Tuesday, September 18, 2012

உதயக்குமார் அவர்களுக்கு,நீங்கள் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஓராண்டு காலமாக அமைதியான முறையில் நடத்தி வந்ததை பாராட்டுகிறேன். நீங்கள் உங்கள் போராட்டம் குறித்து பேட்டிகளில் விளக்கம் கூறிய முறை என்னை கவர்ந்தது. உங்கள் போராட்டத்திற்காக அரசியல் தலைவர்களிடம் அறிவுரை கோரியது உங்கள் முதிர்ச்சியை காட்டியது.

உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த உங்கள் தோழர்கள், கிராம மக்கள் அனைவரும் பாராட்டத் தக்கவர்களே. இவ்வளவு நீண்ட காலம் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவது முடியாத காரியம். எனவே உங்கள் போராட்டம் பாராட்டத் தக்கது. இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற தடியடி, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் விரும்பத் தாகாதவையாக அமைந்தன.

எனவேதான் நான் உங்கள் எதிர்கால போராட்டம் குறித்து பேச விரும்புகிறேன். நீங்கள் இதுநாள் வரை உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவர்களை மேலும் அலைக்கழிக்காத வகையில் உங்கள் போராட்ட முறையை திட்டமிட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

ஆளும் கட்சிகளாக உள்ள அதிமுக, திமுக இரண்டுமே அணுஉலைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் உங்கள் போராட்டத்தை எவ்வாறு முந்நகர்த்துவீர்கள் என்ற கேள்வி எழுகிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அதிமுக, முதலில் மக்களின் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னர் சாதுர்யமாக ஒரு குழுவை அமைத்து தனது நிலையை மாற்றிக் கொண்டது. அதேபோல மத்திய அரசாங்கத்தில் சகல பதவிகளையும் பெற்றுள்ள திமுக அணுஉலையைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது.

எனவே இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், நீங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகள், இயக்கங்களின் ஆதரவை பெறாமல் உங்கள் இலக்கை அடைய முடியாது. அதாவது அணுஉலையை ஒன்றும் செய்ய முடியாது.
அப்படி இருக்கும்போது நீங்கள் மக்களிடம் உங்களுக்குள்ள ஆதரவை அரசியல் அதிகாரமாக மாற்றலாம். அதன் மூலம் நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர், அல்லது பாராளுமன்ற உறுப்பினராகலாம். அவ்வாறு தேர்தலில் வெற்றிபெற்றால் நீங்கள் உங்கள் போராட்டத்தை தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லலாம். அதுவே ஒரு வெற்றியாக அமையும்.

நிலம் பெறப்பட்டபோது என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறதா? அணுஉலையில் பணிபுரிவோர் எப்பகுதியை சேர்ந்தவர்கள்? தமிழகத்தை சேர்ந்தோர் எத்தனை சதவீதம்? அணுஉலை எவ்வாறு செயல்படுகிறது? அங்கு ஏதாவது விபத்து ஏற்படுகிறதா? அந்த விபத்து மறைக்கப்படுகிறதா? கிராம மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, காப்பீடு பெற்றுத் தருவது என நீங்கள் உங்கள் குறைந்தபட்ச இலக்குக்களை நிர்ணயித்து அவற்றை அடைய போராடலாம்.

அதேபோல நீங்கள் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து காட்டலாம். அந்த கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பத்து வீடுகளுக்கு ஒன்று என்ற கணக்கில் அமைத்தீர்களானால் அதுவே அணுஉலைக்கு விடும் சவாலாக அமையும்.

மக்கள் சக்தியை அரசியல் சக்தியாக, ஆக்க சக்தியாக மாற்றுவீர்களானால் அது அணுஉலை ஆதரவு அரசியல்வாதிகளை கரியை பூசுவது போல இருக்கும். ஏதோ நான் உங்கள் அளவுக்கு ஒரு போராளியாக இல்லாவிட்டாலும் எனக்குப் பட்டதை சொல்லிவிட்டேன்.

நன்றி, வணக்கம்.
அன்புடன்
அ.பெருமாள் தேவன்.


Monday, September 10, 2012

உடலுறவு – ஒரு புனித அனுபவம்


·         கேள்வி- காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்கள்?

காதலர்களுக்கான மிகவும் எளிய முறை என்பது உடலுறவு கொள்ளும்போது... அவர்கள் ஒரு உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே. அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன. அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள்.

பழக்கப்படுத்துதல் மனிதனின் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என்று விரும்புவது போல அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள்.

இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது. அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது. அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. காதலர்கள் உடலுவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்.. முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தை கைவிட வேண்டும்.

உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது. அது உயிர்வாழ்வதற்காக இயற்கை அளித்துள்ள மாபெரும் பரிசு. அதனை நீங்கள் குற்றமாக உணரக் கூடாது. நீங்கள் அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அதற்காக ஒரு விசேஷமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.       

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஜோடியும் தங்களால் இயன்ற அளவு, உடலுறவுக்காக மட்டுமே ஒரு தனியறையை கொண்டிருக்க வேண்டும். அங்கு மனைவி வேறொருவராக இருக்கக்கூடாது. அங்கு எந்தவிதமான வாக்குவாதமோ, சண்டைச் சச்சரவோ இருக்கக் கூடாது. தலையணையை எறியக் கூடாது.

அவர்கள் குளித்து விட்டு ஒரு கோவிலுக்குள் போவதைப் போல அந்த அறைக்குள் செல்ல வேண்டும். அந்த அறை முழுவதுமாக நறுமணமிக்க ஊதுத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். அங்கு பிரகாசமான விளக்குகள் இருக்கக் கூடாது. மெழுகுவர்த்திகள், மங்கலான விளக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் அவசரத்தில் இருக்கக் கூடாது.

ஏனெனில் முன்விளையாட்டு என்பது மிகமிக முக்கியமானது. பெண்ணின் உடல் முழுவதுமே பாலுணர்வை தூண்டக் கூடியது என்ற காரணத்திற்காக இதனைச் செய்ய வேண்டும். ஆணின் உடல் முழுவதும் பாலுணர்வை தூண்டக் கூடியதல்ல. ஆணுடைய பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட இடத்திலானது. அது அவரது இனப்பெருக்க உறுப்பை மட்டுமே வரம்பாகக் கொண்டது.

ஆனால் பெண்ணின் உடல் முழுவதும் பாலுணர்வை ஏற்படுத்தக் கூடியது. அவளது உடல் முழுவதும் மகிழ்ச்சியால், இன்பத்தால் நடுங்காவிட்டால்... அவளுக்கு உச்சநிலை ஏற்படவில்லை என்று அர்த்தம். ஆண் போதுமான வரை பெண்ணின் உடலில் விளையாடும்போது, பெண் போதுமான அளவு ஆணின் உடலில் விளையாடும்போது...
தியான டெக்னிக் என்பது, ஒருவர் மற்றொருவரின் உடலில் விளையாடும்போது, அவர்கள் ஒரு சாட்சியாக இருப்பதாகும். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, அங்கு நான்குபேர் இருப்பார்கள், இருவரல்ல.

அந்த பெண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை, அந்த ஆண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை. அந்த சாட்சி, ஆண் பெண்ணிடம் என்ன செய்கிறார், பெண் ஆணிடம் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பதாகும். அந்த சாட்சி எது நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதாக இருக்காது. அது வெறும் கண்ணாடியைப் போன்றது. என்ன நடக்கிறது என்பதை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும்.

இந்த சாட்சி என்பது அறிதல், விழிப்புணர்வு, உணர்வு நிலையேயாகும். குறிப்பாக முன்விளையாட்டில், நீங்கள் உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருந்தால், உடலுறவு கொள்ள உங்கள் உடல் தயாராகும் சரியான நேரம் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. நீங்கள் இருவரும் மற்றவரின் உடல் வெளியிடும் பயோஎலக்ட்ரிசிட்டியை உணர்வீர்கள்.

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவசரப் படக்கூடாது. எப்போதுமே பெண்கள் மேலே இருக்க வேண்டும். இந்த உலகிலேயே மோசமான நிலை என்றால் மிஷினரி பொசிஷனே ஆகும். கிழக்கில் கிறிஸ்தவர்கள் வரும் வரை ஆண்கள் பெண்களுக்கு மேலே இருக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. இது மிருகத்தனமானது. மிகவும் அசிங்கமானது.

பெண்கள் மென்மையானவர்கள். ஒரு பெரிய மிருகம், ஒரு அப்பாவி பெண் மீது தண்டால் எடுத்தால் என்னாவது? இந்தியாவில் இது மிஷனரி பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இது அறிமுகமானது. இதுவும் சாத்தியமே என்று அவர்கள் இந்தியாவுக்கு செய்து காட்டினார்கள்.

இல்லாவிட்டால், எப்போதுமே பெண்கள்தான் மேலே இருந்திருப்பார்கள். அறிவியல் ரீதியாக பெண்கள் மேலே  இருப்பதுதான் சரி. அப்போதுதான் அவளால் அதிகமாக இயங்க முடியும். ஆண்கள் குறைவாக இயங்கலாம். ஆண் மேலே இருந்தால் பெண் அதிகம் இயங்க முடியாது. ஆண் அதிகமாக இயங்குவார். அவர் அதிகமாக இயங்கினால் விரைவில் விந்து வெளிப்படும் நிலைக்கு வந்துவிடுவார்.

ஆனால் பெண், தான் உச்சநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்க மாட்டார். பெண் மேலே இருந்து அவள் அதிகமாக இயங்கினால் ஆண் இயக்கமில்லாமல் இருப்பார். பெண் உச்சநிலையை அடையும்போது ஆணும் உச்சநிலையை அடைவார்.

அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைந்தால்.. அங்கு ஒரு அற்புதமான சந்திப்பு, இணைப்பு  ஏற்படுகிறது. அங்கு உடல்கள் மறைந்து விடுகின்றன. அப்போது இரண்டு ஆன்மாக்கள் இரண்டாக இருப்பதில்லை. இருவர் இருவராக இருப்பதில்லை. அதேவேளையில் சாட்சி தொடர்கிறது. அதுதான் உங்கள் உள்ளே நடைபெறும் தியானம். அது தொடரும், நீங்கள் சாட்சியாக இருந்து வருவீர்கள்.

உங்கள் உச்சநிலை அடங்கிய பின்னர், அது மெள்ள மெள்ள மறைவதை கவனியுங்கள்.  அது மேலே வருவதை கவனியுங்கள். அது வெடித்துச் சிதறுவதைக் கவனியுங்கள். அது மீண்டும் உங்கள் உடலின் சாதாரண நிலைக்கு திரும்புவதை கவனியுங்கள். அதன்பின் அவசரப்பட்டு இருவரும் பிரிந்து விடாதீர்கள். சிறிது நேரம் ஒன்றாக இணைந்தே இருங்கள்.

தந்த்ராவில் இது பள்ளத்தாக்கு உச்சநிலை என்று சொல்லப்படுகிறது. கோடிக் கணக்கானோருக்கு இது பற்றித் தெரியாது. முதல் உச்சநிலை என்பது உச்சத்தில் ஏற்படும் உச்சநிலை. நீங்கள் இருவரும் உங்கள் சக்தியின் உச்சத்தில் இணைந்தீர்கள். இப்போது உச்சம் மறைந்துவிட்டது. ஆனால் உச்சம் தன் அருகிலேயே பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு இல்லாமல் உச்சி இருக்காது.

எனவே, உங்களால் அமைதியாக, ஒன்றாக இருந்து கவனித்து வர முடிந்தால், நீங்கள் மற்றொரு உச்சநிலையை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றொரு உச்சநிலை ஏற்படும். இது முற்றிலும் மாறுபட்ட அழகு கொண்டது. வேறுபட்ட ஆழம் கொண்டது. ஒரு வித்தியாசமான வேலை. பள்ளத்தாக்கு உச்சநிலை. பள்ளத்தாக்கு உச்சநிலை மறையும் வரை நீங்கள் இருவரும் பிரியாதீர்.

இதற்கிடையில், சாட்சி கவனிப்பது தொடர்கிறது. பிரியும்போது தூங்கச் செல்லாதீர்கள். ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் இருக்கிறது. அதுவே பின்விளையாட்டு. நீங்கள் உங்கள் இருவரின் உடல்-மன சக்தியைக் கொண்டு ஒரு மாபெரும் கலப்பை ஏற்படுத்திருக்கிறீர்கள். அதனால்  நீங்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்ய வேண்டும். மற்றவரின் உடலில் விளையாட வேண்டும்.

நறுமணமிக்க ஊதுபத்திகள், அழகிய மலர்கள், மெழுகுவர்த்திகள், இசை இருக்கும்போது.. நீங்கள் ஆட விரும்பினால் நீங்கள் ஆடலாம்.

ஆனால் சாட்சிநிலை தொடர வேண்டும். ஏன் சாட்சி நிலை தொடரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றால்.. நீங்கள் பலமுறை அவ்வாறு செய்தால், ஒருநாள் நீங்கள் வெறுமனே சாட்சியாக இருக்க மட்டுமே முயற்சிப்பீர்கள். ஆண், பெண் என்ற தன்மையில்லாமல் தனியாக.

அதே அறையில், அதே சூழலில். அதே ஊதுபத்தி, அதே நினைவை ஏற்படுத்தும் ஊதுபத்தி இருக்கும்போது, அதே விளக்கு, அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பெரும் ஆச்சரியத்தை காண்பீர்கள். பெண்ணுக்குள் ஏற்படும் அனைத்தும் பெண் இல்லாமலேயே அல்லது ஆண் இல்லாமலேயே உங்களுக்குள்ளும் நடக்க ஆரம்பிக்கும்.  

நீங்கள் மெள்ள உச்சநிலையை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். அதே அனுபவம். ஆனால் உடல், பயோலாஜிக்கல் வெளிப்பாடு எதுவும் இல்லாமல். நீங்கள் பள்ளத்தாக்கு உச்சநிலையையும் அடைவீர்கள். அதே அனுபவம். அப்போது நீங்கள் உடலுறவின் மூலமாக தியானத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேபோல தியானத்தின் மூலம் உடலுறவை கற்றுக் கொள்வீர்கள்.

இது ஒவ்வொன்றும் மற்றொன்றை அடைந்தவாறு செல்லும். இது இருவருக்கும் பக்குவத்தை தரும். இந்த பக்குவம் அவர்களது அடக்கப்பட்ட அறிவு, விழிப்புணர்வு, அன்பு, இரக்கத்தை உருவாக்கும். மேலும் இது பொறாமை, கோபம், வெறுப்பை கொல்லும். இது உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். அந்த மாற்றங்களே நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமாகும்.

-       - ஓஷோ, கடைசி ஏற்பாடு, அத்தியாயம் 3, எண் 14.
(இந்த சொற்பொழிவை ஆங்கிலத்தில் கேட்க கீழேயுள்ள இணைப்பிற்கு செல்லலாம்.)  

Monday, September 3, 2012

ஜெவும் கருணாநிதியும் யாருக்கு அஞ்சுகிறார்கள்?தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக மற்ற மாநில அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் தன்னை தேர்ந்தெடுக்கும் அல்லது தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கே அந்த தலைவர்கள் அஞ்சுபவர்களாக இருக்க வேண்டும். அதுவே அரசியல் நீதி. ஆனால் இங்கு நிலை மாறாக உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடக அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி வருகின்றனர். இவர்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் மீறுவார்கள் என்றே தெரிகிறது. அதேபோல கேரள அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவுகளை துச்சமாக மதித்து வருகின்றனர்.

இந்த இரண்டு மாநில அரசியல்வாதிகளும் மாநில அளவிலான பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தையும் தூக்கி எறிய தயாராக உள்ளனர். அது இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக் குறியாக ஆக்குவதாக இருந்தாலும் அதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் சில தினங்களுக்கு முன்பு எந்தவித அனுமதியும் வாங்காமல் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்திக் காட்டினார் நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே. மத்திய - மாநில அரசுகள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 144, 149-ன் கீழாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதேபோல தீஸ்தா நதிநீர் பகிர்வை மம்தா பானர்ஜி தூக்கி எறிகிறார். மத்திய அரசு அவருக்கு பயந்து அந்த திட்டத்தை கிடப்பில் போடுகிறது.

ஆனால் செத்துப்போன டெசோ மாநாட்டை நடத்திய தானைத் தலைவர் என்னென்ன கூத்துப் பண்ணினார்? அந்த மாநாட்டுக்கு எதற்காக உள்துறை, வெளியுறவுத்துறையிடம் அனுமதி கோரினார் என்று தெரியவில்லை. இந்தியாவில் எந்த கட்சியாவது உள்துறையிடம் அனுமதி பெற்று மாநாடு நடத்தியதா என்று தெரியவில்லை. இதில் என்ன ராசதந்திரம் இருக்கிறதோ தெரியவில்லை. ஈழம் என்ற வார்த்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கூத்தும் அரங்கேறியது.

அதேபோல ஜெயலலிதா அவர்கள் பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். முல்லை பெரியார் பிரச்சனையில் போராடியவர்கள் மீது போலீஸை ஏவினார். சேலம் நெய்க்காரப் பட்டியில் தடியடி என்ற மனிதத் தன்மையற்ற செயலை அரங்கேற்றினார்.

ஏனெனில் அவருக்கு எருதாட்டத்தைவிட விலங்குகள் வதைச் சட்டத்தை அமல்படுத்துவதுதான் முக்கியமானதாக தெரிந்தது. இவர்களுக்கு தமிழர்களின் உணர்வை, வாழ்க்கையை பற்றி கவலை இல்லை. தங்கள் ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடக் கூடாது என்பதுதான் கவலை. அதற்காகத்தான் இவர்கள் சட்ட ஒழுங்கு என்ற பிரச்சனையே எழுந்துவிடக் கூடாது என்று பார்த்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதற்கு இவர்கள் தமிழர் அல்லாதவராக இருப்பதும் ஒரு காரணம். மக்களுக்கு என்ன ஏற்பட்டால் என்ன? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதுதான் உணர்வு. தமிழர்களோடு ஒட்டும் உறவும் இல்லாத இவர்களுக்கு ஏன் தசை ஆட வேண்டும்? இவர்களுக்கு தமிழனின் உரிமை போனாலும் கவலையில்லை. உயிர் போனாலும் கவலையில்லை. இவர்களைப் பொறுத்தவர் தமிழகம் ஒரு அதிகார - பணப் பட்டறை.

எனவே, இவர்கள் மத்திய அரசுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவுக்கும்தான் அஞ்சுகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு அல்ல. தங்கள் பதவி, அதிகாரத்திற்காக எதையும் செய்வார்களே தவிர மக்கள் நலனுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.  ஒருவேளை இந்த 356 வது பிரிவை நீக்கிவிட்டால் மக்களுக்காக செயல்படுவார்களோ என்னவோ?
••••••••

Saturday, September 1, 2012

தமிழ்தேசியம் பேசுவோர் செய்ய வேண்டியது என்ன?-சீமானுக்குள் இருப்பது சுழியமா?- என்ற தலைப்பில் நான் எழுதிய குறுங்கட்டுரையை படித்த பலர் நீங்கள் ஏன் சீமானிடம் மட்டும் இத்தனை கேள்விகளை கேட்கிறீர்கள்? அவர் புதியவர்தானே என்று கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக இந்த குறுங்கட்டுரையை எழுதுகிறேன்.

சீமான் அந்த வீடியோவில் மீண்டும் கருணாநிதியின் வீட்டிலிருந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்தால் ஒருவரையும் விடமாட்டேன் என்று பேசியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம்? மக்கள் கொடுக்கும் தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்றுதானே அர்த்தம்? இது பற்றி பேசிய ஒருவர் உணர்வற்றவர்களை கொன்றால் என்ன என்று கேட்டார். கொலை என்பது ஜனநாயகம் கிடையாது. அதை ஏற்க முடியாது. ஒருவருக்கு தமது கருத்தை புரிய வைத்து அவரது ஆதரவை பெறுவதே ஜனநாயகம்.

ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தெளிவாகி விட்டது. எனவே புதியவர்கள் மீதே மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால் புதியவர்களும் பழையவர்களின் தவறுகளை செய்யக் கூடாது.

தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தும் ஒருவர் அதற்கான தகுதியை கொண்டுள்ளாரா? அவரது அரசியல் பார்வை, பயணம், நோக்கம் சரிதானா என்று பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளை விட புதிய அரசியல்வாதிகளை அதிகம் விமரிசனம் செய்வேன் என்பதை இங்கு தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

தற்போது தமிழகத்தில் அரசியல்வாதிகள் மக்களின் மதிப்பை இழந்து விட்டனர். வேறு வழியில்லாத காரணத்தால் மக்கள் இருக்கிற அரசியல்வாதிகளையே தேர்தலில் தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரும் அடங்குவர்.  

ஈழத்தில் தமிழர்கள் சந்தித்த தோல்வி தமிழர்களை அரசியல் குறித்து தீர்க்கமாக சிந்திக்க வைத்துள்ளது. அரசியல் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

பொதுவாக இந்த கருத்துக்களை முன்னெடுப்போர், தமிழர்களின் உரிமைகள் பலமுனைகளிலும் பறிக்கப்பட்டு வருகிறது, அதனை தடுக்க தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறி வருகின்றனர். இதில் முன்வரிசையில் நிற்போர் தமிழ்தேசியம் பேசுவோரே.

ஆனால் இவர்களிடம், ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. இவர்கள் தங்களுக்குள் முரண்படுகின்றனர். ஒருவர் பொதுவுடமை பற்றி பேசுகிறார். ஒருவர் நில உச்ச வரம்பு பற்றி பேசுகிறார். ஒருவர் சாதி - மத ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

அதோடு தமிழர்களை தமிழர்களே ஆள்வது எவ்வாறு? அதனை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புவார்கள்? தற்போது பேராசையில், பண வெறியில் மூழ்கியிருக்கும், இலவசங்களை விரும்பும், சினிமா மயக்கத்தில் உள்ள மக்கள் அது போன்ற முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது போன்றவற்றை யாரும் தெளிவு படுத்த தயாராக இல்லை. நாங்கள் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என்று ஏதோ  நம்பிக்கையில் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் என்ன செய்வார்கள் என்றால் பதில் சொல்லத் தயாராக இல்லை.

தற்போதைய அரசியல் சூழலில் யாராக இருந்தாலும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை பெற்று அதன் மூலமே அரசுக் கட்டிலுக்கு வரவேண்டும். முதலில் தமிழர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளை கூறி அவற்றை தாங்கள் எவ்வாறு தீர்த்து வைப்போம் என்று தெளிவு படுத்த வேண்டும்.

தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியலுக்கு வரும்போது மத்திய அரசு, அந்த அரசை பழிதீர்க்கும் விதமாக நடத்தினால் என்ன செய்வார்கள்? தமிழர் நலனைப் பொறுத்தவரை மற்ற அரசியல் கட்சிகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? மத்திய அரசின் ஆதரவுடன் அல்லது ஆதரவு இல்லாமல் எவ்வாறு செயல்படுவார்கள்? என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக விளக்க வேண்டும்.

தமிழர் நலன் குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.  எந்தவித மாற்றமாக இருந்தாலும் அது ஜனநாயகத்தின் மூலமாகவே வரவேண்டும். மூடி மறைக்கப்படும் அல்லது பூடகமான கருத்துக்களை முன் வைத்தால் அதனை ஏற்க முடியாது. விமரிசனத்திற்கு தயாராக இல்லாதவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து விடலாம். அரசியலுக்கு வரக் கூடாது.
••••••••


பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...