Saturday, February 18, 2012

என்னப்பா Facebook என்னதான் உங்க பிரச்சனை ?தராதரம் தெரியாம Facebookல ஆளு ஆளுக்கு பல்லு மேல நாக்கு போட்டு பேசுறாங்க . நீங்க எவ்வளவு "தங்கம்" என்று எனக்கு மட்டும் தான் தெரியும் . கொபசெ ,எம்பி கட்சி பதவி தந்து அழகு பார்த்தவருக்கு அவர் நோய்வாய் இருக்கும் காலத்திலே MGRராய் தூக்கி சொல்லி நீங்க முதல்வராக வேண்டி ராஜீவ் காந்தியுடன் நட்பு கொண்டு கடிதம் எழுதிய உங்க அரசியல்சாணக்கியம் எங்கே ? இந்த Facebook கத்து குட்டிகள் எங்கே? ! நீங்க சசிகலாவின் கணவர் நடராஜனை சென்னையில் தூக்குங்க ., எல்லா நாளும் யாராவது கைது என்று தான் நியூஸ் பத்திகிட்டு எறியணும் .. அமைதியா ரெஸ்ட் எடுங்க நான் இவங்களை ஒரு வழி பண்ணிட்டு வரேன் !

என்னப்பா Facebook என்னதான் உங்க பிரச்சனை ?

Facebook: சென்ற ஆட்சியில் கடைசி வருட நான்குமணிநேர மின்வெட்டுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள், இப்போது அங்கங்கே 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. முன்னாடிமாதிரியே கட்பண்ணிகிட்டா கூட பரவால்ல என கண்ணீர் வடிக்கின்றனர் !


சோ : வருஷம் 38 நட்பு பிரிச்சு போச்சே !! சசி வேற அங்க அழுவுது ..கரண்ட் என்ன ஷாக் என்ன ஞான தங்கமே அப்படின்னு கம்முனு உக்காது இருட்டினில் மேடம் தியானம் செய்யறாங்க .!! ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் !

Facebook : பி.பி.என், ஜி.எம்.ஆர் வாசவி ,சாமல்பட்டி ,மதுரை பவர் ஆகிய நான்கு மின்சார ஆலை நிறுவனங்கள் 737.6 மெகாவாட் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . நீதிமன்றத்தில் நிலுவை தொகை நாள் ஒன்றுக்கு ஒரு கோடி செலுத்தி விடுகிறேன் என்று பிச்சை கேட்கும் நிலையில் தமிழக அரசு இன்று உள்ளது . நீங்கள் கூடங்குளம் ஆரம்பித்தால் கூட தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சரம் தானே ?. இதற்கு பதிலாக ., நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவை தொகையை கட்டி விட்டால் 737.6 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் அல்லவா!

சோ : என்ன இப்படி சொல்லிடிங்க இந்த ஒன்பது மாதத்தில் நாங்க செஞ்ச சாதனையால் தான் 2010-2011யில் 1400 MW,2011-2012யில் 3316 MW மின்சாரம் , 2012-2013யில் 1222 MW மின்சாரம், 2013-2014யில் 1860 MW மின்சாரம் வர போகிறது தெரியுமா .?!
(இக்கும் தொண்டையை செருமி கொண்டு சிரிக்கிறார் )

Facebook : நீங்க மேல சொன்ன மொத்த மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் (2006~2011) தி முக ஆட்சியில் தொடங்கப்பட்டன . உங்கள் ஜெயா அரசு ஆட்சில்( 2001~2006) அன்றும் இந்த ஒன்பது மாதம் என்ன மின்சார திட்டம் தொடங்கப்பட்டது ?!


சோ :இக்கும் தொண்டையை செருமி கொண்டு யோசிக்கிறார் (ப்பிகலி பயலுக எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு வசமா மாட்டி விடுறாங்க )

Facebook : சரி Mr. சோ, இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லுங்க . 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. ஆனால் இலவச அரிசி , மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி ஃபேன் தர தேவை சுமார் 19200 கோடி ரூபாய்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றிய வரி முலம் வருமானம் 6000 கோடி ., பால் விலை , சாராய விற்பனை ., ஸ்போட் பைன் முலம் வருமானம் மேலும் 20000 கோடிக்கு மேல வரும் . நீங்கள் இலவசத்தை கொடுத்த மாதிரியும் தெரியில ., அதிக வருமான எங்க போச்சு ??


சோ : என்ன பேச்சு பேசுறிங்க நீங்க ..நம்ம ஓ பி எஸ் பன்னிர் செல்வம் கார் டயர் எல்லாம் விழுந்து கும்பிட்டு பார்த்து விட்டார் தெரியுமா ? அவராலே ஒன்னும் முடியலே ., கருணாநிதி கஜான காலி செய்த விட்டார்
( சிரித்து கொள்கிறார் ., இந்த கருணாநிதி பற்றி என்ன சொன்னாலும் படிக்காத மக்கள் என்ன ? Facebook மக்களும் நம்பி விடுவார்கள் )

Facebook : இந்த முல்லை ., அணு உலை ., மீனவர் கடல் சாவு ., ஈழம் ., விலைவாசி ., அரசு கேபிள் டெண்டர் ஊழல் ., தினம்தோறும் கொலை ., கொள்ளை ., ஆற்று மணல் ஊழல்...அடிக்கடி IAS IPS அதிகாரி ., மந்திரிகள் இடமாற்றம் ..,

சோ : ஹேய் ஸ்டாப் !! பாராளுமன்ற 40 தொகுதில் வெற்றிபெற வைத்து மேடத்தை பிரதமர் ஆக்கி விட்டால் என் பையன் தான் தமிழக முதமைச்சர் எல்லா பிரச்சனையும் பஞ்சாய் பறந்து விடும் . புரிஞ்சுதா!!(இக்கும் தொண்டையை செருமி கொண்டு சிரிக்கிறார் )

நன்றி - ச.வெ.ரா என்கிற வெங்கட் - முகநூலில்

No comments: