Saturday, August 16, 2014

தேவர் கொண்டாடாத சுதந்திரம்

“சுதந்திர இந்தியா” வந்துவிட்டதாக தகவல்கள் பத்திரிகைகள் மூலமாக படாடோபமாகக்  கொடுக்கப்பட்டன. ஆங்காங்கு கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. மக்கள் ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்.

ஆனால், இதை எல்லாம் செய்து பலன் என்ன என்று பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது கிடைத்திருப்பது தங்கம்தான். நிறத்திலும் மஞ்சள்தான் சந்தேகமில்லை. எடையும் கனமாகவே இருக்கிறது. ஆனால் தங்கத்திற்கு உரிய மாற்றில்தான் கோளாறு காணப்படுகிறது என்ற முடிவுக்கு வந்து சேர நேரிடுகிறது.

இந்த மாற்றில் ஏற்பட்ட சூசகம் என்ன? சுதந்திரம் வந்துவிட்டது என்று சொன்னால் நீடித்து இந்நாட்டில் இருந்து வரும் தரித்திரம் விலகாமல் இருப்பதேன்? அல்லது அந்த தரித்திர நிலைமையை ஒழிப்பதற்காகவது உறுதியான, நேர்மையான திட்டங்கள் இருக்கின்றனவா? சுதந்திரமடைந்த நாடுகளில் நடக்கும் காரியங்கள் ஏதாவது இந்நாட்டில் நடக்கின்றதா? சுதந்திரம் அடைந்த நாடுகள் என்று விளங்கும் நாடுகளிலேயே நடக்கும் ராணுவப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்த நாட்டில் நம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றதா?

சுதந்திரமடைந்த நாடுகளிலே ஒரு பள்ளிக் கூடத்தில் 1000 மாணவர்கள் கல்வி பயின்றால் பள்ளிக் கூடத்தின் மூலையில் 1000 துப்பாக்கிகள் கொண்ட ஆயுதச் சாலை ஒன்றிருக்கும். சாயந்திர நேரத்தில் டாக்டரால் பயிற்சிக்கு அருகதையற்றவர்கள் என்று ஒதுக்கப்படும் மாணவர்கள் நீங்கலாக மற்ற மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து அந்த துப்பாக்கிகளை உபயோகிக்கும் விதத்தையும் கற்றுக் கொடுத்து, பின்னர் ஆயுதங்களை வைத்து ஆயுதச் சாலையைப் பூட்டி, அதன் சாவியைப் பள்ளிக் கூடத் தலைமை ஆசிரியர் வைத்திருப்பார்.

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் படையினரைப் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு வந்து அவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ‘மார்ச்’ பண்ணும் விதத்தையும் போலி ரவைகளைக் கொண்டு துப்பாக்கியில் சுடும் விதத்தையும் கற்றுக் கொடுத்து நாளடைவில் உண்மையைன ரவைகளை உபயோகிக்கவும் மாணவர்களிலே இரு சாரராகப் பிரித்து ஒரு சாரரை மற்றொருவர் தாக்க வருவது போன்ற ‘போலி யுத்தங்களை’ சிருஷ்டித்து பயிற்சியளிப்பது வழக்கம்.

இந்த முறையை தன்னாட்டு வாலிபர்களுக்குச் செய்து கொடுக்காமல் இந்தியா தவிர சுதந்திரம் பெற்ற வேறு எந்த ஒரு நாடும் வாளாவிருக்கவில்லை. இந்தியா இவ்வாறு வாளாவிருப்பதன் மர்மமென்ன? இவ்வாறிருப்பதுதான் அஹிம்சையா? இது அஹிம்சை என்றால் இப்போது நமது போலீஸ் ஸ்டேஷன்களில் இருக்கும் ஓடடை உடைசல் துப்பாக்கிகளையும் லத்தி கம்புகளையும் சேமித்து வைத்துவிட்டு போலீஸ்காரர்கள் ஒவ்வொருவர் கையிலும் குரான் ஒன்றையும், பகவத் கீதை ஒன்றையும் கொடுத்து பொது மக்களை அஹிம்சை வழியில் நடங்கள், தப்புத் தண்டா செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்யச் சொல்லலாமா?

இப்படி இரண்டு மூன்று நாட்களுக்குச் செய்தால் அஹிம்சையின் பெருமை தெரியாமலா  போய்விடப் போகிறது? அஹிம்சை முறையை அப்படியே பின்பற்றும் சர்க்காருக்கு ஹைதராபாத்தை எதிர்க்க டாங்குகள் எதற்கு? காஷ்மீர் போருக்கு விமானங்கள் போதவில்லை என்று ஓலம் ஏன்? ஆங்கிலச் சேனாதிபதி அத்தனைபேருக்கும் இந்தியச் சேனையும் அங்கமும் எதற்கு?

கரியப்பா முதலாவது இந்தியராக நமது இந்திய சேனை முழுவதற்கும் தளபதியாகப் பதவி ஏற்றார் என்றும், அதே சமயத்தில் 56 ஆங்கில சேனாதிபதிகள் இந்திய ராணுவத்தில் அங்கம் வகிப்பதற்காக லண்டனிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் முன்னுக்குப் பின் முரணாக சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியாவதேன்? இதன் மர்மம் என்ன?

‘இந்திய மக்களே நமக்குப் பூரண சுதந்திரம் வந்துவிட்டது’ என்று தலைவர்கள் ஒருமுகமாக களிப்புடன் நாட்டு மக்களுக்குச் செய்தி விடுக்கின்றது ஒருபுறம். அதே சமயத்தில் ‘கனம் ராஜாஜியைக் கவர்னர் ஜெனரலாக மன்னர்பிரான் அங்கீகரித்தார்’ என்ற செய்தியும் வருகின்றது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு மன்னர்பிரான் அனுமதி எதற்கு என்று கேட்டால் பதிலில்லை. அப்படி என்ன நமது தலைவர்கள் படியாதவர்களா? குடியேற்ற நாட்டு அந்தஸ்தைத்தான் பெற்றிருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டால் பாவமா? அல்லது பூரண சுதந்திரத்தின் நுணுக்கம்தான் தெரியாதா? இந்த இடம் வரும்போதுதான் யாருக்கும் சந்தேகமேற்பட்டு விடுகிறது.

- தேவர்
24.4.49 அன்று காரைக்குடியில் நடைபெற்ற பாரத இளைஞர் சங்க ஆண்டுவிழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி


(1984-ம் ஆண்டு பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்த ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற தாக்குதல் நிகழ்வுக்கும் இந்திய ராணுவத்திற்கு இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டுக் கொடுத்தார்கள் என்பது அண்மையில் வெளியான கூடுதல் செய்தி.)

Monday, August 11, 2014

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு

தமிழகத்தில் நாளுக்குநாள் தமிழ்த் தேசியச் சிந்தனை பெருகி வருகிறது. குறிப்பாக மண்ணின் மைந்தர்களிடையே விழிப்புணர்வும், தங்கள் அதிகார இழப்புக்கான காரணங்கள் என்னவென்று ஆராயும் வேகமும் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் அந்நியர்களான திராவிடர்களின் ஆட்சிக்கு முடிவுகட்ட அடிக்கல் நாட்டி வருகிறார்கள்.

கருத்தியல் ரீதியாக, தங்கள் போலித்தனத்தின் காரணமாக இவர்களை எதிர்கொள்ள முடியாத திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தை சாதி தேசியம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். எப்படியாவது மண்ணின் மைந்தர்களின் எழுச்சியை முடக்கி விடமுடியாதா என்ற பரிதவிப்பில் ஏதோதோ பிதற்றி தங்கள் திராவிடத்தை தக்க வைக்க, நியாயப்படுத்த முயன்று வருகிறார்கள்.

‘சாதி கெட்டது’ என்ற இவர்களின் பிரச்சாரம் தவிடுபொடியாகிவிட்ட காரணத்தால் தற்போது தமிழ்த் தேசியத்திற்கு சாதிச் சாயம் பூசி தாங்கள் விரும்பும் வண்ணத்தில் பார்க்க ஆசைப்படுகிறார்கள். இவர்கள் ஏதோ ஆதிக்க சாதிகள் தமிழ்த் தேசியத்தைக் கைப்பற்றி மற்ற சாதிகளின் மீது கொடுமைகள் செய்வார்கள் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வகிறார்கள். அதனால் தங்களின் இருப்பு தமிழர்களுக்கு அவசியம் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது, எனவே தங்கள் இருப்பு அவசியமானது என்று சொன்னதற்கு ஒப்பாக உள்ளது.

அதேபோல அவர்கள் வைக்கும் மற்றொரு கருத்து (அவர்களின் கருத்துப்படி) சாதிவெறியர்களின் ஆட்சி திறமையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது. விகிதாச்சாரப்படி அதிகாரத்தை பகிர்ந்தால் திறமை அடிபட்டுவிடும், அதில் ஜனநாயகம் இருக்காது, அது தமிழர்களுக்கு பாதகமாக அமையும் என்று சொல்கிறார்கள். இதுவும் திராவிடக் கருத்தியலின் தோல்வியையே காட்டுகிறது. ஆனால் தமிழர்களுக்கான அரசியல் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் அதேவேளையில் ஜனநாயக கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும், இருக்க வேண்டும்.

திராவிடர்களின் சாதி ஒழிப்புச் சாயம் வெளுத்துவிட்டது. இவர்களது நோக்கம் சாதி ஒழிப்பல்ல, இவர்களின் அதிகாரத்தை தக்க வைத்தலே ஆகும். இல்லாது போனால் கடந்த 47 ஆண்டு திராவிட ஆட்சியில் பல சாதிகளை ஒழித்துக் கட்டியிருக்கலாம். நாங்கள் சொன்ன சாதி ஒழிப்பு சாதி வேற்றுமை ஒழிப்பே தவிர, சாதி ஒழிப்பு அல்ல என்று இப்போது திராவிடம் தனது சாதி ஒழிப்புக்கு புது அர்த்தம் சொல்லி வருகிறது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் திராவிடத்தின் பித்தலாட்டங்களை, மோசடிகளை நன்கு உணர்ந்துகொண்டனர்.

கருத்தியல் ரீதியில் திராவிடம் தோற்றுவிட்டது. தற்போது மண்ணின் மைந்தர்களின் கைக்கு அதிகாரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த அதிகார மாற்றம் நடைபெறும் வரையில் திராவிடர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பதவி சுகத்தை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளலாம். ஊழல்களைச் செய்து கொள்ளை அடித்துக் கொள்ளலாம்.

அடுத்த கட்டமாக மண்ணின் மைந்தர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை தங்களுக்குள் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்ற ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அதுவே ஒரு சரியான திறமையான ஆட்சியை எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தின் நலனை பேணிப் பாதுகாக்கக் கூடிய வலிமையான ஆட்சியை ஏற்படுத்துவதாக அமையும். அதற்கான வழிமுறைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம். ஏற்கனவே எழுதிய தமிழ்த் தேசிய அரசியலமைப்புச் சட்டம் முன்னோட்டம் (http://perumalthevan.blogspot.in/2011/12/blog-post_18.html), தமிழர்களுக்கான சாதிமதக் கொள்கை (http://perumalthevan.blogspot.in/2012/08/blog-post_6510.html), யார் தமிழர்கள் அல்லது ஒரு இனம் என்பது என்ன? (http://perumalthevan.blogspot.in/2014/05/blog-post_7.html) ஆகிய  கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

சாதி என்பது மண்ணின் மைந்தர்களின் அடிப்படைக் கூறாக உள்ளது. எனவே தமிழர்கள் அமைக்கும் தமிழ்த் தேசியத்தில் சாதிகளின் பங்கு, அதிகாரப் பகிர்வு முக்கியமானதாகும். அதற்கு அடிப்படையாக எந்தெந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்துவது அவசியமாகிறது. இதன் மூலம் பெரும்பான்மை சாதிகள் எவை, சாதிகளின் விகிதாச்சாரம் என்று கண்டறிந்து அவர்களுக்கு அந்த அளவிலான முக்கியத்துவம், அதிகாரம் அளிக்க வேண்டும். இந்தக் கட்டுரை ஒரு உதாரணமே தவிர இதுவே இறுதியானது அல்ல.

1. சாதிவாரிக் கணக்கெடுப்பு, விகிதாச்சார நிர்ணயம்

சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த மக்கள் எத்தனை சதவீதம்பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வரும். அதற்கேற்ப அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொடுக்க வேண்டும். மக்கள் தொகையில் 20%-க்கு அதிகமாக உள்ள சாதியினருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் 20%-க்கு மேலாக இருந்தால் அவர்களிடையே சுழற்சி முறையில் அதிகாரத்தை பகிர்ந்துகொடுக்கலாம். அல்லது தொகுதிக்கான பிரதிநிதியான ஒரு சாதியைச் சேர்ந்தவரையும், துணைப் பிரதிநிதியாக மற்றொரு சாதியைச் சேர்ந்தவரையும் தேர்ந்தெடுக்க வகை செய்யலாம். மொத்த மக்கள் தொகையில் ஏதாவது ஒரு சாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகள் 30% அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அதிகாரங்களை கூடுதலாக பகிர்ந்தளிக்கலாம். குறைந்த விகிதாச்சாரத்தை கொண்ட மக்களுக்கு குறைந்த அதிகாரமே வழங்கப்படும்.

மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்ட சாதியினருக்கு அவர்களது விகிதாச்சரப்படி பிரதிநிதித்துவம் வழங்கப்படும். ஆனால் அவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில தலைமைப் பதவிகள் வழங்கப்படாது.

2. சாதி வாரியாக தொகுதிகளை, மாவட்டங்களைப் பிரித்தல்

தமிழ்த் தேசியக் அரசு அமையும்பட்சத்தில் அது மாவட்டங்களை மாநிலங்களாக பாவிக்கும். சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த சாதியினர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதன்படி அந்த மாவட்ட அரசுகளுக்கான அதிகாரம் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். சாதி விகிதாச்சாரப்படி (அ) பெரும்பான்மை மாவட்டங்கள் (ஆ) சமநிலை மாவட்டங்கள் (இ) பன்முக மாவட்டங்கள் (ஈ) பொது மாவட்டங்கள் என்று பிரிக்கலாம்.

இதில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக வசித்தால் அது அவர்களுக்கான பெரும்பான்மை மாவட்டமாக கருதப்படும். இரண்டு சாதிகள் சமநிலையில் இருந்தால் அது அந்த சாதிகளுக்கான சமநிலை மாவட்டங்கள் என்று கருதப்படும். ஒரு மாவட்டத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதிகள் சமநிலையில் இருந்தால் அது பன்முக மாவட்டமாக கருதப்படும். ஒரு மாவட்டத்தில் எந்த சாதியினரும் 10%-க்கும் மேலாக இல்லை என்றால் அது பொது மாவட்டங்களாக கருதப்படும். இது மதங்களுக்கும் பொருந்தும். மதங்களில் சாதி முறையை பின்பற்றுபவர்களாக இருந்தால் அந்த முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

3. சாதிச் சங்கங்களின் ஜனநாயக கட்டமைப்பு

சாதிச் சங்கங்கள் தங்கள் சங்கங்களை ஜனநாயக முறைப்படி கட்டமைத்து நடத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தி சங்கத் தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமச் சாதிச் சங்கங்களும் தங்கள் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஊராட்சி மன்ற உறுப்பினர்களைப் போல ஒவ்வொரு கிராமச் சாதிச் சங்கமும் அந்தந்த கிராமத்தில் உள்ள தெருக்கள், அல்லது பிரிவுகளுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, பதவி வகித்த ஒருவரே கிராமச் சாதிச் சங்கத்திற்கு தலைவராக போட்டியிட முடியும். கிராமச் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்த, இருப்பவக்ள் மட்டுமே, ஒன்றிய, வட்டார தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வட்டார சங்கத் தலைவர்கள் மட்டுமே மாவட்ட சாதிச் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். சாதிச் சங்கத் தேர்தல்களை தேர்தல் ஆணையமே நடத்தித் தரும். இது மதங்களுக்கும் பொருந்தும்.

4. தேர்தல் ஆணையம், தேர்தல் முறை

தமிழ்த் தேசியத்திற்கான தேர்தல் ஆணையம் பெரும்பான்மை சாதி உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இருக்கும். இந்த ஆணையம் ஒவ்வொரு சாதிச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையமாகவும் செயல்படும். ஒவ்வொரு சாதி அமைப்புகளும் ஜனநாயக முறைப்படி செயல்படுவதை, அதன் பொறுப்பாளர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

ஒரு பெரும்பான்மை மாவட்டம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான மாவட்டமாக ஒதுக்கப்படும்பட்சத்தில் அந்த மாவட்ட ஆட்சியாளர் பதவிக்கு அந்த சாதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே போட்டியிட வேண்டும். அந்தச் சூழலில் ஏற்கனவே அவர்கள் சாதிச் சங்கங்களில் செயல்பட்ட விதம். மாவட்ட அளவில் போட்டியிடும் தகுதியை அவர் பெற்றிக்கிறாரா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

உதாரணமாக கோவை மாவட்டம் கவுண்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த மாவட்டத்தின் எல்லைக்குள் வரும் வட்டார கவுண்டர் சங்கங்களின் தலைவர்களாக இருந்தவர்கள் அந்த மாவட்ட ஆட்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடுபவர்களை அந்த மாவட்ட கவுண்டர் சங்கம் முன்மொழிய வேண்டும். அந்தச் சங்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை முன்மொழியலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து ஒருவரை பொது மக்கள்  வாக்களித்து ஆட்சியாளராகத் தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல ஏதாவது ஒரு வட்டாரத்தின் கவுண்டர் சாதிச் சங்கத் தலைவராக பதவி வகித்தவரும்  மாவட்டச் சங்கம் அனுமதித்தால் பெற்று போட்டியிடலாம். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும்போது அந்தந்தச் சாதிச் சங்கங்கள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பார்கள். பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களித்து பிரதிநிதியை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு தற்செயலான (ரேண்டம்) முறையில் அல்லது சுழற்சி முறையில் பதவி வழங்கப்படும். இதே முறையில்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களும் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

5. மாவட்ட, நகர அரசுகள்

தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால்தான் மாவட்ட, நகர அரசுகளை உருவாக்க அல்லது அவற்றுக்கு அதிக அதிகாரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் தேசிய அரசியலில் பங்கு பெற இயலாத அல்லது குறைந்த அதிகாரத்தை பெறும் பிரிவினர் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யலாம்.

உதாரணமாக ஒரு மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சாதி அல்லது சாதிகள் 50% அதிகாரங்களை தங்களிடம் வைத்துக் கொண்டு மீதியுள்ள 50% அதிகாரங்களை அடுத்த நிலையில் உள்ள சாதிகளுக்கு பிரித்துக் கொடுத்து விட வேண்டும்.

6. முதல்வர், பதவிப் பகிர்வு

முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் முக்குலத்தோர் 20%, வன்னியர் 20%, கவுண்டர் 20%, பள்ளர் 20%, பறையர் 20% என்று அறியப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் ஆட்சிகாலத்தில் முதல்வர் பதவி முக்குலத்தோருக்கும் துணை முதல்வர் பதவி வன்னியருக்கும் ஒதுக்கப்படலாம். கவுண்டர்களுக்கு தொழில்துறையும், பள்ளர்களுக்கு நிதித்துறையும், பறையர்களுக்கு காவல் துறையும் ஒதுக்கப்படலாம்.

இதையே இரண்டாம் ஆட்சி காலத்தில் வன்னியருக்கு முதல்வர் பதவியும் முக்குலத்தோருக்கு துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்படலாம். மூன்றாம் ஆட்சி காலத்தில் கவுண்டர்களுக்கு முதல்வர் பதவியும் பள்ளர்களுக்கு துணை முதல்வர் பதவியும் முறையே மற்ற சாதிகளுக்கு தொழில்த் துறை, நிதித்துறை, காவல்துறை என்று ஒதுக்கப்படலாம். இதே முறையில் இந்த 5 சாதிகளுக்கும் முதல்வர் பதவியும் மற்ற பதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான சுழற்சி ஆட்சி முறையை ஏற்படுத்தலாம். இதற்கான கணினி திட்டத்தை வடித்து அதன் மூலம் தற்செயலாக (ரேண்டமாக) பதவிகளை தேர்வு செய்ய வழிவகுக்கலாம்.

சுழற்சி முறையில் அல்லது தற்செயல் முறையில் ஒதுக்கப்படும் பதவி, துறைகளை ஏற்கமாட்டோம் என்றும் யாரும் மறுக்க முடியாது, மறுக்கக் கூடாது.

எஞ்சியுள்ள சாதியினருக்கு அவர்களின் விகிதாச்சாரப்படி அவர்களுக்கான அதிகாரத்தை, துறைகளை பகிர்ந்தளிக்கலாம். முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகுதி, ஏற்கனவே வகித்த பதவியில் அவர் செயல்பட்ட விதம் போன்றவை கூடுதல் தகுதிகளாக எடுத்துக் கொள்ளப்படும். முதலமைச்சர் வேட்பாளருக்கு வயதுத் தகுதி 38 ஆகவும். மாவட்ட ஆட்சியருக்கான வயதுத் தகுதி 33 ஆகவும் இருக்கும். இந்த ஆட்சியாளர்களின் வயது வரம்பு 60 ஆகும். அதாவது 55 வயதுக்குப் பின்னர் ஒருவர் மேற்படி பதவிகளுக்குப் போட்டியிட முடியாது. இருமுறைக்கு மேல் ஒருவர் இந்தப் பதவிகளை வகிக்க முடியாது.

6. சாதியினருக்கான பொறுப்புக்கள், கடமைகள்

சாதிகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது அவர்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதே ஆகும். அது மற்ற சாதியினரை அல்லது குறிப்பிட்ட சாதியினரை அடக்கியாள்வதற்கு, அல்லது ஆகாது. எனவே ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு வழங்கப்படும் இறையாண்மை அதிகாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, அதைத் தவறாக பயன்படுத்தாமல் இறைவனுக்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று குற்றச் சாட்டு எழுந்து அது நிரூபிக்கப்பட்டால் பின்னர்  அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். ஒரு சாதியினர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும். அந்தத் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றப்படும்.

இதுபோன்ற குற்றச் சாட்டை அந்தச் சமுதாயச் சங்கமே கொண்டு வரமுடியும். தனிநபர்கள் கொண்டு வரமுடியாது. ஒரு சமுதாயம் மற்றொரு சமுதாயத்தின் மீது பொய்யான குற்றச் சாட்டைக் கூறினால் அதற்கேற்ற வகையில் அதன் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும். இந்த அதிகாரக் குறைப்பு தற்காலிகமானதாக, சிறிது காலம் நீடிப்பதாக இருக்கலாம்.

                                                            *****

Friday, August 8, 2014

சிங்களச் சன்னதியில் தமிழன் தலை கவிழ மாட்டான்


இனம் என்றால் சிங்கள இனமும் தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை. மொழி என்றால் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் என்று இருந்தால் சிக்கலே கிடையாது. இது பண்டார நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.

ஆயினும் அத் நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார். தம்மைப் பதவியல் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும் சிங்களவர்களைப் பாதுகாக்கவுமே தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம். அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். பாவம்! பதவி போய்விடுமே என்ற பயம்!! பதவி என்ன அவ்வளவு பெரிதா? சர்வாதிகாரம் சாசுவதமானதா? அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.

சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கு தமிழ் உள்ளது! சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு. ஆகவே, நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழத் தேவையில்லை! அடிமைகளாய், உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய், மானம் உள்ள தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

- தேவர்

4.5.1958

Tuesday, August 5, 2014

ஆளத்தகுதி இல்லையா தமிழருக்கு?


"திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும்
வீரதீரசூரப்புலிகள், இந்தப் பார்ப்பனத் தினவுக்கு; கொழுப்புக்கு;
இறுமாப்புக்கு; என்ன பதில் கூறப்போகிறார்கள்?" என்ற ஆழி ஆழி அவர்களின்
கருத்துக்கு மட்டுமே இந்த பதில்.....

திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று "சூரப்புலிகளாக நாங்கள் தொடைதட்டிக்"
கிளம்பியிருப்பதற்கு காரணம் திராவிடர்கள் தானே தவிர, அவர்களைக் குத்திக்
குதறி அற்ப மகிழ்ச்சி அடையவேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்டு நாங்கள்
யாரும் பிறக்கவில்லை.

இதோ உங்கள் கணக்குப்படி திராவிடம் பிறந்து 100 ஆண்டுகளைத் தொட்டு
விட்டீர்கள்... பார்ப்பனரை அழித்தீர்களா... பார்ப்பனீயத்தைத்தான்
அழித்தீர்களா..? இல்லை சாதி வர்ண முறைகளைத்தான் அழித்து
ஒழித்துவிட்டீர்களா? உங்கள் எழுத்துக்களில் நீங்களே ஒப்புக்கொள்வதைப்
போல், "கடைசிப் பூணூல் இருக்கும்வரைக் கருஞ்சட்டை ஓயாது என்ற ஊர்வலத்தில்
முழக்கமிட்டுப் பயனில்லை. அதை நாம் செயல்படுத்திக் காட்ட வேண்டும்" என்ற
நிலையில், வெற்று ஊர்வல முழக்கங்களாகத்தானே வைத்திருக்கிறீர்கள்? இட
ஒதுக்கீட்டில் பார்ப்பனருக்கு இடம் இல்லாமல் செய்து விட்டோம்
என்பீர்கள்...

அப்படி ஒதுக்கப்பட்ட பின்பும் அவர்களின் ராஜபோகம் ஒழிந்து விட்டதா..
அதிகார மணிமகுடம் உடைந்து விட்டதா? எல்லா அரசு உயர் பதவிகளிலும் அவாள்
இருக்கத்தானே செய்கிறார்கள்? தனியார் தொழில் நிறுவனங்களிலும் அவாள் கை
ஓங்கித்தானே உள்ளது..? தினமலம் என்னும் பார்ப்பன ஏடு இன்னமும் தன்
"கைத்திறமைகளை" காட்டுவதற்கு என்ன காரணம்? அப்படியானால் நூற்றாண்டு விழா
கொண்டாடும் இந்த நாள் வரை நீங்கள் யாருடன்
போர் புரிந்துகொண்டிருந்தீர்கள்? யாருக்காக வேலை
பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?

சென்னை மாணத்தில் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மற்றும் தமிழர் ஆகிய
நான்கு இனத்தவரும் இருந்தபோதே 52.5 சதவீத மக்கள் தமிழர்கள்..
அப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் பார்ப்பனரை (அல்லது
பார்ப்பனீயத்தை) அழிக்கவே அவதாரம் எடுத்ததாக நீங்கள் சொல்லிக் கொள்ளும்
உங்கள் தாய்க்கழகமான நீதிக்கட்சி 1920 இல் முதல்முதலாக தேர்தலில்
போட்டியிட்டது தொடங்கி தான் அமைத்த 6 மந்திரி சபைகளிலும் "தெலுங்கரை
மட்டுமே" முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது.
அமைச்சரவைகளில் கூட தெலுங்கர்களையே அமைச்சர்களாக்கியது.

நடேசனார் போன்ற நீதிக்கட்சித் தமிழர்கள் தமிழருக்கு அதிகாரம் தரவில்லையே
என்று குற்றம் சாட்டிய பிறகு ஒப்புக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்தது.

ஆனால் நடேசனார் என்ற தமிழர் நீதிக்கட்சியில் தமிழருக்கு அதிகாரம்
கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பிட்டி தியாகராயர் (இன்றைய தி.நகர்
என்ற பெயருக்கு சொந்தக்காரர்) அடுத்து வந்த தேர்தலில் தன் சொந்தக்
கட்சியைச் சேர்ந்த நடேசனாருக்கே யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று
பிரச்சாரம் செய்தார் இது வரலாறு.

இப்படிப்பட்ட தெலுங்கு வெறி பிடித்த நீதிக்கட்சிதான் தன்னை கன்னடர் என்று
சொல்லிக்கொண்ட பெரியாரின் கைக்கு தலைமை தாங்குமாறு வருகிறது. அப்போது
அந்தக் கட்சியில் பெரியார் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஏன்
நீதிக்கட்சியிலேயே தமிழராக பார்ப்பனிய எதிர்ப்பாளராக யாரும் இல்லையா?
இருந்தார்கள். பி.டி.ராஜன் இருந்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்
இருந்தார். பட்டிவீரன்பட்டி சவுந்தர்ராஜன் இருந்தார். மெத்தப்
படித்தவர்களாக, நல்ல மேடைப்பேச்சாளர்களாக, சிறந்த அமைப்பாளர்களாக
இருந்தார்கள். ஆனால் கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத, தன்னை கன்னடன்
என்று சொல்லிக்கொண்ட தெலுங்கரான பெரியரிடம்தானே நீதிக்கட்சி
ஒப்படைக்கப்பட்டது.

அதுவரை நீதிக்கட்சியோ பெரியாரோ திராவிடம்; திராவிட நாடு; தமிழ்நாடு;
தமிழ்நாடு தமிழருக்கே என்பது பற்றியயல்லாம் அறிந்திருந்தது கூட இல்லை
என்பதை அவருடைய மற்றும் நீதிக்கட்சியின் வரலாற்றின் மூலமாக அறிகிறோம்.

அதுமட்டுமல்ல 1937 ஆம் ஆண்டு தனித்தமிழியக்கத்தினர் "தமிழ்நாடு
தமிழருக்கே" என்ற கோரிக்கையை ஓங்கி ஒலித்து இந்தியை எதிர்த்துப்
பேராட்டம் நடத்தியது வரை "திராவிடம்" குறித்து பெரியார் சிந்தித்ததே
இல்லை.

தமிழர்கள் எல்லாம் விழித்தெழுந்து தமிழ்நாடு தமிழருக்கே என்று
கூறத்தொடங்கிய பிறகே திராவிடம் என்ற கருத்தை அரசியல் அரங்கில் ஓங்கி
ஒலிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ்நாடு தமிழருக்கே என முதலில்
முழங்கியவர் பெரியார் இல்லை என்பதை அறியலாம்.

நீதிக்கட்சியாக இருந்த வரை தமிழருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காத,
கொடுக்க விரும்பாத அந்த இயக்கம் தன் கைக்கு வந்த பிறகு, அதன் பெயரை
மாற்றும் அந்த விழாவிலாவது அதனை தமிழருக்கான இயக்கமாக மாற்றினாரா
பெரியார்? இல்லையே... அதற்கு அவர் கூறிய காரணம்.. நான் கன்னடியன்,
சிற்றரசு தெலுங்கர்... எனவே இதற்கு திராவிடர் கழகம் என்று பெயர்
வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழருக்கான ஒரு இயக்கமே இல்லாது
ஒழித்தவர்தானே பெரியார்...

அதன் பிறகு அந்த திராவிட வாதத்தை எங்களை ஏற்க வைக்க உங்களால் கூறப்பட்டது
தானே பார்ப்பனன் வாதம்...
தமிழன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டால் உங்களுடன் பார்ப்பனன் சேர்ந்து
விடுவான் என்று எங்களை எச்சரித்த "தமிழர் தலைவர்" பெரியார்...
"திராவிடன்" என்று நாங்கள் சொல்லிக்கொண்டால் எங்களுடன் தெலுங்கு கன்னட
மலையாளிகள் சேர்ந்து விடுவார்கள் என்பதை அறியாதவரா?
அவரே தான் சொல்கிறாரே.. தமிழன் என்று சொன்னால் உங்களுடன் நான் இணைந்து
கொள்ள முடியாது என்று....
இவரது பார்ப்பன எதிர்ப்பு என்பது தெலுங்கர் ஆதரவுதான் என்பதற்கு இரண்டு
எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

1925ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியும் சுயராஜ்யக் கட்சியும்
போட்டியிட்டன. நீதிக்கட்சி தெலுங்கருக்கான கட்சி என்பதால் சிறிது சிறிதாக
வலுவிழந்து வந்த காலகட்டம் அது. எனவே அதன் வெற்றிக்கு கடுமையாக பாடுபட
வேண்டி இருந்ததால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு
நீதிக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பனகல் அரசர் (இன்றைய பனகல்
பூங்கா பெயருக்கு உரியவர்) பெரியாரிடம் கேட்டுக்கொள்கிறார். அதனை ஏற்று
நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் 1928இல் அடுத்து வந்த வட ஆர்க்காடு இடைத்தேர்தல் ஒன்றில்
நீதிக்கட்சி சார்பாக பத்மநாப முதலியாரும் சுயராஜ்யக் கட்சி சார்பாக
வெங்கட்ரங்கம் நாயுடு என்ற தெலுங்கரும் போட்டியிட்ட போது, சில
பத்திரிகைகள் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்மநாப
முதலியாருக்கு ஆதரவாக பெரியார் பிரச்சாரம் செய்யப் போவதாக எழுதிய போது
அதை மறுத்து குடியரசு 7.2.1928 இல் வெளிவந்த கட்டுரையில்
"இதுவரையிலும் இதற்காக ஒருவருக்கு அனுகூலமாகவோ, மற்றொருவருக்கு
பிரதிகூலம் செய்யவோ, நாம் எண்ணவுமில்லை. அப்படி அனுகூலமாகவும்,
பிரதிகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியது இது சமயம்
அவசியமுமில்லை என்பதே நமது முடிவு.

அவசியமென்று கருதினால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி
பயந்துகொண்டிருக்கப் போவதுமில்லை. ஸ்ரீமான் நாயுடுவையும்
(சுயராஜ்யக்கட்சி வேட்பாளர்) நமக்கு 6,7 வருட­ங்களாகத் தெரியும். அவர்
எவ்வளவுதான் 'பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தாலும்' அவருடைய
அந்தரங்கமானது பிராமணரல்லாதார் வி­சயத்தில் அனுதாபமாகவேதானிருப்பதை
அறிந்திருக்கிறோம். இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை
என்னவென்பது நமக்கே தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி (நீதிக்கட்சி
வேட்பாளர்) நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்சகால ஈடுபட்டவரென்றும்
கேள்விப்பட்டதே இல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை."

(சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர்களின் கூடாரம் என்று அந்தக் கட்சியை
தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது என்று தான் கூறியதை ஏற்கவில்லை
என்பதால் காங்கிரசில் செயல்பாடு அற்று இருந்த பெரியாரின் நிலைப்பாடு
என்பது. வேட்பாளர் தெலுங்கரா தமிழரா என்பதைப் பொறுத்து
தீர்மானிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியலாம்.)
சுயராஜ்யக்கட்சியில் தெலுங்கு மொழி வேட்பாளர் என்றதும், அவர்
பார்ப்பனரல்லாதார்க்கு ஆதரவானவர் என சான்றிதழ் அளித்து பெருமைப்படுத்தும்
பெரியார். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தேவை இல்லை என்கிறார்.

இதே போன்றுதான் கருத்துக்களை மாநில எல்லைப் பிரிவினையின் போதும்
வைக்கிறார் பெரியார்.
அதாவது மலையாளிகள் தமிழ் மண்ணைப் பறிக்கும்போது மலையாளிகளுக்கு ஆதரவு
நிலைப்பாட்டை எடுக்கிறார். ஆந்திர கன்னடரிடம் தமிழ் மண் பறிபோகும் போது
அவர்களுக்கே ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

"ஆந்திரனும் கன்னடனும் ஒட்டுமொத்த நாட்டையுமா கொண்டுபோகப் போறான்... ஏதோ
நமக்கும் நாலு ஊர் உட்டுட்டுப் போவான் அது நமக்கு போதும்" என்கிறார்.

இவர்கள் நம்மை திராவிடர் என்று வரையறுத்து நம்ப வைத்ததால்தானே தமிழரல்லாத
யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் திராவிடர்கள என்ற
எண்ணத்தில் நம்பிக்கையில் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு
பார்க்கிறது தமிழ்ச் சமூகம்...?
தமிழ்நாட்டை தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளியையும் ஆள வைத்ததைத் தவிர
வேறு எந்த காரியத்தை திராவிடத்தால் செய்ய முடிந்திருக்கிறது?
செய்திருக்கிறது?

இன்றைய காவிரி சிக்கல் தொடங்கி பாலாறு முல்லை பெரியாறு சிக்கல் வரை நாம்
நமக்கு சொந்தமான எல்லைகளை இழந்ததுதானே காரணம்.
தமிழரல்லாதார் தமிழ்நாட்டை ஆண்டு வருவதால்தானே இன்றைய ஈழ துரோகம் முதல்
கூடங்குளம் துரோகம் வரை நடந்தேறியிருக்கிறது? இதை யாரும் மறுக்க
முடியுமா? கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தனக்கு கூடங்குளம் வேண்டவே
வேண்டாம் என்று விரட்டி அடிக்க முடிந்தது..
கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தன் நாட்டு மீனவனை சுட்டுக்கொன்ற
இத்தாலிக்காரனை சிறை வைத்து வழக்குபோட முடிந்திருக்கிறது.

சுட்டவன் சோனியாவுக்கு சொந்தக்காரன் என்பதால் மலையாளி விட்டுவிட்டானா?
அல்லது இந்தியாவுக்கு பயந்து கொண்டு முல்லைப்பெரியாற்றில் முழுக்கொள்ளளவு
நீரைத் தேக்க சம்மதித்துவிட்டானா? அவனும் இந்தியாவில்தானே இருக்கிறான்.
நம் தமிழ்நாட்டு அரசுகள் மட்டும் தொடர்ந்து தமிழருக்கு துரோகம் செய்யும்
சூழ்ச்சி என்ன?

நமக்கு உரிமையான காவிரித் தண்ணீரை வைக்கோலைக் கொடுத்து
பெற்றுக்கொள்கிறோம் என்று உடன்பாடு போட்டு வாங்கியவர்தானே மலையாளியான
எம்.ஜி.ஆர்? அதே மலையாளி எம்.ஜி.ஆர் முல்லைப் பெரியாறு உரிமையை
கேரளாக்காரனுக்கு விட்டுக்கொடுத்தாரா இல்லையா? அது எந்த பாசத்தில்?

பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பானைக் காட்டி ஆட்சி அதிகாரத்தில்
குந்திக்கொண்ட தெலுங்கரும் மற்றவர்களும் எந்த பார்ப்பன ஆதிக்கத்தை இதுவரை
ஒழித்திருக்கிறார்கள்? தமிழரை ஒழித்ததை தவிர?
தான் பிறந்த மண் என்ற காரணத்தால் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுக்கு
விட்டுக்கொடுத்துவிட்டால் இந்தியாவிற்கு தன்னால் பிரதமராக முடியாது
என்பதால், வலுக்கட்டாயமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தன் பதவி வெறியை
தீர்த்துக்கொண்ட நேருவுக்கும் இந்த பெரியாருக்கும் என்ன வித்தியாசம்?
இவர்களின் தலைமை மோகத்தால் இன்றைக்கு அழிந்து கொண்டிருப்பது காஷ்மீரும்
தமிழ்நாடும் தானே.. வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திராவிடம்
என்று சொல்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தமிழின் மேல்
திணித்து எங்களையும் திராவிடர்கள் என்று நம்பவைத்து இன்றுவரை ஒரு தமிழன்
கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் நீங்கள் செய்திருக்கும் இந்தக்
கழுத்தறுப்புக்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா?

உங்கள் பேச்சை நம்பி.. திராவிட வேடத்தை நம்பி.. மாநிலங்கள்
பிரிக்கப்பட்டு தமிழருக்கான மாநிலமாக சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட
பிறகும் கன்னடராக; தெலுங்கராக; மலையாளிகளாக; நீங்கள் இருந்த போது கூட,
உங்களை நம்பி, எங்கள் சூத்திரப் பட்டத்தை துடைத்தெறிவீர்கள் என்று கனவு
கண்டு "எங்களுக்கு தலைமை தாங்க வக்கில்லை" என்று உங்கள் தலைவர் பெரியார்
கூறியதைக் கேட்டு ரசித்துக்கொண்டு உங்கள் தலைமைகளை நாங்கள் மறுபேச்சின்றி
ஏற்றுக்கொண்டோம்.

சரி... வந்தேறிகளான நம்மையும் இந்த மடப்பயல்கள் நம்பி விட்டார்களே
இனியாவது இவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று உங்கள் திராவிடத்
தலைவர்கள் எங்களுக்கான ஏதாவது ஒரு உரிமையை விட்டுக்கொடுக்காமல்
இருந்திருக்கிறார்களா?

காவிரியில் காட்டிக்கொடுப்பு
கச்சத்தீவில் கழுத்தறுப்பு
பாலாற்றில் காட்டிக்கொடுப்பு
முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக்கொடுப்பு
தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்
கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்.
சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்.
பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.
தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..
பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..
சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு
சாதிச்சண்டை.. ஆளுங்கட்சி தெலுங்கன் என்றால் எதிர்க்கட்சி கன்னடன்..
அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கன்..
இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..
வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..
"குடிமகன்களாக" தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..
கூலிகளாக தமிழர்கள்.. வந்தேறிகள் கையில் தொழில்; வளம்; அதிகாரம்; ஊடகம்.

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..
இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பார்ப்பன ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?
எல்லாவற்றிற்கும் வந்தேறிகள் தலைமை என்றால் நாங்கள், தமிழர்கள்
தமிழ்நாட்டில் எதற்கு புல் புடுங்கவா?

3 சதவீத பார்ப்பனர்கள் ஆள்வது தமிழனுக்கு வெட்கக்கேடு என்று முழங்கிய
"பெரியாரின்" வாரிசுகள் வளர்த்த கட்சிகளால் இன்று மொத்தமாக ஒரு 600
பேர்கூட தேறாத சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆளும் அளவிற்கு தமிழ்நாடு
ஆக்கப்பட்டிருக்கிறதே.... இதுதான் உங்கள் பெரியாரின் தத்துவமா?
சிறுபான்மை கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அது துரோகம்; பச்சை
துரோகத்தைதான் ஈனும் என்று உங்கள் பெரியார் முழங்கிய அடிப்படையிலேயே
பார்த்தால் கூட...

இன்று தமிழ்நாட்டை எந்த பெரும்பான்மை ஆள்கிறது?
பறையரா?
பள்ளரா?
வன்னியரா?
நாடாரா?
முக்குலத்தோரா?
கொங்கு வேளாளரா?
இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த பெரும்பான்மைச் சமூகங்களுமே ஆள
முடியாத நிலையில் வைத்திருப்பதற்குத்தான் உங்கள் சாதி ஒழிப்புக் கொள்கையா
சொல்லுங்கள்?

இதுவரை ஏமாந்த தமிழர்கள் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.
உங்கள் போலி பார்ப்பன எதிர்ப்பால் திராவிடக் கூச்சலால் பார்ப்பனனின் ஒரு
மயிரைக்கூட புடுங்க முடியாது.

ஏனெனில் நீங்கள் நடத்துவது உண்மையான பார்ப்பன எதிர்ப்பு அரசியல் அல்ல..
அப்படி உண்மையில் நீங்கள், உங்கள் திராவிட அரசியல், எங்களுக்காக
உழைத்திருந்தால், இந்த நூறு ஆண்டுகளில் உண்மையாகவே சாதியை
ஒழித்திருப்பீர்கள்..

பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கி இருப்பீர்கள்..
உண்மையான மண்ணின் மைந்தர்களை ஆள வைத்திருப்பீர்கள்..
ஆனால் நூறு ஆண்டாக இவை எதையுமே செய்யாத நீங்கள்...
உங்களால் பாதிக்கபட்டு; ஆட்சி உரிமையை இழந்து.. இங்கே படையயடுத்து
வந்தவர்களிடமும் பிழைக்க வந்தவர்களிடமும் இன்னமும் இட ஒதுக்கீட்டு பிச்சை
போடுங்கள் என்று மண்ணின் மைந்தர்கள் நாங்கள் கெஞ்சி கூத்தாடி..
எங்கள் ஈழ உறவுகள் துடிக்கத் துடிக்க எங்கள் கண்ணெதிரேயே கொல்லப்பட்டபோது
கையறு நிலையில் கதறி...
எங்கள் மண்ணை; எங்கள் வளங்களை; மணலை; தண்ணீரை; கண்ட பொறுக்கிகளும் கூறு
போட்டு விற்கும்போது கலங்கி துடித்து...
வேண்டாம் திராவிடர்களே எங்களை விட்டுவிடுங்கள்.. நீங்கள் கூறிய இந்த ஆரிய
அடிமைத்தனத்திடமிருந்து எங்களை மீட்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை
நாங்கள் உணரத் தொடங்கி விட்டோம்... எங்களுக்கான விடுதலையை நாங்களே
முன்னெடுத்துக்கொள்கிறோம் என முன்வரும்போது..

மறுபடியும் அதே பழைய பார்ப்பனப் பூச்சாண்டியை எங்களிடம் காட்டி,
"திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும்
வீரதீரசூரப்புலிகள் எங்கே" என்று எங்களை நோக்கியே நீங்கள் உங்கள்
கணைகளைத் தொடுக்கத் தொடங்கினால்,
மறுபடியும் நீங்களே எங்களுக்கான நிரந்தரங்கள் என்று அடங்கிப்போய்..
அய்யோ பார்ப்பானை ஒழிக்க வந்த பரமாத்மாக்களே என்று கைகட்டி வாய்பொத்தி
திராவிடம் வாழ்க! என்று மீண்டும் எங்கள் அடிமைத்தனத்தின் இரண்டாம்
பாகத்தை தொடர்வோம் என்று நினைத்தீர்களா?
இல்லை. வரலாறு அப்படி இல்லை ஆழி ஆழி அண்ணன் அவர்களே...
பார்ப்பனன் உட்பட எந்த ஆரிய திராவிட வந்தேறிக்கும் இங்கு ஆட்சி உரிமை
இல்லை. இது எங்கள் நாடு தமிழ்நாடு.. தெலுங்கனுக்கு ஆட்சி வேண்டுமென்றால்
ஆந்திரா ஓடு....

என்று எங்களுக்கான உரிமைகளை நாங்களே கையில் எடுத்துக்கொள்வோம்..
தமிழனுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என்று உங்கள் தலைவர் பெரியார்
சொன்னதை பொய்யாக்கி... நாங்களே ஆளப்பிறந்தவர்கள்.. எங்கள் நாட்டில்
வேறெவனுக்கும் உரிமை இல்லை..

ஆயிரம் உண்டிங்கு சாதி இங்கு அன்னியர் நீங்கள் புகல் என்ன நீதி என்று
பாரதி வழியில்.. கணைகளை தொடுத்து நிமிர்வோம் எழுவோம்...
இந்த பூதத்தை இனி எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது..
ஏனெனில் நாங்கள் வெறும் தமிழ் அறிஞர்கள் இல்லை..
தமிழ்நாட்டின் தவப்புதல்வர்கள்...
- ஏகாந்தன் நம்பி
https://www.facebook.com/eagandan

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...