Saturday, March 31, 2012

என் இனத்தின் உரிமைக்காக, எந்த சக்தியுடனும் கூட்டு வைப்பேன், கிடைக்கும் ஆதரவையெல்லாம் ஒன்று சேர்ப்பேன்.

Friday, March 30, 2012

ஒரு சிறந்த அரசியல்வாதியை உருவாக்க இயலாத சமுதாயத்தால் பல வல்லுனுர்கள் உருவாக்கப்பட்டாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க முயலும் அமெரிக்கா..

துணைபோன இந்தியா..!
ஒரு சர்வதேச அரசியல் அலசல்


உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீதே நிலைத்திருந்த நேரம் அது .ஆம் ; ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த பிரேரணையை ஆதரிக்க உலக நாடுகள் தயாராக இருந்த வேளை இன்னுமொரே நாடு அந்த பிரேரணையை ஆதரித்தால் போதும் ...பிரேரணை வெற்றி பெற்று விடமுடியும் என்றநிலை அது.! இதில் வெற்றி பெற என்ன செய்வது ? என்று அமேரிக்கா தலையை பிசைந்து கொண்டிருந்த நேரம் அது..
***
ஆசிய ...மத்திய கிழக்கு ...பிராந்தியத்த்ல் இந்தியாவை மடக்கி விட்டால் இன்னும் சில நாடுகளை இந்த பிரேரணைக்கு எதிராய் திருப்பி விடுவதுடன் வேறு சில நாடுகளை நடுநிலை வகிக்கவும் செய்து விடலாம் என்று ..கூட்டி கழித்து கணக்குப் போட்டது அமெரிக்கா...உலக வல்லரசுகளும் எண்ணெய் வளம் வாய்ந்த சில நாடுகளும் எப்போதும் தமது பூகோள வர்த்தக ராணுவ நலனுக்கு ஏற்பவே சிந்தித்து செயல்படும் கால கட்டத்துக்கு உலகம் வந்துவிட்ட வேளை இது..ஆகவே இதில் இருந்து இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ..விலக்கு கிடைப்பது என்பதுமுயல் கொம்புதான்..இப்படித்தான் ஒரு காலத்தில் அமேரிக்கா வாய்பார்த்துக் கொண்டிருந்த வேளை 'பெர்ள்' துறைமுகத்தில் கொண்டுவந்து அணுகுண்டை கொட்டிவிட்டு சென்றது ஜப்பான்..அந்த அனுபவத்தை இலகுவில் மறந்து விட அமெரிக்காவால் ஒருபோதும் முடியாது..ஏன் தெரியுமா ? இன்றைய உலக ஒழுங்கில் பலமும் வளமும் நிறைந்த முதல் நாடு என்ற கௌரவம் அமெரிக்காவுக்கு இன்று உண்டு.. அதை இழக்க அது ஒருபோதும் தயாரில்லை..
***
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் ஏற்பட்ட உலக ஒழுங்கில் வந்ததுதான் அமெரிக்க _ சொவியதுனியன் என்னும் இரு அணிகளுக்கு இடையிலான உலக ஒழுங்கு..அதாவது இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் ஏற்பட்ட நிலை இது..அதில் இந்தியாவின் நிலை எப்போதும் சோவியத்தின் பக்கமே பெரும்பாலும் இருந்து வந்துள்ளது..ஆனால் அது படிப்படியாக குறைந்து இன்று மறைமுகமாக மட்டுமன்றி நேரடியாகவே அது அமெரிக்க பக்கம் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டு உள்ளது.ஜப்பான் ஜெர்மனி போன்ற வெறிக்குட்டி நாடுகளின் முதுகு எலும்பு முறிக்கப் பட்டபின்..மேற்ப்படி இரு நாடுகளும் ராணுவ பிராந்திய விஸ்தரிப்புகளையும் ..ராணுவ மயமாக்கல்களையும் முக்கியப் படுத்துவதற்கு பதிலாக பொருளாதார முன்னடைவுகளுக்கு வளாச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர தொடங்கிய அதேவேளை..அமெரிக்கா சோவியத் யூனியன் போன்ற நாடுகள் தொடர்ந்தும் ராணுவ பிராந்திய பலத்தை பல வழிகளிலும் நிலை நாட்ட முயன்று வந்தன..ஆனால் காலப்போக்கில் சொவியத்த் யூனியனின் உடைவாலும் பொருளாதார நசிவாலும் அதுவும் பலம் வாய்ந்த உலக ஒழுங்கிலிருந்து சிறிது சிறிதாக பின் வாங்கி கொண்டிருக்கும் போது அந்த இடத்தை நிரப்புவதுபோல் படிப்படியாக நுழைந்ததுதான் சீனா ஆகும்..சீனா என்னும் நாட்டின் அமைப்பை எடுத்து பார்த்தால் அது ஒரு அத்தி பழத்தைபோல் அழகாகவே தோற்றம் அளிக்கிறது..வெளித்தோற்றத்தில் மற்ற நாடுகளில் அக்கறை உள்ள நாடுபோல் நடந்து கொள்வதாக காட்டி கொண்டாலும்..அத்திப் பழத்துக்குள் இருக்கும் அசிங்கம்போலவே அதன் எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது..அதாவது மற்றைய நாடுகளின் அழிவில்தான் அதன் ஆக்கம் உண்டு என்ற கொள்கை அது..
***
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானுக்குப்பின் பொருளாதார வளத்தில் மட்டுமன்றி ராணுவ ..வளத்திலும் நவீன ராணுவ உற்பத்திகளை ராணுவ துறையில் மேம்படுத்துவதிலும் மட்டுமன்றி ஏற்றுமதி செய்வதிலும் மிகக் குறைந்த செலவில் சந்தை பொருளாதாரத்தை உலகமெங்கும் பரப்பி சீனாவினை ஒரு முடிசூடா நாடாக உலகில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அது முயல்கிறது..அன்று எதை செய்ய தவறவிட்டு ஜப்பான் என்னும் நாடு அதல பாதாளத்துக்கு சென்று மீண்டும் இன்று படிப்படியாக பொருளாதாரத்தில் மட்டும் பலம்பெற்று வருகிறதோ..அதே பாணியில் இல்லாமல் பொருளாதார_ ராணுவ பெரும்பலத்துடன் தனது நிலையை உலகில் முதன்மைப் படுத்தவே சீனா முயன்று வருகிறது .அதற்காக என்ன விலை கொடுக்கவும் அது தயாராகவே உள்ளது..சீனாவுக்கு அதன் போக்கில் மனித உரிமை பற்றியோ மனித நேயம் பற்றியோ ஒருபோதும் கவலை இல்லை..
அதன் ஒரு அங்கம்தான் இலங்கையுடன் அது இணைந்து கொண்டது..
***
சிலர் நினைக்கலாம் இலங்கையில் எண்ணை வளம் போன்ற வளங்கள் நிறைந்து கிடப்பதால்தான் சீனா இலங்கையை கைக்குள் போட்டு கொள்ள நினைக்கிறது என்று..அது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று..வடமேற்கு இலங்கையில் இருப்பதாக சொல்லபட்ட எண்ணெய்வளம் என்பது வர்த்தக ரீதியாக சீனாவுக்கு தூசிக்கு சமனானது..அதுமட்டுமன்றி..அந்த எண்ணெய் வளத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் அளவுக்கு அது போதுமானது அல்ல என்பது சீனாவுக்கு தெரியும்..அதாவது 'சுண்டங்காய் கால்பணம் சுமை கூலி முக்கால் பணம் 'என்பதுபோன்றது அது ...அதை விட்டால் வேறு என்ன வளம் இலங்கையில் சீனாவை கவர்ந்து இருக்க வேண்டும்...?மாணிக்கமா...? இரத்தினமா? தேயிலையா..? ரப்பரா? இல்லை உல்லாசபிரயாணத் துறையா.? இல்லை இவைகளில் எதுவுமே சீனாவை திருப்திப் படுத்த முடியாது ..திருப்திப் படுத்தவும் போவதில்லை..சீனாவின் முத்துமாலைக் கனவு என்பது வெறும் பொருளாதார அடிப்படையிலோ ராணுவ மேம்பாட்டிலோ ஆசியப் பிராந்திய வல்லாதிக்கத்தில் அடங்கியது மட்டும் அல்ல..அதன் உண்மை காரணம் என்ன என்பதுபற்றி சீனாவுக்கு மட்டும்தான் வெளிப்படை .....ஆனால். தோன்றும் புறக் காரணிகளை வைத்துப் பார்க்கும்போது..சீனாவுக்கு
மிக முக்கிய தேவையாக இன்று இருப்பது அதன் ராணுவ உற்பத்திக்கும் ஏற்று மதிக்கும் ..சந்தை பொருளாதார உற்பத்திகளுக்கும் தேவையான அளவு கடந்த மூலப் பொருள் தேவை ஆகும்..
இன்று சீனாவை பல பக்கங்களிலும் திரும்பி பார்க்க வைத்து இருப்பது அதுதான் அளவு கடந்த அதன் உற்பத்திகளையும் சந்தை வாய்ப்புகளையும் அது இலகுவில் உலக நாடுகளை கவர்ந்து வரும் அளவுக்கு அதற்கு இன்று மிக மிக தேவையானது அதற்கு உரிய இரும்பு நிலக்கரி செப்பு எரிவாயு எண்ணெய்வளம் போன்ற வை இவற்றை இலகுவில் தொடர்ச்சியாக வெகுகாலம் வரை அது பெறமுடியுமென்றால் உலகில் உள்ள பெரும்பாலான சந்தை வாய்ப்புகள் இனி சீனாவின் கைகளில்தான்..அதன் பெரும்பகுதியை சீனா ஏற்கனவே அடைந்து விட்டது மிகுதியை அடையத்தான் இன்று அது போராடி கொண்டு இருக்கிறது..இந்தியாவை பொறுத்தவரை இந்த துறையில் அது இன்று போட்டி போடும் நிலையில் இல்லை..அப்படி போட்டி போடுவது என்றால் இந்தியாவுக்கு உள்ள ஒரே பயம் சீனா இந்தியாவின் வட பகுதிகளில் சிலவற்றை மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பை நடாத்தி சீனா பிடித்தி விடலாம் என்பதுதான்..அது...
***
சீனா இன்று உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை இலகுவில் பெறும் நாடுகளை தன வசம் வளைத்துக் கொண்டு வருகின்றது என்பது உண்மைதான்..ஆப்கானிஸ்தானில் கொட்டி கிடக்கும் நிலக்கரி..எரிவாயு , எண்ணெய்வளம் என்பவற்றுடன் செப்பு, இரும்பு போன்றவையும் மியான்மரின் செப்பு நிலகரி இரும்பு போன்றவையும் இன்று சீனாவுக்கு மிக இலகுவில் கிடைக்கும் மூலப் பொருள்களாகும் ..இவற்றை . இலகுவில் கொண்டுவரும் பாதைகளை சீரமைக்கும்பணியில் கணிசமான வெற்றியையும் சீனா அடைந்து விட்டது..மற்றும் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பெறக்கூடிய மூல பொருட்களும் சீனாவுக்கே என்னும் நிலைக்கு இன்று வந்து விட்டன..அதுமட்டுமன்றி மேற்படி நாடுகளின் சந்தை வாய்ப்புகளையும் சீனாவே முன்னின்று செய்து கொடுத்து உள்ளது..உதாரணமாக பங்களாதேசின் அதிகளவான சணல்..உற்பத்திக்கு உலக சந்தையில் சீனா குறிப்பிட்ட அளவுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது அதுபோல்..அங்கிருந்து உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் ஆடைகளை அளவில் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்துகொடுத்து உள்ளது..அதற்கு பிராய சித்தமாக தனக்கு வேண்டிய மூல பொருட்களை பெற்று கொள்வதுடன் பங்களாதேசின் 'சிட்டகாங் ' துறைமுகத்தையும் அது பிரபலப்படுத்தியுள்ளது..
இந்த துறைமுகம் சீனாவை பொறுத்தவரை அதன் வர்த்தக ராணுவ உற்பத்திகளுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது..இதன் மூலம் சீனாவும் பயன் பெறுகிறது பங்களாதேசும் பெரும் பொருள் குவிக்கிறது..இந்தியா இதைபற்றி கவலை படாமல் வாயை பார்த்து கொண்டு இருக்கிறது.
***
அடுத்து ஆபிரிக்க ..மத்திய கிழக்கு போன்ற இடங்களில் இருக்கும் மூலப்பொருட்களையும் சீனாவே அள்ளிக்கொள்கிறது பெரும்பாலும்..கட்டார் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்வளம் இன்று சீனாவுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதால் அதன் உற்பத்திகளுக்கு அதன்மூலம் எந்த இடையூறு களும் வந்துவிட வாய்ப்பில்லை வந்துவிடாது இந்த வர்த்தக ராணுவ விஸ்தரிப்புக்கு ஏதுவாகவே அது தனது கால்களை இலங்கையிலும் ஊன்ற வேண்டிய முக்கிய தேவை உள்ளது ..ஏன் தெரியுமா...? இலங்கையில் கொட்டி கிடக்கும் பொருளாதார வளத்துக்காக அல்ல..அப்படி ஒரு வளமும் குறிப்பிடும்படி இலங்கையிலும் இல்லை ஆனால்..இலங்கையில் ஒரு முக்கிய இடத்தில்..குறிப்பாக மிக பிரபலம் அடையாத ஒரு துறைமுகத்தை ஆக்கிரமித்து விட்டால் அதன்மூலம் இந்திய பிராந்திய பகுதியில் காலூன்றி விட்டால்..ஆபிரிக்க மத்திய கிழக்கு முதல் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ...இலங்கையின் ஊடாக அதன் மூல பொருள்களை இலகுவில் கொண்டுசெல்லும் நோக்கத்துக்கு இது உறுதுணையாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை அதுமட்டுமன்றி காலப்போக்கில் மிக பெரிய ராணுவ வளத்துடன் கூடிய ஒரு வலயத்தையும் இதன் மூலம் நிறுவி இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்க முடியும்..அந்த அச்சுறுத்தல் அமெரிக்காவை அந்த பிராந்தியத்தில் காலூன்ற விடாமல் தடுக்க உதவகூடும்..என்று சீனா கருதுகிறது..உண்மையும் அதுதான்..அதற்கு தெரிந்தும் இடமளித்த நாடு இலங்கை..எப்படி இந்தியாவால் இதை பொறுத்து கொள்ள முடியும்?
***
இதன் மூலம் சீனா ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க முயல்கிறது அதில் சிறிது சிறிதாக வெற்றியும் பெற்று வருகிறது..உலக வரை படத்தை எடுத்து பாருங்கள் சீனாவின் வழங்கல் பாதையின் ரகசியம் அப்போதுதான் உங்களுக்கு புரியும் ஆபிரிக்காவில் இருந்து சவூதி அரேபியா..கட்டார். பாக்கிஸ்தான் பங்களாதேஷ், இலங்கை என்று தங்கு தடையின்றி ஒரு வழங்கல் பாதையை அது நிறுவியுள்ளது..ஆப்கானிஸ்தான் மியான்மர் போன்ற இடங்களின் மிக முக்கிய மூல பொருட்கள் அதற்கு தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.. இலங்கையின் அம்பாந்தோட்டை துறை முகத்தை
அது ஆக்கிரமித்து கொண்ட விதம் இந்தியாவுக்கு அப்போது புரியவில்லை ஆனால் படிப்படியாக அது புரிய ஆரமபித்தபோதுதான் இந்தியாவுக்கு உறைத்தது..பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் இல்னகையின் செப்படி வித்தையை புரிந்து கொண்டதன் விளைவை இலங்கை ஜெனீவாவில்அனுபவித்துவிட்டது..உண்மையிலே யே இந்தியா திடீர் என்று இலங்கைக்கு எதிராக முடிவு எடுக்க வில்லை திட்டமிட்டே எடுத்து உள்ளது ஆனால் கடைசி நேரம் வரை இலங்கை யை பழிவாங்கியது என்பதுதான் உண்மை..
***
இந்து சமுத்திர ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டுகொண்ட அமெரிக்கா ..அதை தடுப்பது எப்படி என்று இரவு பகலாக சிந்தித்து கொண்டிருந்தபோது அதற்கு கிடைத்த துருப்பு சீட்டுத்தான் இலங்கை விவகாரம்..நன்கு அதை பயன்ப்டுத்திக் கொண்டது..இந்தியாவை அது அந்த வலைக்குள் இழுத்தது ...சீனாவின் ஆக்கிரமிப்பை சுட்டிகாட்டியே என்பது இப்போது வெளிப்படையாக புரிகிறது எனவே இந்து சமுத்திர ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் வலுவாகக்காலூன்றிவிட்டால் அமெரிக்காவின் 'சோலிக்கு' அங்கே இடமில்லை என்பதற்காக அமெரிக்கா நகர்த்திய காய் நகர்த்தலின் ஒரு பகுதியில் விழுந்தது இந்தியா..என்பதுதான் உண்மையேதவிர ஈழத்தமிழரில் இரக்கபட்டு அல்ல..இலங்கை என்னும் அந்த நாடு குப்புற விழுந்தது உண்மை அதாவது இந்தியாவை நம்பி.. சீனாவின்..முத்துமாலை கனவுகளும் கூடத்தான்..அதில் அடங்கும்..இனி இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா எப்படியான நெருக்கடிகளை சீனாவுக்கும் அதன்மூலம் இலங்கைக்கும் கொடுக்க போகிறது ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..சுண்டைக்காய் இலங்கை இதில் இருந்து மீழுமா ? இல்லை இந்தியப் பெருங்கடலில் மூழ்குமா,..? என்பதை பாக்கலாம் ..எது எப்படி இந்தபோதும் ,,ஈழத்த் தமிழர்களின் வாழ்வில் இந்த வல்லரசுகளின் காய் நகர்வுகள் ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலாம் சிலவேளை மேலும் முன்பைவிட அழிவுகளையும் கூட ஏற்படுத்தலாம் 'wait and see' இந்த வல்லரசுகளின் தூண்டிலில் சில் மீன்கள் தறி கேட்டு ஓடி தமது உலக ஒழுங்கு என்னும் வலையில் இருந்து பித்துகொண்டு வெளியேறின என்பது மறுக்க முடியாத உண்மை..அதில் ஒன்றுதான் எப்போதும் அமெரிக்கா அணியில் சேரும் சவூதி அரேபியா,கட்டார்,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற அணிகள் அணிமாறி சீனாவுக்கு சார்பாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது ஆகும்.அதுபோல் சீன அணியில் இருந்த சில நாடுகள் இடம் மாறி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சார்பாக இலங்கைக்கு எதிராக வாக்களித்ததும் ஆகும் ..மொத்தத்தில் சொல்வதென்றால் கடந்து சென்ற மாபெரும் உலக நிகழ்வு உலக அரங்கில் புதிய உலக ஒழுங்கு ஒன்றை விரைவில் ஏற்படுத்தபோகிறது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எது எப்படி இருந்த போதும் இலங்கை தமிழர் வாழ்வு என்பது இந்த வல்லரசுகளின் காய் நகர்த்தல்களிலும் சுற்று மாற்றிலும்தான் இனி அடங்கி உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

நன்றி - முகநூலில் மு.வே.யோகேஸ்வரன்

Thursday, March 29, 2012

ஊழலே ஆட்சியானால்...

இந்திய ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் முறைகேடு என்பது 1948-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1948-ம் ஆண்டில், வழக்கமான நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அப்போது இங்கிலாந்தில் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கு ரூ. 80 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தத் தொகைக்கு ஏற்ப ஜீப்புகள் பெறப்படவில்லை என்று அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னை எழுப்பப்பட்டது.

இந்திரா காந்தி ஆட்சியில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கிய முறைகேடு, ராஜீவ் காந்தி அரசில் போஃபர்ஸ் ஊழல் பிரச்னை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக ஷூக்கள் வாங்கியது மற்றும் மரணமடைந்த வீரர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என்று ராணுவத்தில் தொடர்ந்து ஏதாவது ஓர் ஊழல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இப்போது, இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் ஒரு புகாரை எழுப்பியுள்ளார். தரம் குறைவான 600 வாகனங்களை வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியதும், இதுகுறித்து ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்குத் தெரிவித்தது மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் ஆகியன ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றம் அல்லோலகல்லோலப்படுகிறது.

இத்தகைய தரம் குறைவான வாகனங்கள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் 7,000 உள்ளன என்றும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைக்கான வசதிகள் இல்லாத நிறுவனத்தின் இந்த வாகனங்களுக்கு மிகமிக அதிக விலை தரப்பட்டுள்ளது என்றும் தளபதி வி.கே. சிங் கூறியிருக்கிறார். 600 வாகனங்களுக்கே ரூ. 14 கோடி லஞ்சம் தர முன்வந்தார்கள் என்றால், 7,000 வாகனங்களுக்கு நிச்சயம் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் பேரமாகப் பேசப்பட்டிருக்கும். இதைப் பற்றிய விசாரணைக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காதபோதிலும், அரசே முன்வந்து உத்தரவிட வேண்டும். ஆனால், தளபதி தம்மிடம் கூறியதை மக்களவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர் அந்தோனி, தவறுக்குத் தானே பொறுப்பு என்கிறார். அதே நேரத்தில் தளபதி எழுத்துமூலமாகப் புகார் தெரிவிக்காததால் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது அவரது வாதம். அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர் அமைச்சராக்கப்பட்டிருக்கும் அவலம், வேறென்ன?

2012-13-ம் ஆண்டில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க இருக்கின்றோம். 197 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறோம். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்நிலையில், இந்த விற்பனையில் எத்தகைய பேரம் முடிந்துள்ளது, நாம் பேசியிருக்கும் விலை சரியானதா, இல்லை நியாயமான விலையைக் காட்டிலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகங்கள் இப்போது முன்னெப்போதையும்விட கூடுதலாக எழுகின்றன.

இந்திய விமானப் படைக்கு வாங்கப்படவுள்ள 126 ரஃபேல் போர் விமானங்களின் விலை ரூ. 70,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2012-13 பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இதேபோன்று ஹெலிகாப்டர் கொள்முதலிலும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மீதித் தொகையை ஒவ்வோராண்டும் செலுத்தியாக வேண்டும்.

ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்து விற்பதுதான் சாத்தியம் என்ற நிலைமை வந்த பிறகு, எந்த நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு அல்லது லாபத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. கொடுக்கப்படும் லஞ்சத்தை விற்பனை விலையில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். இந்திய அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், கூடுதல் விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்தக் கூடுதல் விலை என்பது இந்திய மக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

2012-13 நிதிநிலை அறிக்கையில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 சதவீதம் அதிகமான தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சென்ற நிதியாண்டில் ரூ. 1,64,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 1,93,407 கோடி ஒதுக்கீடு! இதற்குக் காரணம் இந்த ஆண்டு நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட- குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியதிருக்கிறது. பேரம் தொடங்கிய நாளில் இருந்த டாலரின் மதிப்பைக் காட்டிலும் தற்போது டாலர் மதிப்பு கூடியுள்ளதால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 28,992 கோடியால் பெரும் நன்மை விளையாது என்றும் கருதப்படுகிறது.

இந்திய விமானப் படையில் பல விமானங்கள் மிகவும் பழைமையானவை என்பதும், அதிநவீன ரக போர் விமானங்கள் தேவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. அதே போன்று, கடற்படையில் நிறைய நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இருக்கிறது. இவற்றை நவீனப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இருக்கிறது. நிறைய நிதிஒதுக்கீடும், கொள்முதலும் அவசியமாக இருக்கின்றன.

இந்நிலையில், ஊழல் இல்லாத ராணுவத் தளவாடக் கொள்முதல் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கொள்ளை போவது இந்திய மக்களின் வரிப்பணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது அரசியல்வாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் தளவாடங்களை வாங்குவதில் முறைகேடு செய்கிறார்கள் என்பது தெரிந்தால், தனது உயிரைப் பணயம் வைத்துப் போர்முனையில் எதிரிகளை நேரிடும் சிப்பாயின் மனநிலை என்னவாக இருக்கும்? தரக்குறைவான தளவாடங்களைக் கையூட்டுப் பெற்று நமது தலையில் கட்டிப் போர்முனைக்கு அனுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் ஒரு போர் வீரனுக்கு ஏற்படுமானால், அவன் எப்படி எதிரிகளை தைரியமாகவும் வீரத்துடனும் எதிர்கொள்ளத் துணிவான்? எதில் எதிலெல்லாம் ஊழல் செய்வது என்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தளவாட ஊழல் என்பது தேசியத் தலைகுனிவு!


நன்றி - தினமணி
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=573956&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Wednesday, March 28, 2012

9 Kanyakumari fishermen who were doubted as LTTE freed by the effort of Tamil political activists

Mumbai, March 26;

Kanyakumari fishermen, who were detained at Mumbai in doubt of being LTTE cadres, were freed after intervention of Mumbai Tamil political activists.

9 fishermen of PARALOKMATA, a fishing boat from Kanyakumari, TN were intercepted by Yellow Gate police on March 8. They were detained by police as they did not produce any documents immediately and were doubted whether they can be cadres of annihilated LTTE.

The fishermen are from Eraviputhan Thurai, tiny village of Tamil Nadu and their names are Titus (35), Vijin(20), Carlos(62), Manoj(19), Soosaiyar(20), Nazaria (45), Christopher(60) and Peter(42). As the fishermen don’t know Hindi they could not communicate with police and it helped police to raise their doubts.

Relatives of the fishermen from Tamil Nadu called Tamil political activists Raja M. Udaiyar, Mumbai BJP secretary and Perumal A. Thevan, General Secretary of India Jana Nayaka Katchi, a Tamil party and informed about the detention. They met the fishermen and helped in the police enquiry and other legal procedures.

Meanwhile the police were started a fresh enquiry to verify the identity of the fishermen on 15th March and sent a police team to Tamil Nadu. It was revealed and established in the enquiry that the fishermen came to Mumbai to repair their starter and sold the fish they have at New Ferry Warf.

The fisheries department filed a case against the fishermen as the 1989 Fisheries Act of Maharashtra bans other state fishermen to sell fish at Mumbai. This case was heard by Anil Sawant, the district deputy collector and magistrate on 22th March and fine Rs. 1 lakh under the section 16/2 of the act.

Bharat Boite, the Police Inspector of Yellow Gate Police station enquired this case under supervision of the Senior Police Inspector Bhandurang Anant Doke. The fishermen were freed on Monday night as it was established the fishermen are innocent and paid the fine.நன்றி - மும்பை தினகரன்நன்றி - மும்பை தினத்தந்தி

Tuesday, March 27, 2012

மும்பை தமிழர்களின் முயற்சியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் விடுதலை

மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு –

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை தாலுகா, குளச்சல் அருகேயுள்ள தூத்தூர், இரவிபுத்தன் துறை கிராமத்தை சேர்ந்தவர் சாபு. இவரது மீன் பிடி படகு பரலோக மாதா கடந்த 8ம் தேதி டீசல் நிரப்ப மற்றும் பழுது பார்ப்பதற்காக மும்பை துறைமுகத்திற்கு வந்தது.

இந்த படகில் மீனவர்கள் டைட்டஸ் (35), விஜின் (20), கார்லோஸ் (62), மனோஜ் (19), சூசையார் (20), ரித்தீஸ் (19), நஸாரியா (45), கிறிஸ்டோபர் (60), பீட்டர் (42) ஆகிய 9 பேர் இருந்தனர். துறைமுகத்தில் ஸ்டார்ட்டரை பழுது நீக்கிக் கொண்டு, டீசல் நிரப்பிய பின்னர் இவர்கள் கிளம்பும்போது போலீசார் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது பரலோக மாதா படகு மும்பை துறைமுகத்தில் நுழைந்ததும் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்களுக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் முறையாக பதில் அளிக்க முடியவில்லை. படகின் பதிவு ஆவணங்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு காட்டப்படவில்லை. இதனால் அவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மும்பையில் பாவுக்கா தக்கா அருகே படகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த தகவல் கன்னியாகுமரி மீனவர்கள் சார்பாக சென்னையில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் இந்த தகவலை மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் மும்பை மாநகர செயலாளர் ராஜா எம். உடையார், மராட்டிய மாநில இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் ஆகியோருக்கு தெரிவித்தார்.

அதன் பின்னர் ராஜா உடையார், பெருமாள் அ. தேவன் ஆகியோர் இதுபற்றி எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ஏ. டோகேவிடம் பேசினர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி ராஜா உடையார், பெருமாள் அ. தேவன் ஆகியோர் எல்லோ கேட் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் போயிடேயை சந்தித்து பேசினர். அப்போது அவர் தாங்கள் மீன்வளத்துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்ததும் நிச்சயமாக இன்று அல்லது 14ம் தேதி காலை மீனவர்களை விடுவித்து விடுவதாகவும் கூறினார்.

அதன் பின் அவர்கள் படகில் இருந்த மீனவர்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினர். மீனவர்களை விடுவிப்பது தாமதமானால் எல்லோ கேட் காவல் நிலையம் முன்பாக ராஜா எம். உடையாரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் 15ம் தேதி மீண்டும் முழு விசாரணை செய்து அவர்கள் புலிகள் இல்லை மற்றும் படகில் சட்டவிரோத பொருட்களோ அல்லது ஆயுதமோ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே மீனவர்களை எப்போது விடுவிப்போம் என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று விசாரணை அதிகாரி சொன்னார்.

இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் அவர்கள் படகின் ஸ்டார்ட்டரை பழுது நீக்கியதும் அதற்கான ரசீது அவர்களிடம் இருந்ததும் தெரியவந்தது. படகின் டிரைவர் டைட்டஸ், அவரது தந்தை கார்லோஸ், மீனவர் விஜின் ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அந்த ஸ்டார்ட்டரை பழுது பார்த்த எலக்ட்ரிக்கல் மெக்கானிக் எல்லோகேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டு அவர் பழுது பார்த்தது உறுதி செய்யப்பட்டது. கொச்சி துறைமுகத்தில் படகு பதிவு செய்திருப்பதற்கான ஆவணமும் கிடைத்தது.

போலீசார் மோப்ப நாய் கொண்டு படகில் மீண்டும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் படகில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் சிக்கவில்லை. அதேவேளையில் படகில் இருந்த 4 பேருக்கு அடையாள அட்டை இல்லை என்பதும், படகில் இல்லாத ஆட்களுக்கு அடையாள அட்டை இருந்ததும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு அவர்களது அடையாள அட்டையின் பிரதி உடனடியாக ஈமெயிலில் வரவழைக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என்று தெரியவந்தது. இந்த மறுவிசாரணை நடைபெற்ற இரண்டு நாட்களும் பெருமாள் அ. தேவன் உடனிருந்து மீனவர்களின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்தும், ஆவணங்களை தமிழகத்திலிருந்து வரவழைத்தும் போலீசார் மற்றும் மீனவர்களுக்கு உதவி செய்தார்.இந்தநிலையில் அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மைதானா மற்றும் அவர்கள் மீது ஏதாவது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிய எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் நாராயன் ஆர். கட்கே, பாலாசாஹேப் டி. டோரே ஆகியோர் கடந்த 17ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தமிழகம் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தமிழகம் சென்று மீனவர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர்.

இதற்கிடையில் மஹாஷ்டிரா அரசின் மீன்வளத்துறை, வெளிமாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மும்பை பாவுக்கா தக்காவில் மீன் விற்பது குற்றம் என்று மீனவர்கள் மீது 1981ம் ஆண்டு மஹாராஷ்டிரா மீன்வள பாதுகாப்புச் சட்டம் பிரிவு 16/2-ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 22ம் தேதி மும்பை ஓல்ட் கஸ்டம் ஹவுஸில் மும்பை கலெக்டர் மற்றும் மாஜிஸ்திரேட் ஓக், துணை கலெக்டர் அனில் சாவந்த், தாசில்தார் லோண்டே, மீன் வளத்துறை அதிகாரி சவுக்குளே, ராஜா எம். உடையார், பெருமாள் அ. தேவன் முன்னிலையில் படகு உரிமையாளர் சாபுவின் தந்தையும் கன்னியாகுமரி மீனவருமான கார்லோஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மும்பை பாவுக்கா தக்காவில் மீன் விற்றதை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 24ம் தேதி மீனவர்களை விடுவிக்கும்படி உத்தரவு கொடுத்தனர். ராஜா எம். உடையார், பெருமாள் அ. தேவன் இருவரும் 26ம் தேதி போலீஸ் டிசிபி தானாஜி காட்கேயை சந்தித்து, விசாரணை அனைத்தும் முடிந்து விட்டதால் உடனே மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீனவர்களையும் படகையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டுரங்க அனந்த் டோகே மீனவர்களின் ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது விசாரணையை சரியான முறையிலும் மீனவர்களை மனிதாபிமானத்துடனும் நடத்தியதை பாராட்டும் வகையில் டேகோவிற்கு ராஜா உடையார் சால்வை அணிவித்தார். பெருமாள் அ. தேவன் இன்ஸ்பெக்டர் பரத் பொயிட்டேவுக்கு சால்வை அணிவித்தார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். அப்போது எம்.ஏ. உதயம் சுவாமி, செந்தில் குமார், எஸ்.கே. சுந்தர், துறை தங்கமணி, பொன்னம்பலம், ஆர். அறிவழகன், சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday, March 25, 2012

காலையில் அணு பேஸ்ட்டால்

காலையில் அணு பேஸ்ட்டால்
பல் துலக்கி
அணு தோசை சாப்பிட்டு
அவசர அவசரமாக
அணு உப்புமா
ரியாக்டர் பாக்ஸில் எடுத்துக் கொண்டு
அணு சக்தி பஸ்ஸில் ஏறி
அணு அணுவாய்
வேலை செய்து
மாலையில் அணுசக்தி
ஊக்க டானிக் குடித்து
அவசர அவசரமாக
வீட்டுக்கு வந்து
அணுவும் அவள் அக்காவும்
தொலைக்காட்சி தொடரைப் பார்த்து
அணு அணுவாய்
தூங்கி (செத்து) விழிக்கும் மனிதன்.

உபயம் - வீட்டுக்கு ஒரு அணு உலை வைப்போர் சங்கம்

Friday, March 23, 2012

தமிழ்த்தேசிய அரசியலமைப்புச் சட்டம் - சில கருத்துக்கள்

நட்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தேவன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!

கடந்த ஆண்டு திசம்பர்த் திங்களில் 'தமிழ்த்தேசிய அரசியலமைப்புச் சட்டம் - முன்னோட்டம்' என்ற பெயரில் நீங்கள் வரைந்த அற்புதமான கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பிக் கருத்து கேட்டிருந்தீர்கள்.

நான் அதை அப்பொழுது உடனே பார்க்கவில்லை. ஒரு திங்கள் கழித்துதான் பார்த்தேன். பார்த்தவுடன் உங்களுக்குப் பதில் அனுப்பினேன், தனிப்பட்ட வேலைகள் கொஞ்சம் இருப்பதால் தற்பொழுது உடனடியாக இது பற்றிக் கருத்து தெரிவிக்க இயலாது என்று. நீங்களும், நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாகப் பதில் அனுப்பினால் போதும் என்றீர்கள். இதோ இப்பொழுதுதான் என்னால் எழுத இயன்றது.

அதன் பிறகு கூட சில இணையப் பதிவுகளை நான் எழுதினேன் என்றாலும் அவை அப்பொழுதைய துரிதத் தேவை கருதித்தான். அப்படியானால் எனக்குப் பதிலளிப்பது உனக்குத் துரிதமானதாகத் தோன்றவில்லையா எனக் கேட்காதீர்கள். இதற்குத் துரிதமாகப் பதிலளிக்க நான் விரும்பவில்லை என்பதே உண்மை! மாறாக இது பொறுமையாக ஆராய்ந்து பதிலளிக்க வேண்டிய கட்டுரை என்று நான் கருதினேன். அதனால்தான் பதிலளிக்க இவ்......வளவு தாமதம்! அதற்காக என்னைப் பொறுத்தருள்க!!

இனி என் கருத்துகள்..........

இப்படி ஒரு கட்டுரை எழுதியதற்காக முதலில் என் உளமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்! ஏனெனில் தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது வெறும் மிகையுணர்வாளர்கள் சிலரின் உணர்ச்சி மேலீட்டால் அவ்வப்பொழுது எழுப்பப்படும் கோரிக்கை என்பதை மாற்றி அஃது ஒரு கருத்தாழம் மிக்க, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் முன்வைக்கப்படும் அறிவுப்பூர்வமான வாதம் என்பதை இப்படிப்பட்ட ஆழமான விரிவான பதிவுகள் மூலம்தான் நாம் நிரூபிக்க முடியும். அவ்வகையில் இப்படி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி!

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்ற தலைப்பின் கீழ் நீங்கள் எடுத்த எடுப்பிலேயே முற்காலத்தில் இந்தியா 56 தனிநாடுகளாக விளங்கியதைச் சுட்டிக் காட்டியது அருமை! இது மிகவும் தலையாய குறிப்பு (பாயின்ட்). நான் இப்படி ஒரு கட்டுரையை எழுதுவதாக இருந்தால் என்னுடைய முதல் குறிப்பும் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் என்னதான் வரலாற்றுப் பாடங்களில் பிள்ளைப் பருவத்திலேயே நாம் இதைப் படித்திருந்தாலும், சிறு குழந்தை முதலே பாரத நாடு பழம்பெரும் நாடு, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற சொற்களின் மூலம் இந்தியா என்பது நாடாகத் தோன்றிய காலம் முதலே ஒரே நாடாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நம் உள்ளங்களில் விதைத்து விட்டார்கள். அதனால்தான் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை இந்தியா செய்த பின்பும் நம் மக்கள் தனித்தமிழ்நாடு பற்றிப் பேசினால் அதை ஏதோ பெரிய நாட்டுத் துரோகம் போல் பார்க்கிறார்கள். நாம் பிறந்ததே இந்தியர்களாகத்தானே அப்புறம் எப்படி நாம் இன்று திடீரென இந்த ஒரு நிகழ்ச்சிக்காக இத்தனை ஆயிரம் ஆண்டுக்கால இந்திய அடையாளத்தைத் துறந்து விட முடியும் எனக் கேட்கிறார்கள். ஆகவே இவர்களிடம் தனித்தமிழ்நாடு குறித்துப் பேச்சைத் தொடங்கினாலே முதலில் நாம் தொன்று தொட்டே இந்தியர்களாக இல்லை; இந்தியர் எனும் அடையாளமே இடைக்காலத்தில் ஏற்பட்டதுதான்; அதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் இன அடையாளம்தான் நம்முடைய பன்னாட்டு அடையாளமாக இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட வேண்டியது இன்றியமையாதது! அதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டு அடித்திருக்கிறீர்கள்!!

ஆனால் விடுதலை பெற்றது முதலே இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது எனக் கூறி இந்தியாவின் அப்படிப்பட்ட செயல்களைப் பட்டியலிட்ட நீங்கள் ஓரிடத்தில் ஒரு சிறு தவறு செய்து விட்டீர்கள். அங்கே காவிரித் தண்ணீரை பெற்றுத் தர இயலாமை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இறுதிப் பகுதியிலும் ஓரிடத்தில் இதே போலத்தான் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தவறான சொல்லாட்சி. காவிரித் தண்ணீரை பெற்றுத் தராமை என்றுதான் இருக்க வேண்டும்.

அதே போல் தமிழ்த்தேசியம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவாக இருக்கும்? எனும் தலைப்பில் நீங்கள் எழுதும்பொழுது தனித்தமிழ்நாட்டுடனான இந்தியாவின், இந்திய மாநிலங்களின் உறவு பற்றி மிகவும் கவலைப்பட்டிருக்கிறீர்கள். அது தேவையில்லாதது. நீங்களே அந்தப் பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் இன்று உலகமே ஒரு சிற்றூராகச் சுருங்கி விட்டது. ஒவ்வொரு நாடும் பல்வேறு தேவைகளுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்துதான் இன்று இயங்க வேண்டியுள்ளது. அப்படியிருக்கும்பொழுது ஏற்கனவே 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நாடாக இணைந்திருந்து ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்த நாம் பிரிந்து போனாலும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இயங்குவோம் என்பதில் ஐயம் தேவையில்லை. கேரளத்தை நாம் தண்ணீருக்காக நம்பியிருக்கிறோம் எனில் அவர்கள் நம்மை உணவுப்பொருட்களுக்காக நம்பி இருக்கிறார்கள். இன்று ஒரே நாடாக இருக்கும்பொழுது வேண்டுமானால் அவர்கள் தண்ணீர் தராவிட்டாலும் நாட்டு ஒருமைப்பாட்டை முன்னிட்டு நாம் உணவுப்பொருளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். ஆனால் தனிநாடாகப் பிரிந்து விட்டால் நாம் அப்படி எதற்காகவும் எவனுக்காகவும் அஞ்ச வேண்டியதில்லை. எனவே நாம் தண்ணீர் தராவிட்டால் அவர்கள் நமக்கு உணவு தர மாட்டார்கள் எனும் அச்சம் அவர்களுக்கு ஏற்படும். அதனால் அண்டை மாநிலங்களிலிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீர் முதலான அனைத்துப் பொருட்களும் தனிநாடான பின் தங்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கவே செய்யும் எனபதை விட அப்பொழுதுதான் இப்பொழுதை விட நமக்கு வர வேண்டியவை சரியாக வந்து சேரும் என்பது உறுதி. இதை நான் சொல்லவில்லை, 'தென்றல்' திரைப்படத்தில் தமிழ்ப்பற்று மிக்க இயக்குநர் உயர்திரு.தங்கர்பச்சான் அவர்கள் கூறுகிறார்.

அடுத்து சாதி ஒழிப்பு பற்றி நீங்கள் கூறும்பொழுது, சாதிகளை ஒழிக்கத் தேவையில்லை. மாறாக சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்தால் போதும் என்றும், சாதி இல்லாமல் வாழ முன்வருபவரைச் சமுதாயத்தில் சிறப்புத் தகுதியுடையவராக ஏற்பதன் மூலம் சமநிலைச் சமுதாயம் -அதாவது சாதி இல்லாச் சமுதாயம்- உருவாக்க வழி காணலாம் என்றும் கூறியுள்ளீர்கள். இதை என்னால் ஒப்புக் கொள்ள... இல்லை இல்லை சகிக்க முடியவில்லை நண்பரே!

ஈழப் பிரச்சினை இன்றுவரை தீராமலிருப்பது முதற்கொண்டு தமிழ் இனத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஒற்றுமையின்மை. அந்த ஒற்றுமையின்மைக்குக் காரணமே நாம் சாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதுதான். சமயப் பிரச்சினை கூட இங்கு பெரிதில்லை ஐயா. சாதிப் பிரச்சினைதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. சமயச் சண்டைகளை விடச் சாதிச் சண்டைகளால் உடைந்த மண்டைகள்தாம் இங்கு மிகுதி! காலம் காலமாக, அந்தணர்கள் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு முன்பிருந்தே இங்கு சாதிகள் இருந்திருக்கின்றன எனவும் இன்றளவும் சாதிதான் இங்கு அடிப்படைச் சமுதாயக் கட்டமைப்பாக இருக்கிறது எனவும் நீங்கள் கூறுவது உண்மைதான். அதற்காக நம் கனவு நாடான தனித்தமிழ்நாட்டிலும் அது தொடர வேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்ன? சாதியை ஒழிப்பதில் இப்படிப்பட்ட மென்மைப் போக்கு உதவாது நண்பரே! ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சாதி அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களே, முற்காலத் தமிழ்நாட்டில் வேண்டுமானால் சாதிக் கட்டமைப்பு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இன்று சாதியின் அடிப்படைக் கட்டமைப்பே ஏற்றத்தாழ்வுதான். அஃது இல்லாத சாதிக் கட்டமைப்பை மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! ஒரு காலத்தில் பாலாக இருந்தது என்பதற்காக இன்றைக்கு அது நஞ்சாக மாறிய பின்னும் அதை அருந்த வேண்டுமா என்ன? அல்லது நஞ்சை நீக்கி விட்டு மீண்டும் அதைப் பாலாக மாற்றுவது என்பதுதான் நடக்கிற காரியமா? அப்படியே அது நடக்கிற காரியம் எனினும் அது தேவையா? புதியதோர் உலகம் செய்ய முடிவெடுத்த பின் பழைய உலகத்தின் சமுதாயக் கட்டமைப்புகள் எதற்கு? தூக்கித் எறிவோம்! புத்துலகின் சமூகக் கட்டமைப்பும் புதிதாகப் புதுமையானதாக அமையட்டுமே!

அப்படியானால் சாதியை எப்படி ஒழிக்க வேண்டும் என்கிறாய் எனக் கேட்கிறீர்களா? எனக்கு அதைப் பற்றி முன்பு எதுவும் யோசனை இருந்ததாக நினைவில்லை. ஆனால் நீங்கள் சாதி இல்லாமல் வாழ முன்வருபவரைச் சமுதாயத்தில் சிறப்புத் தகுதியுடையவராக ஏற்பதன் மூலம் சாதி இல்லாச் சமுதாயம் உருவாக்கலாம் என்றீர்களே? அதையே மாற்றிச் சிந்தித்தால்...? அதாவது சாதியை முற்றிலும் தடை செய்து, அனைவரும் ஒரே இனம் -தமிழினம்- என அறிவித்துச், சாதி எனும் பேச்சை எடுத்தாலே கடுமையான தண்டனை வழங்கினால்...? சிந்தித்துப் பாருங்கள்! சாதியே இருக்காது இல்லையா?

இவை எல்லாவற்றையும் விட உங்கள் கட்டுரையில் எனக்கு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது உங்கள் மொழிக் கொள்கைதான்! அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படும் என்பது வரை சரி. ஆனால் அதன் பின் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும், பிற இந்திய மொழிகள் விருப்பப் பாடமாகவும் இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது!

இப்படித்தான் எல்லா இனத்தவருக்கும் சம வாய்ப்பு, சமத் தகுதி, சமமான பிரதிநிதித்துவம் என்று கூறி இந்தியா ஒரே நாடாக ஆக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?... நீங்கள் அறியாததா? அப்படியொரு நிலை நாளைக்குத் தனித்தமிழ்நாட்டிலும் ஏற்பட வேண்டுமா? நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது தமிழருக்கான ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கா அல்லது இன்னோர் இந்தியாவை உருவாக்குவதற்கா? வேண்டா நண்பரே வேண்டா! எல்லாரையும் திருப்திப்படுத்த முயன்று கடைசியில் யாருக்குமே தனிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கும் இன்னோர் இந்தியா வேண்டவே வேண்டா!!

என்னைப் பொறுத்தவரை, தனித்தமிழ்நாடு என்பது முழுக்க முழுக்கத் தமிழை மட்டுமே கொண்டதாகத்தான் இருக்க வேண்டும்! அதாவது இரசியா போல, சீனம் போல. அப்படி இருந்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள், புதுப்புனைவுகள், முன்னேற்ற வழிமுறைகள் போன்றவையெல்லாம் நமக்கு எப்படித் தெரிய வரும்? நாம் எப்படி முன்னேற முடியும் என நினைக்காதீர்கள்! ஏன் இரசியாவும் சீனமும் முன்னேறாமலா போய்விட்டன?

இன்று உலக மொழிகளில் எந்த முக்கிய நூல் வெளிவந்தாலும் அது மிகச் சில நாட்களுக்குள் சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. இதையும் நான் சொல்லவில்லை, அண்மையில் சீனத்துக்குச் சென்று வந்த சென்னைப் பலகலைக்கழகத் துணைவேந்தர் திரு.ஜி.திருவாசகம் அவர்கள் கூறுகிறார். தாய்மொழி மட்டுமே தெரிந்த மக்கள் வாழும் இரசியா, சீனம் போன்ற நாடுகளில், உலகில் எந்தப் புதிய கண்டுபிடிப்பு வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அது புதுப்புனையப்பட்டு விடுகிறது. அது மட்டுமா? இன்று சந்தையில் நீங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிப் பாருங்கள், அது ஒரு மார்க்கர் பென்னாக இருந்தாலும் சரி, பென் டிரைவாக இருந்தாலும் சரி எல்லாப் பொருட்களிலும் முதன்மையாக ஐந்து மொழிகளில் அவற்றுக்கான பயனர் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன், இரசியம், சீனம் ஆகியவை. இதற்குக் காரணம் இந்த நாடுகள் அவர்களின் தாய்மொழிக்கு முதன்மை தருவதால் இல்லை. தாய்மொழி தவிர வேறெதையும் அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான்.

ஆம் நண்பரே! நீங்கள் உங்கள் மக்களுக்கு உலகின் எல்லா மொழிகளையும் கற்பித்துக் கொண்டிருந்தால் உலகம் எந்தச் சேவையையும் உங்கள் மொழியில் வழங்க முன்வராது. நீங்கள்தான் உலகின் எல்லா மொழிகளிலிருந்தும் புதியவற்றையெல்லாம் உங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். மாறாக நீங்கள் உங்கள் மொழியைத் தவிர வேறெந்த மொழியும் உங்கள் நாட்டுக்குள் வராமல் வைத்திருந்தால் உலகமே உங்கள் மொழியில் உங்களைத் தொடர்பு கொள்ள முன்வரும். உங்களுக்காக உலகமே மொழிபெயர்க்கும்! எது நமக்கு இலாபம்? சிந்தியுங்கள்!

அடுத்ததாக, படையமைப்பு பற்றிக் கூறும்பொழுது, தனித்தமிழ்நாட்டின் படை தாக்குதல் படையாக இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் படையாக இருக்கும் என்கிறீர்கள். படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் படைகளெல்லாம் தாக்குதல் படையாக இருக்கும்பொழுது நம் படை மட்டும் வெறும் பாதுகாப்பை உறுதி செய்யும் படையாக இருத்தல் இயலுமா என்பது என் ஐயம். "என் ஆயுதம் எது என்பதை நான் தீர்மானிப்பதில்லை, என் எதிரிதான்" எனும் புகழ்பெற்ற பொன்மொழி இங்கு நாம் நினைவுகூரத்தக்கது!

தேர்தல் முறை பற்றிச் சொல்லும்பொழுது மின்னணுத் தேர்தல் முறை பற்றி விளக்கியுள்ளீர்கள். அந்த அளவுக்கு அறிவியல் இன்று வளர்ந்திருக்கிறதா என்பது என் முதல் கேள்வி. மேலும் நாடாளுமன்றத்தில், தலைமையமைச்சர் அளித்த வாக்கையே தவறாகக் காட்டும் இந்த மின்னணுப் பொறிகளை நம்பி ஒரு நாட்டின் தேர்தலை நடத்தலாமா என்பது என் இரண்டாவது கேள்வி! பார்க்க: இந்தியாவின் மின்னணு வாக்குப்பொறிகள் பற்றி ஓர் அதிர்ச்சிக் கட்டுரை (http://nerudal.com/nerudal.26767.html - கீழே இணைக்கப்பட்டுள்ளது).


அடுத்ததாக, ஆட்சி முறை பற்றிக் கூறும் இடத்தில் தலைமையமைச்சராகப் போட்டியிட்டுத் தோற்றவர் துணைத் தலைமையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சியினரோடும் அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்!! இதனால் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்துப், போட்டி உளப்பான்மை ஒழிந்து அரசியலாளர்கள் ஒருவரை மற்றவர் எதிரியாக நினைப்பது மாறும் எனும் நல்லெண்ணத்தில் நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி நடக்கும் என எனக்குத் தோன்றவில்லை நண்பரே!

நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் இடத்தில், நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய பதவியில் இருக்கும் தலைமையமைச்சர் தன்னிடம் தோற்றவரைத் தனக்கு அடுத்த பதவியில் வைத்துக் கொள்வது என்பது தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகாதா? ஏனெனில் வென்றவருக்குப் பெருந்தன்மை வரலாம். ஆனால் தோற்றவருக்கு எப்பொழுதும் அந்த வலி இருக்கும். அவர் இவருடன் ஒழுங்காக ஒத்துழைக்க மாட்டார். எப்படியாவது அவர் பெயரைக் கெடுத்து அடுத்த தேர்தலில் தலைமையமைச்சர் பதவியைக் கைப்பற்ற முடியுமா என்றுதான் பார்ப்பார்.

எதிர்க்கட்சியினரோடு அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்வதிலும் இதே சிக்கல்தான். தலைமையமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிக்கு அடுத்த பதவி அமைச்சர் பதவி. அரசின் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களே இவர்கள்தான். இப்பேர்ப்பட்ட பதவியை எதிர்க்கட்சியினருக்கும் கொடுத்தால் அவர்கள் அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவார்களா? இன்றைய ஆட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டி மீண்டும் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அரசியலாளர்களின் அடிப்படை வியூகமே. அதை விட்டுக் கொடுக்கும் வகையில் ஆட்சியின் நல்ல திட்டங்கள் நல்லபடியே மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இன்றைய ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படுவதற்குத் தாங்களே காரணமாக இருக்க விரும்புவார்களா? மாட்டார்கள் நண்பரே! மாறாக அமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொண்டு ஆட்சியின் திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேர விடாமல் தடுத்து ஆளுங்கட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கத்தான் பார்ப்பார்கள்!

அப்படியே ஒருவேளை எதிர்க்கட்சியினரின் அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் என்னதான் இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் தலைவர் அவர்களுடைய கட்சியின் தலைவர்தான் இல்லையா? எனவே அவர்கள் அரசாங்கத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதா அல்லது தங்கள் தலைவரின் ஆணைகளைச் செயல்படுத்துவதா எனக் குழம்பிப் போவார்கள். இப்படித் தேர்தலில் வென்ற, தோற்ற இரு கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிப்பதால் இரண்டு கட்சிகளுக்குமிடையில் அதிகாரப் போட்டி ஏற்படும். நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படும். ஒரே ஆள் ஒரே சமயத்தில் பத்து விதமான சமையல் செய்யலாம். ஆனால் ஒரே சமையலை ஒரே நேரத்தில் பத்து பேர் சேர்ந்து செய்தால் அதை வாயிலேயே வைக்க முடியாது!

இதே தலைப்பில் இன்னோரிடத்தில் நீங்கள் நீதித்துறையின் ஆணையைச் செயல்படுத்தாவிட்டால் நாடாளுமன்றம் கலைய வேண்டும் எனக் கூறியிருக்கிறீர்கள். நியாயமான சிந்தனை! ஆனால் அப்படித் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் முன்வருவார்களா? எனவே தன் ஆணையைக் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் அந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க நீதித்துறைக்கு அதிகாரம் இருக்க வேண்டும்!

மேலும் தலைமையமைச்சர் முதற்கொண்டு மக்கள் பிரதிநிதி யாராக இருந்தாலும், அவர் பதவியில் தொடர அவருக்கு வாக்களித்தவர்களில் பாதிப் பேர் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர் தானாகப் பதவி விலக வேண்டும் எனவும் இல்லாவிட்டால் விலக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இஃது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். இதற்கு மாறாக ஒரு புதிய யோசனையை நான் சொல்ல விரும்புகிறேன்.

நான் பரிந்துரைக்கும் சட்டத்தின்படி, அரசுப் பதவியிலுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால், அவர் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படித் தானாக விலகாவிடில் மேலதிகாரத்தில் உள்ளவர் அவரை விலக்க வேண்டும். இவை இரண்டிலொன்று குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நடக்காவிட்டால் நீதித்துறை தானாக முன்வந்து அவரைப் பதவி விலக்க வேண்டும். நீதித்துறையும் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் தன் கடமையைச் செய்யத் தவறினால் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து அன்னாரைப் பதவி விலக்க வலியுறுத்தலாம். அப்படிப் பொதுமக்களில் யாராவது கோரினால் அன்னார் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது உண்மையாகவும் இருந்தால் நீதிமன்றம் கண்டிப்பாக அவரைப் பதவி விலக்கியாக வேண்டும். ஒருவேளை பொதுமக்களும் தன் கடமையிலிருந்து தவறிப் பின்னாளில் அன்னார் மீது குற்றச்சாட்டு நிரூபணமானால் குற்றம் செய்த நாள் முதல் நிரூபணம் ஆன நாள் வரையான அவரது பதவிக்காலம் செல்லாது. அந்தக் காலக்கட்டத்தில் அவர் இட்ட எந்த ஆணையும் எந்த அரசு நடவடிக்கையும் செல்லாது. தவிர பதவி விலகத் தவறியதற்கான ஒரு தனித் தண்டனையை அவரும், அவரைப் பதவி விலக்கத் தவறியதற்கான தண்டனையை அவருக்கு மேலதிகாரியும், அந்த வட்டாரத்துக்குட்பட்ட நீதிபதியும் அனுபவிக்க வேண்டும்! இஃது உச்சநீதிமன்றத்துக்கும் பொருந்தும்!! ஆம்! நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும் நீதித்துறை உட்பட!!!

இதே போல் தனிநபர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் குற்றம் நிரூபணமாகும் வரை அவரைச் சிறையில் அடைக்க முடியாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் காவல்துறை அவரை நேரில் அணுகியோ காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோ விசாரிக்கட்டும். ஆனால் நாட்கணக்கில் விசாரணைக் கைதி எனும் பெயரில் அவரைச் சிறையில் அடைத்து வைக்க முடியக் கூடாது. ஆனால் குற்றம் நிரூபணம் ஆகி விட்டால் குற்றமிழைத்த நாள் முதல் நிரூபணம் நாள் வரையான காலக்கட்டத்துக்கும் சேர்த்து அவர் சிறையில் இருக்க வேண்டும். இதனால் 'விசாரணைக் கைதி' எனும் பெயரில் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழிக்க வேண்டிய அவல நிலை யாருக்கும் நேராமல் தடுக்கலாம். ஆனால் இஃது அரசியல், சமூக, பொருளாதாரச் செல்வாக்குடையவர்களுக்குப் பொருந்தாது. காரணம், அவர்கள் வெளியில் வந்தால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சான்றுகளைக் கலைத்து விடக்கூடும் என்பதால். தவிரவும் பெரிய மனிதர்கள் எந்தக் காலத்தில் நீண்ட நாட்களுக்கு விசாரணைக் கைதியாக இருந்தார்கள்? பெரும் வழக்கறிஞர்களின் துணையோடு எப்படியும் அவர்கள் பிணையில் வெளிவந்து விட முடியும். ஆனால் சாமானியர்கள்தாம் எப்பொழுதும் விசாரணைக் கைதியாக வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். இந்தச் சட்டம் அந்தக் கொடுமையைத் தடுக்கும்.

அடுத்ததாக, வாய்தா மேல் வாய்தாவும், மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடும் போட்டுத் தண்டனையை முடிந்த வரை தள்ளிப் போடுவது பெரிய மனிதர்களுக்கு இன்று வழக்கமாகி விட்டது. அதைத் தடுக்கும் வகையில், குற்றம் புரிந்தவர் வழக்கு முடியும் வரை தேர்தலில் நிற்கவோ, அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கவோ முடியாமல் தடை செய்ய வேண்டும். மேலும் அரசு ஏலங்களை எடுப்பது அரசு டெண்டர்களை எடுப்பது என வணிகரீதியான எந்தத் தொடர்பையும் அவர்கள் அரசுடன் வைத்துக் கொள்ள முடியாமலும் -குறைந்தது அரசு விழாக்களில் கலந்து கொள்ளவும், மக்கள் பிரதிநிதிகள், உயர்நிலை அரசு ஊழியர்கள் போன்றோரைத் தொடர்பு கொள்ளவும் கூட முடியாமல்- தடை செய்ய வேண்டும். பெரிய மனிதர்களின் இரு கண்களான அரசியல், வணிகம் ஆகிய இரண்டையும் வழக்கு முடியும் வரை இப்படிக் கட்டி விட்டால் "எப்பொழுதடா வழக்கு முடியும்? பேசாமல் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்" என அவர்களே எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். வழக்கைத் தாமதப்படுத்த மாட்டார்கள்.

அடுத்து, பொதுமக்களுக்கான அரசியல் ஈடுபாடு என்ற பத்தியில் நீங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனப் பல விதங்களில் வலியுறுத்தியிருக்கிறீர்கள். வாக்களிக்காதவர்களுக்கு ஒரு கடுமையான தண்டனையையும் அறிவித்திருக்கிறீர்கள். இவற்றை நான் பெரிதும் வரவேற்கிறேன்! ஒருவர் வாக்களிக்கத் தவறுவதால் சமுதாயத்திலும் தனிநபர் வாழ்விலும் ஏற்படும் கடுமையான விளைவுகளை நானும் நன்கறிவேன்.

ஆனால் வாக்களிக்காமையைத் தடுக்க இப்படிக் கடுமையான சட்டதிட்டங்களை வகுத்த நீங்கள், மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்களைச் சரிப்படுத்த எதையும் அறிவிக்காதது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

படித்தவர்கள்தாம் பெரும்பாலும் வாக்களிக்காமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அரசியலாளர்கள் பலர் நல்லவர்களாக இல்லை; நல்ல அரசியலாளர்களாக இருக்கும் சிலரும் மக்களை ஆளும் அளவுக்கு வல்லவர்களாக இல்லை என்னும் எண்ணம்தான். இஃது உண்மையும் கூட என்பது என் கருத்து. உங்களை நானறிந்த வகையில் இதுதான் உங்கள் கருத்தும் கூட என நம்புகிறேன்!

ஆனால் இதையே காரணமாக வைத்துப் பெரும்பாலோர் தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை (மிக... மிக... மிகத்) தாமதமாக உணர்ந்துதான் இந்திய நடுவணரசு அண்மையில் 49~ஓ என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை நாம் நம் தனித்தமிழ்நாட்டிலும் கொண்டு வருதல் வேண்டும்.

ஆனால் 'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என வாக்களிக்க இந்தியா கொணர்ந்த 49~ஓ சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கின்றன வழக்கம் போல. அவற்றை நாம் நம் நாட்டில் தவிர்க்க வேண்டும்.

முதலாவதாக, 49~ஓ-வுக்கு வாக்களிப்பதற்கென இங்கே தனிப் படிவம் கொடுக்கப்படுகிறது. இதனால் நேரம் வீணாவதோடு இந்த வாக்கைச் செலுத்துபவர்களைக் கட்சிக் குண்டர்கள் தனியாக அடையாளம் கண்டு கொண்டு உதைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இதை நாம் மாற்றி 'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என வாக்களிப்பதற்கென்று ஒரு தனிச் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

இரண்டாவதாக, எத்தனை பேர் 49~ஓ-வுக்கு வாக்களித்தாலும் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை எனும் நடைமுறை இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் நாம் அந்த வாக்குகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் விதமாக இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும். அஃது எப்படியெனில்,'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என்பதே பெரும்பாலோர் வாக்காக இருந்தால் அந்தத் தேர்தலில் யாருமே வெல்லவில்லை என அறிவித்து அடுத்த தேர்தல் காலம் வரும் வரை குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நிற்க! குடியரசுத்தலைவர் பதவி பற்றி இக்கட்டுரையில் நீங்கள் எங்கும் பேசவில்லை. இதிலிருந்து அந்தப் பதவியை ஒழித்து விட நீங்கள் விரும்புவது புரிகிறது. அது வெறும் அலங்காரப் பதவிதான். பிரித்தானியச் சட்டத்தில், அந்த நாட்டு அரசியல் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அந்தப் பதவியை அந்நாட்டுச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்துக்காக இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த மேதைகள் (!) தாங்களும் அப்படியே தத்தெடுத்துக் கொண்டார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் தனித்தமிழ்நாட்டுச் சட்டத்தில் அந்தப் பதவிக்கு இப்படியொரு இன்றியமையாத் தேவை இருப்பதால் நாம் அந்தப் பதவியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் அஃது அரசியலாளர்களுக்கு மரண அடியாக இருக்கும்! அரசியலாளர்கள் இன்று இவ்வளவு துணிச்சலாக ஊழல் செய்யக் காரணமே எப்படியிருந்தாலும் இந்த மக்கள் நம்மில் ஒருவருக்குத்தான் வாக்களித்தாக வேண்டும் என்னும் மிதப்புதான். இன்றைய ஆட்சியாளன் 1000 கோடிக்கு ஊழல் புரிகிறான் என அவனுடைய எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் அவன் 2000 கோடிக்கு ஊழல் புரிகிறான். இதனால் மக்கள் இந்த 2000 கோடி ஊழலாளனை விட அந்த 1000 கோடி ஊழலாளனே மேல் என மீண்டும் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவனோ இந்த முறை இரண்டாமவனையும் விஞ்சுகிறான். மக்கள் உடனே அடுத்த தேர்தலில் இரண்டாமவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவனோ இந்த முறையும் அடுத்தவனை விஞ்............ போதும்!

இஃது அப்படியே நச்சுச் சுழலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யார் நல்லவர் எனப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது போய் இருப்பதில் யார் தேவலாம் எனப் பார்த்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுதைய மக்கள் இருக்கிறார்கள். இதை நிறுத்த இப்படியொரு சட்டம் இன்றியமையாதது. இதனால் எவ்வளவு தவறு செய்தாலும் இருப்பவர்களுள் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்னும் கட்டாயம் மக்களுக்கு இருந்தது போய் யாருமே சரியில்லாவிட்டால் அனைவரையுமே புறக்கணித்து மக்கள் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள் என்னும் அச்சம் அரசியலாளர்களுக்கு ஏற்படும். எதிர்க்கட்சியினனை விடத் தான் தேவலாம் எனக் காட்டிக் கொண்டாலே தேர்தலில் வெல்ல முடியும் என்பது மாறி எதிர்க்கட்சியினனை விடத் தான் சிறந்தவன் எனக் காட்டிக் கொண்டால்தான் வெல்ல இயலும் எனும் கட்டாயம் அரசியலாளர்களுக்கு ஏற்படும். இதனால் அரசியலாளர்களுக்கிடையிலான போட்டி இப்பொழுதைப் போல் எதிர்மறையானதாக இல்லாமல் நேர்மறையானதாக மாறும்!

அடுத்ததாக, அரசியலாளர்களுக்கான தகுதிகள் பட்டியலில் தேர்தலில் போட்டியிடுபவர் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உடையவராக இருக்க வேண்டும் என்கிறீர்கள். இஃது ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஏன் பணக்காரராக இருந்தால் அவர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மேலும் பணம் ஈட்ட விரும்ப மாட்டார் என நினைக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஊழலை எப்பொழுதோ நிறுத்தியிருக்க வேண்டுமே? சரி, அவர்களாவது தொடக்கத்தில் ஏழ்மையில் வாடியவர்கள் எனலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாகக் கோடிகளில் புரளும் நேரு குடும்பத்தினர் மட்டும் என்ன ஒழுங்கு? இராஜீவ் காந்தி போபர்சு ஊழல் புரியவில்லையா அல்லது இப்பொழுது சோனியா காந்திதான் ஊழல் பணத்தில் கும்மாளமடிக்கவில்லையா?

அதே நேரம் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தும், கோடிக்கணக்காகச் செல்வம் ஈட்டக் கூடிய பதவிகளை வகித்தும் கடைசி வரை நேர்மையாகத் திகழ்ந்த எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். காமராசர், கக்கன் என அந்தக் காலத்து மனிதர்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை முன்னாள் தலைமையமைச்சர் வாஜ்பாய், தோழரென அனைவராலும் அன்பொழுக அழைக்கப்படும் தலைவர் நல்லக்கண்ணு என இப்பொழுதும் அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அதே பட்டியலின் தொடக்கத்தில் நீங்களே குறிப்பிட்டுள்ளது போல் பொதுவாழ்வுக்கு வருவதற்கான முதன்மைத் தகுதிகள் நேர்மையும் சேவை உளப்பாங்கும்தான்.

அரசியல் கட்சிக்கான தகுதிகளில் போதிய வாக்குகள் பெறாத கட்சிகள், கட்சி எனும் தகுதியை இழக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லவர், கெட்டவர் யாரெனப் பார்த்து வாக்களிக்கும் அளவுக்குக் கூட விழிப்புணர்வில்லாத இந்நாட்டில் 'இந்த' மக்களின் ஆதரவைப் பெறாத ஒரே காரணத்துக்காக ஒரு கட்சியின் அங்கீகாரத்தைப் பறிக்கலாமா?

இஃது ஏற்கனவே நாம் விவாதித்ததுதான்! "தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் மக்களிடம் போதுமான ஆதரவு பெறாதிருப்பதே பெரும் குறை" என்றீர்கள் நீங்கள். அப்பொழுதும் நான் இதே போல் அதை மறுத்தேன். அது பெரும் விவாதமாகத் 'தோழமை'யில் நீண்டது. ஆனால் இறுதியில் நீங்கள் எனக்குப் புரிய வைத்தீர்கள். நானும் ஒப்புக் கொண்டேன்.

அப்படியிருக்க இப்பொழுது நான் மீண்டும் அதே போன்ற உங்களுடைய இன்னொரு கருத்தை மறுக்கிறேன் எனில் காரணம், அதற்கும் இதற்கும் ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. அப்பொழுது நீங்கள் போதுமான மக்களாதரவு பெறாதிருப்பது தலைவர்களுக்கான தகுதிக் குறைவு என்றுதான் கூறினீர்கள். எனவே மற்ற எல்லாத் தகுதிகளும் உடைய தலைவர் ஒருவர் இந்த ஒரு குறையை மட்டும் சரிப்படுத்திக் கொண்டால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம் என்ற உட்பொருள் அதில் பொதிந்திருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் மக்களாதரவு எனும் ஒரு தகுதி இல்லையென்றாலே அந்தக் கட்சியின் அங்கீகாரத்தைப் பறிக்க வேண்டும் என்கிறீர்கள். இது, நேர்மை, உண்மை, சேவை உளப்பான்மை, நிர்வாகத் திறமை, தமிழ்ப்பற்று, மக்கள் நேசம் என மற்ற எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் மக்களாதரவு எனும் ஒரு தகுதி இல்லாவிட்டால் அந்தக் கட்சி தேவையில்லை எனக் கூறுவதாக உள்ளது. அதனால்தான் இதை நான் மறுக்கிறேன். இது நியாயமா நண்பரே?

இந்தப் பட்டியலில் இரண்டாவதாக அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று இருக்கிறது. பணக்காரர்கள் வருமான வரியிலிருந்து தப்பிப்பதற்காகப் பேருக்கு ஓர் அரசியல் கட்சியோ அறக்கட்டளையோ தொடங்குவது இன்று வாடிக்கையாகி விட்டது. இதை முறியடிப்பதற்காகத்தான் நீங்கள் இந்த யோசனையை முன்வைக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து உலகிலேயே மிகப்பெரிய செலவு வைக்கும் விவகாரம் தேர்தல் பிரச்சாரம். அதை எதிர்கொள்ளக் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் தேவைப்படுகிறது. வருமான வரி விதித்தால் அவர்களால் எப்படி அந்தத் தேர்தல் செலவைச் சமாளிக்க முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஒருவேளை கொஞ்சமாக வரி விதித்தாலும் இப்படியொரு பிரம்மாண்டச் செலவு இருக்கும்பொழுது அவர்கள் அந்தக் கொஞ்சம் வரியையும் ஒழுங்காகக் கட்டுவார்களா என்பதும் கேள்விக்குறியே.

அது மட்டுமில்லை; பொதுவாகப் பலரும் சேவை உளப்பான்மையோடுதான் தொடக்கத்தில் அரசியலுக்குள் அடி வைக்கிறார்கள். அவர்கள் கெட்டுப் போவதே இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவால்தான். தேர்தல் என வரும்பொழுது திடீரெனக் கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் முறைகேடான வழிகளிலோ முறைகேடான மனிதர்களிடமிருந்தோ பணத்தைத் திரட்டி அதைச் சமாளிக்கிறார்கள் புதிதாக அரசியலுக்கு வருபவர்கள். இதனால் மக்கள் சேவைக்கென வந்தவர்கள் இந்தக் கட்டத்தில் பணத்தை முதலீடு செய்த வணிகர்களாக மாறுகிறார்கள். முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டி ஊழல் புரிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். வணிகர்களாக இருந்தவர்கள் இந்தக் கட்டத்தில் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இப்படி, அரசியலாளர்களை ஊழலாளர்களாக மாற்றுவதே இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவுதான். எனவே இதைக் குறைத்து விட்டாலே கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தைச் சேர்க்க மாட்டார்கள். அப்படிச் சேர்ந்திருந்தாலும் அதை முறைப்படி மக்களுக்குச் செலவு செய்ய முன்வருவார்கள், அப்படி மக்கள் பணத்தை அவர்கள் முறையாக மக்களுக்குச் செலவு செய்தாலே கட்சிக்கு வருவாய் வரி விதிக்க வேண்டிய தேவை இருக்காது. இதைக் குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று பலரும் பல்லாண்டுகளாகக் கூறிக் கொண்டு (மட்டுமே) இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது தேர்தலின்பொழுது தேர்தல் ஆணையமே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுபவர்கள் பற்றிய விவரங்களை முழுமையான ஒரு கையேடாகத் தயாரித்து பதிவு அஞ்சல் வழியே வீட்டுக்கு வீடு விநியோகித்து விட வேண்டும். இதற்காகும் செலவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அஞ்சல் சேவை நாட்டின் மூலை முடுக்கு வரை பரவியிருப்பதால் இஃது ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் கண்டிப்பாகச் சென்று சேரும் என்பது உறுதி. எனவே இதைத் தவிர வேறெந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும் கட்சிகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை செய்ய வேண்டும். வேண்டுமானால் தங்கள் கட்சி / வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதனால் மக்கள் அடையக் கூடிய நன்மைகள் பற்றிய விவரங்களைக் கட்சிகள் இந்தக் கையேட்டுடனே இணைத்து அனுப்ப அனுமதிக்கலாம்.

இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை மிச்சப்படுத்தலாம். பணம் படைத்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனும் கட்டாயம் கட்சிகளுக்கு இல்லாமல் போகும். மக்களுக்குச் சேவை புரியும் மனம் இருக்கும் யார் வேண்டுமானாலும் -ஏழைகள் கூடத்- தேர்தலில் நிற்கலாம் எனும் நிலை வரும். முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவாவது ஊழல் செய்தாக வேண்டும் எனும் கட்டாயம் ஒழியும். சுருங்கச் சொன்னால், நல்லவர்கள் அரசியலுக்கு வர, அரசியலுக்கு வந்த நல்லவர்கள் நல்லவர்களாகவே நீடிக்க இந்தச் சட்டம் உதவும்.

இதையும் மீறி, தேர்தல் செலவும்தான் இல்லையே என இதையே ஒரு இலாபமாகக் கருதி மக்கள் பணத்துக்கு விருப்பப்பட்டோ தங்கள் பணத்தை வருமான வரியிலிருந்து மிச்சம் பிடிக்க விரும்பியோ யாராவது கட்சி தொடங்க முயன்றால் கண்டிப்பாகக் கட்சிகளுக்கும் வருமான வரி விதிக்க வேண்டியதுதான்!

எல்லாற்றுக்கும் இறுதியாக, ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறுதியாக நான் மறுப்பு தெரிவிக்க விரும்புவது உங்கள் கடைசித் தலைப்புக்குதான்.

ஆம்! இந்தியா என்னதான் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் இறங்கி வருவதாயிருந்தாலும் சரி, தனித்தமிழ்நாடு கோரிக்கையைக் கைவிடுவது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொல்குடிகள் நாம். இதில் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அதாவது ஏறத்தாழ 10,500 ஆண்டுகளாகத் தனிநாடாகக் கோலோச்சியவர்கள் நாம். ஒரு தனிநாடாக இயங்குவதற்குண்டான அனைத்துத் தகுதிகளும் உரிமைகளும் நமக்கு இருக்கின்றன. அப்படி இருந்தும் நாம் இப்படி இந்தியா எனும் ஒரு நாட்டின் பகுதியாகச் சுருக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதற்குக் காரணம், இந்த -அதாவது இந்திய- நாட்டு மக்கள் மீதான சகோதர வாஞ்சை! விடுதலை பெற்றுக் கொடுத்தவரிடமிருந்த நன்றி!

ஆனால் எப்பொழுது அதுவே நம் பன்னாட்டுப் பிரதிநிதித்துவத்தைப் பாதித்து நம் இனத்தின் அழிவுக்கே காரணமாகி விட்டதோ இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. இனிமேல் இந்தியா நமக்கு எவ்.........வளவுதான் நன்மைகள் செய்வதாக இருந்தாலும், எவ்.........வளவுதான் உரிமைகள் தருவதாக இருந்தாலும் நாம் இனி இந்நாட்டின் பகுதியாக இருத்தல் நல்லதில்லை! ஏனெனில் இப்பொழுது வேண்டுமானால் நாம் தனிநாடாகப் பிரிந்து போகாமலிருப்பதற்காக இந்தியா நீங்கள் கோரும் இந்தக் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றலாம். ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின்போ அல்லது சில நூற்றாண்டுகளுக்குப் பின்போ மீண்டும் இந்தியா இதே போன்ற துரோகத்தைச் செய்தால் நாம் என்ன செய்வது? அப்பொழுது மறுபடியும் தனித்தமிழ்நாடு, அது, இது எனத் தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டியதுதான். எதற்கு இந்த ரிஸ்க்? அடுத்தவர் ஆட்சியில் வாழ்வது என்றைக்கு இருந்தாலும் ஆபத்துதான். வேண்டா! நம்மை நாமே ஆள்வோம்! நாமார்க்கும் குடியல்லோம்!!!

என்னடா இவன்? மதித்துக் கருத்துக் கேட்டால் எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறானே என நினைக்காதீர்கள்! என் கருத்தைச் சொன்னேன் அவ்வளவுதான். அதிலும் மேலே இருப்பவற்றில் சில கருத்துகள்தாம் எதிர்க் கருத்துகள்; பெரும்பாலானவை தங்கள் கருத்தை வரவேற்று அவற்றை மேலும் கூர் தீட்டத் தெரிவிக்கப்பட்ட யோசனைகள்தாம். நீங்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இவை தவிர உங்கள் கட்டுரையின் மற்ற பரிந்துரைகள் எல்லாமும் எனக்குப் பிடித்தமானவையே! குறிப்பாக, அந்தணர்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடு எனக்குப் பிடித்திருந்தது. அவர்கள் பற்றிய என்னுடைய நிலைப்பாடும் அதுதான். அவர்கள் நம் தனித்தமிழ்நாட்டை ஏற்று நம்மோடு வாழ வருவதாயிருந்தால் வரட்டும். அல்லது நம்முடைய இந்த அன்புள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒருங்கிணைந்த இந்தியாதான் தங்கள் நாடு என நினைப்பதாயிருந்தால் அங்கேயே போகட்டும். ஆனால் ஒன்று; அவர்களுக்காகத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே நேரம், இந்தியா தமிழர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாத் தேசிய இனங்களுக்கும் அவரவர் நாட்டைத் திருப்பிக் கொடுப்பது என வந்தால், அப்பொழுது சமசுக்கிருததுக்கென்றும் ஒரு தனி நாடு கொடுக்க வேண்டும். பிறப்பால் அந்தணர்களாகவும் ஓரளவாவது சமசுகிருதம் தெரிந்தவர்களாகவும் இருப்பவர்கள் அந்த நாட்டில் வாழத் தகுதியுடையவர்கள் எனலாம். அப்படியொரு நாடு ஒதுக்கும்பொழுது அதற்கு எல்லா மாநிலங்களும் கொஞ்சம் மண் வழங்குதல் வேண்டும். தமிழ்நாடு உட்பட!

இதே போல் உங்கள் மின் கொள்கை அபாரம்! காவல்துறை வடிவமைப்பு பற்றிய உங்கள் பரிந்துரை மிகவும் புதுமை! பொய் சொல்லும் அரசியலாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் உங்கள் கருத்து அருமை! அதே போல் பொய் சொல்லும் குடிமக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் வெகுநாளைய கனவுச் சட்டம்! முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர வணிகம், முதலாளிகளின் சமூகப் பொறுப்பை அதிகரித்தல் போன்ற உங்கள் பொருளாதாரக் கொள்கைகளையும் வரவேற்கிறேன்.

என்னை மதித்துக் கருத்துக் கேட்டமைக்கு மிக்க நன்றி!

வணக்கம்!

என்றும் நட்புடன்:
--இ.பு.ஞானப்பிரகாசன்


நாள்: 22.03.2012.

Monday, March 19, 2012

மும்பையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களுடன் சந்திப்பு

மும்பையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை ராஜா எம். உடையார், பெருமாள் அ. தேவன்(இடது ஓரம்) ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படம்.

Sunday, March 18, 2012

குமரி மீனவர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்த மும்பை போலீசார் தமிழகம் சென்றனர்

மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் மீனவர் அடையாளத்தை உறுதிப்படுத்த மும்பை போலீசார் கன்னியா குமரி புறப்பட்டுச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை தாலுகா, குளச்சல் அருகேயுள்ள தூத்தூர், இரவிபுத்தன் துறை கிராமத்தை சேர்ந்தவர் சாபு. இவரது மீன் பிடி படகு பரலோக மாதா கடந்த 8ம் தேதி பழுது பார்ப்பதற்காக மும்பை துறைமுகத்திற்கு வந்தது. இந்த படகில் மீனவர்கள் டைட்டஸ் (35), விஜின் (20), கார்லோஸ் (62), மனோஜ் (19), சூசையார் (20), ரித்தீஸ் (19), நஸாரியா (45), கிறிஸ்டோபர் (60), பீட்டர் (42) ஆகிய 9 பேர் உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இவர்கள் படகுடன் மும்பை பாவுக்கா தக்காவில் மும்பை எல்லோ கேட் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை துறைமுகத்தில் நுழைந்ததும் படகை பதிவு செய்யாதது, சோதனையின்போது படகில் வேறு படகின் பதிவு ஆவணத்தின் பிரதி கிடைத்தது இவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. படகில் இருந்த அனைவருக்கும் இந்தி தெரியாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இது பற்றி அறிந்ததும் மும்பை மற்றும் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பிரமுகர்கள் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த விவகாரத்தில் கடற்கரை பாதுகாப்புத்துறை, கடல் பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இவர்களை விடுவிப்பது தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் 13, 14 தேதிகளில் அவர்களை விடுவித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் 15ம் தேதி மீண்டும் முழு விசாரணை செய்து அவர்கள் புலிகள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே மீனவர்களை எப்போது விடுவிப்போம் என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று விசாரணை அதிகாரி சொன்னார்.

இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் அவர்கள் படகின் ஸ்டார்ட்டரை பழுது நீக்கியதும் அதற்கான ரசீது அவர்களிடம் இருந்ததும் தெரியவந்தது. படகின் டிரைவர் டைட்டஸ், அவரது தந்தை கார்லோஸ், மீனவர் விஜின் ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அந்த ஸ்டார்ட்டரை பழுது பார்த்த எலக்ட்ரிக்கல் மெக்கானிக் எல்லோகேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டு அவர் பழுது பார்த்தது உறுதி செய்யப்பட்டது. கொச்சி துறைமுகத்தில் படகு பதிவு செய்திருப்பதற்கான ஆவணமும் கிடைத்தது.

போலீசார் மோப்ப நாய் கொண்டு படகில் மீண்டும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் படகில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் சிக்கவில்லை. அதேவேளையில் படகில் இருந்த 4 பேருக்கு அடையாள அட்டை இல்லை என்பதும், படகில் இல்லாத ஆட்களுக்கு அடையாள அட்டை இருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு அவர்களது அடையாள அட்டையின் பிரதி உடனடியாக ஈமெயிலில் வரவழைக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என்று தெரியவந்தது. இந்த மறுவிசாரணை நடைபெற்ற இரண்டு நாட்களும் இந்திய ஜனநாயக கட்சியின் மராட்டிய மாநில பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் உடனிருந்து மீனவர்களின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்தும், ஆவணங்களை தமிழகத்திலிருந்து வரவழைத்தும் போலீசார் மற்றும் மீனவர்களுக்கு உதவி செய்தார்.

இந்தநிலையில் அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மைதானா மற்றும் அவர்கள் மீது ஏதாவது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிய எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் நாராயன் ஆர். கட்கே, பாலாசாஹேப் டி. டோரே ஆகியோர் நேற்று (சனி) கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தமிழகம் புறப்பட்டுச் சென்றனர். இந்த மீனவர்களை விடுவிக்கும் பணியில் பெருமாள் அ. தேவன், பா.ஜ.க. மும்பை செயலாளர் ராஜா எம். உடையார் ஆகியோர் போலீஸ் விசாரணை மற்றும் தமிழகத்தில் உள்ள மீனவர் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெற உதவினர். இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி எம்பியான ஹெலன் டேவிட்சன் அடிக்கடி போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணையை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ஏ. டோகேயின் தலைமையில் இன்ஸ்பெக்டர் பரத் பொயிட்டே இது குறித்து விசாரணை செய்து வருகிறார். ஆவணங்களை சரிபார்த்து முடிந்த உடனே மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என்று பொயிட்டே தெரிவித்தார்.

மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விவரத்தை கடல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு மும்பை பிரமுகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மற்ற பிரமுகர்களும் மீனவர்களுக்கு உதவ முன் வந்தனர். இதில் மும்பை மாநகராட்சி நகர்மன்ற உறுப்பினர் கேப்டன் ஆர். தமிழ் செல்வன், ராஜேந்திரன், தம்பி செல்வா, நா. காமராஜ், அய்யர், அ. கணேசன், ரமேஷ், ஜான் கென்னடி, அறிவழகன், எம்.ஏ. உதயம் சுவாமி, நாடோடித் தமிழன், மதி, ஆகியோர் அடங்குவர்.
நன்றி - மும்பை தினத்தந்தி

நன்றி - மும்பை தினகரன்

Wednesday, March 14, 2012

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மும்பையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு -
கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை தாலுகா, குளச்சல் அருகேயுள்ள தூத்தூர், ரவிபுத்தன் துறை கிராமத்தை சேர்ந்தவர் சாபு. இவரது மீன் பிடி படகு பரலோக மாதா கடந்த 8ம் தேதி டீசல் நிரப்ப மற்றும் பழுது பார்ப்பதற்காக மும்பை துறைமுகத்திற்கு வந்தது.

இந்த படகில் மீனவர்கள் டைட்டஸ் (35), விஜின் (20), கார்லோஸ் (62), மனோஜ் (19), சூசையார் (20), ரித்தீஸ் (19), நஸாரியா (45), கிறிஸ்டோபர் (60), பீட்டர் (42) ஆகிய 9 பேர் இருந்தனர். துறைமுகத்தில் டீசல் நிரப்பிய இவர்கள் கிளம்பும்போது போலீசார் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது பரலோக மாதா படகு மும்பை துறைமுகத்தில் நுழைந்ததும் பதிவு செய்வது அவசியம். ஆனால் இந்த படகை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் முறையாக பதில் அளிக்க முடியவில்லை. படகின் பதிவு ஆவணங்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு காட்டப்படவில்லை. இதனால் அவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மும்பையில் பாவுக்கா தக்கா அருகே படகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ஆவணங்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்தனர். போலீசாரை தொடர்ந்து கடற்கரை பாதுகாப்பு போலீசார், கடல் பாதுகாப்பு படையினரும் விசாரணை செய்தனர். இதனால் மீனவர்களை விடுவிப்பது தேவையில்லாமல் தாமாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த தகவல் கன்னியாகுமரி மீனவர்கள் சார்பாக சென்னையில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் இந்த தகவலை மும்பையில் நாடோடித் தமிழன், பாஜக மும்பை மாநகர செயலாளர் ராஜா எம். உடையார், மராட்டிய மாநில இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் ஆகியோருக்கு தெரிவித்தார்.

அதன் பின்னர் ராஜா உடையார், பெருமாள் அ. தேவன் ஆகியோர் இதுபற்றி திங்கள் கிழமை யெல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ஏ. டோகேவிடம் பேசினர். அப்போது டோகே, இது பற்றி கடற்கரை பாதுகாப்பு போலீசார் விசாரித்து வருவதாகவும், மஹாராஷ்டிரா மீனவர் கூட்டமைப்பை சேர்ந்த ஸ்ரீராஜ் விசாரனை செய்து என்ஓசி கொடுக்க உள்ளனர், அது கிடைத்ததும் மீனவர் விடுவிக்கப்படுவர் என்று சொன்னார்.

இந்த நிலையில் நேற்று (செவ்வாய்) ராஜா உடையார், பெருமாள் அ. தேவன், 202 வார்டு ரே ரோடு பகுதி நவநிர்மாண் துணைத்தலைவர் மதி காளிமுத்து ஆகியோர் யெல்லோ கேட் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் போயிடேயை சந்தித்து பேசினர்.

அப்போது அவர் தாங்கள் கடற்கரை பாதுகாப்பு படையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்ததும் நிச்சயமாக இன்று அல்லது நாளைக் (புதன்) காலை மீனவர்களை விடுவித்து விடுவதாகவும் கூறினார்.

அதன் பின் ராஜா உடையார், பெருமாள் அ. தேவன், மதி காளிமுத்து ஆகியோர் படகில் இருந்த மீனவர்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினர். மீனவர்களை விடுவிப்பது தாமதமானால் இன்று யெல்லோ கேட் காவல் நிலையம் முன்பாக ராஜா எம். உடையாரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
நன்றி - தினத்தந்தி மும்பை


நன்றி - தினகரன் மும்பைhttp://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=22520

நன்றி - தமிழ்க் குறிஞ்சி

Tuesday, March 13, 2012

அரசியலில் அக்கறையில்லாத பொதுமக்கள் மோசமான மக்களாட்சி ஏற்பட காரணமாகின்றனர்.

Saturday, March 10, 2012

உங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

நன்றி - ஏடிஎஸ் ராஜா, நதிக்கரை
http://www.nathikarai.in/2011/02/protect-your-password.html

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
நன்றி - முகநூலில் கரிகாலன்

Thursday, March 8, 2012

மும்பையில் பாரிவேந்தருக்கு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது
பிப்ரவரி 26 அன்று காலை 10.30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் நிறுவனர் டா. பாரிவேந்தர், மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜன், பார்கவ குல முன்னேற்ற சங்க (பாகுமுச) உயர்மட்டக் குழு தலைவர் வாசுதேவன், பார்கவ குல முன்னேற்ற சங்கத் தலைவர் மா. சுந்தரராஜ, பொருளாளர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) கொள்கை பரப்புச் செயலாளர் சிவ சங்கரன், ஐஜேகேயின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் செந்தில், கதிரவன், சேலம் லக்ஷ்மண், கே. தெய்வராஜ், எம்.ஆர். சிவானந்தம், ஆர். செந்தில் ஆகியோருக்கு மராட்டிய மாநில ஐஜேகே, பாரி நற்பணி மன்றம், பாகுமுச மற்றும் மும்பையில் உள்ள பொது அமைப்புகளின் சார்பில் ராஜா உடையார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மராட்டிய மாநில பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவரான ராஜா உடையார் தலைமையிலான குழுவில் மராட்டிய மாநில ஐஜேகேவின் தலைவர் எம். கோவிந்தசாமி, பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன், மும்பை மாநகர தலைவர் எஸ். ஜான் கென்னடி, பாரி நற்பணிமன்ற தலைவர் உதயம் எம்.ஏ. சுவாமி, டி. கிருஷ்ணன் மற்றும் பாகுமுசவின் நிர்வாகிகள் எஸ்.கே. சுந்தர், துரை தங்கமணி, செல்லப்பன் உடையார், ராஜகோபால், அறிவழகன், அண்ணாதுரை, டி.ஆர். முருகன், ரஜினி, ஆர். முருகன், டி. கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர், செந்தில் குமார், பொன்னம்பலம், மணிமங்கலம் முதலானோர் இருந்தனர்.

அங்கிருந்து தாராவி சென்ற பாரி வேந்தர், ஜி.ராஜன், மற்றும் தயாகத்திலிருந்து வந்த தலைவர்கள் தராவி 90 அடிச் சாலையில் உள்ள காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி மற்றும் இளநிலை கல்லூரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரி வேந்தர் வந்தது அறிந்ததும் அப்பகுதியில் இருந்த தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு பாரி வேந்தர், ஜி.ராஜன், மற்றும் தயாகத்திலிருந்து வந்த தலைவர்கள் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பள்ளி நிர்வாகிகள் மற்றும் தெக்ஷிண மாறநாடார் சங்க நிர்வாகிகள், செயலாளர் எம்.எஸ். காசிலிங்கம் நாடார் பாரிவேந்தரை அலுவலகத்தில் வைத்து வரவேற்பு அளித்து சால்வைகள் அணிவித்து கௌரவித்தனர். அவர்கள் வேந்தர், ஜி. ராஜன் மற்றும் இதர தலைவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மேற்படி இளநிலை கல்லூரியில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் தரப்பில் தலா 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என்று பாரிவேந்தர் அறிவித்தார்.

மாலை 4 மணியளவில் மும்பை சயான் பகுதி பாவுதாஜி ரோட்டில் உள்ள டாக்டர் பாரத ரத்னா எம்எஸ் சுப்புலக்ஷ்மி அரங்கில் பாரிவேந்தருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் சார்பில் செயற்கை கோள் அனுப்பிய சாதனை படைத்ததற்காக மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றம், பாகுமுச, ஐஜேகே தரப்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்னதாக அரங்கிற்கு வந்த பாரி வேந்தருக்கு மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றம், பாகுமுச, ஐஜேகேவின் மகளிரணி சார்பாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் வருவாய்த் துறை கமிஷனர் கவிதா நாகராஜன், மும்பை கல்யாண மாலை ராஜஸ்ரீ நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

விழாவில் பாரிவேந்தர் சத்ரபதி சிவாஜி, டாக்டர் அம்பேத்கர், என்.பி.வி. ராமசாமி உடையார், சௌந்திரராஜ மூப்பனார், அருணாச்சலம் உடையார், பி.டி. பன்னீர் செல்வம் ஆகிய தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். விழாவிற்கு வந்த அனைவரையும் உதயம் எம்.ஏ. சுவாமி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்களாகிய கேப்டன் ஆர். தமிழ்ச் செல்வன் பா.ஜ.க, லலிதா அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேசிய அவர்கள் பாரி வேந்தரின் உழைப்பு, முன்னேற்றம், சாதனை குறித்து பாராட்டி பேசினர். விழாவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பாராட்டைப் பெற்ற நேஷனல் எஜூகேஷன் சொசைட்டியின் நிறுவனர், தலைவரான டாக்டர் ஆர். வரதராஜன் கலந்து கொண்டு பாரிவேந்தரை பாராட்டி பேசினார். பி.ஏ.ஐ.எஸ் பள்ளியின் தலைவரான கே.வி.அசோக்குமார், காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி, இளநிலை கல்லூரியின் நிர்வாகியான எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், காந்தி நினைவு உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகியான எஸ்.ஜே.எஸ். செல்லத்துரை மற்றும் மும்பை மாநக செயலாளர் அனில் டாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டு பாரிவேந்தரை பாராட்டிப் பேசினர்.

வாழ்த்துரை வழங்கிய தமிழ் லெமுரியா பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சு. குமணராசன், உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர், இதில் பாரி வேந்தரின் சாதனை ஒரு தமிழரின் தலையாய சாதனையாக இருப்பதாகவும், இது தமிழருக்கு கிடைத்த வெற்றியாகவும் பாராட்டி பேசினார். மராட்டிய மாநில முன்னாள் செயலாளரான ரங்கநாதன் ஐஏஎஸ், பாரிவேந்தர் உழைப்பில் காட்டிய ஈடுபாடே அவரது சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று பேசினார். வருவாய்த் துறை கமிஷனர் வி. மகாலிங்கம் விழாவில் கலந்துகொண்டு பாரிவேந்தரை பாரட்டினார்.

சிறப்புரையாற்றிய மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜன் பேசும்போது பாரிவேந்தர் ஒரு ஓயாத உழைப்பாளி என்றும் அவர் எவ்வாறு ஒவ்வொரு கட்டத்தில் எவ்வாறு உழைத்து முன்னேறினார் என்பது குறித்து பேசினார். சிவசங்கரன் பேசுகையில் பாரிவேந்தரின் இலவசம் வேண்டாம், படித்தோர் அனைவரும் பகுதி நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற கொள்கைகளின் சிறப்புக்களை குறித்து பேசினார். மேலும் விழாவில் தாயகத்திலிருந்து வந்திருந்த சேலம் லக்ஷ்மண், சத்தியநாதன், வெங்கடேசன் ஆகியோர் வேந்தரை பாராட்டிப் பேசினர்.

விழாவில் ஏற்புரை வழங்கிய பாரிவேந்தர், விழாவிற்கு மும்பை வாழ் தமிழ் மக்கள் குடும்பத்தினருடன் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மும்பை தமிழர்கள் எந்த வித வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து அரசியல் உரிமையை பெற வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், தான் ஒரு பேராசியராக, தொழில் முனைவோனாக இருந்தாலும் தன்னை ஒரு அரசியல்வாதி என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்வதாக பேசினார். மேலும், அரசியலில் உள்ள குறைபாடுகளை களைய படித்தவர்கள், அனைத்து பணிகளிலும் உள்ளவர்கள் பகுதி நேர அரசியலில் ஈடுபட வேண்டும், அரசியல் ஒரு சாக்கடை, அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் என்று கூறிக்கொண்டு இருந்தால் அரசியலை மேம்படுத்த முடியாது. எனவே ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு அரசியலில் ஈடுபட வேண்டும். அறிவுத்திறன் அற்றவர்கள் ஒருநாள் முழுவதும் செய்யும் வேலையை அறிவு படைத்தோர் ஒரு சில மணிநேரங்களில் செய்து முடியும் என்பதைப் போல படித்தோர் பகுதி நேரத்தில் முழுமையான அரசியலை செய்ய முடியும் என்று பேசினார்.

விழாவிற்கு வந்திருந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு பாரிவேந்தர் பெயர் சூட்டும் நிழச்சி நடைபெற்றது. பின்னர் விழாவிற்கு வந்திருந்தவர்கள் பாரிவேந்தரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
விழாவின் இறுதியில் மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றத்தின் பொருளாளரான துரை தங்கமணி நன்றி தெரிவித்தார். விழா சிறப்பாக நடைபெற மூன்று அமைப்புகளின் நிர்வாகிகளான பிரின்ஸ் தாமஸ், மணிகண்டன், ஆர். ஆனந்த், வி. ராமதாஸ், சி. குமார், வெங்கடேசன், கே. பிரகாஷ், என். பாலசுப்பிரமணியம், எம். தண்டபானி, டி.பி. அங்கமுத்து உடையார், கே. முருகன், எஸ். செல்வராஜ் சாமி, ஆர். சுரேஷ்குமார், ஏழுமலை, பி. ஆறுமுகம், அலங்காரம், வி. முருகவேல், ஆ. ரமேஷ், ராஜேந்திரன், ஜி. ஆறுமுகம், கே. சுகுமார், சி. முத்து ஆகியோர் பாடுபட்டனர்.


நான் என் குடும்பத்தாருடன் பாரி வேந்தருடன்.

அணு உலை வெடிக்கவே வெடிக்காது என்போருக்கு மட்டும் இது சமர்ப்பனம்

அணு உலை வெடிக்கவே வெடிக்காது என்போருக்கு மட்டும் இது சமர்ப்பனம்
#வெடித்தால் என்னாகும்னு பாருங்க.. (இன்றைய தினமணி கட்டுரை)
-----------------------------------------------------------------------
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால்
-----------------------------------------------------------------------

நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக - தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

நொடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!

ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, ""நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்''. என்கிறார். ""அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய "டமால்' சத்தம்''.

வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர். இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். ""ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.

ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். ""எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்'' என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது - இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸார் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.

ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.

""நான் வெளியேற வேண்டும் என்று போலீஸார் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்'' என்கிறார் மட்சுமுரா.

அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. ""இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்'' என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

நன்றி -

தினமணி - முகநூலில் வெளியிட்ட ஈரோடு கதிர்

Tuesday, March 6, 2012

தமிழர் நலம் பேரியக்க நடைபயணம் - பத்திரிகை செய்திகள்
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் நீதிக்கான பயணம்


மும்பை, மார்ச் 6,
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.


ஐநாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இன்று (திங்கள்) மும்பையில் மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிலிருந்து மாட்டுங்கா தபால் நிலையம் வரை நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான மு. களஞ்சியம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் மாராட்டிய மாநிலத் தலைவர் நா. காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நடை பயணத்திற்கு தமிழர் நலம் பேரியக்கத்தின் நிர்வாகிகளான சி. ராஜேந்திரன், கன்னிவெடி கந்தசாமி, ஜி. செல்வராஜ், ரமேஷ் நாயுடு, பழனி கே. தேவேந்திரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வட மாநிலத்தவர் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்யில் தமிழ் இலெமுரியா பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை மாநரக பாஜ செயலாளர் ராஜா எம். உடையார், இந்திய ஜனநாயக கட்சியின் மராட்டிய மாநில தலைவர் எம். கோவிந்த சாமி, பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் தம்பி செல்வம், அ. கணேசன், விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் பேரிய மு. களஞ்சியம், குமணராசன், ராஜா எம். உடையார் ஆகியோர் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று பேசினர். நடை பயணத்தின் முடிவில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கமிஷனர் நவநீதம் பிள்ளைக்கு கோரிக்கையை முன் வைத்து அஞ்சலட்டை அனுப்பப்பட்டது.

தயக்கம் தேவையில்லை!

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. 2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இப்படி ஒரு தீர்மானத்தை, போர்க் குற்றங்கள் நிகழ்த்துவதில் எல்லாருக்கும் அண்ணனான அமெரிக்கா கொண்டுவருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன் எதிர்வினைதான். இதில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதும் முன்னமே பேசி முடிவாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அது எத்தகைய நிலைப்பாடு - ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா? என்பதுதான் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இத்தீர்மானத்தைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது. இவ்வளவு தீவிரமான விவகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுகுறித்த எந்தப் பேச்சும், விழிப்புணர்வும் அல்லது சலசலப்பும் காணப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தைக்கூட இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தமிழர்கள் விவகாரமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்தபட்சம் இதை மனித உரிமைப் பிரச்னையாகக்கூட கருதவில்லை என்பதுதான் வேதனையானது. அதையும்விட வேதனையானது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மனநிலை!

அரசியல் கட்சிகள் அளவில் பேசப்படும் இந்த விவகாரம், தமிழர்கள் அனைவரிடமும் உணர்வுபூர்வமான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கசப்பான உண்மைக்குக் காரணம், அதிமுக, திமுக என்கிற இரண்டு பெரிய கட்சிகளின் தலைமைகளும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன் தங்களது கடமையை முடித்துக்கொண்டு விட்டதுதான்.

இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான கடைசிக் கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்பது பல வகைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான், இத்தகைய ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுமத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் முன்பாகவே, இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

47 நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் இந்தியா கூறியிருப்பதன் சாராம்சம் இதுதான்: "ஒரு தனிப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது இந்த சபையின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது.' மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, சத்யமூர்த்தி பவனில் அளித்த பேட்டியில், இரு தரப்பிலும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறலுக்கான எந்தவிதத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார். "இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்', "எந்தவிதத் தீர்மானத்துக்கும் ஆதரவு' இப்படியெல்லாம் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கும் என்பதைத்தான் இந்தப் பேட்டி வெளிப்படுத்துகிறது.

கேரளக் கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள் என்றவுடன் அந்தக் கப்பலை கரைக்கு இழுத்துவந்து நிறுத்தி, காவலர்களைக் கைது செய்து, இத்தாலியின் அமைச்சர்கள், தூதர்கள் என எல்லோரையும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் படியேற வைக்க முடிகிறது. காரணம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகக் கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனி இருக்கிறார். கேரளத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சுடப்பட்ட மீனவர்களுக்காகக் குரலெழுப்புகின்றன. இதேபோல, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக இலங்கை ராணுவத்தினரைக் கடலில் மடக்கிப் பிடித்து, நமது கட்சிகள் ஒத்த குரலில் கோரிக்கை எழுப்பி இருக்குமா? இந்திய சட்டத்தின்படி நீதிபரிபாலனம் செய்ய ஒருநாளாகிலும் முயற்சி செய்திருப்பார்களா?

இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது பெயரளவுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதும்கூட, உலக அரங்கின் நெருக்கடியால்தான். இன்னமும்கூட, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழர் வாழும் மாகாணங்களுக்கு முழு அதிகாரம் தரப்படவில்லை. அனைத்தும் கொழும்பு மேற்பார்வையில்தான் நடைபெறுகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும், அதில் வெற்றிபெறவும் இந்தியா மனப்பூர்வமான முயற்சிகளைச் செய்யவில்லை. பெயரளவுக்கு அமைச்சர் கிருஷ்ணாவும் அரசுச் செயலர்களும் பயணம் போய் வருகிறார்கள், அவ்வளவே.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்தியா அமைதி காத்தது. அதெல்லாம் போகட்டும், குறைந்தபட்சம் இப்போதாகிலும், உலக அரங்கில் இலங்கையைப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகவாகிலும் வாக்களியுங்கள் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் அக்கறை, நமது தொப்புள் கொடி உறவு நாடான இந்தியாவுக்கு இல்லையே என்று இலங்கைவாழ் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க வேண்டுமானால், இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்!

நன்றி - தினமணி
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=562399&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...