Friday, December 16, 2011

பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை 1

அபி அப்பா - நான் இப்போதும் சொல்கிறேன். இப்போதும் மத்தியில் ஒருதலைப்பட்சமாக மட்டுமே நிதி ஒதுக்குகின்றனர். இது என்ன எழவு என் நாட்டின் மின்சாரம் ஒட்டுமொத்தமும் நான் மத்தியிலே தாரைவார்க்க வேண்டும், ஆனால் இங்கே மின் தட்டுப்பாடு இருக்கும் போதுகூட இங்கே இருக்கும் முதல்வர் அங்கே கெஞ்சி கொண்டு இருக்க வேண்டும்? இங்கே கூடங்குளத்தில் தமிழன் உயிரை பணயம் வைத்து உண்டாக்கப்படும் மின்சாரம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அதாவது மத்திய அரசுக்கு மட்டும் சொந்தம். அதை அவர்கள் மத்திய தொகுப்பு என சொல்லி நாம் அள்ளிக்கொடுப்பதை அவர்கள் கிள்ளி கொடுப்பார்கள்? இது நியாயமா?

அதே போல ஒட்டு மொத்த இந்தியாவின் உணவு தேவைக்கு தஞ்சை நெல் தேவைப்படும். அதை கொடுக்க தமிழ்நாடு வேண்டும்? ஆனால் ரேசன் அரிசிக்கு மத்திய அரசில் இருந்து நாம் அள்ளிக்கொடுப்பதை அவர்கள் கிள்ளிக்கொடுப்பார்களா?

சரி அதற்கான தேவையான தண்ணீரை திறந்து விட சொல்ல மட்டும் மத்திய அரசுக்கு யோக்கிதை எங்கே போச்சு? அப்துல்லா சொன்னது போல சுப்ரீம் கோர்ட் ஆர்டரை குண்டி துடைக்க அவர்கள் பயன்படுத்துவர், ஆனால் நாம் மட்டும் நல்லவர்களாக தேசியம் பேசிக்கொண்டு இருக்க வேண்டுமா?

மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் போய் ஏன் என் முதல்வர் கெஞ்ச வேண்டும்? நான் முதல்வர் என சொன்னது ஜெயலலிதாவை தான். மன்னிக்கவும் திமுக தோழர்களே! மாநில சுயாட்சி பத்தி பேசும் போது அங்கே ஜெயாவும் என்பக்கமே.

இதே மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்னும் போக்குக்கு ஒரே உதாரணம் கலைஞர் சென்ற ஐந்து ஆண்டுகளில் இதே அலுவாலியாவிடம் இருந்து பெற்ற தொகை எத்தனை? இதோ ஜெயா மத்திய அரசுக்கு இனக்கமாக இல்லை என்பதால் சமீபத்தில் போய் அவர் பெற்று வந்த தொகை எத்தனை?

முன்பு கொடுத்தது போல கொடுக்க வேண்டும். அல்லது இப்போது ஜெயாவுக்கு சொன்ன அதே பதிலை கலைஞருக்கும் சொல்லி குறைத்து கொடுக்க வேண்டும் தானே? ஆக மத்திய அரசு தன் அதிகாரத்தை பிராந்திய கட்சிகளின் மீது திணிக்க திணிக்க மாநிலசுயாட்சி கோரிக்கை என்பது அதன் அடுத்த வர்ஷன் ஆன பிரிவினை வாதமாக வலுப்பெறும். வலுப்பெறும். இந்தியா உடைவதை தடுக்க இயலாது. வேறு வழியில்லை!
நன்றி- அபி அப்பா ஏதோ ஒரு குழுமத்திற்காக எழுதியது

No comments: