறேன். ஆனால் எனது சித்திரத்தை முழுமையாக்க... இவையே எனது கடைசி தீட்டுதல்களாகும். என்னால் எதையும் விட்டுவிட முடியாது.

ஒரு சதவீத உண்மை முக்கியமானது. உண்மையில் அந்த ஒரு சதவீதம் காரணமாகவே அனைத்து மதங்களும் பாலுணர்வுக்கு எதிராக மாறிவிட்டன. அந்த உண்மை என்னவென்றால் பாலுணர்வு மனிதனை முட்டாளாக்குகிறது என்பதுதான். அவன் ஒரு அடிமை என்றிருக்கும்போது, அது அவன் அந்த கலையில் திறமை வாய்ந்தவன் என்ற கருத்தை தருகிறது. இந்த அடிமைத்தனத்தை முறிக்க வேண்டும். இந்த குழியிலிருந்து அவனை வெளியே எடுக்க வேண்டும். ஆனால் அந்த குழியே அரண்மனை என்று அவன் நினைக்க ஆரம்பித்தால் அவனை அதிலிருந்து வெளியே தூக்க முடியாது. அதிலிருந்து வெளியே வருமாறு நீங்களும் அவனிடம் சொல்ல முடியாது. எனவேதான் அனைத்து மதங்களும் பாலுணர்வை கண்டிக்கின்றன.

ஆனால் மதங்கள் அதனை அளவுக்கதிகமாக கண்டித்து விட்டன. அவர்கள் அந்த ஒரு சதவீதத்திற்காக தொன்னூற்று ஒன்பது சதவீத அபாயத்தை மறந்து விட்டனர். தொன்னூற்று ஒன்பது சதவீத பொய்யின் அபாயத்தை கையிலெடுக்காமல் அதனை எளிதாக செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனிதனின் அபாயத்தை ஒரு எளிய வழிமுறையாகவே பார்த்தனர். அதுவே சாத்தியமாகும் மிகத் தாழ்ந்த நிலையாகும். நீங்கள் வெறும் வழிமுறை மட்டுமே. தீர்வு அல்ல. உங்களுக்கு தெரியாத ஒரு சக்தியால் நீங்கள் பயன்படுத்தப் படுகிறீர்கள். காலில் விழும் அனைவரும் உங்களுக்குத்தான் காலுக்கு விழுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கை அளவில் வாழும் மனிதன் உடலுறவு என்ற பிரமையை கொண்டிருக்கிறான். அந்த பிரமை இயற்கை, உயிரியல், ரசாயனத்தால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்களது உடலில் உள்ள போதைப்பொருட்கள் வெளிப்படுகின்றன. அது உங்களுக்கு இன்பத்தை ஏற்படுத்துகிறது. போதைப் பழக்கங்களுக்கு ஆளாகுபவர்கள் மெள்ள மெள்ள உடலுறவில் ஆர்வமில்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

போதை மருந்துகளை அதிகம் விரும்பும் ஹிப்பிகள், யிப்பிகள், மற்ற அனைவரும் உடலுறவில் முழுவதுமாக நாட்டமிழக்கின்றனர். ஏனெனில் இப்போது இன்பத்தை அடைய சிறந்த வழி கிடைத்துவிட்டது. இப்போது இதனுடன் ஒப்பிடும்போது உடலுறவு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. இது இவை இரண்டுமே போதையை ஏற்படுத்தக் கூடியவை என்ற உண்மையை உங்களுக்கு புரிய வைக்கலாம்.

இயற்கை அந்த போதைப் பொருளை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தி வருகிறது. இதுவரை அதிகமாக்கும் தேவை ஏற்படவில்லை. ஒருவேளை இயற்கை சிறந்த போதைப்பொருளை, சிறந்த ரசவாதத்தை உருவாக்க, அதனுடைய தரத்தை இன்றைய தேவைக்கு ஏற்ப உருவாக்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் இது மனித தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வெகு தொலைவில் உள்ளது. சிறந்த போதைக்காக மனித மனம் எல்எஸ்டி போன்ற போதைப் பொருட்களை உருவாக்கியது. கபீர், புத்தர், ரூமி போன்ற அனைத்து ஞானிகளும் அதைப் பற்றித்தான் பேசி வந்தனர். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய மாட்டு வண்டி பயணத்தை மேற்கொண்டனர்.

ஆனால் அறிவியல் மிகவும் மேம்பட்ட போதைப்பொருட்களை நமக்கு கொடுத்துள்ளது. எனவே யோகாசனம், தந்த்ரா, போன்ற இதர விஷயங்கள் தேவையில்லை. நீங்கள் ஒரு ஊசியை போட்டுக்கொண்டால் போதும். அதனைச் செய்ய வேறொருவர் தேவையில்லை. பல மணிநேரம் இன்பமாக இருப்பதால் இது பாலுறவு உச்சநிலையை விட மேம்பட்ட ஒன்றுதான். ஏனெனில் உச்சநிலை சில நொடிகளே நீடிக்கக் கூடியது. இது அதற்கான அதிக ஆசையை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால் ஒருபோதும் திருப்தி அளிப்பதில்லை.

இரண்டாவது அறிகுறி என்னவென்றால் போதை மருந்து அடிமையாக்கும் சக்தி படைத்தது- மக்கள் உடலுறவுக்கு அடிமையாகி விடுகின்றனர். அடிமையாகுவதில் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், உங்களிடம் அந்த போதை மருந்து இருந்தால் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் உங்களிடம் இல்லையென்றால், அது இல்லையே என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும்போது அதற்கான ஏக்கமே ஏற்படுவதில்லை. ஏக்கம் என்பதே வருவது கிடையாது. அது உங்களிடம் இருக்கும்போதெல்லாம் அது வெறும் வீணான முயற்சி என்று உணருகிறீர்கள். அதனால் ஒன்றும் கிடைப்பதில்லை என்று நினைக்கிறீர்கள். நீங்கள் பரிணாமத்தில் ஒரு அங்குலம் கூட நகர்வதில்லை. நீங்கள் ஒரு கணத்திற்கு வானத்தில் குதிக்கிறீர்கள். ஆனால் திரும்பி பூமியில் விழுந்து விடுகிறீர்கள்.

அதனால்தான் யாரும் பொதுவான இடங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. அதற்கு வேறு காரணமே கிடையாது. காரணம் என்னவென்றால் யாருமே முட்டாள்த்தனமாக காட்சியளிக்க விரும்புவதில்லை. இப்போது இந்த உலகத்திலேயே முன்னேறிய முட்டாள்த் தனமான இடமான கலிஃபோர்னியாவில் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பவர்களுக்காகவே ஹோட்டல்களை நடத்துகின்றனர். அதற்காக பணம் கொடுக்க வேண்டும். உள்ளே இரண்டு முட்டாள்கள் உடலுறவு கொள்கிறார்கள். அந்த அறையில் அவர்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் முட்டாள்கள் இந்த முட்டாள்கள் எப்படி அனுபவிக்கின்றனர் என்று பார்க்கின்றனர். அந்த ஜோடி எப்படி தாங்களாகவே முட்டாளாகிக் கொள்கின்றனர் என்பதை அவர்கள் பார்த்து அனுபவிக்கிறார்கள். அதற்காக பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அந்த இருவருக்கும் பணம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
முதல் நாளில் ஒருவர் அந்த அறைக்குள் இருந்தார். வெளியே வந்ததும் பலரும் சந்தோஷமாக இருப்பதை கண்டார். “என்ன விஷயம்?“ என்று அவர் அவர்களிடம் கேட்டார். “ஷோ பிரமாதமாக இருந்தது“ என்று அவர்கள் சொன்னார்கள். “எந்த ஷோ?“ என்று கேட்டார். “உனக்குத் தெரியாதா? அருமையான ஷோ நாளைக்கு வந்து பாரு“ என்று சொன்னார்கள்.


மகாமடையனான அவன் ஷோவில் மிகவும் முட்டாள்த்தனமான வேலைகளை செய்து கொண்டிருந்தான். அதனால் பார்க்க வேண்டிய ஷோவாக இருந்தது. அடுத்தநாள் அவர் தனது நண்பர்களை உடன் அழைத்து வந்திருந்தார். இப்போது அவர் அறைக்கு வெளியே இருந்து பார்த்தார். அப்புறம்தான் என்ன விஷயம் என்று அவருக்கு புரிந்தது. முந்தைய நாள் இவர் அறைக்கு உள்ளே இருந்தார். வெளியே இருந்த அனைவரும் அவரைப் பார்த்து ரசித்துள்ளனர். இது ஒரு தந்திரமான வேலை. இப்போது அவர் மற்றொருவரை அனுபவித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.


பொது இடங்களில் உடலுறவு கொள்வதற்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் ஏதாவது ஒரு வழியில் தடை பிறப்பித்துள்ளன. அதற்கான ஒரே காரணம் முட்டாள்த் தனமான வேலைகளை அந்தரங்கமாகத்தான் செய்யவேண்டும் என்பதாகும். தேவையில்லாமல் நீங்கள் மற்றவர்களின் இலவச பார்வைப் பொருளாக ஆகாதீர். ஒரு கூட்டம் கூடி நின்று உங்களை ரசிக்கும். யாராலும் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாது. அங்கேயே நின்று விடுவார்கள். தாங்களும் இதே போன்ற வேலையைத்தான் செய்கிறோம் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு சுய நினைவற்ற நிலை.

இயற்கையான நிலையில் உடலுறவு கொள்வது கீழான நிலையாகும். இது இயற்கையால் உருவாக்கப்பட்ட கனவு. உங்களால் இந்த கடினமான வேலையை கடந்து செல்ல முடியும். அது சந்தோஷமாக நிலையாக இல்லாதிருந்தால், நீங்கள் அதனை மறுக்கப் போகிறீர்கள். “நானே என்னை முட்டாளாக்கிக் கொள்ள மாட்டேன்“ என்று சொல்லி விடுவீர்கள். நிச்சயமாக இயற்கை உங்களுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆதாரம் – ஓஷோவின் புத்தகம் “ஃப்ரம் மிஸரி டூ என்லைட்மென்ட்“ சேப்டர் 5-லிருந்து

நன்றி- மெஸேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்


http://www.messagefrommasters.com/Shiva-Shakti/sex_fool.htm

No comments: