Wednesday, December 14, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 2

திரு தமிழ் பயணி அவர்களுக்கு,


நேரம் எடுத்துக்கொண்டு எழுதுங்கள். நானும் பணிகளுக்கு இடையேதான் இந்த விவாதகங்களில் ஈடுபடுகிறேன். நான் செல்வனுக்காக மட்டும் எனது கேள்விகளை முன் வைக்கவில்லை. இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும்தான் கேள்விகளை முன் வைக்கிறேன். அதனால் நீங்கள் தாராளமாக உங்களது கருத்துக்களை முன் வைக்கலாம்.


இதன் படி நடந்தால் மக்கள் ஆதரவு என்றும் கிடைக்கும். ஆனால் உங்களை தவிர மற்ற யாரும் (ஏன் நீங்களே எவ்வளவு காலம்) அமைதிப் போராட்டத்தினை தொடர்வார்கள் என்று தெரியவில்ல‍ை.. :(

எனது வாழ்த்துகள்.

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. முதலில் தமிழ் தேசியம் சாத்தியம் இல்லை என்ற நீங்கள் இப்போது சாத்தியம்தான் ஆனால் எவ்வளவு காலம் ஆகும் என்ற சந்தேகத்தையும், எவ்வளவுபேர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறீர்கள். காலத்தைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இருந்தாலும் தோராயமாக 20 அல்ல 30 ஆண்டுகள் என்று குறிப்பிட விரும்புகிறேன். சூழலைப் பொறுத்து இந்த காலம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூட செய்யலாம். ஆதரவு என்பதை பொறுத்தவரை நாங்கள் முன்னெடுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளும் உண்மையாக இருந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

யூதம் என்னும் மதப் பிணைப்பு இருந்தது. மதகுருமார்(/தலைவர்கள்) சொல்லுவதே வேதவாக்காக இருந்தது. இங்கு வைகோ, சீமான் பஞ்சாயத்தே தீராது. அதனினும் மேலாக விஜயகாந்த், ஜெ, கலைஞர் என்று பெரிய தலைகள் உள்ளன. இங்கு மொழி எந்தளவு போராட்டத்திற்க்கான பிணைப்ப‍ை உருவாக்கும் என்று காலமே பதில் சொல்லனும்.

உண்மைதான். வேதவாக்காக கூற ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு இல்லைதான். ஆனால் அதிகார அமைப்பை, தீர்வை மக்கள் எதிர்பார்க்கும் காலம் வந்துவிட்டது. எனவேதான் தலைமையை பொருட்படுத்தாமல் கூடங்குளம், முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் மக்கள் இறங்க ஆரம்பித்துள்ளனர். அப்படி இறங்குபவர்களை வழிப்படுத்தினால் போதும். அதேவேளையில் இப்போது காணப்படும் எழுச்சிக்கு மதங்கள் தடையாகவும் இல்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு காலத்திலும் அரசியலில் இறங்கியதில்லை.

இதனை நான் யாரையும் குறைத்து மதிப்பிட சொல்லவில்லை. அறைக்குள் கணினியின் முன்பாக அமர்ந்துகொண்டு மக்களின் நாடியை பிடித்துப் பார்க்க முடியாது என்பதற்காக சொன்னேன்.

உம் போன்றோர் தனி தேசியம் கோரி போராட இறங்கும் போது இந்தியாவிற்க்காக எங்களுடைய நிலமை எப்படி என்பதை போக போக தான் பார்க்கனும்.. :) :)

அதை நான் வரவேற்கிறேன். அப்போதுதான் ஜனநாயக சமநிலை ஏற்படும். நாங்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் அது வில்லன் இல்லாத கதை மாதிரி ஆகிவிடும்.

எங்கள் நண்பர் பொது சேவையில் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்.

நன்றி. பொதுச் சேவை ஏற்கனவே செய்து வருகிறேன். அதன் அடுத்த கட்டமாகத்தான் அரசியல் பிரவேசம்.

உங்களை கிண்டல‍டிக்க சொல்லவில்லை. நீங்களாவது கழிவறை போய்ட்டு வரும் போது கை கழுவிக் கொண்டு வாருங்கள். இல்லை கழுவாமல் மறந்து விட்டு வந்தாலும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விடுங்கள். சொன்னீர்களோ போச்சு... வருங்காலத்தில் கொங்கு தேசமோ அல்லது வேறு குட்டி நாடு கேட்டு போராடுவோர் மிகவும் கிண்டலடிப்பார்கள். இப்படி சொல்லி தான் எங்கள் மோகன் படாத பாடு பட்டு வருகிறார்.

எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

பொதுவாக நான் பேச்சில் நம்பிக்கை கொண்டவன் இல்லை. செயலில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். கிண்டலடிப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. காரணம் ஒரு வேலையை செய்ய இயலாதவர்கள்தான் அந்த வேலையை செய்பவரை கிண்டலடிப்பர். அவர்களது கிண்டல் ஒன்றும் செய்துவிடாது.
தமிழ்தேசியம் எனது உயிர் மூச்சு அதனை அடைந்தே தீருவேன். வாழ்த்த மனமில்லை.

இதற்காக நான் யாருடைய வாழ்த்தையும் எதிர்பார்க்கவில்லை.

உங்களுக்காக படித்து பதிலுரைப்போம்.

நான் உங்களது பதிலை எதிர்பார்ப்பேன்.

கேள்விகள் வரும் போது தொடர்பு கொள்கிறேன்.

நிதானமாக யோசித்துக் கேளுங்கள். எனது கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருங்கள்.

No comments: