Saturday, May 30, 2015

தமிழ் ராணுவம் பற்றி - டி. சிவராம் பாகம் - 5 தமிழ் ராணுவ சாதிகளை அடக்குதல்


தென்னிந்தியாவைக் கைப்பற்றியதும் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட முதல் கவலை தமிழர்களிடையே நிலவி வந்த பழமையான மற்றும்  வேரூன்றியிருந்ததாக்குதல் போர் முறையாகும்”. அவர்கள் இந்தபழக்கம்மற்றும் கலாச்சாரத்தை நீக்குவதன் மூலமாக மட்டுமே தமிழ்ச் சமுதாயத்தில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முடியும் என்று கருதினார்கள். தமிழர்களின் பகுதி 1801 ஜூலை மாதம் ஆங்கிலேயர் வசமானது. அந்த ஆண்டே டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஆயுதப் பயன்பாடு ஒழிக்கப்பட்டது. மேலும் தமிழ் ராணுவ சாதியினரால் வழங்கப்பட்டு வந்த ராணுவச் சேவை ஒழிக்கப்பட்டது.

தென் மாகாணங்களின் பாளையக்காரர்கள் மற்றும் சேர்வைக்காரர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதன் மூலம் ஏற்படும்  அபாயகரமான தீமைகளை தடுக்கும் பொருட்டு... மாண்புமிகு எட்வர்டு லார்டு க்ளைவ், பிரபுவின் நேர்மறையான சிந்தனையின் அடிப்படையில் தென் மாகாணங்களைச் சேர்ந்த பாளையக் காரர்கள், சேர்வைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்படுகிறதுஎன்று அந்த அறிவிப்பில் சொல்லப்படுகிறது. தமிழ் ராணுவ சாதிகள் தங்கள் வழக்கமான தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்திற்காக பாளையங்கள் ஜாமீன்தார் நிலப்பகுதியாக மாற்றப்படும். தாக்குதல் போர்முறை பழக்கத்திலிருந்து தென் மாகாண மக்களை விடுவித்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் அவர்களைஅமைதியாக வேளாண்மையில் ஈடுபடக் கூடியவர்களாகமாற்றும் நம்பிக்கையிலும் ஆங்கிலேயர்கள் பாளைய முறையை ஒழித்தனர்.

தென்மாகாணங்களில் தங்கள் பாரம்பரிய நிலையிலிருந்து தமிழ் ராணுவ சாதிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஆயுதம் தாங்குவதற்கு தடை விதிப்பது அவசியமாக இருந்தது. தொல்லை தரும் பாளையக்காரர்களின் வனங்கள் மற்றும் கோட்டைகள் அழிக்கப்பட்டன. அவை அனைத்து வரைபடங்கள் மற்றும் அலுவலக ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டன (கருணாநிதியின் காலம் வரை அவை அப்படியே இருந்தன). 

தமிழ்ப் பகுதிக்கு அனுப்பப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளில் ஒருவரான லூசிங்டன், போரை விரும்பாத, முழுவதும் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே ராணுவ சாதியினர் ஆயுதங்களுடன் இருப்பது கிழக்கிந்திய கம்பெனியின் கஜானாவிற்கும் நில வருவாய்க்கும் குறுக்கே நிற்பதாக குறிப்பிட்டுள்ளார் (கால்டுவெல்: 1888, அத்தியாயம் 9). கர்நாடகப் போர்கள் போன்ற முக்கியமான போர்களின் மூலமாகவே ஆங்கிலேயர்கள் தென்னிந்தியா முழுவதையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ராணுவசாதியை அப்புறப்படுத்தும் பணியில் ஆங்கிலேயர்கள் இந்தப் போர்களில் தங்களுக்கு  உதவிய கள்ளர் சாதியையும் விட்டு வைக்கவில்லை.

இந்த ராணுவ சாதியின் தலைவர்கள் புதுக்கோட்டை அரசர்களான தொண்டைமான்கள் ஆவர். இவர்கள் ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிரான போர்களில் ஆங்கிலேயர்களுக்கு உதவினர். அதற்கும் முன்னர் நடந்த பல போர்களில் ஆங்கிலேயர் ஆற்காடு நவாபிற்காக போர்புரிந்தனர். அப்போதும் அவர்களின் படையில் கள்ளர்கள் கணிசமான பங்கு வகித்தர். ஆனால் தமிழ்ச் சமூகத்தை தங்கள் தாக்குதல் போர்முறையிலிருந்து அப்புறப்படுத்தும்போது கள்ளர்களும் அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்டனர்.

தமிழர்களின் தாக்குதல் போர் முறையை ஆங்கிலேயர்கள் எவ்வாறு புரிந்துகொண்டனர்? தமிழ் இலக்கியங்களில் ராணுவ வாழ்க்கை பற்றிய உடன்படிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. போர்செய்வது தன்னுரு தொழில் (சொந்தமாக தொழில் தேடிக்கொள்வது) மற்றும் மன்னுரு தொழில் (அரசன் அல்லது தலைவனுக்கான செய்யும் வேலை) என்று வரையறுக்கப்படுகிறது- தொல்காப்பியம், புறத்திணையியல், (எண்) 60. துணைக் கண்டத்தின் மற்ற பல ராணுவ சாதிகளைப் போலல்லாமல் கள்ளரும் மறவரும் போர் இல்லாத காலங்களில் விவசாயத் தொழிலில் ஈடுபவர்கள் கிடையாதுதங்கள் அரசன் அல்லது தலைவன் போர் புரியாவிட்டாலும் இவர்கள் போர் புரியக் கூடியவர்களாக இருந்தனர். கள்ளர் அல்லது மறவர் குழுக்களிடையே நடைபெற்ற போர்களை தமிழ்நாடு நினைவுறுத்துகிறது.

இன்றைக்கும் தென் தமிழகத்தில் வணங்கப்படும் பல போர்க்கடவுகள் மறவர்கள் ஆவர். அவர்கள், ஆங்கிலேயர் தாக்குதல் போர் முறையை ஒழித்துக்கட்டத் துவங்கிய பின்னரும் நடைபெற்ற போரில் தனித்துவமாக போர் புரிந்தவர்கள் ஆவர். தமிழ் கடவுளான ஏன முத்துப் பாண்டியன் வில்பாட்டு ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த ஒரு மறவர்  போர்வீரனைப் பற்றி விவரிக்கிறது. ஒரு போர்வீரனின் நோக்கம் என்பது வீரசொர்க்கத்தில் இன்பத்தை அடைவதாகும். வளமான நிலங்களைப் பெறுவது என்பது அவன் தன்னை தானே  அவமதித்துக் கொள்வதற்கு சம்மானதாகும். புறநானூற்றில் புதிதாக வந்த அரசர்கள் நெல் வயல்கள் மீது கவனம் செலுத்துவதை எள்ளி நகையாடப்படுகிறது (பாடல் 287). போர் என்பது மட்டுமே தமிழ் போர்க்குடிகளின் தனித்த தொழிலாக இருந்தது. தமிழர்களின் வீரத்தை ஒரு தாய் விவரிக்கிறார். -‘என் மகனை வளர்த்து பெரியவனாக்குவதே என் கடமை, அவனை போர் வீரனாக்குவது அவனது தந்தையின் கடமை’. அவனுக்கு வேல்களை செய்வது கருமானின் கடமை, ஒளிரும் வாள் தாங்கி போர் புரிந்து எதிரியின் யானைகளை வெட்டி குவித்து விட்டு திரும்புவது அந்த  இளைஞனின் கடமை” (பாடல் 312).

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் தமிழ் ராணுவ சாதிகளை குறிப்பிடகடுமையான மற்றும் கிளர்ச்சியானஎன்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்ச் சமூகத்தில்  அவர்களின் பழமையான மற்றும் வேரூன்றிய கலாச்சார மேலாதிக்கம் காலனி ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கியது. அதனை ஒழித்துக்கட்ட ஆங்கிலேயர் இரட்டை யுக்தியை கடைப்பிடித்தனர். ஒருபுறம் அவர்கள் இந்தக் கலாசாரத்தை நிலை நிறுத்திய சமூக கட்டமைப்புகளை அழிக்க முயன்றனர். மறுபுறம் அவர்கள் ராணுவ சாதிகளின் ஒழிப்பால் பலன் பெறும் சாதிகளை முன்னிலைப் படுத்தினர். தமிழகத்தில் கள்ளர் மற்றும் மறவருக்கு அதிக அதிகாரமளித்த முறைகளில் மிகவும் முக்கியமான முறை காவல் முறையாகும். 1832-ம் ஆண்டு அந்த காவல் முறை ஒழித்துக் கட்டப்பட்டது. போர் அல்லாத காலங்களில் இந்த முறையே கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் தங்கள் வாழ்க்கையை நடத்த பாரம்பரிய வருவாய்க்கான முறையாக இருந்தது.
திருநெல்வேலி மாவட்ட கையேடு மறவர் காவல்கார்களின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறது - “மைய அதிகாரம் இல்லாதபோது கூட்டத் தலைவர்களாக மற்றும் பல்வேறு மக்களின் தலைவர்களாக, அவர்களின் தன்மை கிளர்ச்சி தலைவர்களை பின்பற்றுவோரின் தன்மையாக இருந்து, துணிச்சலான, எதையும் செய்யக் கூடியவர்களாக, தந்திரமான மற்றும் மாறக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் இனத்தை மட்டுமே அல்லது அமைதியான விவசாயிகளையும் உள்ளடக்கிய கூட்டமாக இருந்தனர். போர்க்காலங்களில் மற்றும் போர் இல்லாத காலங்களில் அவர்களின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவ்வாறு திசை மற்றும் ஸ்தல காவல் முறைகள் ஏற்பட்டன அல்லது தனிக் கிராமங்களை பாதுகாக்கும் முறைகள் ஏற்பட்டன. கூட்டத் தலைவர் (அவரின் கள்ளர் மற்றும் மறவர்) கோட்டையைச் சுற்றியுள்ளவர்களிடம் போர்களிலிருந்து பாதுகாத்தமைக்கு நிதியுதவி பெற்றனர்.”

கிராம மற்றும் மாவட்ட காவல் முறைகள் தமிழ்ச் சமுதாயத்தின் பல கட்டங்களில் நிலவியது. எனவே புதிய முறை நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் வரி வசூலிப்பதற்கும் இது தடையாக இருந்தது. சில சமயம் காவல் ராணுவ சாதிகளிடமிருந்து பறிக்கப்பட்டு சாணார்களுக்கு (கால்டுவெல் 1888, . 224) அல்லது காவல் எதிர்ப்பு இயக்க சாதிகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்களின் காவல் பணியை கைவிட, தங்கள் நிலத்தை விற்று விட்டுச் செல்ல கட்டாயப் படுத்தப்பட்டது (சென்னை மாகாண காவல் நிர்வாகம், 1896). பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கிராமப் புறங்களில் தமிழ் ராணுவ சாதிகளின் காவல் சேவையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் இறுதி கட்டமாக 1860-ல் புதிய காவல் முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு ஆதரவான சாதிகளிடமிருந்தே ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கு ஆதிதிராவிடர்கள் அல்லது பறையகள் பெருமளவு சேர்க்கப்பட்டார்கள். ஆங்கிலேயர் தங்கள் தண்டனை மற்றும் நீதி அமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக பாரம்பரியமாக நீதி வழங்கி வந்த கள்ளர்களின் நாட்டு- அம்பலக்காரர் முறை அமைப்பும் ஒழிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கு ஆதி திராவிடர் அல்லது பறையர் அதிக அளவில் சேர்க்கப்பட்டனர். ஆங்கிலேயர் தங்கள் நீதி-தண்டனை வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த கள்ளர்களின் நீதி வழங்கும் அமைப்பான நாட்டு அம்பலக்காரர் முறையை ஒழித்தனர். தங்கள் பாரம்பரிய தொழில்களான காவல் மற்றும் ராணுவ வீரர் ஆகியவற்றோடு சில இடங்களில் தங்கள் நிலத்தையும் இழந்து நின்ற பெரும்பான்மை தமிழ் ராணுவ சாதிகள், ஆங்கில அரசாங்கத்திற்கு சமூக ஒழுங்கிற்கு அபாயமாகவும், குற்றம் புரியும் கூட்டமாகவும் தோன்றினர். தமிழ் ராணுவ சாதிகளை குற்றவாளிகளாக காட்டவும் வகைப்படுத்தவும் இந்த கண்ணோட்டத்தில் ஒரு நிர்வாக அமைப்பும் மற்றும் இனம்சார்ந்த பிரசுரங்களும் உருவாகின. மேலும்  இந்த நடவடிக்கை  அவர்களை தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் விளிம்புகளுக்கு தள்ளியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கிலேய எழுத்தாளர்களால் போர்க்குடிகள் என்று குறிப்பிடப்பட்ட கள்ளர், மறவர், அந்த நூற்றாண்டின் இறுதி காலத்தில் அவர்களை குற்றப் பரம்பரையினர் என்று குறிப்பிடப்பட்டனர்.

தமிழ் ராணுவ சாதிகளின் அதிகாரத்தை இழக்கச் செய்து அவர்களின் பாரம்பரிய அதிகார கட்டமைப்பை அழித்த நடவடிக்கை  தமிழ்ச சமுதாயத்தில் வேளாளர்கள், சாணார்கள் (நாடார்கள்), ஆதி திராவிடர்கள் மற்றும் நாட்டாம்பாடிகளை வலுப்படுத்த உதவியது. இவர்கள் மறவர்களுக்கு எதிரான நிலையில் இருந்தவர்கள் ஆவர். மேலும் வருவாய், பாதுகாப்பு மற்றும் மதமாற்ற போன்றவற்றில் அவர்களுக்கு பொருத்தமானவர்களாக இருந்தனர். இவர்களிடையே வேளாளர்கள் பின் வரும் காரணங்களால் மிகவும் விரும்பத் தக்க நிலையை அடைந்தனர்:-

() 1871-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி அவர்கள்அமைதியை விரும்பக் கூடிய, பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய, தொழில்துறைக்கு உதவக் கூடியவர்களாக இருந்தனர்என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் புதிய வருவாயை உருவாக்க முக்கியமானவர்களாக இருந்தனர். (கோயம்புத்தூர்) நிர்வாக கையேடு, வேளாளர்கள், “ உண்மையிலேயே மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் தங்கள் தொழில்துறை மற்றும் பொருளாதார உருவாக்குவதன் மூலம் செல்வத்தை சேமித்து, நிர்வாகத்திற்கு ஆதரவாக, அரசாங்கம் மற்றும் மாவட்ட தேவைகளுக்கு பணத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருந்தனர்.”

(பி) “நாட்டுப்புற கருத்துக்களின்படிஆடுமாடு வளர்த்தல் மட்டுமே அவர்களின் முறையான வருமான முறையாக இருந்தது. அவர்களுக்கு கள்ளர், மறவர்களைப் போல அரசு பாரம்பரியங்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வேளாளர் ஒரு அரசனாக முடியாது என்ற அடிப்படையில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் தளபதியான அரியநாத முதலியார் தன்னை அரசனாக அறிவிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதாக மதுரை கையேடு குறிப்பிடுகிறது.

(சி) ஆங்கிலேய அரசாங்கத்தின் தேவைகளுக்கான ஆட்தேவைக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருந்தனர். அவர்கள் கணக்குப் பிள்ளைகளாக பணிபுரிந்தனர். அவர்களில் பலர் கர்ணம்களாக அல்லது கிராம கணக்காளர்களாக பணிபுரிந்தனர்.
(டி) அவர்கள் தங்கள் தோற்றத்தில் மிகவும் கட்டுக்கோப்பானவர்களாக இருந்தனர். “மத விவகாரங்களில் பொதுவாக பிராமணர்களை விட மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் போதைப் பொருட்கள் மற்றும் மாமிசம் சாப்பிடுவதில்லைஎன்று தஞ்சாவூர் கையேடு குறிப்பிடுகிறது.

இதற்கிடையே ராணுவத் தன்மை அகற்றப்பட்ட தமிழ்ச் சமுதாய சூழலில் ஆங்கில ஆதரவு இயக்கமாக திராவிட இயக்கம் உருவாகிறது.
-------------------------------------------------------------------
செய்தியாளர் எம்.ராஜா ஜொகநாதமின் கடிதம்

1992-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி லங்கா கார்டியனில் வெளியான தமிழ் ராணுவம் மற்றும் சாதி. மேற்கண்ட கட்டுரை தொடர்பாக. கட்டுரையில் எழுத்தாளர் திரு டி.பி.சிவராம் சில உண்மைகளை தவறாக சொல்லி இருக்கிறார்.

மையிலிடி பற்றிய கூற்றுக்கள் சரியானவையே. தலைவர்களின் பெயர் வீர மாணிக்கத் தேவன், பெரிய நாட்டுத் தேவன் மற்றும் நரசிம்மத் தேவன். மறவர் சாதித் தலைவர்கள் அந்தக் கிராமத்தின் கரையார் சாதியினரிடையே திருமணம் செய்தனர் என்பதும் உண்மையே. ஆனால் துரையார் மற்றும் பனிவர் பற்றிய கூற்றுக்கள் தவறானவை.

அந்தக் கிராமத்தின் துரையார் மற்றும் பனிவர் பிரிவுகள் மையிலிடியின் பண்டைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் ஆவர். துரையார் பிரிவு உயர்ந்து என்று கருதப்பட்டாலும் மறவர் போர்முறைகள் இந்த இரண்டு பிரிவினிரிடையேயும் புகழ்பெற்றவை.

துரையார் மற்றும் பனிவர் ஆகிய இரு பிரிவினரும் மறவர்களின் தாய்பூமியான ராமநாதபுரத்துடன் திருமண உறவு வைத்திருந்தனர். அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

நான் அந்தக் கிராமத்தின் பழமையான குடும்பத்தின் வாரிசு ஆவேன். ‘யாழ்ப்பானத்தின் பண்டைய கிராமங்கள்என்ற ஒரு கட்டுரை 1986-ம் ஆண்டு ஜலை 13-ம் தேதி ஈழநாடு பத்திரிகையில் வெளியானது. அந்தக் கட்டுரையில் இது பற்றி எழுதப்பட்டது.

http://tamilnation.co/forum/sivaram/920715lg.htm


No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...