Thursday, December 10, 2015

தமிழ் ராணுவ வீரரும் புலம்பெயர்ந்த திராவிடர்களும்

தமிழ் ராணுவம் பற்றி - டி.சிவராம் - பாகம் 7

நவீன இந்திய ராணுவத்தின்கருத்து தமிழர்கள் தொடர்பானதல்ல. இந்திய ராணுவத்தின் தன்மையும் கட்டமைப்பும் அது பெரும்பாலும் வட இந்திய ராணுவம் என்ற தோற்றத்தையே கொடுக்கிறது. இந்த தோற்றம், ஆங்கிலேய அரசாங்கத்தின் ராணுவ வரலாறு, ஆங்கிலேய இந்திய ராணுவத்தில் இருந்த வட இந்தியராணுவ சாதியினரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டது என்பதை அவர்களின் தொடர்பு பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் வலுவாக நிரூபித்துள்ளன. தற்கால ஆய்வாளர்களின் விடாப்பிடியான தீர்மானம் மற்றும் இந்தத்தோற்றத்தின்சக்தி டேவிட் வாஷ்ப்ரூக்கின வாதங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்டள்ளது:


“19-ம் நூற்றாண்டில் சர்வதேச விவகாரங்களில் ஆங்கிலேயே இந்திய ராணுவத்தின் செயல்பாடு, ஆங்கிலேய இந்திய உறவுச் சூழல்களில் அதனை மேம்படுத்திக் காட்டுகிறது. மேலும் அது அகன்ற உலக  காட்சியைக் காட்டுகிறது. இந்த ராணுவம் இந்தியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக, காவல் பணிகளுக்காக  கட்டமைக்கப்பட்ட ராணுவம் அல்ல. ஆனால் இது ஆங்கில ஏகாதிபத்தியம், தொழிற்புரட்சியால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தையை உருவாக்குதல், முதலாளித்துவத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் உழைப்பாளர் சக்திகளை அடக்குதல், ‘இருளில் உள்ளநாகரீகங்களை கிறிஸ்தவ ஞான வெளிச்சம் மற்றும் பகுத்தறிவுக்கு கொண்டு வர உலகம் முழுவதும் இயங்கிய வழக்கமான, வழக்கத்திற்கு மாறான ராணுவம் ஆகும். இந்திய ராணுவம் விக்டோரிய விரிவாக்கத்தின் பட்டுக் கையுறைக்குள் இருந்த இரும்பு முட்டியாகும். அதோடு, அந்தக் காலத்தில் இயங்கிய உலக அமைப்பின் மூலமாக  ஆங்கிலேய பேரரசு முதன்மை முகாமையாக இருந்த காரணத்தால், இந்திய ராணுவம் உண்மையில் தொழிற்துறை சார்ந்த முதலாளித்துவத்தை சர்வதேசமயமாக்கும் பெரும் கட்டாயப்படுத்தும் சக்தியாக இருந்தது. எதிர்மறையாக (அல்லது அவ்வாறு இல்லாமல்), 19-ம் நூற்றாண்டில் உலக அளவில் முதலாளித்துவம் வளர வட இந்திய சமூகங்களை ராணுவத்தன்மை கொண்டதாக மாற்றியது, பல வழிகளில் அதன் விவசாய உறவுகளில் இருந்த பிரபுத்துவத்தை நிலைநிறுத்தியது நேரடியாக உதவின”  (வாஷ்ப்ரூக்: 1990).

வாஷ்ப்ரூக்கின் கருத்து பத்தென்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய ராணுவம் எவ்வாறு இருந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் தமிழ் ராணுவ வீரர்களைக் கொண்டுகடற்கரை ராணுவம்என்ற ஒரு ராணுவத்தைக் கட்டமைத்தனர். அந்த ராணுவமே ஆங்கிலேய அரசு இந்தியா முழுவதையும் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்கள் வட  இந்திய ராணுவ சாதிகளைக் கொண்டு இந்தியாவைக் கைப்பற்றவில்லை. ஆனால் அவர்கள் செலவு குறைந்த, விசுவாசமான, ஆற்றல்மிக்க தமிழ் வீரர்களைக் கொண்டு இந்தியாவைக் கைப்பற்றினர். 19-ம் நூற்றாண்டின் பின் பாதி வரை தமிழ்க் கிறிஸ்தவ வீரர்களே துணைக் கண்டத்திலும் மற்ற பகுதிகளிலும் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்கு பயன்பட்டனர்.

மதராஸ்-க்கான ஆங்கிலேய ஆட்சேர்க்கை கையேட்டில்,

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்ற முக்கியமாக இருந்தது கடற்கரை ராணுவமே என்பதை உண்மையாகச் சொல்லலாம்” (. 8) என்று குறிப்பிடப்படுகிறது. சில மத, சாதி வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ் ராணுவ வீரர் ஒரு கையில் வாளையும் மறுகையில் பைபிளையும் ஏந்துபவராக காணப்பட்டார். அதனால் செலவு மிகுந்த வட இந்திய ராணுவ வீரர்களை விட தென்னிந்திய ராணுவ வீரர்கள் ஆங்கிலேயரின் நாடுபிடிக்கும் முயற்சிகளுக்கு ஏற்றவர்களாக தென்பட்டனர். வாஷப்ரூக் சொல்வதற்கு மாறாக, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆசியாவில் ஆங்கிலேயர் விரிவடைந்த துவக்க காலத்தில் வட இந்தியர்களை ராணுவ மயமாக்குவது  மூலமாக அல்லாமல், விசுவாசமான தமிழ் பிரிவினர்களின் மூலமாகவே தனது ராணுவ உழைப்புச் சந்தைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையே அடிப்படையாக கொண்டு அமைந்தது.
இந்த காலகட்டம் முழுவதுமாகவே, கடற்கரை ராணுவம் இருந்த காலம் முழுவதுமாக, அது கடல்கடந்த சேவைகளில் ஈடுபட ஆர்வமுடன்  தயாராக இருந்தது. பல முறை பெங்கால் படைப் பிரிவு தங்கள் மதம் காரணமாக கடல்கடந்த சேவைகளில் ஈடுபட மறுத்துவிட்டது. ஆனால் கடற்கரை ராணுவம் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு பல போர்களில் முன்னிலை வகித்தது. இதில் மனிலா (1762), மாஹே (1779), சிலோன் (1782, 1795), அம்பாய்னா மற்றும் ஸ்பைஸ் தீவுகள் (1796), எகிப்து (1801-02 ), பர்பான் மற்றும் மொரீஷியஸ் (1810) மற்றும் ஜாவா (1811-12).

கடற்கரை ராணுவம் கண்டி அரசருக்கு எதிரான போரில் பங்கேற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பர்மா (1824-26) போரிலும் பங்கேற்றது. 1840-42-ல் சீனாவில் ஆங்கிலேயர் முதன் முதலில் நடத்திய போரிலும் ஈடுபட்டனர். இந்தப் போரில் மதராஸ் இன்ஃபான்டரி சிறப்பாக செயல்பட்டதால், அதற்கு கையெறி குண்டு படைப்பிரிவு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. சீனப் போரில் பங்கேற்ற சர் ஹியூக் கோஎதிரிகளின் முன்பாக அவர்கள் காட்டிய விடாமுயற்சியும் வீரமும் ஆங்கில ஐரோப்பிய ராணுவ வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்ததுஎன்று குறிப்பிடுகிறார். (மதராஸ் பிரிவுகளுக்கான ஆட்சேர்க்கை கையேடு, . 6)

கடற்கரை ராணுவம் மற்றும் தமிழ் ராணுவ வீரர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது, அவர்கள்தான் ஆங்கிலேய முதலாளித்துவ சக்திகளுக்கு (தெற்காசிய தொலைதூரப் பகுதிகள் உட்பட) பல பகுதிகளை கண்டறிய உதவினர். இல்லாவிட்டால் அவர்களால் அந்தப் பகுதிகளை சென்றடைந்திருக்க முடியாது. இது வட இந்திய குழுக்கள் செய்யாத செயலாகும். இந்திய ராணுவத்தின் உதவியால்தான் ஆங்கிலேய முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவியது என்று வாஷ்ப்ரூக் சொல்கிறார். அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு வெளியே வேறு குழுக்களும் தோன்றியிருக்கலாம். “உலக முதலாளித்துவம் இனம் சார்ந்ததாக, பலவீனமானதாக அல்லது வேறு வகையிலானதாக இருந்திருக்கலாம்”.  செலவு குறைந்ததாகவும் தயாராகவும் கிடைத்த தென்னிந்திய ராணுவம் ஆங்கிலேயர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை எளிதில் விரிவுபடுத்த உதவியது. துணைக்கண்டத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியை கட்டமைக்க இரண்டு கட்டங்களில் இந்த ராணுவம் இன்றியமையாததாக இருந்தது.

முதல் கட்டம் 18-ம் நூற்றாண்டின் மையப் பகுதியில் துவங்கியது. பிரஞ்சுக்காரர்களுடன் ஏற்பட்ட போட்டியே ஆங்கிலேயரை இந்திய வீரர்களை ராணுவத்தில் சேர்க்கச் செய்தது. அதற்கு முன்பு வரை உள்ளூர் வீரர்களை படையில் சேர்ப்பது வியாபாரத்திற்கு கெட்டது என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் துணை ராணுவப் படைகளுக்கு சம்பளம் கொடுத்து வேலையிம் அமர்த்திக் கொள்ளும் நிலை இருந்தது. அந்தக் காலத்தில் இந்திய மன்னர்கள் உயர் சாதிப் போர்க்குடிகளை பணியில் அமர்த்த விரும்பினாலும் அது அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களால் அதைச் செய்ய முடிந்தது. 1770 மே 7-ம் தேதியிட்ட அரசாங்க நடவடிக்கைகளின்படி, அப்போதைய சிப்பாய்கள் முகமதியர்கள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களைக் கொண்டதாக இருந்தது. சாதிவாரியான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. மதராஸ் ராணுவத்தில் பிராமணர்கள், ராஜ்புத்கள், மராட்டாக்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தனர்அதிகாரிகள் நல்ல சாதிகளைச் சேர்ந்தவர்களையே ராணுவத்தில் சேர்க்க விரும்பினார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் (18-ம் நூற்றாண்டு) அது சாத்தியமில்லாததாக இருந்தது.”

மீண்டும் 1795-ல், “சிப்பாய்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்டாலும் அரிசியின் விலை அதிகமாக இருந்த காரணத்தால், சிறந்த படைவீரர்களை ராணுவத்திற்கு சேர்க்க முடியவில்லை. எனவே படைகளின் எண்ணிக்கையை தக்க வைக்க தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த உடல் அளவில் குறைந்த ஆண்களும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது (பைதியன் ஆதம்ஸ்: 1943). இருந்தாலும் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் மற்றும் க்ளைவ், செலவு குறைந்த தாழ்ந்த சாதி சிப்பாய்களை படைப்பிரிவில் சேர்த்தனர். அதன் காரணமாக அவர்கள் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுடன் ஏற்பட்ட போட்டியில் தங்களை முக்கிய வர்த்தக குழுவாக மாற்றிக் கொண்டனர். 1746-ம் ஆண்டு வடக்கு தமிழகத்தில் துவங்கிய ஆட்சேர்ப்பிலிருந்து அது எழுபத்தைந்து ஆண்டு காலத்தில் நடைபெற்ற அனைத்து முக்கிய போர்களிலும் வென்றது.


கிழக்கிந்தியக் கம்பெனி 1752-ம் ஆண்டு மெட்ராஸில் தனது முதல் ராணுவத்துறையை நிறுவியது. ஆங்கிலேயர்களின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த்து குறைந்த செலவுள்ள, அதே நேரத்தில் கடினமான ராணுவமே ஆகும். அந்த நேரத்தில் நவீன மற்றும் பெரும்படையைக் கெண்ட இந்திய அரசுகள் அவர்களுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்தன. அவர்களின் சம்பள பாக்கியே அடிக்கடி கலகங்கள் ஏற்பட காரணமாக அமைந்தன. ஆங்கிலேயர்கள் சம்பளத்திற்காக கலகத்தில் ஈடுபடாத விசுவாசமான ராணுவத்தைக் கொண்டு போர்களை நடத்தினர். “ஹைதருடன் நடத்திய போரின்போது அவர்களின் தன்மை முழுவதுமாக தெரியவந்தது. பதினாறு மாதச் சம்பளம் பாக்கியாக இருந்தது. நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. எதிரி நமது நாட்டு வீரர்களுக்கு பரிசுப் பொருட்களைத் தரக் காத்திருந்தான். ஆனால் அது எல்லாமே வீணாக முடிந்த்து. இத்தகைய சூழலிலும் அவர்கள் கடுமையாக போர் புரிந்தனர். அவர்கள் போரிடுவதைப் பார்த்த யாரும் அவர்களை பாராட்டத் தயங்கவில்லை. “ஓர்மியின் ராணுவக் குறிப்புகளை படித்த பிறகு, நேரத்திற்கேற்ப போரிடும் வீரர்களை கொண்டிருந்தால், ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றியிருப்பேன்என்று புருஷ்யாவின் மாவீரரான ஃபிரடெரிக் சொல்லி இருக்கிறார்என்று மதராஸ் பிரிவுக்கான சேர்க்கை பதிவேடுகளின் ஆட்சேர்க்கை கையேடு  குறிப்பிடுகிறது.(9)

வட இந்தியாவில் இந்திய கிளர்ச்சி ஏற்பட்ட காலமே ஆங்கிலேயர்களை ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவும் எதிகால சக்தியாக தீர்மானித்த  முக்கிய இரண்டாம் காலகட்டமாகும். அந்த கிளர்ச்சியை தாக்குப் பிடிக்க மீண்டும் உதவியது விசுவாசமான கடற்கரை ராணுவமே ஆகும். அந்தக் கிளர்ச்சியே ஆங்கிலேயர்களை தங்கள் இந்திய ராணுவத்தை மறுஒழுங்குபடுத்தச் செய்தது என்று வாஷ்புரூக் தனது ஆய்வில் முடிவுக்கு வருகிறார்.

“ 1857-58-ல் பெங்காலில் சிப்பாய்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போது கடற்கரை ராணுவம் தனது விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டியது. 1859-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட ஒரு கடித்தில், இந்திய அரசாங்கத்திற்கான செயலாளர், “வட இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது மதராஸ் ராணுவம் ஆற்றிய  பணி பற்றி படைத்தலைவர் அனுப்பிய குறிப்புகள் மேலோட்டமான குறிப்புகள் மட்டுமே. மாபெரும் உண்மை என்னவென்றால் இந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் 23 மில்லியன் பேர் மற்றும் அந்த ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் முழு விசுவாசம் ஆகும். தென்னிந்தியாவில் கிடைத்த ஆதரவே வட இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்க உதவியதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லெப்டினென்ட் ஜெனரல் சர் பேட்ரிக் கிராண்ட், “இந்தப் பிராந்தியத்தில் ஒடுக்குமுறை அல்லது கிளர்ச்சி மற்றும் கலகத்தை அடக்க பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிப்பாய்களின் சேவை தற்போது வரலாறாகி விட்டது. வர்களின் சேவை என்றும் ஒளிவீசி இந்த கௌரவமிக்க வீரர்களுக்கான அழியாத பதிவேடாக இருக்கும். நம்பிக்கையற்ற மற்ற ராணுவத்தினரிடையே நம்பிக்கையான ராணுவமாக காணப்படுகிறது என்று எல்லன்பாரோ பிரபுவின் வார்த்தைகளுக்கு ஏற்றவர்களாக மதராஸ் நாட்டுப்படை உள்ளது, அவர்களின் அழியாத கௌரவத்தை என்றும் மறக்க முடியாது.”
போற்றப்பட்ட கிறிஸ்தவ மற்றும் பகுத்தறிவு கருத்துகளுக்கிடையேஇருளில் உள்ளநாகரீகங்களை கொண்டு வந்த ஆங்கிலேயே கடற்கரை ராணுவத்தின் விசுவாசம் திராவிட கருத்தியலை வீழ்த்துவதாக உள்ளது. கால்டுவெல்லும் அவரைத் தொடர்ந்து வந்த பாதிரியார்களும் புலம்பெயர்ந்த தமிழரின் கருத்துக்களை விவரித்து அதனை புராட்டஸ்டன்ட்களுக்கு அடித்தளமாக அமைத்தனர். அதுவே ஆங்கில பேரரசுக்கும் அடித்தளமாக அமைந்த்து.

கால்டுவெல்லை போலவே ஆங்கிலேய திருச்சபையின் திருநெல்வேலி பேராயரான என்.சி.சர்கன்ட், ‘தமிழ் திருச்சபை விரிவாக்கத்தில்கீழ்க்கண்டவாறு தெளிவாகச் சொல்கிறார்:

தமிழர்கள் மாபெரும் வீரர்களாக இருந்தனர். அவர்கள் புதிதாக நிறுவின முகாம்கள் மற்றும் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தங்கள் குடும்பத்தினருடனும் ராணுவத்துடனும் சென்று குடியமர்ந்தனர். அவர்கள் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுவோரிடையே திருச்சபையை நிறுவுவதில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர்.” “ஆங்கிலேய இந்திய ராணுவத்தின் தமிழ் வீரர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் கிறிஸ்தவத்தை எடுத்துச் சென்றனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.” (சர்கன்ட்: 1940, .32 மற்றும் .68)

பண்டைக் காலத்தில் உலகில் யூதர்களின் பரவல் கிறிஸ்தவ மதத்தின் பரவலுக்கான ஆயத்தமாக அமைந்தது. அதுபோலவே தமிழ் தேவாலயங்களின் பரவல் மிஷனரிகளின் பரவலுக்கு உதவினவா? என்று கேட்கத் தோன்றுகிறது. முதல் அப்போஸ்தலர் கடவுளுக்கு அஞ்சும் யூதர்களையே முதல் நம்பிக்கையாளர்களா கருதினார். மிஷனரிகளும் அவ்வாறே தமிழர்களை கருதினார்களா? இந்த இனமே கிறிஸ்தவ முயற்சிகளுக்கான முதல் பலனாக கிடைக்கும் என்று நினைத்தார்களா? நான் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் காண முயற்சித்தேன். இந்த ஆராய்ச்சி கிறிஸ்தவம் தமிழர்கள் மற்றும் தமிழ் திருச்சபையின் விரிவாக்கத்தின் மூலம் பல எதிர்பாராத மற்றும் விவரிக்க முடியாத விஷயங்களை உணர்ந்தது.”

கால்டுவெல்லை போலவே சர்கண்ட்டும், பண்டை திராவிட இலக்கியங்களை ஆராயும்போது பாவம் என்ற கருத்துப் போன்ற கிறிஸ்தவத்தை குறிப்பிடக் கூடிய பல ஆச்சரியமான வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை கண்டார்.“பண்டைய ஹீப்ருக்களைப் போல பண்டைய திராவிடர்களும் நேர்மையான ஆன்மீக வாழ்க்கையை வழிநடத்த விரும்பினர்.” (.3) ஆங்கிலேயே இந்திய ராணுவத்தின் துவக்க கால வெற்றிகள் மற்றும் நற்செய்தியை பரப்பும் சமூகம் (எஸ்.பி.ஜி.), ஆங்கில திருச்சபையின் விரிவாக்கம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள  பாதிரியார் கால்டுவெல்லின் மக்கள் ஆகியோரிடையே உள்ள நெருக்கமான தொடர்பை சர்கண்ட் விரிவாக (அத்தியாயங்கள் 2, 3, 5) விவரித்துள்ளார். இவ்வாறு தமிழ் ராணுவ வீரர், தமிழ் குடியேற்றத்தினர் மற்றும் திராவிட இயக்கம் ஆங்கிலேயே ஏகாதிபத்திய திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

தமிழ் நாட்டில் இந்தத் திட்டத்திற்கான எதிர்விளைவு தேசியமாக அமைந்தது, அது தீவிரவாத இயக்கமாக மாற்றப்பட்டது. ஆங்கில ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக நவீன தமிழ் ராணுவத்தை அறிவித்தது.
.................
பார்வைக்கு

(1) Recruitment handbooks of the Indian Army series. Madras Classes, by Lieut-Col.G.E.D.Mouat, revised by Capt.G.Kennedy Cassels, New Delhi: Govt.of India Press, 1938.

(2) I have used a Tamil translation of Sargant’s book. The Dispersion of the Tamil Church, N.C.Sargant, 1940; translated into Tamil by Rev.C.L.Vethakkan, 1964.

(3) Madras Infantry 1748-1943, Lt.Col.Edward Gwynee Phythiam Adams, Govt. Press, Madras, 1943.

(4) An interesting study of the military labour market in north India has been done recently by Ditk.H.Kloff-Naukar, Rajput and Sepoy: The Ethnohistory of the Military Labour Market in Hindustan 1450-1850, Cambridge University Press, New York, 1990.

(5) History of the Madras Army, Lt.Col.W.J.Wilson, Madras Govt. Press, 5 vols., 1882-89.


http://tamilnation.co/forum/sivaram/920815lg.htm

No comments: