Tuesday, April 17, 2012

இந்தியவும் இலங்கையும் மேற்கொண்ட முதல் ஒப்பதம்

இந்தியவும் இலங்கையும் மேற்கொண்ட முதல் ஒப்பதம் @1964 பற்றி பார்போம் :

டெல்லியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும்அக்டோபர் 29-ந்தேதி 1964 உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.
ஒப்பந்த விவரம் வருமாறு:-
(1 ) இலங்கையில் குடியுரிமை இல்லாமல் 9 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 5.5 லட்சம் தமிழர்களை இந்தியா அழைத்துக் கொள்ளவேண்டும்.
( 2) மீதி உள்ளவர்களில் 3 லட்சம் தமிழர்களுக்கு இலங்கையில் வசிப்பதற்கு `குடியுரிமை' வழங்கப்படும்.
( 3 ) மீதியுள்ள 1.5 லட்சம் தமிழர்களின் நிலைமை பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.

இதற்கு இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம்:
இலங்கையில் இருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ,ஒப்பந்தம் இதுவரை நடந்திராத முறையில் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், தமிழர்களை சொக்கட்டான் காய்களாக வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார்கள். . இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பிறந்த இடம் இலங்கைதான் என்றார்.

தி.மு.கழகத்தின் சார்பில், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இரா.நெடுஞ்செழியன் , இந்த ஒப்பந்தம் தி.மு.கழகத்திற்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்து இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அழைக்க முடிவு செய்து இருப்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. என்றார்.

சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி, இந்த ஒப்பந்தம், கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒப்பந்தத்தில் திருப்தி அளிக்கக்கூடிய அம்சம் எதுவும் இல்லை. இந்த ஒப்பந்தம், இலங்கைத் தமிழர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

இப்படி பல தரப்பட இயக்கங்கள் மற்றும் அதனை சார்ந்த மக்கள் எதிர்ப்பை சந்தித்த இந்த முதல் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த இலங்கைத் தமிழர்களின் மனுக்கள், இந்திய தூதரகத்தில் தேங்கிக் கிடந்தன. காலம் கடந்து போய்விட்டதால், இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று ஒரு கட்டத்தில் இந்தியா அறிவித்து தோல்வியிலே முடிந்தது .

சரித்திர பின்னோட்டம் * Flash Back ....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறையின் மீது பதிப்பட்டிருந்த உலோகத் தகட்டில் காணப்பட்ட இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள் தமிழ் பிராமி வகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர (ko ve ra) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும். கோ வெ ர என்ற தமிழ் பிராமி எழுத்துகளை வாசிக்கும் போது அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள் ஆராச்சியாளர்கள்

இதனை தவிர வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராச்சியில் கண்டுடுத்த மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் 600 BC நாகரீகமடைந்த தமிழ் மக்கள் வாழ்ந்ததை சான்று கூறுகின்றன .

கிறித்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப் பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சம் (இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூல) தரும் குறிப்புக்களிருந்து அறியவருகின்றது. பண்டைக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து.

கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாயிருந்த அநுராதபுரத்தில் மிக முற்பட்ட காலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.

பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) இலங்கையின் விசய வம்ச அரச காலம் தொட்டு ,1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் பிரித்தானியர் கைப்பற்றிய வரை ஒரு தொகுப்பாகவும் , பிரிதீஷ் ஆட்சின் போது (1796 ~ 1949) ,இரண்டாம் தொகுப்பாகவும் பிரித்து உள்ளேன்

நிற்க ...........

கச்சத்தீவு இந்தியாவிற்கு தான் சொந்தம் .இதனை இலங்கைக்கு தாரை வார்க்க கூடாது என்ற அன்றைய திமுக தமிழக அரசினால் என்ன ஆவணங்கள் வைக்கப்பட்டன ? அதற்கு அன்றைய பிரதமர் திருமதி .இந்திரா நிலை என்ன ? கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் திரு கருணாநிதி விருப்பம் போல 1974 ஜுன் 29-ந்தேதி நடைபெற்றதா?!

இதன் தொடரும்.....

ச. வெ. ரா

No comments: