Friday, December 16, 2011

பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை 4

அபி அப்பா - \\மாநில சுயாட்சியையும் , அதற்கும் மேலான அதிகாரங்களை ஆதரித்தாலும், நம்முடைய தற்போதைய சூழ்நிலையில், அவை எத்தகைய பலனை கொடுக்கும் என்பது தெரியாது...
சுதந்தரமாக ஒரு உள்ளாட்சி தேர்தலோ, வெளிபடையான ஒரு TNPSC தேர்வோ நடத்த இயலாத சூழ்நிலையும், அதற்கு அனுமதிக்காத அரசியலும் உள்ளவரை, சுயாட்சியும் அதற்கும் மேலான அதிகாரங்களோ ஒரு பலனையும் அளிக்காது..
We, the people and our entire political and administration systems are NOT YET matured enough to handle the சுயாட்சி..
ஒருவேளை அந்த மெச்சூரிட்டி அடையும்முன் அத்தகைய அதிகாரங்களை பெற்றால், பல ஆப்ரிக்க நாடுகளை போல தினமும் தெரு சண்டைகளும் , போரட்டங்களும் தான் நடைபெறும் ....\\

தோழர் பிரகாஷ்! நான் இதிலே கொஞ்சம் முரண்படுகின்றேன். மாநில சுயாட்சி என்பதை பற்றி அண்ணா பேசிய போது கிட்ட தட்ட இந்தியாவில் யாருக்கும் அது பற்றி புரியவில்லை. முதலில் அதை புரிந்து கொண்டவர் உங்கள் பெயரைக்கொண்டவர். ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ் நாராயண், "ஆகா இந்த ஆள் கிட்டே என்னவோ மாஜிக் இருக்கே என கூர்ந்து கவனித்தார். அதே போல மே இரண்டாம் தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் டெல்லி பதிப்பு 1962ம் வருடம் அண்ணாவின் கன்னிப்பேச்சை கேட்டு "இவர் தேசியத்துக்கு ஒரு புதிய கோட்பாட்டை கொடுத்தார்" என எழுதியது. அதே தேதியில் பம்பாம் டைம்ஸ் "இவருடைய வாதம் மாநிலங்கள் அவையை நிலைகுலைய வைத்தது" என எழுதியது. கேரளாவின்மாத்ருபூமி அண்ணாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ஏனனில் மாநிய சுயாட்சி என்னும் சித்தாந்தத்தை அண்ணா நன்கு தெரிந்து கொண்டே அதன் பின்னரே இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லி போராட துவங்கினார்.

அதன் பின்னர் வந்த கலைஞர் அது பற்றி கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தாலும் கூட ராஜமன்னார் என்னும் நீதிபதி கொண்டு ஒரு குழு அமைத்து ஆராய்ந்து அதன் சாதக பாதகம் எல்லாம் தெரிந்து கொண்டு பின்னர் சட்டசபை தீர்மானத்தின் போது அவர் பேசிய பேச்சுகள், ஒருவேளை மத்திய அரசும் அந்த தீர்மானத்தை ஒத்து கொண்டு மாநிலசுயாட்சி கொடுத்து இருந்தால் கூட அதற்கு அடுத்த நாளே அதை செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பேசினார் என்பதை உங்களுக்கு இங்கே தெரிவிக்கின்றேன். ஏனனில் ராஜமன்னாரின் அவரது குழு பரிந்துரையில் மாநில சுயாட்சி நிர்வாக சீர்திருத்தங்கள் பற்றி அதை மாற்றி எப்படி அமைப்பது என்பது பற்றி அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களுடன் கூடிப்பேசி ஒரு முடிவுக்கே வந்து விட்டிருந்தது. அதனால் அப்போதோ அல்லது மீண்டும் திமுக ஆட்சி வரும் போதோ மாநிலசுயாட்சி கிட்டினால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதே 1974ல் அந்த தீர்மானத்தை கண்மூடி எதிர்த்த எம் ஜி ஆர் ஆட்சிகாலத்தில் மாநில சுயாட்சி கிட்டியிருந்தால் அது சின்னாபின்னமாக ஆகியிருக்கும்.

ஆனால் இதோ இப்போது ஜெயா ஆட்சியில் அப்படி கிடைத்தால் யார் கண்டது இந்த அம்மையாருக்கு இருக்கும் குருட்டு தைரியத்தில் கச்சத்தீவு கூட மீண்டும் கிடைக்கலாம். ஆனால் விசயகாந்து போன்றவர்கள் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்... ஆட்சியில் அமர்ந்தால் அய்யோ அந்த மாநிலசுயாட்சியை வைத்து கொண்டு அய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.
நன்றி- அபி அப்பா ஏதோ ஒரு குழுமத்திற்காக எழுதியது

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...