Monday, March 31, 2014

யார் அந்நியர்?


பல்வேறு மிரட்டல் உருட்டலுக்குப் பிறகும் வரி வசூலிக்க முடியாததால், வீரபாண்டிய கட்டப்பொம்மனிடம் வரி வசூலிக்க தங்கள் ஏவள் அடிமையான எட்டப்ப நாயக்கரை மாறுவேடத்தில் அனுப்பி வைத்தனர் வெள்ளையர். 

எட்டப்பன் அங்கு சென்று வெள்ளையர்களை புகழ்ந்து பேசுகிறான்.

அப்போது நடைபெறும் உரையாடல்....

பொறுமையிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், "வெள்ளையர்களின் வீரத்தைச் சொல்வதற்குத்தானே மாறுவேடத்தில் வந்தீர்கள் எட்டயபுரத்து ராஜாதி ராஜ ராஜ கம்பீர எட்டப்ப நாய்க்கர் அவர்களே!" என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

தன்னை வீரபாண்டிய கட்டபொம்மன் அடையாளம் கண்டுகொண்டதை அறிந்ததும் எட்டப்பனின் தலை குனிந்தது.

வந்திருப்பது எட்டப்பன் என்று அறிந்ததும் ஊமத்துரை வாளை உருவினான். அதைத் தடுத்த கட்டபொம்மன், "தம்பி இவரும் நம்மைப்போன்று பாளையத்து மன்னர், ஆனால் எழுந்து நிற்பதற்கு பதிலாக, வெள்ளைக் காரர்களின் காலில் விழுந்து கிடக்கிறார். அவர்கள் கொடுக்கும் மதுவுக்காக இங்கே மாறு வேடத்தில் வந்திருக்கிறார். அந்நியருக்கு வரிக்கட்டி ஆயுளைக் கடத்துகிறார்" என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே,

"வீரபாண்டியரே! வெள்ளையரை அந்நியர்! அந்நியர்! என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறீரே! ஆனால் நீங்களும் அந்நியர்தானே!" என்று எட்டப்ப நாயக்கன் தயங்கி தயங்கிக் கேட்டான்.

ஊமத்துரையும், வெள்ளையத்தேவனும் எட்டப்ப நாயக்கன் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து அந்நியன் என்று சொல்லியதைக் கேட்டதும் ஆவேசம் கொண்டனர். அவர்களைத் தடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்,

"எட்டப்பரே! ஒரு சரியான கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நான் பிறப்பால் தெலுங்கர்தான். நம் இரண்டுபேருடைய மூதாதையரும் ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மண்ணுக்கு வந்தவர்கள்தான். ஆனால் நான் இந்த மண்ணின் மகத்துவத்தை காப்பதற்கு நான் வாழ்கிறேன். நீங்கள் இந்த மண்ணை அந்நியனுக்கு அடகு வைப்பதற்காக வாழ்கிறீர்கள். அதனால் தூதுவந்த நீங்கள் தொல்லையில்லாமல் செல்லுங்கள். அதிகமாகப் பேசி எங்களை ஆத்திரமூட்டாதீர்கள். அதன் பின் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல", என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

-வீரபாண்டிய கட்டபொம்மன், கே. ஜீவபாரதி, பக்கம் 83, 84

Monday, March 24, 2014

நமது கோரிக்கை கல்கியில் செய்தியாக

நமது கோரிக்கை கல்கியில் செய்தியாக வந்துள்ளது,

Thursday, March 13, 2014


12-03-2014 அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் என் தாய் மாமா மகன் செல்வகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. 

Sunday, March 9, 2014

கனவில் வந்த தேவர்


இதை நம்புவதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்...

இன்று நான் நடை பயிற்சி சென்று திரும்பியதும், இங்கே வாருங்கள், ஒரு விஷயம் சொல்கிறேன் என்று படுக்கையில் அமரச் சொன்னார். அதை உங்களால் நம்ப முடியாது என்று சொன்னார்.

நானும் என்னவென்று கேட்டேன்.

இன்று என் கனவில் யானைக் குட்டி என் மடி மீது தலைவைத்துப் படுத்துக் கொண்டது. எனக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அதன் நட்பு எனக்கு அந்தப் பயத்தை போக்கியது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது அது தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது.

என் மனைவியின் கனவில் அடிக்கடி யானை வருவது, அதைக் கண்டு அவர் பயந்து ஓடுவது. சில நேரங்களில் யானை ஆசி வழங்குவது என்பது அவருக்கு தொடர்ச்சியாக வரக் கூடியதுதான். அதனால் நான் இதை பெரிது படுத்தவில்லை.

மேலும் அவர் சொன்ன கனவுதான் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது சிறிது நேரத்தில் என் உறவுக் காரப் பெண்கள் ஏதோ சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். என் மனைவியும் தன் பங்கிற்கு சச்சரவில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென, “யாரோ வானத்திலிருந்து வந்திருப்பதாக“ பெண்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இவரும் சென்று பார்த்தார்.

தேவர் வெள்ளை நிற ஜிப்பா வேட்டியில் வந்துகொண்டிருந்தார். அவரது முகம் ஒளிரக் கூடியதாக இருந்தது. அவரோடு நீல நிறச் சட்டையில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். பெண்கள் அனைவரும் அவரை வணங்கினர்.

என் மனைவி எனது இரு குழந்தைகளுடன் அங்கே நின்று அவரை வணங்கினார். என் இளைய மகனிடம், “ஐயா வணக்கம்” என்று சொல் என்று சொல்கிறார்.

அவனும், “ஐயா வணக்கம்” என்று சொல்கிறான்.

உடனே, தேவர் “நீ பெருமாள் தேவனின் மகன்தானே? நல்லா இருப்பீர்கள்” என்று ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

இதுதான் என் மனைவிக்கு இன்று காலையில் தோன்றிய கனவு.


இதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேவர் எனக்கு கனவில் தோன்றினார் என்று நான் சொன்னபோது என் மனைவியால் அதை நம்ப முடியவில்லை.

கணினியில் வரைகலை

இதை வரைஞ்சவரையும் உங்களுக்கு நல்லாத் தெரியும். 

அட, நான்தாங்க. 

நமக்கும் கிராபிக் வேலை ஒத்து வருமானு சோதிச்சுப் பார்த்தேன். அவ்வளவுதான்.

Friday, March 7, 2014

யாதவ மகா சபையின் தலைவர் தேவநாதனுடன் சந்திப்பு

மார்ச் 6ம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகிகள் யாதவ மகா சபையின் தலைவர் தேவநாதன் அவர்களை சந்தித்து தேர்தல் குறித்த ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

பிள்ளைமார் சமுதாய தலைவருடன் சந்திப்பு


மார்ச் 3ம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக திருச்சியில் பிள்ளைமார் சமுதாய தலைவரான டாக்டர். வி. ஜெயபால் அவர்களை சந்தித்துப் பேசியபோது எடுத்த படம். படத்தில் இடமிருந்து வலமாக நான்,  கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன், வி. ஜெயபால், ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜெகதீஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அக்னி சுப்ரமணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான். 

Sunday, March 2, 2014

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்து வேட்பாளரை நிறுத்துமாறு வேண்டுதல்.


பெறுனர்:-
                            தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
                           பொதுச் செயலாளர்,
                            அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக),
                           எண் 226, அவ்வை சண்முகம் சாலை,
                           ராயப்பேட்டை, சென்னை - 600 014.

அனுப்புனர்:-
                            பெருமாள் தேவன்,
                            தேவர் ஆராய்ச்சி மையம்,
                            6-5-17/ 8ஏ, தடிவா நைனார் தெரு, 6வது வார்டு,
                            தேவதானப்பட்டி, பெரியகுளம் (வ), தேனி (மா) - 625602
                            மொபைல் 9047440542


பொருள் :- இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் உள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்து வேட்பாளரை நிறுத்துமாறு வேண்டுதல்.


மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,


            2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களது கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

            அதேவேளையில் தங்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக திரு. அன்வர் ராஜா என்ற இஸ்லாமியரை நிறுத்துவதாக அறிவித்துள்ளீர்கள். ராமநாதபுரம் தொகுதியில் இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் இருப்பது தாங்கள் அறிந்ததே. இந்துக்களின் புனித தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்வது இந்துக்களின் கடமையாகும்.

            ராமேஸ்வரம் திருக்கோவில் ராமர் வழிபட்ட தலமாக உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கதலம் இதுவே.   

            மேலும் ராமநாதபுரம் இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ராமநாதபுர ராஜாவான பாஸ்கர சேதுபதிதான் விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து இந்து மதத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் அறியச் செய்தவர் ஆவார்.

            எனவே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இந்தத் தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

            அதேபோல இஸ்லாமியர்கள், இத்தொகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களின் முன்னோரின் மதமான இந்து மதத்திற்கும், இந்து மதத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கும் மதிப்பளித்து இந்தத் தொகுதியை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இஸ்லாமியருக்கு,  இஸ்லாமியர்  அதிகமாக வாழும் வேறு தொகுதிகளை கொடுக்கலாம். வெள்ளையருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியரின் பங்கேற்பை நினைவுறுத்தும் வகையில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்த திண்டுக்கல் போன்ற தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கலாம். அதுவே பொருத்தமாகவும் அமையும்.


                                        நன்றி!                                                                        இப்படிக்கு,
                                                                        தேவர் அடியேன்
                                                                        (பெருமாள் தேவன்)

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...