Wednesday, December 14, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 3

பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற வாதத்தின் ஒரு பகுதி
திரு செல்வன் அவர்களே,
தமிழக அரசியல்வாதிகள் புடம்போட்ட தங்கமாக இருந்து இருந்தால் இதைபற்றி பேசுவதில் பொருள் உண்டு. எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் எனும்போது "ஊழலை ஒழிக்க தமிழ் தேசியம்" என்பதில் எதாவது பொருள் உள்ளதா?முதல்வராக இருக்கும்போதே அராஜகம்,லஞ்ச ஊழல் செய்துவரும் கழகங்கள் பிரதமரானால் திருந்திவிடுவார்களா?இந்திய அரசியல்வாதிகளை விட தமிழக அரசியல்வாதிகள் ஒழுங்காக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியபின்னர்தான் தனி தமிழகம் அமைந்தால் ஊழல் ஒழியும் என நம்ப முடியும்.

நான் ஒருபோதும் தமிழக அரசியல்வாதிகளை பாராட்டவில்லை. அவர்கள் இருக்கும் நிலை காரணமாகத்தான் நானும் என்னைப் போன்றோரும் அரசியலில் இறங்குகின்றனர். தமிழ் தேசியம் பற்றி பேசுகின்றனர். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதால்தான் நாங்கள் தமிழக தலைவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் சேர்க்கிறோம். முதல்வர்களை நாங்கள் பிரதமராக்கச் சொல்லவில்லை. மாறாக ரவுடிகளுக்குப் பதிலாக படித்தவர்களை அரசியலில் இறங்கச் சொல்கிறேன். நான் தமிழக அரசியல்வாதிகளை கணக்கிலேயே எடுக்கவில்லையே. அவர்களை விட்டுவிடுங்கள். நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

செனட் மாடலில் ராஜ்யசபாவை மாற்றுவதனால் மாற்றலாம். ஆனால் அப்படி மாற்றாத பல நாடுகளின் ஜனநாயக அமைப்பு வலுவாக தான் இருக்கிறது(உதா:ப்ரிட்டன், ஜெர்மனி).ஜனநாயகத்தில் பல மாடல்கள் உண்டு.தமிழ்நாடு இப்போது இருக்கும் அமைப்பிலேயே வலுவாக தான் இருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் இந்தியர்களாக இருக்கிரார்கள் என்பது ஜோக்.எனக்கு தெரிந்து அப்படி சொல்லகூடிய ஒரே அரசியல்வாதி அப்துல்கலாம் மட்டுமே. உலகெங்கும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாக மட்டுமே இருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் அமைப்புத்தான் இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு இப்போது இருக்கும் அமைப்பில் வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அது இந்தியாவுக்கு கீழாக இருக்கும்போது வலுவை இழந்து விடுகிறது. தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளாக இருப்பது உங்களுக்கு ஜோக்காக இருக்கலாம். எனக்கு வேதனையாக இருக்கிறது. உலகெங்கும் அரசியல்வாதி அரசியல்வாதியாகத்தான் இருக்கிறான். ஆனால் அவர்களிடையே பெரும் வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு கர்நாடக, கேரள – தமிழக அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு மாற்று என்ன?இந்தியா உதவி செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் செய்தது மாதிரி கற்பனை செய்துகொண்டு "நுங்கம்பாக்கத்தில் நூறு இந்திய வீரர்கள் சடலம் இருக்கு" என்பது மாதிரி புனைகதைகளை கூறிகொண்டு எதிர்த்தார்கள்.

சடலங்கள் இருப்பது புனைக்கதையாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் ஆயிரம் இருக்கு. அதெல்லாம் வெளிவந்துகொண்டு இருக்கிறது. அது எங்களது வேலையை சுலபமாக முடிக்கும்.

அன்னா ஹசாரே போல அதை இந்தியனாக இருந்தே செய்யலாம் என தான் நானும் கூறுகிறேன்.

நாங்கள் தனி நாடு பெறும் வரை இந்தியனாகத்தான் இருக்கிறோம். அப்படித்தான் செய்வோம். ஆனால் எங்களது இறுதி நோக்கம் தனி நாடு.

அவர் அதிகாரபூர்வமாக எந்த பதவியிலும் இல்லை.தேர்தலிலும் நிற்கவில்லை.அதனால் சொல்லவேண்டும் என நாம் வலியுறுத்த முடியாது.

என்ன செல்வன் சார் இப்படியெல்லாம் ஜோக் அடிக்கிறீர்கள். அவர் அதிகாரம் வாய்ந்த பெண் என்று உலகில் வெளியாகும் முன்னணி ஏடுகள் கூறுகின்றன. தேர்தலில் நிற்காமல் எப்படி எம்பி ஆனார்? அவர் ஆளும் யூபிஏவின் தலைவராக இருக்கிறார். நாங்கள் வலியுறுத்தவில்லை. பத்திரிகைகள்தான் ஏன் இந்த மர்மம் என்று கேள்வி எழுப்புகின்றன? அது இந்திய ஜனநாயத்துக்குத்தான் வெளிச்சம்.

சீனாவுக்கு காஷ்மிரை யாரும் விட்டு கொடுக்கவில்லை.அவர்களாக படை எடுத்து பிடித்துகொண்டார்கள்.அந்த பகுதியின் மேலான நம் உரிமையை நாம் இன்னும் விட்டுதரவில்லை என்பதை காட்டவே அவற்றை இந்திய பகுதிகளாக மேப்பில் குறித்துவருகிறோம்.

போங்க சார் நீங்கள் ரொம்ப நகைச்சுவையாக பேசுகிறீர்கள். காஷ்மீர் வரைபடத்தையும் சீனா பிடித்துக் கொண்ட இமயமலைப் பகுதிகளையும் விடுங்கள். பிரம்மபுத்திராவில் சீனா அணைக்கட்டினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்று உங்கள் பிரதமர் ஏன் விளக்கம் கொடுக்கிறார்?

இப்படி எல்லாம் காமடி செய்ய உங்களால் தான் முடியும்.ஆக அடிபணிந்து பிழைப்பு நடத்தும் பாகிஸ்தானின் இறையாண்மை அமெரிக்கா பின்லாடனை போட்டுதள்ளியபோதே காற்றில் பறந்துபோய்விட்டது.நீங்கள் அந்த நாட்டை சுய அதிகாரத்துடன் இருக்கும் நாடு என்கிறீர்கள்.ஒரு பெட்டிபாம்புக்கு இருக்கும் சுய அதிகாரம் தான் பாகிஸ்தானுக்கு இருக்கு.இந்த மாதிரி வல்லரசுகளின் அடிமையாக வாழாமல் சம உரிமையுடன் வல்லரசு நாட்டின் ஒரு பகுதியாக,அதன் அதிபர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையுடன் தமிழர்கள் வாழ்கின்றனர்.அது உங்களுக்கு சுய அதிகாரமாக தெரியாமல் அடிமைதனமகா தெரிகிறது.

சார், சார் நான் பாகிஸ்தானை பாராட்டிவிட்டதாக நினைத்து பேசவேண்டாம். அது ஒரு தோல்வி கண்ட தேசம்தான். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பெட்டிப் பாம்பு ஏன் இந்தியாவை பயமுறுத்துகிறது. ஏன் அதனிடம் உள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்க முடியவில்லை? தமிழர்கள் எங்கே அதிபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள்? நான் சொல்வது சுய அதிகாரமே ஒழிய அடிமைத் தனத்தை அல்ல.

வரவேற்றதால் தான் ராணுவ அதிபர்களை தூக்கில் இட்டும், புரட்சி செய்தும் அப்புறபடுத்தினார்களா?
ஆமாம். முஷரஃபை வரவேற்றார்கள். பின்னர் ஒதுக்கி தள்ளினார்கள். தேவை என்று கருதினால் வரவேற்பார்கள் இல்லையென்றால் தூக்கில் போடுவார்கள்.

இந்தியாவின் அதிக அதிகாரம் மிக்க சோனியா காந்தி கிறிஸ்துவர்.அப்புறம் சிறுபான்மை உரிமையை பற்றி இதுக்கு மேலும் என்ன சொல்ல? புத்தம்,ஜைனம் என யார் வேண்டுமானால் அதிகாரத்துக்கு வர சட்டத்தில் எந்த தடையும் இல்லை.கிறீஸ்தவர்கள், சீக்கியர்கள் வரும்போது அவர்கள் ஏன் வர முடியாது?சாமர்த்தியம் இருக்கும் க்யாரும் பதவிக்கு வரலாம்.

ஐயா, அவர் என்ன நம்ம ஊர் அந்தோணியோட சம்சாரமா? சிறுபான்மையினர் விவகாரத்தில் இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உரிமை என்பது அரசாங்க இயந்திரத்தின் ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் உரிமை. அரசியல்வாதி, போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி மற்றும் இதர அலுவலகங்களுக்குச் சென்று அவர்கள் மக்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதே சிறுபான்மையினர் உரிமை. அதனை தேர்தலில் போட்டியிடும் உரிமையை வைத்து கணக்கிட முடியாது. கிறிஸ்தவரும் சீக்கியரும் (சோனியா-மன்மோகன்) சேர்ந்துதானே ஆட்சி செய்கிறார்கள். ஹி.ஹி. நீங்கள் ஏன் சார் வரமாட்டேன் என்கிறீர்கள்?


இதை எல்லாம் இப்போதே செய்யலாம். தனிதமிழ்நாடு அமையவெண்டும் என்ர அவசியமே இல்லை.

ஆக உங்கள் பிரச்சனைக்கு காfரணம் இந்தியா அல்ல.இந்தியா இல்லையென்றாலும் காவிரி,முல்லை பெரியாறு பிரச்சனை இருக்கும்.நீங்கள் சொன்ன வழிமுறைகளை செய்வதால் அப்பிரச்சனைகள் தீரபோவதில்லை.அதை செய்ய தனிநாடு வேண்டும் என்ற அவசியமும் இல்லை.இந்திய அரசிடம் நிதி வாங்கியே இதில் பலவற்றை செய்யலாம்.

ஐயா,
இதைத்தான் நீங்கள் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும். நான் கூறும் தீர்வுகளை செய்ய தனிநாடு தேவையில்லை. அதேபோல ஆட்சி அதிகாரமும் தேவையில்லை. இன்று ஆட்சி அதிகாரம் கிடைத்தால்தான் சேவை செய்வோம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன. நாங்கள் எங்களுக்கு அதிகாரம் கிடைக்காவிட்டாலும் இதையெல்லாம் செய்வோம். அதற்கும் தனி நாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்யும்போது நீங்கள் எதற்கு?

தண்ணீர் பிரச்சனைகளை எங்களால் தீர்க்க முடியாவிட்டால் நாங்கள் மக்கள் நலன் கருதி அதற்கு இணையான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவோம். அதில் வென்று காட்டுவோம். எங்களுடைய நோக்கம் மக்களின் முன்னேற்றமே. அவர்களின் உணர்வே முக்கியமானது. இந்தியாவில் நிதி வாங்கி செய்தாலும் எங்களது நோக்கம் தனிநாடாகவே இருக்கும். இதையெல்லாம் செய்ய முடிகிற எங்களுக்கு நிதி ஆதாரங்களையும் உருவாக்க தெரியும்.


உங்கள் பதில்களும் எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லையே? இவை எல்லாம் இந்தியா,தமிழ்நாடு என எதுவும் உருவாகாத மனன்ர் காலத்திலிருந்து இருக்கும் பிரச்சனைகள்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இவை இருக்கும்.இவற்றை தீர்ப்பேன் என சொல்லி ஓட்டு வாங்க இயலுமே ஒழிய தீர்க்க இயலாது.

எனது பதில்கள் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இந்த வழிகளில் இந்தியாவிடம் நிதி பெற்றே பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நீங்கள் ஒப்புக் கொண்டீர்களே. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக பேசுகிறீர்கள். நானும் விக்கிரமாதித்தன் போலவே செய்கிறேன். ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனை என்று பொருளல்ல. நதிநீர் பகிர்வு ஏற்பட்ட காலங்களில் அந்த பிரச்சனை இல்லை என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். கர்நாடகா கூடுதல் தண்ணீர் தரமுன் வந்தும் தமிழகம் ஏற்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது எதிர்காலத்தில் அவர்கள் பல காரணங்களால் மீண்டும் தண்ணீர் தர முன்வரலாம். எங்களுக்கு பிரச்சனையே இந்தியா என்ற இடைத்தரகர்தான். அவர் இல்லாவிட்டால் நாங்கள் எங்கள் விதியை சுயமாக தெளிவாக எழுதிக் கொள்வோம்.

நான் ஒரு சாதாரண குடிமகன். அரசியல்வாதி அல்ல. மக்களோடு மக்களாக தான் நானும் என் வாழ்க்கையை நடத்துகிறேனே ஒழிய கானகத்திலா வாழ்கிறேன்?:-)நீங்கள் அரசியலில் இறங்குவது உங்கள் உரிமை.விருப்பம்.அதற்கு என் நல்வாழ்த்துக்கள்.

உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. நான் சாதாரண குடிமகன் அல்ல. பொதுநலவாதி, அரசியல்வாதி. மக்களோடு மக்களாக என்பதற்கு மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பது என்று பொருள். எல்லாரும் நகரத்திற்குள்தான் வாழ்கின்றனர். இதை உங்களை புண்படுத்தச் சொல்லவில்லை. பிரச்சனையை அணுகும் முறையில்தான் தீர்க்க முடியுமே தவிர பிரச்சனையை மறுப்பதில் அதனை தீர்க்க முடியாது என்பதை கூறத்தான். மற்றபடி உங்களது வாழ்த்துக்கு நன்றி.

தமிழ்தேசியம் பற்றிய கேள்விகளை எதிர்பார்க்கிறேன்.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...