Friday, December 6, 2013

பழிக்குப் பழி தீர்வாகுமா?


நேற்று மதுரையில் தேவர் குருபூஜையில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 பேர் சரணடைந்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பது தெரிந்ததே. இந்தச் சம்பவத்தை தேவர் சமுதாயத்தினர் எவ்வாறு பார்க்கிறார்கள், பார்க்க வேண்டும்? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதே இப்போது நமக்கு முன்னேயுள்ள கேள்வி.

ஏற்கனவே முக்கிய நீரோட்ட ஊடகங்கள் தேவர் சமுதாயத்தை வன்முறைச் சமுதாயமாகவே காட்டி வருகின்றன. இவர்களுக்கு இது மேலும் வலுச் சேர்க்கும். 2012 குருபூஜையின்போது பெட்ரோல் குண்டு வீசிய செய்தியை விரிவாக பேசாத இந்த ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விலவாரியாகப் பேசி தேவர் சமுதாயமே ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரி என்று காட்ட முற்படலாம்.

சுப. வீரபாண்டியன், மருத்துவர் கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு எதிர்விளைவு ஏற்படும் என்று சொல்லலாம். உண்மையும் அதுவே. ஏனெனில் இவர்களைப் போன்றோரின் விருப்பமும் அதுவே.

நாட்டில் நடைபெறும் திராவிட அரசியலால் இனக்குழுக்கள் தங்கள் அரசியலை இழந்து நிற்கின்றன. அரசியல் அதிகாரத்தை பெற முடியாதவர்கள் இனக்குழு உணர்வை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் இனக்குழுக்களை மோதவிட்டு அரசியல் செய்து வருகிறார்கள்.

எனவே முதலில் முக்குலத்தோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் எதிரிகள் என்பதே ஒரு கட்டுக்கதை, பிரச்சாரம் என்பதை தேவர்கள் உணர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த பொய்ப் பிரச்சாரம் 1990களில் பட்டியல் சாதியினரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதையே உண்மை என்று மாற்று சமுதாயத்தினரும் முற்போக்குவாதிகளும் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதை முக்குலத்தோர் தாங்களும் புரிந்துகொண்டு எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். முக்குலத்தோரிடம் வலிமையான ஊடகம் இல்லாததது இந்த பணியைத் தாமதப்படுத்தவே செய்யும்.

அதோடு, தற்போது நாம் மன்னராட்சி முறையில் இல்லை. எனவே நேருக்கு நேராக மோதி யார் பலமுள்ளவன் என்பதை நிரூபிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக சட்டத்தைக் கையில் எடுக்கத் தேவையில்லை, சட்டத்தின் உதவியை நாடலாம். அரசாங்கத்தின் உதவியை நாடலாம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் ஜனநாயக முறைப்படியே தண்டிக்கப்பட வேண்டும்.

அதேபோல, அதிகாரத்தை கைப்பற்றவும் ஜனநாயக முறையையே பின்பற்ற வேண்டும். அதுவே தற்கால அரசியல் - சமூக நாகரீகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகமும் மாற்று சமுதாயங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஜனநாயக ரீதியிலேயே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

அதேபோல ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமூகத்தில் உள்ள தீய சக்திகளை ஒதுக்க வேண்டும். அதுவே சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அவ்வாறு செய்வதன் மூலமே சமுதாயத்தின் பேரில் நடத்தப்படும் மோதல்களுக்கு முடிவு கட்ட முடியும். அரசியல் உரிமை என்பது எல்லாச் சமுதாயத்திற்கும் தேவையானது. அதனை முறையாக சரியாக பகிர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு ஜனநாயக முறைகளே சிறந்தவை.

எந்தவொரு குற்றச் செயலையும் ஜனநாயக முறைப்படிதான் விசாரிக்க வேண்டும். தண்டனை அளிக்க வேண்டும். அதை விட்டு பழிக்குப் பழி வாங்குதல் என்பது முடிவில்லாத தொடர்கதையாக மாறலாம். எனவே முக்குலத்தோர் தாங்கள் வன்முறை சமுதாயம் கிடையாது, எல்லா சமூகத்தினருடனும் சகோதரத்துவத்தை பாராட்டும் பக்குவமான சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும்.  அதற்கு அமைதி வழிகளை, ஜனநாயக வழிகளை கைக்கொள்ள வேண்டும்.

1 comment:

Jeeva Rangasamy said...

ஐயா..உங்களுடைய கருத்து மிகச்சரியானது..நமது தமிழ் சமூகங்களை வண்முறையில் ஊறிப்போன காட்டுமிரான்டிகளாக காட்ட வடுக திராவிட சக்திகள் முயல்கின்றன..!! குறிப்பாக தென்மாவட்டங்கள் என்றாலே ரத்தக்காடாக காட்சிப் படுத்தும் ஊடகங்களால் புதிய தொழில்களை தொடங்க வேறுபகுதி தொழில் அதிபர்கள் தயங்குகின்றனர்..இதன் விளைவாகவே பல தொழில் வாய்ப்புகள் இருந்தும் தென் பகுதி வளர்ச்சியின் முழு பலனை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது..பல இளைஞர்கள் அயல் நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் அவலமும் நடக்கிறது...இந்த சூழலை மாற்ற உங்களை போன்றவர்கள் சமூக விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்..

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...