Friday, August 3, 2012

தமிழருக்கான சாதி – மதக் கொள்கை


முன்னுரை

நண்பர்களே,
எனது தமிழ் தேசியத்திற்கான அரசியலமைப்புச் சட்ட முன்னோட்டம், தேவை தமிழருக்கான குறைந்தபட்ச பொதுத்திட்டம் என்ற கட்டுரைகளின் தொடர்ச்சியாக தமிழருக்கான சாதி – மதக் கொள்கை என்ற இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையை பண்புடன் கூகிள் குழுமம், கூகிள் பிளஸ், எனது முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள சமூக சிந்தனையாளர்களுடன் நான் நடத்திய வாத பிரதி வாதங்களை  அடிப்படையாக கொண்டு எழுதுகிறேன்.  நண்பர்களே, வழக்கம்போல இது ஒரு முயற்சியே அல்லாமல் இறுதியான கருத்துக் கிடையாது. இங்கு நான் கூறும் கருத்துக்கள் அனைத்துமே விவாதப் பொருட்களே. சான்றோர் இவற்றை விவாதித்து தக்க தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றே இக்கட்டுரையை முன்வைக்கிறேன்.  

சாதிகளில் உள்ள பெரும்பான்மை தமிழர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், மாற்றம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழருக்கான முன்னேற்றமாக, மாற்றமாக இருக்கும் என்ற நோக்கத்தில் அனைத்துப் பிரிவினரின் சாதக - பாதக கருத்துக்களை கவனத்தில் கொண்டு இது போன்ற கருத்துக்கள் எதிர்கால தமிழர் அரசியலில் மாற்றம் கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் சாதி ஒழிப்புப் பற்றி பேசிய தலைவர்கள் ஒருபுறம் சாதிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டே மறுபுறம் சாதிகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதே வரலாறு. இதனால் சாதி ஒழிப்பு ஒருபுறமாகவும், சாதிகளுக்குள்ளே நம்பிக்கையின்மை, காழ்ப்புணர்ச்சி, பகை போன்றவை மறுபுறமாகவும் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சாதிகளில் இருப்பவர்கள் – சாதிகளிலிருந்து வெளியேறியவர்களிடையே ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இன்று சாதியில் இருப்பவர்களை ஒருசாரர் கண்மூடித்தனமாக திட்டுகின்றனர். மற்றொரு பகுதியினர் இருந்தாலும் பரவாயில்லை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையில் இருக்கின்றர். பெரும்பாலானோர் சாதிப் பற்றுடன் இருக்கிறார்கள். இப்படி இந்த சமூகம் மனதளவில் பிளவுபட்ட நிலைக்கு வந்ததற்கு காரணம் சாதியை ஒழிக்கவேண்டும் என்ற கருத்தை பரப்பியவர்களே. அவர்களால் ஒரு சரியான திட்டத்தை வகுத்துக் கொடுத்து மக்களை அங்கு கொண்டு சேர்க்க முடியாத்தால் அவர்கள் மக்களை இந்த சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளனர்.  

தற்போது ஈழப் படுகொலையால் உந்தப்பட்டவர்கள் சாதி – மத ஒழிப்பு கருத்துக்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு சாத்தியம் என்பதை சிந்திக்க/ புரிந்துகொள்ள தவறுகின்றனர். இந்த கருத்து தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு அவசியம் என்று கருதும் அவர்கள் இதுவே அவர்களின் செயலுக்கு தடையாக அமையலாம் என்பதை புரிய/ உணர மறுக்கின்றனர்.

பொதுவாக சாதி – மத ஒழிப்புச் சிந்தனையாளர்கள் சாதி - மத ஒழிப்பு என்ற ஒற்றை வாக்கியத்தைத் தவிர அதைக் கடந்து சிறிதும் சிந்திக்க தயாராக இல்லை. சாதிகளில் இருப்பவர்களின் தேவை என்ன? அவர்களது நிலை என்ன? அவர்கள் சாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்களைக் கொண்டே சாதிப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என்பது பற்றி சிந்திக்க தயாராக இருப்பதில்லை. முதலில் சாதிகளிடையே நம்பகம், சமத்துவம், ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும். அவர்களை எதிரெதிரே அமர வைத்து பேச வைக்க வேண்டும். அவர்களின் உதவியோடுதான் அவர்களது பிரச்சனைகளை களைய முடியும்.

சாதி - மதங்கள் சமூக கட்டமைப்பின் அடிப்படை அமைப்புகளாக உள்ளன என்றே அவற்றை பார்க்க வேண்டியுள்ளது. இவை ஒரு சமூகத்திற்கு/ அரசாங்கத்திற்கு அடிப்படையானவை என்ற நோக்கத்திலும் அவற்றை பார்க்க வேண்டியுள்ளது. சாதி - மதங்களில் உள்ள பிரச்சனைகளை களைய நாம் சாதி - மதங்களை உள்ளபடியே அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளும்போதுதான் நாம் அது பற்றிச் சிந்திக்கவே முடியும். அப்படியானால் சாதிக்கென்று ஏதாவது ஒரு கொள்கை இருக்கிறதா? இல்லை. ஆனால் வழக்கங்கள்/ பழக்கங்கள்/  நடைமுறைகள் உள்ளன. கொள்கை இல்லையென்றால், அரசுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் சாதியை ஒழுங்குபடுத்த, முன்னேற்ற, அவர்களுக்கென்று ஒரு கொள்கையை வடிவமைத்து கொடுப்பதில் தவறில்லை என்ற கருத்தின் அடிப்படையில் இந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை சாதிகளை நமது சமுதாய அமைப்பின் விசேஷ பிரிவுகளாகவே கருதுகிறேன். எப்படி நாம் அமெரிக்கர்களின் உணவு முறையை பின்பற்ற முடியாதோ, ரஷ்யர்களின் சமுதாய அமைப்பை உருவாக்க முடியாதோ, அதுபோல நமக்கென்று ஏற்கனவே அமைந்துள்ள சாதி கட்டமைப்பை விசேஷ சமூக அமைப்பாகவே கருதுகிறேன்.

சாதிக் கொள்கை

சாதிகளில் இருப்பவர்களுக்கு என்று ஒரு தனியான கொள்கை கிடையாது. ஆனால் அவர்களுக்கென்று வழக்கங்கள்/ பழக்கங்கள்/  நடைமுறைகள் உள்ளன. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் தங்களது சாதிகளில் இருந்து வருகின்றனர். காலகாலமாக சில வழக்கங்கள்/ பழக்கங்கள்/  நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். எனவே சாதியில் இருப்பவர்கள் தொடர்ந்து தங்கள் சாதியிலேயே இருக்க விரும்பலாம். சாதிகளிடையே ஒரு தெளிவை ஏற்படுத்த அனைத்து சாதிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு பொதுவான கொள்கையை ஏற்படுத்துதல் அவசியம். இந்த கொள்கையை சாதி-மத அறிஞர் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து அவ்வப்போது மாற்றம் கொண்டு வரலாம். சாதிகள் வேண்டாம் என்பவர்களை இந்த கட்டுரையில் சுதந்திர சாதியினர் என்று குறிப்பிட்டுள்ளேன்.  

அடிப்படை சீரமைப்பு விதிமுறைகள்

1.    ஒரு தனிநபர் தான் பிறந்த சாதியிலேயே இருக்க விரும்பலாம். அவர் தனது சாதியினருடன் சேர்ந்து வாழ, தனது குடும்பத்தை அமைக்க, சாதிச் சங்கத்தில் இணைந்துகொள்ள, ஆதரவு திரட்ட, தனது உரிமைகளை பாதுகாக்க விரும்பலாம்.

2.    ஒரு தனிநபர் தனது சாதி வழக்கங்களை தொடர்ந்து கடைப் பிடிக்க, தனது உறவினர்களும் தனது சாதியில் இருக்க விரும்பலாம்.

3.    ஒரு தனிநபர் தனது குழந்தைகள் தனது சாதியில் இருக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் வயதுக்கு வந்த பின்னர் அந்த குழந்தைகள் தங்கள் சாதி பற்றிய கருத்தை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமையுள்ளது.

4.    எல்லாரும் ஒரு தனிமனிதரின் சாதி உணர்வுக்கு/ சுதந்திர சாதி உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒரு தனிநபர் சக மனிதரின் சாதி உணர்வுக்கு/ சுதந்திர சாதி உணர்வுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். யாரும் ஒரு தனிநபரை சாதியால்/ சுதந்திர சாதியால் ஒதுக்கவோ நிந்திக்கவோ கூடாது.  

5.    சாதி/ சுதந்திர சாதி பற்றி ஒரு தந்தைக்கும் வயது வந்த மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இருந்தாலும் இறுதியில் தங்கள் சுய விருப்பப்படி முடிவு செய்துகொள்ளலாம்.   

6.    சாதிகளில் இருப்பவர்கள், சாதிகளில் இருப்பதால் என்ன பயன் என்பதை தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லலாம். தங்களது சாதியினரை ஒன்றிணைக்க தங்களுக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

7.    அவ்வாறான ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர்கள் கூட்டங்கள், மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்களை நடத்தலாம். ஆனால் இது போன்ற முயற்சிகள் எதுவும் மற்ற சாதியினருக்கு தொல்லை தருவதாக/ ஆத்திரமூட்டுவதாக அமையக் கூடாது.

8.    ஏதாவது ஒரு சூழலில் இரு சாதியினரிடையே சண்டை சச்சரவு, மோதல் ஏற்பட்டால் இரு தரப்பையும் சேர்ந்த தலைவர்கள் சந்தித்துப் பேசி சுமூகமாக தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேற்கொண்டு அதுபோன்ற மோதல்கள், பிரச்சனைகள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.    இதுபோன்ற மோதல்கள் ஏற்பட்ட உடனேயே அதனை அடையாளம் கண்டு அதனை தீர்த்து வைக்க முற்பட வேண்டும். அதனை மேலும் வளர்க்கக் கூடாது. இந்த முயற்சியில் சுதந்திர சாதியினர்/ அரசின் சமூக நல அதிகாரியும் உதவி செய்யலாம்.

10. உள்ளூர் அளவில் நிலைமை கட்டுக்கடங்காத பட்சத்தில் சாதியில் இருப்பவர்கள் மாவட்ட மாநில அளவிலான தலைவர்களின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முற்படலாம். இதில் மதத் தலைவர்களின் உதவியை நாடலாம். அவர்களையும் ஈடுபடுத்தி பிரச்சனைகளை தீர்க்க முற்படலாம்.

11. மாவட்ட, மாநில அளவில் தீர்க்கப்படாத பிரச்சனைகளை சாதி-மத குழுவினர், அரசியல் தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

12. இது போன்ற முயற்சிகள் விரைவானதாகவும் இருக்க வேண்டும், யாருடைய நேரத்தையும் வீணாக்குவதுபோல இருக்கக் கூடாது. முக்கியமாக முயற்சிகள் பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

13. இந்த முயற்சிகளும் தோல்விபெறும்பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

14. சாதிகளில் உள்ளவர்கள் விரும்பினால் தங்கள் பெயருடன் சாதிப் பெயரை பயன்படுத்தலாம். ஆனால் பெயரைக் கொண்டு மாற்றுச் சாதிகளில்/ சுதந்திர சாதியில் உள்ளவர்களை இழித்து அல்லது பழித்துப் பேசக் கூடாது.

15. சாதிகளில் இருப்பவர்கள் தங்களது அறிஞர் குழுவின் ஆய்வு அடிப்படையிலான உண்மைகளை ஏற்று அதன் படி நடக்க வேண்டும்.

16. தங்கள் சாதிகள் பற்றிய உண்மைகைளை அறிய ஆய்வுக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். 

17. வரலாறு அடிப்படையில் தங்கள் சாதியை சேர்ந்த தலைவர்களை தங்கள் சாதி தலைவர்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

18. வரலாற்றின் அடிப்படையில் தங்கள் பெருமைகளை பேசிக்கொள்ளலாம். உதாரணமாக ஆங்கிலேயர் காலத்தில், அல்லது முந்தைய காலத்தில் செட்டியார்கள்தான் வங்கித் தொழிலை (கொடுக்கல் - வாங்கல்) செய்து வந்தனர். இது அவர்களின் பெருமையாகும். தேவர், வன்னியர் போன்றோர் போர்வீரர்களாக இருந்தவர்கள். ஆசாரிகள் கலை நயத்திற்கு காரணமானவர்கள். இது போல பல சாதியினருக்கும் பல பெருமைகள் இருக்கலாம். அவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.  (செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் அதனை பெருமையாக சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். தொழிலில் அடிப்படையில் சாதிகள் அமைந்ததால் அவர்களும் அது பற்றி பேசிக்கொள்ளலாம். பெருமை என்பது ஒருவர் தான் இழந்த நிலையை சுட்டிக்காட்ட தேவைப்படுகிறது. அது எழுச்சியை ஏற்படுத்தும். எனவே அதற்கு அனுமதிக்கப்படுகிறது.)

19. மேற்கண்ட சாதியினர் எல்லாரும் தங்களது வேலைகளை செம்மையாகச் செய்ய கீழ்மட்டத்தில் இருந்து நிலங்களில் உழைத்தவர்கள் தாழ்த்தப்பட்டோர். சாதீய அவமதிப்புகளுக்கு இடையே அவர்கள் தொழிலாளர்களாக இருந்து சமுதாயத்திற்காக உழைத்ததே அவர்களின் பெருமை.  

20. ஆனால் அது போன்ற பெருமைகள் மற்ற சாதியினரை தாழ்வு படுத்திக் காட்டுவதாக அமையக் கூடாது. மற்ற சாதியினரும் மற்றவர்களின் பெருமை தங்களை தாழ்வு படுத்துவதாக கருதக் கூடாது. 

சாதிச் சங்கங்கள்

1.    சாதிச் சங்கங்கள் எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானவை அல்ல. அவை அந்தந்த சாதி மக்கள் அனைவருக்கும் பொறுப்பானவை. எந்தவொரு சங்கமும் மாற்றுச் சாதிச் சங்கங்களுக்கு எதிரானது அல்ல.

2.    சாதிச் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற, சட்ட ரீதியிலான சமூக அமைப்பாக செயல்படும். ஒரு அரசு நிறுவனத்திற்கு எத்தனை பொறுப்பு - கடமை இருக்கிறதோ அதே பொறுப்பு கடமை இந்த சங்கங்களுக்கு இருக்க வேண்டும்.

3.    ஒரு பகுதியில் வாழும் நபர்களில் குறைந்தது 100 பேர் கொண்டு தங்களது சாதிக்கு சங்கம் அமைத்துக் கொள்ளலாம். நூறுக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள சங்கங்களில் இணைந்து கொள்ள வேண்டும்.

4.    அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களிடம் மாநில அளவிலான சாதி-மதக் குழுவினரரின் பரிந்துரையின்படி அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சேர்க்கை கட்டணம்/ மாதாந்திர சந்தா வசூலிக்கலாம். விசேஷே விழாக்கள், கூட்டங்கள், சேவைகளுக்காக விசேஷ நிதி திரட்டிக் கொள்ளலாம். 

5.    இவ்வாறு இணைபவர்களுக்கு சாதிச் சங்கங்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டையில் சங்கத்தின் முகவரி, உறுப்பினரின் படம், முகவரி, பிறந்த தேதி, உறுப்பினர் அட்டையின் வரிசை எண் சங்கத்தின் வரிசை எண் போன்றவை இடம்பெற வேண்டும். முடிந்தால் புகைப்படம், கைரேகை, கண் ரேகை போன்றவற்றை பதிவு செய்வது சிறப்பு.

6.    ஒவ்வொரு சங்கத்திற்கும் அரசு தனது சார்பில் அதே சாதியைச் சேர்ந்த ஒருவரை பார்வையாளராக நியமிக்கலாம். அவர் அரசுக்கும் சாதிச் சங்கத்திற்கும் தொடர்பாளராக இருக்கலாம்.

7.    இவ்வாறு அமைக்கப்படும் சங்கங்கள் அரசாங்கத்தின் நலச் சங்க சட்ட விதிமுறைகளுக்கு கீழாக பதிவு செய்யப்பட வேண்டும். அந்த சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப 5, 7, 11, 13 போன்ற ஒற்றைப் படையிலான செயற்குழு மற்றும் தலைவர் துணைத் தலைவர் போன்ற பதவிகள் முதலில் நிர்ணயிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

8.    இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் ஒருவருக்கு மாற்று என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்களின் தகுதிகளை வரையறுக்க வேண்டும். இவர்களுக்கு அடிப்படைத் தகுதியாக அதிகபட்ச கல்வித் தகுதி (அந்த சங்கத்தில் அதிகம் படித்தவர்களுக்கு), சமுதாய ஈடுபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

9.    இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் கால வரம்பு (உதாரணமாக 5 ஆண்டுகள்) கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவரின் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்படும்பட்சத்தில் அந்த சாதி மக்கள் அவரை மாற்ற விருப்பம் தெரிவிக்கலாம்.

10. தலைவராக உள்ள ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் இருக்கக் கூடாது. ஊர்ச்சங்கத்தில் உள்ள ஒருவர் இரண்டு முறைக்கு பின்னர் வட்ட, மாவட்ட தலைமைப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.

11. அந்த சங்கத்தின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு தலைவரை மாற்ற விருப்பம் தெரிவித்தால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் அந்த பதவிக்கு உயர்த்தப்படுவார். அதாவது மக்கள், தலைவராக உள்ளவரை பதவியிலிருந்து நீக்க விரும்பினால் துணைத் தலைவர் தானாகவே அந்த இடத்திற்கு உயர்த்தப்படுவார்.

12. அரிய நிகழ்வாக, பதவிக்கான கால வரம்புக்குள் தலைவர், துணைத் தலைவர் போன்ற இருவரும் அடுத்தடுத்து நீக்கப்பட்டால், செயலாளர், துணைச் செயலாளர் அந்த பதவிக்கு உயர்த்தப்படலாம்.

13. தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான அடிப்படை தகுதிகளில் மக்களுக்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள், பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் திறனுள்ளவர்கள், கூட்டத்தினரை கையாளும் திறனுள்ளவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

14. இவர்கள் தங்கள் ஊரில்/ பகுதியில் உள்ள மாற்றுச் சாதிச் சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களாக, அவர்களது விழாக்கள் மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும்.

15. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சங்கங்கள் ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலச் சங்கம் என ஒரே தலைமை அமைப்பின் கீழாக இருக்க வேண்டும்.

16. எந்த சூழலிலும் அரசு ஒரு சாதிக்கான பார்வையாளராக மாற்றுச் சாதியினரை நியமிக்கப்படக் கூடாது.  

17. இந்த சங்கக் கூட்டங்கள் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். ரகசியமான செயல்பாடு எதுவும் இருக்கக் கூடாது.

18. தங்கள் உரிமைகளுக்காக தலைமைச் சங்கங்களின் முடிவின்படி அமைதியான, ஆர்ப்பாட்டம், பேரணி பொதுக் கூட்டம் நடத்தலாம்.

19. எந்த சூழலிலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது.

20. க​ட​மைகள் மற்றும் ​நோக்கங்கள்  குறித்து ​மே​லே உள்ள​வைக​ளை அ​னைத்து சங்க அலுவலகங்களிலும் மரச் சட்டமிடப்பட்டு ​பொது பார்​வையில் படுமாறு ​வைக்க ​வேண்டும்.

21. சாதிச் சங்கங்கள் எதிர்காலத்தில் தங்கள் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தங்கள் சாதியின் வரலாறை, வழக்கங்களை/ நடைமுறைகளை/ பழக்கங்களை தொகுத்து புத்தக வடிவில் வெளியிடலாம். அது போன்ற புத்தகங்கள் மாநில அளவிலான சாதி-மத அறிஞர் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

22. இதில் சாதி வழக்கங்கள், அவர்களுக்குள் உள்ள பிரிவுகள், திருமண முறைகள் மற்றும் இதர சடங்குகளை பற்றி விளக்கி எழுதலாம்.

சாதிச் சங்கங்களின் நோக்கங்கள்

1.    சாதிச் சங்கங்களின் அடிப்படை நோக்கம் மற்ற சாதிகளுடன் இணைந்து அமைதியாக சகோதரத்துவத்துடன் வாழ்வதாகும். அதற்காக தங்கள் சாதிக்குள்ளும் மற்ற சாதிகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

2.    தங்களது உரிமைகள் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.

3.    தங்களது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொருளாதார வசதி படைத்தவர்களாக/ அறிவிற் சிறந்தவர்களாக உயர்த்துதல். உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களது வாழ்க்கை முறை/ பொருளாதார நிலை/ பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இரண்டாம் கட்ட நோக்கங்களாக அமையும். அறம் செய்தல், உதவி செய்தலை ஊக்குவித்தல், ஆபத்து காலங்களில் உதவுதல் போன்றவை மூன்றாம் கட்ட நோக்கங்களாக அமையும்.

4.    வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையும் அதேவேளையில் ஒரு அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளங்களான ஆரோக்கியம், நாகரீகம், விளையாட்டு – கலை - இலக்கியம் வளர்த்தல், நெறிமுறைகளை பின்பற்றுதல், நீதி வழங்குதல், மனிதாபிமானம் போற்றுதல், சுற்றுச் சூழலை காத்தல் போன்றவற்றை இலக்காக கொள்ள வேண்டும்.

5.    இந்த குறிக்கோளுக்காக அவர்கள் தங்கள் சாதியில் இருக்கும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களைக் கொண்டு ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடக்க வேண்டும்.

6.    மாற்றுச் சாதிகளுடன் இணைந்து பணியாற்றுதல், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஒத்துழைப்பு, ஆதரவு அளித்தல்.  ஒரு  சாதிச் சங்கம் தன்னை மாற்றுச் சாதி/ சுதந்திர சாதிச் சங்கத்திற்கு எதிரானதாக கருதக் கூடாது.

7.    நாட்டு நலனை கருத்தில் கொண்டு நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் உதவும் வகையில் தங்கள் மக்களை உருவாக்குதல்.  

சாதிச் சங்கங்களின் கடமைகள்

1.    மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சங்கம், குடும்பம், சமூக அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த அமைப்புகளுக்கு வழிகாட்டுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

2.    இந்த சங்கங்கள் குறிப்பிட்ட அந்த சாதிக்கு என்றில்லாமல் மற்ற சாதியினருக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக மாற்றுச் சாதியை சேர்ந்த ஒருவர் ஏதாவது உதவி கோரி வந்தால் அவருக்கு இந்தச் சங்கங்கள் தயங்காமல் உதவி செய்ய வேண்டும்.

3.    இந்த சங்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனையையும் அறிவுசார் முறையில் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

4.    தங்கள் சங்கத்தை சார்ந்தோருக்கு ஆதரவும், உதவியும், ஒத்துழைப்பும் செய்யும் அதேவேளையில் தங்களது சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் மாற்றுச் சாதியினருக்கும் உதவி, ஒத்துழைப்பு, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

5.    இந்த சங்கங்கள் தங்கள் சமுதாயத்தின் கல்வி, ஆரோக்கியம், பொருளாதாரம் , கலைகள், சுதந்திர சிந்தனை போன்றவற்றை ஊக்குவிக்கக் கூடியவையாக இருக்கவேண்டும்.

6.    அறிவியல், அரசியல், சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவைகளாகவும்/ ஊக்குவிக்க கூடியவைகளாகவும் இருக்க வேண்டும்.

7.    சுற்றுச் சூழல்/ இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

8.    அரசாங்கம் இயற்றும் சட்டங்கள், அவற்றின் முக்கியத்துவங்கள், அரசியல் நிலவரங்கள், அவற்றில் தங்களது நிலைப்பாடுகள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது தத்தம் சாதி மக்களை கூட்டி அவர்களுக்கு விளக்கிக் கூற/ கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.   

9.    எந்த விஷயத்திலும் ஜனநாயக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சனைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் அரசு அதிகாரிகள், நிபுணர்களின் உதவியை பெறலாம்.

10. எந்த காரணத்தைக் கொண்டும் சாதிச் சங்கங்கள் தங்களது மக்களை வன்முறையில் ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடுபடுபவர்களை கண்டித்து உடனே அவர்களது பிரச்சனைகளை களைய முற்பட வேண்டும்.

11. தங்களது அரசியல், பொருளாதார, சமூக இலக்குகளை அடைய, ஒத்துழைக்க, அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள மாநில அளவிலான சாதிச் சங்கங்கள் தங்களுக்குள் ஒப்பந்தங்களை செய்துகொள்ளலாம்.

12. ஒவ்வொரு சாதிச் சங்கமும் மாற்றுச் சாதிச் சங்கங்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை தெரிவித்து ஆக்கப்பூர்வமாக அதுபற்றி கலந்தாலோசித்து பொதுவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சிக்கலாம்அதற்காக மாநில அளவில் ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம்.  

சுதந்திர சாதியினர்

சாதிகளில் இருக்க விரும்பாதவர்களை சுதந்திர சாதியினர் என்று அழைக்கலாம். தங்கள் சமூக ஆதரவுக்காக இவர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டும். 

இவர்களுக்கும் மற்ற சாதிகளுக்கான விதிமுறைகள் கடமைகள் பொருந்தும். சாதிகளிலிருந்து வெளியேறுவோர் இந்த சாதியில் சேர்ந்துகொள்ள வேண்டும். சாதியிலிருந்து வெளியேறுவதால் என்ன நன்மை ஏற்படும் என்று இவர்கள் சாதிகளில் உள்ளவர்களுக்கு சொல்லலாம். அதன் மூலம் அவர்களது நம்பிக்கையை, ஆதரவை பெற முயற்சிக்கலாம். ஆனால் அவர்களை இழித்தும் பழித்தும் பேசக் கூடாது. 

இவர்கள் சாதிகளில் உள்ளவர்களுக்கு சேவை, ஆதரவு, உதவி செய்யலாம். அதன் மூலம் அவர்களது நம்பிக்கையை பெறலாம். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது சாதியிலிருந்து வெளியேறலாம். அப்படி வெளியேறுவதை சாதிகளில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு வெளியேறுபவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்புகளுக்கு, அவர்கள் சேரும் சுதந்திர சாதி சங்கத்தினர் பொறுப்பேற்க வேண்டும்.    

 கலப்புத் திருமணத்திற்கு அங்கீகாரம்

கலப்புத் திருமணங்கள் என்பவை தற்போது அவசியமாகி வருகின்றன. குறிப்பாக தமிழர்கள் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்து வருவதால் அவர்கள் ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நகரங்களில் வாழ்பவர்களே தங்கள் சாதியில் வரன்களை தேட முடியாத சூழலில் உள்ளனர். எனவே இந்த அடிப்படையில் கலப்புத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியது சாதிச் சங்கங்களின் கடமையாகும். இவ்வாறு கலப்புத் திருமணங்களை அங்கீகரிக்கும் சாதிச் சங்கங்கள் தங்கள் பகுதியில் நடக்கும் கலப்புத் திருமணத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கலப்புத் திருமணம் புரிவோருக்கான சாதி விதிமுறைகள்

1.    கலப்புத் திருமணம் செய்யும் ஒரு தம்பதி தாங்கள் சார்ந்த இரண்டு சாதிகளில் ஒன்றுடன் சேர்ந்துகொள்ளலாம்.  

2.    அல்லது இரண்டு சாதியினருடனும் உறவு வைத்துக்கொள்ள விரும்பலாம்.

3.    அல்லது சாதிகளிலிருந்து வெளியேறிவிட முடிவு செய்யலாம்.

4.    அவர்கள் ஒரு சாதியில் சேர்ந்துகொள்வதை தேர்ந்தெடுத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் சாதியின் சங்கம் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

5.    அவர்கள் இரண்டு சாதிகளையும் தேர்ந்தெடுத்தால் அவர்கள் தேர்வு செய்யும் இரண்டு சாதிச் சங்கங்களும் அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

6.    அவர்கள் சாதியிலிருந்து வெளியேறுவதாக இருந்தால், அவர்களுக்கு சுதந்திர சாதியினர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

7.    கலப்புத் திருமண ஜோடிகளுக்கான சமூக, பொருளாதார பாதுகாப்புகளை அவர்களை அங்கீகரித்த சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை என்பது சமூக அவலமாகும். விலங்குகள் மீதும் மிருகங்கள் மீதும் அன்பு காட்டும் மனிதன் சக மனிதன் மீது வெறுப்பை காட்டலாமா? எனவே சக மனிதனுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்து அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தர, அவர்களை முன்னேற்ற அனைவரும் உறுதியேற்க ஏற்க வேண்டும். அதுவே ஒரு கற்றறிந்த/ நாகரீக சமுதாயத்தின் தன்மை ஆகும். 

தீண்டாமை ஒழிப்புக்கான கொள்கைகள் -

1.      தீண்டாமை ஒழிப்பு என்பது அனைத்துச் சாதிகளுக்கும் பொதுவான கடமையாகும்.

2.      ஒவ்வொரு பகுதியிலும் நடப்பில் உள்ள தீண்டாமை வழக்கங்களை ஒழிப்பது அந்தந்த சாதியினரின் கடமையாகும்.

3.      அதுபோன்ற பிரச்சனைகளை மற்ற சாதிகளோடு கலந்துபேசி குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயித்து அதற்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

4.      ஒரு சாதியைச் சேர்ந்த தனிநபர் அல்லது குழுவினர் தீண்டாமையை பின்பற்றுவதாக இருந்தால் அவர்களுக்கு விசேஷ ஆலோசனைகள் வழங்கி அவர்களின் மனதை மாற்ற வேண்டும்.

5.      அவர்களுக்கு அதனால் பாதிக்கப்படுபவர்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டும்.

6.      ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு சாதிச் சங்கமும் தங்கள் வரம்புக்குட்பட்ட பகுதியில் தீண்டாமை கொடுமைகளை முற்றிலுமாக ஒழித்து விடவேண்டும்.

7.      அப்படி ஒழிக்கப்பட்ட பகுதிகள் தீண்டாமை ஒழிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும். அந்த பகுதி மக்கள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.   

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டைப் பொறுத்த வரை தற்போதுள்ள சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆனால் இதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த காலக்கெடு இட ஒதுக்கீட்டிற்கானது என்றில்லாமல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கான காலக்கெடுவாக கருதப்பட வேண்டும். உதாரணமாக 60 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படலாம். இந்த அறுபது ஆண்டுகாலத்திற்குள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதை நிறுத்தி விடவேண்டும். அதன் பின்னர் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அடிப்படை வசதியாக இவர்கள் அனைவருக்கும் அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அரசு அதற்கென பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ஒரு விசேஷ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

திறனறிதல்

இந்த 60 ஆண்டு காலத்திற்குள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களை இட ஒதுக்கீடு என்று மட்டும் இல்லாமல் அவர்களை முன்னேற்ற பன்முக திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதாவது இந்த சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை உன்னிப்பாக கண்காணித்து அவர்களிடம் என்ன விதமான திறன், ஆர்வம் உள்ளது என்பதை இளமையிலேயே கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களை அரசுப் பணிகள், வியாபாரம், சுயதொழில், கலைத்துறை போன்றவற்றிற்காக தயார் செய்ய வேண்டும். படிக்கும்போதே/ படிப்பு முடித்தவுடன் அவர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் – தொழில்

வர்த்தகம், தொழில்துறையில் ஈடுபட விரும்புவோருக்கு முழுப் பயிற்சி கொடுக்க வேண்டும். பெருந்தொழில் நிறுவனங்களின் சமூக சேவைப் பிரிவை இதற்கு பயன்படுத்த வேண்டும். படித்து முடிக்கும் காலங்களில் அவர்கள் சுயமாக தொழில் செய்யும் திறனையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் வங்கிகள் கடன் கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஓரளவு திறமை கொண்டவர்களை அடையாளம் கண்டு தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சி  அளித்து அவர்களது திறமையை வளர்த்து அவர்களுக்கு தக்க பதவிகளை கொடுக்க வேண்டும்.

சமூக அந்தஸ்து

சமூக அந்தஸ்து என்பது மிகவும் முக்கியமானது. எனவே மற்ற சாதிகளைச் சேர்ந்தோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு சமூக அந்தஸ்து அளிக்க/ கிடைக்க உதவ வேண்டும். இவர்கள் தங்களது விழாக்களில் அந்த சாதிகளை சேர்ந்தோரை விருந்தினராக அழைத்து கௌரவிக்க வேண்டும். அதேபோல மற்ற சாதிகளை சேர்ந்தோர் இவர்கள் சாதியில் நடக்கும் விழாக்களுக்குச் சென்று கலந்துகொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல் எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமூக அந்தஸ்து கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

 பொது இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சாதிகளில் சேராத மற்ற சாதிகளைச் சேர்ந்த சமூகத்தில் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொது ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவர்களுக்கும் திறனறிதல், பொருளாதார, வர்த்தக பயிற்சி அளித்தல் போன்றவை வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடுதான் அரசின் தொடர்ச்சியான, நிரந்தர ஒதுக்கீட்டுக் கொள்கையாக இருக்க வேண்டும். சமூக நலன் கருதி, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேற்றுவதற்காக இந்த திட்டத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதனை மனித வளத்தை பயன்படுத்தும் திட்டமாகவும் பின்பற்ற வேண்டும். இந்த திட்டங்களிலிருந்து சோம்பேறிகள், போதை, சூது, ஊதாரியாக செலவு செய்தல் போன்ற தீய பழக்கங்களை கொண்டவர்களை வெளியேற்றி விட வேண்டும்.    

மதக் கொள்கை

ஒரு அரசாங்கத்திற்கு அனைத்து மதங்களும் சமமானவையே. மதங்கள் யாருக்கும் சொந்தமானவை அல்ல. எல்லா மதமும் எல்லாருக்கும் சொந்தமானவையே. அரசு தனது எல்லைக்குள் உள்ள அனைத்து மதம் சார்ந்ததாக/ மதச்சார்புள்ள அரசாக இருக்க வேண்டும். அதே அரசு சுதந்திர மதங்களையும் (கடவுள் நம்பிக்கையற்றவர்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திர சாதிகளில் உள்ளவர்களே சுதந்திர மதங்களில் உள்ளவர்களாக கருதப்படலாம். அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக அமைப்புகளாக செயல்படும். எனவே அனைத்து மதங்களும் அரசுக்கு கடமைப்பட்டவை, கட்டுப்பட்டவை. அரசு, மதங்கள் / சுதந்திர மதத்திற்கு மதிப்பளிக்கும். சாதி/ சுதந்திர சாதிக்கு மேற்பட்ட சமூக கட்டமைப்பாக மதங்கள்/ சுதந்திர மதம் இருக்கும்.

மதங்களுக்கு புனித நூல்கள் உள்ள காரணத்தால்  அவை அந்த புனித நூல்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். ஒவ்வொரு மதமும் மாற்று மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சுதந்திர மதங்கள் தங்களுக்கான ஒழுக்க விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். எங்காவது ஓரிடத்தில் மாற்று மதங்களுடன் கருத்தளவிலான மோதல் ஏற்படும் சூழலில் அந்த மதத்தை சேர்ந்த சான்றோர்கள் அது பற்றி அலசி ஆராய்ந்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதத்தவரை மாற்று மதத்தவருடன் சுதந்திரமாக பேச, பழக அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்களது மதங்களிடையே உள்ள வேற்றுமை ஒற்றுமைகள் குறித்து கலந்துரையாடலாம். மதங்களில் உள்ளவர்கள் தங்களை சாதியாலும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

மதக் கட்டமைப்பு

அடிப்படையில் ஏற்கனவே உள்ளவர்கள் அந்தந்த மதங்களில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் மதக் கருத்துக்களை தொடர்ந்து பின்பற்ற, பரப்ப, அவற்றை பாதுகாக்க உரிமை பெற்றுள்ளனர். வயதுக்கு வரும் ஒவ்வொரு தனிநபரும் தங்கள் மதக் கருத்துக்களை சுருக்கமாக கற்றிருக்க வேண்டும். அந்த மதம் சொல்லும் அடிப்படை கருத்துக்கள் என்னவென்று அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

மதங்களில் அதிக பற்று உள்ளவர்கள் விரிவாக கற்று விரிவான தேர்வுகளை எழுத வேண்டும். அவர்களின் தேர்ச்சியை பொறுத்தே மத விவகாரங்களில் ஈடுபடும் அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்படும். பொதுவாக இவர்களே மதம் பற்றி பேச வேண்டும். மற்றவர்கள் மதம் பற்றிய சந்தேகங்களை இவர்களிடம் கேட்டுத் தெளிய வேண்டும். இவர்களே உள்ளூர் அளவிலான மதத் தலைவராக வரத் தகுதி பெற்றவர்கள்.

சாதி சங்கங்களுக்கான நிர்வாகக் குழு போன்ற குழுவை இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சான்றோர் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழுவை நியமித்து பொதுவான வேலைகளில் இவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். இவ்வாறான நிர்வாகக் குழு ஊர், ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.     

மதமாற்றம்

தான் பிறந்த மதத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு வயது வந்த நபர் விருப்பப்பட்டால் வேறு மதத்தை தழுவிக் கொள்ளலாம். ஆனால் அவர் அந்த மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை கற்று அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே அவர் அந்த மதத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார். அவ்வாறான மதமாற்ற தேர்வுகளை பொதுவான மத/ சுதந்திர மதக் குழுவினர் நடத்துவர். இவ்வாறு மாற்று மதங்களை தழுவுபவர்களை/ புதிய மதங்களில் சேருபவர்களை சம்பந்தப்பட்ட மதம் அங்கீகரிக்க வேண்டும்.  

சுதந்திர மதம்

சுதந்திர மதம் என்பது எந்த மதத்திலும் இருக்க விரும்பாதவர்கள் சார்ந்துள்ள மதமாகும். தான் பிறந்த மதத்தில் தேர்ச்சி ஒரு வயது வந்த நபர் விருப்பப்பட்டால் இந்த மதத்தில் சேர்ந்துகொள்ளலாம். ஆனால் அவர் அப்பகுதியில் உள்ள மாற்று மதங்கள் பற்றிய அடிப்படை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர் சுதந்திர மதத்தில் சேர முடியும்.

ஆசிரமங்கள்

மதங்களைச் சேர்ந்த அறக்கட்டளைகள், ஆசிரமங்கள் அந்தந்த மதங்களில் தேர்ச்சி பெற்ற நபர்களால் அந்தந்த மதக் கட்டுப்பாட்டின், மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துபவர்கள் மதக் கருத்துக்களுக்கு முரணாக நடந்துகொண்டால்/ நடத்தும் ஆட்கள்/ வாரிசு இல்லாத நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும்.   

புதிய மதங்கள் - கோட்பாடுகள்

மதங்கள் மனிதரை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சமூக அமைப்புகள் என்று கருத்தின் அடிப்படையில் புதிய மதக் கொள்கைகள், கோட்பாடுகளை உருவாக்க, பரப்ப அங்கீகாரம் அளிக்கப்படும்.

தான் பிறந்த மதத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு வயது வந்த நபர் மற்ற மதங்கள் பற்றிய அடிப்படைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர் புதிய மதங்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட வேண்டும். அவர் ஏற்கனவே உள்ள மதங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களையும் தனது புதிய மதத்தின் கருத்துக்களையும் ஒப்பிட்டு அதன் நன்மைகளை விவரிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களே புதிய மதம் பற்றிய கருத்துக்களை வெளியிடலாம். ஆனால் அவ்வாறு வெளியிடும்போது ஒரு உள்ளூர்/ ஒன்றியம் அளவில் உள்ள மத – சுதந்திர மத அறிஞர்கள் இடம்பெறுள்ள பொது மதக் குழுவிடம் தனது கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த குழுவினர் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் அந்தக் கருத்துக்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான பொது மதக் குழுவிடம் தனது கருத்துக்களை சமர்ப்பித்து அவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில் யாரும் தங்களது புதிய மதக் கருத்துக்களை பரப்பக் கூடாது. மீறிப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இல்லற – துறவற சுதந்திரம்

இல்லறமும் துறவறமும் சமமாக பார்க்கப்படும். ஒன்றுக்கு மற்றொன்று உயர்ந்தது அல்ல. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் திருமண பந்தத்தை பேண வேண்டுமா வேண்டாமா என்பதை ஆன்மீக - மத அறிஞர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பிரம்மச்சாரியத்தை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் பாலுணர்வு ஒழுக்கத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மத/ சுதந்திர குழுவினர் முடிவு செய்யவேண்டும். ஆன்மீக வாழ்வில் உள்ள ஒருவர் பிரம்மச்சாரியத்தை தேர்ந்தெடுத்து வாழும்போது அவரது பாலுணர்வு சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. இதற்கு கட்டுப்படாமல் மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆன்மீகத்தில் உள்ள ஒருவரின் பாலுணர்வு குறித்து கேள்வி எழுந்தால் அவர் அது குறித்த சோதனைகளுக்கு உட்பட்டு, தனது வாழ்க்கை முறையை, தனது பாலுணர்வு ஒழுக்கத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மேலவை

அரசாங்கத்தின் மேலவையின் உறுப்பினர்கள் சாதி – மத/ சுதந்திர மத விகிதாச்சாரப்படி உறுப்பினர்களையும், தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தமிழறிஞர்களை உறுப்பினர்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த அவை பல்வேறு சமூக விவகாரங்களில் அரசுக்கும், சாதி-மதங்களுக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். இந்த அவை சொல்லும் பரிந்துரைகளை பரிசீலிக்க/ஏற்க /மறுக்க கீழவைக்கு அதிகாரம் உள்ளது. கீழவையே கொள்கை தீர்மானங்களில் இறுதி முடிவு எடுக்கும். மேலவை வழிகாட்டுதல் அமைப்பாக மட்டுமே செயல்படும். இது சாதி-மத/ சுதந்திர மதம் தொடர்பான சட்டங்களுக்கும் பொருந்துவதாக அமையும்.
                                         ••••••

24 comments:

Mokka Paradeshi said...

"..,அவர் அந்த மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை கற்று அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே அவர் அந்த ம தத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.....," இதனை மதுரை ஆதீனம் அருணகிரி அவர்கள் 1975 களிலிருந்தே கடைப்பிடித்து வருகிறார் !. அவர் மதமாற்றம் நடத்திய தேர்வுகளை நான் பலமுறை நேரில் கண்டுள்ளேன்.
உங்களின் கருத்துகள்,திட்ட முன்வடிவினை, ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், சாதிய அமைப்புகளை கலைத்திட வேண்டும். அவ்வாறு புதிய அமைப்புகளை ஒரு சாதிக்குரிய உட்சாதிப்பிரிவுகளையும் கலந்து அறிவிக்க வேண்டும். ஏனென்னில், உட்சாதியர்கள் ஒருசாதியின் பெயரால் ஒருங்கிணைய விரும்பவில்லையெனில், அவர்கள் தங்களுக்கான அமைப்பை தனியே உருவாக்கிட அனுமதித்தல் வேண்டும் .மேலும்,மதத்தலைவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து பதவிக்கு வரக்கூடாது !.தனியார் டிரஸ்டுகளின் வாரிசுகள் பதவிக்கு வருவது ஆட்சேபனைக்கு உரியதல்ல !. குறிப்பிட்ட சாதிகளுக்கு உரிமையான பீடங்களிருப்பின், சாதிய அமைப்புகளின் உறுப்பினர்களிடம் தேர்தல் நடத்தி அடுத்த தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் .!.நடைமுறைகளில், பொறுப்புகளில் உள்ளவர்களுக்குள் தகராறு,பேதங்கள் உண்டாகுமாயின் , மொத்த சாதியினரின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தி தீர்க்கப்பட வேண்டும்.

Mokka Paradeshi said...

"...,புதிய மதம் பற்றிய கருத்துக்களை வெளியிடலாம். ஆனால் அவ்வாறு வெளியிடும்போது ஒரு உள்ளூர்/ ஒன்றியம் அளவில் உள்ள மத – சுதந்திர மத அறிஞர்கள் இடம்பெறுள்ள பொது மதக் குழுவிடம் தனது கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த குழுவினர் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் அந்தக் கருத்துக்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான பொது மதக் குழுவிடம் தனது கருத்துக்களை சமர்ப்பித்து அவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும்......." ஏற்கனவே உள்ள இவர்களின் கூட்டம் புதிய சிந்தனையை ஏற்குமா என்பது சந்தேகமே !. அனைத்து மதங்களின் கோட்பாடுகளின் தேர்வில் முழு தகுதி பெற்ற எவரும் புதுமத பிரகடனம் செய்யலாம். ஏனெனில், அனநித்து மதங்களின் தலைமையிடமும் அவர் தேர்வு சான்று பெற்றிருப்பதே போதுமானது. மற்றுமொரு குழுவிடம் அங்கீகாரம் தேவையில்லை.

தேவன் said...

திரு ஸ்டாலின் ஃபெலிக்ஸ் அவர்களின் கேள்விகளும் பதில்களும்

.//எந்தெந்த தலைவர்கள் என இதை கொஞ்சம் விளக்கினால் நலமாக இருக்கும்......//


தமிழகத்தில் இதுநாள் வரை ஆட்சி செய்த எல்லா தலைவர்களும் இதில் அடங்குவர்.//இது என்ன கதையா இருக்கு? சாதியை ஒழிக்க முற்பட்டவர்களால் பிளவு ஏற்பட்டதா?தோராயமாக சாதியை ஒழிக்க முற்பட்ட காலத்தையும் அந்த சாதி ஒழிப்பாலர்களையும் பற்றி அறிய தாருங்களேன்... //

இது புதுக் கதையெல்லாம் இல்லை. உண்மை அதுதான். அவர்கள் சரியாக வேலை செய்திருந்தால், இன்று சாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை.//நடைமுறைக்கு சாத்தியமா என யோசித்தால் தனிதமிழ் நாடு கூட இந்த நுகர்வு கலாச்சார உலகில் சாத்தியமே இல்லை.. //


நடை முறை என்பது மக்களால் விரும்பப்படுவது. மக்கள் விரும்பவில்லை என்றால் தனித் தமிழ்நாட்டையும் உருவாக்க முடியாது என்பது நிச்சயம்.//மதம் மாறியவர்கள் இதை எப்படி எதிர்கொண்டார்கள்?//


மதம் மாறியவர்கள் அனைவரும் கருத்துக்களை, கொள்கைகளை, வழக்கங்களை முழுதாக அறிந்துதான் மாறினார்கள் என்கிறீர்களா?


//விஷேசம் அல்ல....விஷ கட்டாமைப்பு...... சக மனிதனை பாகுபாடோடு அணுகும் கட்டமைப்பு உங்களுக்கு விசேசமா?//


அப்படி பரப்பப்பட்டுள்ளது. எப்போதும் பாகுபாடோடு அணுகியது என்று சொல்ல முடியுமா?


//ஒரு சாதிக்கு மட்டும் என பழக்கவழக்கங்கள் குறுகிக் கொண்டது தற்காலத்தில் தான்...... காலம் காலமாக நெருக்கமாய் வாழ்ந்து கொண்டிருந்த பல சாதிகளிடம் ஒற்றுமையான பழக்கங்கள் இருந்து வந்துள்ளன.....//


நீங்களே சொல்லிவிட்டீர்கள் காலம் காலமாக நெருக்கமாக வாழ்ந்து வந்த சாதிகள் என்று. நான் அந்த நிலையைத்தான் திரும்ப அடைய வேண்டும் என்கிறேன்.//தலித்துகளுக்கு, சாதி சிறுபான்மையினருக்கு இது போன்ற குழுக்கள் தேவையாக இருக்கலாம்... அதிகக சாதிகளுக்கு??//இந்த கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தலித்களுக்கும் சிறுபாண்மையினருக்கும் குழுக்கள் தேவையாய் இருக்கும்போது பெரும்பான்மையினருக்கு ஏன் தேவைப்படக் கூடாது?//ஆனால், அப்படி இல்லையே....... //

அதனால்தான் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.


//எதுக்கு தேர்தல் அரசியலில் நிற்கவா?//


அது அவர்களது விருப்பம்.


//பரமக்குடி ஞாபகம் வருகிறது......//


இன்னும் நிறைய இடங்கள் நினைவுக்கு வரலாம்.

//கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரைக்கும் அப்படி தீர்க்கப்பட்ட மோதல்கள் பற்றி தகவல் தாருங்களேன்..... //

இல்லாத காரணத்தால்தான் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.


//சாதி வேணும், சாதி பழக்கவழக்கம் வேணும், சாதி குழும ஒற்றுமை வேணும், சாதி வரலாற்று பெருமிதம் வேண்டும் என எல்லாம் சொல்லி கடைசியில் வேறு ஒருவன் வந்து உதவி செய்யணுமா :))//


அது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
//இது தான் அடிப்படை பிரச்சனை தேவன்........ வரலாற்று பெருமிதம் உள்ள சாதிகள் பெருமிதம் பேசி திரிகின்றனர். மற்றவர்கள்?!?!?!?


என்னுடைய புரிதலில் எந்த பெரும் சாதிகளும் 'ஆண்ட பரம்பரை' கிடையாது.... ஓரளவு ஜமீன் அளவில் செல்வாக்காக இருந்தாலே அவன் அரசன்...... பிற்காலத்தில் அந்த சாதிகள் ஆண்ட பரம்பரை என விளித்துக் கொண்டிருக்கின்றனர்........

மிக பச்சையாக சொல்வதாக இருந்தால் 'வைப்பாட்டி' முறையில் உருவான வாரிசுகள் கூட இன்று ஆண்டபரம்பரை என கூறித் திரிகின்றனர்..//

மற்றவர்கள் பெருமை பேசினால் அது எப்படி இன்னொருவரை பாதிக்கும் என்று சொல்கிறீர்கள். வகுப்பில் முதல்வனாக வரும் மாணவர் பெருமையாக பேசினால் அது எப்படி மற்றவரை பாதிப்பதாக அமையும்.

நான் ஆண்ட பரம்பரை என்று எங்கும் சொல்ல வில்லை. செட்டியார்கள் வங்கி நடத்தினார்கள் என்ற பெருமை யாரையாவது பாதிக்கிறதா?

ஒருவரை எதிரியாக பாவித்தால் அவர் செய்யும் அனைத்துச் செயல்களுமே பாதிப்பதாகத்தான் தெரியும்.//இதுக்கு பேரு தான் ஆண்டான் அடிமை தேவன்??தாழ்த்தப்பட்டோருக்கு பெருமை இது தான் என சொல்லிக் கொள்ள நாம் யார் தேவன்?//


அதை நான் சொல்லவில்லை. அப்படி சொல்லலாம் என்பதை உதாரணமாகத்தான் சொன்னேன். அப்படி சொல்வதும் சொல்லாத்தும் அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் உழைத்தார்கள் என்பது உண்மைதானே? உழைப்பு என்பது எப்போதாவது கேவலமானதாக ஆகுமா?


//ஆண்டபரம்பரை நான்... நீ எனக்கு வேலை செய்தவன் என சொல்லி விட்டு அவனை தாழ்வு படத்த கூடாதா நல்லா இருக்கு சார்...//

இதை நான் பயன்படுத்த வில்லை.

தேவன் said...

திரு தமிழ்ப்பயணியின் கேள்விகளும் பதில்களும்// தொடர்ந்து சுதந்திர சாதியனர் மற்றும் கலப்பு திருமணம் குறித்தானவைகள். சுதந்திர சாதி என்ற ஒன்றை புதியதாக
உருவாக்குகிறீர்கள். இந்தியாவில் சாதி சாராதவர் என்று அவரவர் விருப்ப படி தொடர சுதந்திரம் உள்ளது. கலப்பு திருமணம்
அவ்வாறே. வயதுவந்த எந்த ஆணும், பெண்ணும் தம் விருப்ப படி மண வாழ்வை துவங்கலாம்.//

சுதந்திர சாதி என்பது எந்த சாதியையும் சேராதவர் என்று பொருள். இந்தியச் சட்டங்களும் அரசியல்வாதிகளும் முரணானவர்கள் இவர்கள் எந்த சட்டத்தையும் அமல்படுத்த விரும்புவதில்லை. அதனால்தான் எத்தனை நல்ல சட்டங்கள் இருந்தாலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை.


//இன்றைய இந்தியாவில் சாதி விரும்பிலிகள் தனித்து இயங்க பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் தங்கள் கருத்தின் படி இவர்கள் எல்லாம் ஒன்றாக சங்கம் அமைக்க வேண்டிய நிர்பந்தம் என்னவென்று புரியவில்லை. சுருங்க கூறின் தெய்வ நம்பிக்கையுடன் சாதி மறுப்பவரும்,
இறைமறுப்பாளர்களும் ஒன்றாக சங்கம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? எதையும் அரசு தரப்பு திணிக்க கூடாது.//
சங்கம் ஏன் அமைக்க வேண்டும் என்றால், இவர்களும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் சாதியை ஒழிக்கச் சொல்கிறார்கள். மறுபக்கம் சாதியை வளர்க்கிறார்கள். சாதி மோதல்களுக்கு இவர்களும் காரணமாக அமைகிறார்கள். அவர்கள் ஒரு சங்கத்திற்குள் இருந்தால்தான் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
இதில் இறை மறுப்பாளர்களும் அடங்குவர். இவர்களும் துவேஷத்தை வளர்க்கலாம் அல்லவா? இப்போது அதுதானே நடைபெற்று வருகிறது?


//ஒரு தனிநபர் சொந்த சாதியிலிருந்து வெளியேறும் சுயமான முடிவுக்கு பிறர் எதற்க்கு பொருளாதார பாதுகாப்பு தர வேண்டும்? //

பொருளாதார பாதுகாப்பு என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து தடம்புரளாமல் இருக்க. எனவே சாதியை விட்டு வெளியேறச் சொல்லும் ஒரு பிரிவினர், தங்கள் கொள்கை காரணமாக இதுபோல பொருளாதார சீரழிவை அடையும் நபருக்கு உதவி செய்வது அவசியமாகிறது.

ஏனெனில் இது சாதியில் இருப்பவருக்கு கிடைக்கிறது. இது சாதியில் இருந்து வெளியேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமாகிறது. பொருளாதாரம் காரணமாக காதல் திருமணங்கள் முறிகின்றன. எனவே அதை தடுக்க இதைச் செய்ய வேண்டும்.


// கலப்புத் திருமணத்தை இப்போதே ஏற்றுக் கொண்டு தான் உள்ளார்கள். எந்த சாதியிலும் கலப்பு மண தம்பதியினர்களை காண இயலும். //

இதை அதிகாரப்பூர்வமாக அனுமதித்தால் இன்னும் பலருக்கு உதவியாக இருக்கலாம். இது சாதி ஒழிப்புக்கு அல்லது சாதி வளர்ப்புக்கு உதவியாக இருக்கலாம். கலப்புத் திருமண ஜோடிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இந்திய சட்டங்கள் இருந்தாலும் இந்தியாவில் இந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை.

தேவன் said...

திரு தமிழ்ப்பயணியின் கேள்விகளும் பதில்களும்

//கலப்புத் திருமணம் செய்வோருக்கான சுதந்திரம் தற்பொழுதே இந்த வசதிகள் சமூகத்தில் உள்ளது. //
அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதே இதன் நோக்கம்.

//ஒருவருடைய சாதிய நிலைப்பாட்டை அவரவர்தான் சுதந்திரமாக அறிவிக்க வேண்டுமோ ஒழிய சாதி சங்கங்கள் அங்கீகாரம் தேவையில்லை. //

அவர்கள் அங்கீகரித்தால்தான் அவர்களுக்கு எந்தவித துன்புறுத்தலும் இருக்காது. இல்லையென்றால் விரும்பத் தகாத விளைவுகள் நடக்கலாம். தற்போது நடப்பது போல.


//இதில் இரட்டை குடியுரிமை போன்றதை அனுமதிப்பது என்பது சாதி என்ற சொல்லையே கேலிக்குறியதாக்கி விடுகிறது. ஒருவர் படிக்கும்
வரையிலும் இடஒதுக்கீட்டு சாதியில் இருந்து கொண்டு விட்டு திருமணத்தின் போது வேறு சாதியினை மேற்க் கொள்ளும் கேலிகள் அரங்கேறும். எனவே ஏதோ ஒன்றில் தொடர அனுமதிப்பதே இப்போதைக்கு இந்தியாவில் உள்ளது. //

சாதி கேலிக்குரியதாக ஆனால் நல்லதுதானே? விருப்பப்பட்டவர் விருப்பப்பட்டபடி இருக்கட்டுமே? இட ஒதுக்கீட்டின்படி வசதிகளைப் பெற்று பின்னர் சாதி மாறினால், அவர்களை பொது ஒதுக்கீட்டு முறைக்கு மாற்றிவிடலாம்.

//தற்போதும் சாதி சார குடிமக்களாகவும், இல்லறமும் மேற்க் கொள்ள எந்த கட்டுபாடும் கிடையாது. முழு சுதந்திரம் உள்ளது. //

இந்தியாவுல அந்த முழுச் சுதந்திரம் இருக்கிறதுனாலதான உபி. பிகார்-ல காப்(சாதி) பஞ்சாயத்துல அடிச்சு கொல்றாங்க.


எந்த வித பாதுகாப்பிற்க்கும் சங்கங்களை பொறுப்பாக்க கூடாது. சங்கங்கள் பணம் காய்ச்சி மரங்கள் அல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டும்
எனில் இன்றைய மதமாற்ற நிகழ்வுகள் போன்ற சூழலை எதிர்நோக்கலாம்.
(#வெறும் உதாரணம் மட்டுமே. எந்த மதத்தையும் தனிப்பட்டு குறிப்பதல்ல)//தற்போது இந்தியாவில் தீண்டாமை சட்டத்தின் படி தண்டனை வழங்க படுகிறது. சட்டபடியான தண்டனை காலத்தில் தேவையானால்
ஆலோசனை அளித்தல் நலமானது. மற்றபடி குற்றவாளிகளை தண்டனையின்றி திருத்தும் முயற்ச்சி பலனற்றது.//

இந்தியாவில் இந்த சட்டங்களை யாரும் அமல் படுத்துவது கிடையாது. அதேவேளையில் இந்த சட்டங்கள் பிடிக்காதவர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்க காரணம் சமூக பிளவே. அது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

// ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு சாதிச் சங்கமும் தங்கள் வரம்புக்குட்பட்ட பகுதியில் தீண்டாமை கொடுமைகளை முற்றிலுமாக ஒழித்து விடவேண்டும்.
அப்படி ஒழிக்கப்பட்ட பகுதிகள் தீண்டாமை ஒழிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும். அந்த பகுதி மக்கள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். //

வெறும் நல்லெண நடவடிக்கைகள் மட்டுமே. சட்ட பூர்வமானவைகள் அதிகம் இல்லை.

தேவன் said...

திரு செல்வன் அவர்களின் கருத்து,

// இன்றைய இந்திய அரசியல் சாசன சட்ட உரிமைகள் மூலம் அனைவரும் அவரவர் சாதிகளை பற்றிய பெருமைகளை பேசலாம் என்ற உரிமை உண்டு. //


அதைத்தான் நானும் சொல்கிறேன். ஏனெனில் அது மக்களின் விருப்பமாக அமைகிறது.

தேவன் said...

திரு செல்வன் அவர்களின் கருத்து
//தனி மனித சுதந்திரத்தை அனுமதிக்கும் எந்த கட்டமைப்பிலும் ஜாதி, மதத்தை ஒழிக்க முடியாது.

அந்த சுதந்திரத்தை மறுக்கும் அமைப்புக்கள் தானாகவே அழிந்துவிடும். ரஷ்யாவில் ஜாதி இல்லை,. மதம் இல்லை, இனம் இல்லை என சொல்லிகொண்டிருந்தார்கள். இன்றைக்கு ரஷ்யாவே இல்லாமல் போனதே ஒழிய ஜாதி,இனம், மதம் எல்லாம் அங்கே முன்பை விட வலுவாக தான் இருக்கிறது.

அந்த விதத்தில் தேவனின் கட்டுரை யதார்த்ததை பிரதிபலிக்கிறது. //

தேவன் said...

நன்றி, செல்வன் அவர்களே.

தேவன் said...

// சட்டத்தின் ஆட்சி பற்றி தேவன் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அதைப்பற்றி நீங்கள் முடித்தவுடன் பேசுவோம். //


திரு ராஜா சங்கர் அவர்களே,

நீங்கள் கட்டுரையை முழுவதுமாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மேலவையின் மூலமாக சட்டம் இயற்றுவது வரை சாதி-மத- சுதந்திர சாதி-மத குழுவினருக்கு பங்களிக்க வகை செய்திருக்கிறேன். அதேவேளையில் கீழவையே இறுதி முடிவு செய்யும் அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

அதேபோல இந்த கட்டமைப்பு முழுக்க முழுக்க சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடே. அதனால்தான் சாதிச் சாங்கங்களின் அரசாங்க பிரநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்.

தேவன் said...

திரு செல்வனின் கருத்து,
ஜாதி மாறலாம் என சட்டம் வந்தால் இட ஒதுகீட்டுக்காக எல்லாரும் தலித் ஜாதிகளுக்கு மாறிவிடுவார்கள்:-). ஒரே நாளில் சமத்துவம் வந்துவிடும்:-)

மற்றபடி ஜாதி தனி மனித அளவில் இருக்கலாம். ஜாதிக்கு ஒரு பிரதிநிதி என எல்லாம் அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டியதில்லை, மேலவை/ சட்டபேரவை இடங்கள் எல்லாம் வேண்டியதில்லை என்பது என் கருத்து.

திரு செல்வன் அவர்களே,

தலித் சாதிக்கு மாறுபவர்களுக்கு பொது ஒதுக்கீடு வழங்கப்படும்.
மேலவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும்போது அந்த சாதியினரின் கருத்து நேரடியாக அரசுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

தேவன் said...

திரு தமிழ்ப் பயணி அவர்களின் கேள்விகளும் பதில்களும்

//இந்த சாதி சங்கம் அமைக்கும் உரிமை தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளதே. //

அந்த உரிமையால் ஏற்படும் பயன் என்ன?

// சாதிச் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற, சட்ட ரீதியிலான சமூக அமைப்பாக செயல்படும். ஒரு அரசு நிறுவனத்திற்கு எத்தனை பொறுப்பு - கடமை இருக்கிறதோ அதே பொறுப்பு கடமை இந்த சங்கங்களுக்கு இருக்க வேண்டும்.
ஒரு பகுதியில் வாழும் நபர்களில் குறைந்தது 100 பேர் கொண்டு தங்களது சாதிக்கு சங்கம் அமைத்துக் கொள்ளலாம். நூறுக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள சங்கங்களில் இணைந்து கொள்ள வேண்டும்.//

//மிக மிக கடுமையாக எதிர்க்க படவேண்டிய விதிகள் இந்த இரண்டும்.மிக அடிப்படையாக எந்தவொரு தனிநபரும் தனக்கான சாதி சங்கத்தை உருவாக்கி கொள்ள அனுமதி வேண்டும். 100 பேர் இருந்தால் ஒரே சாதியினை சார்ந்த 100 நூறு சங்கங்கள் உருவாக்க உரிமை தரவேண்டும். நீங்கள் கூறியுள்ள முறையானது இன்றைக்கு உள்ள ஓரளவு இறுக்கமற்ற முறை உடைத்து மீண்டும் சாதி அடிப்படையிலான கட்டு திட்டமான நிலையை சமூகத்தில் உருவாக்கி விடும்.

101 பேர் கொண்ட சாதி சங்கம் ஒரு தீர்மானத்தை போட்டு விட்டால் விருப்பமில்லாதவரும் அதை ஆதரிக்க வேண்டிய சர்வாதிகார சூழல் உருவாகி விடுகிறது. மறுப்பாரேயானால் சாதி விலக்கல் போன்றவற்றை சந்திக்க கூடும். சாதரண தெய்வ வழிபாடு முறைமையிலேயே ஒரு சாதிக்குள்ளேயே ஏகப் பட்ட சர்ச்சைகள் உண்டாவது வழமை. ஒரு கட்டாய நன்கொடை வசூல் தீர்மானம் போட்டு விட்டால் இதற்க்காக எல்லாம் பல்லை கடித்து கொண்டு தொடரவும் இயலாது, சாதியை விட்டு விலகி சுதந்திர சாதியாகவும் மாற யாருக்கும் விருப்பம் இராது.//

எந்தவொரு நபரும் அல்ல. எப்படிப்பட்ட நபர் என்பதை அவர்களுக்கான தகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கம் தனிநபருக்காக அல்ல மக்களுக்காக. இப்போதும் சங்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன. இதுபோன்ற முயற்சியால் மக்ள் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். இல்லாவிடில் சுதந்திரமாக தன்னிச்சைப்படி செயல்படலாம்.

விருப்பமில்லாதவர் சுதந்திர சாதியில் சேர்ந்துகொள்ளலாமே. இதில் சர்வாதிகாரம் எங்கே வருகிறது? மறுப்பவருக்கு ஆதரவாகத்தான் சுதந்திர சாதிச் சங்கங்கள் உள்ளனவே? இதுபோன்ற ஒழுங்குமுறைகள் இல்லாத காரணத்தால்தான் சாதிக்குள் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. ஒழுங்குபடுத்தினால் அது போன்ற சர்ச்சைகள் ஏற்படாது. கட்டாய வசூல் தீர்மானம் எப்படி போட முடியும்? மக்கள், செயற்குழு ஆதரவு இருந்தால்தான் தீர்மானம் போட முடியும். மேலும் மாநில சங்கங்கள் அதற்கு ஒப்புதல் அனுமதிக்க வேண்டியிருக்கும்போது இதில் தன்னிச்சையாக செயல்பட வாய்ப்பில்லை.

தேவன் said...

திரு தமிழ்ப்பயணி அவர்களின் கேள்விகளும் பதில்களும்

// அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களிடம் மாநில அளவிலான சாதி-மதக் குழுவினரரின் பரிந்துரையின்படி அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சேர்க்கை கட்டணம்/ மாதாந்திர சந்தா வசூலிக்கலாம். விசேஷே விழாக்கள், கூட்டங்கள், சேவைகளுக்காக விசேஷ நிதி திரட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு இணைபவர்களுக்கு சாதிச் சங்கங்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டையில் சங்கத்தின் முகவரி, உறுப்பினரின் படம், முகவரி, பிறந்த தேதி, உறுப்பினர் அட்டையின் வரிசை எண் சங்கத்தின் வரிசை எண் போன்றவை இடம்பெற வேண்டும். முடிந்தால் புகைப்படம், கைரேகை, கண் ரேகை போன்றவற்றை பதிவு செய்வது சிறப்பு.

இந்திய எதிர்ப்பாளர்களால் பெரிதும் பேசப்படும் மனு வின் இணைய தலைமுறை பதிப்பினை இவ்விரு விதிகளும் நடைமுறையில் கொண்டு வரும். சாதி சங்கம் என்பது அந்த சாதியை சார்ந்த மக்களுக்கு சில பொருளியியல் மற்றும் அரசியல் நன்மை செய்வதற்க்காக தான் இருக்கனுமே ஒழிய அவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான முத்திரை குத்துவதாக இருந்திட கூடாது.///

இது ரெண்டும் இந்தியாவுல இருக்கத்தானே செய்கிறது. சாதியிலிருந்து வெளியேற அனுமதி கொடுத்திருக்கிறப்ப அது எப்படி வளரும்? சாதிச் சங்கம் அவர்களின் பொருளாதார - அரசியல் நன்மைகளுக்காகத்தான் அமைக்கப்படுகிறது. இதில் சாதி முத்திரையை எடுக்க முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

// ஒவ்வொரு சங்கத்திற்கும் அரசு தனது சார்பில் அதே சாதியைச் சேர்ந்த ஒருவரை பார்வையாளராக நியமிக்கலாம். அவர் அரசுக்கும் சாதிச் சங்கத்திற்கும் தொடர்பாளராக இருக்கலாம்.
இப்படி நியமிக்கபடும் அதே சாதி அதிகாரி ஒரு பிரச்சினையில் தன் ஒட்டு மொத்த சாதியினரும் தன்னை விலக்கி விடும் சூழலை கண்டு பயப்பட வேண்டிய சூழல். அரசிற்க்கு முழுமையாக பணியாற்ற இயலாது. வேறொரு கோணத்தில் பார்க்க போனால் அந்த சாதியையே இவர் சொல்லுவதை தான் கேட்கனும் என்ற ரீதியில் கொண்டு வருவார். இவரிடம் தான் அரசு அதிகாரம் இருக்கு.//

எதற்கு பயப்படனும்? அவர் அரசுக்கும் சாதிச் சங்கத்திற்கும் பாலமாக இருப்பார்? மேலும் அவரது வேலை முழுக்க முழுக்க பார்வையாளர் மட்டும்தான். இதன் மூலம் அந்த மக்களின் கருத்தை அரசாங்கம் அறிய வாய்ப்புள்ளது. அவர் அரசுக்கு எதற்காக பணியாற்ற வேண்டும். அவரது வேலையே சமூக சேவைதான். அங்கு நடப்பதை அறிக்கையாக அளிப்பதுதான்.

தேவன் said...

// இவ்வாறு அமைக்கப்படும் சங்கங்கள் அரசாங்கத்தின் நலச் சங்க சட்ட விதிமுறைகளுக்கு கீழாக பதிவு செய்யப்பட வேண்டும். அந்த சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப 5, 7, 11, 13 போன்ற ஒற்றைப் படையிலான செயற்குழு மற்றும் தலைவர் துணைத் தலைவர் போன்ற பதவிகள் முதலில் நிர்ணயிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சாதரணமாக சங்க அமைப்பிற்க்கு யாவற்றுக்கும் இதுதான் நடைமுறை. //
அதனால்தான் அதை அப்படியே எடுத்திருக்கிறேன்.

//இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் ஒருவருக்கு மாற்று என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்களின் தகுதிகளை வரையறுக்க வேண்டும். இவர்களுக்கு அடிப்படைத் தகுதியாக அதிகபட்ச கல்வித் தகுதி (அந்த சங்கத்தில் அதிகம் படித்தவர்களுக்கு), சமுதாய ஈடுபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு சாதி சங்கத்தில் படிப்பிற்க்கு என்ன முக்கியதுவம் என்பது இன்னமும் புரியவில்லை. தலைவாரி அதிக ஆதரவு மட்டுமே உண்மையான பெரும்பான்மை. //
சாதிச் சங்கங்களில் படித்தவர்கள் இருந்தால்தான் அந்த சாதி மக்களை நல்வழிப்படுத்த முடியும். அதற்காகத்தான் அந்த முக்கியத்துவம்.

//இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் கால வரம்பு (உதாரணமாக 5 ஆண்டுகள்) கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவரின் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்படும்பட்சத்தில் அந்த சாதி மக்கள் அவரை மாற்ற விருப்பம் தெரிவிக்கலாம்.

தெரிவு செய்ய பட்டவரை திரும்ப பெறுதல் என்பது தற்போதைக்கு பல இடங்களில் பேச்சில் உள்ளது. இதன் நடை முறை சாதக, பாதகங்கள் முழுமையாக அறியஇயலவில்லை.//
இதில் பாதகம் இருக்க வாய்ப்பில்லை. அப்போதுதான் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை சரியாகச் செய்வர்.

தேவன் said...

//தலைவராக உள்ள ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் இருக்கக் கூடாது.

நல்ல யோசனையே.//

நன்றி

//ஊர்ச்சங்கத்தில் உள்ள ஒருவர் இரண்டு முறைக்கு பின்னர் வட்ட, மாவட்ட தலைமைப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.

அந்த சங்கத்தின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு தலைவரை மாற்ற விருப்பம் தெரிவித்தால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் அந்த பதவிக்கு உயர்த்தப்படுவார். அதாவது மக்கள், தலைவராக உள்ளவரை பதவியிலிருந்து நீக்க விரும்பினால் துணைத் தலைவர் தானாகவே அந்த இடத்திற்கு உயர்த்தப்படுவார்.

தேர்தல் முறையின்றி வேறு எவ்வாறாகினும் பதவியினை பெறுதல் தவறு. தற்போதைய இந்தியாவில் குடியரசு தலைவர் பதவி தவிர வேறு எதுவும் மறுதேர்தலன்றி நிரப்ப படுதல் கிடையாது. //

இந்திய ஜனாதிபதி பதவியே கேள்விக்குறியானது. இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு மறுதேர்தல் இல்லாமல் நிரப்பப்படுவதால் மக்களின் பணத்தை மிச்சமாக்கலாம்.

// அரிய நிகழ்வாக, பதவிக்கான கால வரம்புக்குள் தலைவர், துணைத் தலைவர் போன்ற இருவரும் அடுத்தடுத்து நீக்கப்பட்டால், செயலாளர், துணைச் செயலாளர் அந்த பதவிக்கு உயர்த்தப்படலாம்.

சாதரண நிர்வாக விதிமுறைகள் இது. உசிதம் போல வைச்சுக்கலாம்.//

இதுதான் மறுதேர்தல் இல்லாமல் நிரப்பப்படும் முறை.

//தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான அடிப்படை தகுதிகளில் மக்களுக்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள், பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் திறனுள்ளவர்கள், கூட்டத்தினரை கையாளும் திறனுள்ளவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
14. இவர்கள் தங்கள் ஊரில்/ பகுதியில் உள்ள மாற்றுச் சாதிச் சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களாக, அவர்களது விழாக்கள் மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும்.

15. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சங்கங்கள் ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலச் சங்கம் என ஒரே தலைமை அமைப்பின் கீழாக இருக்க வேண்டும்.

பிறப்பால் அனைவரும் ஒரே சாதி என்ற ரீதியில் மற்ற தகுதி பார்ப்பது முறையற்றது. இந்திய சங்கங்களில் இவ்வாறு பார்ப்பது கிடையாது. //

உங்கள் கருத்து தவறானது. சாதி என்றாலும் நிர்வாகம் சிறப்பாக இருக்க தகுதி அடிப்படையானது. தகுதி இல்லாதவர்கள் திறம்பட செயல்பட முடியாது. இந்தியாவில் இது போல இல்லாத்தால்தான் பல பிரச்சனைகள் வெடிக்கின்றன.

தேவன் said...

திரு வினோத் அவர்களின் கேள்விகளும் பதில்களும்.

//1 ) ஒரு சாதியில் இருந்து வெளியேற விரும்புபவர்.. சுதந்திர சாதியல்லாத வேறு சாதியில் தன்னை இணைத்துக் கொள்ள வழி உண்டா ?//

1. கலப்புத் திருமணம் செய்யும் ஒரு தம்பதி தாங்கள் சார்ந்த இரண்டு சாதிகளில் ஒன்றுடன் சேர்ந்துகொள்ளலாம்.
2. அல்லது இரண்டு சாதியினருடனும் உறவு வைத்துக்கொள்ள விரும்பலாம்.
3. அல்லது சாதிகளிலிருந்து வெளியேறிவிட முடிவு செய்யலாம்.

//2 ) வேறு மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாற விரும்புபவர் எந்த சாதியில், எந்த பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் ?? ( தேவரா, வன்னியரா, முதலியாரா.. )//

அது அவரது விருப்பம்.

//3 ) இயற்கையாக நிகழக் கூடிய ஆண்-பெண் பூப்பெய்தும் ( வயதுக்கு வரும் ) நிகழ்வுக்கு பொத்தாம் பொதுவாக ( குறைந்த பட்சம் ஒரு மருத்துவரின் பரிந்துரை கூட பெறாமல் முட்டாள்தனமாக ) காலக்கெடு குறிக்கும் அரசாங்கம், ஒரு பிள்ளை பிறந்து எழுந்து நடக்கத் தொடங்கி பேசி, எழுதி, புரிந்து, வயதுக்கு வந்து சுயமாக முடிவெடுப்பதற்கு முன்பாக அவனுக்கான சாதியை பெற்றவர்கள் உட்பட யாரும் பெயரிலோ, சின்னத்திலோ, வழிபாட்டு முறையிலோ திணிக்கக் கூடாது என்பதற்கு ஏதேனும் விதிமுறையை, காலக்கெடுவை குறிக்குமா ??? ( அதுவரை அவன் சுதந்திர சாதி அல்லது சாதி, மதமற்றவன் என வேறு பிரிவுகளில் இருந்து விட்டு போகட்டுமே )//

வயதுக்கு வருதல் என்பது 18 வயதை அடைவது.

ஒருவர் வயதுக்கு வரும் வரை குழந்தையாக இருக்கிறார். அவரது பெற்றோர் அவரை தங்களது சாதியில்/ சுதந்திர சாதியில் வளர்க்க விரும்பலாம். வயதுக்கு வந்த பின்னரே அவருக்கு சாதி விஷயத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க உரிமையுள்ளது.

அந்த குழந்தை சுதந்திரமாக இருக்க வேண்டுமென்றால் அவரை யார் வளர்ப்பது? யார் வளர்த்தாலும் அவர் சார்ந்த கருத்துக்கள் அந்த குழந்தைக்குள் இறங்க வாய்ப்புள்ளது.

//4 ) பெற்றோர் யாரெனத் தெரியாத அநாதை பிள்ளைகள் எந்த சாதியினராக கருதப்படுவர் ???? ( இப்போதைக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் )//

அவர்கள் சுதந்திர சாதியைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோராகவே கருதப்படுவர். வயதுக்கு வந்த பின் அது அவரது விருப்பமாக அமையும்.

தனித் தமிழ்நாட்டில் குழந்தைகள் அனாதையாக விடப்படாமலிருக்க/ தொழிலாளியாக இல்லாமலிருக்க அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

//5 ) எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாய் தன் பிள்ளையை தன் சாதியை சேர்ந்தவன் என தந்தையை மீறி அறிவிக்க இயலுமா ?????//

ஒரு தாய் மட்டுமே, தனது கணவனின் ஆதரவு இல்லாமல் தன் சுய உழைப்பில் குடும்பத்தை நடத்துபவராக இருந்தால் அவர் தன் குழந்தை தான் விரும்பும் சாதியில் இருக்க வேண்டும் என்று விரும்பலாம். அந்த குழந்தை வயதுக்கு வந்த பின் குழந்தை தன் விருப்பப்படி நடந்துகொள்ளலாம்.

ஒரே சாதியை சேர்ந்த/ வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் குடும்பமாக இருக்கும்பட்சத்தில், தாங்கள் விரும்பும் சாதியை பின்பற்ற அவர்களுக்கு உரிமையுள்ளது. அது கூட்டு முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய தனிப்பட்ட விருப்பமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது.

அது போன்ற கணவன் மனைவி விவாகரத்து செய்யும்பட்சத்தில் அவர்கள் தங்கள் குழந்தையின் சாதிக் கொள்கையை முடிவு செய்யும் உரிமை பெற்றுள்ளனர். ஆனால் அதுவும் அவர் வயதுக்கு வரும் வரை மட்டுமே.

//6 ) பிற சாதியினர், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்ற பிரிவுகளுக்கு புதிய கருத்துருவாக்கம் சாத்தியமா?//

புதிய கருத்துருவாக்கம் என்று எதைச் சொல்கிறீர்கள்? அவர்கள் இருந்தபடியே இருக்கலாம்.

//7 ) எல்லா பிரிவு சாதி பிரிவிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு பெற வாய்ப்புகள் உருவாக்கப்படுமா ??//

ஆமாம். அதுதானே பொது ஒதுக்கீட்டு முறை.

தேவன் said...

திரு பிரகாஷ் சுகுமாறன் அவர்களின் கேள்விகளும் பதில்களும்

// நான் உடனே தேவரா மாறனும். தேவர் எந்த பட்டியலில் வருகிறார் ?பி.சி.யா., எம்.பி.சி.யா., ஓ.சி.யா., ? அதையெல்லாம் விடுங்க எனக்கு ஐயரா மாறனும்.. வழியுண்டா?//

இரண்டுமே முரணான விருப்பம். ஒன்று தேவராகணும் இல்லை ஐயராகணும்.
தேவர் பி.சி.

இந்த சாதிகள் விரும்பினால் தங்கள் சாதிகளில் சேர விதிமுறைகளை உருவாக்கலாம். அதைக் கடந்தால் நீங்கள் அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம்.

//எந்த வயதில் யார் வயதுக்கு வருவது என முடிவு செய்வது யார் ?? 18 வயதில்தான் வயதுக்கு வரவேண்டும் என கொள்கை முடிவு எடுத்தது யார் ?//

இது அரசியல் சட்டம். இதை இன்னும் குறைத்தால் கூட நானும் சந்தோஷப்படுவேன். ஆனால் அதற்கான விஞ்ஞான, அரசியல், சமூக காரணிகளை ஆராய்வது நல்லது.

//பிள்ளைகள் அந்த வயதில்தான் வயதுக்கு வருகின்றனவா ? நான் 3 வயதில் வயதுக்கு வந்து விட்டேன் :) என்னை விரும்பிய பெண் என் கை பட்டவுடன் வயதுக்கு வந்தாள்..//

முதல்ல வயதுக்கு வருதல்னா நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்கனு சொல்லுங்க.

//சுதந்திர சாதியிலும் ஒரு பிற்படுத்தப் பட்ட வகுப்பா ??//
பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பது பொருளாதார ரீதியானது.

//கணவன் ஆதரவு.. கணவன் இல்லாவிட்டாலும் எல்லா தாயும் தன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். எனில் இந்த சாதாரண உண்மையை ஒப்புகொள்ளாத இது ஒரு ஆணாதிக்க மனோபாவம்தானே.//

அது உண்மைதான். ஒப்புக்கொண்டதால்தானே அதற்கும் விதிமுறைகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? இதை ஆணாதிக்கமாக பார்த்தால் நீங்கள் ஒரு பெண்ணுரிமை போராளி. ஒரு சிறந்த அரசின் கீழ் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும்/ பாதுகாக்கப்பட வேண்டும்.

// இதை சொல்ல எதற்கு ஒரு புதிய சித்தாந்தம் ? அதுதான் ஏற்கனவே இருக்கிறதே..//

இதில் புதிய சித்தாந்தங்கள் குறைவே. ஏற்கனவே இருப்பவற்றை அடிப்படையாக்கக் கொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொண்டுதான் இந்த கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

// எல்லா சாதி பிரிவிலும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு பெற வாய்ப்புகள்உருவாக்கப்படுமா ?? ஆமாம். அதுதானே பொது ஒதுக்கீட்டுமுறை// நடைமுறையில் உள்ளதா ? சாத்தியமா ?? என்பதே கேள்வி.//

நடைமுறையில் இல்லை. அதனால்தான் கொண்டு வரப்படுகிறது. எதையும் முயன்று பார்க்காத வரை அது சாத்தியமா இல்லையா என்று கூற முடியாது. எல்லாருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய அரசே ஒரு சிறந்த அரசாக இருக்க முடியும்.

தேவன் said...

திரு பிரகாஷ் சுகுமாறன் அவர்களே,

//சரி. நாளைக்கே வேற்று மதத்தை சேர்ந்த ஒருவன் தேவராக.. மாறி பி.சி. சர்டிபிகேட் பெற நீங்கள் உதவனும். அரசு, சமூகம் போன்ற பெயர்களை சொல்லி தப்பிக்கக்கூடாது :))//

நான் சொன்ன கருத்துக்களை எல்லாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறீர்களா? முதலில் இந்த கருத்துக்களை சாதியில் இருப்பவர்களும், சாதியிலிருந்து வெளியேறியவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல சமூகத்தையும் அரசாங்கத்தையும் அமைப்பதற்கான அடித்தளமாகவே இது அமையும் என்று கருதுகிறேன்.

மற்றபடி சாதி மாறினால் அவர்கள் நேரடியாக பொது ஒதுக்கீடு பெறுவர். மற்றபடி அவர்கள் சாதிச் சான்றிதழின்படி ஒதுக்கீடு பெற முடியாது.


//சாதிகள் விரும்பினால்.. அப்படி அந்தந்த சாதியினரிடம் ஒப்புதல் பெற ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விளைவுகள் நிகழ்ந்தால் ?? உலகமே வேறாக இருக்கும். புத்தனும்.. நபியும் கூட சங்கத்தையும், இசுலாத்தையும் துறந்திருப்பார்கள்.//

உண்மைதான் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்படும். அதற்கான ஒரு முயற்சிதான் இது. ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் சாதி வேண்டாம் என்பவர்களே இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதுதான்.

புத்தர், நபி போன்ற மகான்கள் சாதியை மட்டுமல்ல உலகையே துறந்தவர்கள். உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருந்தும் அவர்களைப் போல வெகு சிலரே தோன்றுகின்றனர்.


//இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்ல வேண்டிய பதில்.. அதற்கு உண்மை தெரியாததால்.. தெரிந்தாலும் பேச விரும்பாததால்.. சொல்கிறேன் இனப்பெருக்கத்துக்கு தயாராகும் நிலையே வயதுக்கு வருதல். எல்லா விஞ்சான, சமூக விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டதே பிள்ளை பிறத்தலும், அதற்காக செய்யப்படும் உடல்ரீதியான தயாரிப்பும், பேணி-பாதுகாத்தலும்.//

உங்கள் கருத்து வெறும் உடல் கூற்றை மட்டுமே வைத்து அமைந்தாக உள்ளது. வயதுக்கு வருதலில் இது ஒரு தகுதிதான். பிள்ளை பெறக் கூடிய தகுதி உடையவர் அனைவரும் அந்த குழந்தையை வளர்க்கும் தகுதி பெற்றுள்ளனரா? அந்த குழந்தையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்களா? அப்படி இருந்தால் ஏராளமான கருக்கலைப்பு நிறுவனங்களுக்கு வேலை இல்லாமல் போகும், குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் வீசப்படாது. விஞ்ஞானத்தின்படி பதினான்கு வயதிலேயே ஆண்களும் பெண்களும் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடுவதாக கூறப்படுகிறது. (இன்னும் குறைவாகக் கூட இருக்கலாம்.) இந்த வயதை வயதுக்கு வருவதாக எடுத்துக் கொள்ள முடியுமா?

வயதுக்கு வருதலில் உடல் கூறு, சமூக அறிவு, உழைக்கும் தகுதி (வயதுக்கு வராத ஒருவர் உழைக்க முடியாது), சமூக - அரசியல் புரிதல் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


// கலப்புத் திருமணம்செய்யும் ஒரு தம்பதி தாங்கள் சார்ந்த இரண்டு சாதிகளில் ஒன்றுடன்சேர்ந்துகொள்ளலாம். 2. அல்லது இரண்டுசாதியினருடனும் உறவு வைத்துக்கொள்ள விரும்பலாம். 3. அல்லதுசாதிகளிலிருந்து வெளியேறிவிட முடிவு செய்யலாம்//

//விரும்பலாம் என்பது எதற்கும் முடிவல்ல. வெறும் தப்பித்தலே. சட்டம் அப்படியானதல்ல.//

விரும்பலாம் என்பது ஒரு வாய்ப்பு. அவர்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் சாதியில் இருக்க விரும்பாத சுதந்திரமும் ஒரு வாய்ப்பு. எனவே தர்க்கப்படி ஒருவர் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்தான் ஆக வேண்டும். அதுவே சட்டம் அளிக்கும் சுதந்திரமும் கட்டுப்பாடும்.

தேவன் said...

//திரு தேவன்ஜி..
உங்கள் பொறுமையை மிகவும் மதிக்கிறேன். //
நன்றி. திரு பிரகாஷ் சண்முகம் அவர்களே.

//நீங்கள் குறிப்பிட்டபடி சுதந்திர சாதி என ஒரு பிரிவு உருவாகி விட்டாலே மொத்த குழப்பங்களும் தீர்ந்துவிடும். ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் மதமற்றவன் ( aeithist ) என ஒரு பிரிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது போன்ற ஒரே ஒரு வாய்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுவிட்டால்.. ?? அதற்கான சட்டப் போராட்டத்தை யார் முன்னெடுக்கப் போகிறார்களோ.. //

பெரிய மாற்றம் வந்துவிடாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாத நிலை உள்ளது. அதாவது அரசியல் தலைவர்களுக்கு மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அது வந்தால்தான் சமூக மாற்றம் ஏற்படும்.

// அவர்களே ராமன் உள்ளிட்ட பல இதிகாச நாயகர்களை தொடர்ந்து.. கரம்சந்த் காந்தியை அடுத்து இந்த நாட்டின் அடுத்த தேசத்தந்தையாக இருப்பார்.//

தற்போதைய நிலையில் ஒரு தலைவரால் எதுவும் செய்ய முடியாது. காந்தியின் காலத்தில் இந்திய மக்களிடையே இருந்த மனநிலை இன்று கிடையாது. எனவே ஒவ்வொரு மாநிலத்துக்குமே நாளைந்து காந்தி தேவைப்படுகிறார்கள்.

அம்பேத்கரும் பெரியாரும் தேவைப்படுவார்கள்.

அதெற்கெல்லாம் மேலாக நடைமுறைக்கேற்ற திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்தால் இந்தியா என்ற நாடு உலகில் தொடர்ந்து ஒளிரும்.

தேவன் said...

திரு பிரகாஷ் சுகுமாறன் அவர்களே,

//இதுவரை நம்பிக்கையோடு எழுதினீர்கள்.. இப்போது ஏன் சந்தேகம் ?//

இந்தியாவில் தற்போதும் ஆங்கிலேயர் ஆட்சிதான் நடக்கிறது. அவர்களின் தந்திரம்தான் ஆட்சி செய்கிறது. ஆங்கிலேயர் போலவே தந்திரத்தால் நாட்டைக் கைப்பற்றிய, இந்தியர் போல உள்ள கொள்ளையர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர்.

ஆங்கிலேயர்கள் மக்களின் உணர்வுக்கு மதிப்பு தராமல் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அதே அட்டூழியங்கள் இன்றும் நடப்பதை காண்கிறோம்.

ஆனால் இவர்கள் இந்தியர்கள் போலவே உள்ளதால், இவர்கள்தான் இந்தியர்கள், இவர்களது தந்திரம், ஆட்சிமுறைதான் இந்தியரின் தந்திரம், ஆட்சி முறை என்று நம்பி இந்திய மக்கள் ஏமாந்து வருகின்றனர். அவர்களது போலிக் கொள்கைகள்தான் உண்மையானவை என்று ஏமாந்து வருகின்றனர்.

//இப்போதைய அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போனாலும் எதிர்கால அரசியலை முன்னெடுத்து செல்லக் கூடியவர்களின் கதை வேறு. அதற்கான நேரடி உதாரணமாக இங்கே நீங்களே இருக்கிறீர்கள். இன்னொரு வாய்ப்புள்ள தலைவர் இங்கே சிரித்துக் கொண்டு இருக்கிறார்.//

நன்றி.

ஆங்கிலேயர் நாட்டைப் பிரித்து மக்களைப் பிரித்து பல்வேறு சதிகளை தொடர்ந்து செய்து ஆட்சியில் நீடித்து வந்தனர். சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தை குறைக்க ஆங்கிலேயர் முஸ்லீம்களை பிரித்தனர்.

சுதந்திர இந்தியாவில் போலி மதச்சார்பின்மை பேசும் இந்திய வெள்ளையர் சுதந்திரத்திற்கு முன்பிருந்ததைவிட மோசமான நிலையை உருவாக்கியுள்ளனர். இன்று ஒரு இந்து மதப் பற்றாளன் நாட்டுத் தலைவராக முடியாது. அவருக்கு பெயர் இந்து வெறியன் என்று சொல்லப்படும். ஒரு சாதிப் பற்றாளர் நாட்டுக்காக போராட முடியாது. அவருக்கு பெயர் சாதிவெறியன் என்று சூட்டப்படும். இது இவர்களின் தந்திரத்தின் பலன்.

இது ஆங்கிலேயனின் தந்திரமே. அவன்தான் வீர் சாவர்க்கரை இந்து வெறியன் என்று சித்தரித்தான். பகத் சிங் போன்றோருக்கு தீவிரவாதி என்று பட்டம் கொடுத்தான். சுதந்திரப் போராட்டத்தை கலகம் என்று சொன்னான். அதை அப்படியே இன்றைய இந்தியர் பின்பற்றி வருகின்றனர். ஆங்காங்கே ஜாலியன் வாலாபாக்-களை பார்க்க முடிகிறது.

இவ்வாறு ஒரு பொய்யான கொள்கை தந்திரத்தை தம்முடையதுதான் என்று கருதும் மக்களும் தங்களைப் போன்ற தலைவர்களையே எதிர்பார்ப்பர். அன்று காந்திக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப் படவில்லை. காந்தியின் போராட்டங்கள் எல்லைகள் கடந்து அறியப்பட்டது, உணரப்பட்டது.

ஆனால் இன்று பாருங்கள் அண்ணா ஹஸாரேவுக்கு என்ன ஆனது. அவர் ஒரு இந்து வெறியர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தி, ஆங்கிலம் எதுவுமே தெரியாத காலத்தில் காந்தியின் போராட்டங்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றது. ஆனால் இன்று மீடியா வளர்ந்த நிலையில் அண்ணாவின் போராட்டம் எப்படிச் சித்தரிக்கப்பட்டது? உணரப்பட்டது?

இந்திய வெள்ளையர்கள் தந்திரத்தால் அண்ணாவை அரசியலுக்கு இழுக்க முயன்றனர் அதில் வெற்றியும் பெற்றனர்.

எனவேதான் இன்று இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிவு மக்களுக்கு நூற்றுக்கணக்கான காந்திகள் தேவை என்று சொன்னேன். எனது சந்தேகம் இந்த பெரும் தேவையை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதே. ஒரு தலைவர் தான் சொல்லும் கருத்தை இந்தியா முழுவதும் உணரச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதை உணர அந்தந்த பகுதிகளில் அவரைப் போன்ற தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

தேவன் said...

//இதுவரை வரையறுக்கப்பட்டுள்ள ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பட்டியல் இனத்தவர் என்ற பிரிவுகளை கடந்து மதமற்றவன், சுதந்திர சாதி.. இப்படி ஏதோ ஒரு பெயரில் ஒரு பிரிவு உருவானால்.. இந்திய சாதி அமைப்புகளின் அடிப்படைகள் நிச்சயம் உடைந்து போகும். கடுமையான பணிகளை துணிச்சலாக முன்னின்று நடத்தினால் மட்டுமே ஒருவர் தேசத் தந்தை எனப்படுவார்.//

துணிச்சலானவர்களை வீழ்த்த இந்திய வெள்ளையர் தயாராக உள்ளனர்.

அன்றைய தலைவர்களிடம் தங்களுக்குள் நம்பிக்கையும் ஒற்றுமையும் இருந்தது. ஆனால் இன்று தலைவர்களுக்குள் தங்களுக்குள் மட்டுமல்ல மக்களிடமும் நம்பிக்கையில்லை. எனவே இந்த இரண்டையும் மாற்றிக் காட்டும் தன்மை கொண்டவர்கள் தேவை.

//ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஒரு ரஜினி வர முடியுமா என்பது போல உள்ளது :))//
உண்மை அதுதான்.

//தவிர தலைவர்கள் எப்போதும் வரலாறுகளை எழுதியதில்லை. வரலாறுகளை படைத்தவர்களே தலைவர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.//

வரலாறு படைக்கும் ஒரு தலைவன் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உலகம் அதை எழுதிக்கொள்ளும். ஆனால் அந்த தலைவனிடம் வரலாற்றை உருவாக்கும் தன்மை இருக்க வேண்டும்.

//இதை சாதிக்க ஆள் பலமும், நேர்மறை சிந்தனையும், சட்ட அறிவும் கொண்ட ஒரே ஒருவன் போதும். காந்தி காலத்திலும் காந்தியை தவிர வேறு ஒருவரும் அவரை நம்பவில்லை.//

ஆன்ம பலம் கொண்ட உத்தமர்கள் அரசியலுக்குத் தேவை. அவர்களாலேயே ஆன்ம பலம் பொருந்திய இந்தியாவை கட்டிப் காப்பாற்ற முடியும். அதற்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை. இது இந்திய வெள்ளையர்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டியுள்ளது. இது இந்திய சுதந்திரப் போராட்டத்தைவிட பல மடங்கு வலிமையான போராட்டமாக அமைய வேண்டியுள்ளது. இந்த நாட்டுக்காக உயிர் துறந்த எண்ணற்ற உத்தமர்களின் உயிர்ப் பலிகளுக்கு கொஞ்சமாவது மதிப்பு இருந்தால் அது நடந்தே தீரும்.

நன்றி.

Kaarti Keyan R said...

உலகச் சிறைச்சாலைகளில் இருக்கும் குற்றவாளிகளில் 80 முதல் 90 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்... ஹா ஹா ஹா... உங்க வாய்க்கு வந்தத பேசுவீங்களா பெருமாள்?

பெருமாள் தேவன் said...

சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கு மத நம்பிக்கை இருக்ககக் கூடாது என்று சொல்ல முடியுமா?

Arul Pandian said...

Mr. Thevar, The system looks good. Can be taken further with minor changes. Sorry for using English as I don't know how to type in Tamil. My love for Tamil or Tamil Knowledge is good. So, please bear with me.1. But, you must understand that castes are made not based on their profession (may be some minor clans within the castes but not the entire caste. All castes are titles conferred by our Lords and Kings and sometimes by major chieftains (like the one you are creating now). As per my research and as for as the evidences show even in Indian sub-continent everybody did every job. e.g. Brahmins are not only Temple priests but also have been Warriors under Chera/Chola/Pandias and are called Brahma-Shakhriyar. They have also been teachers like Shastris' or Astrologers like Joshis'. They have also been employed in accounts keeping, supervising, writing, translator works, and other government jobs. You can also read my soon to be published book on that if time permits.2. The 60 years timeframe for abolishing reservation can be removed. As reservation will ensure permanent minimum representation for BC/MBC/SC/ST. As intelligence is common (but not common sense) to all and the qualification cut-off margins are getting thinner, the society may not suffer for any quality because of reservation. Reservation for economically back ward could be a good suggestion but further inner reservation could be a better idea.3. Under general reservation: "இந்த திட்டங்களிலிருந்து சோம்பேறிகள், போதை, சூது, ஊதாரியாக செலவு செய்தல் போன்ற தீய பழக்கங்களை கொண்டவர்களை வெளியேற்றி விட வேண்டும். People of above fate (and even ex-prisoners) should be given medical, job-oriented training, and other such support to bring them back to main fold.4. We should also define principles for Tamil race. Any religious (Saivism and Vaishnavism) or historical or Tamil race based theories or literature based works (books) should get approval from Tamil Sangam (4th). Any text books for schools and colleges for Tamils should get approval from Tamil University and Tamil Sangam. All science and philosophy and philosophy from other cultures should get approval from Tamil Sangam and Tamil University. This also allows for freedom speech and expression but these may or may not be approved by Tamil University and Tamil Sangam.

பெருமாள் தேவன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, அருள் பாண்டியன். சேர்ந்தே பயணிப்போம்.