Sunday, August 23, 2015

சாதிகளுக்கான அரசியல் உரிமை


தற்போது தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களின் எழுச்சி அல்லது சாதிகளின் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த எழுச்சிக்கு காரணம் சாதிகளுக்கான அரசியல் அதிகாரமின்மையே என்று கூறலாம்.

இந்த எழுச்சி குறிப்பாக ஈழ இன அழிப்புக்கு பிறகு தீவிரமடைந்தது எனலாம். ஈழப்போரின்போது தமிழர்களின் இறையாண்மை அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியிலிருந்த  திமுகவும், எதிர்க்கட்சியான அதிகமுகவும் போரை நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது நடவடிக்கை எடுப்பதைப்போல நாடகமாடின. அதேவேளையில் ஆட்சியிலிருந்த திமுக தலைவர் கருணாநிதி ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்களை நசுக்க அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.
இதற்கான காரணம் என்னவென்று ஓரளவு அரசியல் அறிவு உள்ள அனைவரும் சிந்திக்கத் துவங்கியபோது கருணாநிதி, ஜெயலலிதா போல தமிழகத்தில் அரசியல் செய்யும் அத்தனைபேருமே அந்நியர்கள் என்பதை உணர முடிந்தது. ஈழம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து உரிமை பிரச்சனைகளுமே அந்நியர்களுக்கு விட்டுக்கொடுப்படுவதை உணர முடிந்தது.  அதைத் தொடர்ந்தே தமிழகத்தில் தமிழர்களின் ஆட்சி அமைந்தால்தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது.

ஆனால் அந்நியர்கள் என்ன மாதிரியான அரசியலை உருவாக்கி வைத்துள்ளனர்? மண்ணின் மைந்தர்கள் ஆட்சிக்கு வருவதை தடுக்க கருத்தியல், அரசியல், பொருளியல் போன்ற அனைத்து தளங்களிலும் ஆதாரங்களை சிதைத்து வைத்துள்ளனர். சாதி வேறுபாடு பார்க்கக் கூடாது என்ற தமிழர்களின் உயர்ந்த கருத்தை சாதி என்றாலே கெட்டது என்று திரித்து வைத்துள்ளனர்.

இதே திரிப்புதான் சாதி என்றாலே, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சுடுகாட்டுப் பாதைச் சிக்கல், கௌரவக் கொலை, வன்கொடுமைகள் போன்றவற்றுகுக் காரணம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனை, தங்களை படித்தவர்கள், சிந்தனையாளர்கள், நாகரீகமானவர்கள், அறிஞர்கள் என்று கருதக் கூடியவர்களும் நம்புகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. ஆனால் இதன் மறுபக்கத்தில் லாவகமாக சாதிகளுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது அல்லது பறிக்கப்படுவது எளிதாக மறைக்கப்பட்டு விடுகிறது.

தமிழகத்தில் சாதி அடிப்படையில் முதலில் உருவான கட்சி என்றால் அது வன்னியர்களுக்காக உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிதான்என்று கூறலாம். அதைத் தொடர்ந்தே பறையர்களுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியும்”, பள்ளர்களுக்கான புதிய தமிழகமும்உருவாக்கப்பட்டன. அதன் பின்னரே மற்ற சாதிகளுக்கான கட்சிகளும் துவக்கப்பட்டன. 
இந்தக் கட்சிகள் அனைத்துமே அந்நியர்கள் உருவாக்கிய திராவிடக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவையே. இவற்றின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாகவே இருந்து வருகிறது.

சாதி ஒழிப்பின் தொடக்கம்

சாதி ஒழிப்பு எங்கு துவங்கியது என்று பார்த்தால் அது 1600-களில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் துவங்கியது என்றே கூறலாம். இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியைக் கைப்பற்றிய போர்த்துக்கீஷியர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்ட முற்பட்டனர். அவர்களின் நடவடிக்கையின் கீழாக அங்கிருந்த ராணுவ சாதிகளான கள்ளர், மறவர், அகமுடையார் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்கள் அரசாங்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தங்களை பிள்ளைகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாகத்தான் கள்ளர், மறவர், அகமுடையார் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆனார்என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

அதன் பின் 200 ஆண்டுகள் கழித்து 1800-ன் துவக்கத்தில் இதையே தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் தென் தமிழகத்தில் ராணுவ சாதியினர் ஆயுதம் தரிக்க தடை விதிக்கிறார்கள். அவர்களை கலகக்காரர்கள்என்றும் கிளர்ச்சிக்காரர்கள்என்று அழைத்து அவர்கள் அரசாங்கத்திற்கும் அமைதியை விரும்பும் மக்களுக்கும் எதிரானவர்கள் என்று  அறிவிக்கிறார்கள்.

19-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஆங்கிலேய அரசின் உத்தரவை மீறுபவர்கள் கலகக்காரர்கள்என்றும் கிளர்ச்சிக்காரர்கள்என்றும் குறிப்பிடுவதற்குப் பதிலாக குற்றப் பரம்பரையினர் என்று குறிப்பிடப்பட்டனர். குற்றப் பரம்பரையினர் என்றாலே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது, ஒடுக்குவது நியாயம்தான் என்று சொல்வதற்கு ஏதுவாகிறது.
இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தென்னகத்திற்கு வந்த கால்டுவெல் என்ற பாதிரியார், மழை நீரை எதிர்பார்த்துக் காத்திருந்த புல், பூண்டு, பயிர்களைப் போல தமிழர்கள் ஆங்கில அரசு போன்ற ஒரு நிலையான அரசை இன்முகத்துடன் வரவேற்றனர்எழுதுகிறார். அவர் ஆங்கில அரசுக்கு கட்டுப்பட்டு செயல்படக் கூடிய சாதியினர் நல்லவர்கள் என்ற கருத்திலும் ஆங்கில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாதியினர் கெட்டவர்கள் என்ற கருத்திலும் எழுகிறார்.

தென்னக மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவைதான் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தும் அவற்றை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்று எழுதுகிறார். ஏனெனில் தமிழ் மொழிக்கு ஒரு பெருமை உள்ளது என்றால் அது தமிழினத்திற்கும் சென்று விடும், அது ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எதிராக அமைந்துவிடும் என்பதால் அவர் அவ்வாறு எழுகிறார். தமிழ் மொழியின் பெருமையை மறைக்க கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி பெயரளவுக்கு கற்பிக்கப்பட்டது. அமைதியான, சாந்தமான மக்களுக்கு பாதுகாப்பளிக்கக் கூடியது ஆங்கிலேய அரசாங்கம்தான் என்ற கருத்தை அவர் மறைமுகமாக பரப்புகிறார் (http://tamilnation.co/forum/sivaram/920801lg.htm).

தமிழர்கள் உண்மையில் திராவிடர்கள் என்றும் அவர்களின் உண்மை இயல்பு சண்டையிடாமல் இருப்பது என்றும் எழுதுகிறார். ஏனெனில் தமிழர்கள் போர்க்குணம் படைத்தவர்கள் என்றால் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்புரிய துவங்கி விடுவார்கள் என்ற அச்சம்தான்.

இதே கருத்துக்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் இறுதி காலத்தில் இன்னும் சிறிது மாற்றம் பெறுகின்றன. அதாவது பெரும்பான்மை மக்களால், அவர்களின் தலைவர்களால் தாழ்த்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பது போன்ற கருத்தை திராவிட இயக்கங்கள் முன்னெடுக்கின்றன. ஆங்கிலேயரின் கருத்துக்களே திராவிட இயக்கங்களுக்கு  அடிப்படையாக அமைகிறது. அதாவது அடிமைப்பட்ட காலத்தில் அந்நியரின் ஆட்சிக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள் சுதந்திர இந்தியாவிலும் அந்நியருக்கு உதவும் வகையில் அமைகின்றன.

பட்டப் பெயர் ஒழிப்பு

அவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் அரசியல் செய்யத் துவங்கிய திராவிடர்கள் சாதிதான் கெட்டது என்பதால் சாதி அடையாளத்தை காட்டும் பட்டப் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு தீர்மானம் போடுகிறார்கள். இது நல்லதுதான் என்று தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள். இது அந்நியர்கள் தங்களை தமிழர்கள் போல காட்டிக்கொள்ள மேலும் உதவியது. பிராமணர்களை அந்நியர்கள் என்று கூறிய திராவிட கருத்தைப் பயன்படுத்தி மற்றொரு அந்நியர்களான தெலுங்கர்கள் ஜனநாய அரசியலமைப்பிலும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

தமிழர்களைப் போலவே பெயர் வைத்துள்ள, தமிழை அறிந்த, தமிழைக் கற்ற அந்நியர்கள் தங்கள் பட்டப் பெயரை நீக்கியதன் மூலம் முழுக்க முழுக்க தமிழர்களைப் போலவே தோற்றமளித்தனர். இதுபோன்ற கருத்துக்கள், அரசியல், தமிழக அரசுக் கட்டிலில் அந்நியர்கள் அமர ஏதுவாக அமைந்தன.

தமிழினத்திற்கு எதிரான அரசியல்

தெலுங்கரான கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதேபோல காவிரி நீர் உரிமைகள் பறிபோகத் துவங்கின. இந்த இரண்டு விஷயங்களிலும் மத்திய அரசு தமிழர்களின் உரிமையை பாதுகாக்க தவறிவிட்டது. மலையாளியான எம்ஜி ராமச்சந்திரன் முல்லைப் பெரியாறு நீர் உரிமைகள் பறிபோக துவக்க காரணமாக அமைந்தார். தொடர்ந்து கருணாநிதியும் தன் பங்கிற்கு முல்லைப் பெரியாற்றின் உரிமைகளை விட்டுக் கொடுத்தார். இந்த விஷயத்திலும் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகிறது.

தமிழர்களின் அதிகாரத்தைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தெலுங்கர் ஜெயலலிதாவும் மேற்படி இரண்டு தலைவர்களிடமிருந்து கொஞ்சமும் மாறுபடவில்லை. ஈழ விஷயத்தில் தமிழர்கள் அளிக்க வேண்டிய தார்மீக ஆதரவை அவர் தரத் தவறினார். மேற்படி மூன்று தலைவர்களுமே தமிழகத்தில் சாராய ஆறு ஓடுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இலவசங்களைக் கொடுத்து தங்களை நல்லவர்கள் போல காட்டிக் கொள்ள முயன்றனர்.

தமிழினத்தைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய வேலைகளை செய்திருக்க மாட்டார். இவர்கள் அந்நியர்களாக இருக்கிற காரணத்தால்தான் இவ்வாறு நடந்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்த வரை மீனவர் பிரச்சனை இல்லாமல் இருந்தது. அதன் பின் இலங்கை ராணுவம் சுட்டதில் மட்டும் இதுவரை 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி மேற்படி தலைவர்களோ, மத்திய அரசோ கவலைப்படவில்லை.

இந்திய மாநிலங்களில் சாதி அரசியல்

தமிழகத்தில் இருப்பதைப் போலவே இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன. ஆனால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் சாதி ஒழிப்புஅரசியல் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் இந்த மாநிலங்களில் அங்குள்ள ஒன்று இரண்டு ராணுவ சாதிகளைச் சேர்ந்தவர்களே முதல்வர் பதவிக்கு வருகிறார்கள். இந்தியா முழுவதுமே சாதி அரசியலே நடப்பில் உள்ளது.
தற்போது தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் ஆட்சியில் பங்கு குறித்துப் பேசி வருகிறார். ஆனால் சாதி ஒழிப்பு பற்றி பேசிய அம்பேத்கர் பிறந்த மஹாராஷ்டிராவில் அவ்வாறு ஒரு அரசியல் பேசப்படுவதில்லை. அங்கு சாதி ஒழிப்பு ஒரு விஷயமே இல்லை. இத்தனைக்கும் தமிழகத்தில் சுமார் 20% தலித்களும், மஹாராஷ்டிராவில் சுமார் 40% தலித்களும் இருக்கிறார்கள். (இங்கு தலித் என்பது ஒரு சுட்டுச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.)

சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிராவின் முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷில் குமார் ஷிந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரால் நீண்ட காலம் அங்கு முதலமைச்சராக நீடிக்க முடியவில்லை. காரணம் அவர் ஒரு தலித் ஆக இருந்ததாகும். எனவே காங்கிரஸ் கட்சி அவரை மத்திய உள்துறை அமைச்சாக்கியது. இதற்கு முக்கிய காரணம் அங்கு நிலவும் மராட்டா சாதி அரசியலே. மஹாராஷ்டிரா உருவாகிய 1960-ம் ஆண்டிலிருந்து 2012 வரை அங்கு முதல்வர்களாக பதவி வகித்தவர்களில் 16-ல் 10 பேர் மராட்டா சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்  (https://en.wikipedia.org/wiki/Maratha).  மஹாராஷ்டிராவின் போர்க்குடிகளான மராட்டா சாதிகள் அங்கு 30% மக்கள் தொகையை கொண்டுள்ளனர்.
ஆனால் எந்தக் கட்சியாக இருந்தாலும், மராட்டா சாதிகளைச் சேர்ந்தவர்களே அங்கு முதல்வர் பதவிக்கு வர முடியும். அதேபோல மராட்டா சாதியைச் சேராதவர் என்ற காரணத்தால்தான்  பால்தாக்கரே துவங்கிய சிவசேனா கட்சியால் மேற்கு மண்டலமான கொங்கன் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வளர முடியவில்லை.

இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் உள்ளது. ஆனால் சாதி ஒழிப்பு என்ற காரணத்தால் தமிழகத்தில் தமிழ் ராணுவ சாதிகளுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது. அவ்வாறு ஒருவர் வளர்ந்து வந்தாலும் அவரை சாதி வெறியராக சித்தரித்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள். இவ்வாறு இந்த மண்ணுக்கானவர்கள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதால் தமிழர் நலன்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி அரசியல்

சாதிகளின் கோட்டை என்றால் அது உள்ளாட்சி அமைப்புகள் என்றே சொல்லலாம். பெருநகரங்கள் போக மீதியுள்ள அத்தனை நகரங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், கிராமங்கள்  என அத்தனை உள்ளாட்சி அமைப்புகளிலுமே சாதிகள்தான் கோலோச்சுகின்றன. ஆனால் திராவிடத்தின் பெயரில் இங்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை இழந்தே நிற்கிறார்கள். சாதிக் கட்சிகள் இங்கிருந்து தங்கள் அதிகார பங்கை பெற முயற்சிக்காமல் சட்டமன்றம், பாராளுமன்றம் உறுப்பினர் பதவிகளை உரிமைகோர முயற்சிப்பதால் அவை தோல்வியைத் தழுவி வருகின்றன.

எந்தவொரு ஊராட்சி அல்லது நகராட்சிக்குப் போனாலும் அங்கு இதை கண்கூடாக பார்க்கலாம். ஒரு சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அந்தந்தச் சாதியைச் சேர்ந்தவர் மட்டுமே நகராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எந்த அரசியல் கட்சியுமே விதிவிலக்கு அல்ல. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் அந்தந்தக் கட்சிகளுக்குத்தான் பிரதிநிதிகளாக இருக்கிறார்களே தவிர தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கான பிரநிதிகளாக  இருப்பதில்லை. இவர்கள் அந்தந்த மக்களுக்கான பிரதிநிதிகளாக மாறும்போது மண்ணின் மைந்தர்களுக்கான ஆட்சி மலரும். அந்நியர்கள் ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது.

ஜனநாயக உரிமை

ஜனநாயக அரசியலமைப்பின்படியும் ஒரு நாட்டில் எந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கிறார்களோ, அவர்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அந்த வகையிலும் சாதிகளுக்கு அவர்களின் மக்கள் தொகைக் கேற்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் ஜனநாயக ரீதியான அரசியலில் அவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றே பொருள்படும். தமிழகத்தில் சாதிகளுக்கும் தக்க பிரதிநிதித்துவம் இல்லை. தமிழர்களுக்கான அரசியல் அதிகாரமும் அந்நியர் கையில் உள்ளது. எனவேதான் தமிழர்கள் இங்கு இரண்டாம் தர குடிமக்களைப் போல வாழ்ந்து வருகிறார்கள். சாதிகளுக்கு தக்க பிரதிநிதித்துவம் கிடைக்கும்போது தமிழர்கள் என்ற பெயரில் ஆரியமும் திராவிடமும் அரசியல் செய்ய முடியாது.
 ***
No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...