Saturday, August 29, 2015

மள்ளர் உரிமை-பெருமை மீட்பு மாநாட்டில் எனது உரை

நேற்று (29.08.15) சாத்தூர் வேப்பிலைப்பட்டியில் நடைபெற்ற மள்ளர் உரிமை-பெருமை மீட்பு மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசிய காணொளியை இணைப்பில் கொடுத்துள்ளேன்.
 தொடர்வது எழுத்துவடிவம்

என் பெயர் பெருமாள் தேவன்.
நான் பிறமலைக் கள்ளர் சாதியைச் சேர்ந்தவன். எங்கள் ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி கிராமம். இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் சாதிவெறிக்குப் பெயர் பெற்ற ஊர் என்று சொன்னால் மிகையாகாது. எனக்குத் தெரிந்து கடந்த 35 ஆண்டு காலத்தில் பலமுறை சாதிக் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலி வாங்கிய ஊர்தான் எங்கள் ஊர்.

யார் யாருக்கும் பிரச்சனை? பிறமலைக் கள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் பிரச்சனை. சரி ஏன் வருகிறது? ஒரு காரணமும் இல்லை. பறையர்கள் ஊரின் தெற்கே இருக்கிறார்கள். கள்ளர்கள் ஊரின் வடக்கே இருக்கிறார்கள். இருவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் இருவருக்கும் இடையே சண்டை தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஊரில் எந்த சண்டையும் ஏற்படவில்லை.

ஏன்னு கேட்கிறீர்களா? எந்த திராவிட வெங்காயமும் வந்து தீர்த்து வைக்கவில்லை. சண்டையிட்ட இரண்டு சாதியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். என்ன ஒப்பந்தம்? ஐயா ஒரு பறையருக்கும், ஒரு கள்ளருக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அதைச் சாதிச் சண்டையாக மாற்றக் கூடாது. இந்த முடிவுக்குப் பின்னர் எங்கள் ஊரில் சாதிச் சண்டை வரவில்லை. கிராம மக்கள் எவ்வளவு எளிதாக பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டார்கள் பார்த்தீர்களா?

இதைத்தான் நாங்கள் தீர்ப்போம், தீர்ப்போம் என்று கடந்த 80-90 வருடங்களாக திராவிடக் கழகத்தினர் சொல்லி வருகிறார்கள். ஏதாவது ஒரு சிறு கிராமத்தில் இவர்கள் சாதிச் சண்டையை தீர்த்து வைத்திருக்கிறார்களா? இல்லையே? இவர்களுடைய நோக்கம் சண்டையை தீர்ப்பதில்லை. சாதிகளை சண்டையை ஏற்படுத்துவது. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கே உள்ள எல்லா தலைவர்களிடமும், எல்லா சாதிகளிடமும் பல முரண்கள் உள்ளன. அதனை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றையெல்லாம் நாமே தீர்த்துக்கொள்ள முடியும். திராவிட இடைத் தரகன் தேவையில்லை. அதற்கு நமக்குத் தேவை ஒரு தமிழர் அரசு. அந்த விஷயத்தில் நம்மில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை.

இந்த மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? எஸ்சி பட்டியல் பிசி பட்டியலில் உள்ள பெயரை எம்பிசி பட்டியலில் சேர்ப்பதுதானே? இதிலென்ன சிக்கல்? இந்த பட்டியல் பற்றி பேசும்போது இரண்டு முக்கியமான பொருட்களைப் பற்றி பேச வேண்டியுள்ளது.

1. ஒன்று நூல், பூணூல். இன்னொன்று வாத்திய கருவி. உறுமி மேளம் பார்ப்பனர் என்றால் பூணூல் அணிவார்கள். ஆனால் பூணூல் அணியாத பார்ப்பனர் சாதி உண்டு. அது சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா. இந்த சாதியினர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இந்த தெலுங்கு சாதி எம்பிசி பட்டியலில் உள்ளது. இது யாருடைய சாதி, நம்ம அம்மா ஜெயலலிதாவுடைய சாதி.

2. அடுத்ததாக உறுமி மேளம். இது தெலுங்கர்களின் மேளம். தமிழர்களின மேளம் மிருதங்கம். உறுமி மேளம் அடிக்கக் கூடிய சாதியினர் தெலுங்கு சின்னமேளம் சாதி - இந்த தெலுங்கு சாதிக்குத்தான் இசைவேளாளர் என்று தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டு எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது யாருடைய சாதி நம்ம ஐயா தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதியுடைய சாதி.

இந்த சாதிகளுக்கு இணையான அந்தஸ்தை மண்ணின் மைந்தர்களுக்கான பள்ளர்களுக்கு கொடுப்பதில் என்ன சிக்கல்? ஆனால் பிரச்சனை என்னவென்றால் 10% விகிதாச்சார இடஒதுக்கீடு. இதுதான் அவர்களுக்குப் பிரச்சனை. இதனால் என்ன நன்மை? இட ஒதுக்கீட்டில் கிடைப்பதை விட அதிக சலுகை கிடைக்கும். ஆனால் இது ஆட்சி செய்யும் திராவிடர்களை துரத்தி அடிக்கும். இந்தக் கோரிக்கை தமிழ்த் தேசியத்தின் அடிப்படையாக அமையும்.

பள்ளர்கள் தங்கள் சுய சாதியின் உரிமைக்காகத்தான் குரல் எழுப்பினார்கள். அது தமிழ்த் தேசியத்தின் குரலாக அமைந்தது. தமிழ்த் தேசியத்திற்காக குரல் எழுப்பிய முன்னோடி சாதி எதுவென்றால் அது பள்ளர்கள்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
அடுத்ததாக திராவிடர்கள் கேட்கிறார்கள், தங்களுக்குள் சண்டைபோட்டுக்கொள்ளும்  சாதிகள் எப்படி ஒரே தலைமையின் கீழ் எப்படி செயல்படுவார்கள். தெலுங்குச் சாதிகளைச் சேர்ந்த கருணாநிதி, ஜெயலலிதாவின் கீழே செயல்படும் தமிழர் ஏன் ஒரு தமிழ்ச் சாதியைச் சேர்ந்த தலைவரின் கீழ் செயல்பட முடியாது?

திராவிட அறிவாளிகள் கேட்கிறார்கள், சாதிகளுக்கிடையே எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள் என்று, எஸ்சி-க்கு என்று தொகுதிகளை ஒதுக்கும்போது ஏன் பள்ளர்களுக்கும், கள்ளர்களுக்கும் தனித்தனி தொகுதிகளை ஒதுக்க முடியாது? எந்த தொகுதியில் எந்த சாதி அதிகமாக இருக்கிறதோ அந்த சாதிக்கு அந்த தொகுதியை ஒதுக்குங்கள். சரி, அடுத்த நிலையில் உள்ள சாதிக்கு என்ன செய்வீர்கள்? அவர்களுக்கு நகராட்சியை ஒதுக்குங்கள்.

இங்கே கள்ளரோ, பள்ளரோ அதிகாரத்திற்கு வருவது சிக்கல் இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு வந்தால் யாருக்குச் சிக்கல்? திராவிடருக்குச் சிக்கல். எனவேதான் இந்த சாதிகளை தொடர்ந்து மோத விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தச் சாதிக்கு ஆதரவாக அந்தச் சாதியை ஒருமுறை ஒடுக்குவதும் அந்த சாதிக்கு இந்த சாதியை ஒடுக்குவதும் இவர்களது வாடிக்கை.

முக்குலத்தோருக்கும் - பள்ளருக்கும் இடையே பிரச்சனைகள் இல்லையா? இருக்கின்றன? ஆனால் இந்த இரு சாதிகளுக்கும் மோதல்கள் இருந்ததாக வரலாற்று தகவல்கள் இல்லை. ஆனால் மோத வைக்கப்பட்டார்கள்.

நில உடமையாளர்களாக, விவசாயிகளாக இருந்த பள்ளர்கள் ஒருபோதும் இழி தொழில்களை செய்ததில்லை. கால வெள்ளத்தில் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப்படுகிறார்கள். நாயக்கர் ஆட்சி காலத்தில் நாயக்கர்கள் வீட்டுக்குள் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த மலத்தை அப்புறப்படுத்த எந்த தமிழ்ச் சாதியும் தயாராக இல்லை. அதனால் அவர்கள் ஆந்திராவிலிருந்து அருந்ததியரைக் கொண்டு வந்தனர்.

அவ்வாறான தொழிலைச் செய்யக் கூடிய அருந்ததிய மக்களுடன் பழகினால் அது தொற்றுநோயை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் தமிழ் சாதிகள் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். ஆரோக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அதுவே தீண்டாமை ஆனது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பள்ளர்கள் உட்பட எல்லா தமிழ்ச் சாதியினரும் பின்பற்றினார்கள்.

அப்படி உயர்ந்த நிலையில் இருந்த பள்ளர்களை பிற்காலத்தில் ஆங்கிலேயர் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் அதே அருந்ததிய மக்களுடன் சேர்த்து பட்டியல் சாதியினர் என்று அறிவித்தனர். இது மனதளவில் அவர்களுக்குள் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தப் பட்டியலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த முயற்சியே ஆகும்.

தமிழ்த் தேசியம் மலர வேண்டுமானால் பள்ளரும் முக்குலத்தோரும் மட்டுமல்ல, பறையர் - வன்னியர், கவுண்டர், உடையார், நாடார், கோனார், பிள்ளைமார், முதலியார் என அத்தனை  தமிழ்ச் சாதிகளிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். தமிழ்த் தேசியம் என்று பேசும்போது சிலர் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் சாதிகள் இருந்தால் பரவாயில்லை என்கிறார்கள். சாதி ஒழிப்பை விட்டுவிடுவோம். சாதிகள் இருந்தால் பரவாயில்லை என்ற கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். அப்படி ஒரு கூட்டமாக இருக்கும் சாதியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? அப்படி பிரதிநிதித்துவம் அளிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? அப்படிச் செய்கிறேன் என்றுதானே திராவிடன் ஏமாற்றி வருகிறான். அதனால்தானே சாதிக் கட்சிகள் உருவாக வேண்டிய நிலை ஏற்பட்டது?
ஜனநாயக அரசியலமைப்பு முறையில் எல்லாருக்கும் ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து அளிக்கவேண்டும். இதை நான் எல்லா சாதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கே அதிகாரம் வேண்டும் என்பதற்காக நான் ஆண்ட பரம்பரை என்று யாருமே சொல்லிக் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பாக முக்குலத்தோர் - பள்ளர் இடையே புரிதல் ஏற்பட வேண்டும். இவர்கள் எதிரிகள் அல்ல. எதிரிகள் ஆக்கப்பட்டார்கள். பள்ளர்களும் முக்குலத்தோரும் தனித்தனியான ஊர்களில் வசித்தார்கள். ஒருவருடைய இடத்தை மற்றவர் ஆக்கிரமிக்கவில்லை. ஒருவர் நிலத்தை ஒருவர் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. பள்ளர்கள் விவசாயம் செய்தார்கள். முக்குலத்தோரும் விவசாயம் செய்தார்கள். பள்ளர்களின் விவசாயத் தொழிலை முக்குலத்தோர் பறிக்கவில்லை. அப்படியானால் எப்படி எதிரி ஆனார்கள்?

பள்ளர்களையும் முக்குலத்தோரையும் எதிரியாக்கும் முயற்சி வெள்ளையர்கள் காலத்திலேயே தொடங்கப்பட்டது. அது 1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது முழு வடிவம் பெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தோல்வி பெறுகிறது. பார்வர்டு பிளாக் கட்சி வெற்றி பெறுகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது. அந்த மோதல் பள்ளர் - மறவர் மோதலாக மாற்றப்படுகிறது.  கட்சி மோதல் சாதி மோதலாக மாற்றப்படுகிறது.

பள்ளர்களின் களப்போராளியான இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பழி சுதந்திரப் போராட்ட வீரரான முத்துராமலிங்கத் தேவர் மீது சுமத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முதுகுளத்தூர் கலவரத்திலிருந்துதான் பள்ளரும் முக்குலத்தோரும் மோதிக்கொள்வது தொடங்குகிறது.

இந்த விஷயத்தில் இரு சாதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். அந்த துயரச் சம்பவங்கள், கலவரங்கள், உயிர்ப்பலிகள், இழப்புகள் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டன என்பதை இரு சாதியினருமே புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான முயற்சியின் துவக்கப் புள்ளியாகவே இந்த மாநாட்டைப் பார்க்கிறேன். அடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்போது இது குறித்து விரிவாக ஆராய்வோம்.

நம்மிடையே பகைமை புகுத்தப்பட்டுள்ளது. வெறி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காரணமே இல்லாமல் இந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்றால் அவரை வெறுக்க வேண்டும் என்ற மனநிலை எல்லாச் சாதிகளிடையே உருவாகியுள்ளது. நமது மோதல்கள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டவை. நமது சாதி வெறிக்காக 200-300 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்களாக இருந்தவர்களை வெறுக்கத் தேவையில்லை. நமது சாதி வெறி கண்ணாடி கொண்டு அவர்களைப் பார்க்கத் தேவையில்லை. இன்றைய தேவை நமது பகையை போக்குவது எப்படி என்பதுதான். அதற்கு நமக்குள்ளே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

அடுத்தபடியாக தம்பி செந்தில் மள்ளர் எழுதியமீண்டெழும் பாண்டியர் வரலாறுபுத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி தடை செய்யப்பட்டது தெரிந்ததே. அந்த நூல் தடை செய்யப்பட்டதற்கு சமுதாய மோதல்கள் வரும் என்றுதான் காரணம் கூறப்பட்டது. வரலாறு அல்ல. தமிழ்ச் சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆழமான வரலாறு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் தமிழ்க் குடிதான் மூத்த குடி. ஆனால் அதை எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சனை ஏற்படுகிறது.

அதேபோல தம்பி செந்தில் மள்ளர் தனது நூல்களில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். நான் நல்லவன் என்று சொல்ல, அவன் கெட்டவன் என்று சொல்லத் தேவையில்லை. நமது சமுதாயத்தை பெருமைப்படுத்த மற்ற சமுதாயங்களை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கேபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்என்ற நூலை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த நூலை உசிலம்பட்டியைச் சேர்ந்த திரு சுந்தர வந்தியத்தேவன் எழுதியுள்ளார். இந்த நூல் ஒரு வரலாற்று நூலாக, ஆய்வு நூலாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளர் வரலாறும், பறையர் வரலாறும் வருகிறது. பிறமலைக் கள்ளர்களின் முக்கியமான குல தெய்வமான கொக்குளம் பேய்க்காமன் கோவிலிலே பூசாரிகளாக இருப்பவர்கள் பறையர்கள் ஆவர். அவர்களிடம் கள்ளர்கள் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள். இந்த வரலாறு அந்த நூலின் 311-ம் பக்கத்திலே கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அதிலே இன்னொரு தகவலையும் சுந்தர வந்தியத் தேவன் குறிப்பிடுகிறார். அது தமிழர்களின் காவல் தெய்வங்களுக்கு பெரும்பாலும் பள்ளர்களும், பறையர்களும்தான் பூசாரிகளாக இருந்து வந்துள்ளனர் என்று பதிவு செய்கிறார். இன்னும் பல சம்பவங்களில் தாழ்ந்தவர்களாக கருதப்படும் சாதிகளுடன் கள்ளர்கள் எவ்வாறெல்லாம் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்று அந்த நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தம்பி செந்தில் மள்ளர் உண்மை வரலாறுகளை ஆணித்தரமாக எடுத்து வைக்கட்டும். அவற்றை விவாதம் செய்வோம். உண்மைகளை ஏற்றுக் கொள்வோம். ஆனால் அதை நமக்காக திராவிடன் செய்து தரமாட்டான். நாம்தான் செய்துகொள்ள வேண்டும். தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்களின் முன்னிலையில் ஆய்வு செய்வோம். அறிஞர் பெருமன்றம் ஏற்கும் விஷயங்களை நாமும் ஏற்போம். ஏற்காதவற்றை  புறந்தள்ளுவோம்.

தமிழ்ச் சாதிகள் அரசியல் அதிகாரம் பெறட்டும்.
தமிழர் ஆளட்டும். தமிழ்த் தேசியம் வெல்லட்டும்.
வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்.

https://www.youtube.com/watch?v=SufWXPMMDiQ&feature=youtu.beபட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...