நகைச்சுவை

நண்பர்களே இந்த பக்கத்தில் நான் படித்த, பார்த்த, கேட்ட நகைச்சுவைகளை தொகுத்து வழங்குகிறேன்.

-------------------------------------------
ஒரு நாள் ஒரு வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். 

வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த நாராயணசாமி,

"ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்" என்று கேட்டுவிட்டி எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது.

"ஏன் எண்ணேய் குறைவாக இருக்கிறது?" என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன்,

"டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது" என்று கூறினான்.

நாராயணசாமி அவனைக் கேட்டார்,

-------------------------------------------

தன் வேலைக்காரர் யாராக இருந்தாலும் அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவரது வழக்கம்.

"கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது"
ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். 

குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம்.


என்ன கத்துச்சு?


“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்குடா"


-------------------------------------------
தொண்டர் 1: தேர்தல்ல ஜெயிக்கலைன்னா ஒருபக்க  மீசையை எடுத்துக்கறேன்னு  தலைவர்  சொல்றாரே..  ஜெயிச்சுட்டார்னா _?
தொண்டர்2: ஜனங்களை _ மொட்டை _ அடிச்சுடுவார்
-------------------------------------------

திருடன்: டேய், நான்  திருடன்...மரியாதையா  எடு பர்ஸை
போலீஸ்: டேய்,நான் _ போலீஸ்காரன்...மரியாதையா எடு மாமூலை
-------------------------------------------

மனைவி:  உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு  முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..?
கணவன்: சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி: எப்போ சொன்னீங்க...? நீங்க சொல்லவே இல்லை..
கணவன்: உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..?
மனைவி :-????????
-------------------------------------------


காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
-------------------------------------------


நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
நண்பர் 2: இவரு,அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
நண்பர் 1 : _ அதெல்லாம் இல்லப்பா இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு  இருக்காரு...
-------------------------------------------


ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதிவைச்சுட்டாராம்.
Sh

---------------------------------------------------------------------
இங்கிலாந்து. ரயில் நிலையம்.

மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள்.

சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் .

ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார்.

ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள்.

இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள்.

வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்..

"சார்.. டிக்கட்..?"

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
-------------------------------------------------------------------------

மனைவி : என்னங்க முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தனும்? என்று நினைத்தவாறே எப்படி இருந்திச்சு செல்லம்?

மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.

கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன் ஒரே நேரத்தில ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காண்பிச்சிருக்கார்

------------------------------------------------------------------------

அந்த நாட்டு ராஜா போருக்குப் போக வேண்டியிருந்தது.

அவரிடம் ஏகப்பட்ட செல்வம் இருந்தது. இது போக அழகான மனைவி வேறு இருந்தாள். அப்படியே போட்டுவிட்டுப் போக அவருக்கு மனதில்லை. எல்லா செல்வத்தையும் ஒரு சிறிய கோட்டைக்குள் போட்டு அந்த கோட்டைக்குள்ளே தன் மனைவியையும் வைத்துப் பூட்டினார்.

ஆனால் சாவியைத் தன்னோடு எடுத்துப் போக முடியாது. யாரிடம் கொடுத்தாலும் தான் சென்றவுடன் கோட்டையைத் திறந்து மனைவியை அனுபவிப்பதோடு செல்வத்தையும் எடுத்துக் கொள்வார்கள். அவரிடம் ஒரு நம்பகமான தளபதி இருந்தான்.

அவனிடம் சாவியைக் கொடுத்து போரிலிருந்து தான் திரும்பும்வரை சாவியை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மைல் தூரத்தைக் கூட கடந்திருக்க மாட்டார் ராஜா. பின்னால் தளபதி ஓடி வந்துகொண்டிருந்தான். மூச்சு வாங்க ராஜாவிடம் சொன்னான் தளபதி,

"நீங்க தப்பான சாவியைக் கொடுத்துட்டுப் போறீங்க. இதை வச்சு அந்தக் கோட்டையைத் திறக்க முடியவில்லை."

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார
அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி
முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி! ”ஹா… இவனுக்கு
ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி.அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார். அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய
ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

”என்னால நம்பவேமுடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார்.

- ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!

---------------------------------------------------


ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.

அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்

.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.

அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று
பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது

.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்

''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''

****************

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
****************

என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

**************** 
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
****************
மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

**************** 
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

 ****************
"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
**************** 
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


****************

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்! 

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்.

****************

மனைவி: வேலைகாரனுக்கு ஏன் உங்க சட்டையை கொடுத்தீங்க ?
கணவர் :  ஏன் ,என ஆச்சு ?
மனைவி: நீங்கதான் வரீங்கன்னு நினைச்சு ..
கணவர் :  நினைச்சு .?!

மனைவி :பூரி கட்டையால அடிச்சிட்டேன்****************

ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..

மாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..

ஆசிரியர் :: ஏண்டா???

மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்.

****************

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!

எப்படி?

ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

****************
தண்ணியடிச்சிட்டா தலைவருக்கு தலை,கால் புரியறதில்லை!

என்ன செய்தாரு?

பனியனை கால் வழியா கழட்டறதுக்கு முயற்சி பண்றாரே!

****************

“ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?”

“நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச்
சொந்தக்காரருன்னு…”

****************
திருடன் இரவில் வீட்டினுள் நுழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, வாண்டுபாபு விழித்துக் கொள்ள...

திருடன் : "ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவேன்"

வாண்டு: "நான் சத்தம் போடாம இருக்கணும்னா... போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'

****************

ஆசிரியர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது.
ஆக்ஸிஜன் 1773ம் ஆண்டுல கண்டுபிடிக்கப்பட்டது.

வாண்டு பாபு: நல்லவேளை சார்.. நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்!

****************

வாண்டு : அம்மா...மணி என்னோட ஸ்கேல உடைச்சிட்டான்..

அம்மா: அப்பிடியா.. எப்பிடி உடைச்சான்?

வாண்டு: ஸ்கேலால அவனை அடிச்சேன்...அதை தலையிலயே தடுத்து உடைச்சிட்டான்

****************

டீச்சர்: சாப்பிடுறதுக்கு முன்னாடி எல்லோரும் கடவுளைக் கும்பிடணும். பாபு, நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி சாமி கும்பிடுவியா?

வாண்டு பாபு: இல்ல டீச்சர்... எங்கம்மா நல்லா சமைப்பாங்க!!

டீச்சர்: @#$!@#%

****************
கணக்கு டீச்சர்: பாபு, 1000 கிலோ = 1 டன். அப்படீன்னா 3000 கிலோ எத்தனை டன்?

வாண்டு பாபு: டன்..டன்...டன்!

டீச்சர்: !@#$#@%

****************
டீச்சர்: நான் உன்னை பயங்கரமா அடிச்சி கீழே தள்ளிட்டேன்... இது இறந்த காலம். இதுக்கு எதிர்கால வாக்கியம் என்ன?

வாண்டு பாபு: நீங்க ஜெயிலுக்கு போவீங்க!

டீச்சர் :..................

****************

தொண்டர் 1; எதுக்கு அந்த ஆளை அந்த அடி அடிக்கிறாரு தலைவரு.

தொண்டர் 2; எல்லோரும் தலைவர் வழியில் நடக்கணுமுன்னு சொன்னத நினைச்சிக்கிட்டு, தலைவர் போகிற சின்ன வீட்டுக்கு போயிட்டாராம்

****************

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்

பாடகர் : அப்படியா?

ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷ்டத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.

****************


டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

****************முதலாளி மணி 10 ஆச்சு கடைய சாத்தலாமா?

எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.

****************
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.


பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா 
வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.****************


பேஷன்ட்- நீங்க சீட்டில எழுதின மாத்திரை எந்த மருந்துக் கடையிலும் 
இல்லை டாக்டர்.....! 

டாக்டர் - யோவ்,அது என் பேனா எழுதுதான்னு 
கிறுக்கிப் பார்த்த சீட்டு....!

****************

புள்ளையாடா நீ! எல்லா பாடத்திலேயும் ஃபெயில், இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத!

சரி மச்சி! ஓவரா சீன் போடாம சைன் போடு.

****************
விமலா: ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணிட்டியே எப்படி போகுது?

கமலா: அதை ஏன் கேட்கிற? எப்ப எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறைன்னு சொல்லிட்டு இருக்கார். ...

****************

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்து விடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்கு கிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந் தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

****************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேர்ந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்?

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!

****************
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !

****************
மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?

கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!

****************


ராமு: டேய்...நான் டிவில தெரின்சேன்டா.

சோமு: எப்ப? எத்தன மணிக்கு?

ராமு: நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு.
..
சோமு: அப்ப தான் கரண்ட் இல்லையேடா??

ராமு: ஆமா.. அப்பத்தான் டி.வி. கண்ணாடியில தெரிஞ்சேன்.

*****************

தலைவரே.. 'மாதமோ மார்ச், மணியோ எழரை’னு ஏன் பேசினீங்க?'

'ஏன், அதுக்கென்ன இப்போ?'

'ஏழரை மணி சீரியல் பார்க்க மொத்த பெண்கள் கூட்டமும்
கிளம்பிடுச்சு பாருங்க....!'

*****************

தலைவர் அவசர அவசரமா... இந்தப் பொதுக் கூட்டத்துக்கு
வந்திருக்கார்-னு சொல்றியே......

எப்படி ?

அவர் தோள்லே... துண்டுக்கு பதிலா தாவணி தொங்குதே !

****************

1 comment:

Shree devi said...

super jokes sir..very nice..thanks a lot..