Tuesday, October 27, 2015

கள்ளர் பள்ளி மாணவர்களின் திறமைசில தினங்களுக்கு முன்பு சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகி மருத்துவர் திரு ஜெபமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பிறமலைக் கள்ளர்களுக்கு அரசு வழங்கிய சீர் பழங்குடியினர் அந்தஸ்தை பெற்றுத் தர தங்களது சங்கம் எடுத்து வரும் முயற்சிகளை பற்றி விளக்கிக் கூறினார்.

மேலும் நலிவடைந்து வரும் கள்ளர் பள்ளிகளை மேம்படுத்த முயன்று வருவதாகவும் சொன்னார். அப்போது நான் எங்கள் ஊரில் உள்ள கள்ளர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மழலையர் வகுப்புகளை தொடங்கி அதில் 20 மாணவர்கள் வரை சேர்த்துள்ளதையும் இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருவதையும் பற்றிச் சொன்னேன்.

உடனே 26-10-2015 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தங்கள் சங்கம் நடத்தும் தேவர் திருவிழாவிற்கு அந்தக் குழந்தைகளை அழைத்து வந்து பேசச் சொன்னார். அதற்கேற்ப நான் எங்கள் பள்ளியைச் சேர்ந்த மழலையர் வகுப்பு ஆசிரியைகள் ராஜேஷ்வரி, ஜெயபாண்டியம்மாள் மற்றும் நான்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம்.

குழந்தைகள் ஆசிரியைகள் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள், தமிழில் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னார்கள். அது அவர்களது பொது அறிவுத் திறனும் காட்டும் வகையில் அமைந்தது. அவர்களின் பதில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையான அறிவுத் திறனைக் காட்டியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் குழந்தைகளைப் பாராட்டினர்.

இந்த விழாவில் கவிஞர், எழுத்தாளர் கே. ஜீவபாரதி, டாக்டர் சுதாசேஷையன், தேவர் களஞ்சியம் வி.எஸ். நவமணி, கவிஞர் சினேகன், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புதுமலர் பிரபாகரன் மற்றும் சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

http://perumalthevan.blogspot.in/2014/01/blog-post_5289.html

http://perumalthevan.blogspot.in/2013/07/blog-post_20.html

Friday, October 23, 2015

யாருக்கு யார் சமம்?நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய கருத்தியலின் வெற்றி என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை பார்த்த முக்குலத்தோர் பலரும் ஆத்திரமடைந்தார்கள். அதற்கு காரணம் நான் போட்டிருந்த படம். அந்த படம் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் வடிவமைக்கப் பட்டிருந்தது. அவர் இடது ஓரத்தில் பாரதிராஜாவின் படத்தையும் அதனருகே தேவர் அமர்ந்திருப்பது போலவும், அவரருகே இம்மானுவேல் சேகரன் அமர்ந்திருப்பதைப் போலவும் படம் போட்டிருந்தார்.

இந்தப் படம் நாயக்கர் ஒருவர் போட்டிருந்த படத்திற்கு எதிர்வினையா போடப்பட்டிருந்தது. அந்த நாயக்கர் கட்டபொம்மன் படத்தையும், மருது சகோதரர்களில் ஒருவர் வளரி வீசுவது  போன்று (இதை ஏன் போட்டார் என்று தெரியவில்லை) வடிவமைக்கப்பட்ட படத்தைப் போட்டு தெலுங்கர்களுக்கு எதிராக பேசினால் மன்னிக்கமாட்டோம் என்று பாரதிராஜாவை எச்சரித்திருந்தார்.

பள்ளர் போட்ட படத்தில் உள்ள வாசகம் பாரதிராஜா என்ற தேவனை தொட்டுப்பார் தமிழன் என்ற பள்ளன் உன் தலையை பந்தாடிடுவான்டா..” தேவர் மற்றும் இம்மானுவேலின் படங்களின் கீழே மான தமிழ்மகன்கள், திராவிட, தெலுங்கர் சூழ்ச்சியில் இருந்து மீளுவோம், தமிழ் சாதியாய் ஒன்றுகூடுவோம்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தப் படத்தை பார்த்ததும் சிலர் என்னை வசை மொழிகளில் ஏசினார்கள். முட்டாள், பள்ளர்களிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்? பள்ளனுக்கு பிறந்தாயா? கூட்டிக் கொடுத்தாயா? என்பதெல்லாம் நாகரீகமான கேள்விகளாக அமைந்தன.

சிலர் நீங்கள் எப்படி தேவருடன் இம்மானுவேலுடன் ஒப்பிடலாம் என்று கேட்டிருந்தார்கள். இத்தனைக்கும் உண்மையில் அது ஒப்பீடு இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

வேறு சிலர் நீங்கள் சொல்லும் விஷயம் சரிதான். ஆனால் அதற்காக இப்படி படங்களை அருகருகே போட்டிருக்க வேண்டாம் என்றார்கள்.

பலரும் எனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்கள். சிலர் தமிழ்த் தேசியம் என்றாலே அது சீமான் பேசுவதுதான் என்றும் அது இந்தியாவுக்கு எதிரானது என்ற கருத்தில் எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இன்னும் பலர் என் மீது உள்ள ஆத்திரத்தை மறைமுகமாக வெளிப்படுத்தனார்கள். பலர் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் நான் தேவர் படத்துடன் இம்மானுவேல் படத்தை போட்டுவிட்டேன் என்பதுதான். அவர்களின் ஆத்திரத்தில் நியாயம் உள்ளது. ஏனெனில் அதுபோன்ற மனநிலைதான் பெரும்பாலான முக்குலத்தோர் மத்தியில் உள்ளது. அதற்கு பலவித காரணங்கள் உள்ளன.

முதலில் நான் அந்தப் படத்தை உருவாக்கவில்லை. இரண்டாவது நான் சொல்ல வந்த கருத்து தமிழ்ச் சாதிகளிடையே ஒரு கருத்தியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது தமிழ்த் தேசிய சிந்தனையால் எழுந்தது என்பதைத்தான் குறிப்பிட்டேன். அந்தப் படத்தில் தேவரின் முகத்தை தவிர உடல் வரையப்பட்ட ஒன்று. அது தேவரின் உடல்மொழியே அல்ல. அது ஏற்கத் தக்க படமே அல்ல. ஆனால் இதை வரைந்தது அல்லது உருவாக்கியது முக்குலத்தோரே. அதேபோல இம்மானுவேலின் படம் வரையப்பட்ட படமே. அதன் உடல்மொழியும் விகாரமான ஒன்றே. இதை உருவாக்கியவர்கள் பள்ளர்களே.

அடுத்ததாக, தேவரையும், இம்மானுவேலையும் ஒப்பிட முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கு காரணம் இம்மானுவேல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்பதும் அவர் புனித லுத்தரன் சபையில் செயலாளராகவும் இருந்தார் என்ற தரவுகளைத் தவிர அவரைப் பற்றி வேறு  எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனால் தேவரைப் பற்றிய ஏராளமான பதிவுகள் இருக்கின்றன.

தேவர் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் உணவருந்தி இருக்கிறார். தாழ்த்தப்பட்டோரை சமமாக நடத்தாதவர்களின் வீட்டில் தங்கவோ உணவருந்தவோ மாட்டேன் என்று சொல்லி மறுத்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் முன்னேற அவர்களுக்கு நிலங்களை பிரித்து அளிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோருக்கு தலைவர்களாக அவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களே வரவேண்டும் என்று பேசி இருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக தாழ்த்தப்பட்டோரை தாக்குபவர்கள் என் நெஞ்சைப் பிளந்து ரத்தத்தை குடித்தவர்களுக்கு சம்மானவர்கள் என்று பேசியிருக்கிறார். அவர்களுக்கு ஜமீன்தார்களிடமிருந்து நிலம் பெற்றுத் தந்ததோடு தனது நிலத்தையும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல, சமாதான கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை இரு தரப்பினரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இம்மானுவேல் தனக்குச் சமமானவர் இல்லை என்று தேவர்  சொல்லவில்லை. எனக்குச் சமமான தலைவர் இல்லை என்றுதான் சொன்னார். அதையும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இல்லை என்ற தொணியில்தான் சொன்னார். அங்கு எந்தவிதமான மோதல் போக்கோ காரசாரமான வாக்குவாதமோ நடைபெறவில்லை.

இம்மானுவேல் கொலை பற்றி அவரது மைத்துனர் ஜி.பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “தேவர் சட்டமன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சம்மாகப் பாவித்து நடத்தியதை நானே நேரில் பாரத்துள்ளேன். மறவர்-பள்ளரிடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கு காரணமாக இருந்தார் என்பது நம்புவதற்கில்லைஎன்று கூறியுள்ளார்.  

ஆனால் இம்மானுவேல் கொலைப் பழியை அப்போதைய காமராஜர் அரசு, தேவர் மீது சுமத்தியது. தேவரை சாதிவெறியர் என்று பிரச்சாரம் செய்தது. அந்தப் பிரச்சாரம் அப்போது எடுபடவில்லை.

ஆனால் அதற்குப் பின் வந்த திராவிடர்களும், தலித்களும், கம்யூனிஸ்ட்களும் இந்தப் பிரச்சாரத்தை மறைமுகமாக முன்னெடுத்தனர். அது இரு தரப்பு மக்களையும் எதிரிகளாக வைத்திருக்க பெரிதும் பயன்பட்டது. அன்று காங்கிரஸ் - ஃபார்வேர்டு பிளாக் மோதலாக இருந்தது இன்று பள்ளர் முக்குலத்தோர் என்ற பகையாக மாறி நிற்கிறது.

அதன் விஷத்தன்மை எந்த அளவுக்கானது என்றால் குருபூஜைக்குச் சென்றவர்கள் வழிதெரியாமல் ஒரு ஊரில் புகுந்துவிட அவர்கள் கல்லால் அடித்துக் கொள்ளப்படவும், காரில் வந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசும் அளவிற்கும் மாறியுள்ளது. இவற்றையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் ஈழப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட தமிழுணர்வு தமிழர்களை சாதிகளைக் கடந்து சிந்திக்கச் செய்தது. தமிழராக நடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தெலுங்கர்கள் ஒருபோதும் இந்த சாதிச் சண்டையை நிறுத்த முயற்சி எடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டனர்.

எனவே ரத்தவெறி பகையாக உள்ள இந்தச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் தெலுங்கர்களின் சதியை புரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தெலுங்கர்களை அப்புறப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்ற நிலையை எட்டியுள்ளனர். அதுபோன்றவர்களின் நடவடிக்கைகளை நாம் வரவேற்க வேண்டும்.

குருபூஜை நேரத்தில் ஏற்படும் மோதல்கள் மற்ற சமுதாயத்தினரை முகம் சுழிக்கவே வைத்துள்ளன. அரசின் கெடுபிடிகள் முக்குலத்தோரை வேதனைக்குள்ளாக்கியுள்ளன. எனவே பள்ளரும் முக்குலத்தோரும் ஒன்றிணைகிறார்களோ இல்லையோ அவர்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அவ்வாறான நிலை எட்டப்பட்டாலே குருபூஜையின்போதான நெருக்கடிகள் குறைந்து விடும். சாதி மோதல் என்ற பெயரில் அந்நியர் அரசாங்கம் நடத்தும் ஒடுக்குமுறைகள் குறையும்.

 காங்கிரஸ் மூட்டிவிட்ட சாதி நெருப்பை விட முற்போக்குவாதிகள் மூட்டிவிட்ட சாதி நெருப்பு பெருந்தீயாக பரவியுள்ளது. பெரும்பாலான பள்ளர்கள் தேவர்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகியுள்ளனர். அதற்கு நேர் எதிர் மூளைச் சலவைக்கு தேவர்கள் ஆளாகியுள்ளனர். எனவே இந்த இரண்டு சாதிகளின் பெயரால் அரசியல் செய்பவர்கள் மாற்று சமுதாயத்தினரை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசித்தான் அரசியல் செய்கிறார்கள்.

வெட்டிக்கொல்லும் வெறி மூளையில் உள்ளவர்களை சமாதானம் பேசுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் வெட்டிக்கொல்லும் வேலையில் மும்முரமாக இருக்கட்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்வுகளால் சம்பாதிக்கும் உறுப்பினரை இழந்து குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நீதிமன்றத்திற்கும், சிறைச் சாலைகளுக்கும் மற்ற குடும்பங்கள் அலைந்து திரிந்து வேதனைகளை அனுபவித்தவர்கள் தங்கள் குடும்பங்கள் சீரழிந்ததைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை. அவர்கள் அமைதியை விரும்பினால் அதை குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை.

காங்கிரஸ் தோற்றுவித்த சாதிவெறி அரசியல் இன்றும் நீருபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்த நெருப்பை தக்க வைப்பதா அணைப்பதா என்ற கேள்வி நம்முன் எழுகிறது. அதை அணைக்க வேண்டும் நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அதை வளர்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு வேறு எந்த வழிகளில் நன்மை செய்வார்கள் என்பதை விளக்க வேண்டும். நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அண்டை வீட்டுக்காரரை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்வார்கள். நமது அண்டை வீட்டுக்காரர்கள் நமக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர்.

அதற்காக அவர்களுடன் கூடிக் குழாவ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மோதிக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்றுதான் சொல்கிறேன்.

படத்தை அருகருகே போட்டுவிட்டதை பெரிய குறையாகச் சொல்கிறார்கள். நிச்சயமாக இம்மானுவேல் அன்றைக்கு தேவருக்கு சமமான தலைவராக இருக்கவில்லை. ஆனால் இன்று முக்குலத்தோருக்கு தேவர் எப்படியோ, அதுபோல பள்ளர்களுக்கு இம்மானுவேல் தலைவராக கருதப்படுகிறார். இம்மானுவேல் தேவருக்கு சமமான தலைவராக இல்லாவிட்டாலும் அவரது மக்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவரை அவர்களின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம்?

எங்களுக்கு எதுவுமே தேவையில்லை நாங்கள் ஒதுங்கியே இருந்துகொள்கிறோம் என்று சொன்னால் அப்படியே இருந்துகொள்ளுங்கள்.

ஆனால் தேவரின் பேச்சுக்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், அவரை நீங்கள் தெய்வமாக மதிப்பது உண்மையாக இருந்தால், அவர் மீதான பழியை துடைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குள்ளது. அவரது குருபூஜையை அனைவரும் விரும்பும் குருபூஜையாக நடத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவை, சிந்தனையை எல்லாருக்கும் வழங்க வேண்டும் என்று கலியுக சித்தரும், முருகப் பெருமானின் அவதாரமுமாக கருதப்படும் தேவரிடமே கேட்டுக் கொள்கிறேன்.


பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...