Tuesday, August 5, 2014

ஆளத்தகுதி இல்லையா தமிழருக்கு?


"திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும்
வீரதீரசூரப்புலிகள், இந்தப் பார்ப்பனத் தினவுக்கு; கொழுப்புக்கு;
இறுமாப்புக்கு; என்ன பதில் கூறப்போகிறார்கள்?" என்ற ஆழி ஆழி அவர்களின்
கருத்துக்கு மட்டுமே இந்த பதில்.....

திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று "சூரப்புலிகளாக நாங்கள் தொடைதட்டிக்"
கிளம்பியிருப்பதற்கு காரணம் திராவிடர்கள் தானே தவிர, அவர்களைக் குத்திக்
குதறி அற்ப மகிழ்ச்சி அடையவேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்டு நாங்கள்
யாரும் பிறக்கவில்லை.

இதோ உங்கள் கணக்குப்படி திராவிடம் பிறந்து 100 ஆண்டுகளைத் தொட்டு
விட்டீர்கள்... பார்ப்பனரை அழித்தீர்களா... பார்ப்பனீயத்தைத்தான்
அழித்தீர்களா..? இல்லை சாதி வர்ண முறைகளைத்தான் அழித்து
ஒழித்துவிட்டீர்களா? உங்கள் எழுத்துக்களில் நீங்களே ஒப்புக்கொள்வதைப்
போல், "கடைசிப் பூணூல் இருக்கும்வரைக் கருஞ்சட்டை ஓயாது என்ற ஊர்வலத்தில்
முழக்கமிட்டுப் பயனில்லை. அதை நாம் செயல்படுத்திக் காட்ட வேண்டும்" என்ற
நிலையில், வெற்று ஊர்வல முழக்கங்களாகத்தானே வைத்திருக்கிறீர்கள்? இட
ஒதுக்கீட்டில் பார்ப்பனருக்கு இடம் இல்லாமல் செய்து விட்டோம்
என்பீர்கள்...

அப்படி ஒதுக்கப்பட்ட பின்பும் அவர்களின் ராஜபோகம் ஒழிந்து விட்டதா..
அதிகார மணிமகுடம் உடைந்து விட்டதா? எல்லா அரசு உயர் பதவிகளிலும் அவாள்
இருக்கத்தானே செய்கிறார்கள்? தனியார் தொழில் நிறுவனங்களிலும் அவாள் கை
ஓங்கித்தானே உள்ளது..? தினமலம் என்னும் பார்ப்பன ஏடு இன்னமும் தன்
"கைத்திறமைகளை" காட்டுவதற்கு என்ன காரணம்? அப்படியானால் நூற்றாண்டு விழா
கொண்டாடும் இந்த நாள் வரை நீங்கள் யாருடன்
போர் புரிந்துகொண்டிருந்தீர்கள்? யாருக்காக வேலை
பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?

சென்னை மாணத்தில் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மற்றும் தமிழர் ஆகிய
நான்கு இனத்தவரும் இருந்தபோதே 52.5 சதவீத மக்கள் தமிழர்கள்..
அப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் பார்ப்பனரை (அல்லது
பார்ப்பனீயத்தை) அழிக்கவே அவதாரம் எடுத்ததாக நீங்கள் சொல்லிக் கொள்ளும்
உங்கள் தாய்க்கழகமான நீதிக்கட்சி 1920 இல் முதல்முதலாக தேர்தலில்
போட்டியிட்டது தொடங்கி தான் அமைத்த 6 மந்திரி சபைகளிலும் "தெலுங்கரை
மட்டுமே" முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது.
அமைச்சரவைகளில் கூட தெலுங்கர்களையே அமைச்சர்களாக்கியது.

நடேசனார் போன்ற நீதிக்கட்சித் தமிழர்கள் தமிழருக்கு அதிகாரம் தரவில்லையே
என்று குற்றம் சாட்டிய பிறகு ஒப்புக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்தது.

ஆனால் நடேசனார் என்ற தமிழர் நீதிக்கட்சியில் தமிழருக்கு அதிகாரம்
கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பிட்டி தியாகராயர் (இன்றைய தி.நகர்
என்ற பெயருக்கு சொந்தக்காரர்) அடுத்து வந்த தேர்தலில் தன் சொந்தக்
கட்சியைச் சேர்ந்த நடேசனாருக்கே யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று
பிரச்சாரம் செய்தார் இது வரலாறு.

இப்படிப்பட்ட தெலுங்கு வெறி பிடித்த நீதிக்கட்சிதான் தன்னை கன்னடர் என்று
சொல்லிக்கொண்ட பெரியாரின் கைக்கு தலைமை தாங்குமாறு வருகிறது. அப்போது
அந்தக் கட்சியில் பெரியார் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஏன்
நீதிக்கட்சியிலேயே தமிழராக பார்ப்பனிய எதிர்ப்பாளராக யாரும் இல்லையா?
இருந்தார்கள். பி.டி.ராஜன் இருந்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்
இருந்தார். பட்டிவீரன்பட்டி சவுந்தர்ராஜன் இருந்தார். மெத்தப்
படித்தவர்களாக, நல்ல மேடைப்பேச்சாளர்களாக, சிறந்த அமைப்பாளர்களாக
இருந்தார்கள். ஆனால் கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத, தன்னை கன்னடன்
என்று சொல்லிக்கொண்ட தெலுங்கரான பெரியரிடம்தானே நீதிக்கட்சி
ஒப்படைக்கப்பட்டது.

அதுவரை நீதிக்கட்சியோ பெரியாரோ திராவிடம்; திராவிட நாடு; தமிழ்நாடு;
தமிழ்நாடு தமிழருக்கே என்பது பற்றியயல்லாம் அறிந்திருந்தது கூட இல்லை
என்பதை அவருடைய மற்றும் நீதிக்கட்சியின் வரலாற்றின் மூலமாக அறிகிறோம்.

அதுமட்டுமல்ல 1937 ஆம் ஆண்டு தனித்தமிழியக்கத்தினர் "தமிழ்நாடு
தமிழருக்கே" என்ற கோரிக்கையை ஓங்கி ஒலித்து இந்தியை எதிர்த்துப்
பேராட்டம் நடத்தியது வரை "திராவிடம்" குறித்து பெரியார் சிந்தித்ததே
இல்லை.

தமிழர்கள் எல்லாம் விழித்தெழுந்து தமிழ்நாடு தமிழருக்கே என்று
கூறத்தொடங்கிய பிறகே திராவிடம் என்ற கருத்தை அரசியல் அரங்கில் ஓங்கி
ஒலிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ்நாடு தமிழருக்கே என முதலில்
முழங்கியவர் பெரியார் இல்லை என்பதை அறியலாம்.

நீதிக்கட்சியாக இருந்த வரை தமிழருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காத,
கொடுக்க விரும்பாத அந்த இயக்கம் தன் கைக்கு வந்த பிறகு, அதன் பெயரை
மாற்றும் அந்த விழாவிலாவது அதனை தமிழருக்கான இயக்கமாக மாற்றினாரா
பெரியார்? இல்லையே... அதற்கு அவர் கூறிய காரணம்.. நான் கன்னடியன்,
சிற்றரசு தெலுங்கர்... எனவே இதற்கு திராவிடர் கழகம் என்று பெயர்
வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழருக்கான ஒரு இயக்கமே இல்லாது
ஒழித்தவர்தானே பெரியார்...

அதன் பிறகு அந்த திராவிட வாதத்தை எங்களை ஏற்க வைக்க உங்களால் கூறப்பட்டது
தானே பார்ப்பனன் வாதம்...
தமிழன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டால் உங்களுடன் பார்ப்பனன் சேர்ந்து
விடுவான் என்று எங்களை எச்சரித்த "தமிழர் தலைவர்" பெரியார்...
"திராவிடன்" என்று நாங்கள் சொல்லிக்கொண்டால் எங்களுடன் தெலுங்கு கன்னட
மலையாளிகள் சேர்ந்து விடுவார்கள் என்பதை அறியாதவரா?
அவரே தான் சொல்கிறாரே.. தமிழன் என்று சொன்னால் உங்களுடன் நான் இணைந்து
கொள்ள முடியாது என்று....
இவரது பார்ப்பன எதிர்ப்பு என்பது தெலுங்கர் ஆதரவுதான் என்பதற்கு இரண்டு
எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

1925ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியும் சுயராஜ்யக் கட்சியும்
போட்டியிட்டன. நீதிக்கட்சி தெலுங்கருக்கான கட்சி என்பதால் சிறிது சிறிதாக
வலுவிழந்து வந்த காலகட்டம் அது. எனவே அதன் வெற்றிக்கு கடுமையாக பாடுபட
வேண்டி இருந்ததால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு
நீதிக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பனகல் அரசர் (இன்றைய பனகல்
பூங்கா பெயருக்கு உரியவர்) பெரியாரிடம் கேட்டுக்கொள்கிறார். அதனை ஏற்று
நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் 1928இல் அடுத்து வந்த வட ஆர்க்காடு இடைத்தேர்தல் ஒன்றில்
நீதிக்கட்சி சார்பாக பத்மநாப முதலியாரும் சுயராஜ்யக் கட்சி சார்பாக
வெங்கட்ரங்கம் நாயுடு என்ற தெலுங்கரும் போட்டியிட்ட போது, சில
பத்திரிகைகள் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்மநாப
முதலியாருக்கு ஆதரவாக பெரியார் பிரச்சாரம் செய்யப் போவதாக எழுதிய போது
அதை மறுத்து குடியரசு 7.2.1928 இல் வெளிவந்த கட்டுரையில்
"இதுவரையிலும் இதற்காக ஒருவருக்கு அனுகூலமாகவோ, மற்றொருவருக்கு
பிரதிகூலம் செய்யவோ, நாம் எண்ணவுமில்லை. அப்படி அனுகூலமாகவும்,
பிரதிகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியது இது சமயம்
அவசியமுமில்லை என்பதே நமது முடிவு.

அவசியமென்று கருதினால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி
பயந்துகொண்டிருக்கப் போவதுமில்லை. ஸ்ரீமான் நாயுடுவையும்
(சுயராஜ்யக்கட்சி வேட்பாளர்) நமக்கு 6,7 வருட­ங்களாகத் தெரியும். அவர்
எவ்வளவுதான் 'பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தாலும்' அவருடைய
அந்தரங்கமானது பிராமணரல்லாதார் வி­சயத்தில் அனுதாபமாகவேதானிருப்பதை
அறிந்திருக்கிறோம். இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை
என்னவென்பது நமக்கே தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி (நீதிக்கட்சி
வேட்பாளர்) நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்சகால ஈடுபட்டவரென்றும்
கேள்விப்பட்டதே இல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை."

(சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர்களின் கூடாரம் என்று அந்தக் கட்சியை
தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது என்று தான் கூறியதை ஏற்கவில்லை
என்பதால் காங்கிரசில் செயல்பாடு அற்று இருந்த பெரியாரின் நிலைப்பாடு
என்பது. வேட்பாளர் தெலுங்கரா தமிழரா என்பதைப் பொறுத்து
தீர்மானிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியலாம்.)
சுயராஜ்யக்கட்சியில் தெலுங்கு மொழி வேட்பாளர் என்றதும், அவர்
பார்ப்பனரல்லாதார்க்கு ஆதரவானவர் என சான்றிதழ் அளித்து பெருமைப்படுத்தும்
பெரியார். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தேவை இல்லை என்கிறார்.

இதே போன்றுதான் கருத்துக்களை மாநில எல்லைப் பிரிவினையின் போதும்
வைக்கிறார் பெரியார்.
அதாவது மலையாளிகள் தமிழ் மண்ணைப் பறிக்கும்போது மலையாளிகளுக்கு ஆதரவு
நிலைப்பாட்டை எடுக்கிறார். ஆந்திர கன்னடரிடம் தமிழ் மண் பறிபோகும் போது
அவர்களுக்கே ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

"ஆந்திரனும் கன்னடனும் ஒட்டுமொத்த நாட்டையுமா கொண்டுபோகப் போறான்... ஏதோ
நமக்கும் நாலு ஊர் உட்டுட்டுப் போவான் அது நமக்கு போதும்" என்கிறார்.

இவர்கள் நம்மை திராவிடர் என்று வரையறுத்து நம்ப வைத்ததால்தானே தமிழரல்லாத
யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் திராவிடர்கள என்ற
எண்ணத்தில் நம்பிக்கையில் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு
பார்க்கிறது தமிழ்ச் சமூகம்...?
தமிழ்நாட்டை தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளியையும் ஆள வைத்ததைத் தவிர
வேறு எந்த காரியத்தை திராவிடத்தால் செய்ய முடிந்திருக்கிறது?
செய்திருக்கிறது?

இன்றைய காவிரி சிக்கல் தொடங்கி பாலாறு முல்லை பெரியாறு சிக்கல் வரை நாம்
நமக்கு சொந்தமான எல்லைகளை இழந்ததுதானே காரணம்.
தமிழரல்லாதார் தமிழ்நாட்டை ஆண்டு வருவதால்தானே இன்றைய ஈழ துரோகம் முதல்
கூடங்குளம் துரோகம் வரை நடந்தேறியிருக்கிறது? இதை யாரும் மறுக்க
முடியுமா? கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தனக்கு கூடங்குளம் வேண்டவே
வேண்டாம் என்று விரட்டி அடிக்க முடிந்தது..
கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தன் நாட்டு மீனவனை சுட்டுக்கொன்ற
இத்தாலிக்காரனை சிறை வைத்து வழக்குபோட முடிந்திருக்கிறது.

சுட்டவன் சோனியாவுக்கு சொந்தக்காரன் என்பதால் மலையாளி விட்டுவிட்டானா?
அல்லது இந்தியாவுக்கு பயந்து கொண்டு முல்லைப்பெரியாற்றில் முழுக்கொள்ளளவு
நீரைத் தேக்க சம்மதித்துவிட்டானா? அவனும் இந்தியாவில்தானே இருக்கிறான்.
நம் தமிழ்நாட்டு அரசுகள் மட்டும் தொடர்ந்து தமிழருக்கு துரோகம் செய்யும்
சூழ்ச்சி என்ன?

நமக்கு உரிமையான காவிரித் தண்ணீரை வைக்கோலைக் கொடுத்து
பெற்றுக்கொள்கிறோம் என்று உடன்பாடு போட்டு வாங்கியவர்தானே மலையாளியான
எம்.ஜி.ஆர்? அதே மலையாளி எம்.ஜி.ஆர் முல்லைப் பெரியாறு உரிமையை
கேரளாக்காரனுக்கு விட்டுக்கொடுத்தாரா இல்லையா? அது எந்த பாசத்தில்?

பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பானைக் காட்டி ஆட்சி அதிகாரத்தில்
குந்திக்கொண்ட தெலுங்கரும் மற்றவர்களும் எந்த பார்ப்பன ஆதிக்கத்தை இதுவரை
ஒழித்திருக்கிறார்கள்? தமிழரை ஒழித்ததை தவிர?
தான் பிறந்த மண் என்ற காரணத்தால் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுக்கு
விட்டுக்கொடுத்துவிட்டால் இந்தியாவிற்கு தன்னால் பிரதமராக முடியாது
என்பதால், வலுக்கட்டாயமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தன் பதவி வெறியை
தீர்த்துக்கொண்ட நேருவுக்கும் இந்த பெரியாருக்கும் என்ன வித்தியாசம்?
இவர்களின் தலைமை மோகத்தால் இன்றைக்கு அழிந்து கொண்டிருப்பது காஷ்மீரும்
தமிழ்நாடும் தானே.. வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திராவிடம்
என்று சொல்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தமிழின் மேல்
திணித்து எங்களையும் திராவிடர்கள் என்று நம்பவைத்து இன்றுவரை ஒரு தமிழன்
கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் நீங்கள் செய்திருக்கும் இந்தக்
கழுத்தறுப்புக்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா?

உங்கள் பேச்சை நம்பி.. திராவிட வேடத்தை நம்பி.. மாநிலங்கள்
பிரிக்கப்பட்டு தமிழருக்கான மாநிலமாக சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட
பிறகும் கன்னடராக; தெலுங்கராக; மலையாளிகளாக; நீங்கள் இருந்த போது கூட,
உங்களை நம்பி, எங்கள் சூத்திரப் பட்டத்தை துடைத்தெறிவீர்கள் என்று கனவு
கண்டு "எங்களுக்கு தலைமை தாங்க வக்கில்லை" என்று உங்கள் தலைவர் பெரியார்
கூறியதைக் கேட்டு ரசித்துக்கொண்டு உங்கள் தலைமைகளை நாங்கள் மறுபேச்சின்றி
ஏற்றுக்கொண்டோம்.

சரி... வந்தேறிகளான நம்மையும் இந்த மடப்பயல்கள் நம்பி விட்டார்களே
இனியாவது இவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று உங்கள் திராவிடத்
தலைவர்கள் எங்களுக்கான ஏதாவது ஒரு உரிமையை விட்டுக்கொடுக்காமல்
இருந்திருக்கிறார்களா?

காவிரியில் காட்டிக்கொடுப்பு
கச்சத்தீவில் கழுத்தறுப்பு
பாலாற்றில் காட்டிக்கொடுப்பு
முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக்கொடுப்பு
தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்
கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்.
சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்.
பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.
தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..
பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..
சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு
சாதிச்சண்டை.. ஆளுங்கட்சி தெலுங்கன் என்றால் எதிர்க்கட்சி கன்னடன்..
அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கன்..
இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..
வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..
"குடிமகன்களாக" தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..
கூலிகளாக தமிழர்கள்.. வந்தேறிகள் கையில் தொழில்; வளம்; அதிகாரம்; ஊடகம்.

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..
இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பார்ப்பன ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?
எல்லாவற்றிற்கும் வந்தேறிகள் தலைமை என்றால் நாங்கள், தமிழர்கள்
தமிழ்நாட்டில் எதற்கு புல் புடுங்கவா?

3 சதவீத பார்ப்பனர்கள் ஆள்வது தமிழனுக்கு வெட்கக்கேடு என்று முழங்கிய
"பெரியாரின்" வாரிசுகள் வளர்த்த கட்சிகளால் இன்று மொத்தமாக ஒரு 600
பேர்கூட தேறாத சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆளும் அளவிற்கு தமிழ்நாடு
ஆக்கப்பட்டிருக்கிறதே.... இதுதான் உங்கள் பெரியாரின் தத்துவமா?
சிறுபான்மை கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அது துரோகம்; பச்சை
துரோகத்தைதான் ஈனும் என்று உங்கள் பெரியார் முழங்கிய அடிப்படையிலேயே
பார்த்தால் கூட...

இன்று தமிழ்நாட்டை எந்த பெரும்பான்மை ஆள்கிறது?
பறையரா?
பள்ளரா?
வன்னியரா?
நாடாரா?
முக்குலத்தோரா?
கொங்கு வேளாளரா?
இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த பெரும்பான்மைச் சமூகங்களுமே ஆள
முடியாத நிலையில் வைத்திருப்பதற்குத்தான் உங்கள் சாதி ஒழிப்புக் கொள்கையா
சொல்லுங்கள்?

இதுவரை ஏமாந்த தமிழர்கள் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.
உங்கள் போலி பார்ப்பன எதிர்ப்பால் திராவிடக் கூச்சலால் பார்ப்பனனின் ஒரு
மயிரைக்கூட புடுங்க முடியாது.

ஏனெனில் நீங்கள் நடத்துவது உண்மையான பார்ப்பன எதிர்ப்பு அரசியல் அல்ல..
அப்படி உண்மையில் நீங்கள், உங்கள் திராவிட அரசியல், எங்களுக்காக
உழைத்திருந்தால், இந்த நூறு ஆண்டுகளில் உண்மையாகவே சாதியை
ஒழித்திருப்பீர்கள்..

பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கி இருப்பீர்கள்..
உண்மையான மண்ணின் மைந்தர்களை ஆள வைத்திருப்பீர்கள்..
ஆனால் நூறு ஆண்டாக இவை எதையுமே செய்யாத நீங்கள்...
உங்களால் பாதிக்கபட்டு; ஆட்சி உரிமையை இழந்து.. இங்கே படையயடுத்து
வந்தவர்களிடமும் பிழைக்க வந்தவர்களிடமும் இன்னமும் இட ஒதுக்கீட்டு பிச்சை
போடுங்கள் என்று மண்ணின் மைந்தர்கள் நாங்கள் கெஞ்சி கூத்தாடி..
எங்கள் ஈழ உறவுகள் துடிக்கத் துடிக்க எங்கள் கண்ணெதிரேயே கொல்லப்பட்டபோது
கையறு நிலையில் கதறி...
எங்கள் மண்ணை; எங்கள் வளங்களை; மணலை; தண்ணீரை; கண்ட பொறுக்கிகளும் கூறு
போட்டு விற்கும்போது கலங்கி துடித்து...
வேண்டாம் திராவிடர்களே எங்களை விட்டுவிடுங்கள்.. நீங்கள் கூறிய இந்த ஆரிய
அடிமைத்தனத்திடமிருந்து எங்களை மீட்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை
நாங்கள் உணரத் தொடங்கி விட்டோம்... எங்களுக்கான விடுதலையை நாங்களே
முன்னெடுத்துக்கொள்கிறோம் என முன்வரும்போது..

மறுபடியும் அதே பழைய பார்ப்பனப் பூச்சாண்டியை எங்களிடம் காட்டி,
"திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும்
வீரதீரசூரப்புலிகள் எங்கே" என்று எங்களை நோக்கியே நீங்கள் உங்கள்
கணைகளைத் தொடுக்கத் தொடங்கினால்,
மறுபடியும் நீங்களே எங்களுக்கான நிரந்தரங்கள் என்று அடங்கிப்போய்..
அய்யோ பார்ப்பானை ஒழிக்க வந்த பரமாத்மாக்களே என்று கைகட்டி வாய்பொத்தி
திராவிடம் வாழ்க! என்று மீண்டும் எங்கள் அடிமைத்தனத்தின் இரண்டாம்
பாகத்தை தொடர்வோம் என்று நினைத்தீர்களா?
இல்லை. வரலாறு அப்படி இல்லை ஆழி ஆழி அண்ணன் அவர்களே...
பார்ப்பனன் உட்பட எந்த ஆரிய திராவிட வந்தேறிக்கும் இங்கு ஆட்சி உரிமை
இல்லை. இது எங்கள் நாடு தமிழ்நாடு.. தெலுங்கனுக்கு ஆட்சி வேண்டுமென்றால்
ஆந்திரா ஓடு....

என்று எங்களுக்கான உரிமைகளை நாங்களே கையில் எடுத்துக்கொள்வோம்..
தமிழனுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என்று உங்கள் தலைவர் பெரியார்
சொன்னதை பொய்யாக்கி... நாங்களே ஆளப்பிறந்தவர்கள்.. எங்கள் நாட்டில்
வேறெவனுக்கும் உரிமை இல்லை..

ஆயிரம் உண்டிங்கு சாதி இங்கு அன்னியர் நீங்கள் புகல் என்ன நீதி என்று
பாரதி வழியில்.. கணைகளை தொடுத்து நிமிர்வோம் எழுவோம்...
இந்த பூதத்தை இனி எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது..
ஏனெனில் நாங்கள் வெறும் தமிழ் அறிஞர்கள் இல்லை..
தமிழ்நாட்டின் தவப்புதல்வர்கள்...
- ஏகாந்தன் நம்பி
https://www.facebook.com/eagandan

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...