Monday, March 20, 2017

வட ஈழ மறவர்

"வட ஈழ மறவர் மான்மியத்திலிருந்து". .....
ஆசிரியர்:
தம்பி உன்னைச் சமாதானப்படுத்துவதற்காக நீ மறுவகுலம் என்பதை உருவகப்படுத்தியோ அல்லது வைப்புக்கட்டியோ நான் கூறவில்லை. உண்மையைச் சொல்லியுள்ளேன். உங்கள் உயர் குலத்துக்கு இடையிலேற்பட்ட மத மாற்றமே ஒரு சாபக்கேடாக அமைந்ததே யொழிய வேறில்லை. அங்ஙனம் நீயும்உன்குலத்தார்களும் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது ஒடுக்கப்பட்டவராகவோ அல்லது தீண்டாதவராகவோ இருந்திருந்தால், யாழ்ப்பாணத்திலே குடியேறிய வேளாண்குல முதலிமார்களுள் அதிகம் உயர்ந்தசாதி முதலியாயுள்ள இருமரபுந்துய்ய தனிநாயக முதலி உங்கள் குலத்தார்களை நடுக்குறிச்சியில் குடியிருக்க விட்டிருப்பாரா? ஒருபோதும் விட்டிருக்கமாட்டார்.

தமிழ் மன்னர் காலத்தில் ஒவ்வொரு சாதியாருக்கும் சாதியா சாரங்கள் அமைத்தும் அவரவர்க்குரிய குலத்தொழில்களும் கொடுத்தும், தீண்டாதாரைச் சேரிப்புறங்களிலிருத்தியும் அதற்குரிய சட்டங்கள் ஆக்கியும் வைத்திருந்தார்களல்லவா? இன்றைக்கும் நெடுந்தீவில் மாத்திரமல்ல யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சகல சாதியாரும் அந்தந்த நியதியின்படியே தத்தம் குலத்தொழில்களைச் செய்தும் ஒழுகியும் வருகிறார்கள். அப்படியானால் உங்கள் குலத்தவர்கள் செய்த குலத்தொழிலென்ன?

தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாகக் கடமையாற்றியும், பின் போர்த்துக்கேயரின் ஆளுகையின் காலத்தில் அவர் களோடிணைந்து, கடற்படையில் சேர்ந்து கப்பல் தொழிலைப்பழகியும், படிப்படியாக அத்தொழிலில் முன்னேறி பிரசித்தம் வாய்ந்த தண்டல் மாராகவும் கைதேர்ந்த மாலுமிமாராகவும் விளங்கிப் பாரிய மரக்கலங்களை ஒட்டியும் (இக்குலத்தவர்களால் செலுத்தப்பட்ட மரக்கலங்களின் நாமங்களும் தண்டல் மார்களின் பெயர்ப்பட்டியல்களும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது) இன்றைக்கும் அதே தொழில்களைச் செய்தும் வருகிறார்களே யொழிய, ஏதாவது வேறுதொழில்களை அன்றுமின்றும் செய்ததுண்டா? அல்லது உயர்குடிமக்கள் இவர்களைக் கொண்டு எந்தத் தொழில்களையாவது செய்வித்தது முண்டா? நெடுந்தீவில் மாத்திரமல்ல, இவர்கள் குடியேறிய புங்குடுதீவு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை முதலாமிடங்களில் தானும் ஏதாவது கீழ்த்தரமான தொழில்களைச் செய்ததுண்டோ, உங்கள் குலத்தவர்கள் யாவரும் பண்டுதொட்டுப் பரவணியாகச் செய்து வந்த தொழில்கள் படைத்தொழில், கடல்தொழில், கமத்தொழில், கைத்தொழில்களே யன்றி வேறு தொழில்களில்லையே?

சரி நெடுந்தீவில் குடியேறியவர்களுள் எந்தச் சாதியார் படைவீரராக இருத்தல் வேண்டும். வேளாண்குடிமக்கள் ஒருபோதும் படைவீரராகக் கடமையாற்றியிருக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் ஆளடிமைகளை வைத்து நிலங்களைப் பண்படுத்திக் கமம் செய்திருப்பார்களே யொழிய போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். மற்றச் சாதியார்களும் அவ்வண்ணமே தத்தம் தொழில்களைச் செய்திருப்பார்களேயன்றி படையில் சேர்த்திருக்கவுமாட்டார்கள். அன்றியும்தமிழ் மன்னர்கள் மறவர்களைத் தவிரவேறு சாதியாரைப்படையில் சேர்த்திருக்கவும் மாட்டார்கள். மறக்குலத்தாரில் பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் போர்ப்பயிற்சி செய்து படைவீரராகக் கடமையாற்ற வேண்டுமென்று கட்டாயச்சட்டமும் அமைத்திருக்கிறார்களல்லவா? அப்படியானால் வேறு சாதியார்கள் படைவீரராகச் சேரமுடியுமா? வேளாண்குடிமக்கள் படைவீரராகச் சேர்ந்து தம்மை மறவர்களாக்க விரும்புவார்களாக?

நீங்கள் மறவரென்பதற்குச் சந்தேக மில்லாமல் கூறுவதற்கு உங்களின் தேக அமைப்பு, புய பலம், வீரம், முகவசீகரம், மாற்றானுக்குத் தலைவணங்காத் தன்மை, உடை, நடை, நாகரீகம், நாததேயங்கள் கடற்படைப்பயிற்சி, போசனவகைகள் முதலியயாவும் மறவரென்றே உங்களை எடுத்துக் கூறுகிறது. அன்றியும் உங்கள் குலத்தவரான வீரசிங்கனை, சிங்கை ஆரிய மன்னன் சேனாதிபதியாக்கிய சம்பவமும் இன்னும் உங்களை மறவர்களென உண்மைப்படுத்துகிற தல்லவா? மேலும் போர்த்துக்கேயர் தானும் நீங்கள் சாதாரண சாதியாராகவிருந்தால் உங்கள் தலைவனான வீரசிங்க மத்தேசு முதலியை மதித்துக் கண்ணியப்படுத்தி முதலிப்பட்டம் வழங்கியிருப்பார்களா? வேளாளரையும் உங்களையும் தவிர நெடுந்தீவில் வேறு குலத்தவர்களில் முதலிமார்களுண்டா? இல்லவேயில்லை. ஆகவே ஆதிகாலத் தொழில்துவக்கம், இற்றவரைக்குமுள்ள தொழில், நடை, கல்வி, பண்பு, வீரம், முகவசீகரம், உத்தியோகம், அராங்கமதிப்பு இவைகள் யாவையும் அலசிப்பார்த்தால் நீங்கள் மறவர்கள் என்பதில் என்ன சந்தேகம், மறவர்களும் வேளாளரைப் போல ஓர் உயர்ந்த சாதியாரென்றே மக்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

மாணவன்: 
சற்றும் சந்தேகமில்லாமலும், எந்தச் சாதியாரும் ஒரேவாய்ப்பட மறவர்களென்றே ஒப்புக்;கொள்ளக் கூடியவிதத்திலும், ஏற்றுக்கொள்ளக் கூடியவகையிலும் ருசுப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இவ்வளவு நேரமும் எனக்குச் சொன்ன சரித்திரக்குறிப்புக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவனாயிருப்பேன். தங்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் சென்று வருகிறேன்.
வணக்கம்.
..............
இணையத்தில் பகிர்ந்தவர்


No comments: