Sunday, September 27, 2015

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 3

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 3

26. சம்பவ இடத்திலிருந்து ..சா.-32 வட்ட ஆய்வாளர் அனுப்பியிருந்த தந்தியைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் ஒரு தந்தியில் (.சா.-29) ஒரு தவறு உள்ளது. இது மேலத்தூவலில் உள்ளவர்கள் தாக்கினார்கள் என்று கூறுகிறது. ஆனால் இந்த எதிரிகள் அனைவருமே கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இதில் மேலத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. .சா.-29 சம்பவமானது இரவு 9.30 மணி முடிந்த உடனே நடைபெற்றதாகக் கூறுகிறது. இது மிகச் சரியானது அல்ல. முதல் எதிரி தரப்பு கற்றறிந்த வழக்குரைஞராம் திரு. வி. ராஜகோபாலாச்சாரி அவர்கள், தனது ஆணித்தரமான வாதுரையில் .சா..-29- வெறும் கதையளப்பு என்றும், அரசு தரப்பு வழக்கானது, முதுகுளத்தூர் காவல் துறையினரின் கூட்டு முயற்சியினால் பின்னர் ஏற்பட்ட ஒன்று என்றும் உரைத்துள்ளார். இதனை கவனமாக பரிசீலனை செய்தேன். ஆனால் இதோடு இணைந்து செல்லவில்லை. .சா..-29 என்பது, .சா.-32 அலுவலரால் மேலும் தேவையற்ற விரும்பத் தகாத பின் விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, வாய்மொழித் தகவலின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தந்திகளில் ஒன்று. ..சா.-30 சார்பு ஆய்வாளரின் சாட்சியமாம். அவர் இரவு 10.55 மணி வாக்கில் வந்து சேர்ந்தார் என்பதையோ அல்லது ..சா.-32 வட்ட ஆய்வாளர், ..சா.-30 வந்து சேர்வதற்கு முன்பே தந்திகளை அனுப்பினார் என்றும் பொருண்மையினை அசைக்க் கூடிய வாய்ப்பு இல்லாத ஒன்றாகும்.

27. இவை அனைத்தும் நீங்கலாக, புலனாய்வின் தொடக்க நிலையிலேயே, புனைந்து கூறப்படுவது என்பது ஏதும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்ட முடியும். இத்தகைய செயல்பாட்டிற்கு ஏன் இம்மாதிரியான சந்தர்ப்பம் அமைந்திருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்வதென்பது கடினமான ஒன்றுதான். இறந்துபட்ட இம்மானுவேல் நன்கு அறிந்து கொள்ளப்பட்ட அரிஜனத் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. மற்றும் காவல் துறை அதிகாரிகள், இந்தக் குற்றச் செயல் என்பது மிகவும் கடுமையான ஒன்றென்பதைக் கட்டாயமாக உணர்ந்திருப்பார்கள். இயற்கையாகவே இது மேற்கொண்டு பின் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதென்பதில் அவர்கள் மிகுந்த கவலை கொண்டிருந்தனர். அல்லது வகுப்புவாதக் கலவரங்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று அச்சம் கொண்டிருந்தனர். முன்னரே கூறியது போல, உண்மையிலேயே இத்தகைய தொல்லைகள் கீழத்தூவல் மற்றும் கீரந்தை ஆகிய இடங்களில், சில நாட்களில் எழத்தான் செய்தன. ஆனால் எதிரி முத்துராமலிங்கத் தேவர், இந்தக் காலகட்டத்தில் இதில் எந்தத் தொடர்பும் இல்லாதவராகவே இருந்தார்எதிரி-2 மற்றும் எதிரி-3 இவர்கள் மீது மட்டுமே உடனே சாட்டுரைக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட மறைவற்ற செயல்கள் புரிந்தவர்கள் முக்கியமானவர்கள், இவர்களையும் அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் பெரும்புள்ளிகளை திருப்திப் படுத்துவதற்காகவும், காவல் துறையினர் இவ்வழக்கில் தொடர்புபடுத்தினர் என்பது வாதுரையல்ல.

பரமக்குடி சார்பு நடுவர் (..சா.-26) ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் சாட்சியத்திலிருந்து தெளிவாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும் புலப்படுவது யாதெனில், அவர் அன்று இரவிலேயே .சா..1- பெற்றுள்ளார் என்றும், அதனை அவர் அடுத்த நாள் காலையில் (12.09.57) அல்லது 6.30 மணிக்கு முதன்முதலாகப் பார்த்திருக்கிறார். அவர் சத்தியமாகக் கூறுவதாவது, இறப்பு விசாரணை அறிக்கையினை (.சா..-26) வாக்குமூலங்களுடன் காலை 10.30 மணியளவில் 12.09.1957-ம் நாளில் பெற்றதாகக் கூறுகிறார். வட்ட ஆய்வாளர் (..சா.-32) ஒரு குறிப்பாணையினை (.சா..-26-) அனுப்பி வழக்கின் உணர்ச்சிப்பூர்வமான தன்மையைக் கருதி, இறப்பு விசாரணை வாக்குமூலங்களை மந்தமாக வைத்திடுமாறு தெரிவித்துள்ளார். இதன் காரணத்திற்காக ..சா.-26, வழக்கமான முறையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்திட அனுப்பவில்லை. ஆனால் நாள் முத்திரை மற்றும் நாளிட்ட சுருக்கொப்பம் அனைத்து ஆவணங்களிலும் காணப்படுகின்றன. ..சா.-1 கிடைக்கப்பெற்ற நேரத்தைக் குறித்திடவில்லை. இது குறித்த விதிமுறைகள் எதுவும் இப்போது அமலில் இல்லை. இதுபற்றி நான் தற்செயலாக கூற விரும்புவது யாதெனில், பழங்காலத்தில் நீதிமன்றம் என்று தனியாகப் பிரிக்கப்படாத காலத்திற்கு முன்பு, அனுபவம் உடைய சார்பு குற்றவியல் நீதிபதி, மு...-யை பெற்றதும், அதில் தனக்குக் கிடைக்கப்பெற்ற நேரத்தைத் தவறாமல் குறித்திடுவார். குறிப்பாக கடுமையான குற்ற நிகழ்வுகளில்- ஏனெனில், இந்த ஆவணமானது காலந்தாழ்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்ற குறை அடிக்கடி கூறப்பட்டது. உண்மையாகவே, எதிரி-1-ன் கற்றறிந்த வழக்குரைஞராம் திரு. வி. ராஜகோபாலச்சாரி என்பார், இவ்விஷயம் குறித்து, விரிவான முறையில், கீழ்வரும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பற்றிக் கூறுகிறார். (1) மு... பதிவேடு (எண் 14-) பி..சா..24, (2) காகிதப் பதிவேடுகள் (சி.ஆர்.என்.55) (.சா.-25)-ல் காணப்படும் உடனடியான தெளிவான பதிவுகளைக் குறித்து கற்றறிந்த திரு. வி. ராஜகோபாலச்சாரியார், பி.சா..24-ல் காணப்படும் தேதி மாற்றம் தற்செயலாக எழுத்தரால் நடைபெற்ற ஒன்றுதான் எனவும், அதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். நிலையத்தில் உள்ள குற்ற அட்டவணைப் பதிவேடு (.சா..30) உள்ளார்ந்த புனைந்த சாட்சியங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் எதிரிகள் சிலரின் தகப்பனார் பெயர்கள் மற்றும் கிராமங்கள் முதலானவை வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு மைகளால் எழுதப்பட்டுள்ளன. இந்தக் குற்றச் சாட்டு ஆதாரமில்லாத்தது. இந்தப் பதிவேடு பின்னர் தயாரிக்கப்பட்டது, ஏறத்தாழப் புள்ளி விவரப் பதிவுருவினைப் போன்று. எனவே அதேபோன்ற மாற்றங்கள், மேலாக எழுதுதல், இடைச் சொருகல்கள், பல பக்கங்களில் காண்கிறேன். ..சா.-30 வலியுறுத்திக் கூறுவதுபோல ஒரு குற்றச் செயலின் உண்மையான, தகுந்த மற்றும் அசலான பதிவுருக்கள் என்பவை கொலை வழக்குகளில் பொது நாளேடுப் பதிவுகள், முதல் தகவல் அறிக்கை மற்றும் இறப்பு விசாரணை அறிக்கை ஆகும். இந்த வழக்கில் அவை மெய்யானவையாகவே காணப்படுகின்றன. சாட்டுரைக்கப்பட்டதுபோல புனைந்தமைக்கப் பெற்றவையாகக் கருதுவதென்பது கடினமான ஒன்றாகவே உள்ளது.

28. பிண ஆய்வு, மருத்துவர் கௌஸ் (..சா.-29) என்பவரால் காலை 9.30 மணி முதல் 12.09.1957-ல் நடத்தப்பட்டுள்ளது. (.சா..27, பிண ஆய்வுச் சான்றிதழ்). இதில் கூறப்பட்ட பொருண்மைகள், கண்ணுற்ற சாட்சியின் சாட்சியத்தை முற்றிலும் மாறாமல் அமைந்திருக்கிறது. வெளிக்காயங்களில், 11 வெட்டுக் காயங்கள், மீதி உள்ளவை கிழந்தி காயங்கள் மழுங்கிய ஆயுதங்களால் ஏற்பட்டவை. இந்தக் காயங்கள் (எண் 12 முதல் 17 வரை) கைகளிலும் விரல்களிலும் காணப்படுகின்றன. இது தாக்கப்பட்டவர் தமது கைகளை மேலே உயர்த்தியதால் அவற்றில் விழுந்திருக்கின்றன என்பதைத் தெளிவாகக் தெரிவிக்கிறது. இவை கம்புகளால் தாக்கப்பட்டபோதோ அல்லது வேல் கம்புகளின் மழுங்கிய பகுதிகள் பட்டு ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். இது அடிகள், கம்புகள் அல்லது வேல் கம்புகளின் கம்பிப் பகுதியால் ஏற்பட்டவை என்று உறுதியான சாட்சியம் கூற இயலாத நிலையில் உள்ளவை என்பது உண்மைதான்.
ஆனால், அரிவாளால் முதலில் வெட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து கண்மூடித்தனமாக தாக்குதல் தொடர்ந்திருக்கிறது என்பதே சாட்சியமாகும். வெட்டுக்காயங்கள், அருவாள், வேல்கள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளவைகளில் எண்கள் 1, 2 மற்றும் 5 இவை கொடுங்காயங்கள். எண் 1 கழுத்தின் நடுவில் ஏற்படுத்தப்பட்டு, மூச்சுக் குழல், உணவுக் குழல், கரோடிட் தமனிகள் இவை துண்டிக்கப்பட்டுள்ளன மற்றம் கழுத்தின் மூன்றாவது முன்னெலும்பு தண்டுவடத்துடன் துண்டிக்கப்பட்டுள்ளது. இது மரணத்தை உடனேயே விளைவிக்கக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். காயம் எண் 5 தலையின் மீது உள்ளது. இது மண்டை ஓட்டின் பக்க எலும்பினை முறித்திருந்து மரணத்தை விளைவித்திருக்கக் கூடும். இது உறுதிபடக் கூற இயலாத ஒன்றுதான். இரைப்பையின் உள்ளே இருந்தவை குறித்து மருத்துவரின் சாட்சியத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். (.சா.. 28 மற்றும் பக்கம் 28)

29. இரண்டு சார்பு குற்றவியல் நடுவர்களாகிய பரமக்குடி சார்பு குற்றவியல் நடுவர் (..சா.-26) மற்றும் ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவர் (..சா.-31), இவர்களின் சாட்சியம் இவ்வழக்கில் அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்புகளைக் குறித்து முக்கியமாகக் கூறுகின்றன. ..சா.-26, எதிரி-5 மற்றும் எதிரி-11 ஆகியோரை ..சா.-1, ..சா.-3, ..சா.-4 மற்றும் ..சா.-7 ஆகியோரை அடையாளம் கண்டுள்ளனர் என்று கூறுகிறார். ..சா.-31, எதிரி-4- ..சா.-1, ..சா.-3 மற்றும் ..சா.-4 அடையாளம் கண்டுள்ளனர் என்று கூறுகிறார். அரசு தரப்பும், ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவரால் பிரிவு 164 கு.வி.மு..வின் கீழ் சாட்சிகளால் வழங்கப்பட்ட ஏராளமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டவற்றைக் குறியீடு செய்து நிரூபித்துள்ளது. (.சா..-2, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 17) பரமக்குடி நீதிமன்றத்தின் எழுத்தர் (..சா.-27), இவ்வழக்கின் சான்றுப் பொருள்களை ரசாயனப் பரிசோதகருக்கு அனுப்பப்பட்டதையும், ரசாயனப் பரிசோதகரிடமிருந்து கிடைத்த அறிக்கை மற்றும் குருதியியல் அறிக்கை ஆயின சான்றுப் பொருள்களில் மனித ரத்தம் இருந்து என்பதற்கு சாட்சியம் அளித்துள்ளார். (.சா..-23, 24, 25)  சம்பவம் நடந்துள்ளது குறித்து வழக்கில்லை என்பதால் மேற்கூறப்பட்டவை அதிக முக்கியத்துவம் கொண்டவை அன்று.

30. இவற்றுக்கும் மேலாக, சாட்சியங்களில், துணையாக அமைந்துள்ள ஒன்றிரண்டினை அரசு தரப்பில் தோன்றுவதைக் கவனிக்கலாம். தர்மராஜு செட்டியார் (..சா.-14) முன்னிடும் சாட்சியமானது, எதிரி-4 தனது கடைக்கு 11.9.1957 காலை 10 மணிக்கு வந்து சில நகைகளை அடகு வைத்து ரூ.100/- எழுதிக் கொடுத்துப் பெற்றுள்ளார் என்று கூறியிருக்கிறார் (.சா..-9). இதற்கும் இம்மானுவேல் கொலைக்கும் எந்த தொடர்பும் நிலைநாட்டப் படவில்லை. எனவே, இது குறிப்பிடத்தக்கது அன்று. கருப்பன்(..சா.-23) குற்றச்செயல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு, எதிரிகள் 2, 3, 5, 6, 7, 8, 9, 11 மற்றும் 12 ஆகியோர் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர் என்று சாட்சியம் அளித்துள்ளார். இது, சம்பவத்திற்கு குறைந்தது ஒருநாள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. இந்த சாட்சியம் உண்மையெனில், எந்த அளவு முக்கியத்துவம் உடையது என்று காண்பது கடினமானது. உண்மையாகவே இந்தச் சாட்சி, எதிரிகளில் சிலரைத் தவறாக, நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றத்திலும் அடையாளம் கண்டுள்ளார் (.சா.. -18). இவருக்கு எதிரிகளை நன்கு தெரியும் என்று தோன்றவில்லை.

31. அரசு தரப்பு சாட்சியம் முடிந்ததும், எதிரிகள் தனித்தனியாக, அவர்களுக்கு எதிராகத் தோன்றும் குறிப்பிட்ட சாட்சியம் குறித்து விசாரணை செய்யப்பட்டனர். எதிரி 1, ஒப்படைப்பு செய்விக்கப்பட்ட நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குமூலத்தைப் போலவே, விரிவான விளக்கமாவாக்குமூலத்தினை முன்னிட்டார். இந்த வாக்குமூலத்தினுள் நான் விரிவாக நுழையப் போவதில்லை. ஏனெனில் எதிரி-1-ன் மறுப்புரையினைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது அதன் சுருக்கம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அவர்தன் அரசியல் முன்நிகழ்வுகள் மற்றும் சென்னையில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு, அவர்தம் தீவிர எதிர்ப்பு இவற்றின் காரணமாக இந்த வழக்கு அரசியல் பகைமையின் காரணமாக அவர்க்கெதிராகப் புனையப்பட்டதொன்று என்பதாகும். இதில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எதிரி-1, தனக்கும் முந்தைய காவல் துறைத் தலைவர், தான் 1937-ல் துணைக் கண்காணிப்பாளராக சிவகங்கையில் பணியாற்றியபோது ஏற்பட்ட பகைமை நிகழ்வினைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.   இது கவனிக்கத்தக்கது, ஏனெனில் குறுக்கு விசாரணையின்போது, தொடர்ந்து குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில், இந்தக் குற்றச் செயல் நடைபெற்ற ஒரு சில நாட்களில் காவல்த் துறைத் தலைவர், முதலமைச்சர் திரு. காமராஜ் அவர்களை மதுரையில் சந்தித்துப் பேசியபோது, எதிரி - 1 குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றி விவாத்திருக்க வேண்டும் என்பதாகும்.

ராமநாதபுரத்தில் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்கள் குறித்து அலுவலர், முதலமைச்சரை மதுரையில் சந்தித்துள்ளார் என்பது வெளிப்படையகத் தெரிந்த ஒன்று என்பதை இந்தச் சாட்சியம் காட்டுகிறது. இத்தகைய சந்திப்பு, எதிரி-1-ஐ இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்கான ஒன்று என்பதை ஆதாரம் ஏதும் இல்லை. எதிரி-1 தனக்கு இந்தச் சம்பவத்தில் எந்தவொரு பங்கும் இல்லை எனக் கூறியுள்ளதோடு, தான் இதனை தூண்டிவிட்டதாகக் கூறப்படும் சாட்டுரையையும் மறுத்துள்ளார் என்பதோடு இம்மானுவேலின் மரணத்தினை ஏற்படுத்துவதில் தனக்கு எந்தவொரு குற்ற நோக்கமும் இல்லை என்பதையும் மற்றும் மரணமடைந்தவர்க்கு எதிராக மாநாட்டில் நடந்தவற்றுக்கு தனக்கு எந்தவிதமான மனக்குறையும் இல்லை என்பதையும் உறுதிபடக் கூறியுள்ளார். மற்றைய எதிரிகள் அனைவரும் தம்முடைய பங்கு பணி இதில் ஏதுமில்லை என்றும், தம்மை கீழக்கன்னிசேரி மக்கள், தூவல் தேவர்களுக்கு இடையே நிலவும் பகைமையினை அடிப்படையாக வைத்து அல்லது முதுகுளத்தூர் காவல் துறை அலுவலர்கள் தம்மீது கொண்டுள்ள மனவெறுப்பை வைத்து, தம்மை இவ்வழக்கில் சிக்க வைத்துள்ளதாகக் கூறினார்கள். இந்த எதிரிகள் இறுதியாகக் கைது செய்யப் படுவதற்கு முன்பு, அனைவருமே தலைமறைவாகிவிட்டனர் என்பது சாட்சியத்திலிருந்து தெரிகிறது. காவல் துறை வட்ட ஆய்வாளர் சி..டி. (..சா-33) இந்தப் பொருண்மைகளைப் பற்றிக் கூறுகிறார் மற்றும் அன்னாரின், 17.9.1957 முதல் நவம்பர் 1957 வரையிலான விரிவான புலனாய்வு குறித்தும் பேசுகிறார். எதிரிகளில் பலர் தலைமறைவாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது குறித்த விஷயத்திற்குக் காரணம், மேலத்தூவல், கீரந்தை ஆகிய இடங்களில் காவலர்கள் மறவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்களை அவ்விடங்களில் நிலையாகத் தங்கும்படி செய்ததும், இவற்றின் காரணமாக எதிரிகளும் ஏனையோரும் பாதுகாப்பிற்காக மறைவிடங்களுக்குத் தப்பிச் சென்றதுமே ஆகும். இந்த வழக்கின் காரணமாக இது நடைபெறவில்லை. வெகு காலத்திற்குப் பிறகுதான் எதிரிகள் வெளியில் வரத் தொடங்கினார்கள்.

32. எதிர் தரப்பில், எதிரிகள் 4 சாட்சியங்களை விசாரணை செய்துள்ளனர்.

33. எதிர் தரப்புச் சாட்சிகளில் திரு. ராமசாமி செட்டியார், எம்.எல்.. (..சா.-1) மற்றும் திரு. சுப்பிரமணிய ராஜா எம்.எல்.. (..சா.-2) ஆகியோர் முதுகுளத்தூரில் 10.9.1957-ல் நடந்த அமைதி மாநாட்டிற்கு வருகை தந்தவர்கள் ஆவர். மாநாடு முடிந்தும் ஆத்மநாத பிள்ளையின் வீட்டில் நடைபெறவுள்ள மதிய உணவு விருந்திற்கு எதிரி-1 உடன் வேறு சிலரும், இவர்களும்  அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒரு கூட்டமாகச் சென்று, மதிய உணவுக்குப் பின், தங்கள் ஊர்களுக்குச் சென்றனர். இவ்விரு சாட்சிகளும் கூறியது யாதெனில், இவர்களைத் தொடர்ந்து தேவர்களோ, பிறரோ கூட்டமாக அந்தச் சந்தில் உள்ள ஆத்மநாத பிள்ளையின் வீட்டின் முன்னர் வரவில்லை என்றும், அங்கு எதிரி-1 முத்துராமலிங்கத் தேவர் வீட்டின் திண்ணையில் ஏறி அவர்தம் தொண்டர்களுக்கு, தூண்டிவிடும் சொற்கள் எதையும் பேசவில்லை என்பதாகும். வேறு சொற்களில் கூறினால் இது எதிர்மறை சாட்சியம். தெளிவாகத் தெரிவது யாதெனில், இந்த நிலையில் இதற்கு விலை மதிப்பு எப்போது இருக்குமென்றால், ராமநாதன் (..சா.-18), பெருமாள் நாயுடு  (..சா.-19) மற்றும் பெருமாள் பீட்டர்  (..சா.-20) இவர்களின் சாட்சியத்தின் உண்மைத் தன்மையினை விலக்கி வைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே இருக்கும் மேற்படியார்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள், இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு வேண்டுமென்றோ பொய் சாட்சியம் அளிக்கின்றனர் என்று நான் ஐயம் கொள்ள மாட்டேன். ஆனால், நான் பின்னர் காட்டப்போவது போல், இவர்கள் நிகழ்ச்சிதனை நேரில் கண்ணுறாதிருப்பதற்கும், ஆத்மநாத பிள்ளையின் வீட்டினுள் நுழைந்த பின்னர் இது நடந்திருப்பதற்கோ மற்றும் எதிரி-1 வீட்டிற்கு உள்ளே சென்று அவர்களுடன் மதிய உணவு உட்கொள்வதற்கு முன்னரே நடந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதியும் உள்ளது.

34. மறுநாள் காலையில், பசும்பொன்னில் எதிரி-1 வீட்டின் முன், எதிரி-2 மற்றும் சிலர், எதிரி-1-ன் முன்னர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறித்து தனராஜ் நாடார்  (..சா.-24) மற்றும் மூக்க நாடார்  (..சா.-25) அளித்திட்ட சாட்சியத்தின் நிகழக்கூடிய தன்மையினைக் குறைப்பதற்குத்தான், ஜெயராமராஜுவின்  (..சா.-3) சாட்சியம் தேவை உடையதாகவோ முக்கியத்துவம் பெற்றதாகவோ அமைந்திருக்கிறது. ..சா.-3 ஒரு நில அளவையர், அவர் வரை படத்தின் அளவுகளை சரியானவை என்று நிரூபிப்பவர் (.சா.-33) விளக்கமான அளவுகளின் அடிப்படையில் வரைபடம், ..சா.-24 மற்றும் 25 ஆகியோரின் சாட்சியத்தைத் தவறு என்று நிரூபிக்கவோ அல்லது அவர் சென்ற வழித்தடம் நம்பக் கூடிய நிலையில் இல்லை எனக் காட்டவோ ஏற்பட்டதல்ல. அவர்கள் கூற வந்த கருத்து யாதெனில், அந்தக் குறிப்பிடப்பட்ட வாயிற்கதவிலிருந்து  ..சா.-24 மற்றும் 25 ஆகியோர் கிழக்குப் பக்கம் உள்ள திண்ணையில் எதிரி-1 உட்கார்ந்திருந்தைக் கண்ணுற்றிருக்க இயலாது மற்றும் எ.சா..- 38 இதனை நிலைநாட்டிடவும் இல்லை என்பதாகும். ஆனால் நான் முற்றிலும் சரி என்று ஒத்துக் கொள்ள இருப்பது என்னவெனில், பதிவுருக்களில் காணப்படுவது போன்று  அ..சா.-24 மற்றும் 25 ஆகியோர்தம் சாட்சியம் எல்லா விவரங்களிலும் சரியாக இருப்பினும், இதன் பயன் மிகக் குறைவே. மிகவும் தற்செயலாக நிகழக்கூடிய இத்தகைய சூழ்நிலையை வைத்துக் கொண்டு அரசு தரப்பு, இவ்வழக்கினில் தீய ஒரு யோசனை உண்டாக்கும் கருத்தினைப் புகுத்திட இயலாது. இவ்வாறு ஏற்படுவதாக இருந்தால் கூட, அது ஒரே சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வுக்கு மேலாக இருந்திட முடியாது. எதிரி-2, எதிரி-1-ன் முன்னால் மறுநாள் காலையில் வேறு பிற தேவர்களுடன் இருந்திட்ட நிகழ்வு என்பதாகும்.

35. சாமிப் பாண்டியத் தேவர்  (..சா.-4) வெங்கட்டான் குறிச்சியில் வசிப்பவர். எதிரி-4-ஐ பொறுத்தவரை (alibi) - குற்றச் செயல் நடந்தபொழுது தான் மற்றோர் இடத்தில் இருந்தாக் கொள்ளப்படும் வாதம் (அலிபி) - அவர் இக்குற்றமுறு செயல்கள நடந்தபொழுது வேறொரு இடத்தில் இருந்தார் என்று நிரூபிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இம்முயற்சி குறிப்பிடத்தக்க வகையில் தோற்றுப் போய்விட்டது. .சா.-4-ன் சாட்சியத்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இவர் கையூட்டுப் பெற்றுக் கொண்டு சாட்சியம் அளிக்கும் அல்லது அறிந்தே பொய் சொல்லும் சாட்சியாக எனக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே இவரது சாட்சியம் சான்றுருத்தம் பெற்றதாக - ஒரு வகையில் அ.சா.-14 தர்மராஜு செட்டியாரின் சாட்சியத்தினை உறுதிப்படுத்துவதாக உள்ளது. .சா.-14 கூறியது என்னவெனில் எதிரி-4 தன்னிடம் ரூ.5/- கைமாற்றுக் கடன் பெற்றுக் கொண்டு திருமணத்திற்கு செல்லத் தேவைப்படுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு - வெங்கட்டான் குறிச்சிக்குச் சென்றிருந்தார் என்பதாகும். .த.சா 4-ன் சாட்சியத்தினை நம்புகிறேன். எதிரி-4 திருமணத்தின்போது தனது வீட்டிலேயே இருந்திருக்கிறார் இவர் மதியமும், பிற்பகலிலும், இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இருந்திருக்கிறார். ஆனால் வெங்கட்டான்குறிச்சி என்பது, பரமக்குடியிலிருந்து 3 அல்லது 4 மைல் தொலைவில் உள்ள ஓர் ஊர். ஆகவே, எதிரி-4 இக்குற்றச் செயலில் பங்கு என்னவெனில், அன்னைய இரவு நேரம் முழுவதும் எதிரி -4 என்னுடனேதான் இருந்தார் என்பதாகும். ஆனால் குறுக்கு விசாரணையில், அங்கு வேறு பல விருந்தினர்களும் இருந்தனர் என்றும் இரவில் உணவு பரிமாறும்போது எதிரி -4 அங்கு இருந்ததை தான் பார்த்ததாகவும் கூறுகிறார். எனவேஅலிபியினைப் பொறுத்த சாட்சியம். சம்பவ நேரத்தில் எதிரி-4 சம்பவ இடத்தில் இருந்தார் என்பதை விலக்கிடவில்லை.

36. எனது முந்தைய பகுப்பாய்வினில் அடங்காத, சில அனேகமாக நிகழக்கூடிய சங்கதிகள் மற்றும் ஒருசில கண்ணுற்ற நேரடி சாட்சிகள் குறித்துச் சொல்லப்படும் குறைபாடுகள் குறித்தும், நான் இப்போது குறிப்பிட வேண்டும். பல எதிரிகள் மீதுள்ள வழக்கினைக் கருதிடச் செல்லும்முன், நான் இயன்ற அளவு சுருக்கமாக் கூற உள்ளேன்.

37. சந்தானம் (.சா.-1)-ஐ பொறுத்தமட்டில், கூறப்படும் குறைபாடு அவர் முதுகுளத்தூர் அமைதி மாநாட்டிற்குச் செல்லவில்லை என்பதாகும். இதே குறைபாடுதான், ராமநாதன் (.சா.-18)-ஐப் பற்றியும் கூறப்படுகிறது. இது ஏனெனில், சாட்சியம் காட்டுவதாவது, மாநாட்டிற்குக் காவல் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது என்றும், வளாகத்தின் உள்ளே செல்பவர்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்பதாகும். .சா.-1 மற்றும் அ.சா.-18 அழைப்பாளர்கள் அல்ல என்பதில் மறுப்புக்கு இடமில்லை. .சா.-1 இப்போது சாட்சியம் அளிப்பது போல, அவர் சிறிது முன்னமே உள்ளே சென்றுவிட்டார். இந்த இரண்டு சாட்சிகளும் வராந்தாவில் சும்மா நின்றுகொண்டிருந்தனர். ஆனால் பொருண்மைகளின்படி முடிவுக்கு வருவதென்பது நிகழக் கூடிய ஒன்றல்ல. .சா.-1 காவலர்களிடம் தான் பரமக்குடி சென்றது ஏன் என்பது பற்றி சொல்லவில்லை. ஆனால் நான் முன்பே வலியுறுத்திக் கூறியது போல, அன்னாரின் தம்பி அங்கே இருப்பதால் அவரை பார்ப்பதற்கு சென்றிருக்க முடியும். .சா.-1, அன்றிரவு அங்கு இல்லை என்று எதிர்தரப்பில் வாதிட முடியாது. ஏனென்றால் இறந்துபட்டவரின் மனைவியிடம் (.சா.-6) இவர்தான் இந்தக் குற்றச் செயல் தகவலைக் கூறியவர். பின்பு காவல் நிலையத்திற்குச் சென்று தெரிவித்தவர். நீதிமன்ற பதிவுருக்கள் குறித்த முரண்பாடுகள் (.சா.2 முதல் 5 வரை) அனைத்தும் பயனுடையது அல்ல ஜெயராஜ் (.சா.-2)-ஐப் பொறுத்தவரையில், குறை கூறிடச் சிறிதும் இடமில்லை. இந்தச் சாட்சி அரிஜன வகுப்பினர் மற்றும் இறந்துபட்டவரின் உறவினர் என்பது வெளிப்படையான பொருண்மை, ராஜூ பிள்ளை (.சா.-11)-ன் சாட்சியத்தின் மூலமும் மற்றும், முன்னர் கூறப்பட்ட அறிக்கையின் (.சா.-31) வாயிலாகவும் அ.சா.-2 - அங்கே முன்னிலையாகி இருந்தாரென்பது பெரிதும் நிகழக்கூடிய ஒன்றுதான். அந்த இடத்தின் உண்மையான அமைப்பினைக் குறித்து கூறப்பட்ட குறைபாட்டினை நான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அரசுத் தரப்பு சாட்சிகள் 1, 2  ஆகியோர் முன்னர் உள்ள நிலைகளில், விசாரணைக்கு முன்பு, .சா..-40 வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட பர்லாங் கல்லின் அருகில் இருந்தார் என்று உறுதிபடக் கூறியுள்ளனர். இது அவர் உண்மையாகவே வெட்டப்பட்ட இடத்திலிருந்து 50 அடி அப்பால் உள்ளதுஆனால் சாட்சிகள் தரும் விளக்கம் மேற்படி கல் ஒரு வழிகாட்டும் அடையாளமே என்பதாகும். இந்த விளக்கம் இயற்கைக்கு மாறானதாகவோ அல்லது அப்பாற்பட்டதாகவோ இல்லை. குறுக்கு விசாரணையின்போது தொடர்ந்து கூறப்பட்டது என்னவெனில், சமய குருவின் வீட்டிற்குச் செல்லும் சாலையிலிருந்து செங்குத்தான சாய்வு இருக்கிறதென்றும் எனவே, இறந்துபட்டவர் உண்மையிலேயே அதில் விழுந்திருக்க வேண்டும் எனவேதான், நேரடி சாட்சிகளால் சம்பவத்தை கண்ணுற்றிருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இது மறுக்கப்படுகிறது, புகைப்படங்கள் அ.சா.41, .சா.-42 மற்றும் அ.சா..43, மேற்கூறப்பட்டதை தொடர்ந்து தவறு என நிரூபிக்க போதுமானவை. வலியுறுத்தப்பட்ட மற்றொரு குறிப்பு என்னவெனில், சாட்சிகள், குறிப்பாக, கிருஷ்ணன் (.சா.-3),  மாணிக்கம் (.சா.-4), ஜெயராஜ் (.சா.-2), இவர்கள் வட்ட ஆய்வாளருக்கு (.சா.-32) பிரேத விசாரணை நடைபெறுவதற்கு முன்னர், தாமாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பதாகும். வகுப்புப் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது, குற்றச் செயலின் மிருகத்தனமான தன்மையினை நோக்கும்போது, இது மிகவும் கடுமையான ஒரு செயல், எனினும் இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு சில மணிநேரத்திலே, காவல் துறையினர் நேரடி சாட்சியம் முழுவதையும் சேகரித்து, பதிவு செய்து விட்டனர் என்பது மனநிறைவை அளிப்பதாக உள்ளது. நான், மீண்டும் இங்கு கூற இருப்பதாவது என்னவெனில், இங்கு பலரும் இருந்தனர், மற்றும் தனிப்பட்ட நபர்கள், கொலையைக் கண்ணுற்றவர்கள் இருந்தனர் என்பதை சாட்சியம் காட்டவில்லை. அந்த நேரத்தில் அவ்வழியே ஒரு சில பாதசாரிகள், கடைக்கார்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் சென்றனர் என்பது சாட்சியம். புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது, புலனாய்வின்போது, வேறு நேரடி சாட்சியம் எதுவும் சேகரிக்க முடியவில்லை, ஆகையால் நீதிமன்றத்தின் முன்னர் வைக்கப்படவில்லை என்பதாகும்.
38. கருப்பையா சேர்வை (.சா.-7)-ன் சாட்சியம் அரசு தரப்பிற்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. நான் ஏற்கனவே சொல்லியவடி அவர் அரசு தரப்பில் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டார். அவர் தொடக்கத்தில் இம்மானுவேல் (இறந்தவர்) மீது கொலைத் தாக்குதல் நடந்ததையும் மற்றும் எதிரி-2, எதிரி-4, ஆகியோரது வெளிப்படையான செயல்களைப் பற்றிக் கூறியிருந்தார்.

.சா.-9 கடிதத்தில் இவரே கையொப்பம் இட்டுள்ளார். வேறு சிலரும் கையொப்பம் செய்து திரு. கே.ராமச்சந்திரன் எம்.எல்.. அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினரின் வற்புறுத்தல், வலுக்கட்டாயப்படுத்துதல் போன்றவை குறித்துத் தெளிவற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.சா.-9-க்கு ஏதும் முக்கியத்துவம் நீதிமன்றத்தால் அளிக்கப்பட வேண்டும் என்று எதிரி நினைத்தால், இதை எழுதியவர் யார் என்றும், இது எங்கிருந்து வந்துள்ளது என்பது போன்றவற்றின் மீது மேலும் சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும. இத்தகைய பரபரப்பான ஒரு வழக்கில், குறைந்து ஒரு எதிரியானவர் ஒரு உள்ளுர் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருக்கின்றன நிலையில், அடையாளம் தெரியாத ஒரு நபரிடமிருநது வந்துள்ள இதுபோன்ற தகவலுக்கு மிகக் குறைந்த மதிப்புத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்பது நியாயமான ஒன்றாகும் என்று நான் எண்ணிவிடவில்லை. இதைக் குறித்து நான் எனது கருத்தினை கூறத்தான் வேண்டியுள்ளது. ஏனெனில் இது செல்லச்சாமி (.சா.-8)-ன் விருப்பு வெறுப்பற்ற மற்றும் நம்பிக்கைமிகு சாட்சியத்தை சற்று பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இவர் எ.சா..9-ல் உள்ள கையொப்பம் தன்னுடையதென, முதலில் அடையாளம் கண்டார், ஆனால் பிறகு இது தன்னுடைய கையொப்பம் போல தோன்றுகிறது என்று கூறியுள்ளது, இத்தகைய கடிதம் எதிலும், அதன் பொருளடக்கம் தெரிந்து கொண்டு, தான் கையொப்பம் இட்டதாக, இவர் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தகைய கையொப்பங்கள், தனக்குத் தெரிந்த மனிதர் அல்லது மனிதர்களால், காவல் துறையில் வலுக்கட்டாயப்படுத்துதல் இருக்கிறது என்ற சாட்டுரைதனைத் தெரிவித்திடப் பெற்றிருக்கலாம். எனவே, .சா.9-க்கு முக்கியத்துவம் எதுவும் அளிக்கப்பட வேண்டியது இல்லை என்பது தெளிவாகிறது.
39. இரண்டு விஷயங்கள் விளக்கப்பட இருக்கின்றன. கடலாடியிலிருந்து புறப்படும் கடைசிப் பேருந்து இரவு 9.30 மணிக்கு, பரமக்குடிக்கு வந்து சேரும் என்பது நேரத்தைக் குறிக்கும் அட்டவணையாகும். எனவே இச்சம்பவம் இரவு 9.40 அல்லது 9.45 மணிக்கு முன்னர் நிகழ்ந்திருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது. ஆனால் இச்சம்பவத்தை கண்ணுற்ற நேரடிச் சாட்சிகள், இச்சம்பவம் நடைபெற்ற நேரத்தை இரவு 9.15 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் நடைபெற்றதாக கூறியுள்ளனர். இதற்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறு கூறப்படும் நேரங்களெல்லாம் ஏறத்தாழக் கூறப்படுகின்றன நேரங்களே ஆகும். ரயில்கள் வந்துசேரும் நேரங்கள் கூட சில நேரங்களில் ஏறத்தாழத்தான் காணப்படுகிறது. மற்றும் பேருந்து வந்து சேரும் நேரங்களெல்லாம் கடிகாரத்தை வைத்துக் கொண்டு சரியாக கணக்கிடப்படுவதில்லை. இந்தப் பேருந்தில் எதிரிகள் சிலர் பயணம் செய்து வந்தனர் என்றும் மற்றும் பேருந்து நிலையத்தில் ஏனைய எதிரிகளைச் சந்தித்தனர் மற்றும் இவர்கள் அனைவருமே ஒரு கும்பலாக் குற்றச் செயலைச் செய்திடச் சென்றனர் என்ற சூழ்நிலை, இயற்கைக்கு மாறாக உள்ளதென்பது வாதமாகும். இக்குற்றச் செயல் திட்டமிட்டுச் செய்யப்பட்டு அங்கு உண்மையிலேயே இருந்தவர்களுக்கு மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில், ஆயுதங்களைச் சற்று மறைத்து வைத்திடாமல் ரகசியமாகச் செய்யப்படாத ஒன்றென்பதில் சந்தேகம் ஏதும் இருந்திட முடியாது.


இரவில் வெகு நேரமாகிவிட்ட காரணத்தால், அந்தப் பேருந்திலிருந்து இறங்கியவர்கள், இந்த எதிரிகள் மேற்கு நோக்கி விரைந்து சென்றிட்ட நேரத்திற்கு முன்பே, அவ்விடத்தினின்றும் கலைந்து சென்றிருக்க கூடும். இறந்துபட்ட இம்மானுவேலின் நடமாட்டங்கள் குறித்து இந்த எதிரிகள் எவ்வாறு தெரிநதுகொண்டனர் என்பது எமக்குத் தெரியவில்லை. ஆனால் எதிரி-4, எதிரி-5, ஆயுதங்களை மறைத்து வைத்துக்கொண்டு, இவர்கள் பேருந்தில் பயணம் செய்திட்ட எதிரிகளில் இருக்கவில்லை மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருந்தவர்ளுடனும் இல்லை எதிரி-4, எதிரி-5 ஆகியோர் தாக்குதல் நடத்திய ஏனையோர்களுடன், தாக்குதல் நடைபெறுதற்குச் சற்று முன்புதான் சேர்ந்திருக்க வேண்டும். இவர்கள், கொலையுண்டவரின் நடமாட்டத்தினை வேவு பார்த்திருப்பதற்கும் பெரிதும் வாய்ப்பு உள்ளது.
40. இவ்வழக்கில் கீழ்வரும் மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் கூறப்படும் குறைபாடுகளாம் (1) நேரடியாக கண்ணுற்ற சாட்சியம் விருப்புறு மற்றும் அநேகமாக நிகழமுடியாத சாட்சியம் (2) அதே போன்று கண்ணுற்ற சாட்சிகள் சம்பவ இடத்தில் இருந்ததை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் அல்லது குற்றச் செயல் நிகழும் முன்னரும் பின்னரும் பலியானவர் நடமாட்டம் குறித்துக் கூறப்பட்ட சூழ்நிலைச் சான்று மற்றும் (3) புலனாய்வின் தொடக்கத்தில் உள்ள பதிவுருக்களில் வேண்டுமென்றே புனைவு செய்யப்பட்டது, இவை குறித்து அரசுத் தரப்பிற்கெதிராக் கூறப்படுகின்ற குறைபாடுகள் பற்றி, கவனமாகப் பரிசீலனை செய்த பின்னர், நான் எடுக்க வேண்டிய முடிவானது யாதெனில், இவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதாகும். நான் மேலும் எடுக்க வேண்டிய முடிவு என்னவெனில், சாட்சிகளுக்கு இதில் அக்கறை கொள்வதற்குக் காரணம், இறந்துபட்டவருக்கு அரிசனங்களோடுள்ள தொடர்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது அல்லது அவர் தமக்கு இடையே நிலவும் அக்கறை, இருப்பினும், சம்பவத்தை நேரில் கண்ணுற்ற சாட்சி, என்ன நடந்தென்பதை உண்மையாகக் கூறுகிறார். இந்தச் சம்பவம் நடைபெற்ற உடனேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான புனைந்து கட்டுவதும்  இல்லை மற்றும் காவல் அலுவலர்கள் உடன் தானே புலனாய்வினைத் தொடங்கிவிட்டது குறித்தும் எனக்கு முழு மனநிறைவு உள்ளது.
விளக்கு வெளிச்சம் குறித்து ஒரு வார்த்தை தேவை. வட்ட ஆய்வாளர் .சா.-32 கூறுவது என்னவெனில், அவர் அங்கு சென்றபோது, போதுமான ஒளி அலங்காரம் காணப்பட்டது. எனவே புலனாய்வு செய்யும்போது நேரடி சாட்சியிடம் இதுபற்றி வினவவில்லை என்பதாகும். காவல்துறை வட்ட ஆய்வாளர் சி..டி. (.சா.-33) சரி என ஒப்புக்கொள்வது யாதெனில், அவர் செய்த புலனாய்வு, இரவு 9.30 மணிக்கு, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன என்பதைக் காட்டுகிறது என்பதாகும்.

எனவே, தெரு விளக்குகள் (.சா.-40) வரைபடம், விளக்குகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும், சம்பவ நேரத்தில் இவை எரிந்துகொண்டிருக்க முடியாது என்பதையும் காட்டுகிறது என்று வாதுரைக்கப்பட்டது. ஆனால் .சா-33-ன் சாட்சியம் தெரிவிப்பதாவது, பரமக்குடியில் 100 தெரு விளக்குகளுக்கு மேலும் உள்ளன என்றும், அவற்றை செயல்படச் செய்வதற்கு, வெவ்வேறு இடங்களில் ஒரு சில சுவிட்சுகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன என்பதாகும். எனவே, சம்பவம் நடைபெற்ற போது தெருவிளக்குகள் அணைக்கப்படாத நிலையில், அவை எரிந்துகொண்டிருக்க வேண்டுமென்றும், ஏனெனில் சாட்சியத்தின்படி ஒரேயொரு பணியாளர் மட்டுமே இந்த வேலையைச் செய்வதற்கு இரவு 9.30 மணிக்கு மேல் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதுரை வைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024

---------------------------------------------------------------------------------------------------------------------

No comments: