Thursday, April 3, 2014

காங்கிரஸை ஒழித்துக் கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை

            ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி முதலில் ஒரு சமூக சீர்திருத்த அமைப்பாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பே அது பல துரோகங்களை செய்தாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. அக்காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டின் சாபக்கேடாக அமைந்துவிட்டது. இது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா முழுவதும் இருந்த இந்தக் கட்சி தற்போது மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

            இதற்கு முக்கிய காரணம் இந்தக் கட்சி தேசிய இனங்களை தூசு போல மதித்ததாகும். மற்றொரு காரணம் பெரும்பான்மை மக்களான இந்துக்களைப் புறக்கணித்து வந்ததாகும். இஸ்லாமியரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி வரும் இக்கட்சி அவர்களை சந்தோஷப்படுத்த பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு வருகிறது.

            ‘சிறுபான்மையினரின் பாதுகாவலன்’ என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சி கடந்த 2011ம் ஆண்டு ஒரு கொடுமையான சட்ட வரைவை உருவாக்கியது. அது “வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) (பிசிடிவி) மசோதா” ஆகும்.

            இந்த மசோதா (சட்டம்) இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்களின் நலனை பாதுகாப்பதாக, அல்லது அவர்கள் பெரும்பான்மை இந்துக்களை அடக்கி ஒடுக்க வகை செய்யும் கொடுங்கோன்மைச் சட்டமாக உள்ளது. தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளும் இந்தக் கட்சி ஒப்புக்காக தனது மற்றொரு வாக்கு வங்கியான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் பாதுகாப்பையும்  இந்தச் சட்டத்தில் சேர்ந்துள்ளது.

            ஆனால் அதே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் இந்துக்களாக இருந்து சிறுபான்மையினருடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதை இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை.

            இந்த மசோதாவை சட்டமாக்கிவிடலாம் என்று காங்கிரஸ் கடந்த ஓரிரு ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. ஆனால் இது கொடுமையான சட்டம், இந்துக்களை முற்றிலுமாக ஓரங்கட்டும் சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கவும் இதை நிலுவையில் வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றால் இக்கட்சி இந்த மசோதாவை சட்டமாக்குவது உறுதி. இந்தச் சட்டம் இந்துக்களை பரம்பரை குற்றவாளிகள் ஆக்கும் ஒரு நவீன குற்றப் பரம்பரைச் சட்டம் என்று சொன்னாலும் மிகையாகாது. எனவே இந்துக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவச் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த மசோதாவின் சில விதிகள்:-

• ‘இந்துக்கள் அனைவரும் குற்றவாளிகள் மற்றும் கலவரம் செய்வோர்’ என்ற கருத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர் இந்தச் சட்டத்தை இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் (இந்த மசோதா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரை “சிறுபான்மையினர் குழு” (பிரிவு 3ஈ) என்று வரையறுக்கிறது).

• இந்தச் சட்டத்தின் மூலம் வெறும் புகாரின் அடிப்படையிலேயே ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும். புகார் செய்யப்பட்ட இந்து உடனடியாக கைது செய்யப்படுவார். தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கத் தவறும்பட்சத்தில்  அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார் (வழக்கமான குற்றவியல் செயல்முறைகளின்படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப் படாதபட்சத்தில் நிரபராதியாகக் கருதப்படுவார்).

• இந்தச் சட்டத்தின்படி அனைத்துக் குற்றங்களும் அதாவது அறியப்படக் கூடிய மற்றும் அறியப்பட முடியாத அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவரமுடியாதவை (2011 மே வடிவத்தின்படி விதிமுறை 56) ஆகும்.

• இந்தச் சட்டம் உழைக்கும் மற்றும் தொழில் செய்யும் பெரும்பான்மை இந்துக்களை முஸ்லீம்கள் மிரட்டிப் பணம் பறிக்க வழி செய்யக் கூடியதாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

• இந்தச் சட்டத்தின் கீழாக குற்றங்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு எந்தவித கால வரம்பும் இல்லை. இதற்கு ‘சிறுபான்மையினர்’ 1950-லிருந்து இந்துக்கள் மீதாக தொடரப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரலாம் என்று பொருளாகும்.

• 42வது பிரிவின்படி தேசிய ஆணையத்தின் முன்பாக ஒரு இந்து மீது சிறுபான்மையினர் கொடுக்கும் பொய் சாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது.

• தேர்ந்தெடுக்கப்படாத நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசி) அனைத்து மாநில முதல்வர்களையும் கட்டுப்படுத்தக் கூடியதாக  இருக்கும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கூட்டாட்சிக்கும் எதிரான ஒன்றாகும்.

• மதவாத காங்கிரஸ் கட்சியின் இந்தச் பிசிடிவி மசோதா/ வகுப்புவாரி வன்முறை மசோதா/ வகுப்புவாரி மற்றும் குறி வைக்கும் வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது இந்துக்கள் மட்டுமே எப்போதும் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள், சிறுபான்மையினர் ஒருபோதும் கலவரத்தில் ஈடுபடுவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

• இந்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழாக வழக்குத் தொடர முடியாது. ஏனெனில் இந்தச் சட்டத்தில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (பிசிடிவி) கீழாக ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் அல்லது ஏதாவது ஒரு சிறுபான்மை மதத்தவர் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட புகார் செய்தாலும் ஏழை - பணக்காரர், தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி, இடது சாரி- வலது சாரி என்ற பாரபட்சம் இல்லாமல் அவர் கைது செய்யப்படுவார்.

• இந்த பிசிடிவி சட்டத்தின் கீழாக இந்தியாவுக்குள் ஊடுறுவிய ஒரு பங்காளதேசத்தவர், ஒரு ஜிகாத் தீவிரவாதி அல்லது ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லீம் புகார் செய்தால் அந்த இந்து குற்றவாளி என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்படுவார்.

• ஒரு இந்து தான் ஒரு நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அவர் தான் ஒரு நிரபராதி என்று நிரூபிக்கும் வரை காவல்துறையும் நீதிமன்றங்களும் அவரை குற்றவாளியாகவே கருதும்.

• ஒரு இந்து மீது குற்றம்சாட்டும் ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் தான் வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் கொடுக்கத் தேவையில்லை.

• இந்து மீது யார் புகார் செய்தார்கள் என்பது தெரிவிக்கப்படாது

• இந்து தன் மீது புகார் செய்த முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை குறுக்கு விசாரணை செய்ய முடியாது. ஆனால் வழக்கு விசாரணை பற்றி அவர்களுக்கு தொடர்ச்சியாக தகவல் தெரிவிக்கப்படும்.

• வழக்கு நிலுவையில் இருக்கும்போது நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இந்து குற்றவாளி என்பது நிரூபிக்கப்படும் முன்பாகவே அவரின் சொத்துக்களை முடக்கலாம். 

• இந்து குற்றவாளி என்று கண்டறியப்பட்டால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு கொடுப்பதற்காக இந்துவின் சொத்து ஏலம் விடப்படும்.

• நீதிமன்றம் தானாக தொடர்ந்த வழக்கு அல்லது புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு தனிநீதிபதி ஒரு இந்துவை தான் வசிக்கும் இடத்தை விட்டுச் சென்றுவிடுமாறு உத்தரவிடலாம். ஆனால் ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவருக்கு அவ்வாறு உத்தரவிடமுடியாது.

• இந்த மசோதாவில் இந்துக்களுக்கு எதிரான பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்று பிசிடிவி வழக்குகளை நடத்தும் அரசாங்க வழக்கறிஞர்களில் மூன்றில் ஒரு பங்கு வழக்கறிஞர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். மேலும் முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத நபர்கள் மட்டுமே வழக்கறிஞராக இருக்க முடியும்.

• தேசிய ஆலோசனைக் குழுவில் மத்திய மற்றும் மாநில அளவில் ஏழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதில் குறைந்தது நான்கு பேர் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். அதாவது இந்த ஆணையத்தில் இந்துக்கள் வேண்டுமென்றே சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.

• இந்த மசோதாவின்படி இந்துக்கள் எவ்வளவுதான் மதச்சார்பற்றவராக இருந்தாலும் இந்த ஆணையத்தின் தலைவராக அல்லது துணைத் தலைவராக நியமிக்கப்பட முடியாது.

• பிரிவு 42-ன் கீழாக தேசிய ஆணையத்தின் முன்பாக ஒரு அளிக்கும் பொய்ச் சாட்சிக்காக அவர் மீது எந்த சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. அதாவது ஒரு இந்து மீது ஒரு சாட்சி பொய்யான குற்றச் சாட்டைக் கூறினால் அதற்காக அவர் மீது வழக்குத் தொடர முடியாது.

• சிறுபான்மையினர் செய்யும் துவேஷ பிரச்சாத்திற்கு தண்டனை அளிக்க முடியாது. ஆனால் இந்துக்களுக்கு தண்டனை அளிக்கப்படும்.

• அதேவேளையில் ஒரு இந்துப் பெண் ஒரு  முஸ்லீம் ஆண் அல்லது ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆணால் கற்பழிக்கப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டு உண்மை என்பதை அந்தப் பெண் நிரூபிக்க வேண்டும். அந்தப் பெண் யார் (அடையாளம்) என்று கற்பழித்த நபருக்குச் சொல்லப்படும்.

•  இந்த மசோதாவில் சொல்லப்பட்ட பிரிவுகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு இந்துவுக்கு  தான் தரவேண்டிய கடனை கொடுத்து விட்டதாக எழுதி வாங்கலாம், அவரது சொத்துக்களை விற்க, வாடகைக்கு விட கட்டாயப்படுத்தலாம். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர், கீழ் ஊழியர் தனது இந்து முதலாளியை/ அதிகாரியை பழிவாங்கலாம்.

• ஒரு இந்து வீடு/ கடை உரிமையாளர் அதில் குடியிருக்கும் முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை வெளியேற்ற முடியாது. அவர் புகார் செய்தால் ஊரிமையாளர் நேரடியாக சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

• ஒரு இந்து, ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை வேலையாளாக அல்லது கீழதிகாரியாகக் கொண்டிருந்து அவர் சரியாக செயல்படவில்லை என்று கண்டித்தால், அந்த ஊழியரின் மனைவி அல்லது உறவினர்கள் அவருக்கு மன அல்லது உடல் ரீதியாக தீங்கு செய்ததாக புகார் செய்யலாம். அந்த இந்து முதலாளி அல்லது உயரதிகாரியை கைது செய்ய அதுவே போதுமானதாகும்.

• பிரிவு 3.11-ல் ‘பாதிக்கப்பட்டவர்’ என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உறவினர், அவர் வேற்று நாட்டுக் குடிமகனாக இருந்தாலும், அவர் யுஎஸ்ஏ, பாகிஸ்தான், சௌதி அரேபியா அல்லது வளைகுடா நாடுகளில் வாழ்பவர்களாக இருந்தாலும் கூட இந்தியா அல்லது வெளிநாட்டில் வாழும் இந்துவின் மீது புகார் செய்யலாம்.

• பாகிஸ்தானில் வாழும் ஒரு பாகிஸ்தானி இந்தியாவில் வாழும் தனது உறவினருக்காக ஒரு எந்தவொரு இந்து மீதும் புகார் செய்யலாம். அந்த இந்துவை இந்தியப் போலீசார் கைது செய்ய வேண்டும்.

• இந்து வாக்காளர்கள் இவற்றை அறிந்துகொள்ளாவிட்டால் இந்தியா அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்துக்களின் நிலை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நிலையை விட மிக மோசமாகிவிடும். 

• இந்தச் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்துக்கள் சிறுபான்மை மதத்தவருடன் பேசுவது, இணைந்து செயல்புரிவதையே குறைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். எனவேதான் இந்த மசோதா மக்களை பிரித்து வைக்கக் கூடியது, இந்தியாவின் கலாச்சார வேற்றுமையை சீரழிப்பதாக உள்ளது என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த மசோதாவின் ஆங்கில பிடிஎஃப் கோப்பை http://nac.nic.in/pdf/pctvb.pdf என்ற இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...