Friday, December 16, 2011

பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை 3

அபி அப்பா - மாநிலசுயாட்சின்னா என்னான்னு முதல்ல பார்த்துட்டா கொஞ்சம் வசதியா இருக்கும். குறிப்பா பாஸ்டன் பண்பாளருக்கு:-))

பொதுவா மாநில அரசுக்கு நிறைய நிர்வாக அதிகாரம் எல்லாம் இருந்தாலும் அத வச்சுகிட்டு எத்தனை திட்டம் வேண்டுமானாலும் தீட்டலாம் என்றாலும் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசுகிட்டே இருந்து தான் பிச்சை எடுக்கோனும். இப்ப போய் அலுவாலியாகிட்டே நம்ம முதல்வர்கள் நிற்பதை போல:-(

பிச்சை போடும் இடத்தில் மத்திய அரசும் பிச்சை எடுக்கும் இடத்திலே நம்ம முதல்வர்களும் தான் இருக்காங்க. இந்த நிதி எல்லாம் எங்க இருந்து மத்திய அரசு கஜானாவுக்கு வருது? நம்ம எல்லா மாநிலத்தில இருந்தும் மத்திய அரசுக்கு கொடுக்கும் வரிப்பணம் தான் எல்லாமே. அது தவிர மத்திய அரசு வெளிநாட்டிலே உலக வங்கில இருந்து கடனா வாங்குற காசு இந்த ரெண்டும் சேர்ந்து தான் மத்திய அரசின் கஜானா. அதை திட்டக்குழு, நிதிக்குழு . மத்திய நிதி அமைச்சகம் இவைகள் மூலமா நமக்கே பிரிச்சு தர்ராங்க.

நிதிகளை திரட்டி தரும் மாநில அரசுக்கு அவற்றின் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் ரொம்ப கம்மி. இதான் நம்மை கடுப்பாக்குது. இந்த இடத்தில் அதிகாரம் என்பது நிதி ஆதாரத்தை பெருக்கி கொள்ளும் வரி விதிக்கும் அதிகாரம். ஆனா இங்க தான் நமக்கு ஆப்பு வச்சாங்க. அதிகமா வரி வரும் கேஸ் எல்லாம் மத்திய அரசு வச்சுகிடுச்சு. நிதி கம்மியா இல்லாட்டி நிதியே வராத வரிவிதிப்பு எல்லாம் நம்ம மாநிலம் கையிலே கொடுத்து இருக்கு.

மத்திய அரசு லிஸ்டுல வருமானவரி, ஏற்றுமதி இறக்குமதி தீர்வை, கம்பனிகளின் நிகர வருமானத்தில் விதிக்கப்படும் கார்பரேட் வரி, வாரிசு வரி, எஸ்டேட் வரி, சொத்து வரி, இப்படியா கிட்ட தட்ட 12 வரிகள் இருக்கு. ஆனா மாநில அரசு பட்டியலில் நிலவரி, விவசாய வருமான வரி (கிட்ட தட்ட பூஜ்ஜியம்) விவசாய நிலத்துக்கான எஸ்டேட் வரி (எல்லாம் தரிசுன்னு கணக்கு காமிப்பாங்க ஆக அதும் பூஜ்ஜியம் தான்) மனைமீதும், கட்டிடம் மீதும் போடும் வரி (எவன் ஒழுங்கா கட்டுறான்) மதுபானம் மீது போடும் எக்சைஸ் வரி (இதான்யா பெரிசு) மின்சார பயன்பாடு மற்றும் விற்பனை மீது போடும் வரி (இது ஓக்கே), விற்பனை வரி (இதும் ஓக்கே ஆனா அதிலே கூட மறைமுக மத்திய அர்சு ஆப்பு இருக்கு) சரக்கு மற்றும் பயணிகள் வரி, வாகன வரி, கால்நடை மற்றும் படகுகள் மீதான வரி , சுங்க வரி, தொழில் வரி, தலைவரி, கேளிக்கை வரி (இதையும் கேளிக்கூத்தாக ஆக்கினார் எங்க தலைவர்) முத்திரைத்தாள் வரி, என மொத்தம் 19 டைப்பான வரி வருது. எண்ணிக்கையிலே அது அதிகமா தெரிஞ்சாலும் மாநில அரசு விதிக்கும் வரியை விட மத்திய அரசு விதிக்கும் வரி செமத்தையா கல்லா கட்டும்.

சேல்ஸ்டேக்ஸ்மற்றும் எக்சைஸ் வரி (டாஸ்மாக்) ரெண்டும் தான் மாநில அரசுக்கு பெரும் வரிகள். மத்த எல்லாமே டுபாக்கூர் வரிதான்.

நிதில மட்டும் தானே மாநில அரசு கீழ இருக்கு? மத்த எல்லாத்திலயும் அப்படித்தான். மத்திய அரசுக்கு கட்டுப்படும் நிலை தான். ஒரு காலத்தில் மாநில அரசுக்கு கீழே இருந்த பல அதிகாரங்கள் மெதுவா மெதுவா மத்திய அரசுகிட்டே போயிடுச்சு. (இந்திரா, மொரார்ஜி ரெண்டு பேரும் அடிச்ச கூத்து) உதாரணமா அறநிலையங்கள், அறக்கட்டளை, சமயம் சார்ந்தவை, ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் வெள்ளைக்காரன் ஆட்சில மாநில அரசுகிட்டே இருந்துச்சு. ஆனால் சுதந்திரத்துக்கு பின்னே மத்திய அரசு அதையும் எடுத்துகிச்சு. தேசிய நெடுஞ்சாலை மாதிரி தேசிய நீர்வழிஎன்று நாடாளுமன்றத்தால் சொல்லப்படும் நீர்வழிகள் மீதும் மாநில அரசுக்கு எந்த வித ரைட்ஸ்ம் இல்லவே இல்லை. இப்படி பல அதிகாரங்கள் மாநில அரசுகிட்டே இருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு போயிடுச்சு. இதனால் மாநில அரசு எல்லாம் தொல்காப்பியனாகிய என்னைப்போலா ஒல்லியா ஆகிடுச்சு. இப்படிப்பட்ட நிலையில் தான் ஏப்ரல் மாசத்திலே 1974அன்னிக்கு தமிழ்நாடு சட்டமன்றட்திலே மாநிலசுயாட்சி தீர்மானம் முன்மொழியப்பட்டது கலைஞரால். அதுக்கு முன்னரே ராஜமன்னார் என்னும் நீதிபதியை கொண்டு மத்திய- மாநில அரசின் நிதிஆதாரங்கள் அதிகாரங்கள் எல்லாம் எப்படி எப்படி இருக்கு, அது எப்படி எப்படி மாறினா மாநில சுயாட்சி கிடைக்கும் என்ற விபரம் எல்லாம் சேகரிச்சு வச்சு ஒரு அறிக்கையா கொடுக்க சொல்லியிருந்தாரு கலைஞர். இது மத்த எந்த முதல்வரும் செய்யாத ஒரு விஷயம். அதாவது கலைஞர் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வரும் முன்னமே அது பற்றிய தெளிவான ஒரு அறிவுக்கு வரவேண்டும் என்பதால் ராஜமன்னார் அறிக்கையை புத்தகமா போட்டு அதை வெளியிட்டு அப்போது எதுக்கெடுத்தாலும் திமுகவை குறை சொல்லிகிட்டு இருந்த எம் ஜி ஆர் கிட்டயும் கொடுத்து படிக்க சொல்லி பின்னர் தான் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

நல்லா கவனிக்கனும் நீங்க எல்லாரும். அண்ணா நாடாளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசினார். பின்னே உள்ள தூக்கி போட்டாங்க. போட்டுட்டு இடைத்தேர்தல் நடத்தி பின்னர் அதிலே காங்கிரஸ் தோத்து போய் பின்னர் பிரிவினைவாத தடைச்சட்டம் கொண்டு வந்து திமுகவை அழிக்க நினைச்சாரு நேருமகான்.

அதிலே தப்பி திமுகவை கரை சேர்த்தார் அண்ணா. பின்னர் ஆட்சியை பிடிச்சாங்க. ஆனா இப்போ கலைஞர் மாநிலசுயாட்சி தீர்மானம் கொண்டு வந்து அதை முன்மொழிந்து கலைஞர் பேசுறாரு. எம் ஜி ஆர் அதை எதிர்க்கிறார். ஆக நேருவுக்கு கிடைத்த அளவு குடைச்சல் இந்திராவுக்கு இல்லை. காரணம் இது பற்றி என்னான்னு தெரியாத எம் ஜி ஆர் அப்போ கலைஞரை எதிர்க்கவேண்டும் என்கிற ஒரே காரணத்தால் எதிர்த்து தொலைய அண்ணாவின் பெயரால் கட்சி ஆரம்பிச்ச எம் ஜி ஆர் அதே அண்ணாவின் சிந்தனையான மாநிலசுயாட்சியை அந்த தீர்மானத்தை எதிர்க்கிறார். ஆனாலும் தீர்மானம் வெற்றி பெறுகின்றது.

இதை மனசிலே வச்சுகிட்டு தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதாவது எமர்ஜென்சி, அடுத்த அடுத்த ஆட்டம் எல்லாம் ஆடியது மத்திய அரசு.

அந்த தீர்மானம் போடாமல் இருந்தா கலைஞர் ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் வந்து இருக்காது. ஆக திமுக என்பது எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடினும் மாநிலசுயாட்சி கொள்கையை விட்டு கொடுத்தது இல்லை. மேலே இருக்கும் சில பின்னூட்டங்களில் கூட ஆரம்பத்தில் சிலர் சொல்லியிருக்காங்க.'' அது என்ன அப்துல்லா ஆட்சியிலே இருக்கும் போது வாயை மூடிகிட்டு இருந்துட்டு ஆட்சி போனா மாநிலசுயாட்சின்னு கூவுறீங்க?"" என கிண்டல் செய்தோரே, எங்கள் ஆட்சி முதன் முதலாக கலைக்கப்பட்டதே மாநிலசுயாட்சி தீர்மானத்தினால் தான் என்பதை இங்கே பதிகிறேன்.

அதே மாநிலசுயாட்சி தீர்மானத்தை வழிமொழிந்து கலைஞர் பேசிய பேச்சுகள் இன்றைக்கும் ஒரு புத்தகமே போடும் அளவு மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்னும் தலைப்பிலே புத்தகமே போடலாம்.

அதன் பின்னர் கூட ராசா பாராளுமன்றத்தில் இதே போல மாநில சுயாட்சி பத்தி பேசினார். பதவியை இழந்தார், சிறை சென்றார். இதைத்தான் அப்துல்லா சொன்னாரு. அவரு டீப்பா சொல்ல ஆரம்பிக்கும் முன்னே அவரை கட்டி எங்கயோ இழுத்துகிட்டு போயிட்டீங்க. நான் இரவு ஜுரத்துடன் இதை எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன். தம்பி அப்துல்லாவின் ஆட்டம் தனிஆவ்ர்த்தனம் எப்போதும் அழகாக இருக்கும். பார்க்க ரம்மியமாக இருக்கும். அதை மாற்றி இழுத்து கொண்டு போனதால் நான் என் உடல்நிலை பற்றி கவலைப்படாமல் கோதாவில் குதித்து விட்டேன்!
அண்ணாவின் மாநிலசுயாட்சி கொள்கையை பாராளுமன்றத்தில் முழங்கிய அண்ணா, நாஞ்சிலார், இரா.செழியன், முரசொலிமாறன்,ஏ.வி.பி ஆசைத்தம்பி, திருச்சி சிவா, ஆ.ராசா, தம்பிதுரை ஆகிய சிங்கங்களுக்கு என் வந்தனம். இன்னும் விட்டுப்போன பெயர்கள் இருந்தால் தம்பி அப்துல்லா தெரிவிக்கவும். அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி!

நன்றி- அபி அப்பா ஏதோ ஒரு குழுமத்திற்காக எழுதியது

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...