Sunday, December 18, 2011

தமிழ்தேசிய அரசியலமைப்புச் சட்டம் முன்னோட்டம்
முன்னுரை

உலகின் மிகப் பழமையான இனமான தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாடு இல்லை என்ற குறை அவர்களை தாழ்த்தி விடவில்லை. உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழர் தாங்கள் ஈடுபடாத துறை இல்லை என்றே கூறலாம். கலை, வர்த்தகம், பொருளாதாரம், பொறியியல், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் வெற்றி கண்ட தமிழன் அரசியலிலும் கோலோச்சுகிறான். ஆனால் தமிழனின் தாய் மண்ணான தமிழ்நாட்டில் அவன் மாற்று இனங்களின் கீழாக வாழ்ந்து வருகிறான். இந்தியாவின் கீழ் வாழ்ந்துவரும் அவன் இந்திய அரசியலையே தனது அரசியலாக கருதி அதனையே ஏற்று வாழ்ந்து வருகிறான்.

சாதாரண தமிழர்கள் சுதந்திர போராட்டம் என்றால் அது விடுதலைப்புலிகளின் போராட்டம்தான், அரசியல் என்றால் அது தமிழக அரசியல் தலைவர்கள் நடத்தும் அரசியல்தான் என்று தனது சிந்தனையை ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்து தமிழ்தேசியம் என்ற கருத்தை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கிறார்கள். ஆனால் மற்ற துறைகளில் ஒளிரும் தமிழரால் ஏன் ஒரு சிறந்த அரசியலமைப்பை, அரசாங்கத்தை உருவாக்க முடியாது? என்ற கேள்வியுடன், இனிவரும் நூற்றாண்டுகளை கருத்தில் கொண்டு தமிழர் நலனுக்காக எனது தமிழ் தேசிய கருத்தை முன் வைக்கிறேன்.

தமிழ் தேசியம் என்றால் என்ன?

பண்டைய இந்திய துணைக் கண்டத்தில் 56 தேசங்களும் நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களும் இருந்தனர். இவர்கள் பண்பாட்டால் ஒரே மாதிரியாக இருந்தாலும் தங்களுக்குள் வேற்றுமைகளை கொண்டு தனிப்பட்ட இனங்களாக, தனிப்பட்ட இறையாண்மை பெற்றவர்களாக இருந்தனர். அவ்வப்போது அக்கம்பக்க அரசுகளின் எல்லைகள் விரிந்து சுருங்கினவே தவிர முஸ்லீம் மன்னர்களின் வருகை வரை முழுக்க முழுக்க வேற்று இனங்களால் ஆளப்படவில்லை.

இந்தநிலை தமிழகத்திலும் நிலவியது. தமிழர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தனித்தனியான இறையாண்மை பெற்ற அரசுகளை கொண்டிருந்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டாலும் கூட சுதந்திரமான அரசர்களாகவே செயல்பட்டு வந்தனர். இவர்கள் மேற்கே யவனம், ரோம் முதல் கிழக்கே சீனம் வரை சென்று வணிகம் செய்து வந்தனர்.

ஆனால் நாயக்கர்கள், முஸ்லீம்கள், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் இவர்களின் அரசுகள் அடிமைப்பட்டன. ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் அடிமைப்படுத்திய பின்னர் இந்த துணைக்கண்டம் ஒரே தேசமானது. ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்களின் அடையாளங்கள், வாழ்வாதாரங்கள், திறமைகள் அழிக்கப்பட்டன. இதனால் இந்தியாவில் இருந்த ஒரு செழிப்பான சமுதாய அமைப்பு சீரழிக்கப்பட்டது. ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் வெள்ளையர்கள் வெளியேற, இந்தியா சுதந்திரம் பெற்று வெள்ளையரின் ஆட்சி முறையை அப்படியே பின்பற்றத் தொடங்கியது. இந்தியாவை ஒரே தேசமாக்க முயன்ற நேருவும், இந்தி ஆதிக்கவாதிகளும் இந்தியை பிற மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களிடம் திணிக்க முயன்றனர். இந்தியா தொடர்ந்து இந்தி பேசாத மாநிலங்கள் மீது அலட்சியத்தையே காட்டி வருகிறது. இதனால் சுதந்திரமாக இருந்த தேசிய இனங்கள் இந்திய அரசின் கீழ் அடிமை நிலையில் இருந்து வருகின்றன. அவற்றின் உணர்வுக்கு மதிப்பில்லை. இந்தியா தனது இந்தியத்தை பாதுகாக்கிறதே தவிர தன்னுடன் இணைந்துள்ள தேசிய இனங்களைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது ஏராளமான தமிழ்ப் பகுதிகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுடன் இணைக்க உறுதுணையாக இருந்தது. இந்தியா இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களை வெளியேற்ற ஒப்புக்கொண்டது, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, ஈழப்போரில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து தமிழர்களை கொன்று குவிக்க உதவியது, இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்காமல் இருந்து வருவது, காவிரித் தண்ணீரை பெற்றுத் தர இயலாமை போன்ற பல அடுக்கடுக்கான தமிழர் உரிமை இழப்புக்களை செய்துகொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் வருகிறது.

எனவே இனிமேலும் இந்தியாவுடன் இருந்துகொண்டு அதன் பாதுகாப்பை எதிர்பார்த்தால் தமிழினம் தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொள்கிறது என்றுதான் பொருளாகும். எனவே தனது உரிமைகளை தக்க வைக்க, பாதுகாப்பை நிலை நிறுத்த இந்தியாவிடம் இழந்த இறையாண்மையை திரும்ப பெறவேண்டும். அதாவது தமிழினம் எந்தவொரு இனத்திற்கும் கீழாக இருக்கக் கூடாது. அதன் மூலம் சுதந்திரமான இறையாண்மை பெற்ற தனித்தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழ்தேசியம் ஆகும்.

தமிழ்தேசியம் என்ற கருத்து இந்தியாவுக்கு எதிரான கருத்து கிடையாது. அது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான கருத்தே. தமிழ்தேசியம் பெற்றால் அது இந்தியாவுக்கு எதிரான நாடாக இருக்கும் என்றும் பொருளல்ல. தனித்தமிழ்நாடு பாகிஸ்தான், பங்காளதேசம் போலல்லாமல் இந்தியாவின் உறவை விரும்பும் நாடாக இருக்கும்.

தமிழ்தேசியத்தின் அவசியம் என்ன?

இன்று உலகம் சுருங்கி ஒரு கிராமமாகிவிட்டது. ஒருவரின் தேவை மற்றவருக்கு அவசியமாகிறது. அமெரிக்காவின் தேவைகள் இந்தியர்களால் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் அமெரிக்கர்கள் முதலீடு செய்கின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டைச் சார்ந்துள்ளது. ஒன்றாய் இருந்த நாடு தனித்தனியாக பிரிகிறது. தனித்தனியாக இருந்த நாடுகள் ஒன்று சேருகின்றன. இதில் ஒரு நாடு தனது பக்கத்து நாட்டுடன் நட்புறவு பாராட்ட வேண்டும், பக்கத்து நாட்டை தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவுக்குள், ஒரே நாட்டிற்குள் உள்ள மாநிலங்கள், அண்டை மாநிலங்களின் நலன்களை பொருட்படுத்தாமல் சுயநலத்துடன் செயல்படுகின்றன. இதனால் மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி வருகிறது. இதற்கும் தமிழகமும் அண்டை மாநிலங்களும் உதாரணமாக உள்ளன. இந்தியாவின் தென் மாநிலங்களில் வற்றாத நதிகள் இல்லாத காரணத்தால் இங்கு நீர்வளம் தொடர்பான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் வடமாநிலங்களை மையமாக கொண்டு அமையும் அரசாங்கம் இந்த பிரச்சனையை போக்குவதற்கு பதிலாக அதனை பெரிதாக்கி வருகிறது.

இந்தியா நல்ல நாடு, இந்தியர் நல்லவர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள், அரசியலமைப்பு என்று பார்க்கும்போது இவர்களை திருத்த முடியுமா என்பது சந்தேகமே. ஒரு அக்கறையில்லாத போக்கு எதையுமே பொருட்படுத்தாத நிலை, ஒரு சக இனம் மற்ற இனத்தை, அதன் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ள விரும்பாமை போன்ற நிலை உள்ளது. எனவேதான் இந்தியத்தை நல்வழிப்படுத்தி அதன் மூலம் தமிழரின் உரிமை நிலை நிறுத்தப்படும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.

இந்தியாவின் தேசிய இன அழிப்பு, இன அடையாள அழிப்பு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவு, மேட்டிமை அரசியல், சுயநல, குள்ளநரி அரசியல் போன்ற பண்புகள்தான் இந்தியா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளிடம் பரவி வருகிறது. இதே நிலைதான் தமிழகத்திலும் உள்ளது. இதுவும் தமிழர்களின் நலனிற்கு எதிராக இருந்து வருகிறது. எனவேதான் தமிழ்தேசியம் அவசியமாகப் படுகிறது. அதற்காக தமிழ்தேசியம் இந்தியாவுக்கோ மற்ற அண்டைநாடுகளுக்கோ எதிரானது என்று பொருளில்லை.

ஏவுகணைகள், விண்வெளி ஆராய்ச்சி, சந்திராயான், செயற்கோள் என கோடிக்கணக்கில் செலவு செய்து முன்னேறத் துடிக்கும் இந்தியா ஏனோ வறுமையில் வாடும் தனது சமுதாயத்தின் ஒரு பகுதியை சௌகரியமாக மறந்துவிடுகிறது. இந்தியா விடுதலை அடைந்தபோது நாட்டின் மக்கள் தொகை 30 கோடி. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தியாவில் 26 கோடி மக்கள் கஞ்சிக்கு வழியில்லாத வகையில் வறுமையில் வாடுகின்றனர். (கட்டுரை 2011-ல் எழுதப்பட்டது).
இதற்கு காரணம் அரசின் அலட்சியம் மற்றும் முறையற்ற சமுதாய கொள்கைகளே.

தமிழ்தேசியம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவாக இருக்கும்

அண்டை நாடுகள்

தமிழ்தேசியம் உருவானால் அண்டை நாடுகளான கேளரம், கர்நாடகம், ஆந்திரம், இவை இந்தியாவிலேயே இருக்கும்பட்சத்தில் இந்தியா தமிழ்நாட்டை எதிரிநாடாக கருதலாம். அல்லது இந்த மாநிலங்களும் தனிநாடுகளாகி விட்டால் அவையும் தமிழ்நாட்டை எதிரியாக கருதலாம். ஆனால் இந்தியா தன்னிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற நாடுகளுடன் நட்புகொள்ளவே முயற்சித்து வருகிறது என்பது வரலாறு. அதுபோல தமிழகத்துடனும் இந்தியா நட்புநாடாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.

மனிதன் தனது சூழ்நிலைக்கு ஏற்ப சிந்திப்பவன் என்கிற காரணத்தால், விடுதலை பெற்ற பின் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த நாடுகள் தமிழகத்துடன் நட்பு பாராட்டவும் அல்லது தமிழகத்தின் உரிமைகளை வழங்கவும் முன்வரலாம்.

அவ்வாறு அந்த நாடுகள் தமிழகத்தின் உரிமைகளை தர முன்வராவிட்டாலும் நாம் அது குறித்து அந்த நாடுகளுடன் பேசிப் பார்க்கலாம். அதற்கும் இசையவில்லை என்றால் நாம் நமது உரிமையைப் பற்றி சர்வதேச அமைப்பிடம் முறையிடலாம். அந்த அமைப்புகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் இந்த நாடுகள் இயற்கை வளத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள வில்லை என்பதை தொடர்ந்து கருத்துப் பிரச்சாரங்கள் மூலம் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யலாம்.

சாதி, மதம், சமூக கட்டமைப்பு

நவீன தமிழகத்தில் சாதி, மத பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக இருப்பதால் அதனை முறைப்படுத்த தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொருவரும் தங்களது சுய கருத்தை தெரிவிக்கக், ஒரு புதிய கருத்தை உருவாக்க கட்டற்ற சுதந்திரம் வழங்கப்படும். சமுதாயத்தில் தனிநபர் சுதந்திரம், குழுச் சுதந்திரம், சமூக சுதந்திரம், சாதி சுதந்திரம், மதச் சுதந்திரம் வழங்குவது அடிப்படை சுதந்திரங்களாக கொள்ளப்படும்.

அதற்கு முன்னதாக சாதி, மதப் பிரச்சனைகளை சிறிது ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த சாதி, மதங்கள், தமிழர் மாற்று இனங்களிடம் அடிமைப்படுவதற்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. ஆனால் அப்போது தற்போதுள்ள அளவு வேற்றுமை, குரோதம், வெறுப்பு, காழ்ப்புணர்வு இல்லாமலிருந்தது. ஏனெனில் அப்போது சமுதாயக் கட்டமைப்பு ஒருவரையொருவர் சார்ந்த ஒன்றாக, அனைவரும் தங்களது தொழில்களை நன்றாக செய்து வளமாக வாழ்ந்தனர். ஆனால் மாற்று இனங்களின் ஆட்சிக்குப் பிறகு தமிழரின் சமூக கட்டமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது அவர்களது அடிப்படை ஆதாரங்கள் பறிக்கப்பட்டன. இதனால் ஒரு சமுதாயத்தினர் மற்றவர்களை போட்டியாளர்களாக, எதிரிகளாக கருதும் நிலை ஏற்பட்டது. இதனால் குரோதமும், பகையும் வளர்ந்தன.

ஆனால் சாதி அன்று இருப்பதைப் போலவே இன்றும் சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பாகவே இருந்து வருகிறது. அதாவது ஒருவர் திருமம், குழந்தை பிறப்பு, மரணம் மற்றும் இன்னும் பிற நிகழ்வுகளுக்கு தங்களது சாதியை ஆதாரமாக கொண்டுள்ளார். எனவே இந்த வலிமையான கட்டமைப்பை ஒழிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக சாதிகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து சமநிலையை ஏற்படுத்தினாலே போதுமானது. அதற்கான அத்தனை முயற்சிகளும் தமிழ் தேசியத்தில் எடுக்கப்படும். அதையும் கடந்து தங்களை சாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து,  முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது ஒரு சமநிலையான சமூக ஏற்படுவதற்கான வழிமுறையாகவே பார்க்கப்படும். மாறாக எந்தவொரு சாதிக்கும் எதிரான ஒன்றாக கருதப்படாது. இதன் மூலம் இறுதியில் சாதி வேறுபாடு இல்லாத சமூகம் உருவாக வாய்ப்புள்ளது.

மதம் என்பதை பொறுத்தவரையில், தமிழர் இன்று வரை பல்வேறு மதங்கள், சிறு மதப்பிரிவுகளை பின்பற்றி வருகின்றனர். மதங்கள் மனித சமுதாயத்தை மேம்படுத்தியுள்ளன. இது சமூக வளர்ச்சியாகவே கருதப்படும். அனைத்து மதங்களிலும் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்ய வழி செய்யப்படும். தமிழர்களிடம் தற்போது அவர்கள் பின்பற்றி வரும் மதங்கள் சமூக முன்னேற்றத்தில் அவர்கள் கண்டுள்ள படிநிலையே என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் தங்கள் விருப்பப்படி தாங்கள் விரும்பும் மதங்களை தொடர்ந்து பின்பற்றலாம் அல்லது புதிய மதங்களை தழுவலாம். இவ்வாறு அளிக்கப்படும் மத சுதந்திரம் சமூக அக்கறை காரணமாகவே ஒழிய சமூக பிரிவினை-மோதலை ஏற்படுத்த அல்ல என்பது மக்களுக்கு உணர்த்தப்படும். அவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்படும் நிலைகளில் அரசு அதனை கட்டுப்படுத்தும்.

மொழிக் கொள்கை

தனித் தமிழ் நாட்டில் மருத்துவம், விஞ்ஞானம் என அனைத்து கல்வியும் தமிழில் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பாடங்களின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் தரப்படும். ஒவ்வொரு துறையும் அந்தந்த துறைபற்றிய கருத்துக்களை ஆங்கிலத்தில் விளக்க, ஆராய, ஒப்பீடுகள் செய்ய அதற்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்படும். தாய்மொழிப் பற்று வளர்ச்சிக்கு தடையாக அமையாது. அவசியமான பிறமொழிச் சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும். தமிழில் மாற்று மொழிகளை கலக்காமலும், மாற்று மொழிகளை கலப்பில்லாமல் பேசவும் ஊக்கம் அளிக்கப்படும்.

அதேவேளையில் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும், அண்டை நாடுகளான கேரளா, கர்நாடகம், ஆந்திர நாடுகளின் மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை விருப்ப மொழியாகளாகவும் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்த மொழிகளில் திறமை பெற, எழுத, படிக்க பேச விசேஷ பயிற்சிகள் கொடுக்கப்படும். அதாவது ஒருவர் மூன்று அல்லது ஆறு மாதங்களில் அந்த மொழியில் ஆளுமை பெற பயிற்சி அளிக்கப்படும். ஆட்சி மொழி தமிழ்மொழியாக இருக்கும். அவசியப்படும் இடங்களில் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும்.

பிராமணர்களும் மாற்று தேசிய இனங்களும்

தமிழகத்தில் பிராமணர் தமிழர்களுக்கு எதிரிகள் போல ஒரு கருத்து நிலவுகிறது. அதை சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதேபோல அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதைப்போல சில பிராமணர்கள் நடந்துகொள்கின்றனர். ஆனால் இது உண்மையான நிலை இல்லை.

தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காலத்தில் பிராமணருக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் இருந்த சமூக நிலை வேறு இன்றைய சமூக நிலை வேறு. அன்றைய நிலைக்கு காரணம் பிராமணத்துவம் என்பதால் அவர் பிராமணத்துவ எதிர்ப்பை கைக்கொண்டார்.

இன்றைய சூழலில் தமிழரின் நிலைக்கு பிராமணர்தான் காரணம் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. தமிழரின் பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் இந்திய இறையாண்மையின் கீழ் சிக்கிய தமிழரின் இறையாண்மையை மீட்பதுடன் நான் இந்த விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

மற்றபடி இன்றும் பிராமணர்களில் பெரும்பாலானோர் தமிழர் உணர்வுக்கு எதிராக இருக்கலாம். இது ஒரு சாதி மற்றொரு சாதி மீது கொண்டிருக்கும் வெறுப்புணர்வு போன்றதே. எல்லா சாதிகளிலுமே நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சாதியையே குறைகூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர் ஒரு தனி இனமாக கருதப்பட்டாலும் அவர்கள் தமிழர்களோடு தமிழராக வாழ்ந்து வருகின்றனர். தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் இன்றும் பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் பிரபலமான சில பிராமணர்கள் தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால் அது இன்னமும் இன எதிர்ப்புத் தோற்றத்தையே கொடுக்கிறது. பலருக்கும் நல்ல பிராமணர் நண்பர்களாக உள்ளனர்.

அதேபோல இன்றைய சூழலிலும் பிராமணர் தங்களை தமிழர் அல்லாமல் வேறு ஒரு இனமாக அடையாளம் காட்டிக்கொள்ளவோ, அல்லது வேறு மொழியை பயன்படுத்தவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்கள் தமிழர் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்களோ இல்லையோ தமிழ் மொழியையே பேசி தமிழராகவே வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் தமிழர்கள் இல்லை என்று பிரித்துப் பார்ப்பது தவறு. எந்தவொரு இனமுமே ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து அந்த மண்ணின் மொழியை பேசினால் அந்த இனம் அந்த மண்ணின் குடிகளாகவே கருதப்படும். பிராமணர் அல்லாத மாற்று தேசிய மொழிகளை தாய்மொழியாக கொண்டு பல ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழ் பேசி வாழ்பவர்களும் தமிழ் குடிகளாகவே கருதப்படுவர். அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழ் தேசியம் என்பது எந்த ஒரு சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் எதிரானது அல்ல. இது தமிழர் தன் இறையாண்மையை பெறுவதையே இலக்காக கொண்டது. எந்தவொரு சாதியையும் ஒதுக்கிவிட்டோ, எந்தவொரு சாதியை மட்டுமே வைத்துக்கொண்டே தமிழ்தேசியத்தை அடைய முடியாது.

இதில் நான் தமிழருக்கு எதிரான பிராமணர்களிடமும் நமது கருத்துக்களை கூறி அவர்களது நம்பிக்கையும் பெற முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறேன். தமிழ்தேசியத்திற்கு தமிழருக்கு ஆதரவான பிராமணர்களின் ஆதரவும் வேண்டும். இந்த இலக்கில் பிராமணர்களும் தமிழருக்கு உதவுவார்கள் என்றே கருதுகிறேன். அந்த உதவியை என்னை போன்றவர்களால் பெறமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.


தண்ணீர் பிரச்சனை

அண்டை நாடுகள் தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுக்கும்பட்சத்தில் தமிழ்நாடு எதிர்நோக்கும் தலையாய பிரச்சனை தண்ணீர் பிரச்சனையாக இருக்கும். சுதந்திரமாக உள்ள தமிழர்கள் இந்த பிரச்சனையை முழுமூச்சுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகில் எந்தவித வளமும் இல்லாத, ஆனால் தங்களுடைய சுய முயற்சி காரணமாக மட்டுமே முன்னேறிய நாடுகள் உள்ளன. அதற்கு உதாரணமாக ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளை கூறலாம். எனவே தமிழகமும் அதுபோன்ற ஒரு முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க மழைநீர் சேகரிப்பு, கழிவு நீரை சுத்திகரித்தல், கடல்நீரை குடிநீராக்குதல் போன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அவ்வாறான ஒரு வளர்ச்சியை பெறும் நிலையில் அண்டை நாடுகள் தாமாக வந்து நட்பு பாராட்டலாம். அப்போது தண்ணீர் பிரச்சனைகள் தீர்வுக்கு வரலாம். இருந்தாலும் கூட தண்ணீர் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

மின்சாரம்

இந்தியா முழுவதுமே மின்சார தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் மின்சாரத் துறையை அரசாங்கம் தன் கையில் வைத்திருப்பதே. மின் உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்தினால் மிதமிஞ்சிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இது ஒரு பொருளாதார கொள்கைப் பிரச்சனையே தவிர அரசியல் பிரச்சனை அல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக தனியார் துறை ஈடுபட்டுள்ள தொலைபேசித் துறையின் வளர்ச்சியை கூறலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை அண்டைநாடுகளுக்கு கொடுக்கும் மின்சாரத்தை நிறுத்தினாலே நாட்டிற்கு போதுமான மின்சாரம் கிடைக்கும். அதற்கு பின்பும் மின்சார பற்றாக்குறை இருந்தால் அதனை போக்க தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். மின்சாரத்துறையில் அனைத்து நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்க வழி செய்யப்படும். இருக்கின்ற இயற்கை ஆதாரங்களான, கடல் அலை, காற்று, சூரிய ஒளி மூலமாகவும், சாலையில் ஓடும் வாகனங்களின் டயர்களின் அழுத்தங்களை பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க வகை செய்யப்படும். குறைந்த எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறைகள் ஊக்குவிக்கப்படும். மின்சாரம் தயாரிப்பது தொடர்பான ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் கேட்பாரற்று இருக்கின்றன. அவற்றை வெற்றிகரமானவையாக நிரூபித்து அதன் மூலம் கூடுதல் மின்சாரம் தயாரித்து அண்டை நாடுகளுக்கும் கொடுக்க முயற்சி செய்யப்படும்.

பொருளாதாரம்

மக்கள் வறுமை இல்லாமல் செல்வச் செழிப்பில் வாழவேண்டும் என்ற அடிப்படையில் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும். ஒருவரின் வருமானம் அவரது தேவைகளை விட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதை இலக்காகக் கொண்டு அதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். ஒவ்வொருவரும் சுதந்திரமாக தொழில் செய்யவும், முதல் ஈட்டவும், அதனை சேமித்து, முதலீடு செய்து செல்வம் சேர்க்க வாய்ப்புகள் செய்து தரப்படும்.

பொருளாதார வளர்ச்சி மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். ஒருவர் பணத்தை சேர்த்துவிட்டு இறந்துவிட்டால் அவருக்கு அந்த பணம் அர்த்தமில்லாத ஒன்றாக போவது போல பொருளாதார முன்னேற்ற மடைந்து சமுதாய அழிவு ஏற்பட்டால் நாட்டு நலன் அர்த்தமற்றதாகும். எனவே பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர வர்த்தகம் கடைப்பிடிக்கப்படும். உள்நாட்டு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேவேளையில் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும். அரசு பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வராமல், பெரும் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான வழிமுறைகள் செய்யப்படும்.

ஒரு முதலாளி அடிப்படையில் ஒரு சமூகசேவகர் என்ற முறையில் அவரது சமூக பொறுப்புகள் அதிகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் வளர்ச்சி அடைந்த ஒரு நிறுவனம் சமூக பொறுப்புடன் நடப்பதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். அப்போது அவரது நிறுவனம் சமுதாயத்திற்காக கூடுதல் பொறுப்புகளுடன் செயல்பட வேண்டும்.

பாதுகாப்பு 

பாதுகாப்பு என்பது மக்களின் அடிப்படை உரிமையாக கருதப்பட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறை இதுவரை உள்ள ஆங்கிலேயே முறையிலான அடக்குமுறை அமைப்பாக இல்லாமல், சமூக சீர்திருத்த அமைப்பாக பொதுநல அமைப்பாக கட்டி எழுப்பப்படும். இதன் மூலம் பெண்கள், குழந்தைகள், முதியோர், தனிநபர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பை பொறுத்தவரை, தற்காலத்தில் உலகில் உள்ள ராணுவ அமைப்புகளின் பாரம்பரிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்படும். ராணுவம் போர்வெறி கொண்டதாக இல்லாமல் போர் வெறி கொண்டவர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த ராணுவம் வெறும் வெட்டி பொழுது போக்கும் ராணுவமாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பொது சேவையில், இயற்கை சீரழிவு போன்ற அவரச நடவடிக்கைகளில் ஈடுபட எந்தநேரமும் தயாரான ராணுவமாக இருக்கும். அதற்கும் மேலாக கட்டுக்கோப்பான நல்லொழுக்கம் கொண்ட ராணுவமாக இருக்கும். இந்த ராணுவம் தாக்குதல் ராணுவம் என்ற அடிப்படையில் இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவமாக இருக்கும்.

அரசியலமைப்பு

ஒரு நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் மிகவும் இன்றியமையாதது. ஒரு நாட்டின் அரசியலமைப்பை பொறுத்தே அந்த நாட்டின் அரசியல் வெற்றி அமைகிறது. ஒரு குறைபாடுள்ள மென்பொருள் கொண்ட ஒரு கணினி எவ்வாறு சிறப்பாக இயங்க முடியாதோ அதுபோல ஒரு குறைபாடுள்ள அரசியலமைப்புச் சட்டம் கொண்ட ஒரு நாடும் சிறப்பாக இயங்க முடியாது.

சிறந்த அரசியலமைப்பை பெற்ற காரணத்தில்தான் இன்று அமெரிக்கா ஒரு வலிமை பொருந்திய ஜனநாயக நாடாக உலகில் வலம்வருகிறது. ஒரு ஒழுங்கற்ற அரசியலமைப்புக் கொண்ட நாடாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கூறலாம். இதற்கு காரணம் இது சுயமாக எழுதப்படாமல் பெரிதும் கடன் வாங்கி எழுதப்பட்ட ஒன்றாக உள்ளதாகும். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

உதாரணமாக ஒரு ஜனநாயக கூட்டாட்சியில் மத்திய அரசுக்கு ராணுவம், பொருளாதாரம், வெளியுறவு போன்ற குறைந்த அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். பெரும்பான்மை அதிகாரங்கள் மாநிலத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மாநிலங்களை விட அதிக அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் மத்திய அரசால் அதிகார பட்டியலில் உள்ள நதிநீர் பிரச்சனையை திறன்பட தீர்க்க இயலவில்லை. அதேவேளையில் உள்நாட்டின் நதிநீர் பிரச்சனையை தீர்க்க இயலாத இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்காளதேஷிற்கு நதிநீரை முறையாக பகிர்ந்து அளித்து வருகிறது, (தீஸ்தா நதிநீரை) பகிர்ந்து அளிக்க விரும்புகிறது. இது நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான முரண்பட்ட நிலையாகும். ஒரு சிறந்த கூட்டாட்சியில் மாநில அரசுகளை எந்த நிலையிலும் கலைக்கக் கூடாது. கலைக்க முடியாது.

மாநிலங்களிலிருந்து வரிவசூலிக்கும் இந்தியா தனது அடிப்படை கடமையான பாதுகாப்பைக் கூட நாட்டு மக்களுக்கு முறையாக வழங்க இயலவில்லை. இதில் காஷ்மீரில் பாதுகாப்பின்மை, மஹாராஷ்டிராவில் தீவிரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள், பீஹார், ஒரிஸா, வட கிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் பொதுமக்கள் தாக்கப்படுதல், பங்காளதேஷத்தவரின் ஊடுறுவல், தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்.

எனவே தமிழ்தேசியத்தின் அரசியலமைப்புச் சட்டம் வலிமையான ஒன்றாக உருவாக்கப்படும். நிர்வாகம், நீதித்துறை, பாராளுமன்றம், பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்க வழி செய்யப்படும். அரசியல் தலைவர்களின் அதிகாரம், கடமை, நிர்வாகம், நீதி, தேர்தல் ஆணையம் போன்ற அரசாங்க துறைகளின் அதிகாரம் வரம்பு போன்றவை நிர்ணயிக்கப்படும். நாட்டில் எந்த ஒரு சூழலிலும் குழப்பம் ஏற்படாத வகையில் தலைமை, தலைமைக்கு மாற்று, அவசர காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாட்டு முறை போன்றவையும், துறைகள் அல்லது அதிகார மையங்களிடையே போட்டி, மோதல் ஏற்படாத வகையில் அதிகாரங்களும் வரம்புகளும் வரையறுக்கப்படும். இந்த அரசியலமைப்பு அரசியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும். நெறிமுறைகள், பண்டை தமிழ் இலக்கியங்களிலிருந்து தமிழறிஞர்கள் எடுத்துத் தர, தற்காலத் தேவைகளின் அடிப்படையில் அரசியல் அறிஞர்களின் கருத்தைக் கொண்டு கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும்.

ஆட்சி முறை

தலைமை அமைச்சர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். (மாவட்டங்களுக்கான) மாநிலங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல் முழுவதும் எலக்ட்ரானிக் முறையில் இருக்கும். அதாவது தேர்தல் நாளில் அனைவரும் வாக்குச் சாவடிக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள எலக்ட்ரானிக் வசதிகளைக் (இன்டர்நெட் பேங்கிங் முறைபோன்ற எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு, மொபைல் போன்) கொண்டு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கலாம். பூத்களிலும் வாக்களிக்கலாம்.

தேர்தல் ஆணையம் நிரந்தரமான ஊழியர்களைக் கொண்டு தொடர்ந்து செயல்படுவதாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் முறை அமல் செய்யப்படும். இந்த முறைகளின் மூலமாக முக்கியமான பிரச்சனைகள் பற்றிய பொதுமக்களின் கருத்தையும் அறியலாம்.

பிரதிநிதிகள் அதிக வாக்குகள் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெறும்போது, அந்த வாக்குடன், அந்த வாக்கில் சரிபாதி வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அவர் தானாக பதவி விலக வேண்டும். அதாவது ஒருவர் 50,000 வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் என்று வைத்துக்கொண்டால், அதன்பின் ஒரு சூழலில் அவரது நிலைக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால் அவர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது பதவி பறிக்கப்படும். இது தலைமை அமைச்சருக்கும் பொருந்தும்.

ஆட்சி முறை ஏறக்குறைய அமெரிக்க ஆட்சி முறையை ஒத்ததாக, ஆனால் அதிலும் மேம்பட்டதாக இருக்கும். பாரளுமன்றமும், தலைமை அமைச்சரும் நேரடியாக மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களாக இருப்பர். இரண்டுக்கும் தொடர்பு இருக்காது. இது ஆட்சியாளர் ஆதரவுக்காக நடத்தும் குதிரை வியாபாரத்தை தவிர்க்கும். பாராளுமன்றமும் பெரும்பான்மை பலத்தின் மூலமாக தலைமை அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாம். துறை சார்ந்த மேலவை இருக்கும். இந்த அவையின் உறுப்பினர்கள் அந்தந்த துறைகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். கொள்கை முடிவுகள் கண்டிப்பாக இந்த அவையின் ஒப்புதலை பெறவேண்டும். இந்த அவையில் தேர்தலில் பிரதிநிதித்துவம் பெற முடியாத சிறுபான்மையினர் உறுப்பினராக சேர்க்கப்படுவர். அவர்களும் அவர்களது இனத்தாராலேயே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தலைமை அமைச்சர் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் துணை தலைமை அமைச்சர் பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியுமே தவிர தலைமை அமைச்சர் பதவிக்கு போட்டியிட முடியாது. தலைமை அமைச்சருக்கான தேர்தலில், முதலிடத்தை பெறுபவர் தலைமை அமைச்சராகவும், இரண்டாம் இடத்தில் வருபவர் துணைத் தலைமை அமைச்சருமாக பதவி ஏற்பர். அதாவது வெற்றி பெற்றவர் தலைமை அமைச்சராக இருந்தால் தோல்விபெற்றவர் துணை தலைமை அமைச்சராக இருப்பார். தலைமை அமைச்சரே ஆட்சி அதிகாரம் கொண்டவராக முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர் துணை தலைமை அமைச்சரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம். தலைமை அமைச்சர், துணைத் தலைமை அமைச்சர் ஆகிய இருவரும் சமநிலையில் வாக்குகளை பெற்றிருந்தால் போட்டி வாக்கு (மற்றவர் பெற்றுள்ள தேர்வு நிலை வாக்கு) மூலம் வெற்றி பெற்றவர் நிர்ணயிக்கப்படுவார்.

தலைமை அமைச்சர் இல்லாத நிலையில் துணை தலைமை அமைச்சர் அரசை வழிநடத்துவார். துணைத் தலைமை அமைச்சரும் இல்லாத நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி குறுகிய காலத்திற்கு அரசுத் தலைமையாக இருந்து அரசை வழிநடத்துவார். இவர் நீதி மன்றத்திற்கு கட்டுப்பட்டவர் ஆவார். தலைமை அமைச்சர் தனது அமைச்சரவையை உருவாக்கும் அதிகாரம் படைத்தவர். இவர் பாராளுமன்றம், மேலவையிலிருந்து பிரதிநிதிகளை அமைச்சர்களாக நியமிக்கலாம். அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இடம் பெறுகிறார்கள் என்றால் மேலவை உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். அமைச்சரவையின் எண்ணிக்கை 25க்கும் மேற்பட்டதாக இருக்கக் கூடாது. 20 அமைச்சர்களில் அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கு அதிக அமைச்சர் பதவி என்ற முறையில் பதவி அளிக்கப்பட வேண்டும். அதாவது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக இருப்பர். விசேஷத் துறைகள் உருவாக்கப்படுவதாக இருந்தால் அவை இந்த அமைச்சர்களுக்கு கீழான குழுக்களாகவே இருக்க வேண்டும்.

நீதித்துறை, புலனாய்வுத் துறை ஆகிய இரண்டும் சுதந்திரம் பெற்ற அமைப்புகளாக இருக்கும். சிக்கல் ஏற்படும் நிலையில் புலனாய்வுத்துறை நீதித்துறைக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறையில் கீழ் நிலை நீதிபதிகள் மட்டுமே அரசால் நியமிக்கப்படுவர். மாநில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் தலைமை நீதிபதிகளை தேர்ந்தெடுப்பர். நீதித்துறை நிர்வாகத்துறையாக மாறக்கூடாது. மாற முடியாது. தலைமை புலனாய்வு அதிகாரிகளும் அத்துறை ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் அவர்களது பின்புலம் கருத்தில் கொள்ளப்படும்.

நீதித்துறை வழங்கும் நீதியை, உத்தரவை செயல்படுத்த முடியாத நிர்வாகத் துறை தானாகவே பதவி விலக வேண்டும். அவ்வாறு பதவி விலகும் தலைமை அமைச்சர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், நீதி மன்றம் கொடுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாம் முறை பதவியில் உள்ள தலைமை அமைச்சர் பதவி விலகினால் அவரால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. நீதித்துறை பாராளுமன்றத்திற்கு சட்டங்களை பரிந்துரை செய்யலாம்.

பொதுமக்களின் அரசியல் ஈடுபாடு

1. அரசியலுக்கு மக்களே பொறுப்பு வாய்ந்தவர்கள்.
2. அவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
3. தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காத ஒருவர் அதற்கான காரணத்தை தெவிக்க வேண்டும்.
4. நெருக்கடியான சூழல்களில் மட்டுமே வாக்களிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
5. மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் வாக்களிக்க முடியாது.
6. ஒருவர் ஒரே நேரத்தில் பல கட்சிகளில் உறுப்பினராக இருக்க முடியாது.
7. ஒருவர் மூன்றுக்கும் மேலான கட்சிகளுக்கு மாறினால் அவர் பொதுவான நிலைக்கு தள்ளப்படுவார். அவர் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்க முடியாது.
8. அரசியல் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு பல பின்னடைவுகள் ஏற்படும்.
9. தொடர்ந்து வாக்களிக்காதவர் குடியுரிமையை இழப்பார். அவர் செத்தவருக்கு சமமானவர்.
10. அரசியலில் விழிப்புணர்வுடன் செயல்படும் மக்களுக்கு பல முன்னுரிமை அளிக்கப்படும். 

அரசியல்வாதிகளுக்கான தகுதிகள்

1. தனிநபர் ஒழுக்கம், முதல் தகுதியாக கருதப்படும். குற்றவாளிகளால் அரசியலில் ஈடுபட முடியாது.
2. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அரசியல் பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்களாக, சமூக நலன் பேணுபவர்களாக, மக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக, பிரச்சனைகளை தீர்க்கத் தெரிந்தவர்களாக, உலக ஞானம் கொண்டவர்களாக, நிச்சயம் வரலாறு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
3. அவர்களது சமூக அக்கறை திறமை, நிர்வாகத்தை மதிப்பிடும் வகையிலான நுழைவு தேர்வு எழுதி வெற்றி கண்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட முடியும்.
4. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டம் இயற்றுபவர்களாக இருப்பதால் அவர்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்.
5. ஒரு சாதாரண குடிமகனின் வருவாயைவிட அதிகம் சம்பாதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். நிச்சயம் வருமான வரி செலுத்துபவரக இருக்க வேண்டும்.
6. அரசு பணிகளில் இருப்போர், பதவி விலகியவர்கள் அரசியலுக்கு வர இயலாது. அப்படி வர விரும்புபவர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும். அவர்களுக்கான விசேஷ தேர்வுகளில் அவர்கள் வெற்றி பெறவேண்டும். அவர்களது அரசாங்கப் பணி நடத்தை கணக்கில் கொள்ளப்படும்.
7. அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில், தவறுகளை மறைக்க, திட்டமிட்டு, ஏதாவது ஒரு காரணத்திற்காக பொய் சொல்வது குற்றமாக கருதப்படும். அவ்வாறு பொய் சொல்பவர்கள் உடனே பதவி நீக்கப்படுவர். எதிர்காலத்தில் அவர்களால் அரசியலில் ஈடுபட முடியாது.

அரசியல் கட்சிகள்

1. குறைந்தபட்ச மக்களின் ஆதரவை பெற்ற கட்சிகளே அரசியல் கட்சிகளாக செயல்பட முடியும். அதாவது ஒருவர் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்றால் தனக்குள்ள ஆதரவை பெற்றுக் காட்ட வேண்டும்.
2. அரசியல் கட்சிகள் தங்களது வருமான வரி செலுத்த வேண்டும். தங்களது வருவாய்க்கான திட்டங்களை முன் வைக்க வேண்டும்.
3. அரசியல் கட்சிகள் தங்களுக்கான நிதி ஆதாரங்களை வெளிப்படையாக காட்ட வேண்டும்.
4. அரசியல் கட்சிகள் அதிகாரம் கிடைத்தால்தான் சேவை செய்வோம் என்றில்லாமல் அதிகாரம் இல்லாவிட்டாலும் பொதுச் சேவை செய்ய வேண்டும்.
5. தேர்தலில் போதிய வாக்குகளை பெற முடியாத அரசியல்கட்சிகள் கட்சி அந்தஸ்தை இழக்கும்.
6. அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கொள்கை நிலைப்பாடு குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.
7. முரணான கொள்கைகளை கொண்ட கட்சிகள் கட்சி அந்தஸ்தை இழக்கும்.


தகுதிக்கேற்ற தண்டனை முறை 

சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் தலையாய குற்றங்களாக கருதப்படும். திட்டமிடப்பட்ட குற்றங்கள் கடுமையான குற்றங்களாக கருதப்படும். சாதாரண பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோருக்கான தண்டனை முறை மாறுபட்டதாக இருக்கும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் தங்களது பணியின் அடிப்படையில் அவர்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களாகின்றனர். அதிக பொறுப்பு வாய்ந்தவர்களாக இருப்பர். இந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால், குற்றம் செய்தால், திட்டமிட்டு குற்றம் செய்தால் அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப சாதாரண தண்டனை, இரட்டைத் தண்டனை, கடுமையான தண்டனை அளிக்கப்படும். பொது மன்னிப்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கும். அதாவது அரசியலுக்கு வருபவர்களின் கதை புலி வாலை பிடித்த கதையாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் மக்கள் நலன் கருதி மிகவும் விழிப்புணர்வுடன், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும்.

மரணதண்டனை இருக்காது. ஆனால் தண்டனை, கடுமையான குற்றம் செய்தோருக்கு மரணதண்டையே சிறந்தது என்று கருதும் அளவிற்கு இருக்கும். ஆனால் இது உடல் ரீதியாக துண்புறுத்துவதாக இருக்காது. மன ரீதியான தண்டனையாக இருக்கும். சிறைகளில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்ற பிரிவுகள் இருக்காது. பாதுகாப்பு கருதி தனிமைச் சிறை மட்டுமே இருக்கும்.

சுதந்திரம் பெறும் முறை

தனித்தமிழ் நாட்டிற்கான சுதந்திரப் போராட்டம் என்பது மன ரீதியிலான எழுச்சியை உருவாக்கும் போராட்டமாகவே இருக்கும். தேவையில்லாமல் போராட்டம் என்ற பேரில் மக்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்தே எதிர்ப்பை தெரிவித்தால் போதும். போராட்டம் காரணமாக ஒருவரின் வேலையோ தொழிலோ பாதிக்கப்படாது. நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்படாது. அது ஒருஎழுச்சியாகவே இருக்குமே தவிர போராட்டமாக இருக்காது. 

அப்படியே போராட்டம் நடத்தப்பட்டாலும் அது அமைதியான போராட்டமாகவே இருக்கும். எந்த சூழலிலும் வன்முறை, ஆயுதப் போராட்டம் கையிலெடுக்கப்படாது.

தமிழ்தேசிய கருத்துக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அவர்களின் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஆட்சியமைந்தால், பின்னர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு சுயாட்சி அளிக்கும் நிலைக்கு தள்ளப்படும். இந்தியா ஒரு சிறந்த கூட்டாட்சியை ஏற்படுத்த முன்வரலாம். இருந்தாலும் தனித்தமிழ்நாடே இறுதி நோக்கமாக இருக்கும். இந்திய மாநிலங்கள் சுதந்திரம் பெற்றால், அந்த மாநிலங்கள் விரும்பினால் ஈரோ போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இந்த துணைக் கண்டத்தின் பாதுகாப்பு கருதி நேட்டோ போன்ற கூட்டுப்படை உருவாக்கலாம்.

தனிநாட்டின் பயன்

தனித் தமிழ்நாடு உருவாவதால் என்ன பயன்? ஒரு கைதிக்கு சுதந்திரம் கிடைப்பதால் என்ன பயன்? அவன் சிறையிலிருந்து வெளிவருவதே பெரும் பயன்தான்.
1. தமிழ் நாடு உருவாவதன் மூலம் தமிழர் சுதந்திர சிந்தனைகள் மூலம் சுதந்திர முயற்சிகள் மூலம் சிறப்பாக செயல்படுவர்.
2. தமிழ் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி கண்டு அண்டை நாடுகள் தாமாக முன் வந்து நட்புக் கொள்ளலாம்.
3. தமிழர் தங்களது உணர்வுகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மேற்கொள்வர்.
4. தமிழர் ஒரு சுதந்திரமான, மேம்பட்ட அரசியலை உருவாக்குவர்.
5. தமிழகத்தில் போதுமான திறமை பெற்ற மக்கள்த் தொகை உள்ளதால் அதுவே ஒரு வளமாக கருதி பயன்படுத்தப்படும்.
6. அரசாங்கம் மூலமாகவே வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புதல். இதன் மூலம் உலகம் முழுவதும் காரணமில்லாமல் சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7. அரசாங்கம் மூலமாகவே வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைத்தல்.
8. இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க மக்களுக்கானதாக இருக்கும்.
9. இந்தியாவுக்கு ஒரு உண்மையான நட்பு நாடும் உலகிற்கு ஒரு சிறந்த நாடு கிடைக்கும்.


தனித் தமிழ்நாடு கோரிக்கையை தமிழர்கள் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நிறுவ முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு போதுமான விளக்கம் கொடுத்திருக்கிறேன் என்று கருதுகிறேன். இது பற்றி வரும் காலங்களில் அறிஞர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் தமிழ் நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டத்தில் விரிவாக விவரிக்கப்படும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

46 comments:

தேவன் said...

இப்போதுதான் படித்து முடித்தேன் தேவன் ஜி.

முதலில் பாராட்டுக்கள். கொள்கை வேறுபாட்டை எல்லாம் தாண்டி அந்த அரசியல் அமைப்பு நன்றாக இருக்கிறது.தனிதமிழ்நாடு முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும், பிராமன எதிர்ப்பு இருக்காது, மத, ஜாதி, தனிநபர் சுதந்திரம் பின்பற்றபடும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடியது

யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்ற அளவுக்கு மாநில சுயாட்சி கேட்டுள்ளீர்கள்.அதுவும் எனக்கு ஏற்புடையதே. மத்திய அரசிடம் அதிக அதிகாரம் குவிந்திருப்பது நல்லதல்ல. மாநில அரசிடமும் அதிகாரம் இருக்க கூடாது. மக்களிடமே இருக்கவேண்டும். அதே சமயம் நேரடி வரிவசூலை மத்திய அரசு செய்யகூடாது என்பது பொருத்தமல்ல. வருமானவரி, இறக்குமதி வரி போன்றவற்றை மத்திய அரசு நேரடியாக பெற்றுகொள்ளலாம். மாநிலங்களும் வருமான வரியை நேரடியாக வசூலிக்க அனுமதிக்கலாம்.அமெரிக்காவில் இதுதான் நடைமுறை. மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி பெறுவதில்லை.சுயாட்சியுடன் இருக்கின்றன.அதே முறையை இந்தியாவில் கொண்டுவரலாம்.

எனக்கு ஏற்பு இல்லாத விஷயங்கள்

1) தமிழை தாய்மொழியாக கொண்டவர் தான் தலைமை அமைச்சர் ஆவார் என்பது (இது குறித்து நிறைய விவாதித்துவிட்டோம்)

2) வருமான வரி செலுத்துபவர் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பது, ஏழைகள் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவது இதனால் தடுக்கபடும்.

கொள்கை சார்ந்த முரண்கள் (இவை சிறிய அளவிலான முரண்கள். இவற்றை ஏற்கனவே நடைமுரைபடுத்தும் நாடுகள் உள்ளன என்பதால் பெரிய ஆட்சேபம் இல்லை.ஆனால் இதனால் நாடு இயங்குவதில் சிக்கல்கள் உருவாகும்)

1) அணு மின்சாரத்தை அனுமதிக்காதது.

2) மரணதண்டனை ஒழிப்பு

மற்றபடி தனிதமிழ்நாடு உருவாகாமல் தடுக்க இந்தியா கச்சதீவை பெற்றுதரவேண்டும் மற்ர மாநிலங்களிடம் பேசி நீரை பெற்றுதரவேண்டும் என கூறி உள்ளீர்கள். தனிதமிழ்நாடு அமைந்தாலும் இவற்றை எப்படி அடைவது என நீங்கள் சொல்லவில்லை. அதனால் அந்த இரு காரணங்களும் பொருந்தவில்லை. மற்ற சில விஷயங்களை இந்திய அரசியல் அமைப்பில் இருந்தே நிரைவேற்றலாம். உதாரணம் அதிகார பகிர்வு போன்றவை.

தேவன் said...

// வருமான வரி செலுத்துபவர் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பது, ஏழைகள் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவது இதனால் தடுக்கபடும்.//

இந்த விதிமுறையை வைத்ததற்கு காரணம் பசியோடு இருப்பவனை உணவுக்கு காவல் வைத்ததை போன்ற நிலை உள்ளதாலே ஆகும்.

ஒருவர் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை தகுதி சாதாரண வருவாயை விட அதிக வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும். இதன் மூலம் சொல்லவருவது, ஏழையாய் இருப்பவர் அரசியலுக்காக முதலில் தன்னை போதிய வருமானம் கொண்டவராக உயர்த்திக் கொள்ள வேண்டும். இது லஞ்ச ஊழலை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தேவன் said...

//அணு மின்சாரத்தை அனுமதிக்காதது.//

ஏற்கனவே இயற்கை ஆபத்துகள் இருக்க மனித குலத்திற்கு எதிரான அபாயங்கள் எதற்கு? என்ற அடிப்படையில் அதனை கூடாது என்கிறேன். மற்றபடி அதே செலவை நாம் வேறு வழிகளில் செய்து பல்முனை மின்சார ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பதே என் கருத்து.

தேவன் said...

//
மற்றபடி தனிதமிழ்நாடு உருவாகாமல் தடுக்க இந்தியா கச்சதீவை பெற்றுதரவேண்டும் மற்ற மாநிலங்களிடம் பேசி நீரை பெற்றுதரவேண்டும் என கூறி உள்ளீர்கள். தனிதமிழ்நாடு அமைந்தாலும் இவற்றை எப்படி அடைவது என நீங்கள் சொல்லவில்லை. அதனால் அந்த இரு காரணங்களும் பொருந்தவில்லை. மற்ற சில விஷயங்களை இந்திய அரசியல் அமைப்பில் இருந்தே நிரைவேற்றலாம். உதாரணம் அதிகார பகிர்வு போன்றவை.//

தண்ணீரைப் பொறுத்தவரை மற்ற நாடுகள் தராத நிலையில் நாம் அவர்களின் தண்ணீரை எதிர்பார்க்காமல் மக்களை தயார் செய்ய வேண்டும்.

சர்வதேச சட்டங்களின் கீழாக நமது தண்ணீர் உரிமையை பெற முயற்சி செய்யலாம். அதற்கும் அந்த நாடுகள் ஒத்து வரவில்லை என்றால் அவற்றை கண்டுகொள்ளாமல் மற்ற துறைகளில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கலாம்.

அதேபோல இஸ்ரேல் தனது அண்டை நாடுகளை சாராமல் தொழில்துறையில் முன்னேறியது போல முன்னேறினால் அண்டை நாடுகள் நட்புக்கொள்ள விரும்பலாம். அப்போது அவர்கள் தானாக தண்ணீர் தர முன்வரலாம்.

த.முத்துகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி,

Anonymous said...

//ராஜ்குமார் சின்னசாமி - தனிநாட்டின் பயன்
தனித் தமிழ்நாடு உருவாவதால் என்ன பயன்? ஒரு கைதிக்கு சுதந்திரம் கிடைப்பதால்
என்ன பயன்? அவன் சிறையிலிருந்து வெளிவருவதே பெரும் பயன்தான்.
1. தமிழ் நாடு உருவாவதன் மூலம் தமிழர் சுதந்திர சிந்தனைகள் மூலம் சுதந்திர
முயற்சிகள் மூலம் சிறப்பாக செயல்படுவர்.
2. தமிழ் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி கண்டு அண்டை நாடுகள் தாமாக முன்
வந்து நட்புக் கொள்ளலாம்.
3. தமிழர் தங்களது உணர்வுகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மேற்கொள்வர்.
4. தமிழர் ஒரு சுதந்திரமான, மேம்பட்ட அரசியலை உருவாக்குவர்.
5. தமிழகத்தில் போதுமான திறமை பெற்ற மக்கள்த் தொகை உள்ளதால் அதுவே ஒரு வளமாக
கருதி பயன்படுத்தப்படும்.
6. அரசாங்கம் மூலமாகவே வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புதல். இதன்
மூலம் உலகம் முழுவதும் காரணமில்லாமல் சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
7. அரசாங்கம் மூலமாகவே வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைத்தல்.
8. இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க மக்களுக்கானதாக இருக்கும்.
9. இந்தியாவுக்கு ஒரு உண்மையான நட்பு நாடும் உலகிற்கு ஒரு சிறந்த நாடு
கிடைக்கும்.

செம காமெடியா இருக்கு !//

திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,

ஒரு காலத்தில் மக்களாட்சி பற்றி சொன்னபோதுகூட செம காமடியாக இருக்கு என்று சொன்னார்கள். பூமி உருண்டை என்று சொன்னபோது கூட செம காமடி என்று சொன்னார்கள். சர்ச் அவருக்கு மரண தண்டனையே வழங்கியது.

தேவன் said...

//ராஜ்குமார் சின்னசாமி - நல்ல கற்பனை :) ஒரு கேட்டா ஐநா சபை வந்து தண்ணி பிரச்சினைய தீர்க்குமாம் ஈழப்பிரச்சினைய தீர்த்து வச்சமாறி !//

திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்காவிட்டால் ஐநா தானாக கட்டுப்படுத்தும் உரிமையையும் இழந்துவிடும். மக்களாட்சி முறையில் இல்லாத ஐநாவே ஒரு கேள்விக்குறியான ஒன்றுதான்.
26 Dec 2011

//ராஜ்குமார் சின்னசாமி - வன்னியர்கள் அடங்கிய ஒரு தேசம் , கொங்கு வேளாளர்கள் அடங்கிய ஒரு தேசம், நாடார்கள் அடங்கிய ஒரு தேசம், முக்குலத்தோர் அடங்கிய ஒரு தேசம் , குபீர் தமிழர்கள் அடங்கிய ஒரு தேசம், சுத்த தமிழர்கள் அடங்கிய ஒரு தேசம் இப்படி தேசங்களும் கூட கேட்கலாம் :)//

திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
இது பற்றியும் நான் என் கட்டுரையில் எழுதியுள்ளேன். அதாவது ஏதாவது ஒரு இனம் தமிழக எல்லலைக்குள் ஒடுக்கப்படுவதாக, அழிக்கப்படுவதாக இருந்தால் அவர்கள் தங்கள் உரிமையை கோரலாம்.

தேவன் said...

//Kesava Bashyam VN - உடன்பிறப்புகள் தேசம் - ரத்தத்தின் ரத்தங்கள் தேசம் , பாட்டளிகளின் தேசம் , விடுதலை புலிகளின் தேசம் , விடுதலை சிறுத்தைகளின் தேசம் விடு பட்டவை . இவை கூட கேட்க படலாம் . ஏற்கனவே ஒருவர் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரி உள்ளார்//

திரு கேசவ பாஷ்யம் விஎன் அவர்களே,
அவர்களும் கேட்கலாம். தப்பில்லை.

தேவன் said...

ராஜ்குமார் சின்னசாமி - //தனித் தமிழ் நாட்டில் மருத்துவம், விஞ்ஞானம் என அனைத்து கல்வியும் தமிழில் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பாடங்களின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில்
தரப்படும்...//

//இது போதுமே தமிழன அழிக்க :)))))

கணிப்பொறியில் உள்ள RAM ஆனது என ஆரம்பித்தால் எப்படி இருக்கும் !//

திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
உங்களது வாதம் சரியே. ஆனால் கம்ப்யூட்டர் மொழியை வேறு மொழிக்கு மாற்ற முடியாது என்று நினைக்கிறீர்களா? அல்லது ஆங்கில கமாண்ட்களை தமிழில் கொடுக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலம் கம்ப்யூட்டருக்கு புரிந்தால் தமிழும் புரியாது (புரிவது போல எழுத முடியாது) என்கிறீர்களா?

தேவன் said...

//ramji Yahoo - நான் அழகான ஆங்கிலோ இந்தியர்கள் தேசமான , பெரம்பூர் /கெல்லிஸ் தேசத்து
குடிமகனாக ஆசையாக இருக்கிறேன்//

திரு ராம்ஜி யாகூ அவர்களே,
உங்கள் ஆசையில் தவறில்லை.

தேவன் said...

//ராஜ்குமார் சின்னசாமி - //ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும்,அண்டை நாடுகளான கேரளா, கர்நாடகம், ஆந்திர நாடுகளின் மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும்
இந்தி ஆகியவை விருப்ப மொழியாகளாகவும் இருக்கும்.//

ஹா ஹா ஹா ! அலுவல் மொழியான ஹிந்தியே கத்துத் தர வக்கில்லையாம் இதுல அண்டை நாட்டு மொழிகள் :)//

திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
நீங்கள் தற்போதைய அரசியல்வாதிகளின் நிலையைக் கருத்தில் கொண்டே இது போன்ற கேள்விகளை எழுப்புகிறீர்கள். அதில் தவறில்லை. ஒரு மொழியை கற்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறேன். இந்தி அரசியல் ஆக்கப்பட்டதால் அந்த மொழி வெறுத்து ஒதுக்கப்பட்டது.

தேவன் said...

ராஜ்குமார் சின்னசாமி - தமிழ்தேசியத்துல ஹிந்தி கத்து தராங்களாம் அதனால தனித்தமிழ் அழிஞ்சிடாதா :)
திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வதால் ஒரு மொழி அழிந்துவிடாது. ஒரு மொழியை வேண்டுமென்றே கலந்து, சிதைப்பதன் மூலம்தான் அழியும். அதுதான் இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேவன் said...

//ramachandran krishnamoorthy - இதில் உள்ளவை பல ஒரு லட்சியவாத சிந்தனை, லட்சியம் இல்லாத வாழ்க்கை பயன் அற்றது. ஆனால் இதில் பெரும்பான்மையானவற்றை செயல் படுத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு உள்ள உரிமை போதுமானது. அந்த உரிமையை தவறான வழியில் தங்களுக்கு பணம் சேர்க்க மட்டுமே பயன் படுத்தும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கும் போது, இந்தப் பேச்சுக்களை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். உதாரனத்திற்க்கு தமிழ் மொழி வளர்ச்சி கடந்த அறுபது/ ஐம்பது/ நாற்பது ஆண்டுகளில் எப்படி இருக்கிறது. பார்க்கும் இடம் எங்கும் ஆங்கில வழி கல்வி, அதிலும் குறைந்த பட்சம் தமிழை பிழை இன்று எழுதவும், பேசவும் முடியாத ஒரு தலைமுறையை நாம் வளர்த்து உள்ளோம். புத்தகம் படிக்கும் பழக்கம் என்றால் குழந்தை இலக்கியம் இன்று எப்படி உள்ளது ? தூரன் தலைமையில் வெளி வந்த கலைகளஞ்சியம் இன்று மறு பதிப்பை பார்க்கவே இல்லை. ஆற்று மணலை கொள்ளை அடிப்பதை இரண்டு பிரதான கட்சி மக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர். மக்கள் வாழ்வாதாரம் மேம்பட என்ன திட்டங்கள் உள்ளன இவர்களிடம் ? நூலகங்கள் இன்று இருக்கும் நிலை என்ன ?

எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே என்பதும் மன்னனை நிகர்தே மலர்தலை உலகம் என்றதும் தமிழ். சிந்தனை சீர்கெட்ட மக்கள் அப்படி பட்ட தலைவர்களையே அடைவர்.//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
இந்த அரசியல்வாதிகளை மாற்றத்தான் புதிய அரசியலமைப்பு உடன் தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்கிறேன். கல்வி வியாபாரமாக்கப்பட்டதால் ஆங்கில வழிக்கல்வி மோகம் அதிகரித்துள்ளது. அதனால்தான் தமிழ்வழிக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிறேன். கொள்ளையடிக்கும் இந்த அரசியல்வாதிகளை மாற்றத்தான் புதிய அரசியல் முறை வேண்டும் என்கிறேன். சிந்தனை சீர்கெட்ட மக்கள் காரணமாகவே இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் தமிழரின் மக்களாட்சி முறையை மாற்ற வேண்டும் என்கிறேன்.

தேவன் said...

சிவகுமார் மா - //சமுதாயத்தில் தனிநபர் சுதந்திரம், குழுச் சுதந்திரம், சமூக
சுதந்திரம், சாதி சுதந்திரம், மதச் சுதந்திரம் வழங்குவது அடிப்படை
சுதந்திரங்களாக கொள்ளப்படும். இந்த இடத்தில் மேலே படிப்பதை நிறுத்தி விட்டேன். வெள்ளைத் துரைகள் ஆண்டது போய், சிவப்புத் துரைகள் ஆளுவது போய் கருப்புத் துரைகள் ஆளுவதுதான் தமிழ் தேசியம் என்றால் தேவையில்லை.//

திரு சிவக்குமார் மா. அவர்களே,
ஒரு நாட்டில் அனைவருக்கும் அடிப்படை சுதந்திரங்களை கொடுப்பது அவசியம். அது இல்லாவிட்டால் அது நாடாக இருக்காது. ஆனால் மேற்கண்ட துரைமார்கள் செய்த பிரித்தாளும், தூண்டிவிடுதல் போன்ற செயல்கள்தான் இருக்கக் கூடாது.

தேவன் said...

//Shankar G - வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா!//

திரு ஷங்கர் ஜி அவர்களே,

நீங்கள் சொன்ன நியதியை ரசித்தேன்.

தேவன் said...

பெ.அ. தேவன் - திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
எப்பவுமே புதிதாக சொல்லப்படும் ஒன்று போகாத ஊருக்கு சொல்லும் வழியாகத்தான் இருக்கும்.

மக்களாட்சி பற்றி சாக்ரடீஸூம் பிளாட்டோவும் சொன்னபோதும் இப்படித்தான் சொன்னார்கள், ஆனால் இன்று உலகம் பூராவும் சிறந்த மக்களாட்சிகள் உள்ளன.

இந்திய தேசத்தில் இருப்பதை விட தமிழ் நாடு தனியாக இருந்தால் நிச்சயம் ஒரு இலங்கையை விட, பங்காளதேஷை விட சிறந்த அரசியலை உருவாக்க முடியும் என்று சொல்கிறேன்.
Expand this comment »

தேவன் said...

ராஜ்குமார் சின்னசாமி - திரு. தேவன் அவர்களே ! தியரி எப்போதும் இனிமையாக தான் இருக்கும் படிக்க ஆனால் அதன் செயல்முறை !
26 Dec 2011

பெ.அ. தேவன் - திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,

தமிழகத்தில் படித்தவர்கள் அரசியலில் ஈடுபடாத காரணத்தால்தான் இன்று காமடியான அரசியல் அரங்கேறி வருகிறது.

உண்மைதான் தியரியை செயல்படுத்தி காட்டும்போதுதான் அதன் வலிமை தெரியும். இஸ்ரேலியர் அதை சாதித்துள்ளனர். நம்மால் சாதிக்க முடியாது என்று நீங்கள் மட்டுமல்ல நிறையப் பேர் நம்புகின்றனர்.

தேவன் said...

திரு கேசவா பாஸ்யம், திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே

ஐநா தண்ணீர் வாங்கித் தரும் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு சாத்தியம், இன்று எந்த ஐநா சொல்லி இந்தியா பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருகிறது?
26 Dec 2011 - Edit

ராஜ்குமார் சின்னசாமி - நிச்சயமாக ! எதை செய்யவும் அரசியல்வாதிகள் துணை வேண்டும் ! பிரித்தாளும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை நல்லன என நீங்கள் நினைக்கும் எதுவும் நடக்காது !

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 243 சட்ட மன்ற உறுப்பினர்களும் மற்றும் சில மாநிலங்கவை உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து சாதிக்க முடியாததையா தமிழ் தேசியம் பேசும் சிலர் சாதிக்க போகிறார்கள் !

நமக்கு தேவை அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவ்வளவு தான் தனி தேசியம் அல்ல !
Expand this comment »
26 Dec 2011

பெ.அ. தேவன் - திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,
தமிழகத்தில் சாதிப்பிரச்சனைதான் தமிழனின் ஒற்றுமையை குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனை அத்தனை பேர் அறிந்தாலும் அதனை போக்க யாராவது முயற்சி செய்ததுண்டா?

எல்லாத்தையும் செய்ய அரசியல்வாதி வேண்டும், அவர்களை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க, அதற்கு ஏற்றவாறு மக்களை தயார் செய்வது படித்த அனைவரின் கையிலும் உள்ளது.

தேவன் said...

ராஜ்குமார் சின்னசாமி - திரு தேவன் அவர்களே ! சாதிப்பிரச்சினைக்கு தீர்வு அவரவர் குடும்பத்தில், சொந்தத்தில், நண்பர்களிடத்தில் இருந்து தீர்க்கப் பட வேண்டும் !அலாவுதீன் பூதம் கொண்டு எல்லாம் அதற்கு தீர்வை ஒரே நாளில் தர இலயாது !
26 Dec 2011

பெ.அ. தேவன் - தமிழகம் சிறு தேசங்களாக பிரிந்து போக கோரிக்கை வைக்கலாம் என்பது பற்றியும் நான் கட்டுரையில் விளக்கியுள்ளேன். அதாவது அந்த அளவுக்கு ஒரு பிரிவினர், பகுதியினர் மீது அடக்குமுறை நடந்தால்.

தேவன் said...

பெ.அ. தேவன் - திரு ராஜ்குமார் சின்னசாமி அவர்களே,

உங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன்.

தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதற்கான காரணங்களை வைத்திருக்கிறேன் அதை படித்தீர்களா?

அதாவது தமிழர்களின் பிரச்சனைகளுக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியுமா? தெரிந்தால் சொல்லுங்கள். முதலில் ஒரு கூட்டாட்சியில் கிடைக்க வேண்டிய உரிமைகள் தமிழகத்திற்கு கிடைக்க எப்போதாவது சாத்தியம் இருந்தால் சொல்லுங்கள்? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியை கலைக்க எந்த கூட்டாட்சியில் மைய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்லுங்கள்.

தேவன் said...

ramachandran krishnamoorthy - // இந்தியா இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களை வெளியேற்ற ஒப்புக்கொண்டது, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, ஈழப்போரில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து தமிழர்களை கொன்று குவிக்க உதவியது, இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்காமை, காவிரித் தண்ணீரை பெற்றுத் தர இயலாமை போன்ற பல அடுக்கடுக்கான தமிழர் உரிமை இழப்புக்களை செய்துகொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் வருகிறது. //

//சரி அப்போது இங்கே அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? இதே மக்கள் தானே நீங்கள் சொல்லும் தனி தமிழ் நாட்டின் காவலர்களாக இருப்பார்கள் - என்ன வேறுபாடு வந்து விடும் ? //

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
இன்றுள்ள மக்கள்தான் தனித்தமிழ்நாட்டிலும் இருப்பார்கள். இன்று நான் எழுதிய உடனே நீங்கள் இவ்வளவு கேள்வி கேட்பதைப் போலவே மக்களுக்கு அங்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கும். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் உடனே பதவி இறக்கி விடுவர். தலைவிதியே என்று ஐந்து ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.// இந்தியாவின் தென் மாநிலங்களில் வற்றாத நதிகள் இல்லாத காரணத்தால் இங்கு நீர்வளம் தொடர்பான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.//

//இருக்கின்ற நதிகளின் கதி என்ன ? வலைப் பின்னல் போல இருந்த குளங்களின் இன்றைய நிலை என்ன ?
தாமிர பரணி ஆற்றின் நிலைமை உங்களுக்கு தெரியுமா ? இதற்க்கு யாரை குறை சொல்லப் போகிறீர்கள் ? //
இருக்கின்ற நதிகளின் கதி நாட்டுநலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளால் ஏற்பட்டது. இது இந்திய அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களால் இப்படித்தான் செயல்பட முடியும். இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மக்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் தலைவர்களுக்கே அக்கறை இல்லாதபோது மக்கள் எப்படி கவலைப்படுவர்?

தேவன் said...

ramachandran krishnamoorthy - //தமிழ்தேசியம் உருவானால் அண்டை நாடுகளான கேளரம், கர்நாடகம், ஆந்திரம், இவை இந்தியாவிலேயே இருக்கும்பட்சத்தில் இந்தியா தமிழ்நாட்டை எதிரிநாடாக கருதலாம். அல்லது இந்த மாநிலங்களும் தனிநாடுகளாகி விட்டால் அவையும் தமிழ்நாட்டை எதிரியாக கருதலாம். ஆனால் இந்தியா தன்னிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற நாடுகளுடன் நட்புகொள்ளவே முயற்சித்து வருகிறது என்பது
வரலாறு. அதுபோல தமிழகத்துடனும் இந்தியா நட்புநாடாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.//


//உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு, நட்பு என்பது ஒரு வழி பாதையா ? அப்படி என்றால் இன்று தண்ணீருக்காக நாம் கூட அண்டை மாநிலங்களிடம் சண்டை போடாமல், நட்பை வளர்க்கலாமே. ஒரு ஆண்மையற்ற அரசியல் தலைமை என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் இருப்பது நட்பை நாடுவது ஆகாது. இதில் நாம் பாடம் படிக்கவேண்டியது இஸ்ரேல் இடம் இருந்து. திருப்பி அடித்தால் தான் வலி என்ன என்று தெரியும் என்றால் அதனை செய்ய வேண்டும். இந்த நட்பு பஜனை அரசியலுக்கு ஆகாது.

உறுபசியும் ஒவ்வாப்பினியும் செறுபகையும் கொண்டது நாடாகாது//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
நட்பு ஒருவழிப்பாதை இல்லை. அவர்கள் நம்மிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கும்போதுதான், நம்மை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்போதுதான் நட்பை விரும்புவர். ஆண்மையற்ற அரசியல்வாதிகளுக்கு இந்திய அரசின் கீழான நிலையே காரணம். அதனால்த்தான் அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிறேன். இஸ்ரேலை இலக்காக கொண்டுதான். தண்ணீர் தராவிட்டாலும் பரவாயில்லை. அறிவியலில் தொழில்நுட்பத்தில் உயர்ந்து காட்டலாம் என்கிறேன். அப்போது அண்டைநாடுகள் நட்பை நாடும். அல்லது அடங்கி கிடக்கும்.

தனிநாடு இருந்தால் பசி, பிணிகளை எளிதில் வென்றுவிடலாம். பகை எதிரியின் கையில் உள்ளது.

தேவன் said...

- //அவ்வாறு அந்த நாடுகள் தமிழகத்தின் உரிமைகளை தர முன்வராவிட்டாலும் நாம் அது குறித்து அந்த நாடுகளுடன் பேசிப் பார்க்கலாம். அதற்கும் மசியவில்லை என்றால் நாம் நமது உரிமையைப் பற்றி சர்வதேச அமைப்பிடம் முறையிடலாம். அந்த அமைப்புகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் இந்த நாடுகள் இயற்கை வளத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள
வில்லை என்பதை தொடர்ந்து கருத்துப் பிரச்சாரங்கள் மூலம் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யலாம்.//

//இப்படி பிரச்சாரம் செய்து என்ன பலனை எதிர் நோக்கிகிறோம் ? இந்தப் பிரச்சாரம் கூப்பிடு தொலைவில் நமது சகோதர்கள் அழியும்போதும், இப்போதும் என்ன பலனை தந்து உள்ளது ? நீங்கள் புரிந்து தான் எழுதி இருக்கிறீர்களா ?//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
அப்படி பிரச்சாரம் செய்வதால் ஒரு பலனும் இல்லை. ஆனால் அப்போது வேறு நாடுகளால் நம்மை கேள்வி கேட்கவும் முடியாது. அதற்காகத்தான் பிரச்சாரம். அவர்களது வாயை அடைத்தால் போதும். மற்றவற்றை நாம் பார்த்துக்கொள்ளலாம். ஈழப்பிரச்சனை போன்ற இன்னொரு பிரச்சனை வரும்போது நாம் கையாலாகதவர்களாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தனிநாடு கோரிக்கை.

தேவன் said...

ramachandran krishnamoorthy - // தனித் தமிழ் நாட்டில் மருத்துவம், விஞ்ஞானம் என அனைத்து கல்வியும் தமிழில்
வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பாடங்களின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில்
தரப்படும். ஒவ்வொரு துறையும் அந்தந்த துறைபற்றிய கருத்துக்களை ஆங்கிலத்தில்
விளக்க, ஆராய, ஒப்பீடுகள் செய்ய அதற்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்படும்.
தாய்மொழிப் பற்று வளர்ச்சிக்கு தடையாக அமையாது. அவசியமான பிறமொழிச் சொற்கள்
தமிழில் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒவ்வொரு ஆண்டும்
அறிவிக்கும். தமிழில் மாற்று மொழிகளை கலக்காமலும், மாற்று மொழிகளை
கலப்பில்லாமல் பேசவும் ஊக்கம் அளிக்கப்படும்.

அதேவேளையில் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும், அண்டை நாடுகளான கேரளா,
கர்நாடகம், ஆந்திர நாடுகளின் மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும்
இந்தி ஆகியவை விருப்ப மொழியாகளாகவும் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள
மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்த மொழிகளில் திறமை பெற, எழுத, படிக்க பேச விசேஷ பயிற்சிகள் கொடுக்கப்படும்.
அதாவது ஒருவர் மூன்று அல்லது ஆறு மாதங்களில் அந்த மொழியில் ஆளுமை பெற பயிற்சி
அளிக்கப்படும். ஆட்சி மொழி தமிழ்மொழியாக இருக்கும். அவசியப்படும் இடங்களில்
ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும். //

//நேர்மையான கருத்து, இதனை செயல் படுத்த இப்போது உள்ள மாநில அரசின் அதிகாரங்களே போதும் - என்ன செய்து கொண்டு இருக்கிறோம் நாம் ?//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
இதனை செய்ய இப்போதுள்ள அதிகாரங்கள் போதும். இவற்றையெல்லாம் நாம் செய்யும்போது மற்றவற்றையும் செய்யும் அதிகாரம் நமக்கு வேண்டும். அதனால்தான் தனிநாடு. அதாவது நம் அதிகாரத்தில் இல்லாத செயல்களை செய்யவும்தான் தனிநாடு.

தேவன் said...

ramachandran krishnamoorthy - //*பிராமணர்களும் மாற்று தேசிய இனங்களும்*


இன்றைய சூழலில் தமிழரின் நிலைக்கு பிராமணர்தான் காரணம் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. தமிழரின் பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

எல்லா சாதிகளிலுமே நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சாதியையே குறைகூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர் ஒரு தனி இனமாக கருதப்பட்டாலும் அவர்கள் தமிழர்களோடு தமிழராக வாழ்ந்து வருகின்றனர். தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் இன்றும் பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் பிரபலமான சில பிராமணர்கள் தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால் அது இன்னமும் இன எதிர்ப்புத் தோற்றத்தையே கொடுக்கிறது. பலருக்கும் நல்ல பிராமணர் நண்பர்களாக உள்ளனர். //

//இந்த ஒரு நிலைப் பாடு போதும் நண்பரே, மற்றவர்கள் உங்களை மறுதலிக்க.//
திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
என்னை மறுதலிக்க பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவை உண்மை என்றால் நிச்சயம் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

தேவன் said...

ramachandran krishnamoorthy - // தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க மழைநீர் சேகரிப்பு, கழிவு நீரை சுத்திகரித்தல், கடல்நீரை குடிநீராக்குதல் போன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். //


// இந்தியா முழுவதுமே மின்சார தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் மின்சாரத் துறையை அரசாங்கம் தன் கையில் வைத்திருப்பதே. மின் உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்தினால் மிதமிஞ்சிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இது ஒரு பொருளாதார கொள்கைப் பிரச்சனையே தவிர அரசியல் பிரச்சனை அல்ல. இதற்கு
எடுத்துக்காட்டாக தனியார் துறை ஈடுபட்டுள்ள தொலைபேசித் துறையின் வளர்ச்சியை கூறலாம். //

//இதனை அமல்படுத்த தனி நாடு வேண்டாம் நண்பரே, கொஞ்சம் அக்கறை இருந்தால் போதும்//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,

அந்த அக்கறை எப்படி வரும்? இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு அக்கறை ஏன் வரமாட்டேன் என்கிறது? வேரை விட்டுவிட்டு கொம்புகளை வெட்டி என்ன பயன்? வேரிலிருந்து பிடுங்கும்போதுதான் முள் செடி மீண்டும் முளைக்காது. இந்தியம் என்று வேர் இருக்கும்வரை விஷ அரசியலை மாற்ற முடியாது. இதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் மற்றவற்றை ஏன் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்கள்?

தேவன் said...

ramachandran krishnamoorthy - // சாதாரண
பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோருக்கான தண்டனை முறை மாறுபட்டதாக இருக்கும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் தங்களது பணியின் அடிப்படையில் அவர்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களாகின்றனர். அதிக பொறுப்பு வாய்ந்தவர்களாக இருப்பர். இந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால், குற்றம் செய்தால், திட்டமிட்டு குற்றம் செய்தால் அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப சாதாரண
தண்டனை, இரட்டைத் தண்டனை, கடுமையான தண்டனை அளிக்கப்படும். //

//இதை தான் மனு நீதியும் சொன்னது - அதனை தான் ஜாதிக்கு ஒரு நீதி என்று மக்கள் முழங்கினார்கள்.//
திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
இது சாதியில்லை. மக்களின் அதிகாரத்தை, நம்பிக்கையைப் பெற்று முறை தவறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கானது. இதில் சாதி சம்பந்தப்படவில்லை. இது அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவே ஒழிய சாதிக்கும் இதுக்கும் தொடர்பில்லை.

தேவன் said...

//ramachandran krishnamoorthy - முதற்கண் முழுமையான அறிமுகம் செய்து கொண்டது பற்றி எனது வாழ்த்துக்கள். ஆழ்ந்து சிந்தித்து விளக்கமாக எழுதியதற்கு எனது பாராட்டுக்கள். மார்பாட இடையாட என்று இருக்கும் மக்களிடம் இருந்து மாறுதல் வரும் என்பதனை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் கருத்தில் மிகப் பெருவாரியான இடங்களில் நான் ஒத்துப் போகிறேன், ஆனால் இதில் பலவற்றை இந்தியனாக இருந்தே செய்து முடிக்க முடியும் என்பது எனது கருத்து.

I salute your concern for the common people of this country.//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
உங்களது வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். என்னைப் போன்ற பலர் எனக்கு ஆதரவு தருவர் என்று நம்புகிறேன்.

தேவன் said...

ramachandran krishnamoorthy - // இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு பல சிறிய நாடுகளாக இருந்தன என்பது உண்மைதான். ஆனால் எந்த நாடும் யாருக்கும் அடிமையாக இருக்கவில்லை. அவை எல்லாம் தங்களது இறையாண்மையை கொண்டிருந்தன. //

அப்படி இருந்து இருக்குமானால், புறநானூறு சொல்வது எல்லாம் பொய் என்று ஆகும், மீண்டும் மீண்டும் படையெடுப்பை பற்றியே அது பேசுகிறது. வலிமை வாய்ந்த சாம்ராஜ்யங்கள் எழுவதும், விழ்வதும்தான் எல்லா நாட்டின் வரலாறும், அதற்க்கு இந்தியாவும் விதி விலக்கல்ல
27 Dec 2011

பெ.அ. தேவன் - அதாவது இந்தியா வீழ்ந்துவிடும் என்கிறீர்கள். அதை நானும் நம்புகிறேன்.

தேவன் said...

பெ.அ. தேவன் - //சரி அப்போது இங்கே அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? இதே மக்கள் தானே நீங்கள் சொல்லும் தனி தமிழ் நாட்டின் காவலர்களாக இருப்பார்கள் - என்ன வேறுபாடு வந்து விடும் ?//

திரு ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,

உண்மைதான். இங்கே இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்ததால் ஒன்றும் செய்யவில்லை. அதேபோல தற்போதுள்ள தலைவர்களும், இந்திய அரசின் தாக்கத்தை பெற்றவர்களாகவும், அதற்கு வெளியே சிந்திக்க தெரியாத, அல்லது விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையை பல பிரச்சனைகளுக்கும் காரணம்.

இந்த நிலையை மாற்ற தனித் தமிழ் அரசியல் அவசியம்.

//இருக்கின்ற நதிகளின் கதி என்ன ? வலைப் பின்னல் போல இருந்த குளங்களின் இன்றைய நிலை என்ன ?
தாமிர பரணி ஆற்றின் நிலைமை உங்களுக்கு தெரியுமா ? இதற்க்கு யாரை குறை சொல்லப் போகிறீர்கள் ?//

இதற்கும் வேறு யாரும் காரமணல்ல தமிழர்களும் தமிழக தலைவர்களுமே. இந்தியத்தில் மக்களைப் பற்றிய, நாட்டைப் பற்றிய பற்று இல்லாத நிலையே உள்ளது. இதற்கு தலைவர்களும் கற்றறிந்த சான்றோரும், மக்களுமே காரணம். ஒரு நாட்டின் மீது பற்று இல்லாத அரசியல்வாதி நாடு எக்கேடு கெட்டால் என்ன? தன் சுயநலமே முக்கியம் என்று கருதி கொள்ளையடிக்கிறான். கொள்ளையடிக்க துணை போகிறான்.

இதேபோக்கு மக்களிடமும் காணப்படுகிறது. நாட்டில் என்ன நடந்தால் என்ன? நாம் நமது வாழ்க்கையைப் பார்த்தால் போதும் என்ற நிலையில் இயற்கை ஆதாரங்களை அழிக்க தயாராகின்றனர். பொறுப்புணர்வு இருப்பதில்லை. இதையே அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இது மக்களாட்சி அரசியலமைப்புக்கு எதிரான போக்கு ஆகும். இதை மாற்றுவதே மக்களாட்சியில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் கடமை ஆகும். தமிழ் நாட்டு மக்கள் அரசியல் மீது கொண்டிருந்த அலட்சியம் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இப்போது விழித்து எழாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் பல வழிகளில் பின்னடைவுகளை சந்திக்கலாம்.

உணர்வு அடிப்படையில் எழும் ஒரு நாட்டில்தான் அதிக பொறுப்புணர்வும், குறைந்த லஞ்ச ஊழலும் இருக்கும். அதுபோன்ற ஒரு நிலையை தனித் தமிழ் நாட்டில் ஏற்படுத்தலாம்.

தேவன் said...

பெ.அ. தேவன் - திரு வேந்தன் அரசு அவர்களே,

அம்மாவையும் ஐயாவையும் நினைத்து ஏன் அஞ்சுகிறீர்கள்?

இவர்கள் இப்படியே ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தால் அதற்கு முடிவு இல்லையா?

அதற்குத்தான் நான் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி கூறியுள்ளேன். ஒரு தலைவர் ஆட்டம்போட்டால், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர் தானாக பதவி விலகும் முறையை சொல்லியுள்ளேன்.

அதுபோன்ற முறையை பின்பற்றினால் ஐயாவோ, அல்லது அம்மாவோ அல்லது வேறு யாருமோ ஆட்டம்போட முடியாது.

தேவன் said...

பெ.அ. தேவன் - திரு வேந்தன் அரசு அவர்களே,

வளமில்லாத மண்ணைக்கூட வளமானதாக ஆக்கலாம். அதற்கு தேவை மனமே அல்லாமல் வேறு எதுவும் அல்ல. தமிழகத்தில் சிறந்த மண் வளம் உள்ளது, அதில் சிறப்பாக விவசாயம் செய்யலாம் என்று நான் நம்புகிறேன்.
27 Dec 2011 (edited) - Edit

பெ.அ. தேவன் - இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் எனது கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்று தீர்மானம் போட்டிருந்தபோது தற்போதைய அரசாங்கம் எப்படி ஆயுத உதவி செய்தது. இலங்கைப் போரில் தனது ஈடுபாடு குறித்து இந்திய அரசாங்கம் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? இலங்கையின் போர்க்குற்றத்தை இந்தியா இன்னமும் ஏன் கண்டிக்கவில்லை? தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.

தேவன் said...

ramachandran krishnamoorthy - கட்ச தீவை தாரை வார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி செய்தது யார் ? மாபெரும் இன ஒழிப்பு நடந்த போது இங்கே ஆட்சி செய்தது யார் ? இங்கே இருந்தவர்கள் எதற்காக மத்திய அரசின் கையில் பொம்மையாக இருந்தார்கள் ? இயல்பாக எழுந்த ஒரு மக்கள் கொந்தளிப்பை மண் போட்டு மூடியது யார் ? ஏன் மத்திய அரசுக்கு போதுமான ஒரு அழுத்தத்தை தர முடியவில்லை ?
வாஜ்பாய் அரசாங்கம் இருந்த போது நடைபெற்ற மீனவர்கள் கொலை எண்ணிக்கை எவ்வளவு ? மன்மோகன் சிங் அரசு செய்யும் போது எண்ணிகை எவ்வளவு ?
திரு ராமச்சந்திரன் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
இந்திய அரசுக்கு கீழாக உள்ள தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளின் பிம்பங்களாகவே உள்ளனர். இவர்கள் போலியான அரசியல்வாதிகள். மக்களை அடக்கும் செயல்முறையை தவிர்க்கத்தான் நேரடி தேர்தல் பதவி இறக்கும் முறை போன்றவை வேண்டும் என்கிறேன். அப்போதுதான் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவர். ,

தேவன் said...

ramachandran krishnamoorthy - // இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் எனது கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்று தீர்மானம் போட்டிருந்தபோது தற்போதைய அரசாங்கம் எப்படி ஆயுத உதவி செய்தது. இலங்கைப் போரில் தனது ஈடுபாடு குறித்து இந்திய அரசாங்கம் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? இலங்கையின் போர்க்குற்றத்தை இந்தியா இன்னமும் ஏன் கண்டிக்கவில்லை? தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.//

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள் இந்த கேள்வியை !
27 Dec 2011

பெ.அ. தேவன் - அந்த அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தேசியவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். நேரம் வரும்போது அந்த அரசியல்வாதிகளிடம் கேட்கப்படும்.

தேவன் said...

//வவேற்கிறேன்.முதலாவது தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கையை தூக்கிப்பிடித்தமைக்கு நன்றி. அதனைவிட நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதில் தஙகள் சிந்தனைக்கும் நன்றி.
விவாதத்திறுப் போகும் முன் தங்களின் கருத்து சமூக நடைமுறையில் நீங்கள் நம்புவதை மட்டுமே கொண்டு சிந்தித்துள்ளீர். //

திரு ரஷீத்கான் அவர்களுக்கு,

நன்றி. உண்மை.

//உங்களது சொந்தப் பார்வை என்பது ஆண்மீகத்தை ஆளுமையாகக் கொண்டுள்ளது என்பது புரிகின்றது. நடுநிலை குறைகின்றது. எனத்தோண்றுகிறது. சாதி, மதம் குறித்த உங்கள் பார்வை மிகவும் விவாதத்திற்கு வாய்ப்புள்ளதாகும். இவை இரண்டுமேதான் தமிழகம், இந்தியவலையில் சிக்குண்டுப் போக வாயிபாக உள்ளதாகும்.//

நான் முன்வைக்கும் ஆன்மீகம் என்பது மனிதனுக்குள் உள்ள ஆன்மா அடிப்படையிலானது. அது மதங்களுக்கு அப்பாற்பட்டது. எந்த வகையில் நடுநிலை குறைகிறது? நிச்சயமாக சாதி, மதம் விவாதத்திற்கு உரியது. ஆமாம். ஆனால் அந்த வைரஸை கடக்க அந்த வைரஸையே பயன்படுத்துவது என்று சொல்கிறேன்.

//பொருளாதாரம் என்பதில் ஒரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். வாரிசு சொத்துரிமை தடுக்கப்படவேண்டும்.அனைவருக்கும் கல்வி, மருத்துவம் கட்டணமின்றி வழங்கப்படவேண்டும்.//

நீங்கள் கம்யூனிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர் என்று கருதுகிறேன்? வாரிசுரிமை தடுக்கப்பட்டால் எப்படி ஒருவர் சொத்து சேர்ப்பார். தனது அதிக ஆற்றலை பயன்படுத்துவார்? கல்வி, மருத்துவத்தை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். எது சாத்தியம் என்று சொல்லுங்கள்?

//18 வது கொண்ட அனைவரும் குறைந்தது ஓராண்டு இராணுவப் பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தேர்தல் அரசியலில் பங்குபெற இது ஈராண்டாக இருக்கவேண்டும்.//

வரவேற்கிறேன். இதை எப்படி விட்டுவிட்டேன் என்று வியக்கிறேன்.

//மதம் ஒருவரின் தனிப்பட்ட காரியமாக இருக்கவேண்டும்.
மதச்சுத்ந்திரம் தவிக்கப்பட வேண்டும். பெரியார் சிந்தனைகளை தவித்தே ஆகவேண்டும் என்ற மனநிலை வேண்டாம்.//

மதம் தனிப்பட்ட காரியமாகத்தான் இருக்க வேண்டும். தனிநபர் கருத்துச் சுதந்திர அடிப்படையிலேயே மதத்தை சேர்த்துள்ளேன். பெரியாரின் சிந்தனைகளை தவிர்க்க விரும்பவில்லை. அதுவே சமூகத்தின் அடிப்படை கருத்தாக இருக்கும். அதாவது சமூக சமநிலை.

//எல்லோருக்கும் நல்லபில்லையாக இருந்து மாற்றம் செய்ய முடியாது.
அரசியல் கூட்டங்கள், கோயில் விழாக்கள் அறைக்கூட்டமாகவே நடக்கவேண்டும்.//

எல்லாருக்கும் நல்ல பிள்ளை ஆக முடியாது. ஆனால் பெரும்பாலானோருக்கு நன்மை செய்வதையே அரசு தனது நோக்கமாக கொள்ள வேண்டும்.

அரசியல் கூட்டங்கள் பொதுவானதாகவும். கோவில் விழாக்கள் வரம்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

//பார்ப்பனரை தன்னக்கடியே ஆகவேண்டும் என்பது இன்று தமிழினம் இருக்கும் நிலையை அப்படியேதான் இருக்கவைக்கும். மனிதம் போற்றவேண்டும். ஒவ்வொருவரின் மத ,சாதி அடயாளங்கள் மற்றவரை நீழாகப் பார்ப்பதாகவோ,சமோக ஆளுமை செய்வதாகவோ இருக்கக்கூடாது. நீங்கள் பார்ப்பனரையும் அவர்தம் தேவையையும் சரியாக அறிய முடியாதவராக உள்ளீர்.//

நான் பிராமணரை ஒரு சாதாரண சமூகத்தினராகவே பார்க்கிறேன். சுதந்திர தமிழகத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றால் என்னால் நம்ப முடியாது. பெரியார் முதலானோர் பிராமணர் குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் அதை நம்பாததாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் ஒரு பிராமணரை எப்படி அவர்கள் தங்கள் தலைவியாக தேர்ந்தெடுக்க முடியும்?

//பிராமிணர் பற்றி எழுதாமல் இருந்தாலே பிரச்சினை இருக்காது. அப்படி எழுதததோண்றியதே பெரியார் அவர்களின் சமூக அடக்குமுறையைக் காட்டுகிறது. பிறப்பு யாவும் அரசின் பதிவாக இருப்பதுடன் திரும்ணங்களும் கட்டா//

பிராமணர் பற்றி பேச வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்றால், அமையும் சுதந்திர தமிழ்நாடு எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல என்பதை காட்டுவதற்கே.

பிறப்பு, இறப்பு, திருமணம் அனைத்தும் அரசு பதிவு பெற்றதாகவே நடைபெற வேண்டும் என்று கருதுகிறேன்.

தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி.

தேவன் said...

தமிழ்ப் பயணி
//திரு.தேவன்,

உங்கள் தேசியத்தில் தேர்தல் முறை என்ன? தினமும் நடக்குமா..? விளக்க இயலுமா..?

இன்றளவும் மக்களாட்சி நாடுகள் பதவி காலம் என்ற முட்டாள்தனமான திட்டத்தை கடைபிடித்து வருகின்றன.//


திரு தமிழ்ப் பயணி அவர்களே,

இது பற்றி நான் எனது அரசியலமைப்பு கட்டுரையில் எழுதியுள்ளேன். இருந்தாலும் விளக்குகிறேன். இப்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளை வைத்து தேர்தலை குறைந்த செலவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தலாம்.

அதேபோல பங்குச் சந்தையின் அட்டவணை போன்ற அரசியல்வாதிகளின் அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வைத்திருக்கலாம்.

இதில் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை பொறுத்து மக்கள் அவரைகளின் மதிப்பீட்டை வெளியிடலாம். இதனை எஸ்எம்எஸ் மூலமே செய்யலாம்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் திறம்பட செயல்படாதபோது திருப்பி அழைத்து விடலாம். அதற்கும் சில விதிமுறைகள் வைக்கலாம். அதாவது முதல் ஒரு ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருப்பி அழைக்கப்படத் தேவையில்லை. இரண்டாம் ஆண்டிலிருந்து அவரது மதிப்பீடு தொடரும். அப்போது தொடர்ந்து அவர் மூன்று விஷயங்களில் மக்களின் ஆதரவை இழந்தால் உடனடியாக திருப்பி அழைக்கப்படுவார். அப்போது அவரது இடத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை. ஏனெனில் அவருக்கு அடுத்த இடத்தில் வந்த உறுப்பினர் அந்த பதவிக்கு வருவார்.

ஒருவேளை அவரும் ஒரு வருடத்திற்கு பிறகு அதுபோல பதவி இறக்கப்பட்டால் மீதி காலத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கான தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பேற்பார்.

இந்த முறையால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற முறை, விரோத போக்கு நீக்கப்படும். எந்த உறுப்பினராக இருந்தாலும் அவர் மக்களுக்காக பணியாற்றுபவராக இருப்பார்.

தலைமை அமைச்சருக்கும் இந்த விதி பொறுந்தும் என்பதால் அவர் மக்களின் கருத்தை உன்னிப்பாக கவனித்து ஆட்சி செய்வார். தொடர்ந்து இரண்டு முறை பதவி இறக்கப்பட்டால் அவர் அடுத்து தேர்தலில் போட்டியிடக் கூடாது. இதுபோன்ற விதிமுறைகள் சிறந்த மக்களாட்சிக்கு வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.

ramesh said...

அய்யா தங்களை பற்றி இப்போதுதான் முழுமையாக அறிந்து கொண்டேன். வாழ்க நின் தமிழ் தொண்டு!

Unknown said...

பல முறை படித்துப்பார்த்துவிட்டேன்... முதல் முயற்சிக்கு எம் வந்தனங்கள்...
கீழ் காணும் கருத்தியலுக்கு எனது பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறேன்..

1) மதத்தை அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது ஒரு சமநிலையான சமூக ஏற்படுவதற்கான வழிமுறையாகவே பார்க்கப்படும். மாறாக எந்தவொரு சாதிக்கும் எதிரான ஒன்றாக கருதப்படாது. இதன் மூலம் இறுதியில் சாதி வேறுபாடு இல்லாத சமூகம் உருவாக வாய்ப்புள்ளது.

2) அதேபோல இன்றைய சூழலிலும் பிராமணர் தங்களை தமிழர் அல்லாமல் வேறு ஒரு இனமாக அடையாளம் காட்டிக்கொள்ளவோ, அல்லது வேறு மொழியை பயன்படுத்தவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்கள் தமிழர் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்களோ இல்லையோ தமிழ் மொழியையே பேசி தமிழராகவே வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் தமிழர்கள் இல்லை என்று பிரித்துப் பார்ப்பது தவறு. எந்தவொரு இனமுமே ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து அந்த மண்ணின் மொழியை பேசினால் அந்த இனம் அந்த மண்ணின் இனமாகவே கருதப்படும். பிராமணர் அல்லாத மாற்று தேசிய மொழிகளை தாய்மொழியாக கொண்டு பல ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழ் பேசி வாழ்பவர்களும் தமிழர்களாகவே கருதப்படுவர். அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

3) ராணுவம் போர்வெறி கொண்டதாக இல்லாமல் போர் வெறி கொண்டவர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த ராணுவம் வெறும் வெட்டி பொழுது போக்கும் ராணுவமாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பொது சேவையில், இயற்கை சீரழிவு போன்ற அவரச நடவடிக்கைகளில் ஈடுபட எந்தநேரமும் தயாரான ராணுவமாக இருக்கும். அதற்கும் மேலாக கட்டுக்கோப்பான நல்லொழுக்கம் கொண்ட ராணுவமாக இருக்கும். இந்த ராணுவம் தாக்குதல் ராணுவம் என்ற அடிப்படையில் இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவமாக இருக்கும்.

4) நீதித்துறை வழங்கும் நீதியை, உத்தரவை செயல்படுத்த முடியாத நிர்வாகத் துறை தானாகவே பதவி விலக வேண்டும். அவ்வாறு பதவி விலகும் தலைமை அமைச்சர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், நீதி மன்றம் கொடுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாம் முறை பதவியில் உள்ள தலைமை அமைச்சர் பதவி விலகினால் அவரால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. நீதித்துறை பாராளுமன்றத்திற்கு சட்டங்களை பரிந்துரை செய்யலாம்.

5)தனித் தமிழ் நாட்டில் மருத்துவம், விஞ்ஞானம் என அனைத்து கல்வியும் தமிழில் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பாடங்களின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் தரப்படும். ஒவ்வொரு துறையும் அந்தந்த துறைபற்றிய கருத்துக்களை ஆங்கிலத்தில் விளக்க, ஆராய, ஒப்பீடுகள் செய்ய அதற்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்படும். தாய்மொழிப் பற்று வளர்ச்சிக்கு தடையாக அமையாது. அவசியமான பிறமொழிச் சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும். தமிழில் மாற்று மொழிகளை கலக்காமலும், மாற்று மொழிகளை கலப்பில்லாமல் பேசவும் ஊக்கம் அளிக்கப்படும்.

அதேவேளையில் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும், அண்டை நாடுகளான கேரளா, கர்நாடகம், ஆந்திர நாடுகளின் மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை விருப்ப மொழியாகளாகவும் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்த மொழிகளில் திறமை பெற, எழுத, படிக்க பேச விசேஷ பயிற்சிகள் கொடுக்கப்படும். அதாவது ஒருவர் மூன்று அல்லது ஆறு மாதங்களில் அந்த மொழியில் ஆளுமை பெற பயிற்சி அளிக்கப்படும். ஆட்சி மொழி தமிழ்மொழியாக இருக்கும். அவசியப்படும் இடங்களில் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும்.


எனக்கு உடன்படாத சில விசயங்கள் இருந்தாலும்... உங்களது அறிக்கை great....

இனிய வாழ்த்துகள்..

உங்களுடனேயே பயணிக்கிறேன்...

தேவன் said...

//எனக்கு உடன்படாத சில விசயங்கள் இருந்தாலும்....//

ஐயா, உடன்படாத விஷயங்களை முதலில் சொல்லுங்கள், அதுதான் எனக்கு தேவை. அப்போதுதானே அவற்றை மாற்றிக்க கொள்ள முடியும்.

Unknown said...

அரசியல், பொருளாதார, ஆட்சி, அதிகார வரம்பு குறித்த சந்தேகங்கள் உள்ளன... வருகிறேன்.. விவாதிப்போம்...

எனது தனிப்பட்ட கோரிக்கை :
தனித்தமிழ்நாடு கோரிக்கையை கைவிட இந்தியா செய்யவேண்டியவை என்ற பகுதியை நீக்கும்படி.. (காரணம் : கொஞ்சம் காமெடியா இருக்கு என்பதால்.. )

தேவன் said...

நீங்கள் எனக்கு மெயில் அனுப்பலாம்: apthevan@gmail.com

https://www.facebook.com/

போன் எண் 09833753808

இந்த கட்டுரை பண்புடன் குழுமத்தில், கூகிள் பிளஸில் நடந்த வாக்கு வாதங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை.

தேவன் said...

https://www.facebook.com/apthevan

Mokka Paradeshi said...

வெவ்வேறு இனங்கள் தமிழ் (இந்தியர்) சீன, மலாய் சேர்ந்து உருவாக்கிய சிங்கப்பூர் இன்று ஆசியாவின் புலியாக, அதிக மதிப்புடன்கூடிய பொருளாதார வளமிக்க நாடாக இருக்க முடியும்போது ஏன் நம்மால் முடியாது ?. வழிநடத்த நல்ல தலைவர்களும், திரு.பெருமாள் போன்று அறிவுசார்ந்த ,இன முன்னேற்றம்,அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மையும் ,எதிர்கால வளமான வாழ்வுக்கான சீரிய சிந்தனையும் கொண்ட தலைவர்களும் வாய்த்தார்களேயானால் எதுவும் சாத்தியமே !.நம்மைவிட மிக குறைந்த மக்கள் தொகைகொண்ட நாடுகள் முன்னேறும்போது நம்மால் ஏன் இயலாது ?. இயற்கையின் நியதியே, முதிர்ச்சி பெற்ற எந்தவொரு பொருளும் ,நிகழ்வும் தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் தன்மையை தானே பெற்றுக்கொள்ளும் ! அதனை தக்கவைத்துக்கொள்ள,தடுத்தாட்கொள்ள எந்தவொரு சக்தியாலும் முடியாது !. இது மனித சமுதாயத்திற்கும் பூரணமாக பொருந்தும் !.இதனை உணருவோமேயானால் தனி நாடும்,முன்னேற்றமும் சாத்தியமே !. உங்களின் திறனாய்வும் ,கேள்விகளுக்கான பதில்களும் உங்களின் தெளிவையும், உறுதியையும் பறைசாற்றுகிறது !. பாராட்டுகள் ! நான் உங்களின் கருத்துகளுக்கு ஆயிரம் சதம் உறுதியான ஆதரவையும் தெரிவிக்கின்றேன் !
உறுதியுடன்,
மொக்கை பரதேஷி

தேவன் said...

நன்றி திரு மொக்கை பரதேசி அவர்களே.

asokan said...

1.இதில் நாயுடுகள் தமிழர்கள் போல் உள்ளது. தங்களின் யார் தமிழர் என்பதில் நாயுடுகள் தமிழர் அல்லர் என்பது போல் உள்ளது.

2.தீண்டப்படாதோர் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

3.நேருவின் பண்ணாடைப் பொருளாதாரம் ஆதரிக்கபபட்டுள்ளது.

பெருமாள் தேவன் said...

நாயுடுகள் தெலுங்கர்களே, தமிழ்த் தேசியத்தில் தீண்டப்படாதோர் என்று ஒரு பிரிவினர் இருக்க மாட்டார்கள். இப்போதும் அப்படி யாரும் இல்லை என்றே நான் கருதுகிறேன். “நேருவின் பண்ணாடை பொருளாதாரமா”, புரியவில்லை.

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...