Wednesday, December 14, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 1

பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற வாதத்தின் ஒரு பகுதி

திரு செல்வன் அவர்களே,

• ஒரே இந்தியாவில் கர்னாடக, கேரள அரசியல் நன்றாக உள்ளது.தமிழக அரசியல் நன்றாக இல்லை.ஆக மற்ற மாநில அரசியலை கேரளம்,கர்னாடகம் போல் ஆக்கினாலே இந்திய அரசியலில் நல்ல முன்னேற்றம் வரும் இல்லையா?

கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் தங்கள் இனத்திற்காக நன்மை செய்ய மாற்று இனங்களை சுரண்ட நினைக்கிறார்கள். இதேபோல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்தால் உடனே அவர்கள் தமிழகத்திலிருந்து மின்சாரம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதனை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? (நாங்கள் அவ்வாறு செய்வதை விரும்பவில்லை). ஆனால் அவர்கள் இதனை செய்வதில்லை. காரணம் தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். இதுதான் பிரச்சனை. அவர்கள் தமிழர்கள் நலனை கண்டுகொள்வதில்லை. இது இப்போது மக்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. கர்நாடக, கேரள வழியில் தமிழகம் சென்றால் வெகு விரைவில் இந்தியா உடையும். அந்த மாநிலங்களை கட்டுப்படுத்த முடியாத இந்தியாவால் எந்த மாநிலத்தையுமே கட்டுப்படுத்த முடியாது. அந்த நிலையில்தான் தமிழ்நாடு உருவாகும்.


• அதிகாரம் வாய்ந்த பெண்னாக இருக்கலாம்.ஆனால் பதவியில் இல்லை.யுபிஏவின் தலைவர் என்பது அரசு பதவி அல்ல. எம்பிக்கள் அனைவரின் நோய்களையும் பகிரங்கபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. முரசொலிமாறன் மரணம் ஏன், ஆஸ்பத்திரி சிகிச்சை ஏன் என யாருக்காவது தெரியுமா? மொத்தத்தில் மக்கள் பிரச்சனைகள் ஆயிரம் இருக்க இம்மாதிரி வதந்திகள், யூகங்களை பிடித்துகொண்டு நாம் தொங்க வேண்டியதில்லை.

அந்த அதிகாரம் எப்படி வந்தது? அவர் என்ன டாடாவுக்கு இணையான காங்கிரஸ் அண்ட் கோ-வை நடத்துகிறாரா? இல்லை இந்திரா நூயிவா? இந்தியாவின் தலைமைப் பொறுப்பு சோனியாவின் கையில் இருக்கிறது என்பது உலகே அறிந்த விஷயம். அவர் இன்னமும் இத்தாலி குடியுரிமை பெற்ற ஒரு வெளிநாட்டுக்காரர் என்ற காரணத்தால் அவரால் நேரடியாக பிரதமர் ஆக முடியவில்லை. ஒரு பொம்மையை வைத்து ஆட்சி செய்கிறார். ஒரு உண்மையான அரசியல்வாதி அவர் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் என்றாலும் தனது உடல்நிலையை மக்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும். இதில் முரசொலி மாறன் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது ஒரு தலைவனின் தார்மீக பொறுப்பு. அரசியல் நாகரீகம். சோனியா இந்தியராக இருந்திருந்தால் வாஜ்பாய் போல தனக்கு மூட்டு அறுவைச் சிகிச்சைதான் நடந்தது என்று தெரிவித்திருப்பார். தெரிவிக்கவும் வேண்டும். அதனால்தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்ற வாஜ்பாயின் தீர்மானித்திற்கு எதிராக சோனியா ஆயுதம், ஹெலிகாப்டர், போர்க்கப்பல், உளவுத்துறை தகவல், ராணுவ உதவி முதற்கொண்டு அனைத்தையும் செய்தார். அதனால்தான் ராஜபக்சே இது இந்தியாவின் போர் என்று கூறினார்.


• பாதிப்பு இல்லாததால் விளக்கம் கொடுக்கிறார். அது ரன் அஃப் தெ ரிவர் எனப்படும் அணை வகை.அதில் நீரை தேக்க முடியாது.நீர் பெருக்கை வைத்து மின்சாரம் மட்டுமே எடுக்க முடியும்.

இந்த விளக்கம் இமயமலைப் பகுதி ஒன்றுக்கும் ஆகாத பனிப்பிரதேசம் என்பதைப் போன்றது. ஆய்வு செய்யாமல் விளக்கம் கொடுக்க அவர் என்ன விஞ்ஞானியா? பூகோள அறிஞரா? பொருளாதார அறிஞரான அவரால் நாட்டின் பணவீக்கத்திற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அணை பற்றி கருத்துக் கூறுகிறார்.

• பாகிஸ்தான் பகுதி காஷ்மிரில் உள்ளவர்கள் இந்தியாவுடன் சேர தயாராக இல்லை. அது ஒரு முக்கிய காரணம்.

அப்படி என்றால் அந்த பகுதியை எதற்காக நீங்கள் உங்கள் வரைபடத்தில் காட்டுகிறீர்கள்? மக்களை ஏமாற்றவா? அதனை அவர்களிடமே விட்டுவிடவேண்டியதுதானே? விரும்பாத மக்களை உங்கள் பக்கம் சேர்க்க விரும்பும் நீங்கள் எந்த மாதிரியான ஜனநாயகவாதிகள்?

• எல்லா மாநகராட்சி, ஊராட்சி,எம்.எல்.ஏ, எம்பி தேர்தலில் ஜாதி, மதம் பார்த்து தான் வேட்பாளர்களை நிறுத்துகிரார்கள். சிறுபான்மையினருக்கு பிரதிநித்துவம் இருக்கும்படி தான் அமைச்சரவை அமைக்கபடுகிறது. இதில் எந்த பிரச்சனையும் இருப்பது போல தெரியவில்லை.

அதாவது பெரும்பான்மையாக இருப்பவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அப்படி பிரதிநிதித்துவம் அமைந்தால் தவறில்லை. சிறுபான்மையினர் அதிகாரத்தை பிடிக்க முடியாது. ஆனால் பிடிப்பதைப் போல காட்டிக் கொள்வோம். பேச்சுக்காக சிறுபான்மையினருக்கு சம அதிகாரம் கொடுப்பதாக சொல்லிக் கொள்வீர்கள். அப்படித்தானே?


• இதை எல்லாம் செய்ய தனிநாடு தேவையில்லை என்பதுதான் வாதமே. அதை நீங்கள் ஒத்துகொண்ட பிறகு இதை விவாதிக்கவே வேண்டியதில்லை. முதலில் தனிநாடு வாங்காமல் இதை எல்லாம் செய்துமுடித்து நல்ல முறையில் உங்கள் கட்சி தமிழ்நாட்டை ஆண்டால் மக்களுக்கு உங்கள் கட்சிமேல் ஒரு நம்பிக்கை வரும்.

நாங்கள் தனிநாட்டு கோரிக்கை வைப்பதற்கு காரணமே உங்களுடைய இயலாமையும். உணர்வின்மையும்தான். அதனை எங்களால் திறம்பட செய்ய முடியும் என்று விளக்கவே இவற்றையெல்லாம் சொல்கிறோம். அவ்வாறு செய்யும்போது உங்களால் எங்களுடன் வாதம் செய்யவும் முடியாது, அப்போது உங்களிடம் எங்களுக்கு தனிநாடு தாருங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்துக் கொள்வோம். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

• உங்களுக்கு எல்லாம் தெரியும்:-)..யார் இல்லை என்றார்கள்:-)..விஜயகாந் முதல் ராமதாஸ் வரை எல்லோரும் ஆலாளுக்கு ஒரு திட்டத்தௌ கையில் வைத்துகொண்டு "எங்களை ஆளவிடுங்கள். மாற்றம் கொண்டுவருகிறோம்" என கூறிகொண்டுதான் உள்ளனர்.நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி உங்கள் திட்டத்தை மகக்ள் முன் வைக்கலாம்.மக்கள் ஏற்றுகொண்டால் பதவிக்கு வரலாம்.

நாங்கள் அதிகாரத்தை கேட்கவில்லை. எங்களது செயல்களின் மூலமாக பெறுவோம். இவர்கள் சொல்லாத ஒன்றையும் நாங்கள் சொல்கிறோம் என்பதுதான் உங்களை இந்த வாதத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் நாங்கள் இவற்றையெல்லாம் செய்துவிட்டால் உங்களுக்கு பிரச்சனை. ஏனென்றால் நாங்கள் அடுத்து செய்யப்போவது தனிநாடு. அதுதான் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மற்றபடி மேற்படி அரசியல்வாதிகள் உங்களுக்கு ஜோக்கர்கள். நாங்கள் உங்களுக்கு தீவிரவாதிகள். ஏனெனில் நாட்டுக்காக போராடிய விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக பார்க்கும் நீங்கள் காந்தி தலைமையிலான ஒரு சிட்டுக் குருவிப் படையை பார்க்க வசதியாக மறந்து விடுகிறீர்கள்.

• ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனைக்கு இந்தியா எப்படி காரனமாக முடியும்?
நீங்கள் முன்பே சொன்னமாதிரி "இந்த பிரச்சனைக்கு உங்களிடம் தீர்வு இல்லை.என்னிடமும் இல்லை".வரும்காலத்தில் எதாவது மாய மந்திரம் நிகழலலாம்.ஆனால் இந்தியாவில் இருந்து பிரிவதுக்கும், இணைவதுக்கும் பிரச்சனை தீர்வதுக்கும் எத்தொடர்பும் இல்லை.

அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த பிரச்சனைக்கு காரணமில்லாத ஒன்றை நாங்கள் குறை கூற விரும்பவில்லை. எனவே அந்த பிரச்சனையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். இவ்வளவு சொன்ன பின்னும் உங்களிடமும் தீர்வு என்னிடமும் தீர்வு இல்லை என்கிறீர்கள். ஹிஹி.. மாய மந்திரத்தில் நான் நம்பிக்கை இல்லாதவன், செயலில் நம்பிக்கை கொண்டவன். ஆனால் இடைத்தரகர்கள் பிரச்சனைகளை தீர்க்க விடாமல் குளறுபடிகள் செய்யலாம். அதுவே இந்தியா. இது குழந்தை பிறப்பதற்கும் மருத்துவருக்கும் தொடர்பில்லை என்பதைப் போல.

• புண்பட என்ன இருக்கு? மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வலிமை என்னிடம் இல்லை. நான் யாரிடமும் போய் உன் பிரச்சனை என்ன என எல்லாம் கேட்பதும் இல்லை. என் பிரச்சனைகளை தீர்த்து வைக்க சொல்லியும் யாரிடமும் கேட்டது இல்லை. என் பிரச்சனைகளை நான் தான் தீர்த்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.என்னை பொறுத்தவரை என் உயர்வு,தாழ்வு எல்லாம் என் கையில் தான் உள்ளது.எந்த அரசியல்வாதி கையிலும் இல்லை. அந்த விதத்தில் நான் ஒரு சாதாரண குடிமகன். நீங்கள் சாதாரனமானவர் இல்லை என கூறிவிட்டீர்கள்.உங்கள் அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது நடந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

பிரச்சனையை பார்த்து அச்சப்படும் அல்லது அதனை மறைக்க முயலும் ஒருவரால் அந்த பிரச்சனையை தெளிவாக அணுக முடியாது. மற்றபடி நான் யாரிடமும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று கேட்பதில்லை. என்னுடைய அரசியல் குருவிடம் மக்கள் பிரச்சனையை கொண்டு வருவார்கள். அவருடன் இருக்கும்போது என்னிடமும் பிரச்சனையை கொண்டு வருவார்கள். அதைத்தான் நாங்கள் எங்களால் முடிந்தவரை தீர்க்க முயற்சி செய்வோம். செய்து வருகிறோம்.

யானையை தெரியாதவன் அதைக் கண்டு அஞ்சுவதும், அது மதம் பிடித்தால் அது கண்டு மிரள்வதும் இயற்கையே. ஆனால் யானையைப் பற்றி நன்கு அறிந்தவன் அதனை வைத்து வேலை வாங்குகிறான். அதற்கு மதம் பிடிக்காமல் செய்ய வேண்டியதை செய்கிறான். கிரிக்கெட்டை பற்றி தெரியாதவன் அது பற்றி எதுவும் சொல்ல முடியாதோ, அதுபோலவே உங்களது அரசியல் தெளிவின்மை காரணமாக, என் போன்றோரின் மீதான நம்பிக்கையின்மையின் காரணமாக எனது கருத்தை எதிர்க்கிறீர்கள். நான் என் திறமையை நிரூபிக்கும்போது நீங்களும் என்னை ஏற்றுக் கொள்வீர்கள்.

நீங்கள் படித்தவர், வசதி படைத்தவர் உங்களுக்கு வேறு யாரும் தேவையில்லை. ஆனால் நாட்டில் வழி தெரியாத, ஏழை, ஏன் வசதி படைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அரசியல்வாதிகள் தேவைப்படுகிறார்கள். மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவே அரசியல்வாதிகள் தேவை. அவர்களின் தேவை நல்லாட்சி வழங்குதல். ஒரு நாட்டின் (அந்த நாட்டு மக்களின்) உயர்வுக்கும் தாழ்வுக்கும் அரசியல்வாதிகளே காரணம். மக்களாட்சி நாடுகளில் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சிறந்த ஆட்சியாளர்கள் இல்லாத நிலையில் சிறந்த அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். அரசியல் அமைப்பே சரியில்லாதபோது அதனை தூக்கி எறிகிறார்கள். தாங்கள் வாழும் நாடு தங்களை மதிக்காத போது அதனையும் தூக்கி எறிகிறார்கள்.

தமிழ் மக்கள் அரசியல் மீது கொண்ட அலட்சியம், சுய வாழ்க்கையில் மீதான அதிக கவனம் காரணமாக அரசியல்வாதிகளை சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்க தவறிவிட்டனர். அதுவே தமிழனின் பரிதாப நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. அதனை இப்போது உணர்ந்தும் விட்டனர். அதனால்தான் என் போன்ற ஏராளமான தமிழர்கள் அரசியலை சீர் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஒரு சிறந்த ஒரு அரசியலை கட்டி அமைப்பார்கள். அந்த அரசியல் தனி தமிழ்நாடு உருவாக காரணமாக அமையும். இப்போது நான் மேற்கொள்வது ஒரு கருத்துப் பிரச்சாரமே.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...