Friday, December 16, 2011

பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை 2

அபி அப்பா - திராவிட நாடு கொள்கையை அண்ணா கைவிட்ட பின்னரும் கூட இந்தி ஆதிக்க ஒழிப்பு, தமிழ்மொழி,இன, மரபு மேம்பாடு நாட்டின் உரிமைகள் அதன் நியாமான பங்கு சுரண்டல் ஒழிப்பு ஆகிய லட்சியங்களை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய ஒற்றுமைக்கு சிறிதும் குந்தகம் ஏற்படாத வ்கையில் அரசியல் சட்டத்தை திருத்தி அடைய திமுக ஏற்றுக்கொண்ட கொள்கை பாதை தான் மாநில சுயாட்சி.

இப்படி பின்நவீனத்துவமா சொன்னா படிக்கவும் போரடிக்கும். அதாவது அண்ணா திராவிடநாடு கொள்கையை காத்திலே விட்டெறிஞ்சுட்டாருன்னு கேலி பேசினங்களுக்கு நான் மேலே சொன்ன மாதிரி அண்ணா பேசியதால் என்னவோ உளறிகிட்டு இருக்காரு இருந்துட்டு போவட்டும் என விட்டுட்டாய்க்க. ஆனா திராவிடநாடு பிரிவினைவாத கொள்கைக்கு கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் எல்லாம் செஞ்சு பெயரை மாத்தி "மாநில சுயாட்சி" என வேற சட்டை மாட்டிகிட்டு அண்ணா முதலமைச்சர் ஆகிட்டாரு.

பின்னர் முதலமைச்சர் ஆன பின்னே டெல்லி போன பின்னே முதல் டெல்லி பயணத்தில் தான் நான் மேலே சொன்ன மாதிரி புரியாதபடி ஆனா அழுத்தம் திருத்தமா சொன்னாரு. ஆக பிரிவினைவாதம் அல்லது திராவிட நாடு கோரிக்கை என்பது புதுப்பெயரோடு "மாநில சுயாட்சி" என்னும் புது பிராண்ட் நேம் வச்சுகிட்டு வெளியே வந்தது. இந்த புது பெயருக்கு தடை எதும் எப்போதும் விதிக்க இயலாது. பிரிவினைவாத தடைச்சட்டம் இதன் மேல் பாயாது.

ஏப்ரல் எட்டாம் தேதி 67ம் ஆண்டு டெல்லி போன அண்ணா பத்திரிக்கை காரங்க மத்தியிலே "மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அதை மட்டும் மத்திய அரசு வச்சுகிட்டா போதும்" இதான் அண்ணா சொன்னது.அதன் பின்னே தான் அண்ணா மறைவு பின்னே கலைஞர் ஆட்சி.. அவரும் மாநிலசுயாட்சி பத்தி ரொம்ப பேசினார்..... ரொம்ப பேசினாரு... ஆனா என்னாத்த கிழிச்சாருன்னு கேட்கிறவங்களுக்கு அடுத்த அடுத்த பின்னூட்டம் போடுறேன். கருணாநிதின்னா சர்காரியா தானே நியாபகம் வந்து தொலைக்கும் உங்களுக்கு? ஆனா ராஜமன்னார் என்னும் நீதிபதி பெயரும் இனிமேலாவது வரட்டும். யார் அந்த ராஜமன்னார்? –
தொடரும்...
நன்றி- அபி அப்பா ஏதோ ஒரு குழுமத்திற்காக எழுதியது

No comments: