Friday, July 14, 2017

தமிழ் பேசும் காந்தியின் பேரன்இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தன் பலத்தை இழந்து நிற்கும் நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. "காந்தியின் பேரன் என்ற காரணத்தால் எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்" என்று அவர் தமிழில் பேட்டியளித்துள்ளார்.

காந்தி தமிழில் கையொப்பமிட்டார், தமிழக விவசாயிகளைப் பார்த்து தனது ஆடைகளை துறந்தார் என்பதையெல்லாம் கேள்விப் பட்டிருந்தாலும் கூட காந்தியின் பேரன் தமிழில் பேசுவது இன்றைய தலைமுறையினரில் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.

ஆனால் அவரது தாய் வழி தாத்தா இன்னாரென்று சொன்னால் இந்த ஆச்சரியம் மறைந்து விடும். ஆமாம் அவரது தாத்தா புதிய (குலக்) கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பதவி துறந்த முன்னாள் முதல்வரான ராஜாஜியே ஆவார்.

ராஜாஜி காந்தியின் சம்பந்தி என்பதை முதலில் படிக்கும்போது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்த கோபால கிருஷ்ண காந்தி.

ராஜாஜி காந்தியின் சம்பந்தியாக இருந்த காரணத்தால் காந்தி, ராஜாஜிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு இருக்க வேண்டும் என்று விரும்பியதையும் வரலாறு காட்டுகின்றன. ராஜாஜி தலைமை பதவிக்கு வர காமராஜர் இடையூறாக இருப்பார் என்ற காரணத்தால்தான் காந்தி, தமிழக காங்கிரஸில் ஒரு  ‘க்ளிக்’ இருப்பதாக என்று காமராஜரை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி அவரைக் காண வந்த மக்கள் கூட்டம், தன்னை மட்டும் பார்க்க வரவில்லை, ராஜாஜியையும் பார்க்கவே வந்திருந்தனர் என்று கூறினார்.

1942-ம் ஆண்டு பம்பாய் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அந்த மாநாட்டில், ராஜாஜி அந்தத் தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என்று பேசிவிட்டு வெளியேறினார்.

காங்கிரஸின் தீர்மானத்தைத் தொடர்ந்து வெள்ளை அரசாங்கம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்துகொண்டு ஆகஸ்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிகள், ரவுடிகள் என்று பேசி வந்தார். 1942-ல் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றிருந்த ராஜாஜி 1945-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸூக்குள் நுழைய எண்ணி, திருச்செங்கோட்டிலிருந்து மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக (பி.சி.சி) தேர்ந்தெடுக்கச் செய்தார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜி மாகாண காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட காரணத்தால்திருச்செங்கோடு தேர்தல் செல்லாதுஎன்று அறிக்கை வெளியிட்டார். ராஜாஜி கட்சிக்குள் நுழைந்து விட்டால் கட்சித் தலைமையை கைப்பற்றிவிடலாம். எனவே ராஜாஜியின் மீதாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஒரு ஊழியர் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால் ராஜாஜி காந்தியின் சம்பந்தியாக உள்ள நிலையில் அவரை எதிர்த்து யார் அந்த மாநாட்டை நடத்துவது? அந்த நிலையில்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். அங்கு ராஜாஜிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த மாநாட்டின்போதும் காந்தி ஒரு கடிதத்தை அனுப்பி, அன்றைய சூழலில் ராஜாஜியின் சேவை நாட்டிற்குத் தேவை, தமிழக காங்கிரஸ்காரர்கள் அவரை ஒதுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது மேடையிலிருந்த தேவர், "காந்திக்கும் ராஜாஜிக்கும் உள்ள வேறுபாடு வெண்ணைக்கும் சுன்னாம்புக்கும் உள்ள வேறுபாடு என்பதை காந்தியே தெளிவுபடுத்தியுள்ளார், " என்பதை சுட்டிக் காட்டினார். இவ்வாறு, காமராஜின் காங்கிரஸ் தலைமைப் பதவி காப்பாற்றப்பட்டது. இவ்வாறு இந்திய வரலாற்று ராஜதந்திரங்கள் இன்றும் தொடர்வதையே கோபால கிருஷ்ண காந்தி காட்டுகிறார்.

இதை இப்போது சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? காந்தி ஒரு குஜராத்தியாக இருந்த போதிலும் தனது மகனுக்கு தமிழ் பேசும் ராஜாஜியின் மகளை மணமுடித்து வைத்ததால் இன்று காந்தியின் பேரனும் தமிழ் பேசக் கூடியவராக இருக்கிறார்.

ஒரு தந்தை தமிழராக இருந்து தாயின் மொழி வேறு ஒன்றாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தாயின் மொழியைப் பேசக் கூடியதாக இருக்கும். அந்த மொழி இன ரீதியாக தமிழருக்கு எதிரானதாக இருந்தாலும் கூட அந்தக் குழந்தை அதை முற்றிலுமாக எதிர்க்காது. அதுபோன்ற குழந்தை அரசியலுக்கு வரும்போது இன நலனை விட்டுக் கொடுப்பதாக அமையும்.

இப்போது காந்தியின் பேரன் தன்னை ராஜாஜியின் பேரன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்து தமிழக மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்தவர்.

அதேபோல தன்னை தமிழர் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது, குஜராத்தி என்றும் சொல்லிக் கொள்ள முடியாது. அதனால் அவர் ஒரு பொதுவான பெயரை பெற விரும்புவார். அதுவே இந்தியர்.

அதுபோலவே தமிழருக்கும் தெலுங்கருக்கும் பிறக்கும் குழந்தை தன்னை தெலுங்கர் என்றோ, தமிழர் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. அதனால் அது தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்தும்.

தமிழினத்திற்காக முட்டி உயர்த்தி, நரம்புகள் புடைக்க வீர உரையாற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி தெலுங்குத் தாயால் பெற்று வளர்க்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் தன்னை திராவிடர் என்றே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். 

கிறிஸ்தவராக உள்ள சீமான் (சைமன்) தன்னை கிறிஸ்தவர் என்றும் சொல்லிக்கொள்ள முடியாதுஇந்துக்களை முழுமையாக எதிர்க்கவும் முடியாது. எனவே இவர் தன்னை பொதுவானவராக காட்டிக் கொள்ள முயற்சிப்பார்.

வேறு என்ன நான் சொல்ல?

No comments: