Sunday, September 18, 2016

மாவீரன் சேரன் செங்குட்டுவன்

தமிழ் ராணுவம் பற்றி - பாகம்11
டி பி சிவ்ராம்

இன்றைய விழாவில் பாடிய பாடல் வரிகள் என் இதயத்தை தொட்டன. அந்த வரிகள் இமயமலையில் தமிழ்க் கொடி பறந்ததை குறிக்கின்றன. இது கடந்த காலத்தில் நடந்த விஷயமாக இருந்தாலும். வரலாறு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. இப்பகுதியின் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் கலாச்சாரத்தில் வாய்ப்பு கொடுக்கப்படாத்தால் இன்று இந்த நாடு போர்க்களத்தில் குதித்துள்ளது. நமது இளைஞர்கள் கல்வியை மட்டும் சிறப்பாக கற்வில்லை, அவர்கள் தங்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தங்கள் இலக்குகளை  அடையும் சுயமரியாதையைக் கொண்டுள்ளனர். வடகிழக்கில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்த்து வைக்காவிட்டால், அந்தப் பாடல் வரிகள் தொடர்பான வரலாறு மீண்டும் நிரூபிக்கப்படும்.” இவ்வாறு 26.09. 1992 அன்று ஒரு பள்ளி விழாவில் பேசிய மட்டக்களப்பு எம்பியான ஜோசப் பரராஜசிங்கம் பேசினார். (01.10.1992 அன்று வெளியான வீரகேசரி பத்திரிகையில் இது வெளியானது)

அந்த பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட பாடல் எம்ஜிஆர் படத்தில் வரும் ஒரு பாடல் ஆகும். “இமயம்தனில் சேரன் கொடிபறந்த அந்தக் காலம் தெரிகிறதுஎன்ற வரிகுறித்து எம்பி பேசினார். ஜோசப்பின் பேச்சும் எம்ஜிஆரின் பாடலும் தற்கால தமிழ் தேசியத்தை வலுவாக எழுப்புவதாக உள்ளன. இது தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வட இந்தியாவை வென்று இமயமலையில் வில்-அம்பு, அல்லது புலி அல்லது மீன் சின்னத்தை பொறித்ததை குறிப்பதாக உள்ளது.

இந்த பாடலில் மாவீரன் சேரன் செங்குட்டுவனே முக்கிய காதபாத்திரமாக இருக்கிறார். இது தென்னிந்திய தமிழரின் அச்சுறுத்தலுக்குஎதிரான போராட்டத்தில் வரும் சிங்கள பௌத்தத்தின் கதையான துட்டகேமுனு - எலராவின் கதையை விட சிறந்ததாக உள்ளது.

திராவிட இயக்கம் தனது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாவீரன் சேரன் செங்குட்டுவனின் கதையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தக் கதை சிலப்பதிகாரத்தின் மூன்றாம் பகுதியாக விளங்குகிறது. சேரன் செங்குட்டுவனின் சகோதரரும் சமன முனிவருமான இளங்கோ அடிகள் இந்த காவியத்தை படைத்தார்.

இது பத்தினிப் பெண்களின் தெய்வமான கன்னகியின் கதையை விவரிக்கிறது. இந்த காவியம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் தலைநகரங்களின் பெயர்களில் மூன்று காண்டங்களாக பிரிக்கப்படுகின்றன. அதாவது வஞ்சி, புஹார், மதுரை என்று பிரிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சங்ககால பாடல்களில் வீரத்தை முன்னிலைப் படுத்தியது போலல்லாமல் சிலப்பதிகாரம் வட இந்தியாவை விட மேம்பட்ட ராணுவ பாரம்பரியம் கொண்ட மூவேந்தர்களால் தமிழ்நாடு ஆளப்பட்டு வந்ததாக சொல்கிறது. இது மூவேந்தர்களும் இமயத்தை வென்று தங்கள் முத்திரைகளை அங்கே பொறித்து வந்ததாக விவரிக்கிறது. தவறுதலாக கன்னகியின் கணவன் கோவலனை கொலை செய்த பாண்டிய மன்னன்ஆரியப்படை கடந்தவன்என்ற பட்டத்தை பெற்றிருக்கிறான்.

எம். ராகவ ஐயங்கார், வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு சேரன் செங்குட்டுவன்என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதனை வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்கு அர்ப்பணித்தார். “வஞ்சிக் காண்டத்திற்கு எழுதப்பட்ட முதல் உரை இதுவே என்று ஐயங்காரின் படைப்பு பற்றிய ஒரு கட்டுரை சொல்கிறது. அதன் பிறகு பல பண்டிதர்கள் வஞ்சிக் காண்டத்தை ஆய்வு செய்து புத்தகங்களை எழுதினர். அந்தப் புத்தகம் எல்லாரையும் தமிழர்களின் பொற்காலத்தை புரிந்துகொண்டு பாராட்டச் செய்தது.”  (அன்னல்ஸ் ஆஃப் தமிழ் ரிசர்ச்- எம். ராகவ ஐயங்கார் கமமரேஷன் வால்யூம், யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், 1978), பக்கம் 18-19) இந்தப் புத்தகம் வெளியான முதல் இருபது ஆண்டுகளில் நான்கு பிரசுரங்களாக வெளியிடப்பட்டது. “இந்தப் புத்தகம் வெளியான பின்னர்தான் சங்ககாலம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்தன. பலமுறை அதன் பிரதிகள் ஆந்திரா, மைசூர் மற்றும் மெட்ராஸ் மற்றும் சிலோனில் வெளியிடப்பட்டன, பரவலாக வாசிக்கப்பட்டன” (ஆராய்ச்சி தொகுதி, 1938, . 20)

கடந்த இதழில் நாம் எம். ராகவ ஐயங்காரின் வாழ்க்கை மற்றும் அரசியலை ஆய்வு செய்தோம். நாம் அவற்றில் சுட்டிக் காட்டியதைப் போல, ஐயங்காரின் தமிழ் மறுமலர்ச்சி என்பது அவரது சமகால இந்திய தேசிய தலைவர்களிலிருந்து மாறுபட்டதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்திய தேசியத் தலைவர்கள் தமிழ் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இந்திய கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஐயங்கார் தென்னிந்தியாவுக்கு, தமிழர்களின் ஒப்பற்ற தன்மை, ராணுவ பலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது மிகவும் புகழ் பெற்ற படைப்பு "சேரன் செங்குட்டுவன்", அதற்கு பிறகு அவர் எழுதிய கட்டுரை அவர் அந்தக் கருத்தை பிரபலப்படுத்த முயற்சித்தார் என்பதையே காட்டுகிறது. அவரது செயலுக்கு மூன்று காரணங்களை அடையாளம் காணலாம்.

முதல் காரணம், நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ராமநாதபுர ஆட்சியாளர்களான சேதுபதிகளுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம். இரண்டாவது காரணம் அவர் ஒரு வைஷ்ணவ பிராமணராக இருந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்தியது சைவ பிராமணர்கள் ஆவர். பல வைஷ்ணவர்கள் திராவிட இயக்கத்திற்கு (சிவதம்பி, 1989) ஆதரவு தெரிவித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தின் 23வது ஆண்டுவிழாவில் பேசிய ஐயங்கார்,

"சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வேங்கடம் முதல் குமரி வரை பரவியுள்ள தமிழகம் கடந்து தங்கள் புகழை நிலைநாட்டினர். ஆனால் தமிழ் நாட்டின் மீது அவர்கள் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு மொழிகள் பேசும் நாடுகளை தமிழகத்தோடு இணைக்க விரும்பவில்லை. சென்னை மாகாணத்தை திராவிட மாகாணம் என்று சொல்வது பொருத்தமானதே" என்று சொல்கிறார் (ஆராய்ச்சி தொகுதி, 1938, 318, 338)

மூன்றாவது காரணம் அவர் திருவனந்தபுரம் பல்கலை கழகத்தில் தமிழ்த் துறை தலைவராகி கேரளாவில் தங்கியிருந்தது. கேரளா பண்டைய சேர ராஜ்யமாக இருந்தது. திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தபோது ஐயங்காரின் எழுத்துக்கள் கேரளாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தமிழக பாரம்பரியத்திற்குள்ளாக காட்ட முயன்றன. ஒரு சித்திரை திருநாளில் திருவாங்கூர் மகாராஜா, "மலையாளம் தமிழ் மொழிதான், அது சமஸ்கிருத கடலில் குளித்து விட்டது" என்று சொல்லி இருக்கிறார். (ஆர். வீரபத்திரன், 1978, 38)

கேரளா மற்றும் தமிழ் இலக்கியத்தின் சில பரிமாணங்கள் மற்றும் 'சேர வேந்தர் செய்யுட் கோவை', ஐயங்காரின் கோத்திரப் பெயர்  (பிரிவு) சேர அரச பரம்பரையைச் சேர்ந்த புலவர் 'ஐயனரிதன்' ஆகும். இவர்தான் தமிழரின் ராணுவ கலாச்சாரத்தை விளக்கும் புறப்பொருள் வெண்பா மாலையை எழுதியவர். இவரது மிகவும் தர்க்கத்திற்குரிய கட்டுரை, இவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது எழுதிய சேர பாரம்பரியத்தின் உறவுமுறையாகும். இவை அனைத்துமே இவரது சேரன் செங்குட்டுவன் புத்தகத்திலிருந்து உருவாகின்றன. இந்தப் புத்தகத்தை இவரது தமிழ் வேந்தரின் இமயப் படையெடுப்பு கட்டுரையுடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இவர் இதனை இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதியுள்ளார். இவரது எழுத்து செங்குட்டுவனை வரலாற்று உண்மையான சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்துடன் தொடர்புபடுத்த முயல்கிறது. பள்ளி மற்றும் பல்கலைகழக பாடநூலான இந்தப் புத்தகம் தமிழக கலாச்சார - அரசியலில் ஒரு ஆழமாக முத்திரையை பதித்தது. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் கூட்டுக் கட்சியின் பேச்சாளர்கள் தமிழ் இளைஞர்களை எழுச்சி அடையச் செய்ய சேரன் செங்குட்டுவனை எடுத்துக்காட்டிப் பேசினர். அவரது வட இந்திய படையெடுப்பை ஆரிய அரசர்களை மிஞ்சிய ராணுவ வலிமையை கொண்டிருந்ததை காட்டுகிறது. இது தென்னிந்திய தமிழர்களின் ராணுவ வலிமை பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றியது.


செங்குட்டுவன், தென் தமிழக ஆற்றல் பற்றி இழிவான கருத்துக் கொண்டிருந்த இரண்டு ஆரிய மன்னர்களான ("வாக்குத் தவறியவர்கள்" என்று புராணம் சொல்கிறது) கனகன் மற்றும் விஜயன் ஆகியோரை தோற்கடிக்க சபதமேற்கிறார். அவர்களை இமயத்திலிருந்து கல் எடுத்து வரச் செய்து பத்தினி தெய்வமான கன்னகிக்கு சிலை வடித்தான். "நீங்கள் கங்கை நதியில் குளித்த நாளில் போரில் ஆயிரம் ஆரிய மன்னர்களை எதிர்கொண்டீர்கள்... நீங்கள் அந்த கல்லை கொண்டு வர தீர்மானித்திருந்தால் வட இந்திய மன்னர்கள் தங்கள் நிலப்பரப்பில் வில்அம்பு, புலி, மீன்கொடியை பறக்கச் செய்யுங்கள்" என்று செங்குட்டுவனிடம் சொல்லப்பட்டது.செங்குட்டுவன், இமய வரம்பன் என்ற பெயர் கொண்ட நெடுஞ்சேரலாதன் மற்றும் சோழ அரசனின் மகளுக்கு மகனாக பிறக்கிறான் என்று புராணம் சொல்கிறது. அவன் தமிழர்களின் ஒற்றுமைக்கு பிரதிநிதியாக இருப்பதாக காட்டுகிறது. (கஜபாகு என்ற இலங்கை மன்னன் தன் நாட்டில் செங்குட்டுவனின் தந்தை இமய வரம்பனின் பிறந்தநாள் கொண்டாடப்படும்போது சேர தலைநகரிலிருந்து வந்து ஆசி வழங்குமாறு பத்தினி தெய்வத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது.)

வடக்கு மற்றும் இமயத்தை வென்றதை குறித்து சிலப்பதிகாரத்திற்கு முந்தைய சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன. (நீங்கள் அவர்களை தாக்கியபோது ஆரியர்கள் வலியால் கதறினார்கள் என்று, சங்கப் பாடல் தொகுப்பு சொல்கிறது). இந்த புராணத்தின் மூன்று பகுதிகளும் ஒவ்வொரு அரச பரம்பரையையும் பெருமைப்படுத்துகின்றன. முதல் பகுதி, சோழ ராஜ்யத்தை உருவாக்கிய கரிகாலன் (பிரபாகரனின் புனைப்பெயர்) என்ற திருமாவளவன் இமயம் வென்றது பற்றி சொல்கிறது. 

அவர் மகதம், அவந்தி, வஜ்ர அரசங்களை தோற்கடித்தது பற்றி சொல்கிறது. இரண்டாம் பகுதி, தனது பண்டைய நாடான குமரி மலையும் பஹ்ருளி ஆறும் கடல் கொண்ட போது புதிதாக எழுந்த இமாலயத்தை பாண்டிய மன்னன் வென்றது பற்றி பேசுகிறது.

பிந்தைய தேதிகளில் இந்தக் கருத்து சோழ ராஜ்யத்தின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படுகிறது. ஒரு சோழப் பேரரசர் கங்கை கொண்டான் என்ற பெயரை பெறுகிறார்.  சேழர்களின் மறைவுக்குப் பின்னர் பாடப்பட்ட சிறிய பாடல்களில் (கருமாணிக்கம் கோவை, கலிங்கத்துப்பரணி) தமிழ்நாட்டின் தலைவர்கள் பற்றி பாடப்படுகிறது.

இமயத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்ச் சின்னங்கள் செங்குட்டுவனின் வெற்றிக் கதையை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. ஐயங்கார் அதனை புராணத்திலிருந்து எடுத்து 'தமிழர்கள் அடங்காத ராணுவ இனம்' என்பதை சுட்டிக் காட்டுகிறார். செங்குட்டுவனின் ராணுவ பயணம் தமிழர்களின் ராணுவ பலத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஐயங்கார் பின்னர் எழுதிய கட்டுரைகள் தமிழரின் வட இந்தியப் படை எடுப்புகள் உண்மையானவை என்று இந்திய அரசாங்க, இந்திய கையேடுகளிலிருந்து எடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்க முயன்றன.
இந்தக் கட்டுரையில், அவர் (ஐயங்கார்) அசோகரும் மற்ற வடஇந்திய அரசர்களும் தமிழர்களின் ராணுவ பலத்தை அறிந்து அஞ்சிய காரணத்தால் தமிழகம் மீது போர் தொடுக்க துணியவில்லை என்று வாதம் செய்கிறார். ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பலமுறை வட இந்தியர்களை போரில் வென்று இமயத்தில் தங்கள் சின்னங்களை பொறித்துள்ளனர்.

முதன்முதலில் இமயத்தில் தன் சின்னத்தை பொறித்தது கரிகாலன் ஆவார். இமயத்தின் பல பகுதிகளில் சோழா பாஸ், சோழா ரேஞ்ச் என்ற பெயர்களால் அழைக்கப்படுவது சோழரின் படையெடுப்பு வரலாற்று உண்மை என்று ஐயங்கார் வாதம் செய்கிறார் (ஆராய்ச்சி தொகுதி, 1938, ப.184). 

இமயத்தின் மீது சின்னத்தை பொறித்து, தங்கள் கொடிகளை நாட்டிய தமிழர்களின் ராணுவ பயணங்கள் ஒப்பற்றவை மற்றும் ராணுவ வலிமை கொண்டவை என்ற தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர் தேவையான ஆய்வு வேலைகளைச் செய்திருந்தார். திராவிட பேச்சாளர்கள் மற்றும் கூட்டமைப்புக் கட்சியினர் அதனை தங்கள் தேசப்பற்று, தமிழர்களின் பொற்காலம் பற்றிய சக்திவாய்ந்த கதையாகவும், தேச விடுதலையை வலியுறுத்தும் மற்றும் இளைஞர்களை திரட்டுவதற்கானதாகவும் மாற்றினர்.

-------------------------------

No comments: