Saturday, June 4, 2016

பாரதியும் ராணுவத்தன்மையை நியாயப்படுத்துதலும்


தமிழ் ராணுவம் பற்றி - பாகம் - 9
-தர்மரத்தினம் சிவராம்

இந்த (20-ம்) நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான புரட்சியாளர்களில் ஒருவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஆவார். அதன் ஆதரவாளர்களில் ஒருவர் தமிழ் பண்டிதர் எம். ராகவ ஐயங்கார். இவர் ராமநாதபுரம் மறவர் மன்னரிடம் பணிபுரிந்தவர். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் கலாச்சாரத்திலும் அரசியலிலும் மிகவும் ஆதிக்கம் கொண்டவராக சுப்ரமணிய பாரதி திகழ்ந்தார்.  நவீன தமிழ் ராணுவத்தின் அடிப்படை கருத்து தமிழர்கள் ஒரு ராணுவ இனத்தினர் ஆவர். தேசிய விடுதலைக்கு ராணுவ பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி தேவை. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இக்கருத்து இந்த இரண்டு பிராமணர்களால் வலியுறுத்தப்பட்டது.

அப்போதிருந்து இந்தக் கருத்து தமிழ் பண்டிதர்கள் மற்றும் ராணுவ தமிழ்த் தேசிய அறிஞர்களிடையே பரவியது. அது பல வடிவங்களில் மறுஆக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதன் அடிப்படை அப்படியே இருந்தது. இந்த கருத்துதான் கீழ்க்கண்ட இயக்கங்களின் தமிழ்த் தேசிய கருத்தாக அமைந்தது.
) தமிழ் நாட்டில் இந்திய விடுதலை இயக்கம்
பி) தமிழ் நாட்டில் இந்திய தேசிய இயக்கம்
சி) திகவின் பிரிவினை மற்றும் இந்தி எதிர்ப்பு இயக்கம்
டி) தமிழ் நாட்டில் சாதி மறுமலர்ச்சி இயக்கம்
) திமுக
எஃப்) இலங்கையில் கூட்டமைப்பு கட்சி மற்றும்
ஜி) வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் ஆயுதம் ஏந்திய பிரிவினை இயக்கங்கள்.

தேசிய விடுதலை அமைப்புகள் மற்றும் தீவிரவாத குழுக்கள், வரலாற்றை பயன்படுத்தும்போது மேற்கு நாடுகளில் கிடைக்கும் தற்போதைய (நிறுவப்பட்ட)  வரலாற்றையே தங்கள் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மக்களிடம் கடந்த காலம் மற்றும் தற்போதைய நம்பகமான வரலாறு என்று பரப்புகின்றன. “இந்த கதைகள் கடந்த காலத்தை நினைவுறுத்துபவை மட்டுமல்லாமல் தற்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்பிக்கின்றன.”

இதுபோன்ற கதைகள், தங்கள் ஒற்றுமை மற்றும் எதிர்காலத்திற்காக தனிநபர்கள் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் எவ்வாறு சாக வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.”

இதுபோன்ற முன்னிலைப்படுத்தும் கருத்துக்களை அடிக்கடி பயன்படுத்துவது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது என்ற கருத்து ஒரு ஆய்வில் முன்வைக்கப்பட்டது. ஆர்மீனியா விடுதலைக்காக போராடிய ஆர்மீனிய ரகசிய படையினர் இதுபோலவே செய்தனர். அவர்கள் ஆர்மீனிய சமுதாயத்தில் ஒரு விளிம்பு நிலை மக்களாக இருக்கவில்லை. இந்தப் பிரச்சாரம் அவர்களைஆழமான மதிப்புக் கொண்டவர்களாக மாற்றியது” (ஜெரால்டு க்ரோமர்: 1991). இதேபோன்ற பிரச்சாரம்தான் தமிழ் தேசிய தீவிரவாதத்தை வடிவமைத்தது. அதனுடைய தேசிய விடுதலை கருத்து தமிழ் ராணுவத்தின் பிரபுத்துவம் மற்றும் தமிழ்ச் சமூகத்தில் அதனுடைய பாரம்பரிய கலாச்சார ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதாக உருவாக்கப்பட்டது.

இது ஏனெனில், முன்பிருந்ததைப் போல தேசிய விடுதலைக்கு இந்தியாவின் பாரம்பரிய ராணுவ வழக்கத்தை புதுப்பிக்கும் கருத்து, முக்கியமாக இந்திய புரட்சி இயக்கத்துடன் தொடர்புகொண்டதாக இருந்ததுதான். தற்கால தமிழ் ராணுவ எழுச்சியில் ராகவ ஐயங்காரை விட பாரதியாருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இவர்கள் இருவருமே பண்டை இலக்கியமான புறநானூற்றை ஒரு அரசியல் ரீதியான ஒன்றாக பார்க்கத் துவங்கினர். குறிப்பாக வீர-தீரம் பற்றிய பாடல்களை, தமிழர்களின் கடந்த காலத்தை தேசிய விடுதலைக்கான தமிழர்களின் கருத்தாக பார்க்கத் துவங்கினர். அவர்களின் கருத்துக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தேச விடுதலையை அடையும் கருத்தின் இந்திய புரட்சி இயக்கத்தின் பகுதியாக உருவானது

அவர்கள் தமிழர்களின் ராணுவ பாரம்பரியத்தை இந்தியா முழுமைக்குமானதாக பார்த்தார்கள் என்பதை இங்கே வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது. அவர்களுக்கு தமிழர்களின் கடந்த காலம் இந்தியாவின் ராணுவ பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக தோன்றியது. அதேவேளையில் திராவிடப் பள்ளிக்கூடம் இந்தியா முழுவதையும் ஒன்றாக பார்க்க கடுமையாக மறுத்தது. அவ்வாறு பார்ப்பதை பிராமணர்களின் நலன்களுக்கான பிரச்சாரம் என்று கருதியது. ஆகவே பாரதியார் மற்றும் ராகவ ஐயங்கார் ஆகியோரின் கருத்துக்களை இரண்டு மட்டங்களில் பார்க்க வேண்டியுள்ளது. அது இந்தியா முழுமைக்குமானது மற்றும் தென்னிந்தியாவுக்கானது என்பதாகும்.

முதல் (இந்தியா முழுமைக்குமான) மட்டத்தில், பின்வரும் காரணிகள் ஆலோசிக்கப்படுகின்றன, () ஆங்கிலேயர்களின் ஆட்சேர்ப்பு கொள்கை மற்றும் ராணுவ சாதிகள் பற்றிய அதனுடைய கருத்து, (பி) அதற்கு பெங்கால் மற்றும் மேற்கு இந்தியாவில் கல்வி கற்ற நடுத்தர மக்களிடையே ஏற்பட்ட கலாச்சார மற்றும் அரசியல் எதிர்வினை, (சி) பாலகங்காதர திலகரின் சத்திரியர்கள் மறுமலர்ச்சி, (டி) 1905-ல் ரஷ்யாவை ஜப்பான் வென்றது.

தென்னிந்திய மட்டத்தில், பின் வரும் காரணிகள் இருவரின் சிந்தனைகளை வடிவமைத்தன. () தமிழ் மொழியின் நிலையை உயர்த்துதல், (பி) சங்க இலக்கத்தின் மறு ஆய்வு, (சி) தமிழ் சமுதாயத்தில் தமிழ் பிரபுத்துவ ராணுவத்தின் நிலை மற்றும் பங்கு.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமேற்கு இந்தியாவில் (ராணுவத்திற்கான) ஆட்சேர்ப்பில் செய்யப்பட்ட மாற்றம் ராணுவ சாதி கருத்து தொடர்பானதாகும். அந்த மாற்றம் இந்தியர்களில் ராஜ்புத்கள், சீக்கியர்கள், பஞ்சாபி முஸ்லீம்களை ராணுவ சாதிகளாக பார்த்தது. அதேவேளையில் ஆங்கில ராணுவத்தின் முக்கிய பகுதியாக இருந்து வந்த  மராத்தியர்கள், பெங்காலி உயர் சாதியினர், மஹார்கள், தெலுங்கர்கள் மற்றும் தமிழர்களை ராணுவ சாதியாக பார்க்க மறுத்தது.

1885-1893-ம் ஆண்டுகளில் கண்டஹார் இந்திய ராணுவ தளபதியாக இருந்த லார்டு ராபர்ட்ஸ், ஒருகாலத்தில் ஆங்கிலேய இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக இருந்த தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் ராணுவ தன்மைகள் குறித்து குறைத்து மதிப்பிடுகிறார்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் நான் மெட்ராஸ் ராணுவத்தினரின் தேவைகள் மற்றும் திறன்களை பற்றி எனக்கு நானே பழக்கப்படுத்திக் கொள்ள நீண்ட பயணங்களை மேற்கொண்டேன். அப்போது அவர்களின் முன்னோர்களின் மற்றும் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த போர்த் தன்மைகள் அவர்களிடம் இல்லை என்பதை கண்டறிந்தேன்... அவர்களிடம் பண்டைய ராணுவத் தன்மை இல்லை என்ற முடிவெடுக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்” என்று அவர் சொல்கிறார்.

நீண்டகாலமாக தென்னாட்டில் நிலவிய அமைதியே அவர்கள் மீது இந்த விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று காரணம் கூறப்பட்டது. தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் உட்பட நீக்கப்பட்ட வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மனுக்களும் அளித்திருந்தனர். பல வகுப்பினரிடையே தங்கள் பண்டைய ராணுவத்தன்மை எழுச்சியுற்றது என்பதை நிரூபிக்க வேண்டி ஏற்பட்ட தேவை இவ்வாறு பாதிக்கப்பட்டது.

1891-ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில், தெலுங்கர்களுக்கு எதிராக ராபர்ட் பிரபுவின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு தெலுங்கு பிராமணர்கள் தாங்கள் பாரம்பரிய போர்க்குடிகள்தான் என்று கூறி தங்கள் கருத்துக்கு ஆதரவாக இந்து சட்டங்களை உருவாக்கிய மனுவை அதற்கு ஆதாரமாக கூறினர். இந்தியர்கள் அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்று சொல்லும் 1878-ம் ஆண்டின் ஆயுதச் சட்டம் இந்த உணர்வை கிளர்ந்தெழச் செய்வதாக இருந்தது. இது சுயமரியாதையின் இழப்பாக கருதப்பட்டது. 1886-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய காங்கிரஸின் இரண்டாம் மாநாட்டில் ராஜா ராம்பால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

“... எங்களை கோழைத்தனமான செம்மறியாட்டுக் கூட்டமாக சித்தரிக்க,  அமைப்பு ரீதியாக எங்களது அனைத்து ராணுவத் தன்மைகளையும் நசுக்குவதற்காக, எங்கள் குணங்களை தரம்குறைத்து பேசுவதற்காக நாங்கள் அதற்கு (ஆங்கிலேய அரசாங்கத்திற்கு) நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க முடியாது.” (கோஹன், 1990, அத்தியாயங்கள் 1, 2)

இந்த மாற்றங்களால் குறிப்பாக மராத்தியர்களும் பாதிக்கப்பட்டனர். திலகர் அவர்களிடையே தேசிய தலைவராக உயர்ந்தார். அவர், ஆங்கிலேயர்கள் மீண்டும் எழுச்சி பெற சத்திரியர்களின் உரிமைகளை பறித்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்தார். சத்திரியர்கள், நாடு மற்றும் உள்நாட்டு ஒழுங்கை பாரம்பரியமாக பாதுகாத்து வந்தவர்கள் ஆவர். இந்திய வகுப்புக்கள் (சாதிகள்) மற்றும் பாரம்பரிய இந்திய சமூக ஒழுங்கை புதுப்பிப்பதன் மூலம் தேசிய எழுச்சியை பெற முடியும் என்று கூறினார்.

இந்திய புரட்சி இயக்கத்தின் எழுச்சி மற்றும் பரவலில் திலகரின் கருத்துக்கள் முக்கிய பங்கு வகித்தன. 1905-ம் ஆண்டு ஜப்பான் ரஷ்யாவை தேற்கடித்தபோது இந்த இயக்கம் பெரும் ஊக்கத்தைப் பெற்றது. இந்த வெற்றி ஆசிய ராணுவ பலம் ஐரோப்பிய ராணுவ பலத்தை வெல்லக் கூடியது என்பதைக் காட்டியது. எனவே, புரட்சியாளர்கள் (ஆங்கிலேய அரசாங்கம் அவர்களை தீவிரவாதிகள் என்று வகைப்படுத்தியது) இந்தியாவின் பாரம்பரிய ராணுவ தன்மைகளை புதுப்பிப்பதிலேயே  இந்தியாவின் எழுச்சி உள்ளது என்று கருதினர். ஜப்பான் ரஷ்யாவை வெற்றிகொண்டது,  பெங்கால் மற்றும் மேற்கு இந்தியாவில் இந்திய புரட்சி இயக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் (விரிவாக, துவா 1966-ல்) ஆராயப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் சுப்ரமணிய பாரதி, ‘இந்தியாஎன்ற தமிழ் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அவர், திலகர் மற்றும் புரட்சிகர இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். மேலும் அவர் சென்னையில் தன் கருத்துக்களை துணிச்சலாக தனது பத்திரிகை வாயிலாக பரப்பக் கூடியவராக இருந்தார். திலகரின் ஐம்பதாவது பிறந்தநாளில், அவர் தனது தலையங்கத்தில் எழுதுகிறார் (14.07(ஜூலை) 1906) :
நாட்டின் தற்போதைய நிலை வீர பூஜை (தலைவர்களை போற்றுவது) செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வீர பூஜை இன்றியமையாதது ஆகும். இது மிகவும் தேவையாக இருக்கும்போது தளர்ச்சியடையக் கூடாது.”

அந்த பத்திரிகையில் உள்ள ஒரு குறிப்பில், திலகரின் பிறந்தநாள் சென்னையில் லிங்கையா செட்டி தெருவில் உள்ள பாரதியின் வீட்டில் கொண்டாடப்பட்டதாக கூறுகிறது. இந்தியாவின் ராணுவ தெய்வமான வீர சக்தி பவானிக்கு (வீர சிவாஜி வணங்கிய கடவுள்) பூஜை செய்யப்பட்டது. ராணுவ தன்மையை தூண்ட புரட்சி இயக்கத்தினர் நாடு முழுவதும் சிவாஜி பண்டிகையை நடத்தினர். அவர்கள், இந்தியாவில் இந்த தன்மை அமைப்பு ரீதியாக நசுக்கப்பட்டுவிட்டது என்று கூறி உடல் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி நிலையங்களை அமைத்தும் வந்தனர்.

பாரதியார் ஆங்கிலத்தில் ராணுவச் சட்டத்திற்கு எதிர்ப்புஎன்ற தலைப்பிட்ட தனது தலையங்கத்தில், ராஜா ராம்பால் தெரிவித்த எதிர்ப்பு, “1878-ம் ஆண்டு ஒரு தீய வைஸ்ராய் ஆன லைட்டன் பிரபு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அப்போதே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு நாட்டின் மக்களை ஆயுதம் ஏந்தவிடாமல் அவர்களை கோழைகளாக்கும் ந்தச் சட்டம்  தெய்வீகச் சட்டத்திற்கு எதிரானது” (01.12.1906)

இந்தியர்கள் கோழைகளா?’ என்ற தலைப்பிட்ட தலையங்கத்தில் அவர் ஜப்பானின் ராணுவ உதாரணம் குறித்து எழுதினார். “சில ஆசியர்கள் நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ரஷ்யர்களை தோற்கடித்தனர். ஆசியர்களின் வலிமையைக் காட்ட இதுவே போதுமானது. வீர சொர்க்கமே சிறப்பானது. (29.12.1906)

ஆங்கில கல்வியின் மதிப்பை உயர்த்திப் பிடித்தவர்களை பாரதி எதிர்த்தார். புரட்சி இயக்கத்தின் கருத்துக்கள் தமிழ் காலாச்சாரத்தில் மற்றும் அதன் ஆழமான கருத்துக்களில் வேரூன்ற வேண்டும். அது சாதாரண தமிழ் மக்களிடம் பரவ வேண்டியதாயிற்று. சாதாரண மொழி நடையில் எழுதினால் மட்டுமே அதை அடைய முடியும் என்று நம்பினார். இந்தக் கருத்து அவரது பாடல்கள் மற்றும் கவிதைகளில் பொதிந்துள்ளது. இந்தியாவின் புரட்சி மற்றும் விடுதலையின் பகுதியாக தமிழ் ராணுவ ஆர்வத்தை புதுப்பிக்கும் கருத்தை அவர் பரப்புரை செய்தார்.

தமிழர்களான நம்மிடையே ஆண்மை போய்விட்டது, வீரம் போய்விட்டது. நமக்கென ஒரு நாடு இல்லை. நமக்கென ஒரு அரசாங்கம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் கல்விக் கடவுளான சரஸ்வதி இந்த நாட்டிலே தோன்றுவாளா?”

தமிழ்நாடு தனது செல்வம், சுதந்திரம், உடல் வலிமை மற்றும் மன வலிமையை இழந்து விட்டது. இது ஒரு தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே சிறந்த கவிஞர்கள் இந்த நாட்டில் மறைந்து விட்டார்கள்.”

புதிய ஆத்திசூடியில் (குழந்தைகளுக்கான நீதிபோதனை புத்தகம்) அவர்அச்சம் தவிர், தைரியம் இழக்காதே. போர்க்கலையை கற்றுக் கொள்என்று எழுதுகிறார்.

ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவில் சத்திரியர்களின் உரிமையை பறித்துவிட்டது என்று திலகர் கருதினார். தேசிய எழுச்சிக்கு உண்மையான உடனடியான தேவை அதுவே என்று பாரதிக்கும் பட்டது. ஏனெனில் பாரதி தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த, எட்டயபுரம் பாளையக்காரர்களுக்கு சேவை செய்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆகவே, அவர் உண்மையில் தமிழ்ச் சமுதாயத்தில் மறவர்களின் பாரம்பரிய நிலை மற்றும் அது வெள்ளையர்களின் ஆட்சியில் வீழ்ச்சி அடைந்ததை அறிந்தவர் ஆவார். 1876-ல் ஏற்பட்ட பெரும்பஞ்சம் தென்னாட்டில் சொல்லவொண்ணா துயரங்களை ஏற்படுத்தியது. அது ஏழை மறவர்களின் நிலையை மேலும் தாழ்த்தியது. அவர்கள் தொடர்ச்சியாக பிராமணர்கள் மற்றும் போர்க்குடிகள் அல்லாத சமுதாயத்தவரால்  உருவாக்கப்பட்ட காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர்.

பிராமணரான பாரதி தனது பூனூலை கழற்றி வீசினார். பிராமண கருத்துக்களையும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த பிராமணர்களையும் வெறுத்தார். பாரதியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் சத்திரியர்கள் மறவர்கள் ஆவர். (மறவர் தலைவர்கள் மற்றும் அரசர்களிடம் சேவை செய்த பிராமண குடும்பங்களிடையே இந்தக் கருத்து பொதுவாக காணப்படுகிறது. டிர்க்ஸ், 1982 .662-ஐயும் பார்க்கவும்)
மறம் என்றால் வீரம். மறவர்களே சத்திரியர்கள். எங்கள் நாட்டில் அதை புரிந்துகொள்ளுங்கள். தற்போது மறவர்கள் என்று அழைக்கப்படும் வகுப்பினரே சத்திரியர்கள் ஆவர்.”

மறவன் பாட்டுஆங்கிலேய ஆட்சியில் மறவர்கள் பட்ட துயரத்தை காட்டுகிறது. அது மறவர்கள் மீண்டும் வலுப்பெறுவதை அவர்களின் ராணுவப் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவர் காவல்துறையில் பணிபுரியும் தனது சொந்த சாதியினரை மிகவும் பரிதாபமான, பேராசை கொண்டவர்களாக,  வெள்ளையர்களின் முன்னிலையில் தாழ்ந்தவர்களாக காட்டுகிறார். அவர்கள் மறவர்கள் மீது பல குற்ற வழக்குகளை பதிவு செய்து பல்வேறு வழிமுறைகளில் அவர்களை கசக்கி பிழிய முயன்றதாக கூறுகிறார்.

ஐயோ, இன்று நாங்கள் எங்கள் கூலியைப் பெற மண்ணை தோண்டுகிறோம். எங்கள் வீரம் பொருந்திய வாள்களும் ஈட்டிகளும் போய்விட்டனவே! இந்த உலகில் எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதே. சங்குகளை ஒலித்து விற்போர் புரிந்த காலம் போய்விட்டதே. எங்கள் பெருமைகளை விற்று எங்கள் மாபெரும் வீரர்களுக்கு அவமரியாதையை சேர்க்கிறோமே? நாங்கள் வீரம் பொருந்திய மறவர்களா? இனிமேலும் இந்தப் பயனற்ற வாழ்க்கையை வாழ வேண்டுமா?”

இவ்வாறு பாரம்பரிய தமிழ் ராணுவத் தன்மையை அதனுடைய சாதி மற்றும் அகன்ற கலாச்சார வடிவங்களில் புதுப்பித்தல் பாரதியின் பரப்புரை மற்றும் தேசிய விடுதலையின் பொருளாக மக்களிடையே தமிழ்த் தேசியத்தை தூண்டுவதுடன் தொடர்புகொண்டதாக உள்ளது. அவரது காலத்திலிருந்து தமிழ் தேசியத்தை தட்டி எழுப்பிய அத்தனை அரசியல் திட்டங்களிலும் இந்த திட்டம் மையமாக இருந்தது.

புரட்சியாளர்கள் முக்கிய நிலையை எட்டியபோது, 1906 செப்டம்பரில் பாரதியின் கருத்துக்களுக்கு ஒரு ஊக்கம் கிடைத்தது. அது உ.வே.சாமிநாத ஐயர், தமிழ் ராணுவத்தின் பெருமைகளை பறைசாற்றும் புறநானூறு குறித்து ஆற்றிய சொற்பொழிவிலிருந்து வந்தது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர், அவர் 1894-ல் புறநானூற்றை கண்டறிந்து அச்சேற்றினார். அது தமிழின் மிகப்பழமையான இலக்கியம் என்று கருதப்பட்டது. “புறநானூற்றின் வெளியீடு தமிழர்களின் சிந்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது” என்று சொல்லப்பட்டது. (பி.எஸ்.மணி, ப 105, பாரதியாரும் தமிழ்ப் புலவர்களும், 1981, சென்னை. “புலிகள் புதிய புறநானூறு எழுதுகிறார்கள்” உலகத்தமிழர், 01.05.1992)

அந்தப்பேச்சு, வன்முறை மூலமாக தேசிய விடுதலையை அடைய தமிழர்கள் மத்தியில் ராணுவ ஆர்வத்தை புதுப்பிக்கும் கருத்தை பரப்ப தேடிக்கொண்டிருந்த ஒரு வலிமையான அடித்தளத்தை பாதியாருக்குக் கொடுத்தது. அவர் 08.09.1906  ‘என்றைக்கும் புனித நினைவின் பண்டைய தமிழண்ணை’ என்ற ஒரு தலையங்கத்தை ஆங்கிலத்தில் எழுதினார். தமிழ் ராணுவத்தின் அடித்தளமான புறநானூற்றின் அரசியல் ஆயுள் இந்த தலையங்கத்தில் தொடங்குகிறது.

அது மிகச் சில தமிழரே புறநானூறு அல்லது சங்க இலக்கியங்களை அறிந்திருந்த காலமாகும். அப்போது, பாரதி சொல்கிறார்,
“புறநானூறு என்ற இலக்கியம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டதாகும். அது பிற்காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களை போல புராணக் கதைகளை உவமையாக காட்டுவதில்லை. அது அந்தக் காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை, மன்னர்களின் போர்கள் மற்றும் மற்ற இயற்கை நிகழ்வுகளைச் சொல்கிறது. சென்னை பிரசிடென்ஸி கல்லூரியைச் சேர்ந்த உ.வே.சாமிநாத ஐயர் இந்த தொகுப்பிலிருந்து ஒரு பாடலுக்கு விளக்கம் அளிக்கிறார். அறியாமையில் உள்ள சிலர் தமிழ் இலக்கியத்தை கற்பதில் பயனில்லை, அது தேசிய உணர்வை கொடுக்காது என்று சொல்கிறார்கள்.  அதுபோன்ற தவறான கருத்துக்களை மறுக்க ஐயர் இந்த பாடல் குறித்துப் பேசினார்.

இந்தப் பாடல் ஒரு போர்வீரனின் வயதான  தாயார் பற்றியது. அந்தப் பெண் போருக்கு தன் மகனை அனுப்பி வைத்தாள். தன் மகன் போரில் சாவான் அல்லது வெற்றியோடு திரும்புவான் என்று அவள் நினைத்தாள். ஒரு பொய்யன் வந்து உன் மகன் போருக்கு அஞ்சி ஓடிவிட்டான் என்று அவளிடம் சொன்னான். இதனைக் கேட்டதுமே அந்தப் பெண், ‘தன் தேசத்திற்காக உயிரை விடுவதை விட தன் உயிர் பெரிது என்று கருதும் ஒரு கோழையையா நான்  வளர்த்தேன்? நான் போர்க்களத்திற்கு சென்று பார்ப்பேன். அவன் அவ்வாறு ஓடிப்போயிருந்தால், அவனுக்கு பாலூட்டிய மார்பகங்களை வெட்டிவிட்டு அங்கேயே செத்துவிடுவேன் என்று சூளுரைத்தாள்’.

இவ்வாறு தீர்மானித்த அந்த பெண் போர்க்களம் சென்று பார்க்கிறாள். அவன் போரிலே கொல்லப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறாள். தன் மகன் தன்னுயிரை தனது தாய்நாட்டிற்காக கொடுத்திருக்கிறான் என்று அறிந்து நிம்மதி அடைகிறாள். அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று இப்போது தெரியாது. ஆனால், ஈஷ்வரன் இந்தக் காலத்திலும் அதுபோன்ற தாய்மார்கள் மூலமாக இந்த பாரத தேசத்தை ஆசீர்வதிக்க வேண்டும். அதுவே நமது பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.”

பாரதியார் இங்கே இதற்கு இணையாக ஒரு ஜப்பானிய தாயின் கதையைக் கூறுகிறார். தனது அனைத்து மகன்களையும் போர்க்களத்திற்கு அனுப்பிய ஒரு பெண் மேலும் அனுப்ப தனக்கு ஒரு மகன் இல்லையே என்று அழுததாக சொல்கிறார். அந்தக் காலத்தில் “ரஷ்யா-ஜப்பானிய போர்” போன்ற புத்தகங்கள் புரட்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் புழக்கத்தில் இருந்தது. வீரம் நிறைந்த ஜப்பானிய தாய்மார்களின் கதைகள் 1905-ம் ஆண்டு போரின்போது ஜப்பானிய ராணுவ வீரர்களின் ராணுவ ஆர்வத்தை அதிகரித்ததாக அந்த புத்தகங்களில் சொல்லப்பட்டது.

ரஷ்யாவை ஜப்பான் வெற்றி கண்டதால் ஊக்கமடைந்த மற்றொரு தேசியவாத பிராமணர் அதனுடைய ராணுவ மேலாண்மையை பாராட்டி பரணி (ஆயிரம் யானைகளை கொன்ற வீரனை பாராட்டிப் பாடும் பாடல்) கவிதைகள் எழுதினார். அவர் ராகவ ஐயங்கார் ஆவார். அவர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் ‘செந்தமிழ்’  பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ஆவார்.
---------------------------

References
1. Bharathi Kavithaikal; 1982, Vanavil Pirasuram, Madras.

2. Bharathi Tharisanam (‘India’ essays, 1906), vol.1, New Century Book House, Madras.

3. Nicholas B.Dirks; The pasts of a Palayakarar – The ethnohistory of a South Indian Little King. Journal of Asian Studies, vol.XLI, no.4, August 1982. “Many of my informants (Brahmins as well as Maravars and Kallars) have told me that the Mukkulathors – the three Tamil military castes – are really the kshatriyas of Southern India.” Dirks deals with the Poligars (Palayakarars) of Othumalai, who belong to the Kondayam Kottai subsection of the Maravar, the group to which most of the Southern feudal military chieftainsbelonged. The Sethupathys – the kings of Ramnad – belong to the subsection known as Sembi Maravar.

4. R.P.Dua; 1966. The Impact of the Russo-Japanese (1905) War on Indian Politics, S.Chand, Delhi.

5. Gerald Cromer; In the Mirror of the Past – The use of history in the justification of terrorism and political violence. [Journal name is missing here, due to author’s or printer’s slip], vol.3, no.4, winter 1991.http://tamilnation.co/forum/sivaram/921001lg.htm

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...