Monday, April 3, 2017

முஸ்லீம் ஆதரவு - எதிர்ப்பு அரசியல்மகா ஆத்துமா காந்தி 1916-ல் இந்தியா திரும்புகிறார். 1919 வரை
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இன்னும் பல வேலைகளை
செய்கிறார். இருந்தாலும் காந்தியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதற்கு காரணம் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த 3
தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் தீவிரவாத கருத்துடைய திலகர், அவருக்கு
டம்மியாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மிதவாதியான கோபால கிருஷ்ண
கோகலே, மூன்றாமவர் அயர்லாந்திலிருந்து வந்து இந்துவாகவே மாறி இந்திய
சுதந்திரத்திற்காக போராடி வந்த அன்னி பெஸன்ட்.

ஆனால் இவர்களிடையே ஒரு ஒற்றுமை இருந்தது. அது அவர்கள் மூவருமே இந்து மத
ஆதரவாளர்கள் என்பதுதான். எனவேதான் தன் மீது மக்களின் கவனம் திரும்ப
வேண்டும் என்பதற்காக இவர்கள் மூவரிடமிருந்தும் மாறுபட்ட ஒன்றைச் செய்ய
காந்தி திட்டமிட்டார். அதுதான் இந்து-முஸ்லிம் ஒற்றுமை. இவர் இந்து -
முஸ்லீம் ஒற்றுமை குறித்து பரப்புரை செய்யத் துவங்கியதும் அதுவரை
ஒற்றுமையாக இருந்து வந்த இந்து -முஸ்லீம்களிடையே மோதல்கள் ஏற்படத்
துவங்கின.

அன்னி பெஸன்ட், காசி பல்கலை கழகத்திற்காக நிதி திரட்டும் ஒரு
நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பல நிதியுதவி செய்யக்
கூடிய சமஸ்தான அரசர்கள், ஜமீன்தார்கள், போன்றோரை விழாவிற்கு
அழைத்திருந்தார். அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போதே அங்கு பேசிய
காந்தி, தான் மாணவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காக ஏழை
மக்களின் உழைப்புதான் இவர்களின் கழுத்திலே நகைகளாக தொங்குகிறது என்று
பேசினார். இதன் மூலம் அந்த விழாவின் நோக்கம் சிதைந்தது. பல மன்னர்கள்
உடனே அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்.

இறுதி வரை காந்தி, முஸ்லீம்களை தூக்கிப் பிடிக்கும் அரசியலை கைவிடவே
இல்லை. இதுவே காங்கிரஸ் கட்சிக்கும் இன்ன பிற முற்போக்கு அரசியல்
கட்சிகளுக்கும் எழுதப்படாத கொள்கையாக ஆகிவிட்டது. அதாவது முஸ்லீம்கள்,
சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெரும்பான்மை இந்துக்களை
பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்ற கொள்கையாக அது அமைந்தது. காங்கிரஸின்
கொள்கை மக்கள் மத்தியில் உள்ளூர வெறுப்பை வளர்த்து வந்தது. அதையே
காங்கிரஸின் போலியாக உருவான கட்சியான பாஜக பயன்படுத்திக் கொண்டது. அது
இந்துக்களை பாதுகாக்கக் போகிறேன் பேர்வழி என்று புறப்பட்டது.

சிறுக சிறுக வடமாநிலங்களில் வளர்ந்த அக்கட்சி இன்று தென் மாநிலங்களிலும்
வளர்ச்சியை எட்டிவிட்டது. தமிழகம் தவிர.
காந்தி இறுதி வரை கீதையை படித்துக் கொண்டே ராம் ராம் என்று சொல்லிக்
கொண்டே முஸ்லீம் ஆதரவு அரசியலை நடத்தினார். அதனால்தான் ஜின்னா காந்தியை
நம்பத் தயாராக இல்லை.

இந்துக்கள் ஏறக்குறைய 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ்
வாழ்ந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் முஸ்லீம்கள் மீது விரோதம்
கொள்ளவில்லை. ஆனால் முஸ்லீம்களை தூக்கிப் பிடிக்கும் அரசியல் நிச்சயமாக
இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

காந்தியின் உருவாக்கிய போஸ்டர் பாயான நேரு மிக குறுகிய காலத்திற்குள்ளாக,
ஒரு பெரிய, ஒரு முட்டாள் தனமான பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார். அதன்
விளைவாக இந்திய எல்லைக்குள் இருந்த முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கும்,
பாகிஸ்தானிலிருந்த இந்துக்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்தனர்.

இந்தியப் பகுதியில் உள்ள முஸ்லீம்களுக்கு காவல் துறை, ராணுவம் பாதுகாப்பு
அளித்தது. பாகிஸ்தான் பகுதியில் சாதாரண முஸ்லீம்கள், காவல்துறை, ராணுவம்
ஆகிய மூன்று தரப்பினரும் இந்துக்களை தாக்கினார்கள். கற்பழித்தார்கள்,
கொலை செய்தார்கள். அந்த நிலையிலும் தங்கள் உயிரை மட்டும் பிடித்துக்
கொண்டு ஓடிவந்த இந்துக்களைப் பார்த்து காந்தி கேட்ட கேள்வி, “ஏன்
முஸ்லீமாக மாறி அங்கே இருக்கக் கூடாதா?” என்பதுதான்.

அந்தக் கேள்விதான் அவரை கொலை செய்ய தூண்டுகோலாக அமைந்தது. காந்தியின்
முஸ்லீம் சார்பு அரசியலை கண்டுணர்ந்த ஸ்ரீநிவாஸ ஐயங்கார், “உங்கள் சாவு
இயற்கையானதாக இருக்காதுஎன்று முன்கூட்டியே எச்சரித்தார். அது
உண்மையாகவே மாறிவிட்டது. காந்தி உருவாக்கிய முஸ்லீம்களை தூக்கிப்
பிடிக்கும் அரசியல்தான் இன்று எதிர்வினையை ஆற்றிக் கொண்டிருக்கிறதே தவிர,
இந்துக்கள் முஸ்லீம்களை வெறுக்கவில்லை. அவர்கள் வெறுப்பது உண்மை என்றால்
பாகிஸ்தான் பிரிந்தபோதே இந்தியாவில் ஒரு முஸ்லீம் கூட இல்லாமல் கொலை
செய்யப்பட்டிருப்பார்கள்.

சிறுபான்மையினரை தூக்கிப் பிடிக்கும், பிரித்தாளும் தந்திரங்கள்
வெள்ளையனின் தந்திரங்கள் ஆகும். அவனோடு நல்லுறவு பாராட்டி வந்த காந்தி
அவற்றைப் பின்பற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காந்தியின் கொள்கைகள்
இன்னும் என்னவெல்லாம் பரிசுகளை இந்த துணைக் கண்டத்திற்கு தர உள்ளனவோ?
இந்திய ஆட்சியாளர்களின் இயலாமைக்கு, இந்த வெள்ளை அரசாங்க கட்டமைப்பின்
இயலாமைக்கு இங்கு வாழும் மக்களை குறை சொல்லாதீர்கள். அது ஜனநாயகத்திற்கு
அழகல்ல.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...