Tuesday, May 13, 2014

அம்பேத்கர் ஒரு தேசபக்தர்! - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்மத்திய அரசாங்க சட்ட மந்திரி கனம் அம்பேத்கர் ஒரு காலத்தில், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராக இருந்தார் எனச் சொல்கிறார்கள்.

தேச விடுதலைக்காக உழைத்தவர்கள் என்று மார்தட்டும் வீரப் புலிகளின் யோக்யதையை, அந்தரங்க எண்ணத்தை ஆதியிலிருந்து இன்று வரை அலசிப் பார்ப்போமானால், அம்பேத்கர் அவர்கள் மற்றெல்லோரையும் விட தேச பக்தியில் சிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தகுதியற்றவர்களும், திறமையற்றவர்களும், திரை மறைவுச் சதிவேலை, போலி வீரர்களும் விடுதலை இயக்கத்தைக் கைபற்றிக்கொண்டு கொட்டம் அடித்திராவிட்டால் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள்! 

சார்.சி.பி. இராமசாமி அய்யர் வகையறாக்கள் அனுபவிக்கும் அதிகார போகத்தை தாமும் அடைந்தாக வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் செயலாற்றத் தொடங்கியோர் கையில் காங்கிரசு இயக்கம் சிக்கியிராவிட்டால் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகியிருக்க மாட்டார்கள்.

வெறும் அலங்காரத்திற்காகவும், புகழுக்காகவும் சாதிகள் ஒழியவேண்டுமென்று மேடை மீது நின்று கர்ஜித்து, நடைமுறையில் கடைந்தெடுத்த சாதி வெறியர்களாக இருக்கும் கயவர் கும்பல் காங்கிரசில் பெருத்திருக்காவிட்டால், அம்பேத்கர் காங்கிரசுக்கு விரோதியாகி இருக்கமாட்டார். 

சுருக்கமாக சொல்லுமிடத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்கூட்டம் காங்கிரசில் வலுத்துப் போனதால்தான், அம்பேத்கர் போன்றவர்களுக்கும் அதில் இடமில்லாது போய்விட்டது.

கடந்த 26 ஆம் தேதியன்று நமது வருங்கால அரசியல் திட்டம் அரசியல் நிர்ணய சபையில் கைஎழுத்தாகுமுன் அவர் நிகழ்த்திய அற்புதப் பிரசங்கத்தைக் கூர்ந்து கவனிப்போருக்கும் மேல உள்ள உண்மைகள் தெளிவாய்ப் புலனாகும்.

மகாத்மா காந்தியடிகள் பலரும் புகழ்வதுபோல் தலை சிறந்த அவதாரப் புருஷராய் இருக்கலாம்; தேச விடுதலைக்கு அவர் பட்ட சிரமமும் ஈடுயினையற்றதாய் இருக்கலாம். ஆனால், அவரின் ஆதிக்கம் காங்கிரசில் தலை காட்ட ஆரம்பித்த நாள் முதல் சனநாயகம் என்ற வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்பதை யாருமே மறுக்க முடியாது. சிரித்து கழுத்தறுப்பவர் என்று சொல்கிறார்களே அதைப் போல் சொல்லொன்று, செயலொன்று என்ற தன்மையில் காந்தியக் காங்கரசு செயல்படத் தொடங்கியிராவிட்டால், 

லோகமான்ய பால கங்காதரத் திலகரும்,
தேசபந்து சித்திரஞ்சன் தாசும்,
சிங்கநெஞ்சன் வ.உ. சிதம்பரனாரும்,
நேதாஜி சுபாஷ்சந்திர போசும், 
காங்கிரசை விட்டு வெளியேறியோ, ஒதுங்கியோ நின்றிருப்பார்களா?

இக்கருத்தை மனதிலிருத்தித்தான் இனிமேலாவது ஒழுங்காக நடந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்துடன் டாக்டர் அம்பேத்கர் இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் புத்திமதி சொல்வதுபோல், பின்வருமாறு கூறியிருக்கிறார்.

"இந்நாட்டில் நீண்டகாலமாக ஒரு சிறு கூட்டம்தான் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவித்து வருகிறது. மக்களில் பெரும்பாலோரை இந்தச் சிறுபான்மையினர் வேலை வாங்குவதுடன், இரையாகவும் விழுங்கி வருகின்றனர் . ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்துவிட்டனர். அவர்களுடைய எழுச்சியானது வர்க்கப் போராட்டமாக மாறாதபடி தவிர்க்க வேண்டும். இல்லையேல் நாசம்தான் ஏற்படும்".

"இடையில் வெகு காலமாக இந்தியாவில் ஜனநாயகம் அமலில் இருக்கவில்லை. அதனால் ஜனநாயகம் புதுச் சரக்காகக்கூடத் தோன்றலாம். இந்தக் காரணத்தினால் ஜனநாயகத்திற்குப் பதில் சர்வாதிகார முறை எழுந்து விடக்கூடிய அபாயம் உண்டு. இந்தப் புதிய ஜனநாயகம் தனது வெளித்தோற்றத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு உள்ளூர் சர்வாதிகாரமாக மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு".

"இந்திய சமுதாயத்தில் சமத்துவம் என்ற வாசனையே இல்லை. பல்வேறு படிகளைக்கொண்ட அசமத்துவ முறைதான் நமது சமூகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது சமூகத்தில் சில கூட்டத்தார் உயர்ந்த அந்தஸ்த்தையும்,வேறு சில கூட்டத்தார் தாழ்ந்த அந்தஸ்தையும் வகிக்கிறார்கள்".

"ஜனவரி 26-ஆம் தேதி நாம் பெறப்போகும் புது வாழ்க்கையில் முரண்பாடுகள் நிறைந்திருக்கும். அதாவது அரசியல் துறையில் சமத்துவம் பெறப்போகிறோம். ஆனால், பொருளாதார சமூகத் துறைகளில் அசமத்துவம் நிலவும். இந்த முரண்பாட்டை வெகு சீக்கிரமாக அகற்ற வேண்டும், இல்லையேல் அசமத்துவத்தால் தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களால் இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் சிரமப்பட்டு நிர்மாணித்த அரசியல் - ஜனநாயகம் சிதறிப்போயவிடும். ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்கள் தங்களை 'ஜன சமுதயம்' என்று எப்படிக் கருத முடியும்? இந்த ஜாதிகள் தேசத்தின் சத்ருக்குக்களாகும். ஏனெனில் சமுதாய வாழ்வை இந்த சாதிகள் பிளவுபடுத்துகின்றன. அதோடு பல்வேறு ஜாதிகளிடையே துவேசத்தையும்,பொறாமையையும் ஜாதிமுறை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையிலேயே ஒரு ஜன சமுதாயமாக ஒன்றுபட வேண்டுமானால் இத்தீமைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். ஜன சமுதாயமாக ஒன்றுபட்டு சகோதரத்துவம் நிலைத்தாலன்றி சுதந்திரம் வேரூன்றாது".

மேலேயுள்ள வேத வாக்கெனத் தகும் அறிவுரையைக் கூறிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தேச விடுதலைக்கு எதிராக செயலாற்றியிருக்கலாம். ஆனால் உள்ளத்திலிருந்து வெளிவந்துள்ள கருத்துக்களை உற்று நோக்கும் அறிஞர்கள், காந்தியக் காங்கிரசிற்கு இவர் எதிராளியாக இருந்ததைக் குறித்து ஆத்திரமடைய மாட்டார்கள். காந்திய காங்கிரசின் சர்வாதிகாரத்தால் ஏற்பட்ட விளைவு என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.

டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டும் குற்றங்கள் அனைத்தும் உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய காங்கிரசில் ஜனநாயகத்திற்கும், உண்மை ஊழியர்களுக்கும் இடமில்லை. ருத்திராட்ச பூனை வேஷம் போடத் தெரிந்தாலன்றி காங்கிரசில் செல்வாக்கும் பெற முடியாது. இதே நிலை மேலும் நீடிக்குமானால், இவர்கள் அடைந்துள்ள சுதந்திரமும், தயாரித்துள்ள திட்டமும் வெகு விரைவில் சுக்கு நூறாகும் என்பது திண்ணம்.

இதை நேருஜி போன்றோர் காலாகாலத்தில் உணர்ந்து, தக்க பரிகாரம் செய்ய முற்படுவாரானால், நாட்டிற்கு நன்மை உண்டு. அவர் சித்தம் எப்படியோ? யார் கண்டது?

- 1950-ம் ஆண்டு நேதாஜி இதழில் தேவர் எழுதிய கட்டுரை

Sunday, May 11, 2014

உழைக்கும் குணம்


படத்தில் உள்ளவரின் பெயர் ராஜவேல் (வயது 40). திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடைவீதியில் வைத்து நேற்றுச் சந்தித்தேன். 

அதே கடைவீதியில் இவருக்கு ஓரிரு வீடுகளும் கடைகளும் உள்ளன. அதோடு பணம் கொடுத்து வாங்குகிறார். அது மட்டுமில்லாமல் இவரால் வேலை செய்ய முடியாமல் இருக்க முடியாது என்கிறார்.

ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் கூட இவர் உழைத்துக் கொண்டிருந்தார். தான் வாடகைக்கு விட்டுள்ள கடைகயில் நடக்கும் அச்சகத்திலும் வேலை செய்கிறார். இதுதான் உழைக்கும் குணம்.

இவர் நினைத்தால் சொகுசாக இருக்க முடியும். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்கள் உழைக்காமல் சொகுசு வாழ்க்கையையே விரும்புகின்றனர். ஆனால் இவரோ ஞாயிற்றுக் கிழமையும் உழைக்கத் தயாராக இருக்கிறார்.

இவரது முன்னேற்றத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியுமா?

நான் ஒரு “மொழிவெறியன், இனவெறியன்”


எங்களுக்கு பார்ப்பனர் மீதோ அல்லது தெலுங்கு, மலையாளம், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீதோ எந்தவித கோபமோ, ஆத்திரமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. 

பொதுவாகவே ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் சார்ந்த குழுக்களை பொறுப்பாக்குவதை நான் வெறுக்கிறேன். 

இது எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். பார்ப்பனர் என்று ஒதுக்கும்போது நமக்கு நன்மை செய்த எல்லா பார்ப்பனரையும் ஒதுக்க வேண்டியிருக்கும். இதுவே மாற்று மொழிபேசுவோருக்கும் பொருந்தும்.

சிறுபான்மையினர், சிறு எண்ணிக்கையிலானவர்கள் ஆட்சி செய்யும்போது, மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்கள் ஒரு நாட்டில் ஆட்சி செய்யும்போது அவர்கள் செய்யும் சிறு தவறுகூட பெரும் பிழைகளுக்கு வழிவகுக்கும். அது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும். துரோகமாக கருதப்படும்.

அந்த வகையில்தான் வளர்ந்து முன்னேறிய நாகரீக நாடுகள் கூட வேற்று மண்ணில் பிறந்தவர்கள் தங்கள் நாட்டில் உயர் பதவிக்கு வரக்கூடாது என்ற விதிமுறையை வைத்திருக்கின்றன.

உலகின் சுதந்திரம், நாகரீகம், ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரராக காட்டிக் கொள்ளும் அமெரிக்காவை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அமெரிக்கர்களின் அன்பைப் பெற்ற அர்னால்டு செவாஸ்நேகர் நினைத்திருந்தால் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருக்கலாம். ஆனால் அந்நிய மண்ணில் பிறந்தவர்கள் உச்ச பதவிக்கு வரமுடியாது என்ற விதி அங்கே உள்ளது. அதனால்தான் ஆஸ்திரியாவில் பிறந்த அவர் கலிஃபோர்னியாவின் கவர்னர் பதவியோடு நின்று விட்டார்.

இந்த நிலையில்தான் நாங்கள் வேற்று மொழிபேசும் நபர்களைப் பார்க்கிறோம். மற்றபடி அவர்கள் இங்கு பிழைப்பதைப் பற்றி நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

எங்கள் நிலைப்பாட்டிற்காக நீங்கள் எங்களுக்கு “மொழிவெறியன், இனவெறியன்” பட்டத்தை கொடுத்தால் அதனை நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்வோம்.

Wednesday, May 7, 2014

யார் தமிழர்? அல்லது ஒரு இனம் என்பது என்ன?


யார் தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழரின் தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே ஆகும். இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அவசியமாகிறது.   எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய வேண்டியதாகிறது.

உலகில் எந்த இனமுமே கலப்பு இல்லாத இனம் என்று சொல்ல முடியாது. 18-ம் நூற்றாண்டு வரை மனித இனம் பூமிப் பந்தில் சுதந்திரமாகவே சுற்றி வந்தது. எனவே அதுவரை உலக இனங்கள் கலந்து இருக்க வாய்ப்புள்ளது. அதற்காக இனங்கள் தொடர்ந்து கலக்க வேண்டும்  என்பதும் சரியாகாது. ஏனெனில் அரசியல் அதிகாரத்தை தமிழர் இழந்து பல்வேறு முனைகளில் அழிவைச்  சந்தித்து வரும் நிலையில் இனக்கலப்பை தடுப்பது அவசியமாகிறது. எனவே ஒவ்வொரு இனமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு அந்த இனத்தை வரையறை செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் 19-ம் நூற்றாண்டிற்குப் பிறகு உலகில் பெரும்போர்கள் ஏற்பட்டு எல்லைகள், இனங்களுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டன. அதேவேளையில் இந்தியாவில் பல்வேறு இனங்கள் ஒரே நாட்டின் கீழாக வசித்து வருகின்றன. அந்த இனங்களும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு இனத்திற்கு மொழியே அடிப்படை அளவுகோலாகும்.

தாய்மொழி அளவுகோல்

ஒரு மொழியை தாய்மொழியாகப் பேசுபவரே அந்த மொழி அடிப்படையிலான இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதேவேளையில் ஒரு குழந்தையின் தந்தை வேற்றுமொழி பேசுபவராக இருந்து தாய் மொழி வேறாக இருந்தால் அவர் அந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவராக கருதப்பட மாட்டார். அவர் அந்த இருமொழிகளின் கலப்பினமாகவே கருதப்படுவார். அதேவேளையில் அந்த தந்தை அந்த பெண்ணின் மொழிக்குரிய பகுதியில் வசித்து அவர்கள் குடும்பத்தில் தாயின் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக, பேசுபவர்களாக இருந்து வந்தால் அவர்கள் தாயின் மொழி இனத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

தந்தைமொழி அளவுகோல்

தாய் மொழியும் தந்தை மொழியும் ஒரே மொழியாக இருந்தால்தான் அவர் அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவராக கருதப்படுவார். தந்தை ஒரு மொழியைப் பேச தாய் தன் மொழியையே பேசி குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குடும்பம் தந்தை மொழி இனத்தைச் சேராது.

அதேவேளையில் ஒரு ஆணைத் திருமணம் செய்த வேற்று மொழி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்த ஆணின் மொழியை பேசியே குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

பேச்சு மொழி

வேறு மொழி பேசுபவர்கள் ஒரு மாநிலத்தின் மொழியைக் கற்றுக் கொண்டு அந்த மாநிலத்தில் வசித்து வந்தால் அவர்கள் அவர்களின் தாய்மொழி இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார். எந்தச் சூழலிலும் அவர்கள் பேசிக் கற்ற மொழியின் இனத்தவராக ஆக மாட்டார்கள்.

சாதிகள் - மதங்கள் அளவுகோல்

ஒரு மொழி இனத்தைச் சேர்ந்த இனக்குழுக்களை மொழியினத்தின் அளவுகோலாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு மொழி இனத்திற்கான பகுதியில் பூர்வீகமாக வசித்து வரும், அந்த மொழியை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட இனக்குழுக்கள் (சாதிகள்) அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவையாக கருதப்படும். இது மதங்களுக்கும் பொருந்தும்.

சாதிப் பெயர்கள், துணைப்பெயர்கள், பட்டப்பெயர்கள், குடும்பப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவிற்கும் பெயர்கள், துணைப் பெயர்கள், பட்டப் பெயர்கள், குடும்பப் பெயர்கள் உள்ளன. எனவே இனக்குழுக்களின் பெயர்கள், துணைப் பெயர்கள், பட்டப் பெயர்கள், குடும்பப் பெயர்கள் ஆகியவை ஒரு மொழிக்கான அளவுகோலாக கருதப்படும்.

நிலப்பரப்பு அளவுகோல்

ஒரு மொழி இனம் தொடர்ந்து கால காலமாக வசித்து வரும் நிலப்பகுதி அந்த இனத்திற்கானதாகும். அந்த வகையில் அந்த நிலப் பகுதிக்குள் வாழ்வது மக்கள் அந்த இனத்திற்கான அளவுகோலாக கருதப்படும். அதாவது ஒருவர் யார் என்று நிர்ணயம் செய்யப்படும்போது அவரது பூர்வீகம் எது என்று ஆராய்வது அவசியமாகும்.

ஈழம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஃபிஜி போன்ற பகுதிகள் அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் அந்த நாட்டுத் தமிழர்கள் அல்லது தமிழரின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும்.

மூதாதையர் அளவுகோல்

ஒருவர்  மேற்படி அளவுகோல்களில் ஒன்று இல்லாதவராக அல்லது குறைபாடு உள்ள தகுதிகளைக் கொண்டிருந்தால் அவரது மூதாதையரை வைத்து அவரது இனம் வரையறை செய்யப்பட வேண்டும்.

அதேபோல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் குடியேறி வசித்துவரும் தமிழர்களும் மேற்படி அளவுகோல்களைக் கொண்டு தமிழர் என்று நிர்ணயிக்கப்படுவர். பிரச்சனைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமிழகத் தமிழர்கள் ஆதரவு, அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

                                    *********************

Sunday, May 4, 2014

நாங்கள் எப்போது சாதி பார்க்க ஆரம்பித்தோம்?


நமது ஆட்சியாளர்களால்...

• காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் நெய்வேலி மின்சாரம் இன்னமும் கர்நாடகா அனுப்பப்படுகிறது.

• முல்லைப் பெரியாறு தண்ணீர் மட்டம் குறைக்கப்படுகிறது. நம் ஆட்சியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

• கூடங்குளம் அணு உலை திணிக்கப்படுகிறது. நம் ஆட்சியாளர்கள் கையொப்பம் போடுகிறார்கள்.

• ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் கொலையாளிகளுக்கு துணைபோகிறார்கள். போர் நின்றுவிட்டது என்று பொய் சொல்கிறார்கள்.

• கட்சத்தீவை மீட்கப் போவதாக அறிக்கை மட்டுமே விடுத்து வருகிறார்கள்.

• மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

• கெய்ல் எரிவாயுக் குழாய் பதிக்க விளைநிலங்களை பாழ்படுத்துகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

• தமிழகத்தின் விவசாயத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு திட்டமிடுகிறது. நம் ஆட்சியாளர்கள் மீத்தேனுக்காக விளைநிலங்களை பலிகொடுக்கிறார்கள்.

• நியூட்ரினோ என்ற அணுக்கழிவுத் தொட்டியை தமிழரின் தலையில் கட்டுகிறார்கள். அதற்கும் ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளிக்கிறார்கள்.

அப்புறம்தான் இவர்கள் யாரென்று தேடவேண்டிதாயிற்று. அப்போதுதான் தெரிந்தது இவர்கள் இந்த மண்ணுக்கான சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது.

அப்போது இருந்துதான் சாதி பார்க்க ஆரம்பித்தோம்.

Thursday, May 1, 2014

சாதிப்பெயரும் தமிழர்களும்


தமிழகத்தில் தங்கள் சாதிப் பெயரை தாழ்வாக, கேவலமாக நினைப்பவர்கள் பறையர்கள் மட்டுமே.இவர்கள் இரட்டைமலை சீனிவாசனை மறந்து விட்டு திராவிடத்தின் பின்னால் சென்ற காரணத்தால்தான் அப்படி நினைக்கிறார்கள்.

மற்ற சாதியினர் யாரும் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் தங்கள் சாதிகளை இழிவாகக் கருதுவதில்லை.

இவ்வாறு எல்லாரும் தங்கள் சாதிப் பெயர்களை மீண்டும்  பயன்படுத்த ஆரம்பித்தார்களனால் யார் தமிழர் என்பதை கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்.

பின்னர் திராவிடம் தானாக ஒழிந்துவிடும். 

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...