Tuesday, December 16, 2014

தமிழ் ராணுவ சாதிகள் - பகுதி 2


பகுதி 2 : தமிழ் ராணுவ சாதிகள்

தமிழ் ராணுவம் பற்றி  - டி. சிவராம்

இவ்வாறு 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பெங்கால், பாம்பே, மெட்ராஸ் மாகாணங்களில் ராணுவ வரலாறு கொண்ட, அதிருப்தியடைந்த பெருங்குழுக்கள் இருந்தனஇந்திய ராணுவத்தை விரிவுபடுத்துவதால் ஏற்பட்ட வாய்ப்புகள் தங்களுக்கு அநியாயமாக மறுக்கப்படுவதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் ஆயுதம் தாங்க பொருத்தமில்லாத, சண்டையிடும் தகுதி குறைந்து விட்ட இனங்களாகவும் தரங்குறைத்து கூறிய ஆங்கில ராணுவத் தலைமையின் கருத்துக்கள் இந்த மனக்குறையை மேலும் அதிகரிப்பதாக அமைந்தன.

இதன் எதிர்விளைவாக இந்தக் குழுக்கள்  தங்களது ராணுவத் தன்மைகளை தங்கள் கலாச்சாரத்தில் அழுத்தம் கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகின. வடமேற்கு இந்தியாவில்ராணுவ இனங்களுக்கானஆட்சேர்ப்பு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரிவுகளில் ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. ராணுவ ஒழுக்கம் மற்றும் கருத்துக்களை புகழும் இவர்கள் தேசிய உற்சாகத்தை உறுதி செய்யும் கருத்தாலேயே ஆங்கில ஆட்சியால் ஏற்படும் இன்னல்களுக்கு முடிவு கிடைக்கும் என்ற நிலையை எட்டினர்தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ குழுக்களுக்கு பால கங்காதர் திலகர் பிரதிநிதியாக உருவாகினார். அவர் இந்திய தேசிய ராணுவ கருத்தின் பிரதிநிதியாகினார். ஆங்கிலேயே இந்திய ராணுவத்தின் கட்டமைப்பு மற்றும் ஆட்சேர்க்கைக்கு எதிரான இந்தியர்களின் செயல்பாட்டையே இந்திய ராணுவம் என்று வரையறுக்க ஸ்டீபன் கோஹன் முயற்சி செய்தார்.

ஆங்கிலேய இந்திய ராணுவ கட்டமைப்புக்கு எதிரான இந்தியர்களின் நடவடிக்கை அடிப்படையில் இரண்டு வேறுபட்ட பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. அவையே இந்திய ராணுவம் என்று சட்டப்பூர்வமாக  முத்திரை குத்தப்பட்டிருக்கலாம். அவை: தற்கால ராணுவம் மற்றும் பாரம்பரிய ராணுவம். இது பெங்கால் மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் தோன்றி மற்ற பகுதிகளுக்கு பரவியது. தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளுக்கு ராணுவமே தீர்வாக இருக்கும், அதுவே தேசத்தின் விருப்ப சக்தியாக இருக்கிறது என்று தற்கால ராணுவம்,  ராணுவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. எனவே அக்கருத்து ஆட்சேர்ப்பில் சமத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ‘பாரம்பரிய ராணுவம்பிராந்திய பாரம்பரியங்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சேர்ப்பு முறை காரணமாக ஏற்பட்டது. இது ஆயுதங்களை பயன்படுத்துவதை பிறப்புரிமை என்று கருதி அதனை செய்த சாதிகள் மற்றும் பிரிவுகளில் மட்டுமே காணப்பட்டது. இது இந்தியா முழுவதும் சமமற்ற முறையில் பரவியிருந்தது...” (14)

20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் இரண்டு குழுக்கள் இருந்தன. அவையே ராணுவ குழுக்களாகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர்களாகவும் இருந்தனர். () தற்கால இந்திய ராணுவத்தைப் பின்பற்றுபவர்கள் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆவர். (பி) உரிமை பறிக்கப்பட்ட பாரம்பரிய ராணுவ சாதிகள்.

தற்கால இந்திய ராணுவத்தின் பரவல் இந்தியாவின்மாவீரர்களின் காலத்தைபுதுப்பிப்பதாக இருந்தது. தேசிய எழுச்சிக்கு  அதனுடைய போர் விரும்பும் பாரம்பரியங்கள் மற்றும் கொள்கைகள் தேவையாக இருந்தன. தேசிய முக்கியத்துவத்திற்காக தங்கள் உரிமைகளை இழந்த பாரம்பரிய தமிழ் ராணுவ சாதிகள் தங்களது வீரமான கடந்த காலம் மற்றும் ராணுவ கலாச்சாரங்களில் கவனம் செலுத்தின. தேசிய எழுச்சிக்கு, தற்கால தமிழ் ராணுவம், ‘தமிழ் ராணுவ பாரம்பரியங்களில் வேர்விட்டராணுவ ஒழுக்கங்கள் மற்றும் கருத்துக்கள் முக்கியமானவையாக அமைந்தன. இது, இந்த விசேஷமான சூழலில் பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உருவானது. இவர்  ஆதிக்கம்மிக்க பாரம்பரிய ராணுவ சாதியான மறவர் சாதியைச் சேர்ந்த பிரமுகர் ஆவார்.

தமிழ் ராணுவம் அப்போது தற்கால மற்றும் பாரம்பரிய உட்பொருட்களின் கலவையாக இருந்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் காணப்பட்டதைப் போலவே தமிழ்நாட்டிலும் பாரம்பரிய தமிழ் ராணுவம்ஆயுதம் பயன்படுத்துவதை தங்கள் பிறப்புரிமையாக”  கருதிய சாதிகளிடையே மட்டுமே காணப்பட்டது. 1891-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மறவர்கள்தங்கள் ராணுவ செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற கடுமையான மற்றும் கிளர்ச்சியான சாதியினர்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  “முக்கியமாக அவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் ஜமீனின் வட எல்லை வரை பாதுகாத்து வந்தனர்.” (15) யாழ்ப்பானத்திலும் அவர்களே பாரம்பரிய ராணுவ சாதி வீரர்கள் என்பதை டச்சுக்காரர்கள் கண்டறிந்தனர். அவர்களே  தெற்காசியாவில் முதன்முதலில் குறிப்பிட்ட ராணுவ சாதியை சேவைக்காக பயன்படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். (16)

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெவ்வேறு குறைகளைக் கொண்ட இரண்டு வகை இந்திய ராணுவ சாதிகளைப் பற்றி கோஹன் குறிப்பிடுகிறார். () “ராணுவத்திற்காக சேர்க்கப்படாத அல்லது குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்ட பிரிவினர்” (பி) “ராணுவத்தில் சேர்க்கப்பட்ட, ஆனால் அதிகாரிகளாக இன்னும் பலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிரிவினர். (17)

ஆனால் மறவர்களின் மனக்குறை மூன்றாம் பிரிவில் வருகிறது. ஆங்கிலேயர்கள் சமூகம், பொருளதாரம், மற்றும் தண்டிக்கும் முறைகளின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தில் அவர்கள் பெற்றுள்ள பாரம்பரிய நிலையை பறிக்க முயன்றது. இது அந்தக் காலகட்டத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த அதுபோன்ற சாதிகள்  மற்றும் பிரிவினருக்கு வழங்கப்பட்ட உரிமைகளுக்கு எதிரான நேரடி வேறுபாடாகும். அவர்களின் உரிமை பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் ஒழுங்கு மற்றும் தண்டிக்கும் நடவடிக்கைக்கான தவறான மக்களாக வகைப்படுத்தப்பட்டனர். அவர்கள் தென்னிந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் நிறுவப்பட்ட புதிய சமூக ஒப்பந்தத்தில் விளிம்புகளுக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் பாரம்பரியம் மற்றும் நினைவை ஒழித்துக் கட்டுவது தமிழ்ப் பகுதியில் ராணுவத் தன்மையை அமைதிப்படுத்தும் மற்றும்  நீக்கும் செயல்முறையை முடித்து வைக்க  அத்தியாவசியமானதாக இருந்தது. வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட ராணுவ இனங்களிலிருந்து ஆட்சேர்ப்பு அவர்களை மேலும் அப்புறப்படுத்தியது. அதுவே தென் தமிழகத்தின் ராணுவ இனத்திற்கான வரையறை ஆனது.

வட இந்திய ஆதிக்க சாதிகளுக்கு நிதியுதவியும் பாதுகாப்பும் வழங்கியது, அவர்களின் கலாச்சாரத்தை ராணுவமாக்கியது ஆகிய இரண்டும் இங்கிலாந்தின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு தெற்காசியா கொடுத்த விலையாகும்” (18) என்ற வாதத்தை டேவிட் வாஷ்புரூக் முன் வைக்கிறார்அதேவேளையில் தமிழ் ராணுவ சாதிகளின் அதிகாரத்தைப் பறித்து அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்தது மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தை ராணுவத் தன்மை இல்லாததாக்கியது ஆகிய இரண்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தென்னிந்தியா கொடுத்த விலையாகும்.

இந்த பின்னணியே துணைக் கண்டத்தின் வடக்கு மற்றும் தெற்கின் தற்கால இந்திய ராணுவத்தை கட்டமைக்க அடிப்படையாக அமைந்தது. தமிழகத்தில் ராணுவத் தன்மையை அகற்றியது தமிழ்ச் சமூகத்தில் ராணுவமல்லாத சாதிகளுக்கு ஊக்கமளித்து உறுதிப்படுத்தியது. “இது மறவர்களுக்கு எதிராக அமைந்தது.” (19)

இதில் மிகவும் முக்கியமானவர்கள் வேளாளர்கள், நாடார்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள். “வேளாண்மை செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்ட”, “அமைதியை விரும்பும்” (மெட்ராஸ் சென்சஸ் 1871) வேளாளர்களின் கலாச்சாரம் மற்றும் வழக்கங்கள் ராணுவ பாரம்பரியம் கொண்ட சாதிகளின் ராணுவத் தன்மையை அகற்றவும் அடக்கவும் பயன்பட்டது. இதில் ஆங்கிலேயர்கள் தங்கள் முன்னேடிகளின் கொள்கையைப் பின்பற்றினர். அது கட்டுப்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சிறந்த வழிமுறைவேளாண்மை செய்பவர்களை மட்டுமே வைத்திருப்பதுஎன்ற கொள்கையின் அடிப்படையில் எழுந்ததாகும் (21). இவ்வாறு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வேளாளர் சாதி ஆதிக்கம் பெற்றது. அவர்களின் கலாச்சரம் மற்றும் ஆதிக்கமே தமிழ் சமுதாயத்திற்குச் சொந்தமானதானது. நாடார்களும் ஆதிதிராவிடர்களும் மதமாற்றத்திற்கு ஏற்றவர்களாக இருந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவ மதத்தை (புராடஸ்டன்ட்) தழுவினர். சென்னையை தளமாகக் கொண்ட ஆங்கிலேயே ராணுவ ஆட்சேர்ப்புப் பிரிவு இவர்களுக்கே அதிக சலுகை காட்டியது. புதிதாக எழுச்சி பெற்ற,  வேளாள தலைமைகள் வழிநடத்திய திராவிட கருத்தியல் ஆங்கிலேய ஆதரவு கலாச்சார மற்றும் கல்வியை அடிப்படையாகக் கொண்டமைந்தது.

துவக்ககாலத்தில் திராவிட இயக்கம், ராணுவத் தன்மையை அகற்றியதால் ஏற்படும் சமுதாயம், பொருளாதரம் மற்றும் மத லாபங்களில் ஆங்கில ஆட்சியாளர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களையே பிரதிபலிப்பதாக அமைந்தது. இதன் காரணமாகவே துவக்க கால திராவிடக் கருத்தியலின் ஆய்வுகள் மற்றும் வரலாறு தமிழர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பாரம்பரிய ராணுவ சாதிகளின் முக்கியப் பங்கை குறைத்துக் கூறுவது அல்லது அலட்சியப் படுத்துவது  அல்லது மறுப்பது, தமிழர் கலாச்சாரம் என்பது வேளாளர் கலாச்சாரம்தான் என்று உறுதிப்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகியது. (இந்த கருத்தை முன்னெடுத்தவர்களில் மறைமலை அடிகள் முக்கியமானவராவர்).

இவ்வாறு நாம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்த் தேசிய அடையாளத்திற்கான இரண்டு விளக்கங்களைக் காண்கிறோம் (23). ஒன்று ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்தியல் மற்றும் சாதிக் கலாச்சாரம் மற்றும்கிளர்ச்சி செய்யும்ராணுவ சாதிகள். மற்றொன்று ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான கருத்தியல் மற்றும் சாதிக் கலாச்சாரம் மற்றும்அமைதியை விரும்பும்வேளாளர்கள். இவை இரண்டும் தமிழர்களின் கடந்த மற்றும் தற்போதைய காலத்தைத் தெளிவாக்குகின்றன. அனைத்துத் தமிழர்களுமே மறவர்கள் மற்றும் அவர்களின் பண்டைக்கால ராணுவ பாரம்பரியம் காரணமாகவே தமிழ்த் தேசியம் தனித்தன்மை பெற்றது என்று சொல்கிறார்கள். அப்படியானால், திராவிடம் எதிர்ப்புத் தெரிவித்த அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பான தமிழ் ராணுவம் எவ்வாறு (ஆயிரத்து தொள்ளாயிரத்து) ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழ்த் தேசிய இயக்கத்திற்கான வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது?

இது திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பானது. இது (19)30-களுக்குப் பிறகு மறவர்கள் - இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. திராவிட இயக்கத்தின் மாற்றத்தில், இது முக்கியமாக நீதிக்கட்சியில் () ஆங்கில ஆதரவு தலைவர்களை ஏற்க மறுப்பது தொடர்பானது. (பி) 1947-48-ல் ஆங்கில ஆட்சி மற்றும் ஏகாதிபத்தியத்தின் மீதாக ஏற்பட்ட அடிப்படை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. இது இயக்கத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எழுந்தது.

சென்னை மாகாணத்தின் மிதவாத பிராமணத் தலைமை, தமிழ் ராணுவச் சாதிகளின் மீதான ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறையை எதிர்க்காத நிலை எடுத்தபோது இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் மறவர்கள் இடையேயான உறவு சீர்கெடத் துவங்கியது. இந்த வேறுபாடு,  வலிமையான மற்றும் செல்வாக்கு மிக்க மறவர் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சுபாஷ் சந்திர போஸ் துவங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தபோது வெளிப்பட்டது. அப்போது அவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முன்னேற்றக் கட்சியை கட்டமைக்கத் துவங்கினார் (24). இந்த எதிர்ப்பு 1957-ல் நடந்த சாதி மோதல்களில் முடிவுற்றது. காங்கிரஸ் அரசாங்கம் கலவரம் தொடர்பாக முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தது. அதுவரை தென் தமிழகத்தில் செல்வாக்குப் பெறாத திமுக இந்தச் சூழலைப் பயன்படுத்தி மறவர் பிரச்சனையில் தலையிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கால் பதித்தது. அந்தக் காலத்தில் தென் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரே திமுக பிரதிநிதி மு. கருணாநிதி மட்டுமே. அவரே மறவர்களை திமுகவில் இணைத்து தமிழ்த் தேசிய அடையாளத்தில் தமிழ் ராணுவ சாதிகளின் கலாச்சாரத்தை முக்கிய உட்பொருளாக்கினார்.

கருணாநிதி முதல்வர் ஆகும் வரை பல ஆண்டுகளாக மறவன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்தார். கட்சித் தொண்டர்கள் அவரது கடிதத்தை மறவன் மடல் என்ற பெயரில் வாசித்து வந்தனர் (25). இவ்வாறு தமிழ் ராணுவத்தன்மை திராவிட இயக்கத்தின் ஒருங்கிணைந்த பாகுதியாயிற்று. திமுகவில் உள்ள பிரிவினைவாதிகள் (ஆயிரத்து தொள்ளாயிரத்து) ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் துவக்கத்தில் தமிழ் ராணுவத் தன்மையால் நிரம்பியிருந்தனர். திராவிட இயக்கத்தின் இந்தப் பகுதியே இலங்கைத் தமிழர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுகவின் கிளைகள் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் துவக்கப்பட்டன. இந்த காலத்தில்தான் தமிழகத்தில் படித்துக் கொண்டிருந்தமட்டக்களப்பு அருகேயுள்ள ஒரு சிறு கிராமமான அமிர்தகாழியைச் சேர்ந்த இளம் மாணவனான காத்தமுத்து சிவானந்தன் திமுகவின் போராட்டங்களில் பங்கெடுத்தான். கருணாநிதி அவனைதமிழ் எழுச்சிக்கானப்  பொருத்தமான ஆயுதம்என்று குறிப்பிட்டார் (26). அந்த மாணவன்தான் பின்னாளில் காசி ஆனந்தன் என்று அறியப்பட்டார். அவர் இலங்கை திரும்பியதும் திமுக (27) என்ற இருவாரப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். அதில் அவரதுமறவர் குலம்கவிதைகள் வெளியாயின (28).

தமிழர் ராணுவம் மறவர் படையாகும்...
ஆத்திரம் கொண்ட தமிழர்கள் புலிப்படையாவர்...”
இந்தக் கவிதையின் வரிகள் தற்போது தமிழ்ப்புலிகளின் வரலாறாவிட்டன.

------------------------
அடிக்குறிப்புகள்:-
(14) ஸ்டீபன் பி. கோஹன் ஆப்.சிஐடி, .58.
(15) எட்கார்ட் தர்ஸ்டன், கே. ராங்காச்சாரி: கேஸ்ட்ஸ் அண்ட் டிரைப்ஸ் ஆஃப் சவுத் இந்தியா, வால்.5, 1909, அரசாங்க அச்சகம், சென்னை, . 22-23
(16) மறவர்களின் தொடர்புகள் இந்த ஆய்வின் வேறு பகுதிகளில் ஆராயப்படும். குறிப்பாக யாழ்ப்பானத்தில் முதலில் குடியேறியவர்கள் மறவர்கள் என்று யாழ்ப்பான வரலாற்றாசிரியர் ஒருவரின் அன்மைக்கால முயற்சி தொடர்பாக இது செய்யப்படும். யாழ்ப்பானத்தில் குடியேறியவர்கள் மறவர்களே, யாழ்ப்பான ஆட்சியாளர்கள் அந்தச் சாதியைச் சேர்ந்த ஆட்சியாளர்களான சேதுபதிகளாவார் என்று அவர் கூறுகிறார். வடமராச்சி ஒரு காலத்தில் வட மறவர் ஆட்சி (மறவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி) என்று அழைக்கப்பட்டது, ‘யாழ் குடியேற்றம்’, கே.முத்து குமாரஸ்வாமிபிள்ளை, 1982, சுன்னாகம், யாழ்ப்பானம்.
(17) எஸ்.பி.கோஹன்: ஓபி.சிஐடி, .59
(18) டேவிட் வாஷ்ப்ரூக்: ஓபி.சிஐடி, .481
(19) புதிய ஒழுங்கிற்கு பொருத்தமாக கண்டறியும் சாதிகளைப் பற்றி விவரிக்க ஆங்கிலேயர் பயன்படுத்திய சொற்டொடர்.
(20) எட்கார்ட் தர்ஸ்டன்: ஓபி.சிஐடி, .369-370, VII
(21) போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இந்த கொள்கையை அமல்படுத்தினர்திகிரி அபேயசிங்கே: ஜஃப்னா அண்டர் தி போர்சுகீஸ், 1986, கொழும்பு, .24.
(22) தி ஃபாதர் ஆஃப் திராவிடியன் ஐடியாலஜி, ராபர்ட் கால்டுவெல், இவர் மறவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலியில் பிஷப் ஆக இருந்தவர்.
(23) ‘மாறுபட்ட விளக்கங்கள்என்ற கருத்துக்கு இந்தியாவின் மற்றொரு சூழலில் தேசிய அடையாளம் உருவாவதை கூறலாம். அயோத்தியா சிக்கல், பார்பரா ஸ்டோலர் மில்லரை பார்க்கவும்: பிரசிடென்சியல் அட்ரஸ், ஜர்னல் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ், வால்.50, எண் 4, நவம்பர்.1191.
(24)  முன்னேற்றக் கட்சி சுபாஷால் (சந்திரபோஸ்துவக்கப்பட்டது. மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவீரகேசரி’-ன் தலைமை துணை ஆசிரியரான சுபாஷ் சந்திர போஸ் தேவர் நான் 1990-களில் இந்த ஆய்வை துவங்கியபோது  தனது மதிப்பு மிக்க கருத்துக்களை வழங்கி மறவர் வரலாறு குறித்து என் கவனத்தை திருப்பி இந்த விஷயம் தொடர்பான பொருட்களை கொடுத்தும் உதவியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
(25) (19)60-களில் இது திமுக கட்சியின் முக்கிய பத்திரிகை ஒன்றின் பெயராகவும் இருந்தது.
(26) ‘உயிர் தமிழுக்கு’, காசி ஆனந்தன், ஃபாத்திமா பிரஸ், மட்டக்களப்பு, முன்னுரை, . 2, 3-வது பதிப்பு, (வெளியீட்டு) வருடம் கொடுக்கப்படவில்லை.
(27) இந்தக் காலகட்டத்தில்திமுகஎன்ற வேறு இரண்டு பத்திரிகைகளும் பிரசுரமாகின.
(28) திமுக (இருவார பத்திரிகை), 10.7 (அதாவது ஜூலை), 1962, கொழும்பு ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் வசந்த அப்பாத்துரை.
குறிப்பு: தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி கருத்துக்கள் தெரிவித்து தமிழர் எழுச்சியில் தமிழகத்தின் தென்னிந்திய மாவட்டங்களின் பங்கு பற்றி என் கவனத்தை திசை திருப்பிய பேராசிரியர் கே. சிவத்தம்பிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

http://tamilnation.co/forum/sivaram/920515lg.htm


பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...