Wednesday, June 21, 2017

ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்


 தேவதானப்பட்டி வீதிகளில் சுற்றித் திரிந்த இந்த பெரியவரை நமது கட்சி பொறுப்பாளர் சுபாஷ் பார்த்து தகவல் தெரிவித்தார். அவரிடம் விசாரித்ததில் அவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் சொத்துக்காக சொந்த மகன்களே துன்புறுத்துவதால் இப்படித் திரிவதாகச் சொன்னார். அவர் பற்றி விவரங்களை தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தெரிவித்து விட்டு தேனி, கோடாங்கிபட்டி காப்பகத்தில் சேர்த்து விட்டோம்.

காவல்துறைக்கு அளித்த தகவல் விவரம்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்  அருகேயுள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் (வயது 70) /பெ காமாட்சி என்ற முதியவர் ஆதரவற்ற நிலையில் தேவதானப்பட்டி தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே அவரை மீட்டு தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் அமைந்துள்ள மனிதநேய காப்பகத்தில் சேர்க்கிறேன் என்ற தகவலை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். காப்பகத்தின் இயக்குனர் பால்பாண்டி, அவரது தொடர்பு எண் 9994877391. இவரை யாரும் தேடி வந்தால் தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்

No comments: