Sunday, September 27, 2015

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 5

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 5

62. ஏற்கனவே கூறப்பட்டபடி மேற்படி காரணங்களால், எதிரிகள் 5 முதல் 12 வரையில் உள்ளவர்களை சாட்சிகளுக்கு தெளிவாக அடையாளம் தெரியும் என்று தெளிவாகக் கூறிவிட முடியாது மற்றும் அவர்கள் செய்திட்ட குற்றமுறு செயல்கள் குறிப்பிட்டுக் கூற முடியும் என்று சொல்ல முடியாது. விளக்கு வெளிச்சம் போதுமானதாக இருந்திட்ட போதிலும், இத்தகைய மிருகத்தனமான செயலை சற்றுத் தொலைவிலிருந்து நேரில் கண்ணுற்ற சூழ்நிலையில், அடையாளம் கண்டதில் தவறுகள் ஏற்படக் கூடும். எனவே இந்த எதிரிகள், இக்கொலைச் செயலில் ஈடுபட்டனர் என்பது தகுநிலை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாகக் கூற இயலாது என்று கருதுகிறேன்.

63. இதற்கேற்ப, எதிரிகள் 5, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகியோரை அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளிலிருந்து (பிரிவுகள் 302 / 34 ...) குற்ற விடுதலை செய்கிறேன். மற்றும் எதிரி-5 மற்றும் எதிரி-8 முதல் 12 வரையுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் பிணை முறி எதிரி- மற்றும் எதிரி-7க்குரியவை ரத்து செய்யப்படுகின்றன.

64. எதிரி-1, முத்துராமலிங்கத் தேவர் குற்றவிடுதலை செய்யப்பட்டு, இந்த வழக்கினைப் பொறுத்து விடுதலை செய்யப்படுகிறார்.

65. எதிரி-2, எதிரி-3 மற்றும் எதிரி-4 குற்றவாளிகள் என குற்றம் சுமத்தப்படுகின்றனர். இம்மானுவேல் (இறந்துபட்டவர்), மரணம் விளைவிக்கும் காயத்தினால் இறந்துபட்டார், அது அருவாளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்த மரணத்தை ஏற்படுத்தும் காயம், எதிரிகளால் யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும், கற்றறிந்த அரசுதரப்பு வழக்குரைஞர் (திரு. வி.எல்.எத்திராஜ்) வாதிட்டதுபோல், குறிப்பிடப்பட்ட வன்செயல்களால் பயங்கர ஆயுதங்களால் நடத்தப்பட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், குற்றச் செயல் திட்டமிட்டுத் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது, எதிரி-2 மற்றும் எதிரி-3 கூறிய சொற்கள், இவை, இது ஒரு கொலைவெறிச் செயல் என்பதும், இதில் பங்கேற்றவர்களின் பொதுக் கருத்தை முன்னிட்டுச் செய்யவும் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குற்றவாளிகள் குற்றச் சாட்டின் பேரில் தண்டிக்கப்படுகின்றனர். (பிரிவு 302-2/ 341 ...) தண்டனை வழங்குவது குறித்து கவனமாகப் பரிசீலனை செய்தேன். இந்தக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, குற்றம் அவ்வளவு கடினமானது அல்ல எனக் காட்டத்தக்கச் சூழ்நிலை குறித்து யோசித்தலில் குறைந்த தண்டனையை நீதிமன்றம் வழங்க இயலாத நிலையில் உள்ளது. எனவே, அங்குசாமித் தேவர் (எதிரி-2), பேயன் முனியாண்டித் தேவர் (எதிரி-3), தவசித் தேவர் (எதிரி-4) இவர்கள் ஒவ்வொருவரும் இறப்பது வரை கழுத்தில் சுருக்கிட்டு தூக்கிலிடப்பட வேண்டியவர்கள், நீதிமன்றம் உறுதிப்படுத்துவது வரை இந்த எதிரிகள் ஒவ்வொருவரும் விரும்பினால், 7 நாட்கள் கால அவகாசத்திற்குள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.

66. நீதி விசாரணைக்கு ஒத்துழைத்த கற்றிந்த அரசு சிறப்பு வழக்குரைஞர் திரு. வி.எல்.எத்திராஜ், மற்றும் வழக்குரைஞர் திரு. என்.கிருஷ்ணசாமி மற்றும் முதல் எதிரியின் வழக்குரைஞர் திரு. வி.ராஜகோபாலச்சாரியார் மற்றும் பிற கற்றறிந்த வழக்குரைஞருக்கு அவர்தம் ஒத்துழைப்பு நல்கியமைக்குப் பாராட்டுத் தெரிவிக்காதிருந்தால், என் கடமையினின்றி தவறியவனாவேன்.

என்னால் சுருக்கெழுத்தருக்கு கூறப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டு பிழைத்திருத்தம் செய்யப்பட்டு, 1959 ஜனவரி மாதம் 7-ம் நாள் அவையறிய பகரப்பட்டது.

(ஒப்பம் எம். அனந்தநாராயணன்)
முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி

அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியல்:

1. திரு. சந்தானம்
2. திரு. ஜெயராஜ்
3. திரு. கிருஷ்ணன்
4. திரு. மாணிக்கம்
5. திரு. சுந்தர வாத்தியார்
6. திருமதி. அமிர்தம் கிரேஸ்
7. திரு. கருப்பையா சேர்வை
8. திரு. செல்லச்சாமி
9. திரு. காமாட்சி
10. திரு. நாராயணன் நாயர்
11. திரு. ராஜூ பிள்ளை
12. திரு. நடராஜன் செட்டியார்
13. திரு. பழனியா பிள்ளை
14. திரு. தர்மராஜூ செட்டியார்
15. திரு. வேலு குடும்பன்
16. திரு. ரெங்கசாமி அய்யங்கார்
17. திரு. கஜேந்திரன்
18. ராமநாதன்
19. திரு. பெருமாள் நாயுடு
20. திரு. பெருமாள் பீட்டர்
21. திரு. சி.வி.ஆர். பணிக்கர் ஐஏஎஸ்
22. எம்.ஜே.ஹோம்ஸ் ஐஏஎஸ்
23. திரு. கருப்பன்
24. திரு. தனராஜ் நாடார்
25. திரு. மூக்க நாடார்
26. திரு. எஸ்.எம். முகைதீன்
சார்பு குற்றவியல் நடுவர், பரமக்குடி
27. திரு. ராஜபாண்டியன்,
எழுத்தர், சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பரமக்குடி
28. திரு. ராதாகிருஷ்ணன்,
(காவலர்  எண். 1600)
29. திரு. முகமது கவுஸ்
(மருத்துவ அலுவலர், பரமக்குடி)
30. திரு. எம்.துரைராஜ்
(சார்பு ஆய்வாளர், காவல் துறை)
31. திரு. கே.எஸ்.சுப்பிரமணியம்
(சார்பு குற்றவியல் நடுவர்)
32. திரு. ஆர்.கே.நாராயணசாமி
(காவல்துறை ஆய்வாளர்)
33. திரு. தேவதாஸ் மணி

(வட்ட ஆய்வாளர், காவல்துறை, சிபிசிஐடி, சென்னை)
எதிர் தரப்பு:

1. திரு. எம்.டி.ராமசாமி எம்எல்ஏ
2. திரு டி.சுப்பிரமணியராஜா எம்எல்ஏ
3. திரு. ஜெயராமராஜூ
(ஓய்வுபெற்ற நில அளவையாளர்)
4. திரு. சாமிப்பாண்டி தேவர்

தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்:

அரசு தரப்பு- .சா.-1: 11.9.1957: .சா.-1  கொடுத்த புகார் - பரமக்குடி காவல் துறையில் - (மு... குற்ற எண் 209/1957)
பி2       25.10.1957 .சா.-7ன் வாக்குமூலம்:
            164 கு.வி.மு..வின் கீழ், ராமநாதபுரம், சார்பு குற்றவியல் நடுவர் முன்னிலையில்
பி3       மேற்படி .சா.-8 மேற்படி
பி4       28.10.1957 .சா.-9 மேற்படி மேற்படி
பி5       25.11.1957 .சா.-10 மேற்படி
பி6       மேற்படி மேற்படி .சா.-11 மேற்படி
பி7       28.10.1957 மேற்படி .சா.-12
பி8       மேற்படி .சா.-13 மேற்படி
பி9       11.9.1957: எதிரி-4 நகை அடகு வைத்து ரூ. 105/- பெற .சா.-14 பெயருக்கு எழுதிக் கொடுத்த பத்திரம்
பி10     30.11.1957: .சா.-16 ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவர் முன்பு கொடுத்த 164 கு.வி.மு.. வாக்குமூலம்
பி11     மேற்படி மேற்படி .சா.-17 மேற்படி
பி12     மேற்படி மேற்படி .சா.-19 மேற்படி
பி13     10.9.1957: பங்கேற்றவர்கள் அமைதி முறையீட்டினில் கையொப்பம் செய்துள்ளனர்.
பி14     30.10.1957: .சா.-24, 164 கு.வி.மு..வின் கீழ் வாக்குமூலம், ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவர் முன்பு, அளித்தது
பி15     18.8.1947: பதிவு செய்யப்பட்ட ஒத்திப் பத்திரம் .சா.-24-க்கு எழுதிக் கொடுத்தது
பி16     8.10.1942: (பாகப் பிரிவினைப் பத்திரம்) .சா.-24, தனம் என்ற அருணாசல நாடார் பெயருக்கு எழுதிக் கொடுத்தது.
பி17     30.10.1957: .சா.-25, 164 கு.வி.மு..வின் கீழ், ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவர் முன்பு கொடுத்த வாக்குமூலம்
பி18     29.11.1957: தேவகோட்டை மாவட்ட குற்றவியல் நடுவரின் நடவடிக்கை, .சா.-2க்கு அடையாள அணிவகுப்பு நடத்தச் சொல்லி அறிவுரை
பி19     28.11.1957: மாவட்ட குற்றவியல் நடுவருக்கு காவலரின் வேண்டுகோள் கடிதம், இது .சா.-26-ஆல் .சா..18-உடன் பெறப்பட்டுள்ளது
பி20     30.11.1957: .சா.-26 தயாரித்த அடையாள அணிவகுப்பு பற்றிய மதிப்பீடுகள்
பி21     17.9.1957: காவல் துறை ஆய்வாளர், பரமக்குடி, சார்பு குற்றவியல் நடுவருக்கு (.சா.-26) ரத்தம் படிந்த பொருள்களை வேதியியல் பகுப்பாய்வு செய்ய, அனுப்பிய வேண்டுகோள் கடிதம்
பி22     12.9.1957: சொத்துப் பட்டியல் (படிவம்-91) சார்பு குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
பி23     26.9.1957: சார்பு குற்றவியல் நடுவரது அலுவலக கடித நகல், வேதியல் ஆய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டதன் நகல்.
பி24     26.10.1957: பரமக்குடி சார்பு குற்றவியல் நடுவருக்கு, வேதியல் ஆய்வாளர் அனுப்பிய அறிக்கை
பி25     13.11.1957: பரமக்குடி சார்பு குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்ட குருதியியல் அறிக்கை
பி26     11.9.1957 மற்றும் 12.9.1957: பரமக்குடி சார்வு குற்றவியல் நடுவருக்கு இறப்பு விசாரணை அறிக்கை அனுப்பி அத்துடன் உள்ளுறைக் கடிதமும் சேர்த்து அனுப்பியது
பி26  12.9.1957: .சா.26 உடன் அனுப்பிய உள்ளுறைக் கடிதம்
பி27     12.9.1957: .சா.-29 வழங்கிய பிரேதப் பரிசோதனை அறிக்கை
பி28     7.9.1958: விசாரணை நீதிமன்றத்தில் .சா.-29-ன் வாக்குமூலம் (பகுதி-குறியீடு செய்யப்பட்டது)
பி29     11.9.1957: பரமக்குடி பொது நாளேட்டில் செய்யப்பட்ட பதிவுகள்
பி30     மேற்படி காவல் துறை ஆய்வாளர், பரமக்குடி, பிரிவினை மாற்றி, பிரிவு 147, 148, 324 மற்றும் 302 / 149 ... ஆகப் போட்டது
பி31     11.9.1957: மு... கார்பன் நகல், பரமக்குடி வட்ட ஆய்வாளருக்கு அனுப்பியது
பி32     மேற்படி மேற்படி காவல் நிலையக் கோப்பிற்கு வைத்துக் கொண்டது
பி33     6.9.1958: .சா.-30ன் வாக்குமூலம், நீதிமன்றத்தில்
பி34     25.9.1957: .சா.-33, ராமநாதபுரம் சார்பு குற்றவியல் நடுவருக்கு அடையாள அணிவகுப்பு நடத்துவதற்குக் கொடுத்த வேண்டுகோள்
பி35     27.9.1957: .சா.-31 தயாரித்த அடையாள அணிவகுப்புக் குறிப்புகள்
பி36     4.10.1957: எதிரி-4க்கு அடையாள அணிவகுப்பு நடத்த .சா.-33, .சா.-31க்கு கொடுத்த வேண்டுகோள் கடிதம்
பி37     5.10.1957: .சா.-31 தயாரித்த அடையாள அணிவகுப்பு பற்றிய குறிப்புகள்
பி38     11.9.1957: .சா.-32 ராமநாதபுரம் டி.எஸ்.பி.க்கு அனுப்பிய தந்தி
பி38()            மேற்படி மேற்படி கமுதி டி.எஸ்.பி.க்கு அனுப்பிய தந்தி
பி38(பி)           மேற்படி மேற்படி ராமநாதபுரம் டி.எஸ்.பி.க்கு அனுப்பிய தந்தி
பி38(சி)           மேற்படி மதுரை மையச்சரக துணை காவல் துறை தலைவருக்கு அனுப்பியது
பி38(டி)           மேற்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது
பி39     12.9.1957: .சா.-32 தயாரித்த குற்ற நிகழ்வு இடத்தின் வரைபடம்
பி40     12.9.1957: .சா.-33 தயாரித்த குற்ற நிகழ்வு இடத்தின் வரைபடம்
பி40, 41, 42, 43           சம்பவ இடத்தின் புகைப்படங்கள்
பி44     11.9.1957: நீதிமன்றத்தில் எதிரி-1ன் வாக்குமூலம்
பி45     மேற்படி எதிரி-2ன் வாக்குமூலம்
பி46     மேற்படி எதிரி-3ன் வாக்குமூலம்
பி47     மேற்படி எதிரி-4ன் வாக்குமூலம்
பி48     மேற்படி எதிரி-5ன் வாக்குமூலம்
பி49     மேற்படி எதிரி-6ன் வாக்குமூலம்
பி50     மேற்படி எதிரி-7ன் வாக்குமூலம்
பி51     மேற்படி எதிரி-8ன் வாக்குமூலம்
பி52     மேற்படி எதிரி-9ன் வாக்குமூலம்
பி53     மேற்படி எதிரி-10ன் வாக்குமூலம்
பி54     மேற்படி எதிரி-11ன் வாக்குமூலம்
பி55     மேற்படி எதிரி-12ன் வாக்குமூலம்

எதிர் தரப்பு:

.சா.. 1       6.8.1957
            2          6.8.1957                      எதிரி-1ன்
            3          6.8.1957                      வாக்குமூலத்தில்
            4          6.8.1957                      வெளியீடு
            5          6.8.1957                      செய்யப்பட்ட பகுதி
            6          10.3.1958                    மேற்படி
            7          10.3.1958
            8          10.3.1958
            9          3.10.1957        கே.ராமச்சந்திரன் எம்.எல்..க்கு .சா.-7 மற்றும் பிறர் எழுதிய கடிதம்
            10        8.8.1958:         .சா.-8 வாக்குமுலத்தில் குறியீடு செய்யப்பட்ட பகுதி
            11        29.8.1958:       மேற்படி
            11()   .சா.-12 வாக்குமூலத்தில் மேற்படி
            12        23.8.1958: மேற்படி
            12()   23.8.1958: மேற்படி .சா.-15 மேற்படி
            13        23.8.1958: மேற்படி .சா.-16 மேற்படி
            14        23.8.1958: மேற்படி .சா.-17 மேற்படி
            15        24.8.1958: மேற்படி .சா.-18 மேற்படி
            16        24.8.1958: மேற்படி .சா.-18 மேற்படி
            17        24.8.1958: மேற்படி .சா.-19 மேற்படி
            17()   24.8.1958: மேற்படி .சா.-19 மேற்படி
            18        2.9.1958: மேற்படி .சா.-23 மேற்படி
            19        2.9.1958: மேற்படி .சா.-24 மேற்படி
            20        2.9.1958: மேற்படி .சா.-24 மேற்படி
            21        2.9.1958: மேற்படி .சா.-24 மேற்படி
            22        2.9.1958: மேற்படி .சா.-24 மேற்படி
            23        மேற்படி .சா.-23 மேற்படி
            24        1957 மு... ரசீதுப் பதிவேடு (14) பரமக்குடி சார்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் பராமரிக்கப்படுகிறது
            25        1957: சி.ஆர்.என். 55 மேற்படி
            26        11.9.1957 மற்றும் 1957: பிரேத விசாரணை அறிக்கை, சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது
            26()  12.9.1957: மேற்படி
            27        11.9.1957 மற்றும் 1957: பிரேத விசாரணை அறிக்கை கார்பன் நகல், ராமநாதபுரம்  சார்பு கோட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெறப்பட்டு, பரமக்குடி நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
            28        7.9.1958 .சா.-29 வாக்குமூலம்... விசாரணை நீதிமன்றத்தில்
            29        11.9.1957: கொடுத்தது .சா.-32 முதுகுளத்தூர் காவல் ஆய்வாளருக்கு அனுப்பிய தந்தி
            30        1957-57: பரமக்குடி காவல் நிலையத்தின் குற்றப்பதிவேடு
            31        6.9.1958 .சா.-30 வாக்குமூலத்தின் பகுதி
            32        2.19.1957: காவல் நிலையம், காவல் லைன், ஆய்வாளர் வீடு, அஞ்சல் நிலையம் மற்றும் சம்பவ இடம் செல்வதற்குரிய வழி இவற்றைக் காட்டும் வரைபடம்
            33        .சா.-3 தயாரித்த வரைபடம் - எதிரி-1ன் வீடு, பசும்பொன்னின் உள்ளதைக் காட்டுகிறது.

சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டவை - பட்டியல்:

1. இறந்த இம்மானுவேல் அணிந்திருந்த, ரத்தக்கறை தோய்ந்த ஜிப்பா
2. ரத்தக் கறை படிந்த பனியன் (மேற்படி)
3. ரத்தக் கறை கடிந்த வேட்டி (மேற்படி)
4. கைக்கடிகாரம் (மேற்படி)
5. காலணி ஜோடி (மேற்படி)
6. ரத்தம் படிந்த உள்ளாடை
7. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த மண்
8. அருவாளின் மரக் கைப்பிடி
                                                            (ஒப்பம்) எம். அனந்தநாராயணன்
                                                            முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி
குறிப்பு: எதிரி 2 முதல் 4 வரை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்
                                                            உத்தரவு/ ஆணைப்படி
                                                                        (ஒப்பம்)                                              
                                                            தலைமை எழுத்தர்
                                                            (உண்மை நகல்)
--------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: